Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செஞ்சோலை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னே சோகம், யாவுமே காமெடியாகத்தானே உங்களுக்கும் எனக்கும் இப்போது தெரிகின்றது. (விடுதலைப் புலிகளின் போராட்டத்தினைத்தான் கூறுகின்றேன்) பரிகாசம் செய்யுங்கள். என்று ஒருவன் உண்மையை உணர்ந்து கொள்கின்றானோ அன்றுதான் அவன் முழு மனிதனாக காட்சி அளிக்க முடியும்.

நிர்மலன் உங்கன்ட கருத்தை மதிக்கிறேன்.....அதுசரி நீங்கள் தொடர்ந்து யாழில் கருத்து எழுதாமல் ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வந்து இந்த பெயரில் கருத்து எழுதுவதின் நோக்கம் என்ன?....இப்படி செய்வதன் மூலம் நீங்கள் உண்மையிலயே புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்பது தெரிகின்றது..குற்றவாளிகளை கொலை செய்ய நீதவானுக்கும் உரிமையில்லை.....

Edited by putthan

  • Replies 70
  • Views 4.1k
  • Created
  • Last Reply

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

ஹலோ மிஸ்ர்ர் நிர்மலன் வள்ளிபுரத்தில் செஞ்சோலைக்கு குண்டு போட்டது மட்டும் தானா ஸ்ரீலங்கா அரசு செய்த அக்கிரமம் அதை மட்டும் நாம் தூக்கிப்பிடிக்க.  தமிழ் செல்வனோடு இருந்தவர்களை கேட்கவேண்டாம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுப்பாருங்கள் ஏன் உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள்  ஸ்ரீலங்கா அரசு அதற்கு பலகாலம் முன்பே தொடங்கி விட்ட இன அழிப்பு அக்கிரமங்கள் தெரியும். ஒரு வேளை வள்ளிபுர தாக்குலில் ஸ்ரீலங்கா அரசு குற்றம் செய்யவில்லை என்று தங்கள் வாததிறமையால் அதை காப்பாற்றினாலும் எத்தனை குற்றங்களை காப்பாற்ற வாதாடப்போகிறீர்கள் சட்டத்தரணி அவர்களே . சிறந்த பீஸ் கிடைக்குமானால் உங்களுக்கு பியோனாக பணியாற்ற சந்தர்ப்பம் தருவீர்களா?

நான் நினைக்கிறேன் நிர்மலன் என்ன சொல்ல வர்றார் என்றால்...சென்சோலையில் இறந்த குழந்தைகள் இலங்கை படையால் "மட்டும்" கொல்ல படவில்லை...

இந்த மஹிந்த வெந்த புண்ணில் ஏன் வேல் பாய்ச்சுக்கிறான் என்று தெரியவில்லை...

முதலுதவி மருத்துவ பயிற்சி முகாம் அங்கு நடந்து கொண்டு இருந்தது எண்டதை புலிகள் மிக தெளிவாக கூறி இருந்தார்கள்...

அதற்க்கு முன் இடம் குறிப்பிட பட்ட பத்திரிகை விளம்பரம் ஒண்றும் வெளியிட பட்டு இருந்ததாகவும் மக்கள் குறிப்பிட்டார்கள்...

இந்த குழந்தைகளுக்கு தற்பாதுகாப்பு பயிற்சியை புலிகள் வழங்கி இருந்தால் அவர்கள் இந்த குண்டு வீச்சில் இத்தனைபேர் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்... பயிற்சியின் ஆரம்பம் எப்போதுமே பதுங்கு குழிகள் அமைத்தல் உருமறைப்பு செய்தல் நிலை எடுத்தல் சம்பந்தமாக அமைந்து இருக்கும்...

இந்த உப்பு சப்பு இல்லாத விளக்கங்களுக்கு பதில் சொல்லத்தேவை இல்லை .
உண்மை எப்போதும் உறங்காது.

தயா: புலிகள் என்ன வகையான பயிற்சி கொடுத்தார்கள் என்பது அல்ல பிரச்னை....
அந்த பிள்ளைகளை (அவர்கள் ஆதரவற்ற சேஞ்ச்சோலை சிறார்களும் இல்லை...) அங்கு வைத்திருந்தது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ செஞ்சோலைப் பிள்ளைகள் இல்லையெனில், குண்டு வீசியது "ஓரளவு சரியோ?" என்/உன் உறவுகள்தான் அங்கே மாண்டார்கள், அதை எப்படி நீர் நியாயப்படுத்த முடியும்? ஒரு உண்மைத் தமிழனால் இதை நியாயப்படுத்த முடியாது. என் சொந்தங்களை குஞ்சு குருமன் என்றும் பாராது கொன்று குவித்தை எப்படி நியாயப் படுத்த முடியும்? போர்க்காலத்தில் எல்லா மக்களுமே தற்காப்புப் பயிற்சியோ/வேறு பயிற்சியோ பெற்றிருக்கவேண்டியது அவசியமானதுதான்.

இந்தமாதிரியான செய்திகள் போடும்போது இந்த யாழிலேயே பலரைப் பார்த்திருக்கிறேன், வந்து புலி வாந்தியெடுப்பதே நோயாகிவிட்டது. உங்களிடம் குறிப்பாக ஒன்றை மட்டும் கேட்கிறேன், பதில் தாருங்கள். '2009 மே 19 இன் பின்னர் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டன. அதன் பின்னர் இன்றுவரை அவர்கள் வெளிப்படையாக இயங்கவுமில்லை, தாயகத்தில் எந்த நிகழ்வுகளிலும் தலையிடவுமில்லை. ஆனால்... இன்று எம் தமிழ் இனமும் தாயகமும் அங்கே முன் எப்போதுமில்லாத அளவில் மிகவும் துன்பத்துடனும் நெருக்கடியிலும் வாழ்கிறர்கள். நிலங்கள் பறிபோகின்றன, கலாச்சாரம் திட்டமிடப்பட்டே அழிக்கப்படுகிறது, போதைப்பொருட்களால் இளைய சமூகம் சீரழிக்கப் படுகிறது, பாலியல் வன்கொடுமைகள்/ சிறுமிகள் சீரழிப்பு இன்னும் பல. இவை உங்களுக்கெல்லாம் தெரியுமா? இல்லையெனில் அங்கே தொலைபேசியெடுத்து கேளுங்கள், கேட்டுவிட்டு இங்கே வந்து எழுதுங்கள் என்று உங்களைப் போலவே சொல்லமாட்டேன். ஆனால் இவற்றையெல்லாம் பற்றி எங்காவது கருதிடுகிறீகளா? எதிர்த்துக் கேட்கமாட்டீகளா? இதுதானே இப்பொது முதற்செயற்பாடாக இருக்கவேண்டும்? உலத்தமிழினமே சிங்கள அரசை இனப்படுகொலை அரசென சர்வதேச மட்டத்தில் நிறுவ முற்பட்டிருக்கும்போது, வெண்ணை திரண்டுவரும்போது, எதற்காகத் தாழியை உடைகிறீகள்? எமது இப்போதைய தேவை, எமக்குள் குத்துப்படுவதல்லவே.

