Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியை ஒதுக்குகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியை ஒதுக்குகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
[ திங்கட்கிழமை, 30 செப்ரெம்பர் 2013, 04:42 GMT ] [ கார்வண்ணன் ]

வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் அனந்தி சசிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில்,

“அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது.

அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர்.

முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி கவனத்தில் எடுக்க வேண்டும்.

இளையவர்கள் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டிய ஏற்படலாம்.

வயதான, அனுபவம் வாய்ந்தவர்கள், மாகாணசபையின் ஆரம்பக்கட்டத்தை பொறுப்பேற்கக் கூடும்.

எவ்வாறாயினும் இந்த விவகாரங்கள் எல்லாமே தற்போது, ஆலோசனையில் தான் உள்ளன.” என்று இரா.சம்ப்நதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில், இரண்டாவது அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற அனந்திக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130930109164

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் என்றால் அரச விவகாரங்களை கையாண்ட அனுபவமாக இருக்கவேண்டும். ஆனால் அங்கு எந்தத் தமிழருக்காவது அந்த அனுபவம் உள்ளதா??

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் மக்களின் வாக்குத் தான் வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிற அக்கறை இல்லை. அனந்தி அக்கா மட்டுமல்ல... தமிழ் மக்களின் அபிமானத்தை வென்ற பலரையும் சம்பந்தர் தமிழீழத்தை தூக்கி எறிஞ்ச கணக்கா எறிஞ்சுக்கிட்டு வாறார். ஐயாவுக்கு உலகம் சரியாப் புரியல்லப் போல..! :rolleyes::icon_idea::o

நான்கு மந்திரிகள்தான் மாகாண சபைக்கு.

மகளிர் விவகார மந்திரி என்று மாகாணசபையில் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. விருப்பு வக்குகளை மட்டும் வைத்து மந்திரியை தெரிவு செய்ய முடியாது. இதனால் அனந்திக்கு மந்திரி பதவிக்கு போட்டி போடும் தகவு மற்றவர்கள் அளவுக்கு சமனாகக் குறைக்கப்பட்டுவிடும். 

பிரச்சனை மத்தியை பார்த்து எழுவதாக இருக்கும். அங்கு இருக்கும் பா.உ..க்கள் எல்லோருமே ஏதோ ஒரு மந்திரிகள். அப்படி ஒன்றும் கிடையாதவர்கள் வெறும் ***************. இதனால் வடக்கில் மந்திரிப்பதவி கிடைக்காதவர்கள் தங்களைத் தாங்கள் வேண்டப்படாதவர்களாக காண முயலலாம். பொறுமை காக்க வைப்பது கடினமாகலாம். யாரிடமாவது மாவை  பள்ளி வயது முதல் அரசியலில் இருந்துவிட்டு முதல் மந்திரிப் பதவியை, தான் இனி வாழ்வில் எந்த நாளுமே துரத்திப்பிடிக்கமுடியாதபடி யாரிடமோ கையளித்திருக்கிறார் என்றால் விளங்கிக்கொள்வார்களா? 

இதில் தோற்ற்வர்கள் ஆப்பிறுக்க கிளறிவிடும் புரளியும் உள்ளடக்கம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மல்லை அண்ணா பலம் பெரும் கூட்டணி ஆள் சம்மந்தன குறை சொல்ல விடார் :D

