Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு அவர்களின் உண்ணா விரதத்தின் பின்ணனி என்ன??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்.  தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !.    அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !.
 
                  சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.
 
                   நக்சல்பாரியாக வெளியுலக வெளிச்சத்திற்கு வந்த தியாகு ,பின்னர் நச்சு வியாபாரியாக மாறிப் போனது காலத்தின் கோலம் !. களையெடுத்தல் என்கிற ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டுக் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து சிறை மீண்ட தியாகு , தன சபலப் புத்தியால்  லதா , தாமரை என்கிற இரண்டு பெண்கள் தங்கள் ஆயுள் முழுமைக்கும் தண்டனை அனுபவிக்கும் அவல நிலைக்குக் காரணமாகி விட்டார்.
 
                   முதல் மனைவி லதாவும் , அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கும்போதே , தனக்கு மண முறிவு கிடைக்க இருப்பதாகப் பொய் சொல்லி கவிஞர் தாமரையை வளைத்தார்.
50 வயது தியாகுவுக்கும் 35 வயது தாமரைக்கும் நடந்தேறிய திருமணம் அப்போதே ஊடகவியலாளர்களைப் புருவம் உயர்த்தச் செய்தது !.
 
                   தாமரைக்காவது  அவர் உண்மையாக நடந்து கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. அவரைப் பொருத்தவரை தாமரை , சம்பாதித்துப் போடும் இயந்திரம் !. தியாகு  பயன்படுத்தும் காலணியிலிருந்து  கைப்பேசி வரை , உல்லாசமாக ஊர் சுற்றும் ஸ்கூட்டர், கார் உள்பட, எல்லாமும் தாமரை பாட்டெழுதி ஈட்டும் வருமானத்தில்தான். மனைவியின் சம்பாத்தியத்தில் சுகவாசம் பழகிக் கொண்ட தியாகு, பெண் சகவாசங்களுக்காக மெனக்கெடுவதுதான் புரட்சியின் லட்சணமா ?.
 
                ஈரோட்டில் இருக்கும் தன கணவர் சன்முகசுந்தரத்தைக் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை , அவருக்கு உதவும் சாக்கில் தன்  வலையில் வீழ்த்தினார். இரண்டு பெண்குழந்தைகளின் தாயான விஜயலட்சுமியை நிரந்தரமாகத் தன்  கைப்பாவை ஆக்க நினைத்தார். அவருக்காக சென்ற ஆண்டு வீட்டை விட்டே வெளியேறினார். இந்த அசிங்கம் வெளிவந்ததால் குடும்பம், சுற்றம், இயக்கம், தோழர்கள், பள்ளி எல்லாம் உடைந்தன.  தியாகுவின் ' பெண் பித்தன்' முகம் முதல்முறையாக ஆதாரங்களோடு வெளிவந்தது.
 
              தியாகு மூலம் 'ஜி' தொலைக்காட்சியில் வேலைபெற்றுக் கொண்ட பிறகு , இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதற்கு மேலும் உடன்பட விருப்பம் இல்லாத விஜயலட்சுமி , ஊடகவியலாளர்களைக் கூட்டி தன்னை இவரிடமிருந்து காப்பாற்றும்படி இறைஞ்சினார். அந்தக் காணொளி  இப்போது இணையத்தில் உலவி  வருகிறது. தன்  செல்வாக்கால் காணொளி இதுவரை வெளிவராமல் தடுத்து வந்த தாமரையைப் ' பெண்ணியவாதி' என்று எப்படி ஏற்பது ?
 
             விஜயலட்சுமி பிடி நழுவிப் போன பின்பு , மலையக ஈழத் தமிழ்ப் பெண்ணான , திருச்சியைச் சேர்ந்த யோகராணி என்ற பாடகிக்கு வலைவீசினார். அகப்பட்டது மீன். தன்னை ' தேவர் ' இனப் பெண்ணாக பொய்கூறி வரும் யோகராணிதான் தியாகுவுக்கு இப்போது எல்லாமும் !

