Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"மனிதம் தொலைத்த மனங்கள்"…….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை இன்னும் வாசிக்கேல்ல.. படம் பாத்தன்.. நல்லாருக்கு... :D

எது மஞ்சள் சுடிதாரா??

  • கருத்துக்கள உறவுகள்

எது மஞ்சள் சுடிதாரா??

மஞ்ச கலரு சிங்குஜா... அப்புறம் பச்சை கலரும் சிங்குஜா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும்  அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது"

பலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்

  • தொடங்கியவர்

மிச்சத்தையும் போட்டால்தான ஆருக்கு சனி எண்டு தெரியும். :lol:

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கதாநாயகன் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

' தாய்மை' என்பது மிகவும் உன்னதமான ஒன்று!

'ரமணனைக்' கூட மன்னித்து விடும் 'மனம்' கூட அதற்கு உண்டு!

'ரமணனுக்கு' தனது தாயின் மரணவீட்டுக்குப் போகாமல் விட்டதற்கு, உண்மையான காரணங்கள் சில இருந்திருக்கக் கூடும்!

அடுத்தவர்களின் உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்ளாமல்,மற்றவர்கள் அவர்களுக்காக, தங்கள் முடிவுகளைத் திணிப்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை!

உங்கள் இந்தத் தொடர், உங்கள் வழமையான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான பாதையில் செல்கின்றது !

தொடருங்கள், கோமகன்! :D

  • தொடங்கியவர்

கதை முடியட்டும்  அதன் பின்னர் கருத்துக்கள் நிறைய வரும்

தற்சமயம் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கின்றது

முதற்பகுதி எழுதும்போது  சனி உங்க்கள் பக்கம் இருந்திருக்கின்றது . தொடருங்கள் கோமகன்  :)

கதை முடிவடைவற்குள் ஏன் சனியைப் பற்றி சன்னி பிடிப்பான்  :D  :D ??  கதையுடன் தொடர்ந்து இருங்கள்  எதிர்பாராத முடிவுடன் நிறைவு பெறும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாத்தியார் :) :) .

  • தொடங்கியவர்

ஒரு பந்தி டையறி குறிப்புபோல எழுதி இருக்கிறீங்க.. அது உங்க வேலைப் பளுவால் என்றாலும்... ஆறுதலாக உங்களுக்கான நேரத்தில் காத்திரமானதாகப் பதியுங்கள்.

மற்றும் ஒரு சம்பிரதாயக் குறைபாடு.. காலத்தின் தேவை கருதி சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமை..  'பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள்.'  இந்த வசனம் தேவையற்றது. பறை அடித்தால் அன்றைய தினமே சடலமானது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம்.

பதிவுக்கும் இதற்கான தங்களது நேரத்துக்கும் நன்றிகள்! :)

என்னை நல்லாய் தான் உளியாலை செதுக்கிறியள் :lol: :lol: . சிறிய பகுதியாக போட்டது எனது பிழைதான்  . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சோழியன் :) :) .

தொடருங்கள்.. கதை உண்மையின் தரிசனங்களாய் மிகவும் யதார்த்தமாகச் செல்கிறது. பாராட்டுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்  ஒரு அரசியல் போலும்..........

நாலு வரி

பெரிதாக நாலு படம்............

அதற்கு பின்னர் அவரவருக்கு  விளக்கம் :(

கதை?? முடிய  எப்படியும்

2015...........??? :D

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! இத்துடன் இந்தக் கதை நிறைவுக்கு வருகின்றது . அதிகரித்த வேலைப் பழு அதனால் ஏற்றபட்ட நேரப் பற்றாக்குறை இந்தக் கதை சிறிது தாமதப்பட்டதன் காரணம் . இந்தக் கதையில் மனிதப் பண்புகள் இரத்த உறவுகளுக்கிடையில் விளையாடும் விநோதத்தையும் , ஒரு தாயின் வயிற்றில் அவர்கள் பிறந்திருந்தாலும் புலப் பெயர்வும் அதனால் வந்த மனிதப் பண்புகளில் ஏற்பட்ட வீறல்களை குணாவின் ஊடாகவும் காட்டியுள்ளேன் . உங்கள் விமர்சனங்களையும்  நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

***********************************
 
4.jpg

ஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து  வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம்  வந்து யார்கொள்ளி வைப்பது ?? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .

 « அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «

"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் ??"

« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா « 

சுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .

எல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து  மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .

முற்றும்.

