Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

ஈழப் பிரச்சனைக்கான தீர்வு ஈழத்தில் இருந்துதான் வர வேண்டும். அது வெளியில் இருந்த வர முடியாது.

மற்றையபடி சமரச அரசியலின் பொருட்டு விக்னேஸ்வரன் சிறிலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்தவும் ஏதாவது சொல்வார். முறிந்து போயிருக்கின்ற பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு சிறிலங்கா அரசை நோக்கி விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.

யாருக்கோ சொல்கின்ற செய்தியில் வேறு யாருக்கோவுக்கான செய்தி இருப்பது அரசியலில் சகயம்தானே.

இதை பெரிதுபடுத்துவது எனக்கு சரியாகப்படவில்லை.

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனைக்கான தீர்வு ஈழத்தில் இருந்துதான் வர வேண்டும். அது வெளியில் இருந்த வர முடியாது.

மற்றையபடி சமரச அரசியலின் பொருட்டு விக்னேஸ்வரன் சிறிலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்தவும் ஏதாவது சொல்வார். முறிந்து போயிருக்கின்ற பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு சிறிலங்கா அரசை நோக்கி விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.

யாருக்கோ சொல்கின்ற செய்தியில் வேறு யாருக்கோவுக்கான செய்தி இருப்பது அரசியலில் சகயம்தானே.

இதை பெரிதுபடுத்துவது எனக்கு சரியாகப்படவில்லை.

தீர்வு ஈழத்தில் இருந்துதான் வரவேண்டும் என்று சொல்வதன் மூலம் சபேசன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்.. அதனால் பதின்மூன்றாம் திருத்தத்தையும் எதிர்ப்பவர் ஆகிறார்.. மாகாணசபைத் தேர்தல்களையும் எதிர்க்க வேண்டியவர் ஆகிறார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
என்னை பொறுத்தளவில் திரு விக்னேஸ்வரன் அப்படி சொல்லி இருக்கக்கூடாது ....... எட்டுக்கோடி தமிழக சகோதர்களின் ஆதரவுடனையே எமது விடிவு கிட்டும் அவர்களின் தயவு இன்றி இன்றைய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்பதினை புரிந்து கொள்ளவேண்டும். 
 
எமக்காக போராடிய விடுதலை புலிகள் கூட இப்படி ஒரு அறிக்கை விடவில்லை இவர் எப்படி இப்படி விடுவார் ? 
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தளவில் திரு விக்னேஸ்வரன் அப்படி
 
எமக்காக போராடிய விடுதலை புலிகள் கூட இப்படி ஒரு அறிக்கை விடவில்லை இவர் எப்படி இப்படி விடுவார் ? 

அது தான் எனக்கும் தெரியல சகோ

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக போராடிய விடுதலை புலிகள் கூட இப்படி ஒரு அறிக்கை விடவில்லை இவர் எப்படி இப்படி விடுவார் ?

இந்தியனின் ஏதாவது ஒருவகை திருகுதாளமா இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் எனக்கும் தெரியல சகோ

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடின தேசியத்தலைவர் அவர்களைத்தவிர வேறு எந்த அரசியல் வாதிகளை நம்புமளவுக்கு எதையும் பெரிதாக இந்த வாய் வீச்சு அரசியல் வாதிகள் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இருப்பினும் இன்று விடுதலை புலிகள் ஆயுதங்களை மௌனித்த நிலையில் இப்போது உள்ள அரசியல் வெற்றிடத்தில் நின்று அரசியல் செய்கின்றார்கள் இதன் ஊடாக எதனையும் சாதிக்க முடியுமாயின் மிகவும் மகிழ்ச்சி...... ஆனால் இந்த சாத்வீகவழிப் போராட்டம் சாத்தியம் ஆகாத நிலையிலையே ஆயுதப்போராட்டம் ஆரம்பம் ஆனது என்பதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகின்றேன். 