கற்றுக்குட்டிப் பாடகியான யோகராணியைக் குடும்பத்திலிருந்து கிளப்பி தற்சமயம் சென்னை கொண்டுவந்து தன் பாதுகாப்பில் ரகசியமாக வைத்திருக்கிறார்.
             விஜயலட்சுமி, யோகராணி போன்ற பெண்களெல்லாம் 65 வயது முதியவரான தியாகுவின் வலையில் வீழ்வதும் கலாசாரச் சீரழிவே !. தொலைக்காட்சியில் எப்படியாவது வாய்ப்புப் பெற்றுவிடவேண்டும் , அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற மனப்போக்குக் கொண்ட இத்தகைய பெண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் ' பெண்ணியம்' பேசும் பெருமேதாவிகள்.
 
            " இதுபோல் பெண்களை வேட்டையாடுவதை நிறுத்துங்கள், எனக்கு ஒழுங்கான கணவனாகவும் , மகன் சமரனுக்கு நல்ல தந்தையாகவும் வாழப் பழகுங்கள் " என்று அன்றாடம் வற்புறுத்துகிற தாமரையிடமிருந்து தப்பிக்க இப்போது அவர் தேர்ந்தெடுத்த தந்திரமே இந்தப் பட்டினிப் போராட்டம். தந்திரமாக இதில் வென்று விட்டால், தலைவன் என்கிற ஒளிவட்டம்  கிடைக்கும், தாமரையின் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் , தாமரையின் நெருக்குதலிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேற வேறு வழியில்லை என்பதே அவரது நோக்கம் !.
               ' வீட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்ற சொந்த நோக்கம்தான் காமன்வெல்த் கோரிக்கையாகத் திரிந்து நிற்கிறது .
 
               சொந்த வாழ்வில் ஒழுக்க நெறி போற்றாதவர்கள் , பொதுவாழ்வில் தலைவராகப் போற்றப்படுவது நியாயம்தானா ? தன் குடும்பத்தின் நியாயத்துக்குப் பதிலளிக்க மறுக்கும் ஒருவர் , தன் இனத்தின் நியாயத்திற்குப் போராடுவது சரிதானா போன்ற கேள்விகளை மக்களின் மனச்சான்றுக்கு விட்டு விடுகிறோம்.
 
              நன்கொடை கேட்டு உலகத்தமிழர்களுக்கு மடல் எழுதியுள்ளார் தியாகு.  நல்ல காரியத்திற்கு நன்கொடை அளிப்பது நல்லதுதான் என்றாலும் , அதை ஒரு நல்லவரின் கைகளில் கொடுக்கிறோமா என்பது அதைவிட  முக்கியம் !. , தியாகுவுக்கு நிதியளிக்கக் காத்திருக்கும் அப்பாவி உலகத்தமிழர்கள் ஒருகணம் நினைத்துப்பார்ப்பது நன்று.
             இப்படியாக தமது  சொந்த  குடும்ப பிரச்சனைகளை திசை திருப்பவும்.தமது கட்சி பிரச்சனைகளை திசை திருப்பவும்.சமூகத்தில் கெட்டுப்போன தங்கள் பெயரை  சரி செய்யவும் கள்ள மட்டை போட்டுவிட்டு  சட்டத்திலிருந்து தப்பிக்க என  எல்லாருமே  கையில் எடுப்பது ஈழத்தமிழர் பிரச்சனை  என்றாகி விட்டது. ஈழத் தாமிழா உனக்கு மட்டும் ஏன் இப்படி???...

கீழே உள்ள காணொளிகள்  கவிஞர் தாமரையின் வீட்டில் நடந்தவற்றின் ஒளிப்பதிவு ஆகும்.

  • Replies 51
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தோழர் தியாகு தன் சொந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வினைக் கண்டுவிட்டு ஈழத்தமிழருக்காகப் போராட முன்வரவேண்டும். இதுவரை உண்ணாவிரதம் இருந்ததுக்காக நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை

சுட்டுவிரல்  காட்டி   நாம் பேசுகையில்

மீதி நான்கு விரல்கள்  எம்மை நோக்கி

நாணி  நிற்கின்றன......... :(  :(  :(

கருவாடு வித்து வந்த காசு நாறவா செய்யுது...??

