Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவனை வாழ்க்கை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது.

 

போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள்.  உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது.

 

அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்பார்கள் என்பது பற்றி எதுவும் தெரியவுமில்லை. எனது நண்பியொருத்தி விடுமுறைக்காக இலங்கை போகின்றேன் நீங்களும் வாருங்கள், முடிந்தவரை நாட்டை ஒருமுறை சுற்றிப் பார்ப்போம் என்றார். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் எனக்கு இனிமேல் கிடைக்குமா என்ற சந்தேகம் எழவே நான் வேறு ஒன்றையும் யோசிக்காமல் சம்மதித்துவிட்டேன். கையில் இருந்தது மூன்றே மூன்று கிழமை விடுமுறை, அதனை பிரியோசமான முறையில் செலவிடவேண்டும் என்பது மட்டும் எனக்கு முக்கியமாகப் பட்டது. முடிந்தவரை எனது இலக்கிய நண்பர்களைச் சந்தித்து, இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொண்டு, பல இடங்களைச் சுற்றிப் பார்த்து பிரியோசமான முறையில் செலவிட்டிருக்கின்றேன் என்றே நம்புகின்றேன். 

 

இதே வருடம் தைமாதம் இந்தியா போகும் வழியில் கொழும்பில் ஒருநாள் தங்க வேண்டியிருந்ததால், கொழும்பு விமானநிலையத்தில் இறங்கி, ஒருநாள் தங்கவேண்டியிருந்த  விடுதிக்குச் சென்று பகல் நேரம் கொழும்பை ஒருமுறை சுற்றியும் பார்த்தும் வந்திருந்தேன். எனவே எனது இந்தப் பயணத்தில் கொழும்பில் நான் முப்பது ஆண்டுகளின் பின்னர் காலடி எடுத்து வைக்கவில்லை. தை மாதம் விமானநிலையத்தில் இறங்கி வெளியே வந்த போதும், விமானநிலையத்தில் இலங்கை சீருடையுடனும் துப்பாக்கிகளுடனும் உலாவிக்கொண்டிருந்த  இராணுவத்தைக் காணும் போது, என்னையறியாமலே கைகள் விறைத்தும், கால்கள் தடுமாறியதும் போல் இந்தப் பயணம் அமையவில்லை. விமானநிலையம் பழக்கபட்ட இடமாகவேயிருந்தது.

அதன் பின்னர் நண்பியுடன் கல்முனை, மட்டக்களப்பு, கண்டி, திருகோணமலை என்று சுத்தித்திரிந்து இடங்களைப் பார்த்த போதும், பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாடியபோது எனது நாட்டில் உலாவுவது போலில்லாமல் உல்லாசமான ஒரு விடுமுறையைக் கழித்த போலிந்தது. தொடக்கத்தில் உல்லாசம் போல் காணப்பட்ட என் பயணம் யதார்த்தம் என்ற உண்மைக்குள் மெல்ல நுழையத் தொடங்கியது.

 

ஒவ்வொரு முறையும் ஒரு இடத்தைக் கடக்கும் போதும் எனது நண்பி இங்குதான் இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், இந்தத் தாக்குதல்  இடம்பெற்றது, இங்கேதான் இந்த அழிப்பு நடைபெற்றது என்று குறிப்பிட்டுக்கொண்டே வந்தார் . எனது நாட்டில் அடையாளப்படுத்தல்கள் எப்படிமாறிப் போய்விட்டன என்பது அப்போதுதான் எனக்குள் உறைக்கத் தொடங்கியது. மூதுார் தாக்குதல், படுவான்கரைப் படுகொலை, திருகோணமலையில், மட்டக்களப்பில் மாணவர்கள் கொல்லப்பட்ட சந்தி. விமல்குழந்தைவேலின் ”கசகறணம்”  நாவலின் மையப் பகுதி. இப்படி தொடர்ந்தன அறிமுகங்கள்..

 

பின்னர் ஒரு இரவு எமது பயணம் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டது. இரவாதலினால் தெருவிளக்கிற்குள் அடங்கிய குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பார்க்க முடிந்தது. வீதியோரங்களில் அங்காங்கே ஒளிச்சுடர்கள் மின்மினியைப் போல் மின்னிக்கொண்டிருந்தன. அவை போரில் இறந்தவர்களுக்காக குடும்பத்தினரால் ஏற்றப்பட்ட விளக்குகள் என்றார் எனது நண்பி. 