சிற்றின்பத்தை அடைவற்கு பல வழிகள் உண்டு, புலி வாங்தியெடுத்துத்தான் அடையமுடியுமென்றில்லை. கண்விழித்து மற்ற இனங்களையும் பாருங்கள், இறுதிப் போர் நடந்தபோது அவர்களின் ஒற்றுமையை. எவனாவது இது சொந்த மக்கள் மீதான படுகொலை என்று கத்தினானா? என்றாவது மகிந்த மேற்கொண்ட படுகொலையை ரணில் தப்பென்று சொன்னதுண்டா? இன்றுவரை சர்வதேச விசாரணை என்றொன்று வரக்கூடாதென்பதிலேயே கவனம் செலுத்துகிறது ஒட்டுமொத்த சிங்கள இனமும் அதன் கட்சிகளும். அந்த இன ஒற்றுமையை உங்களிடம் காணவில்லையே...?  

கொலைகளை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அங்கே கொல்லப்பட்டவர்கள் அப்பாவி சிறார்கள் என்று உலகிடம் அனுதாபம் பெற இவ்வாறான நாடகங்களை நடத்துவதுதான் மக்கள் விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நியப்பட்டனர் என்கின்ற உண்மையினை மறந்துவிடாதீர்கள். இவை இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருந்தால் இவ்வாறு எல்லாம் வாதிடுவீர்களா என்ன?

கட்டாய இராணுவப் பயிற்சியினை புலம்பெயர் நாடுகளில் இருந்து நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். எந்தவொரு தாய்-தந்தையரும் இறுதி யுத்த காலத்தில் தமது பிள்ளைகள் போருக்கு பலவந்தமாக அழைத்துச் செல்வதனை விரும்பவில்லை. காரணம், போராட்டம் ஒரு தோல்வி நிலையினை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றது என்பது அவர்களுக்கே தெரிந்த விடயம்.

இதில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்தவர்களே தமது பிள்ளைகளை மலசல கழிவுக் கிடங்கில் ஒளித்து வைத்து காப்பாற்றிய சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன. இன்று அவர்கள் தமது குடும்பத்தினரோடு யாழில் சந்தோசமாக இருக்கின்றனர். தமக்கு இனி எந்த இழவும் வேண்டாம் என்று. அவர்களை விடவா நீங்கள் எல்லோரும் உணர்வு மிக்கவர்கள்?

நிலங்கள் பறிபோகின்றன ஏன்?

அந்த இடத்தில் மக்கள் மீள்குடியேற போதிய அந்த மக்களிடம் பணம் இல்லை. அந்த மக்கள் பண உதவியினை புலம்பெயர் தமிழர்களோ அல்லது தொண்டு நிறுவனங்களோ செய்தால் மீள் குடியேறலாம் என்கின்றனர். (இங்கே நாம் எப்படி சிங்களவனை நம்பி பணம் அனுப்பலாம் என்கின்ற விதண்டாவாதத்தினை முன்வைக்காதீர்கள்)

அங்கே இளைய சமுதாயம் சீரழிவதற்கு முக்கியமான காரணம், புலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதனால் அங்கே இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டும் பெண்களை கேலி செய்வதும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. முதலில் பணத்தினை அனுப்புவதனை நிறுத்துங்கள்.

சிறிலங்காப் படையினரால்தான் பெண்கள் சீரழிக்கப்படுகின்றது என்பது சிறிதளவில் இடம்பெற்றாலும் பெருமளவிலான சம்பவங்கள் அங்கே உள்ள முதியவர்களும், இளையவர்களும் பெண்களை சீரழிப்பது என்பது உண்மை. இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு சிறிலங்காப் படையினர் மீது குற்றம் சுமத்திய சம்பவங்களும் உண்டு. இதற்கு தமிழ் ஊடகங்களும் துணை போவதுதான் வேதனையான விடயம்.

குற்றம் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எம்மவர்கள் செய்தால் அதனையும் சிறிலங்காப் படைத்தரப்பு மீது போட்டுவிட்டு எம்மை நாமே புனிதர்களாக்க முடியாது.

இவ்வாறு எல்லாம் பெண்கள் சீரழியக்கூடாது என்கின்ற நோக்கில் பல தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் விடுதலைப் புலிகளால் முன்னர் நடத்தப்பட்ட அன்பு இல்லம், பாரதி இல்லம் மற்றும் செஞ்சோலை இல்லங்களை அதே பெயரில் இயக்கி நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை யார் நடத்துவது முக்கியமல்ல. அங்கே இருப்பவர்களில் பெருமளவிலானோர் எந்த மண்ணின் விடுதலைக்காக போராடிய போராளிகளோ அவர்களின் பிள்ளைகள் என்பதனை மறந்துவிடக்கூடாது.

புலி வாந்தி எடுத்து எல்லாம் நான் மருந்து எடுக்க வேண்டும் என்றில்லை. சாப்பிட்டுவிட்டே வாந்தி எடுக்கலாம்.

விடுதலைப் புலிகள் என்னவோ தவறே செய்யாத மனிதர்கள் என்பது போல இங்கே வாதிடுகின்றீர்கள். முதலில் அதனை விடுத்து பிழைகளை பிழை என்று ஒத்துக்கொண்டு தவறுகளை திருத்தி அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சியுங்கள்.

அதனை விடுத்து பழம் பெருமை பேசிக்கொண்டு நேரத்தினை வீணடிக்காதீர்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்போலவே சிங்கள அரசு செய்தவற்றின் உண்மைகளையும் அறிய ஆவல். அந்தப்பக்கம் யாராவது இருந்தால் சொல்லுங்கள், கேட்டுப் பார்ப்பதற்கு.

உங்களிடம் பலவற்றுக்கு ஆதாரங்கள் இருக்குப்போல. எனக்கும் சில வேண்டும், எடுத்துத் தரமுடியுமா?

1. ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டுவீச்சு.

2. பாதுகாப்பு வலயத்தை அறிவித்தவர்களே அதற்கு குண்டு வீசியமை.

3. வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்.

4. பத்தாயிரம் மக்கள் மட்டும்தானாம் புலிகளுடன் இறுதிக் காலங்களில் இருந்தார்கள்?

இரசாயனக் குண்டு வீச்சா?

சிரியா இரசாயனக் குண்டு வைத்திருக்கின்றது என்பதற்காகத்தான் அமெரிக்கா சிரியா மீது போர் தொடுக்க தயாராகின்றது.

அப்படி என்றால் ஏன் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுக்கவில்லை?

பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆயுதங்களுடன் வரவில்லை என்று அங்கே பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மறுதலிக்க முடியுமா?

10 ஆயிரம் மக்கள் புலிகளோடு இருக்கவில்லை. 3 லட்சம் மக்களை தம்மோடு பலவந்தமாக புலிகள் அழைத்துச் சென்றனர். அதனைத்தான் நாங்கள் ஆமா இல்ல, மக்கள் புலிகளோடுதான் என்று பீற்றிக்கொண்டு இருந்தோம்.