இந்திய மத்திய அரசை குழப்ப இலங்கையின் வட-கிழக்கு மற்றும் மலையகத்தை தமிழ்நாட்டோடு இணைக்க சொல்லி இலங்கையிலும்/தமிழ்நாட்டிலும் போராடலாம் :) நாங்கள் ஒரே குடும்பம் தானே

(ஏன் என்றால் தமிழ்நாட்டு சகோதரங்கள் மத்திய அரசுக்கு இன்னும் சூடு கொடுக்கலாம்)

(தானம் குடுத்த கச்சைதீவு பிரச்சனையே தீர்க்கமுடியல்ல இது வேறேயா....என்று புலம்பாததைங்கோ) :)

எனக்கு தெரிஞ்ச அளவுக்கு தலைவர் ஒருத்தரையும் முடிவு எடுக்க விடவில்லை....தானே தான் எடுத்தார்..மிஞ்சி எடுத்தவங்களை "போட்டார்"... கடைசியில் ஆளையும் காணோம் (4 வருசமா)
 
விக்கினேஸ்வரன் இதை சொல்லும் பொது கோத்தாவுடன் இருந்து ரெட் லேபிள் வாசித்தாரா ............... :D
 
விடுங்கப்பா .............அடங்கி கிடந்த பாம்புகள் சீறட்டும். மீண்டும் படுத்து கிடக்கும்வரை............. :)
  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அம்பு மட்டுமே
எய்பவன் யார் என்பது கண்டுபிடிப்பது சுலபம்
சம்பந்தர் பின் சுமந்திரனும் அவர் பின் ராஜபக்சக்களும்
அவர்களின் பின்னர் ஹிந்தியர்களும் இருக்கும்போது
யாரை நோவது

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசை குழப்ப இலங்கையின் வட-கிழக்கு மற்றும் மலையகத்தை தமிழ்நாட்டோடு இணைக்க சொல்லி இலங்கையிலும்/தமிழ்நாட்டிலும் போராடலாம் :) நாங்கள் ஒரே குடும்பம் தானே

(ஏன் என்றால் தமிழ்நாட்டு சகோதரங்கள் மத்திய அரசுக்கு இன்னும் சூடு கொடுக்கலாம்)

(தானம் குடுத்த கச்சைதீவு பிரச்சனையே தீர்க்கமுடியல்ல இது வேறேயா....என்று புலம்பாததைங்கோ) :)

எனக்கு தெரிஞ்ச அளவுக்கு தலைவர் ஒருத்தரையும் முடிவு எடுக்க விடவில்லை....தானே தான் எடுத்தார்..மிஞ்சி எடுத்தவங்களை "போட்டார்"... கடைசியில் ஆளையும் காணோம் (4 வருசமா)

நாலுவரிசமாக வருசமாக உங்கட தலைவர்கள் என்னத்தை செய்கின்றார்கள் ?

முன்பு சொல்லிச்சினம் தங்களிடம் விட்டால் தமிழீழத்தை இலகுவாக பிடிச்சு விடலாம் என்று தடுக்க யாரும் இல்லை இப்போது இவர்களுக்கு  என்ன தடை ??  

ஈழப் பிரச்சனைக்கான தீர்வு ஈழத்தில் இருந்துதான் வர வேண்டும். அது வெளியில் இருந்த வர முடியாது.

மற்றையபடி சமரச அரசியலின் பொருட்டு விக்னேஸ்வரன் சிறிலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்தவும் ஏதாவது சொல்வார். முறிந்து போயிருக்கின்ற பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு சிறிலங்கா அரசை நோக்கி விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.

யாருக்கோ சொல்கின்ற செய்தியில் வேறு யாருக்கோவுக்கான செய்தி இருப்பது அரசியலில் சகயம்தானே.

இதை பெரிதுபடுத்துவது எனக்கு சரியாகப்படவில்லை.

தேர்தல் விஞ்ஞாபனத்தை படிக்காமல் எதோ எதோ எல்லாம் களவாக்க நடக்கிறது என்று புரியாதவற்றையும் எழுத வேண்டுமா?