கிளிநொச்சிச் சந்தியை அடைந்த போது மெல்லிய வெளிச்சத்தோடு ஒற்றையாக இருந்த வீதி பிரமாண்டமான பல பல்புகளோடு கூடிய வெளிச்ச வீதியாக மாறிப்போயிருந்தது. போரின் வெற்றியின் அடையாளமாக மிகப்பெரிய துாபி ஒன்றும், இன்னும் பல போரின் சின்னங்களும் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்தது. சொகுசு பஸ்சுகளில் வந்து இறங்கி பல சிங்கள மக்கள் பார்வைக்காகச் சென்றுகொண்டிருந்தார்கள். 

 

எமது வாகன ஓட்டுனரும் கிளிநோச்சிச் சந்தியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிப் படம் எடுக்கப் போகின்றீர்களா? பார்க்கப் போகின்றீர்களா என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்ட போது எதுவோ ஒன்று என் தொண்டைக்குள் வந்து அடைத்துக்கொண்டது. துாரத்தில் மின்மினிபோல் மின்னிக்கொண்டிருக்கும் சிறிய விளக்குகள், சந்தியில் போரின் வெற்றிச் சின்னங்கள். அவசரமாகக் கமெராவை எடுத்து விதம் விதமாகக் கிளிக் செய்து முகப்புத்தகத்தில் படங்களைப் போட்டு லைக் வாங்கும் மனநிலையில் நான் அப்போது சிறிதும் இல்லை. 

 

எங்கோ, யாரே ஒருவரின் படைப்பில் வாசித்தது அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தது. ஜேர்மெனிக்குப் போயிருந்த ஒருவர் இரண்டாவது உலகப் போரின் போது யூதர்களைக் கொல்லுவதற்கு நாட்ஸிகளால் உபயோகப்படுத்தப் பட்ட நச்சு வாயுக் கட்டடங்கள் தற்போது பார்வைக்காக உள்ளதாகவும், தான் அங்கு சென்று பார்வையிட்ட போது, அங்கே அபலை மக்களின் அவலக்குரல் தனக்குக் கேட்டது போல் பிரமை ஏற்பட்டுத் தன்னால் சில நொடிகள் கூட அங்கே நிற்க முடியாமல் போய் விம்மி விம்மி அழுதபடியே அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகவும்  குறிப்பிட்டிருந்தார். 

 

கிளிநொச்சிச் சந்தியில் நிற்கும் போது பாரிய அளவில் எமது மக்கள் கொல்லப்பட்ட மண் அது என்ற எண்ணம் எனக்குள் எழுந்து குற்ற உணர்வில் கால்கள் நிலத்தில் படக் கூசியது. இறங்கி நின்று அங்கு சுத்திப் பார்ப்பதற்கோ, படம் எடுப்பதற்கோ நான் ஒன்றும் உல்லாசப்பயணி அல்ல ஒரு ஈழத்தமிழச்சி என்ற எண்ணம்தான் மனதுக்குள் திரும்பத் திரும்ப வந்தது.  அப்போது எனக்கிருந்த மனநிலையில் அங்கிருந்து போய்விட்டால் போதும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

 

அதன் பின்னர் வாகனம் செம்மணியில் அமைக்கப்பட்ட ”யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது” வரவேற்பு வளைவினைத் தாண்டிய போது நண்பி சொன்னார் தற்போது வாகனம் செம்மணியில் சென்று கொண்டிருக்கின்றது என்று.  

மரணத்தின் வாசனை, போர் தின்ற நிலம், பதுங்கு குழி நாட்கள், இதுதான் எமது நாடு. சீழ் விழுந்த  புண்ணிற்கு மருத்தைப் போடாது, மேலே பூச்சைப் போட்டு மூடியிருக்கின்றார்கள். அதற்குமேல் நாம் அலுங்காமல் குலுங்காமல் ஏசி வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கெல்லாம் எமக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகின்றதோ?

அதன் பின்னர் இலக்கிய நண்பர்களைச் சந்திப்பது, எனது சொந்த ஊரைச் சுற்றிப் பார்ப்பது என்று வேறு திசையில் எனது பயணம் அமைந்திருந்தது. சிரித்த முகத்தோடு நண்பர்கள் என்னை அன்போடு வரவேற்று உபசரித்த ஒன்று இல்லாவிடின் எனது பயணம் மிகவும மனஉளைச்சல் நிறைந்ததாகவே அமைந்திருந்திருக்கும் என்பதை தற்போது நினைவு கூர்ந்து பார்க்கும் போது உணர்ந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது.