சரி, புலிகளோடுதான் மக்கள் என்றால் அந்த 3 லட்சம் மக்களும் அல்லவா மடிந்து இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் ஏன் குருதிவாய்க்கால் என்று பெயர் பெறாமல் போனது?

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் என்னவோ தவறே செய்யாத மனிதர்கள் என்பது போல இங்கே வாதிடுகின்றீர்கள். முதலில் அதனை விடுத்து பிழைகளை பிழை என்று ஒத்துக்கொண்டு தவறுகளை திருத்தி அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சியுங்கள்.

அதனை விடுத்து பழம் பெருமை பேசிக்கொண்டு நேரத்தினை வீணடிக்காதீர்கள்.

விடுதலை புலிகள் தவறு செய்தபடியால்தான் உலகம் அவர்களை தண்டித்தது......அவர்கள் இல்லை...இப்போ எங்களது பணி தொடர்ந்து மக்களுக்கு உதவுவது....குற்றவாளிகளை கொலை செய்ய நீதவானுக்கும் உரிமையில்லை.....

Edited by putthan

தயா: புலிகள் என்ன வகையான பயிற்சி கொடுத்தார்கள் என்பது அல்ல பிரச்னை....

அந்த பிள்ளைகளை (அவர்கள் ஆதரவற்ற சேஞ்ச்சோலை சிறார்களும் இல்லை...) அங்கு வைத்திருந்தது யார்?

விசுவமடு, புதுக்குடியிருப்பு , கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் எல்லாம் புலிகள் சந்தை கூட்டுறவை... அங்கே குண்டு வீசப்பட்டாலும் புலிகள் தான் பொறுப்பா...??

அந்தக்காலத்தில் செயற்பட்ட SLMM - Retired major general of the Swedish Army, Ulf Henricsson the Head of the Nordic truce monitors SLMM said that his staff had not finished counting the dead and that they couldn't find any sign of military installations or weapons...

http://www.tamilguardian.com/article.asp?articleid=8525

அந்த இடத்தில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் UNICEF போண்ற அமைப்பின் கண்காணிப்பில் பரிசோதனை நடவடிக்கைகள் அமையவே இயங்கியது... ஆகவே மாணவர்களுக்கான பயிற்ச்சி நெறி வேறு இடங்களில் நடப்பது பொருத்தம் இல்லாது இருந்து இருக்கும்...

இரசாயனக் குண்டு வீச்சா?

சிரியா இரசாயனக் குண்டு வைத்திருக்கின்றது என்பதற்காகத்தான் அமெரிக்கா சிரியா மீது போர் தொடுக்க தயாராகின்றது.

அப்படி என்றால் ஏன் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுக்கவில்லை?

பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆயுதங்களுடன் வரவில்லை என்று அங்கே பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மறுதலிக்க முடியுமா?

10 ஆயிரம் மக்கள் புலிகளோடு இருக்கவில்லை. 3 லட்சம் மக்களை தம்மோடு பலவந்தமாக புலிகள் அழைத்துச் சென்றனர். அதனைத்தான் நாங்கள் ஆமா இல்ல, மக்கள் புலிகளோடுதான் என்று பீற்றிக்கொண்டு இருந்தோம்.

சரி, புலிகளோடுதான் மக்கள் என்றால் அந்த 3 லட்சம் மக்களும் அல்லவா மடிந்து இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் ஏன் குருதிவாய்க்கால் என்று பெயர் பெறாமல் போனது?

காயம் அடைந்த மக்களை புலிகள்தான் வைத்திய சாலைக்கு கொண்டு செண்றார்கள் எண்டால் அங்கே ஆயுதம் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது... ! இலங்கை படைகளின் ஆயுத காவலோடுதான் வடக்கு கிழக்கில் இருக்கும் பல வைத்தியசாலைகள் இண்றும் இயங்குகிண்றன... அதுக்காக புலிகள் வைத்திய சாலை மீது தாக்குதல் நடத்தவில்லை...

இரண்டாம் உலகப்போர் காலங்களின் முதல் செஞ்சிலுவை கொடியோடும் குறியோடும் போகும் எதிரி இராணுவ வாகனங்களை கூட தாக்க கூடாது என்பது வரை முறை..

சர்வதேச வரை முறைகள் நீங்கள் வைத்திய சாலைக்கு ஆயுதங்களோடு போவதை வரை முறை படுத்தவில்லை... ஆனால் ஆயுதங்களோடு நிற்பவர்களை வைத்திய சாலையில் வைத்து மக்களோடும் சேர்த்து தாக்கப்படுவதை வரை முறைப்படுத்துகிறது..

மாற்று கருத்து சொல்வது எண்டால் அறிவை உபயோகிக்க கூடாது எண்டு இல்லை... நீங்கள் அவைகளை புதுசாக வைத்து இருக்காமல் உபயோகியுங்கள்...

Edited by தயா

கொலைகளை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அங்கே கொல்லப்பட்டவர்கள் அப்பாவி சிறார்கள் என்று உலகிடம் அனுதாபம் பெற இவ்வாறான நாடகங்களை நடத்துவதுதான் மக்கள் விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நியப்பட்டனர் என்கின்ற உண்மையினை மறந்துவிடாதீர்கள். இவை இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருந்தால் இவ்வாறு எல்லாம் வாதிடுவீர்களா என்ன?

கட்டாய இராணுவப் பயிற்சியினை புலம்பெயர் நாடுகளில் இருந்து நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். எந்தவொரு தாய்-தந்தையரும் இறுதி யுத்த காலத்தில் தமது பிள்ளைகள் போருக்கு பலவந்தமாக அழைத்துச் செல்வதனை விரும்பவில்லை. காரணம், போராட்டம் ஒரு தோல்வி நிலையினை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றது என்பது அவர்களுக்கே தெரிந்த விடயம்.

இதில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்தவர்களே தமது பிள்ளைகளை மலசல கழிவுக் கிடங்கில் ஒளித்து வைத்து காப்பாற்றிய சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன. இன்று அவர்கள் தமது குடும்பத்தினரோடு யாழில் சந்தோசமாக இருக்கின்றனர். தமக்கு இனி எந்த இழவும் வேண்டாம் என்று. அவர்களை விடவா நீங்கள் எல்லோரும் உணர்வு மிக்கவர்கள்?

நிலங்கள் பறிபோகின்றன ஏன்?

அந்த இடத்தில் மக்கள் மீள்குடியேற போதிய அந்த மக்களிடம் பணம் இல்லை. அந்த மக்கள் பண உதவியினை புலம்பெயர் தமிழர்களோ அல்லது தொண்டு நிறுவனங்களோ செய்தால் மீள் குடியேறலாம் என்கின்றனர். (இங்கே நாம் எப்படி சிங்களவனை நம்பி பணம் அனுப்பலாம் என்கின்ற விதண்டாவாதத்தினை முன்வைக்காதீர்கள்)

அங்கே இளைய சமுதாயம் சீரழிவதற்கு முக்கியமான காரணம், புலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதனால் அங்கே இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டும் பெண்களை கேலி செய்வதும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. முதலில் பணத்தினை அனுப்புவதனை நிறுத்துங்கள்.