அரசின் நிலைப்பாடு தேர்தல் விஞ்ஞாபனம் எழுதியர்வர்கள் சிறைக்கு போக வேண்டும் என்பது. அது முதலில் பத்திரிக்கைகளில் படித்து அதற்கு ஒரு பதில் எழுத முடியுமா?

அதற்கு பயந்து தான் விக்கினேஸ்வரன் கைவிட்ட பேச்சை திரும்ப தொடங்க சொல்லி இரகசிய அறிக்கையை இந்துராமின் இந்து பத்திரிக்கைக்கு கொடுக்கிறரோ? அதையும் சுப்பிரமனிய சாமியை கூப்பிட்டு கொடுத்திருக்கலாமே.

அல்லது தேவானந்த போக பயப்படுகிறார் தெரிவுக்குழுவுக்கு நான் போய் பேசிக்காடுவன் என்று துணிச்சலில் நிற்கிறாரோ? அப்போ சம்பிக்கவை த்ற்வுக்கு குழுவை குழ்ப்பாமல் இணைந்திருக்கும் படு இன்னொரு அறிக்கையும் வெளிவிட வேண்டி வரப்போகுதே.

முதலில் இந்துவின் பேட்டி ஒழுங்காக வரவில்லை. பேட்டி என்ன என்று தெரியாமல் அதையே திரித்து ஏன் தான் அவமானப்படுவானோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச அளவுக்கு தலைவர் ஒருத்தரையும் முடிவு எடுக்க விடவில்லை....தானே தான் எடுத்தார்..மிஞ்சி எடுத்தவங்களை "போட்டார்"... கடைசியில் ஆளையும் காணோம் (4 வருசமா)

திரும்பி வந்தும் ஏதாவது வித்தியாசமா செய்வார் என்கிறீங்க..??!! :icon_mrgreen:

நாலுவரிசமாக வருசமாக உங்கட தலைவர்கள் என்னத்தை செய்கின்றார்கள் ?

முன்பு சொல்லிச்சினம் தங்களிடம் விட்டால் தமிழீழத்தை இலகுவாக பிடிச்சு விடலாம் என்று தடுக்க யாரும் இல்லை இப்போது இவர்களுக்கு  என்ன தடை ??  

 30 வருசமா நீங்கள் கிழிப்பீங்கள்...4 வருசத்தில் நாங்கள் தைக்கோனுமா என்று "ஹாயா" இருக்கலாம்....

30 வருசத்திற்கு முதலே ஒரு சிறுகுழுவால் தோற்கடிக்கப்பட்டவர்கள் .....இப்போது என்ன செய்ய முடியும்? (சிங்களவன் காறி துப்ப மாட்டான்???)

(இவர்களால் இப்போது ஏதேனும் செய்யேலுமென்றால்..அப்பவே ஏதாவது செய்திருப்பார்கள்)

எமது தலைவர்கள் (உங்களது தலைவரையும் சேர்த்து) சிங்களவனிடம் நக்கியது "உயிர் பிச்சைக்காக"

திரும்பி வந்தும் ஏதாவது வித்தியாசமா செய்வார் என்கிறீங்க..??!! :icon_mrgreen:

திரும்பி வந்தால்..... :)   திருந்தி வந்தால் இன்னும் விஷேசமா இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனைக்கான தீர்வு ஈழத்தில் இருந்துதான் வர வேண்டும். அது வெளியில் இருந்த வர முடியாது.

மற்றையபடி சமரச அரசியலின் பொருட்டு விக்னேஸ்வரன் சிறிலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்தவும் ஏதாவது சொல்வார். முறிந்து போயிருக்கின்ற பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு சிறிலங்கா அரசை நோக்கி விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.

யாருக்கோ சொல்கின்ற செய்தியில் வேறு யாருக்கோவுக்கான செய்தி இருப்பது அரசியலில் சகயம்தானே.

இதை பெரிதுபடுத்துவது எனக்கு சரியாகப்படவில்லை.