 

போரின் அடையாளங்களை யாழ்ப்பாணத்தில் நான் சுற்றித் திருந்த இடங்களில் காணமுடியவில்லை. நானாகக் கேட்டால் தவிர, போர் பற்றி அதிகம் ஒருவரும் பேசவும் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். எனது ஊரான கோண்டாவிலில் எனது வீட்டு அயலவர்களைச் சந்தித்து உரையாடினேன். எல்லோரும் முன்பு இருந்ததிலும் பார்க்க அதி தீவிரமாக கடவுள் பக்தர்களாக மாறிப்போயிருப்பது தெரிந்தது. 

கையறு நிலையில் கடைசியாக இலகுவில் நெருக்கமாக் கிடைப்பவர் கடவுளர்தானே!

இராணுவவீரர்களும், சிங்கள மக்களும் கலந்த ஒரு கலவையாய் யாழ்ப்பாணத்தைப் பார்ப்பது சிரமமாகவும், புதினமாகவும் இருந்தது. எப்போதுமே என்னோடு என் கைப்பையினுள்ளிருந்த பாஸ்போர்ட்டும், பயணச்சீட்டும் ஏதாவதென்றால் உடனே கிளம்பிவிடலாம் என்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டே வந்தன. அந்த வேளைதான் இது இனி என் நாடல்ல என்றும் நான் உணர்ந்து கொண்டேன். 

சிங்களப் பக்கங்களில் தமிழர் வாழவில்லையா? தமிழரின் பிரதேசங்களுக்கு சிங்கள மக்கள் வந்தால் மட்டும் ஏன் தழிழர்கள் ஆத்திரப்படுகின்றார்கள் என்று எனது நண்பர்கள் உரையாடக் கேட்டிருக்கின்றேன். வருவதோ, வந்ததோ தவறில்லை ஆனால் வருகைக்கான நேரம் மிகமிகத் தவறாக அமைந்திருக்கின்றது.

மானிப்பாய் வீதியால் கீரிமலை நோக்கிப் பயணிக்கும் போதுதான், போரில் அழிந்து போன வீடுகளை வரிசையாகக் காண முடிந்தது. அனேக வீடுகளின் கூரைகள் முற்றாகத் தகர்த்து எறியப்பட்டிருக்கின்றன. சுவர்களிலும், மதில்களிலும் துப்பாக்கித் துளைகளைக் காணலாம். புரணமைப்பதற்கான எந்தப் பிரயத்தனமும் இன்னமும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் முக்கியமான வீதியொன்றின் கரையோரங்களில் வீடுகள் காணப்படுவதற்கு ஏதும் அரசியல் காரணம் இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

கீரிமலை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை எனது பயணம் அமைந்திருந்தது. சிங்களப்பிரதேசங்களில் இராணுவத்தினரைக் காணமுடியவில்லை. கொழும்பில் முக்கியமாக வெள்ளவத்தைப் பக்கத்தில் காலி வீதியில் மூலைக்கு மூலை இராணுவம் நின்றுகொண்டிருந்தது. அதே போல் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் இராணுவத்தினரைக் காணக்கூடியதாக இருந்தது. மக்கள் பழகிவிட்டார்கள். மனதுக்குள் பதட்டம் இருக்கின்றதா தெரியவில்லை, ஆனால் சகஜமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் என்னால் முடியவில்லை. முற்றுமுழுதாக இராணுவத்தை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தேன். ஒவ்வொரு முறையும் இராணுவ வாகனங்களைக் கடந்து செல்கையில் எனக்குள் பதட்டம் எழுந்தவண்ணமேயிருந்தது. வீதியோரங்களில் இராணுவம் நிற்கும் வேளைகளில் எமது வாகனத்திலிருந்து இறங்க நேரிடின் முடிந்தவரை தவர்த்தே வந்தேன். இதனால் ஒருவகை மனஉளச்சலாய் எனது பயணம் அமைந்திருந்தது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். 