  • கருத்துக்கள உறவுகள்
அனந்தி அக்க அவர்கள் விடுதலி புலிகளோடு சம்பந்த பட்டவர்.
விட்டுகொடுப்பு அரசியலுக்கு இவர் களங்கம் ஏற்படுத்த பலத்த வைப்பு இருக்கிறது.
தற்போதைய பூகோள அரசியலை புரிந்து...........
தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருப்பதே ஜதார்த்தமான உண்மை.
இந்த ஜதார்த்தத்தை புலம்பெயர் தேசிய வாதிகள் இப்போதைக்கு புரிந்துகொள்ள மாட்டார்கள்.
சிங்கள சிறப்பு இராணுவ படையினர் கிண்டி எறிந்த மாவீரர் துயிலும் இல்லங்களின் எஞ்சிய கற்களை பொறுக்கி சென்று கடலில் எறிவோம்.......... அப்படி என்று பெருந்தன்மையோடு பேச வல்லவர்களே இப்போதைக்கு. அடிமையாக எப்படி வாழ்வது என்று தமிழர்களுக்கு கற்று கொடுக்க தகுதியானவர்கள்.
ஜதார்த்த பணியாரம் இப்படியிருக்க.......... 
அனந்தி அக்க அவர்கள் மந்திரி ஆவது என்பது பெரும் அபத்தம்.
மக்கள் அவர்களுக்கு வாக்குகளை போட்டார்களே தவிரே. எந்த மக்களும் அவரை ஏற்று கொள்ளவில்லை என்பதே ஜதார்த்தமான உண்மையாகும்.
இது புலிகளின் அருவருடிகளுக்கு புரிய வாய்ப்பில்லை. தற்போது மக்களிடம் சென்று புலிகளை பற்றி கேட்டாலே உண்மை தெரியவரும்.
இங்கிருந்துகொண்டு கருத்து எழுதுவதால் உண்மை பொய் என்று ஆகி போகாது.
 
சுமத்திரன் அவர்கள் இரண்டு மந்திரி பதவிகளை பெறுவதற்கு அனுபவ ரீதியாக  தகுதி உடையவர். இதை கூட்டணி கணக்கில் எடுக்க வேண்டும் என்பது பொது மகன் ஆகிய என்னுடைய அவா  ஆகும்!
  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே புலம்பெயர்ந்த பூசாரிகள் குழப்பாமல் சம்மந்தன் ஐயா எங்களுக்கு எல்லா வளமும் பெற்றுத்தருவார் அதுவரைக்கும் பேசாமல் ஏதாவது மசாலா படம் பாத்திட்டு இருக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் மருதங்கேணி இப்படி மொக்கை போடக்கூடாது. யாழ் களத்தில மொக்கையாக எழுதினால்தான் விட்டுவைக்கின்றார்கள் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்துக்கு இடம் கொடுக்கிறோம் என்ற போர்வையில் தமிழக ஆதரவு சக்திகளை விமர்சிப்பது புலம் பெயர் தமிழரை விமர்சிப்பது என்ற புதிய கொள்கையை எல்லாம் யாழ் தத்தெடுத்து புதிய பாதை நோக்கி போகேக்க நீங்க யாழை இப்பிடி கிண்டல் அடிக்க கூடா கிருபன்னா

கிழக்கில் இருக்கும் நான்கு மந்திரிகள்சபை இவை மட்டும்தான்

சுகாதாரம், 

கல்வி,

விவசாயம்,

நெடுஞ்சாலைகள்.

இதில் சுகாதாரத்தில் பெண்கள் நலம் என் ஒரு பகுதியைப் பிரித்து அனந்திக்கு கொடுத்தார்களாக இருந்தால் அது நடக்கலாம்.

வாக்குக்களை முழுமையாக அனந்தியையும் போட்டார்கள். அவருக்கு முழு மறுகரை  விக்கினேஸ்வரனையும் போட்டார்கள். இருவரும்தான் யாழ்ப்பாணத்தில் கட்சியை முன்னால் தள்ளிச்சென்றது.

பிரிவினைகளை தடுக்கும் ஒரு தந்திரம் தான் ஆனந்தசங்கரியை போட்டதும்.