சபேசன் உங்களின், அரசியல் அறிவை எண்ணி... வியக்கின்றேன்.

ஈழத்து தமிழனுக்கு... தீர்வு கிடைக்க, எந்த (ஈழத்து) முஸ்லீம் அனுமதிப்பான்?

அதையும்... தாண்டி... பிக்கு, பொது பல சேனா என்று.... தமிழனைக் கூண்டோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான் நாம் அறியாத எதிரி.(ஒட்டுக் குழு உட்பட)

இதனால்... தான், எமக்கு அழிவு.... மிக விரைவில் நெருங்கிக் கொண்டிருப்பதை அறியாமல் இருப்பதை.. நினைக்க, உங்களின் மீது... அனுதாபம் மட்டுமே... ஏற்படுகின்றது.

 30 வருசமா நீங்கள் கிழிப்பீங்கள்...4 வருசத்தில் நாங்கள் தைக்கோனுமா என்று "ஹாயா" இருக்கலாம்....

30 வருசத்திற்கு முதலே ஒரு சிறுகுழுவால் தோற்கடிக்கப்பட்டவர்கள் .....இப்போது என்ன செய்ய முடியும்? (சிங்களவன் காறி துப்ப மாட்டான்???)

(இவர்களால் இப்போது ஏதேனும் செய்யேலுமென்றால்..அப்பவே ஏதாவது செய்திருப்பார்கள்)

எமது தலைவர்கள் (உங்களது தலைவரையும் சேர்த்து) சிங்களவனிடம் நக்கியது "உயிர் பிச்சைக்காக"

நக்கிக்கொண்டிப்பவனின் ஆதங்கம் :lol: ...........தன்னைப்போல மற்றவர்களையும் நினைக்கும் மாண்பு ...............அப்பாடா முடியல ... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

 30 வருசமா நீங்கள் கிழிப்பீங்கள்...4 வருசத்தில் நாங்கள் தைக்கோனுமா என்று "ஹாயா" இருக்கலாம்....

30 வருசத்திற்கு முதலே ஒரு சிறுகுழுவால் தோற்கடிக்கப்பட்டவர்கள் .....இப்போது என்ன செய்ய முடியும்? (சிங்களவன் காறி துப்ப மாட்டான்???)

(இவர்களால் இப்போது ஏதேனும் செய்யேலுமென்றால்..அப்பவே ஏதாவது செய்திருப்பார்கள்)

எமது தலைவர்கள் (உங்களது தலைவரையும் சேர்த்து) சிங்களவனிடம் நக்கியது "உயிர் பிச்சைக்காக"

நீங்க, என்ன சொல்ல வாறீங்க... எண்டு, ஒண்டுமே... விளங்கேல்லை.

கொஞ்சம்... பதட்டப் ப‌டாமல், விரிவாய்ச் சொன்னால்... பதில் சொல்ல வசதியாய் இருக்கும். :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் - மனைவி பிரச்சனையை முத்தவிடாமல் முடிச்சிருக்கனும். அதைவிட்டிட்டு.. அண்டை வீட்டுக்காரன் தலையிடும் படி கணவனும் மனைவியும் சண்டை பிடிச்சு.. கணவனால் மனைவி சீரழிஞ்சுள்ள நிலையில்.. அந்த மனைவிக்குள்ள ஒரே ஒரு ஆறுதலான அண்டை வீட்ட தூர நில்லென்னு சொல்லுறது எந்த வகையில் நீதி நியாயம்.