 

எனது நண்பர்களோடோ, இல்லாவிட்டால் எனது வீட்டு அயலவர்களோடோ எமது நாட்டின் தற்போதைய நிலைபற்றி அதிகம் நான் பேசவில்லை, ஆனால் எனது விருப்பத்திற்கு அலையக் கிடைத்த ஒருசில மணிநேரங்களில் முகமறியாத சிலருடன் உரையாடக் கிடைத்த போது அவர்களிடம் தற்போதைய நாட்டின் நிலை பற்றியும் அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றியும் உரையாட முடிந்தது. கீரிமலையில் பெண்கள் கேணிப்பகுதிக்குப் பொறுப்பாக அமர்ந்திருந்த பெண்ணோடு சில மணித்தியாலங்கள் உரையாடக் கிடைத்தது. இவர்களுடனான உரையாடலின் போது போர் இல்லை என்ற ஒன்றைத் தவிர இவர்கள் ஒருவரும் சந்தோஷமாக இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது. 

இவர்கள் சொன்னவற்றை என்னால் இப்படிப் மொழியாக்கம் செய்ய முடிகின்றது.

”புருஷன் உன்னைப் போட்டு அடியடியெண்டு அடிச்சு ஊனப்படுத்தி, வீட்டையும் சின்னாபின்னமாக்கிப் போட்டு, இஞ்ச வா நானுனக்கு தேனும் பாலும் ஊட்டுறன், நாங்கள் சல்லாபிச்சு சந்தோஷமா இருப்பம் எண்டா முடியுமோ? மனதளவில பிரிஞ்சது பிரிஞ்சதுதான், சாட்டுக்கு வேணுமெண்டாக் குடும்பம் நடத்தலாம்.”

எனது இலங்கைப் பயணம் இப்படியாக முடிந்தது. பின்னர் ஐந்து நாட்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றேன். ஏனோ இதுதான் உன் நாடு என்று என் மனம் சொன்னது.  எனக்குத் தெரியும் அதுவும் எனது நாடில்லை என்பது. அப்பிடியென்றால் எதுதான் என் நாடு? என்னால் கனடாவிலும் ஒட்ட முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்த நாட்டில் காலடி வைத்த நேரம் தொடக்கம் திரும்பும் வரையும் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதைத் தவிர மனதில் வேறு ஒன்றும் எழவில்லை. தமிழ்நாடு எனது நட்பு நாடு மட்டுமே. 

எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, ஒன்றுமே தொலையாததுபோல் பாவனை வாழ்க்கை வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களோடு நானும் இணைந்து பாவனை வாழ்க்கை வாழ்ந்து முடிக்கப் போகின்றேன்.

 

 

By கறுப்பி நவா..
 
  • கருத்துக்கள உறவுகள்

....

 

எங்கோ, யாரே ஒருவரின் படைப்பில் வாசித்தது அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தது. ஜேர்மெனிக்குப் போயிருந்த ஒருவர் இரண்டாவது உலகப் போரின் போது யூதர்களைக் கொல்லுவதற்கு நாட்ஸிகளால் உபயோகப்படுத்தப் பட்ட நச்சு வாயுக் கட்டடங்கள் தற்போது பார்வைக்காக உள்ளதாகவும், தான் அங்கு சென்று பார்வையிட்ட போது, அங்கே அபலை மக்களின் அவலக்குரல் தனக்குக் கேட்டது போல் பிரமை ஏற்பட்டுத் தன்னால் சில நொடிகள் கூட அங்கே நிற்க முடியாமல் போய் விம்மி விம்மி அழுதபடியே அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகவும்  குறிப்பிட்டிருந்தார். 

 

கிளிநொச்சிச் சந்தியில் நிற்கும் போது பாரிய அளவில் எமது மக்கள் கொல்லப்பட்ட மண் அது என்ற எண்ணம் எனக்குள் எழுந்து குற்ற உணர்வில் கால்கள் நிலத்தில் படக் கூசியது.

 

மரணத்தின் வாசனை, போர் தின்ற நிலம், பதுங்கு குழி நாட்கள், இதுதான் எமது நாடு. சீழ் விழுந்த  புண்ணிற்கு மருத்தைப் போடாது, மேலே பூச்சைப் போட்டு மூடியிருக்கின்றார்கள். அதற்குமேல் நாம் அலுங்காமல் குலுங்காமல் ஏசி வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கெல்லாம் எமக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகின்றதோ?

.....

கையறு நிலையில் கடைசியாக இலகுவில் நெருக்கமாக் கிடைப்பவர் கடவுளர்தானே!

....

”புருஷன் உன்னைப் போட்டு அடியடியெண்டு அடிச்சு ஊனப்படுத்தி, வீட்டையும் சின்னாபின்னமாக்கிப் போட்டு, இஞ்ச வா நானுனக்கு தேனும் பாலும் ஊட்டுறன், நாங்கள் சல்லாபிச்சு சந்தோஷமா இருப்பம் எண்டா முடியுமோ? மனதளவில பிரிஞ்சது பிரிஞ்சதுதான், சாட்டுக்கு வேணுமெண்டாக் குடும்பம் நடத்தலாம்.”

