Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்: மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
awarmanohanmsafwewe.jpg

கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்,  தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த  போது, அதற்கு பதிலாக  அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி,  இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும்,  மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.     

 

 "பலய" என்ற பெயரில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியினால் வாராந்தம் நடத்தப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் இவ்வாரம்  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், ஜாதிக ஹெல உறுமயவின் உதவி பொதுசெயலாளரும், மேல்மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பி அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தற்போது யூடியூப் மற்றும் பல்வேறு சமூக இணையங்களில் காணக்கிடக்கிறது.      

 

 இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் தொலைபேசியில் கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது. இதன்போது தம்புள்ளை நகரில் இருந்து முஹம்மத் சலீம்டீன் என்ற நபர் அஸ்வர் எம்பியிடம்  தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றியும், தற்போதும் அந்த பள்ளிவாசலை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது  பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இதற்கு பதிலாக அஸ்வர் எம்பி, இந்த பள்ளிவாசல் பிரச்சினையை தங்கள் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இப்போது அங்கு பிரச்சினை இல்லை என்றும், முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகவும், சிலர் வெளியிலிருந்து மதவாதத்தை தூண்டி விடுவதாகவும் சொல்லிக்கொண்டே போனார்.

 

இந்த சந்தப்பத்தில் அஸ்வரை இடைமறித்த மனோ கணேசன் ,"அஸ்வர் கேள்வி கேட்டவர் தம்புள்ளையில் இருந்து கேட்டுள்ளார். அங்கு இன்னமும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு நேரடியாக பதில் கூறுங்கள்" என்று சொன்னார். இதற்கு பதிலாகவே அஸ்வர் எம்பி மனோ கணேசனை நோக்கி, பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும்,  மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது, 

 

இந்த கருத்து மிகவும் வருந்த தக்கது. ஆனாலும் இதை முஸ்லிம் மக்களின் கருத்தாக நான்  பார்க்கவில்லை. இஸ்லாமிய சகோதரர்கள் எனது மக்கள் என்றே நான் நினைந்து வாழ்கின்றேன். அஸ்வர் போன்றவர்கள் என்னை நிறுத்த முடியாது. இத்தகைய கருத்து  புனித இஸ்லாத்துக்கு விரோதமானது என்றே நான் கருதுகின்றேன்.  

 

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நான் இன, மத பேதம் பார்ப்பதில்லை. தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக நாட்டின் கவனத்தை ஈர்க்கும் முதல் ஆர்ப்பாட்டம் மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மானினால் கொழும்பில் நடத்தப்பட்ட போது அதில் நான் அக்கறையுடன் கலந்துகொண்டேன், தொடர்ச்சியாக நண்பர் அசாத் சாலியுடன் இணைந்து முஸ்லிம் சகோதர மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக போராடி வருகிறேன்.    

 

சமீபத்தில் வெலிவேரிய ரதுபஸ்கல கிராமத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, உடனடியாக அந்த கிராமத்து மக்களுக்கு தலைமை தாங்கும் பெளத்த தேரரை அழைத்து நண்பர் விக்கரமபாகு  கொழும்பில் ஏற்பாடு செய்து நடத்திய ஆர்பாட்டத்தில் நான்  அக்கறையுடன் கலந்துகொண்டேன்.       

 

மலையக தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் என்ற மோசடியை எதிர்த்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு  தலைவர் என்ற முறையில் கொட்டகலையில் ஆர்ப்பட்டம் செய்தேன்.  கொட்டகலையில் யாருக்காக ஆர்ப்பாட்டம் செய்தேனோ அந்த மக்களை சார்ந்த ஒரு பிரிவினரே என்னை கல்லால் அடித்து இரத்தம் சிந்த வைத்து காயப்படுத்தினார்கள். மலையக மக்களுக்காக குரல் கொடுக்காதே என்று அவர்கள்  கல்லால் அடித்தார்கள். இன்று முஸ்லிம் மக்களுக்காக பேசாதே என்று அஸ்வர் சொல்லால் அடிக்கிறார்.  வடக்கில் வாழும் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். அங்கேயும் எனக்கு ஒருநாள் அடிவிழுமோ தெரியவில்லை.  ஆகவே இது எனக்கு புதிய அனுபவம் அல்ல.  என் பணி தொடரும். ஆனால்,  இத்தகைய சம்பவங்கள் என் உள்ளத்தில் அரசியல் தொடர்பாக ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது..