இந்தக் கணவன் - மனைவி உறவு விவாகரத்தில் உள்ள ஒன்று. பிரிச்சு விட்டால் அன்றி எவருக்கும் நிம்மதியா இருக்கப் போவதில்லை. அந்த வகையில்.. ஐயா நீதிபதி அவர்கள்... தனக்குத் தெரிந்த சட்டங்களை எல்லாம் பயன்படுத்தி விரைவில் விவாகரத்தை பெற்றுக் கொடுத்திட்டால்.. அந்த கணவனுக்கும் நல்லம்.. மனைவிக்கும் நல்லம்.. அண்டை வீட்டுக்காரரும் அமைதியா நிம்மதியா வாழுங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்காக இனி தமிழக தமிழர்கள் யாரும் குரல் கொடுக்க வேண்டாம்

ஈழத்தமிழருக்காக இனி தமிழக தமிழர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் சிறை செல்ல வேண்டாம்

ஈழத்தமிழருக்காக இனி தமிழக மக்கள் யாரும் உயிர் துறக்க வேண்டாம்

ஈழத்தமிழருக்காக தமிழக தலைவர்கள் யாரும் தங்கள் அரசியல் வாழ்வை தொலைக்க வேண்டாம்

கணவன் மனைவி பிரச்சனைக்குள் காலம் காலமாக குரல் கொடுத்து வந்த தமிழக தலைவர்கள் மற்றும் மக்கள் ஆகியோருக்கு என்ன வேலை என்று கேட்ட கொழும்பில் சுக வாழ்வு வாழ்ந்து விட்டு இன்று கொடுக்கு கட்டி புறப்பட்டிருக்கும் சுயநலம் மிக்க விக்னேஸ்வரன் போன்றவர்களை தலைவராக கொண்டிருக்கும் நன்றி மறந்த சுயநலம் மிக்க ஒரு இனம் இந்த பூமியிலே வாழ தகுதியற்று ஒட்டு மொத்தமாக சிங்களவர்களால் அழிந்து போகட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்களின் இராஜதந்திரம் நமக்கு விளங்கவில்லை.. :rolleyes: முதலில் கணவன்-மனைவி பிணக்கு என்று சொல்ல வேண்டியது.. அப்ப சம்பிக்க வாயைப் பிளப்பார்.. :D உடனே விவாகரத்து கேட்கவேண்டியது.. பலே ஐடியா.. :icon_idea:

2500 வருடங்களில் இரண்டு இனமும் கடிபட்டதுதான் வரலாறு. இது கீரியும் பாம்பும் உறவு. இராமநாதன் மட்டும் சிங்களவர்களுக்கு 1915ம் ஆண்டில் உதவினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதில் உண்மை இல்லை. மற்றும் படி மகாவம்ச கதையை கடைப்பிடிக்கும் சிங்களத்துடன் கணவன் மனைவி உறவு என்றும் இருந்ததில்லை. அந்த உதாரணம் பொருந்தாது.

தேர்தலைக் கொண்டு வந்தது இந்தியா. இந்தியா மட்டும். இதை கூட்டமைப்புத்தான் சொன்னது. மகிந்தா விடத்தக்க திருகுதாளம் எல்லாம் விட்டுப் பார்த்துவிட்டு இந்தியாவை பொதுநலவாய கூட்டத்திற்கு அழைக்க தேர்தலை நடத்துகிறார். சாம்பூர் காட்டி ஏமாற்றுகிறார். கிளிநொச்சி தண்டவாளத்தை போடுகிறார். இது எல்லாம் இந்தியாவை பொதுநலவாய கூட்டம் வரை சமாதானப்படுத்தவே. தேர்தலில் ஐ.நா பிரேரணை பெரிய தாக்கத்தை காட்டவில்லை. இந்தியாவை நம்பி, இலங்கை,  ஐ.நா.வின் எந்த ஒரு கோரிக்கையையும் இது வரை முழுவதாக நிறைவேற்றவில்லை. உதாரணத்திற்கு கோத்தாவிடமிருந்த சட்டம் ஒழுங்கு மகிந்தாவிடம் போயிருக்கு. மகிந்தா பதவில் இருப்பதால்த்தான் இன்றைய அட்டூளியம் எல்லாம். கோத்தா பதவியில் இருப்பதால் அல்ல. எனவே கோத்தாவின் கையிலிருந்தது மகிந்தா கைக்குப் போனதை கவனிக்க வேண்டும். தேர்தலின் பின்னர் முதலீடு என்ற பெயரில் மேற்கு நாடுகள் தலையிடலாம் என்ற பயத்தால் வடக்கின் வசந்தம் பசிலிடமிருந்து மகிந்தா கைக்கு போனது. இந்த மாதிரித்தான் மேற்கு நாடுகள் இதுவரை சொன்னவற்றுக்கெல்லாம் ஒட்டக்கூத்தன் பாட்டாகவே வந்து முடிந்திருக்கின்றன. இந்தியாவுடன் மட்டும் நல்ல வாரப்பாடு என்பதல்ல. இந்தியா பொதுநலவாயத்திற்கு வராதுவிட்டால் அது ஐ.நாவில் இலங்கையை முழுவதாக ஒதுக்கிவிடும் என்ற பயத்தால் மட்டுமே.