கோமகன்

12 / 09 / 2013

Edited by கோமகன்

ம்... இந்தக் கதையின் முடிவை வாசித்தபோது, எனக்கு எனது உறவினர் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது பெரியம்மா முறையில் அமைந்த சொந்தம்.. இளவாலை சித்திரமேழி (சேந்தாங்குளம்) இல் வாழ்ந்தார். பிள்ளைகள் இல்லை. கணவனுக்கு அப்போதே அவர்தான் கொள்ளி வைத்தார்.

நேரம்பற்றாக்குறையையும் வேலைப்பளுவையும்பற்றி முதலிலேயே குறிப்பிட்டதால் விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி. :)

ஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து  வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம்  வந்து யார்கொள்ளி வைப்பது ?? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .

 « அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «

"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் ??"

« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா « 

சுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .

எல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து  மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .

முற்றும்.

கோமகன்

12 / 09 / 2013

ஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை  கலாச்சார பாரம்பரியங்கள் என  அனைத்தையுமா..????

சில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக கையாளவேண்டும் கோ..! இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான  கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

வேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..! :)

  • தொடங்கியவர்

இதுவும்  ஒரு அரசியல் போலும்..........

நாலு வரி

பெரிதாக நாலு படம்............

அதற்கு பின்னர் அவரவருக்கு  விளக்கம் :(

கதை?? முடிய  எப்படியும்

2015...........??? :D

எல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :lol: :D :D :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

" நிலாவரை கிணத்திலை தேசிக்காயைப் போட்டால் கீரிமலைக் கேணியிலை மிதக்குமாம் " கருத்துக்களத்தில் என்று ஒழியும் இந்த கேடுகெட்ட செயல் ??? மேலும் என்சார்பான நியாயமான   உங்கள் கருத்துக்களுக்கு நான் என்றுமே பதில் தருவதற்க்குப் பின்னிற்பதில்லை , நன்றி . 

உங்களது

எழுத்து

உங்களுக்காகவே.........

எல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :lol: :D :D :icon_idea: .

கோ

ஒரே ஒரு முறை  தப்பு செய்தேன்

அதை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்

அதற்கு மன்னிப்பும் கேட்டேன்

நல்லதை  மட்டும்   எடுத்துக்கொள்ளுங்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஏனோ இந்தக்கதை சில அழுத்தங்களுக்காய் அவசரப்பட்டு முடிக்கப்பட்டது  போன்றே உணரமுடிகிறது. ஆவலுடன் படித்து வந்து

இறுதியில் சப்பென்று முடிந்து விட்டது. உங்களுடைய வேலைப்பழுவைக் கவனித்தில் எடுக்கும் அதே வேளை ஆறுதலாகவேனும் நன்றாக முடித்திருக்கலாம். மற்றும்படிக்கு புலப்பெயர்வின் பின் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சமூகப்பிரச்சனையை தங்களுக்கேயுரிய பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. :)

  • தொடங்கியவர்

உங்களது

எழுத்து

உங்களுக்காகவே.........

கோ

ஒரே ஒரு முறை  தப்பு செய்தேன்

அதை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்

அதற்கு மன்னிப்பும் கேட்டேன்

நல்லதை  மட்டும்   எடுத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை :icon_mrgreen: .  அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது  . மற்றது நீங்களே பிழையளை  விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை  ,  ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா ??? அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது :lol::D .

  • தொடங்கியவர்

ஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை  கலாச்சார பாரம்பரியங்கள் என  அனைத்தையுமா..????

சில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக கையாளவேண்டும் கோ..! இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான  கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

வேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..! :)

இல்லை நான் அவ்வாறு நினைத்து எழுதவில்லை . பொதுவாகக்  கதை சொல்லும்பொழுது அதன் பின்னணி ,அது சொல்கின்ற செய்திகளின் தன்மை , முக்கியமாக அது நடைபெற்ற காலகட்டம் என்பன சொல்லாடல்களைத் தெரிவு செய்கின்றன . அதுபோலவே நீங்கள் குறிப்பிட்ட சொல்லாடலையும் தெரிவு செய்தேன்.  முன்பு எல்லாவற்றிலும் வளமாயிருந்த நாங்கள் கதையோட்டதின் காலப்படி வரட்சியாகவே இருந்தோம் . அந்த நேரத்தில் ஒரு பெண் தனது தாயிற்கு இறுதிகிரியைகளைச் செய்ய முன்வருகின்றாள் . இதற்காகவே " எல்லாவற்றிலுமே வரண்ட" என்ற சொல்லாடல் எனக்குத் தேவைப்பட்டது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை  :)  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை :icon_mrgreen: .  அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது  . மற்றது நீங்களே பிழையளை  விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை  ,  ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா ??? அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது :lol::D .