எனவே நான்கு வருடம் எடுத்த தேர்தல், நான்கு நாட்களில் விரும்பிய மந்திரிகளை தராது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எல்லாம் முடியாது சட்டப்படி 4 அமைச்சு தான் வேணும் என்றால் நாலு அமைச்சுக்கும் வேறு வேறு துறைகளில் ஒரு பிரிவை உருவாக்கி ஒரு உதவியாளராய் போடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் குறைவான கூட்டங்களை நடத்திய ஐயா விக்னேஸ்வரன் பின்னர் விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப் போராளிகள் என்று அறிக்கை விட்ட பின்னரே கூட்டங்களுக்கு பெருமளவான மக்கள் வரத்தொடங்கினர் என்பதும் அவர்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன் இந்த நிலையில் இதற்குள் ஏதாவது சூழ்ச்சி இருந்தால் அதற்கான விளைவினை அடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள் என்பதும் தெரியும் ஆகவே புரிந்து நடப்பார்கள் என்று நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் அவர்களுக்கு வாக்குகளை போட்டார்களே தவிரே. எந்த மக்களும் அவரை ஏற்று கொள்ளவில்லை என்பதே ஜதார்த்தமான உண்மையாகும்"

ஐயா மருதங்கேணி அவர்கட்கும், அவருக்கு ஒத்தூதும் இசைக்கலைஞருக்கும் ஒரு விடையத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்

அனந்தி அவர்களுக்கு வாக்களித்த மக்கள் யாரும் முள்ளிவாய்காலிலிருந்து உயிர்த்தெழுந்தோ, அன்றேல் வேற்றுக்கிரகத்திலிருந்தோ வரவில்லை.

அனந்தியவர்கள் அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளது இருப்பதே மேல். மேலும் கூத்தமைப்பு அவரை வேண்டாத விருந்தாளியாகத்தான் பார்க்கிறது. காரணம் அவரது வெற்றிக்கு முற்றாக நின்றுழைத்தது தமிழ்தேசிய மக்கள் முண்ணனி.

இது புலிகளின் அருவருடிகளுக்கு புரிய வாய்ப்பில்லை. தற்போது மக்களிடம் சென்று புலிகளை பற்றி கேட்டாலே உண்மை தெரியவரும்.

தமிழர்களையும் தமிழ்மொழியையும் உலகப்பொதுமேடையில் அறியவைத்தவர்கள் புலிகளே, இதை இங்கு எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாது.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியேற்குமடியேன் எனும் வாசகம்போல் நான் புலிகளது அடிவருகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் தவிர புலிகளுக்கும் புலிகளது அடிவருடிகளுக்கும் புரியமுடியாத அரசியல் மற்றோரைத் தொழுதுண்டுவாழ்வோருக்கு இருக்குமென்பதில் ஐயமுண்டு.

Edited by Elugnajiru

அனந்தியவர்கள் அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளது இருப்பதே மேல். மேலும் கூத்தமைப்பு அவரை வேண்டாத விருந்தாளியாகத்தான் பார்க்கிறது. காரணம் அவரது வெற்றிக்கு முற்றாக நின்றுழைத்தது தமிழ்தேசிய மக்கள் முண்ணனி.

இது எல்லாம் புதுக்கதை.

"விக்கினேஸ்வரனை இந்தியா நியமித்தது" என்றதை விட இது எந்த வகையிலும் மாறுபட்டதில்லை. அதை தேசிய முன்னணி ஒரு அறிக்கையாக வெளிவிட்டால் நல்லது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கதை எதுவும் இல்லை, அனந்தி அவர்களே தேர்தலின்பின் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கையில் இதுபற்றிக்கூறியிருக்கிறார் சில தினங்களுக்குமுன்பு யாழ் களத்தில் தலையங்கம்மாத்திரம் இருந்தது கள நிர்வாகம் செய்தியை பிரசுரிப்பதிலிருந்து தவிர்த்திருந்தது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்க அவர்கள் விடுதலி புலிகளோடு சம்பந்த பட்டவர்.

விட்டுகொடுப்பு அரசியலுக்கு இவர் களங்கம் ஏற்படுத்த பலத்த வைப்பு இருக்கிறது.

தற்போதைய பூகோள அரசியலை புரிந்து...........

தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருப்பதே ஜதார்த்தமான உண்மை.