 

.....

எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, ஒன்றுமே தொலையாததுபோல் பாவனை வாழ்க்கை வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களோடு நானும் இணைந்து பாவனை வாழ்க்கை வாழ்ந்து முடிக்கப் போகின்றேன்.

 

சீரணிக்க முடியாத, வலி சொல்லும் வார்த்தைகள்.

 

 

எனது இலங்கைப் பயணம் இப்படியாக முடிந்தது. பின்னர் ஐந்து நாட்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றேன். ஏனோ இதுதான் உன் நாடு என்று என் மனம் சொன்னது.  எனக்குத் தெரியும் அதுவும் எனது நாடில்லை என்பது. அப்பிடியென்றால் எதுதான் என் நாடு? என்னால் கனடாவிலும் ஒட்ட முடியவில்லை.  

 By கறுப்பி நவா..

 

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

பொதுவாக புலம்பெயரந்தவனின் இறுதியான கேள்வியும் எண்ண ஓட்டங்களும் அனுபவத்தின் பின் வெளிப்படுகின்றது. இந்த நிலையை விபரிக்கவும் முடியாது இதற்கு தீர்வு சொல்லவும் முடியாது. விடைகளும் இல்லை. சிலருக்கு இந்த கேள்விகள் பெரிய விசயமாகவும் இருக்காது.

சின்னர்மேன் கடவுளிடம் மன்றாடக்கூடும் ஆனால் அவன் அவனுக்காக மட்டுமே வேண்டுகின்றான். சுயநலத்தை நிறுத்தும் வரை வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பான் விடுதலை என்பது அவனுக்கில்லை. நாமும் அப்படித்தான்.

Oh, Sinnerman, where you gonna run to?

Sinnerman, where you gonna run to?

Where you gonna run to?

All along dem day

Well I run to the rock, please hide me

I run to the Rock, please hide me

I run to the Rock, please hide me, Lord

All along dem day

But the rock cried out, I can't hide you

The Rock cried out, I can't hide you

The Rock cried out, I ain't gonna hide you guy

All along dem day

I said, "Rock, what's a matter with you, Rock?"

"Don't you see I need you, Rock?"

Lord, Lord, Lord

All along dem day

So I run to the river, it was bleedin'

I run to the sea, it was bleedin'

I run to the sea, it was bleedin'

All along dem day

So I run to the river, it was boilin'

I run to the sea, it was boilin'

I run to the sea, it was boilin'

Along dem day

So I run to the Lord, please hide me Lord

Don't you see me prayin'?

Don't you see me down here prayin'?

But the Lord said, "Go to the devil"

The Lord said, "Go to the devil"

He said, "Go to the devil"

All along dem day

So I ran to the devil, he was waitin'

I ran to the devil, he was waitin'

Ran to the devil, he was waitin'

All on that day

I cried, power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

Bring down

(Power to da Lord)

Bring down

(Power to da Lord)

Bring down

(Power to da Lord)

Bring down

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Oh yeah, oh yeah, oh yeah

Well I run to the river, it was boilin'

I run to the sea, it was boilin'

I run to the sea, it was boilin'

All along dem day

So I ran to the Lord

I said, "Lord hide me, please hide me"

"Please help me"

Along dem day

He said, "Child, where were you

When you ought a been prayin'?"

I said,"Lord, Lord, hear me prayin'"

Lord, Lord, hear me prayin'

Lord, Lord, hear me prayin'"

All along dem day

Sinnerman you ought a be prayin'

Ought a be prayin', Sinnerman

Ought a be prayin'

All on that day

I cried, power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Go down

(Power to da Lord)

Go down

(Power to da Lord)

Go down

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Power

(Power to da Lord)

Oh woh, power, power, Lord

Don't you knew

Don't you know, I need you Lord?

Don't you know that, I need you?

Don't you know that, I need you?