சிறிலங்காப் படையினரால்தான் பெண்கள் சீரழிக்கப்படுகின்றது என்பது சிறிதளவில் இடம்பெற்றாலும் பெருமளவிலான சம்பவங்கள் அங்கே உள்ள முதியவர்களும், இளையவர்களும் பெண்களை சீரழிப்பது என்பது உண்மை. இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு சிறிலங்காப் படையினர் மீது குற்றம் சுமத்திய சம்பவங்களும் உண்டு. இதற்கு தமிழ் ஊடகங்களும் துணை போவதுதான் வேதனையான விடயம்.

குற்றம் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எம்மவர்கள் செய்தால் அதனையும் சிறிலங்காப் படைத்தரப்பு மீது போட்டுவிட்டு எம்மை நாமே புனிதர்களாக்க முடியாது.

இவ்வாறு எல்லாம் பெண்கள் சீரழியக்கூடாது என்கின்ற நோக்கில் பல தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் விடுதலைப் புலிகளால் முன்னர் நடத்தப்பட்ட அன்பு இல்லம், பாரதி இல்லம் மற்றும் செஞ்சோலை இல்லங்களை அதே பெயரில் இயக்கி நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை யார் நடத்துவது முக்கியமல்ல. அங்கே இருப்பவர்களில் பெருமளவிலானோர் எந்த மண்ணின் விடுதலைக்காக போராடிய போராளிகளோ அவர்களின் பிள்ளைகள் என்பதனை மறந்துவிடக்கூடாது.

புலி வாந்தி எடுத்து எல்லாம் நான் மருந்து எடுக்க வேண்டும் என்றில்லை. சாப்பிட்டுவிட்டே வாந்தி எடுக்கலாம்.

விடுதலைப் புலிகள் என்னவோ தவறே செய்யாத மனிதர்கள் என்பது போல இங்கே வாதிடுகின்றீர்கள். முதலில் அதனை விடுத்து பிழைகளை பிழை என்று ஒத்துக்கொண்டு தவறுகளை திருத்தி அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சியுங்கள்.

அதனை விடுத்து பழம் பெருமை பேசிக்கொண்டு நேரத்தினை வீணடிக்காதீர்கள்.

"கொலைகளை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை....."

அப்படியோ? சிறிலங்கா அரசினது கொலைகள் ஏராளம் உண்டு, அவற்றையும் இங்கு பட்டியலிட்டால், உங்கள் கருத்துக்களையும் கணக்கிலெடுக்க முடியும். இன்றேல், இது வெறும் புலி வாந்திதான்.

"இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருந்தால் இவ்வாறு எல்லாம் வாதிடுவீர்களா என்ன?......" "புலம்பெயர் நாடுகளில் இருந்து நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம்."

ஏதோ இங்கு வந்து கருதெழுதினாலே புலம்பெயர் தேசத்தில் இருந்துதான் எழுதமுடியும் என்ற கற்பனையை விட்டுவிட்டு கருத்தை எழுதவும். நானும் 35 ஆண்டுகளாக அதே தாயகத்திலேயே வாழ்கிறோம். உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டிவையுங்கள்.

"நிலங்கள் பறிபோகின்றன ஏன்?

அந்த இடத்தில் மக்கள் மீள்குடியேற போதிய அந்த மக்களிடம் பணம் இல்லை. அந்த மக்கள் பண உதவியினை புலம்பெயர் தமிழர்களோ அல்லது தொண்டு நிறுவனங்களோ செய்தால் மீள் குடியேறலாம் என்கின்றனர். (இங்கே நாம் எப்படி சிங்களவனை நம்பி பணம் அனுப்பலாம் என்கின்ற விதண்டாவாதத்தினை முன்வைக்காதீர்கள்)"

"அங்கே இளைய சமுதாயம் சீரழிவதற்கு முக்கியமான காரணம், புலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதனால் அங்கே இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டும் பெண்களை கேலி செய்வதும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. முதலில் பணத்தினை அனுப்புவதனை நிறுத்துங்கள்."

ஏய்யா எழுதும்போதுகூட சுயநினைவுடன் எழுதவேண்டாமா? மேற்பந்தியில் "புலம்பெயர் பணம் தேவையாம், அடுத்த பந்தியில் புலம்பெயர் பணம் சீரழிக்கிறதாம்". உங்கள் எழுத்துக்கள்தான் இங்கு விதண்டாவாதம். இங்கு வாசிபவரெல்லாமே உங்களைப்போலவே குறைகுடங்களோ?

"சிறிலங்காப் படையினரால்தான் பெண்கள் சீரழிக்கப்படுகின்றது என்பது சிறிதளவில் இடம்பெற்றாலும் பெருமளவிலான சம்பவங்கள் அங்கே உள்ள முதியவர்களும், இளையவர்களும் பெண்களை சீரழிப்பது என்பது உண்மை. இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு சிறிலங்காப் படையினர் மீது குற்றம் சுமத்திய சம்பவங்களும் உண்டு. இதற்கு தமிழ் ஊடகங்களும் துணை போவதுதான் வேதனையான விடயம்."

ஒழுங்கா வந்து விசாரித்துப் பார் மகனே தமிழ் மண்ணில் 'போதைப் பொருட்கள் யாரால், யார் துணையுடன்' வினியோகிக்கப்படுகிறதென்று.

சுய சிங்தனையுடன் எழுதுவது மேலும் நன்றாக அமையும்.

இரசாயனக் குண்டு வீச்சா?

சிரியா இரசாயனக் குண்டு வைத்திருக்கின்றது என்பதற்காகத்தான் அமெரிக்கா சிரியா மீது போர் தொடுக்க தயாராகின்றது.

அப்படி என்றால் ஏன் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுக்கவில்லை?

பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆயுதங்களுடன் வரவில்லை என்று அங்கே பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மறுதலிக்க முடியுமா?

10 ஆயிரம் மக்கள் புலிகளோடு இருக்கவில்லை. 3 லட்சம் மக்களை தம்மோடு பலவந்தமாக புலிகள் அழைத்துச் சென்றனர். அதனைத்தான் நாங்கள் ஆமா இல்ல, மக்கள் புலிகளோடுதான் என்று பீற்றிக்கொண்டு இருந்தோம்.

சரி, புலிகளோடுதான் மக்கள் என்றால் அந்த 3 லட்சம் மக்களும் அல்லவா மடிந்து இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் ஏன் குருதிவாய்க்கால் என்று பெயர் பெறாமல் போனது?

ஒரு விடையத்தை பேசுவதற்கு அடிப்படை அறிவு இருக்கவேண்டும்.எழுதவேண்டுமென்பதற்காக எதையும் எழுவதும், போதையில் புலம்புவது போன்றதுதான். இதில் கொலைகாரப் படைகளுக்கு வக்காலத்து வேறு.

மூன்று லட்சம் மக்களும் மடிந்திருந்தாற்தான் உங்களைப்போன்ற 'கருத்தெழுதும் விற்பன்னர்கள்' நம்புவீர்களோ?

"முள்ளிவாய்க்கால் ஏன் குருதிவாய்க்கால் என்று பெயர் பெறாமல் போனது?" 