இந்த ஜதார்த்தத்தை புலம்பெயர் தேசிய வாதிகள் இப்போதைக்கு புரிந்துகொள்ள மாட்டார்கள்.

சிங்கள சிறப்பு இராணுவ படையினர் கிண்டி எறிந்த மாவீரர் துயிலும் இல்லங்களின் எஞ்சிய கற்களை பொறுக்கி சென்று கடலில் எறிவோம்.......... அப்படி என்று பெருந்தன்மையோடு பேச வல்லவர்களே இப்போதைக்கு. அடிமையாக எப்படி வாழ்வது என்று தமிழர்களுக்கு கற்று கொடுக்க தகுதியானவர்கள்.

ஜதார்த்த பணியாரம் இப்படியிருக்க..........

அனந்தி அக்க அவர்கள் மந்திரி ஆவது என்பது பெரும் அபத்தம்.

மக்கள் அவர்களுக்கு வாக்குகளை போட்டார்களே தவிரே. எந்த மக்களும் அவரை ஏற்று கொள்ளவில்லை என்பதே ஜதார்த்தமான உண்மையாகும்.

இது புலிகளின் அருவருடிகளுக்கு புரிய வாய்ப்பில்லை. தற்போது மக்களிடம் சென்று புலிகளை பற்றி கேட்டாலே உண்மை தெரியவரும்.

இங்கிருந்துகொண்டு கருத்து எழுதுவதால் உண்மை பொய் என்று ஆகி போகாது.

சுமத்திரன் அவர்கள் இரண்டு மந்திரி பதவிகளை பெறுவதற்கு அனுபவ ரீதியாக தகுதி உடையவர். இதை கூட்டணி கணக்கில் எடுக்க வேண்டும் என்பது பொது மகன் ஆகிய என்னுடைய அவா ஆகும்!

நோ னோ, நாங்க புலம்பெயர்ஸ் சொன்னபடிதான் நீங்க நடக்கோணும். வாட் நான்சென்ஸ், நாங்க வீசுற சில்லறைல தானே மேன் யூ ஆல் ஆர் லிவிங். அதனால, நீங்க யாருக்கு வோட்டுப் போட்டாலும், நாங்க சொல்லுற ஆள்தான் மந்தி சாரி மந்திரி. இல்லாட்டி ஜெயாக்கு லெட்டர் எழுதுவோம்.

அவர் புலன் பெயர் ஜூனியர்ஸ் ஆல்சோ போராடிங் நொவ். ஓக்ஸ்போர்ட் கேம்பிறிஜ் இக் படித்து, காரெல்லாம் வாங்கி ஓடின பிறகு நேரம் கிடைக்கும் போது எங்கள் பிள்ளை காலும் போராடினம். அதுக்காக அவையளை சாக ரெடியோ எண்டு கேட்கப்படாது. ஏனெண்டால் அவை எங்கட பிள்ளைகள்.

சாகிறதெண்டா அது உங்கட அல்லது உங்கட பிள்ளயளின்ர வேலை. என்னது? கையறு நிலையில நிப்பதால, வேறு வழியில்லாமல், இருப்பதையாவது காப்பெமென்று தெற்கோட சமரசம் பேசப் போறியளோ? நாட் பொசிபிள்.

நாங்க கண்ட தனிநாட்டு கனவு என்னாவது? என்ன ரெண்டு லச்சம் பேர்தானே செந்த்ஹனிங்க? இன்னும் 15 லச்சம் பேர் இருக்கிறீங்கதானே.

நாங்கதான் சில்லறை தாரோமில்ல, சாகச் சொன்னா மட்டும் கசக்குதோ?

பயபிடத்யுங்கோ ஏதேனும் பிரச்சினை எண்டால் ஒபாமாவையும் ஏத்திக்கொண்டு கப்பலில்ச் முல்லத்திதீவுக்கு வந்து காப்பாத்துவோம்.

இப்படிக்கு பும்பெயர்...பு. ( அட புண்ணாக்குத்தான் வேறொன்ருமில்லை).