இப்படி இந்தியா கொண்டு வந்த தேர்தல், தனது தேர்தலுக்காகவே.(இந்தியா கொண்டு வந்த தேர்தலில் எமக்கு எதிரியாக நடந்து கொண்டாலும் கூட எப்படி தமிழகத்தை வாயைப்பொத்திக்கொண்டிரு என்று தமிழீழம் சொல்ல முடியும்- அவர்கள் இரத்த உறவல்ல, சிங்களம் மட்டுமா உறவு?)அதன் தேர்தல் கருணாநிதி பதவியை ராஜினாம பண்ணிய பின்னர் எழுந்த கேள்வி.  வடக்கின் தேர்தல் 13ம் திருத்தத்தின் கீழ் வருவது. (ஐ.நா 13ம் திருத்தம் பற்றி பேசவில்லை) ஆனால் போர் நடக்கும் வரை இந்தியாவுக்கு 13+ சொன்ன இலங்கை போர் முடிய சொன்ன கதை வேறு. பீரிசு டெல்கியில் நின்று கொடுத்த இணை அறிக்கையை அவர் டெல்கியிலிருந்து கொறியா போகும் போதே மகிந்தா அது பீரிசின் தனிப்பட்ட அறிக்கை என்று மறுத்துவிட்டார். அதை ஏற்றுகொண்ட கிருஸ்ணா அதன் பின்னர் சொன்ன வசனம், 13ம் திருத்தம் என்றோ, 13+ என்றோ இலங்கையிடம் எதும் சொல்ல முடியாது. தமிழர்கள் இலங்கை அரசு கொடுப்பதை மட்டும்தான் பெற்றுக்கொள்ளலாம் என்பது. இந்த அடிப்படையில் அப்துல் கலாம், சுஸ்மாவை பிதொடர்ந்து வந்து மும்மொழி திட்டம் ஆரம்பித்துவைத்தார். இது மொழிவாரி தமிழ் மாகாணத்தை அங்கீகரிக்கும் 13+ உடன் ஒத்து வராதது. இதில் எல்லாம் தெரிவது இந்தியா தனது போக்கை மாற்றியே இன்று 13ம் திருத்த தேர்தலை கொண்டுவந்தது என்பதாகும். இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணம் கருணாநிதியின் பதவி விலகல். அவர் பதவி விலகிய காரணம் அவரைத் தமிழகம் இனி கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று ஒதுக்கியமையே. அவர் அடுத்து அடுத்து வந்த நாடாளுமன்ற, சட்ட சபை தேர்தல்களில் தனது வாக்கு தொடர்ந்து கூடிய வேகத்துடன் சரிவதைக் கண்டே தப்பிக்கொள்ள பதவி விலகினார். இந்த நிலை வந்தது ஜெயலலிதா தேர்தலில் வெல்ல ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு அவரை வைகோ, நெடுமாறன், சீமான் தள்ளியமையே. எனவே தமிழக அரசியல் தான் போக வேண்டிய பாதையில் சென்று மட்டும்தான் ஈழத்தமிழரை காப்பாற்றியது. இதை வைத்து நாம் அறிய வேண்டியது தமிழ் நாட்டு அரசியலில் ஏதாவது பிழை இருந்தால் அவர்கள் மட்டும்தான் அதை திருத்த சரியான ஆட்கள்;நாம் அல்ல என்பதாகும். அதைத்தான் அவர்கள் கடந்த இரண்டு தேர்தல்களிலும் திருத்தினார்கள். அதை நாம் அவர்கள ஈழத்தமிழர் விவகாரத்தை கையில் எடுத்து டெனிஸ் விளையாடுகிறார்கள் இப்போது பிழையாக கிரகிக்கக் கூடாது.