சுய இன்பம் காணவேண்டுமென்றால், நீங்களே அந்தப்பெயரைச் சூட்டி மகிழுங்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக புலிகள் இல்லை. ஆனால் புலிக்காய்ச்சல் நோயால் பீடிக்கபட்ட நிர்மலன் போன்றோருக்கு இன்னும் நோய் தீரவில்லை. புலிஎதிர்ப்பு சிந்தனை வந்தவுடன் மாற்றான் எந்த அக்கிரமம் செய்தாலும் அவனுக்கு ஆதரவு நிலை எடுக்கிறீர்கள்.நீங்கள் புலிகளில் சாட்டும் அதே குற்றங்களை பலமடங்கு அதிகமாக மாற்றான் செய்தாலும் அதை ஆதரிக்கின்றீர்களே.  ஒருவேளை அது தான் புலிக்காய்ச்சல் நோயின் தாக்கமோ.

தாக்குதலிற்கு முதலில் அரசு எந்த இடத்திலும் செஞ்சோலையில்  இராணுவ பயிற்சி நடப்பத்தாக நிருபணங்கள் வெளிவிட வில்லை. அதை தாக்க தான் தாயார் படுத்துவதாகவும் கூறவில்லை. (சிரியா இராசாயன ஆயுதங்களை பற்றி சர்வதேசம் எத்தனையோ ஆண்டுகளாக விவாதித்தும் இன்னமும் அந்த ஆயுத கிடங்குகளை தாக்குவதில் சிக்கல்கள் இருக்கிறது.) அரசு தாக்குதலின் பின்னரும் எதுவும் வெளிவிடவில்லை. ஆனால் நிர்மலன் மட்டும் சிறார்களை மேற்கோள்காட்டி செஞ்சோலையை இராணுவ பயிற்சி நிலையமாக்க பார்க்கிறார். ஆனால்  நிர்மலனிடம் கேட்க கூடியது, இது இராணுவ பயிற்சி நிலையமாக இருந்த தாகவும், அதனால் அரசு இதை தாக்கியதாகவும் போட்டோ அல்லது மற்றும் ஏதாவது ஆவணங்கள் இருந்திருந்தால் அவற்றை அவர் வெளிவிட வேண்டும். இவை இலங்கை அரசுக்கு எதிரான போர் குற்ற ஆவண்ங்கள் என்றதை அவருக்கு கிரகிக்க சிக்கலாக இருக்கலாம். அதனல் அவர் எந்த ஆவணம் இருந்தாலும் அதை வெளிவிட்டால் அரசு செய்தவற்றை நிரூபிக்க அவை பாவிக்கப்படும்.(தீவிரவாதிகள் தாம் விரும்பி பயிற்சி எடுக்காத நிலையம் ஒன்றை அரசு தாக்க முடியாது. 18 வயதிற்கு குறைந்தவர்கள் தீர்மானம் எடுக்க முடியாது. அப்படி பயிற்சி நிலையம் ஒன்றை அரசு வேண்டுமென்றே தெரிந்து கொண்டு குண்டுவிசித் தக்குவது போர்க்குற்றம்) மற்றும் படி செஞ்சோலையை அரசு தாக்கியது ஏன் எனில் இலங்கை அரசு மட்டும்தான் சர்வதேச புள்ளிவிபரக் கணிப்பீடுகளில், எல்லாவற்றிலும் 150 தொடக்கம் 190 வரைக்குமான கடைசி நிலைகளில் இருக்கும் உலகின் அதி பயங்கரவாத அரசு. மனித உரிமைகள் சபை கமிசனர்  நேரில் சென்று விசாரணை நடத்திய மிக மிக சொற்ப நாடுகளில் ஒன்று.  உலகிலேயே வேறு எங்கும் இல்லாதவாறு, போர் குற்றம் சாட்டப்பட்ட குடும்பம் ஒன்றால் ஆளப்படும் நாடு. 

நிர்மலன் ஒத்துக்கொள்ளவிட்டாலும், தலமைத்துவ பயிற்சி என்று கோத்தா இலங்கையில் எல்லா மாணவர்களுக்கும்தான் போர்பயிற்சி அளிக்கிறார். இந்த பயிற்சிக்கு போய்வந்த சிங்கள மாணவர்களும்தான் அல்லல்ப்பட்டத்தாக செய்திகள். எனவே இதை புலிகள் செய்திருந்தா தப்பு என்று நிர்மலன் ஏன் வாதாடுகிறாரோ தெரியாது. 

காசு பற்றி நிர்மலன் பல கட்டுரைகள் எழுதிவிட்டார். அவருக்கு தெரியும் அகதிகளாக வந்து உழைத்தவர்களுக்கு பென்ஸ் அல்ல ரோல்ஸ் ரோயஸ்சும் வாங்கவும் உரிமை இருக்கு. ஆனால் மக்களால் தெரியப்பட்ட மகிந்தா, தேனீர் குடிக்க கூட பணம் எடுக்கும் போதும் மக்களின் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது. மக்களின் பணங்களை கொள்ளை அடித்து உலகின் மிகப்பெரிய பில்லியனர்களில் ஒருவர் ஆகிவிட்ட அரச குடும்பம், சீனாவிடம் 50% கமிசன் வாங்கி கொண்டு, வடக்கில் அதிகாரத்தில் இருந்து முன்னேற்றங்களை செய்திருக்க வேண்டிய கூட்டமைப்பு அங்கு பதவி ஏற்க விடாமல் தடுத்துவருகிறார் என்பதை பற்றி முதலில் எழுதட்டும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் இராணுவப் பயிற்சி நடந்தது என்கிற கருத்தை காவிச் செல்வது இனவாத சிங்களவர்கள். நிர்மலனும் அதையே செய்கிறார். நலல தமிழ் இலக்கணத்துடனும் எழுதுகிறார். :rolleyes:

தனது இரண்டாவது மொழியை கனகச்சிதமாகக் கற்றுக்கொண்ட "நிமல"வுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் என்றும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் கிடையாது

அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்றும் நாம் சொன்னது கிடையாது

விடுதலைப்போராட்டம் தவறுகள் இல்லாமல் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள கூடியது

ஆனால் புலிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்

அது ஒட்டுக்குழு உறுபினர்களுக்கும்

அரசின் அடிவருடிகளுக்கும்

போராட்டத்தையும் மக்களையும் காட்டி கொடுத்தவர்களுக்கு இல்லை

அது வளர்த்து விட்ட மக்களுக்கு மட்டுமே அந்த தகுதி அருகதை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

உந்த செய்திய யாராவது நம்புவீனம் எண்டு ஒரு நப்பாசை.... தங்களுக்கு அனுபவம் போதாது... ........நிச்சயமா குத்தியின்  வழியிலதான் வந்திருப்பீங்க ............நிறையபேர் வந்திருக்கினம் இங்க அவையாட்ட கோஞ்சம் கேட்டு படியுங்க எதிர்காலத்திற்கு உதவும் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் என்றும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் கிடையாது

அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்றும் நாம் சொன்னது கிடையாது

விடுதலைப்போராட்டம் தவறுகள் இல்லாமல் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள கூடியது