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7403

சரிதான் அடுத்தமுறை ஜனாதிபதி முஸ்லீம் மக்களுக்குக்காக அதை கிழிச்சார், இதை கிழிச்சார் என்றால் உடனே ஜனாதிபதிக்கு அஸ்வார் சுன்னத் செய்த்துவைத்தாரா என்று அஸ்வருக்கு ஒரு தந்தி, தொலைபேசி, தபால், மின்னல் அஞ்சல் என்று அனுப்பிவையுங்கள். 

 

இனிமேல் அஸ்வார் தமிழ்ரை பற்றி பேசினால், வெள்ளவத்தை தமிழ் பெண்கள் அழக்காக இருக்கிறாகள் என்றால் அஸ்வரை பலாத்காராமாக Colombo General இழுத்துக்கொண்டுபோய் skin grafting செய்து அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான். அப்புறம் அவர் தாராளமாக தமிழ் பெண்களைப்பற்றிப்பேசலாம். 

 

இந்தாளைவிட மேர்வின் சில்வா தேவலை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் பள்ளிவாசல் உடைப்பதைப் பற்றி பேசினால்... சுன்னத்து செய்வதைப் பற்றியல்ல, அக்குளில் சேவ் எடுப்பதைப் பற்றியும் கதைக்க மாட்டார்கள். சிங்களவனில்... அவ்வளவு பயம்.
இடம் கண்டவன் தமிழன் என்ற நினைப்பு... இந்த முஸ்லீம்களுக்கு.

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு,ஒற்றுமை ஏற்படக்கூடாது எனபதில் பேரினவாதிகளைவிட முஸ்லீம் அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறாரகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு,ஒற்றுமை ஏற்படக்கூடாது எனபதில் பேரினவாதிகளைவிட முஸ்லீம் அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறாரகள்.

 

உண்மை... ருல்பன்.

இப்படிப் பட்டவர்களுடன் இணக்க அரசியல் செய்ய வேண்டுமென்றும்... வட மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெறாத முஸ்லீமுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும்... பைத்தியக்காரத் தமிழன் இருக்கும் வரை... தமிழனுக்கு விடிவு இல்லை.

சிங்களவர் பள்ளிவாசல் உடைப்பதைப் பற்றி பேசினால்... சுன்னத்து செய்வதைப் பற்றியல்ல, அக்குளில் சேவ் எடுப்பதைப் பற்றியும் கதைக்க மாட்டார்கள். சிங்களவனில்... அவ்வளவு பயம்.

இடம் கண்டவன் தமிழன் என்ற நினைப்பு... இந்த முஸ்லீம்களுக்கு.

 இருந்து பாருங்கோ ஒரு நளைக்கு அஸ்வார் பள்ளிவாசல்கள் உடைக்கும் சிங்கள காடைகளிடம் சென்று "நீ பள்ளிவாசல் உடைக்கமுதல் சுன்னத் செய்தாயா" என்றுதான் கேட்பார் போலிருக்கு.  :D

ஒபாமா, போட முதல் சுன்னத் செய்துவிட்டுத்தான் அசாத்தில் தொடலாம் என்றும் வரவேண்டும்.  :icon_idea:  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களை அணைத்து அரசியல் செய்ய விரும்பியதில்லை ..... :unsure: தமிழ் அரசியல்வாதிகள்தான் ஓடிஓடி அவர்களை அணைத்து அரசியலில் ஈடு படவைக்கின்றர்கள்   :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கட்சி ஒன்றில் ஒட்டியிருக்கும் அஸ்வருக்கு
இஸ்லாமியர்களைப் பற்றிக் கதைக்க என்ன அருகதை உள்ளது.