அண்ணா இன்னும் நல்லா  அழுத்தி சொல்லுங்கோ .........
அப்பத்தான் இந்த புலம்பெயர் தேசிய புண்ணாக்குகளுக்கு புரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

"கோசான்" தாங்கள் யார் என்பதும் எங்கிருந்து வந்திருப்பீர் என்பதும் ஓரளவு ஊகிக்கமுடிகிறது. யாழ்களத்தில் காலத்துக்குக் காலம் இப்படியானதுகள் வந்து விசிட் அடிச்சுட்டுபோவது வழக்கம்தான்.

நல்லபெயர் "கோசான்" எங்கட ஊரில இதற்கு அர்த்தமே வேற.

தவிர இப்படி ஒருவர் முதலும் வந்து ரவுசு பண்ணினவர் அதற்காக நான் பெற்ற இன்பம்  ஒரு எச்சரிக்கை புள்ளி.

அதுதானே... கோவணத்துக்க விடவேண்டிய கோசானை தூக்கி ஆரப்பா யாழில விட்டது?! :lol::D

நீங்கெல்லாம் யாரு? சும்மா ஒரு கொமெண்ட வச்சே என் ஜாதகத்தயே கணிச்சிட மாடீங்க? நீங்கெல்லாம் என்கேயோ இருந்திருக்க வேண்டியவரண்ணே, இந்த பாழாய்போன உயிர்வாமும் ஆசை, புலத்தில வலுக்கட்டாய கொண்டுவந்து தள்ளீட்டுது.

பி.கு. நான் மலையாளியாம், அரசல் புரசலா பேச்சடிபடுதண்ணே. எந்தா எழுஞாயிறு, சுகந்தன்னே?

  • கருத்துக்கள உறவுகள்

கோசானின் அர்த்தம் உங்கள் ஊரில் என்ன? பகிடியில்லை தெரியாமல்தான் கேட்கிறேன். இங்கே சொல்லுவது நாகரிகம் இல்லை எனில் தனிமடலிலாவது சொலுங்கள். சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை.

அதுதானே... கோவணத்துக்க விடவேண்டிய கோசானை தூக்கி ஆரப்பா யாழில விட்டது?! :lol::D

அட்டா இப்படி ஒரு அர்த்தமும் இறுக்கி? அது மாத்தயா அபி கோவணம் கடுறது இல்லே தானே அதிதான் அப்பிட்ட இது சுட்டி விளக்கம் இல்ல.

தற்செயலாக அமைந்தாலும் என்பெயரின் சாலப்பொருத்தம் எண்ணி வியக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் அவர்கட்கு, நான் உயிர் வாழும் ஆசையுடனும் நல்லா சம்பாதிக்கவேண்டுமெனும் ஆசையுடனுமே புலம்பெயர்ந்து வந்தேன் என்பதையும். எனது புலப்பெயர்வுக்கு ஏதோ ஏதோவெல்லால் கள்ளக்காரணங்கள் சொல்லிவந்தே வதிவுடவுரிமை பெற்றேன் என்பதை நான் யாழ் களத்தில் பல இடங்களில் நேரடியாக இல்லாதுவிடினும் பொதுப்படையாகக் கூறியிருக்கிறேன்