ஆனால் புலிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்

அது ஒட்டுக்குழு உறுபினர்களுக்கும்

அரசின் அடிவருடிகளுக்கும்

போராட்டத்தையும் மக்களையும் காட்டி கொடுத்தவர்களுக்கு இல்லை

அது வளர்த்து விட்ட மக்களுக்கு மட்டுமே அந்த தகுதி அருகதை இருக்கு

ஒரு நிதர்சனமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு ஆண்டுகளாக புலிகள் இல்லை. ஆனால் புலிக்காய்ச்சல் நோயால் பீடிக்கபட்ட நிர்மலன் போன்றோருக்கு இன்னும் நோய் தீரவில்லை. புலிஎதிர்ப்பு சிந்தனை வந்தவுடன் மாற்றான் எந்த அக்கிரமம் செய்தாலும் அவனுக்கு ஆதரவு நிலை எடுக்கிறீர்கள்.நீங்கள் புலிகளில் சாட்டும் அதே குற்றங்களை பலமடங்கு அதிகமாக மாற்றான் செய்தாலும் அதை ஆதரிக்கின்றீர்களே.  ஒருவேளை அது தான் புலிக்காய்ச்சல் நோயின் தாக்கமோ.

புலிக்காய்ச்சல் எங்களுக்கு இல்லை மகனே. புலிகள் விதைத்துவிட்டுச் சென்ற மாயைக்குள் இருந்து நீங்கள்தான் வெளியே வரவில்லை. அவர்கள் அந்த மாயைக்குள் இருந்தே அழிந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று கனவு உலகில் சஞ்சாரம் செய்யுங்கள்.

"விடுதலைப் புலிகளுக்கு பின்னைய காலகட்டம் என்று ஒன்று இல்லை" என்று அன்றே அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் அவர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அது உண்மைதான். இதில் இருந்து புலம்பெயர் தமிழர்கள்தான் வெளியே வரவில்லை.

விடுதலைப்புலிகள் என்றும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் கிடையாது

அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்றும் நாம் சொன்னது கிடையாது

விடுதலைப்போராட்டம் தவறுகள் இல்லாமல் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள கூடியது

ஆனால் புலிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்

அது ஒட்டுக்குழு உறுபினர்களுக்கும்

அரசின் அடிவருடிகளுக்கும்

போராட்டத்தையும் மக்களையும் காட்டி கொடுத்தவர்களுக்கு இல்லை

அது வளர்த்து விட்ட மக்களுக்கு மட்டுமே அந்த தகுதி அருகதை இருக்கு

அந்த மக்களில் ஒருவன்தான் ஐயா நானும். அதனை உங்களுக்குப் புரிய வைக்க நான் என்ன அக்னிக் குண்டத்திலா விழ வேண்டும்?

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

"கொலைகளை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை....."

அப்படியோ? சிறிலங்கா அரசினது கொலைகள் ஏராளம் உண்டு, அவற்றையும் இங்கு பட்டியலிட்டால், உங்கள் கருத்துக்களையும் கணக்கிலெடுக்க முடியும். இன்றேல், இது வெறும் புலி வாந்திதான்.

"இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருந்தால் இவ்வாறு எல்லாம் வாதிடுவீர்களா என்ன?......" "புலம்பெயர் நாடுகளில் இருந்து நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம்."

ஏதோ இங்கு வந்து கருதெழுதினாலே புலம்பெயர் தேசத்தில் இருந்துதான் எழுதமுடியும் என்ற கற்பனையை விட்டுவிட்டு கருத்தை எழுதவும். நானும் 35 ஆண்டுகளாக அதே தாயகத்திலேயே வாழ்கிறோம். உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டிவையுங்கள்.

"நிலங்கள் பறிபோகின்றன ஏன்?

அந்த இடத்தில் மக்கள் மீள்குடியேற போதிய அந்த மக்களிடம் பணம் இல்லை. அந்த மக்கள் பண உதவியினை புலம்பெயர் தமிழர்களோ அல்லது தொண்டு நிறுவனங்களோ செய்தால் மீள் குடியேறலாம் என்கின்றனர். (இங்கே நாம் எப்படி சிங்களவனை நம்பி பணம் அனுப்பலாம் என்கின்ற விதண்டாவாதத்தினை முன்வைக்காதீர்கள்)"

"அங்கே இளைய சமுதாயம் சீரழிவதற்கு முக்கியமான காரணம், புலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதனால் அங்கே இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டும் பெண்களை கேலி செய்வதும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. முதலில் பணத்தினை அனுப்புவதனை நிறுத்துங்கள்."

ஏய்யா எழுதும்போதுகூட சுயநினைவுடன் எழுதவேண்டாமா? மேற்பந்தியில் "புலம்பெயர் பணம் தேவையாம், அடுத்த பந்தியில் புலம்பெயர் பணம் சீரழிக்கிறதாம்". உங்கள் எழுத்துக்கள்தான் இங்கு விதண்டாவாதம். இங்கு வாசிபவரெல்லாமே உங்களைப்போலவே குறைகுடங்களோ?

"சிறிலங்காப் படையினரால்தான் பெண்கள் சீரழிக்கப்படுகின்றது என்பது சிறிதளவில் இடம்பெற்றாலும் பெருமளவிலான சம்பவங்கள் அங்கே உள்ள முதியவர்களும், இளையவர்களும் பெண்களை சீரழிப்பது என்பது உண்மை. இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு சிறிலங்காப் படையினர் மீது குற்றம் சுமத்திய சம்பவங்களும் உண்டு. இதற்கு தமிழ் ஊடகங்களும் துணை போவதுதான் வேதனையான விடயம்."

ஒழுங்கா வந்து விசாரித்துப் பார் மகனே தமிழ் மண்ணில் 'போதைப் பொருட்கள் யாரால், யார் துணையுடன்' வினியோகிக்கப்படுகிறதென்று.

சுய சிங்தனையுடன் எழுதுவது மேலும் நன்றாக அமையும்.

அப்பாவிகளை யார் கொன்றாலும் தவறு என்றுதானே வாதிடுகின்றேன். நீங்களோ புலிகள் தவறு எதுவுமே செய்யவில்லை என்று அல்லவா இங்கே என்னுடன் எல்லோரும் வாதாடுகின்றீர்கள்.

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எதிர்த்து வியட்நாமிய மக்கள் போராடினர் என்றால் அந்தப் போராளிகளுடன்  வியட்நாமிய மக்கள் இருந்தனர். ஏன் விடுதலைப் புலிகளோடு மக்கள் இல்லை என்று நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆராயலாமே.

வியட்நாமிய போராளிகள் மக்களோடு இருந்து சாதாரண வீடுகளில் வாழ்ந்தும் சாதாரண வாகனங்களிலும் சென்று வந்தார்கள். விடுதலைப் புலிகள் போன்று சொகுசு வீடுகளில் வாழ்ந்தும் சொகுசு வாகனங்களிலும் திரியவில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் வியட்நாம் போராட்டம் எப்படி வெல்லப்பட்டது என்று படியுங்கள்.