தமிழக தமிழர் எதையோ பேசுவதால் இலங்கையில் ஈழத்தமிழரை கொடுமை படுத்துவார்கள் என்று நினைக்கக் கூடாது. இது 2500 வருட கீரியும் பாம்பும் உறவு. தமிழ் நாட்டு தமிழர் கருணாநிதியின் போடா சட்டத்தின் கீழும், தேசிய பாதுகாப்பு கட்டத்தின் கீழும் கியூ   பிரிவால் அடக்கி வைத்திருந்த போதுதான் முள்ளிவாய்க்காலில் 150,000 அப்பாவி தமிழர்களை கொலை செய்தார்கள். கனிமொழி தமிழருக்காக பேசினார் என்பதற்காக அவர் வந்து மகிந்தாவின் காலில் வீழ்ந்து வணங்கியும் கருணாநிதி குடும்பமும் சோனியாவும் அடித்த கொள்ளைகளுக்கு அவரை மட்டும் சிறைக்கு அனுப்பினார்கள். அவர்கள் யாரைப் பழி வாங்க நினைக்கிறார்களோ அவர்களை பழி வாங்காமல் போகவிட்டுவிடுவதில்லை.எனவே தமிழ் நாட்டில் பேசுவதால் 1956, 1958,1977,1981,1983 எல்லாம் வந்தது என்று பீதி அடையத்தேவை இல்லை. 

தேர்தலை தொடர்ந்து, பொது நலவாய கூட்டம் முடிய, இந்தியா எல்லாவற்றையும் ஆறப்போடாமல் எதையாவது செய்ய வேண்டுமாய் இருந்தால் தமிழ் நாடு தொடந்து குழம்பிக்கொண்டிருந்தால் மட்டுமே அது நடக்கும். எனவே இந்தியா சிங்களத்திடம் சொல்ல வேண்டும் "நீங்கள் ஈழத்தமிழரிடம் முறையாக நடக்காவிட்டால் எங்களுக்கு தமிழகத்திடமிருந்து பிரச்சனை இருக்கு" என்று. நாம் அல்ல தமிழகத்திடம் சொல்லவது "நீங்கள் வாயை பொத்திக்கொண்டிருக்காவிட்டால் 3 அடி அடிக்கிற சிங்களம் இனிமேல் எங்களுக்கு 5 அடியாக அடிக்கப் போகிறான்" என்று. 

13 ஆமியை சுட்டார்கள் என்ற பெயரில் J.R. போர் என்றால் போர் என்று கறுப்பு யூலை நடத்திய போல் சீமான் எதையோ பேசினார் என்று மகிந்தா இன்னும் 100,000 ஆமியை வடக்கிற்கு அனுப்பப் போகிறார் என்றால் அதை கூட்டமைப்பு ஐ.நா வரை எடுத்துச் செல்லத்தான் வடக்கின் தேர்தல். வடக்கின் தேர்தலை தமிழ் நாடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றதை வரையறுக்கப் பாவிக்ககூடாது. தமிழ் நாட்டின் மீது எந்த நிபந்தனையும் இல்லாத வகையில் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் பெறத்தான் இந்த தேர்தல் பாவிக்கப்படவேண்டும். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

அவர் தமிழக அரசியல்வாதிகள் பற்றியே குறிப்பிடுகின்றார். மக்களைப் பற்றியல்ல. ஆனால் திரு.விக்னேஸ்வரன் எப்போது இதைச் சொன்னாலும், அவருக்கும் கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் எனக் கருதுகின்றேன். போராட்டத்தின் அழிவு, இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழக சொந்தங்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே எம் அவா.  :icon_idea: 

மல்லை நீங்கள் சொல்லுவது போல விக்கிக்கு யாராவது சொல்லோனும்...தமிழ்நாடு எமது தாய்வீடு......