 தவிர புலிகளுக்கு முதுகு தடவியோ அன்றேல் எதையாவது தடவியோ தங்கள் வாழ்நாளைக் கழித்துவிடலாம் என்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இங்கு எவருக்கும் இல்லை. காலம் விட்டவழியே நாம் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலம்பெயர் தேசத்துத் தெருக்களில் பத்தோடு பதினொன்றாக எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப்போகிறார் என்பதுபோல் எதாவது அவ்வேளைக்கு இயல்பான குரல் கொடுத்ததுடன் எனது தமிழீழத்துக்கான போராட்டம் முற்றுப்புள்ளியை அண்மித்துவிடும். இதை நான் சொல்வதில் வெட்கப்படவில்லை. ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்வதற்கான திமிரைக் கொண்டிருப்பவன். புலப்பெயர் புண்ணாக்குகள் எனும்  அதிமதிப்புள்ள சொல்லாடலை நீங்கள் பிரயோகிப்பதோ அன்றேல் தமிழீழம் நோக்கிய போராட்டைத்தை விமர்சிப்பதாலோ இங்கு ஒன்றும்குறைந்துவிடமாட்டாது என்பதை மனதில் வைத்திருங்கள். காலமெனும் நதி தங்குதடையேதுமின்றி தன்பாட்டில் ஓடிக்கொண்டேயிருக்கும், தடைசெய்ய முயற்சிக்கும் நீங்கள்தான் களைத்திருந்துவிடுவீர்கள் சிலவேளை நாளை உங்களுடன் சேர்ந்து ஏதோ ஒரு கரணத்துக்காக நதிநீர்மேல் நானும் சரளைக்கற்களை வீசியெறியலாம் அவ்வேளை எனத்தவிர்த்து என்போல் ஆயிரமவர் என் மூக்கத்தினின்றும் ஆயிரம் பெருமடங்குடன், எமது அஞ்சலோட்டத்தடியை இலக்குநொக்கி  கரம்மாற்றி எடுத்துக்கொண்டுசெல்வார்கள். உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபம் மட்டுமே மிகுதியாக இருக்கின்றது. எங்களுக்காகத் தோற்றுப்பொனவர்கள் பாடல் எப்போதும் பாடமாட்டாது. ஆம் அது உங்களுக்கானதே.

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறுக்கு,

உங்கள் மடல் கண்டேன் மகிழ்ச்சி. உயிர் வாழும் ஆசை பற்றிய, புலத்துக்கு ஓடிவந்த கையாலாகததனம் பற்றிய உங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கண்டு நிம்மதி அடைகிறேன். இதே போல், நாட்டை விட்டு சுயநலமாக ஓடிவந்த எவர்க்கும், அங்கே தினம் தினம் செத்துப் பிழைக்கும் மக்களுக்கு கட்டளை இடும் ஏன் ஆலோசனை கூறும் தகுதிகூட இல்லை என்பதே எனது வாதம். உங்களுக்கு இது எப்போதாவது எங்காத்துகாரரும் போகும் கச்சேரி, அவர்களுக்கு இது ஜீவ மரணப் பிரச்சினை. ஆகவே அவர்களை அவர்களின் தேர்ந்தெடுக்க பட்ட தலைவர்களை முடிவெடுக்க விடுங்கள். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் உயிர் வாழ வந்தது காயாலாகததனம் என்றால் எல்லாமே எங்கேயோ முட்டி மோதுபடுபவைதான். யாழ் களத்தில் இவ்வளவு நாட்களும் இல்லாது இப்போது இங்கு வந்து சொல்வதற்கோ எமை விமர்சனம் செய்வதற்கோ தங்கள்போன்ற அனாமத்துக்களுக்கு எந்தவிதத்திலும் யோகியதை இல்லை.

 நான்  பத்தோடு பதிணொன்றாய் உமை விட்டு விலகிவிடுதலே நன்று என நினைக்கிறேன்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனாமத்துதான். அதில் என்ன இழிவு? பத்து வருடமாய் அரைத்தமாவை அரைத்து, ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்துகளை கூறவில்லை என்பதை நான் ஒரு இழிவாக கருதவில்லை. உங்கள் கருத்துப்படி பார்த்தால் புதிதாக இங்கு கருத்துசொல்ல வருபவர்களின் கருத்துதை, அது உங்களுக்கு ஏற்றதெல்லாவிடில், மதிக்க தேவை இல்லை.

ஏனெண்டால் காஸி ஆனந்தன் சொல்ல்வது போல நாமெல்லாம் அனாமத்துக்கள், காளான்கள் அப்படித்தானே?

விலகுவதும் விலகாததும் உங்கள் விருப்பம். எண் கருத்துக்கள் வழமைபோல தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.