தாயகத்தில் இருந்து எழுதுவது போன்றுதான் நீங்கள் எழுதுகின்ற விதத்தில் பார்க்கத் தெரிகின்றது. ஏன்யா ஏமாற்றுவதற்கு நானா கி டைத்தேன். நான் புலம்பெயர் நாட்டில் இருந்துதான் எழுதுகின்றேன். இறுதிவரை எனது உறவுகள் விடுதலைப் புலிகளுக்காகவே உழைத்தார்கள். கடைசியில் சுதந்திரபுரத்தில் எமது உறவினர்களுக்கும் மக்களுக்கும் புலிகள் நடத்திக்காட்டிய வீரத்தினை வார்த்தைகளில் வடிக்க முடியாது. (புலிகளின் தலைமைக்கு தெரியாமல் அவை எல்லாம் நடந்துவிட்டது என்று எல்லாம் இங்கே பிறகு வாதிடக்கூடாது. இது தொடர்பாக புலிகளின் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டபோது எமக்கு எதிராகவே செய்கிறாங்கள். நாங்களே எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பியது தனிக்கதை)

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக 83 ஆம் ஆண்டில் இருந்து ஆதரவாக இருந்த என்னை இவ்வாறு எதிராக எழுதத் தூண்டியது எது? (இதற்கு இடைப்பட்ட காலத்தில் எல்லாம் புலிகள் செய்த சில செயல்களைக் கேள்விப்பட்ட போது எல்லாம் நான் நம்பாதவனாகத்தான் வாழ்ந்தேன். எனக்கு அது எல்லாம் நடந்தபோதுதான் வேதனை என்பதனைவிட அதிர்ச்சியாக இருந்தது.)

வன்னியில் உள்ள மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுங்கள் என்று கூறினேனே தவிர யாழில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பணம் கொடுத்து சோம்பேறிகளாக்கி அவர்களில் இளைய சமூகத்தினை தவறான வழிகளுக்குச் செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் பணமே உதவுகின்றன என்பதனை மீண்டும் அழுத்திக் கூற விரும்புகின்றேன்.

சிறிலங்காப் படையினர் போதைப் பொருள் விநியோகம் செய்தால் அதனை வாங்க இளைய சமூதாயத்திடம் பணம் இருக்கின்றதுதானே. அவன் என்ன இலவசமாகவா கொடுக்கின்றான்?

சுயநினைவுடன்தான் நான் எழுதுகின்றேன். நீங்கள் எல்லாம் மாயைக்குள் கட்டுண்டு எழுதுகின்றீர்கள். அதனைவிட்டு வெளியே வாருங்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளை யார் கொன்றாலும் தவறு என்றுதானே வாதிடுகின்றேன். நீங்களோ புலிகள் தவறு எதுவுமே செய்யவில்லை என்று அல்லவா இங்கே என்னுடன் எல்லோரும் வாதாடுகின்றீர்கள்.

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எதிர்த்து வியட்நாமிய மக்கள் போராடினர் என்றால் அந்தப் போராளிகளுடன்  வியட்நாமிய மக்கள் இருந்தனர். ஏன் விடுதலைப் புலிகளோடு மக்கள் இல்லை என்று நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆராயலாமே.

வியட்நாம் போராளிகள் மக்களோடு இருந்து சாதாரண வீடுகளில் வாழ்ந்தும் சாதாரண வாகனங்களிலும் சென்று வந்தார்கள். விடுதலைப் புலிகள் போன்று சொகுசு வீடுகளில் வாழ்ந்தும் சொகுசு வாகனங்களிலும் திரியவில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் வியட்நாம் போராட்டம் எப்படி வெல்லப்பட்டது என்று படியுங்கள்.

தாயகத்தில் இருந்து எழுதுவது போன்றுதான் நீங்கள் எழுதுகின்ற விதத்தில் பார்க்கத் தெரிகின்றது. ஏன்யா ஏமாற்றுவதற்கு நானா கி டைத்தேன். நான் புலம்பெயர் நாட்டில் இருந்துதான் எழுதுகின்றேன். இறுதிவரை எனது உறவுகள் விடுதலைப் புலிகளுக்காகவே உழைத்தார்கள். கடைசியில் சுதந்திரபுரத்தில் எம்மவர்களுக்கு புலிகள் நடத்திக்காட்டிய வீரத்தினை வார்த்தைகளில் வடிக்க முடியாது. (புலிகளின் தலைமைக்கு தெரியாமல் அவை எல்லாம் நடந்துவிட்டது என்று எல்லாம் இங்கே பிறகு வாதிடக்கூடாது. இது தொடர்பாக புலிகளின் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டபோது எமக்கு எதிராகவே செய்கிறாங்கள். நாங்களே எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பியது தனிக்கதை)

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக 83 ஆம் ஆண்டில் இருந்து ஆதரவாக இருந்த என்னை இவ்வாறு எதிராக எழுதத் தூண்டியது எது. (இதற்கு இடைப்பட்ட காலத்தில் எல்லாம் புலிகள் செய்த சில செயல்களைக் கேள்விப்பட்ட போது எல்லாம் நான் நம்பாதவனாகத்தான் வாழ்ந்தேன். எனக்கு அது எல்லாம் நடந்தபோதுதான் வேதனை என்பதனைவிட அதிர்ச்சியாக இருந்தது.)

வன்னியில் உள்ள மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுங்கள் என்று கூறினேனே தவிர யாழில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பணம் கொடுத்து சோம்பேறிகளாக்கி அவர்களில் இளைய சமூகம் தவறான வழிகளுக்குச் செல்வதற்கு பெருமளவு புலம்பெயர் தமிழர்களின் பணமே உதவுகின்றன.

சிறிலங்காப் படையினர் போதைப் பொருள் விநியோகம் செய்தால் அதனை வாங்க இளைய சமூதாயத்திடம் பணம் இருக்கின்றதுதானே. அவன் என்ன இலவசமாகவா கொடுக்கின்றான்?

சுயநினைவுடன்தான் நான் எழுதுகின்றேன். நீங்கள் எல்லாம் மாயைக்குள் கட்டுண்டு எழுதுகின்றீர்கள். அதனைவிட்டு வெளியே வாருங்கள்.

இப்படித்தான் ஒருவர் 2004ல் வன்னியூடாக யாழ்ப்பாணம் சென்ற போது அவரிடம் புலிகள் வரி அறவிட்டு விட்டார்கள்.முன்பு புலிகள் பற்றி புகழ்ந்தவர்  வரியை கொடுத்த பின் உங்களை போல் தான் பேசிக்கொண்டு தெரிகிறார். ஆகவே  உங்கள் கருத்தெல்லாம் ஒரு கனமானதில்லை.ஒரு சில கூடாத சம்பவங்களை வைத்து புலிகளின் அனைத்து அர்ப்பணிப்புகளையும் தமிழராக இருந்து கொண்டு எப்படித்தான் உங்கள் போன்றோரால் புறணி கூற முடிகிறது?
 
மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஓரே இரவில் 5 லட்சம் மக்கள் வன்னியை நோக்கி சென்று  ஒரு தெற்காசிய சாதனை ஆக்கியதை மறந்து விட்டீர்களா?
 