கணவன் அடித்தால்....அண்ணன் கேட்பான்...என்று... :)

அப்போது...எமது உறவு (இந்தியாவோடு) இன்னும் வலுப்படும்...இலங்கையும் பயப்படும்...

ராஜீவின் கொலை தான் இலங்கையின் trump card

விக்னேஸ்வரன் என்ன... உளறிக் கொட்டினாலும், அதனைப் பற்றித் தமிழகத் தமிழர் கவலைப் பட வேண்டியதில்லை.

காரணம் விக்னேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு, சம்பந்தனால்... நடத்தப் பட்டது.

சம்மந்தனின்.... அரசியல் வியாபாரம் எல்லோருக்கும் தெரியும். அதில்... இந்தியாவின் அழுத்தங்களும்... உள்ளடங்கும்.

ஆனால்... இதில், தமிழ்க் கூட்டமைப்பை விட்டால், வேறு வழியில்லை... என்பதே ஈழ மக்களின், வேண்டாத விருப்பம்.

இதில்... நாம், புடுங்குப்பாடு செய்தால்.... ஒட்டுக்குழுக்கள் ஆட்சிக்கு வரும்.

அதனையே... விக்னேஸ்வரனை களமிறக்கி சாதிக்கிறார் சம்பந்தன்.

மாவையை... முதலமைச்சர் வேட்பாளராக்கி இருந்தால்... இப்படியான இழுபறிகள் வந்திருக்காது.

அதற்கு... இந்தியாவும், ஸ்ரீலங்காவும், சம்பந்தனும்... சம்மதித்திருக்க மாட்டார்கள் என்பது தான்... உண்மை.

சம்பந்தர் ஒட்டுக்குழு;விக்கினேஸ்வரன் ஒட்டுக்குழு,புலம்பெயர் நாட்டில் அரசியல் கதைப்பவன் ஒட்டுக்குழு,உங்களுக்கு பிடிக்காத விஸ்க்கி அடிச்சவன் ஒட்டுக்குழு,பியர் அடிச்சவன் ஒட்டுக்குழு,கருத்தெழுதினவன் ஒட்டுக்குழு,பாட்டுப்பாடினவன் ஒட்டுக்குழு,திரும்பி பாத்தவன் ஒட்டுக்குழு,நட்ந்தவன் ஒட்டுக்குழு,ரவுசர் போட்டவன் ஒட்டுக்குழு?? :D ஏன் அண்ணை பேசாமல் நீங்கள் உங்கள் குடுமப சகிதமாய் தமிழற்ற அரசியல ஜேர்மனியில் இருந்துகொண்டு எடுத்து நடத்துங்களன். ஒடூக்க்குழுக்களுக்கு எல்லாம் மலத்தியோன் அடிச்சமாதிரி இருக்கும் உங்கள் அரசியல் பிரவேசத்தின் மூலம். :D

தமிழ் நாடு அரசியல் வேண்டாம் எண்று விக்கி முடிவெடுத்தால் காங்கிரஸ் ஆழும் இந்திய மத்திய அரசை தான் முதலில் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும்... 

இந்திய மத்திய அரச தேர்தல் வரும் இக்காலத்தின் போது காங்கிரசை குளிர்விக்க மட்டும் தான் இந்த பேச்சு உதவும் ஈழத்தவர் விடிவுக்காக அல்ல.. 

சரியா சொன்னீங்கள்...ஆரம்பத்திலேயே நினைத்தேன் இதில் ஏதோ உள் குத்து இருக்கு என்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.