Power, power, power Lord

Read more: Nina Simone - Sinnerman Lyrics | MetroLyrics

http://www.metrolyrics.com/sinnerman-lyrics-nina-simone.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அர்ஜீன் அண்ணாவின் சகோதரியா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அர்ஜீன் அண்ணாவின் சகோதரியா :unsure:

 

அவரேதான் தெரிந்து என்ன கேட்கப் போகிறீர்கள் ரதி

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குறிப்பிட்ட கட்டுரையும் இன்னுமொருவனது கட்டுரையும், சுற்றுலா போனவரது மனவோட்டத்தில் எழுதப்பட்ட பயணக்கட்டுரையாகவே எனக்குப்படுகிறது. நீங்கள் ஊருக்குப்போனியள் அங்க என்னமாதிரி இருக்கு எண்டு கேட்பவர்களுக்குச் சொல்லும் பதில் போல்தான இது இருக்கு. மற்றப்படி போனவர்கள் அனைவரும் வடக்குக்கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலநாட்களுக்குமேல் ஓரிடத்தில் தரித்திருந்து அங்கத்தைய நிலைமைகளைப் கவனிக்கவில்லை என நினைக்கிறன். மத்தப்படி முப்பதுவருட வெளிநாட்டு வாழ்க்கையின் தருணங்களில் ஒருசதவீதமாகுதல் அங்கு பிரதிபலிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்படியான ஒரு விம்பத்தை வைத்துக்கொண்டு யாராவது ஊருக்குப்போனால் உங்களுக்குத் தோல்வியே கிடைக்கும். தவிர விற்கப்பட்ட அல்லது யாருக்கோ வேண்டாமெனத் தாரைவார்த்த பிறந்து வளர்ந்தவீடு, ஊர்சனம் சொந்தம் இவைகள் அனைத்தும் அதேமாதிரி இருக்கும் நாங்கள் மட்டுமே புலம்பெயர்ந்துசென்றுவிட்டோம் எனும் நினைப்பில்போய் தோல்வியில் வந்தால் தவறு உங்களதே அன்றில், உங்கள் மண்ணிணது இல்லை. நானும்தான் நீண்டகாலமாக புலம்பெயர்ந்து வாழ்கிறேன் தாயகத்துக்குப் போகிறேன் என் சொந்தங்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறேன் பழைய நட்புகளைப் புதுப்பிக்கிறேன் நீங்கள் கூறிய எதையுமே நான் உணரவில்லை. அதற்காக அங்கு எல்லாம் சரியாக இருக்குது எனச் சொல்லவில்லை. புலிகளது நிர்வாகம் இருக்கும்போதும் இப்போதைக்கும் நிறையவே மாற்றங்கள் இருக்கு. அப்போது எல்லாமே ஒரு கட்டமைப்புக்குள் இருந்தன  இப்போது எல்லாமே தலைகீழாகத்தான் இருக்கு. என்ன செய்ய அதையும் தாங்கிக்கொண்டு அங்கு புலம்பெயர்ந்த எங்கள் எண்ணிக்கைக்கு மேலாக எமதுறவுகள் வாழ்கின்றனவே இது ஒரு சாதனை அல்லவா அவர்களைச் சந்திப்பதே எமது பயணத்தின் அர்த்தமுள்ள தருணங்கள் அல்லவா? எதோ நீங்கள் எல்லாம் புலத்தில் வாழ்ந்தபோது தங்கக் கரண்டியில் புசித்திருந்ததாகவும் இப்போது எல்லாமெ மாறிவிட்டதாகவும் புலம்புவது எனக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் எல்லோரும் தப்பிவாழ புறமுதுகு காட்டி, குதிக்கால் பிரடியில பட ஓட்டமெடுத்தவர்கள். இங்குவந்து புறம்சொல்லுகிறோம் இன்னுமொருக்காப் போங்கோ உங்கள் ஊரில் யாருடைய வீட்டிலாவது ஒரு ஓரக்குந்தில் ஒரு மாதமாகிலும் தங்கி இருந்து பாருங்கள் அந்தத் தருணங்கள் உங்கள் வசப்படும். அதன்பின்பு வந்திங்கு தாயக்கட்டை உருட்டுங்கோ.

கடந்த முறை சென்ற போது கசூரினா கடற்கரையில் எம்முடைய வாகனம் மணலில் புதந்த அனுபவம்.
 
சின்னனில் இருந்து எத்தனையோ தடவை கசூரினா கடற்கரைக்கு பொயிருக்கிறேன்.
 
 
 
 
நாங்கள் ஊருக்கு வரப்போகிறோம் என்று மனையின் அப்பா புதிதாக ஒரு வாகனம் வாங்கி வைத்திருந்தார். அதில் தான் பயணம் முழுக்க..
 