புலிகள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. இதே சமுதாயத்தில் இருந்து சென்று இணைந்தவர்கள் தான்.இயலும் மட்டும் மிகக்கட்டுபாடாக இருந்தார்கள். இதனை மேற்குலக மக்களே பாரட்டியதை நீங்கள் கேட்டீர்களோ தெரியாது( கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள் என்பதும் தெரியும்) நான் கேட்டிருக்கிறேன். எனவே தவறுகளை அவர்களும் விட்டார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை.
 
நான் நினைக்கிறேன் புலிகளை விமர்சித்தவர்களில் இலங்கை, இந்திய அரசை விட ஒட்டுக்குழுக்கள் தான் பல வதந்திகளையும் சேர்த்து பரப்பி மக்களை குழப்பியதோடு இன்றும் பல  திருகுதாளங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
எதிரிகளால் வாங்கப்பட்ட மக்கள், போராளிகள் காட்டிக்கொடுப்போராக செயற்பட்டனர். இயக்கத்துக்குள்ளும் இறுதி நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். கே.பி, கருணா போன்றோரின் நாடகங்கள் எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
 
கேள்வி: புலிகளாக இருந்த கே.பி மன்னிக்கப்படும் போது பாலகுமார், யோகி போன்றோர் ஏன் எங்கே என்றே மகிந்த அரசு சொல்கிறார்கள் இல்லை.(கடந்த முறைகள் மாதிரி ஓடி ஒளிப்பீர்கள் என நினைக்கவில்லை)

அப்பு, ராசா வன்னியை நோக்கி மக்களை இடப்பெயர புலிகள் என்ன என்ன செய்தார்கள் என்பதனை எனக்கு கூறாதீர்கள். அப்போது அந்த மண்ணில்தான் நான் இருந்தேன். வானத்தை நோக்கிச் சுட்டும் அந்த மண்ணை விட்டுப் பிரிய மனம் இல்லாத முதியவர்களை புலிகள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். (இவ்வளவும் தெரிந்த பின்னரும் புலிகளுக்கு ஆதரவாகத்தானே நாம் இருந்தோம்.)

இதே புலிகளுக்கு வடபகுதியில் இருந்து 91 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இளையோர்கள் இணைய முன்வராததற்கு என்ன காரணம் என்று ஏன் உங்களால் ஆராய முடியாது? ஜெயசிக்குறு சமரின் முதுகெலும்பாக கிழக்கு மாகாண போராளிகளும் வன்னிப் போராளிகளுமே அதிகளவில் வீரச்சவாடைந்தார்களே இது தெரியுமா?

இறுதி வரை போராடுவோம் என்று 2009 மே மாதம் தொடக்கத்தில் புலிகளின் குரல் வானொலி ஊடாக சவுண்டு விட்ட யோகி ஏன் சரணடைந்தார்? சிங்களவனை நம்பாதீர்கள் என்று அன்றில் இருந்து அனைவரும் கூறிவிட்டு பின்னர் எப்படி அதே சிங்களவனை நம்பி சரணடைய முற்பட்டார்கள்?

சரணடைந்த பின்னர் என்ன சிங்களம் செய்யும் என்று அன்றில் இருந்து நம்பினோமோ அதனைத்தான் இவர்களுக்கும் செய்திருப்பார்கள். இதற்காக நாம் அனுதாபப்படத்தான் முடியும்.

கே.பி.யை சிறிலங்கா அரசு கைது செய்து இன்றும் தனது கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கின்றதே தவிர அவரை சுதந்திரமாக நடமாட விடவில்லை. அதேபோன்று நகுலன், ராம் போன்றவர்களும் படைத்தரப்பினரின் கண்காணிப்பில்தான் உலாவுகின்றனர் என்பதனை மறக்கக்கூடாது.

நாங்கள் எல்லாம் ஓடி ஒளிய வேண்டியதில்லை. எவ்வளவுதான் எழுதினாலும் ஒருவரும் திருந்துவதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தினை எழுதிக் கொண்டு இருப்பதனால் என்ன பயன்?

Edited by nirmalan

புலிக்காய்ச்சல் எங்களுக்கு இல்லை மகனே. புலிகள் விதைத்துவிட்டுச் சென்ற மாயைக்குள் இருந்து நீங்கள்தான் வெளியே வரவில்லை. அவர்கள் அந்த மாயைக்குள் இருந்தே அழிந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று கனவு உலகில் சஞ்சாரம் செய்யுங்கள்.

"விடுதலைப் புலிகளுக்கு பின்னைய காலகட்டம் என்று ஒன்று இல்லை" என்று அன்றே அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் அவர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அது உண்மைதான். இதில் இருந்து புலம்பெயர் தமிழர்கள்தான் வெளியே வரவில்லை.

நாங்கள் மாயைக்குள் இருக்குறோம் ஆனால் நீங்கள் இருப்பது மயக்கத்துக்குள். இனிதன்னும் இலங்கையில் யாரும் அரசராக வரமுடியாது என்பதை உண்ரவேண்டும். போர்குற்றவாளிகள் ஐ.நா விசாரணையை சந்தித்தாக வேண்டும். புலிக் காச்சால் அது புலிகள் தான் செய்தார்கள் என்று திரும்ப திருப்ப கூற யாரும் நம்ப போவத்தில்லை. 

புலிகள் எங்களை மாயைக்குள்விட்டால் நீங்கள் மயகத்துக்குல் இருந்து கொண்டு புலிகள் தங்களுக்கு பின்னர் காலகட்டம் ஒன்று இல்லை என்று சொன்னர்கள் என்று எங்களுக்கு சொல்ல்வருகிறீர்கள். அவர்கள் சொன்னது விளங்கியிருந்தால்  உங்களுக்கு மயக்கம் தெளிந்திருக்கும்.அப்போது நீங்கள் விளங்கிக்கொண்டதை தெளிவாக சொல்லி எங்களுகும் விளங்க வைப்பீர்களே அல்லாமல் அதை எங்களுக்கு நீங்கள் திணிக்க முயலமாட்டீர்கள். இப்படி ஒரு வனத்தை சொன்ன புலிகளின் மாயைக்குள் நான்கள் என்று முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் தொடர்பில்லாமல் எழுத மயக்கம் கூட காணாது.

அந்த மக்களில் ஒருவன்தான் ஐயா நானும். அதனை உங்களுக்குப் புரிய வைக்க நான் என்ன அக்னிக் குண்டத்திலா விழ வேண்டும்?

அந்த மக்களில் ஒருவர் நீங்கள் என்றால் அரசமாளிகையில் பக்கத்து நாட்டு அரசர்களை கூப்பிட்டு வைத்து முடிசூட்டு விழாவுக்கு ஒத்திகை பார்ப்பவர்களை பற்றிப் புகழ உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன உறவு என்றதை சொல்ல முடியுமா? அல்லது புலிகள் சொன்ன வசனதை விளங்கிகொள்ள முடியாமல் போனது மாதிரி அரச மாளிகையில் நடப்பவையும் விள்ங்காமல் தான் போய் சேர்கிற்தா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.