முதலில் அஸ்வர் தான் ஒரு உண்மையான இஸ்லாமியரா  என

எல்லோருக்கும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். 

வடக்கில் மனோ கனேசனை அடிக்க மாட்டர்கள். இன்று வடக்கில் காணப்படும் சண்டித்தனங்கள், விடுகாலிதனங்கள் இன்று ஆமி விதத்தைவை மட்டுமே. தமிழர் ஆட்சி வந்தால் அவை திரும்ப தானாக போய்விடும். ஆனால் என்றென்றும் பாரம்பரியமாக இருப்பது இதுதான். ஆனால் அலுவல் முடியும் வரையும் அண்ணையோ தம்பியோ எனறு உருகுவார்கள்.  

 

அதன் பின்னர்:

 

 

அலுவல் முடிந்தவர்: "அப்ப  அண்ணை வரட்டே. "

 

மனோகனேசன்: " எனக்கும் தேர்தல் வருகிறது, ஒரு உதவி வேண்டும், ஒரு நிமிடம் நின்று இதை கேட்டுவிட்டு போக முடியுமா"

 

அலுவல் முடிந்தவர்: "பிள்ளையை ஒரு இடத்தை கூட்டிக்கோடு போகவேண்டும். நேரம் போகுது. இன்னொரு நாளைக்கு கதைப்பம். அப்ப வாறன் BYE". :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு அந்த மதத்தைச்

சார்ந்து இருக்கவேண்டும் என்பது அஸ்வரின் மதவாதத்தை எடுத்துக்காட்டுகின்றது.

புனிதப் போர் (ஜிகாத்) என்று கத்தும் சிலர்  பன்றி இறைச்சிக்காக வரிசையில்

காத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மனோ கனேசனை அடிக்க மாட்டர்கள். இன்று வடக்கில் காணப்படும் சண்டித்தனங்கள், விடுகாலிதனங்கள் இன்று ஆமி விதத்தைவை மட்டுமே. தமிழர் ஆட்சி வந்தால் அவை திரும்ப தானாக போய்விடும். ஆனால் என்றென்றும் பாரம்பரியமாக இருப்பது இதுதான். ஆனால் அலுவல் முடியும் வரையும் அண்ணையோ தம்பியோ எனறு உருகுவார்கள்.  

 

அதன் பின்னர்:

 

 

அலுவல் முடிந்தவர்: "அப்ப  அண்ணை வரட்டே. "

 

மனோகனேசன்: " எனக்கும் தேர்தல் வருகிறது, ஒரு உதவி வேண்டும், ஒரு நிமிடம் நின்று இதை கேட்டுவிட்டு போக முடியுமா"

 

அலுவல் முடிந்தவர்: "பிள்ளையை ஒரு இடத்தை கூட்டிக்கோடு போகவேண்டும். நேரம் போகுது. இன்னொரு நாளைக்கு கதைப்பம். அப்ப வாறன் BYE". :D

 

மல்லை... நீங்கள், பகிடியாக... உள்குத்து விடுகிறீர்கள் போலுள்ளது. :rolleyes: 

ஆனால்... மனோ கணேசனை மலையகத் தமிழர்களை விட... வடக்குக், கிழக்கு தமிழ் மக்கள் நேசிக்கின்றார்கள் என்பதே... உண்மை. :)

இப்பிடி எல்லாமா கேட்பாங்க? என்ன ஆள் இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எல்லாமா கேட்பாங்க? என்ன ஆள் இவர்?

 

வணக்கம் ஈழத்திருமகன் :wub:  :)  

நீங்கள் கனகாலம் களத்திற்கு வராததால்.... உங்களை மறந்தே போய் விட்டோம்.