பிள்ளைகள் கடலில் குளித்து விளையாடி முடிக்க இரவு 7 மணி தாண்டி விட்டது. பிறகு துடைத்து கிடைத்து வாகனத்தில் ஏரிய போது 8 மணிக்கு கிட்ட. நன்றாக இருட்டி விட்டது. வாகனத்தை எடுத்த போது ஒரு டயர் மணலில் புதைந்தது. அருகில் இருந்த பனங்கூடலில் தேடி பன மட்டைகளை டயருக்கு கீழே போட்டு எடுக்க முயற்சித்த போதும் பயனளிக்க வில்லை. ஒரு சனமும் இல்லை. மனுசி வேற பயத்தில அரியண்டங் குடுக்க தொடங்கி விட்டாள்.
 
மோபைலில் மாமனார் வீட்டுக்கு அடித்த போது மனையின் மச்சான் காரப் பெடியன் தாங்கள் மோட்டார் சைக்கிளில் கிளம்பி வருவதாச் சொன்னான்.  யாழ்ப்பாணத்தில் இருந்து அங்க வர எப்படியும் முக்கால் மணித்தியாளமாவது எடுக்கும்.  
 
 
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு பஸ் வந்தது. அதில் நயினார் தீவுக்கு போய்வந்த் சிங்களவர்கள் இருந்தார்கள். பெண்கள் ஆண்கள், பிள்ளைகள் எனப் பலர் இருந்தார்கள்.
 
அதில் இருந்த ஆண்கள் சில பேரிடம் போய் விசயத்தைச் சொல்லி கொஞ்சம் தள்ளி விடுவீங்களா எனக் கேட்டன். (" பொடி புஷ் எகத் தெண்ட‌ புழுவன் த ?")  :D
 
அவனுகளப் பார்க்க காஞ்சோண்டிப் பயளுகள் மாதிரி இருந்தது. அவனுக‌ளும் தள்ளிப் பார்த்தானுகள். இப்ப அடுத்த டயரும் மண்னுக்குள் போய், வாகனம் இப்ப மணலில் உட்கார்ந்தே விட்டது.
 
மனுசிட முகத்தில பேய் அறஞ்ச மாதிரி இருந்திச்சு. பிள்ளைகளோ அட்வென்ச்சர் ட்ரிப் மாதிரி துள்ளிக் குதிதுக் கொண்டிருந்தார்கள். 
 
கசூரினா கடற்கரையில் இருந்து ஊர்மனைகள் எப்படியும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் தள்ளித் தான், இப்ப ஊர்மனைகளில் சனமும் இல்லை.
 
வாகனத்தை விட்டு விட்டு இவர்களை நடத்திக் கூட்டிக் கொண்டு போவது ஒரு பாதுகாப்புப் பிரச்சனையாகப் பட்டது. 
 
என்ன செய்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது.. பெரிய சத்தமாக தமிழ்ப் பாட்டுப் போட்டுக் கொண்டு ஒரு தமிழ் குரூப் பிக்கப்பில் வந்தார்கள். வாட்ட சாட்டமான பெடியங்கள்.
 
அவர்கள் பிக்கப்பை பனங்க் கூடலுக்குள் விட்டு விட்டு உடைகள மாற்றி குளிக்க தயாரானார்கள். முதல் தள்ளிப் பார்த்த சிங்களவரில் ஒருவர் வந்து சொன்னார் அவர்களக் கேட்டுப் பாரன் என்டு.
 
அவனுகள்ட போய்க் கேட்டேன். அவர்களும் வந்து தள்ளிப் பார்த்தார்கள். முடியவில்லை. பின் அவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து வாகனத்தின் அடியில் பிடித்து அப்படியே வாகனத்தின் பின் பகுதியைத் தூக்கி கிடங்கில் இருந்து வெளியே எடுத்து ஒன்று இரண்டு அடி தள்ளி.. வைத்தார்கள்.
 
ஒருவன் சொன்னான்."அண்ணை.. இப்ப ளோ கியரில மெதுவா எடுங்கோ பாப்பம்.."
 
வாகனம் மணலில் இருந்து புல்லுப் பாங்கான இடத்துக்கு வந்ததும் அப்பாடா.. என்று இருந்தது.
 