நான்  என்ன  எழுதினாலும்  நீங்கள்   ஒத்துக்கொள்ளப்போவதில்லை

அதனால்  எழுதாமல் விட்டிருந்தேன்

இருந்தாலும்

தப்பு  நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை

ஒரு கதை

அல்லது கட்டுரை

அல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில்  வருமட்டுமே அதனை வடித்தவருக்கு  உரிமையானது

எப்போ

பாய் விரிச்சாச்சோ

அப்போ

அது வாசிப்பவனால்

பதிவு இடுபவனால் புடம்போடப்படுகிறது

அந்தவகையில்

இந்தக்கதையை  ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது  ஏற்படுத்தப்பட்ட

விறுவிறுப்பும் 

அல்லது அப்படி ஒரு பாவனையும்

கதையை  முடித்ததிலோ

முடிக்க எத்தனித்ததிலோ

கதையின் முடிவிலோ

அல்லது

கதையிலேயோ இல்லை

அந்தளவுக்கு அது உருமாறிவிட்டது

காரணம்

தங்களது தழும்பல் நிலை.

கதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ

அல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ  தொட்டே பார்க்கவில்லை.

அல்லது மாற்றாக எதிர்பாராத

எதையும் அது  சொல்லவும் இல்லை

இது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும்

இங்கு பலரும் ஆமாம் போடுவதால்

சொல்லி  புரியவைக்க ஏதோ  தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே  எழுதணும் என்று தோன்றியது

அதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள்

அது தங்களது விருப்பம்

ஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள்   தீங்கு புரிகின்றனர்   என்பதே எனது கவலை.

இன்றுதான் வாசிக்க முடிந்தது. 

வாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

காத்திருக்கிறேன் அடுத்த கதைக்காக.

  • தொடங்கியவர்

நான்  என்ன  எழுதினாலும்  நீங்கள்   ஒத்துக்கொள்ளப்போவதில்லை

அதனால்  எழுதாமல் விட்டிருந்தேன்

இருந்தாலும்

தப்பு  நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை

ஒரு கதை

அல்லது கட்டுரை

அல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில்  வருமட்டுமே அதனை வடித்தவருக்கு  உரிமையானது

எப்போ

பாய் விரிச்சாச்சோ

அப்போ

அது வாசிப்பவனால்

பதிவு இடுபவனால் புடம்போடப்படுகிறது

அந்தவகையில்

இந்தக்கதையை  ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது  ஏற்படுத்தப்பட்ட

விறுவிறுப்பும் 

அல்லது அப்படி ஒரு பாவனையும்

கதையை  முடித்ததிலோ

முடிக்க எத்தனித்ததிலோ

கதையின் முடிவிலோ

அல்லது

கதையிலேயோ இல்லை

அந்தளவுக்கு அது உருமாறிவிட்டது

காரணம்

தங்களது தழும்பல் நிலை.

கதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ

அல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ  தொட்டே பார்க்கவில்லை.

அல்லது மாற்றாக எதிர்பாராத

எதையும் அது  சொல்லவும் இல்லை

இது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும் இங்கு பலரும் ஆமாம் போடுவதால் சொல்லி  புரியவைக்க ஏதோ  தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே  எழுதணும் என்று தோன்றியது அதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் அது தங்களது விருப்பம்

ஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள்   தீங்கு புரிகின்றனர்   என்பதே எனது கவலை.

என்னைப் பொறுத்தவரையில் நேர் எதிர் விமர்சனங்களை ஒரே தட்டில் வைத்துப் பார்பவனே ஒரு நல்ல எழுத்தாளனாக வரமுடியும் . நீங்களாக உங்கள் மனதில் என்னையிட்டு ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் ?? ஆனாலும் உங்கள் விமர்சனதைக் வருங்காலத்தில் கவனத்தில் எடுகின்றேன் விசுகு ஐயா . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இன்றுதான் வாசிக்க முடிந்தது. 

வாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

காத்திருக்கிறேன் அடுத்த கதைக்காக.

தயாராகிக் கொண்டிருக்கின்றது . அனால் சிறிது காலம் எடுக்கும் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெற்கொழுவன் :) :) .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும்  அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது"

பலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்

எல்லாமே உங்கள் போன்றோரின் ஆசீர்வாதம்தான் வாத்தியார் என்னில் எதுவுமே இல்லை . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.