ஏனப்பா... இவ்வளவு காலமும், வராமல் இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வர் இன்னும் ஆழமாக சிகிச்சை செய்து தனது மதப்பற்றை நிரூபிக்கவேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் ஏன் சோனகருக்காக வக்காளத்து வாங்கினமோ தெரியேல்லை. இதை ஒரு சிங்களவன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. இதைவிட செருப்படி வேற என்ன இருக்கு.

 

ஒருபோதும் முஸ்லிம்கள் தமிழ்ரோடு இணைந்து வாழப்போவது இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வர் இன்னும் ஆழமாக சிகிச்சை செய்து தனது மதப்பற்றை நிரூபிக்கவேண்டும். :D

 

ஆழமாக.... என்றால்....

பாக்கு வெட்டியால்.... கொட்டைப் பாக்கை நறுக்குவது, போல் நறுக்குவதா? :rolleyes:  :lol:

வணக்கம் ஈழத்திருமகன் :wub:  :)  

நீங்கள் கனகாலம் களத்திற்கு வராததால்.... உங்களை மறந்தே போய் விட்டோம்.

ஏனப்பா... இவ்வளவு காலமும், வராமல் இருந்தீர்கள்?

 

நினைவு வைத்திருந்தமைக்கு நன்றிகள் சிறி அண்ணா.

 

நான் யாழ் களத்தை பார்ப்பது வழமை. கருத்து எழுதி, வீணே விவாதித்து மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. எங்காவது ஆரோக்கியமான கருத்தாடல் அமைந்தால் அதில் பங்குபற்றி இருக்கிறேன்.

 

உங்கள் நகைச்சுவையான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. நன்றிகள்

 

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ணத்துச் செய்வது ஆரோக்கியத்துக்கு உதவுவதாக ஒரு வைத்தியர் தெரிவித்ததைக் கேட்டுள்ளேன். :)  முஸ்லீம் அல்லாத சிலரும் அதனைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். :o  முஸ்லீம் மதத்தில் பல பிரிவுகள் உள்ளன. அஸ்வர் எந்தப்பிரிவு என்று தெரியவில்லை?. ஆனால் அஸ்வர் பின்பற்றும் முஸ்லீம் பிரிவில் சுண்ணத்துச் செய்யும்போது மூளையிலும் கால்பகுதியோ! அதற்கும்மேலாகவும் துண்டாடப்படுவதாக இப்போதுதான் அறிந்துகொண்டேன். :icon_idea:  

இஸ்லாமியசகோதரர்கள் விடயங்களில் யாரும் தலையிடவேண்டாம் என்று மனோவுக்கு அஸ்வர் சொல்லுறார் சரி அதேபோல இந்தியா ஏதாவது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினால் அவர்களும் அஸ்வர் சொன்னதுபோல அவர்களும் இந்த  செய்யவேண்டுமா அல்லது அஸ்வர் செய்யச்சொல்வார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியசகோதரர்கள் விடயங்களில் யாரும் தலையிடவேண்டாம் என்று மனோவுக்கு அஸ்வர் சொல்லுறார் சரி அதேபோல இந்தியா ஏதாவது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினால் அவர்களும் அஸ்வர் சொன்னதுபோல அவர்களும் இந்த  செய்யவேண்டுமா அல்லது அஸ்வர் செய்யச்சொல்வார்களா ? 

 

இந்தியாவின் தலைவியே சோனி. சுன்னத்துச் செய்யாமல்?...... :wub:  இது என்ன கேள்வி......?????? :o  :lol:  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நீங்க மட்டும் என்னவாம் தமிழ் பொண்ணுங்களோட அழக வர்ணிக்கும் போது பாராளுமன்றில் வேட்டிய கட்டிட்டு வந்து தமிழனா வர்ணி என்று தொப்பிய பிரட்டி மனோ போட்டிருந்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.