இறங்கிப் போய் அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மோபைலில் அழைத்து வரவேண்டாம் என்று சொல்லிப் போட்டு கிளம்பினது தான்.
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது நெருங்கிய உறவினர் ஒருத்தர் தனது இரண்டுபிள்ளைகளுடன் தாயகம் சென்றிருந்தார். சென்றவிடத்தில் எதிர்பாரஆதவிதமாக சிறு விபத்தில் மாட்டிக்கொண்டார். பயணக்காப்புறுதி இருந்தும் உடனடியாகச் சிகிச்சை ச்ய்யவேண்டுமெனில் காப்புறுதி நிறுவனத்தின் ஒப்பந்தம் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையுடனேதான். ஆகவே முதலுதவிக்காக யாழ் திருநெல்வேலியில் உள்ள சென்றல் நேர்சிங்கோமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது அப்போது உடனிருந்தவர் யாழ் பல்களைகழக மருத்துவபீட விரிவுரையாளரும் சிறப்பு மருத்துவருமாகிய, வைத்தியர் இராஜேந்திரா. முழங்கையில் எலும்பில் சிறு உடைவும் அதேநேரத்தில் முழங்கைபூட்டுக்கள் விலத்தியிரிப்பது படங்களின்மூலம் கண்டறியப்பட்டது. உடனடியாக சத்திர சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு மயக்கமருந்து பாவிக்கப்பட்டு சரியான விதத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது என்றிருக்கையில். பொறுத்த முயற்சித்த கைப்பூட்டு சரியாகப் பொருத்தப்படவில்லை என்பதை இருவாரங்களின் பின்பு எடுக்கப்பட்ட படங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மருத்துவர் இராஜேந்திரா அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மெலதிக செலவுகள் எதையும் வைக்காதுபடிக்கு தனது நேரடிக்கண்காணிப்பில் கூடிய சிரத்தை எடுத்து இயண்ற அளவு சிறப்பாக தனது சேவையினைச் செய்தார். தந்து வயது முதிர்ந்த பெற்ரோருடன் சிறிதுகாலம் தங்குவதற்காகப் இரண்டு சிறு பிள்ளைகளுடன் சென்ற அப்பெண், யாழ்நகரில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றதைவிட மிகவும் சிறப்பான சிகிச்சை பெற்றதுடன் அன்பான பராமரிப்பினையும் பெற்றுக்கொண்டார். இரு தினங்களின்பின்பு வைத்தியசாலையிலிருந்து விடுபட்டு முச்சக்கர வண்டுயில் வீடு திரும்பும்போது சாரதியிடம் எவ்வளவு பணம் தரவேண்டும் எனக்கேட்டதற்கு "அக்கா ஆஸ்பத்திரியிலிருந்து யாராவது சிகிச்சைக்காக வந்து  எமது வாடகை வண்டிகளில் சவாரி செய்வார்களேயிருந்தால் நாம் அதிகபணத்தை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை, நீங்கள் குடுக்குறதைகுடுங்கோ என்று சொன்னார்" அங்கு மனிதம் வாழ்கின்றது. தவிர யாழ் ஆட்டொ ஓட்டுணர் சங்கத்தினர் யாழ் வைத்திய சாலைக்கு கிரமமாக வரும் வசதி குறைந்த நோயாளர்களை தங்கள் செலவிலேயே வீட்டிலிருந்து கூட்டிச்சென்று சிகிச்சையின்பின்பு திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விடும் வழக்கத்தில் உள்ளனர். இப்படியாக இருந்த தொண்டைப் புற்றுநோயாளியாகிய  ஒருவர் இறக்கும்தறுவாயில் கடைசியாகச் சொன்னவார்த்தை என்னை கூட்டிக்கொண்டுபோய் சிகிச்சையளித்த ஆட்டொச் சாரதிகளுக்கு நான் இறந்தபின் ஒருநேரச் சாப்பாடு கொடுங்கோ என. எவ்வளவு நெகிழ்வால சமபவங்கள் தருணங்கள் எம்மைச் சுத்தி இருக்கின்றது என்பதை நினத்தால் சந்தோசமாகவே இருக்கு. நண்பர்களே எப்போதுமே கருப்புக்கலர் கண்ணாடிபோட்டெ சமூகத்தைப்பார்காதீர்கள். ஆயிரம் விடையங்கள் அங்கு எமைச்சுத்தி நாம் பார்த்தும் கேட்டும் பழகியும் இன்புற்ரிருக்கக் கொட்டிக்கிடக்கின்றது. காரணம் அது என் உயிரினும் இனிய தமிழ்மண். எந்தவிதத்திலும் என் மண்ணை என்னால் தாழ்வுத்தராசில் வைத்துப்பார்க்கமுடியாது.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.