யார் போராடுகிறார் அவரின் பின் புலம் எல்லாம் பாத்து ஏற்றுக்கொள்ளும் கொழுப்பெடுத்த நிலையிலையா ஈழத்தமிழர் இருக்கிறார்கள்...??

இண்டைக்கு கருணாவோ டக்கிளசோ பிள்ளையானோ தமிழருக்காக போராட போறன் எண்டு வெளிக்கிட்டால் கைதட்டி வரவேற்க இங்கை ஆக்களா இல்லை...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ மக்களா மட்டை போட்டவன் புலிக்கொடி தூக்கியவுடன் அவனின் பின்

அணிவகுத்து விட்ட எங்களிடம் போய் குடும்ப பிரச்னையை  சொல்லி பிரிக்கப்

பாக்கிறியள் :wub::(

ஒருவரை

சுட்டுவிரல்  காட்டி   நாம் பேசுகையில்

மீதி நான்கு விரல்கள்  எம்மை நோக்கி

நாணி  நிற்கின்றன......... :(  :(  :(

என்ன செய்ய? சாத்திரியார் சொல்வதைக் கேட்டால் தியாகுவை நம்ப்ப முடியாது. இதையே யாராவது சாத்திரியார் மீது சொன்னால சாத்திரியாரை நம்பமுடியாது. 

இதுதான் ஜேசுக்கும் விபச்சாரி பெண்ணுக்குமிடையில் நடந்த வழக்குத் தீர்ப்பு. 

ஒருதடவை தங்களை யேசுவின் அடியார்களாக அழைத்துக்கொள்ளும் கூட்டம் ஒன்று  குழறக் குழற ஒரு பெண்ணை தெருவில் குற குற என்று இழுத்துவந்தார்கள். யேசு பெண்ணை அவர்களிடமிருந்து விடுவித்து ஏன் அந்த பெண்ணை அவர்கள் அப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டார். அவள் விபச்சாரி என்றும் அவளைக் கல்லெறிந்து கொல்வதற்க்கு தேவதூதனான ஜேயேசு முதல் கல்லை எறிந்து ஆரம்பித்து வைப்பதுதான் ஆன்மீகத்துக்கு உடன்பாடானது என்று ஜேசுவுக்கு போதனை வைத்தார்கள். அவர்களுக்கு யேசு சொன்னது "இதற்கு நான் ஏன்? உங்களில் பாவம் ஒன்றும் செய்யாதவன் ஒருவன் முன்னால் வந்து ஆரம்பித்து வையுங்களேன்" என்றார் அவ்வளவுதான் சொல்வார் கதையை எல்லாம் கேட்டாட ஜேசு தான் தேவதூதனாக மேலிருந்து கீழ் இறங்கி வந்திருக்க வேண்டியதில்லை என்றதை அந்தக்கூட்டத்திற்கு எடுத்து சொல்லிவிட்டார். 

இந்த நேரத்தில் தியாகுவைப்பற்றி தெரிந்து கொள்வதில் என்ன அவசரம்?

இலங்கையில் நடந்த மாகாணபயில் மந்திரிகள் யாராவது நியமிக்கப்பட்டுவிட்டார்களா என்று ஒரு கேள்வி கேட்கலாமே. முதல்வர் எங்கே சத்திய பிரமாணம் எடுத்தார் என்றதைப்பற்றி அறிய முயலலாமே. இலங்கை அரசு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கே. அதில் புலம் பெயர் மக்கள் என்ன கொடுக்க யோசிக்கிறார்கள் என்ற ஒரு கருத்து திரி திறந்து நல்லதொரு விவவாதம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கலாமே. இப்போது தோழர் தியாகு எத்தனை பெண்களுடன் படுத்தார் என்றதை கண்டுபிடிக்க நமக்கு ஒரு திரி அவசியமா? கவிஞ்ஞர் தாமரை இலங்கைப் பிரச்சனைகளை பற்றி பல கவிதைகள் எழுதி, கட்டுரைகள் வரைந்து பேச்சுக்கள் பேசி, பேட்டிக்கள் கொடுத்துவிட்டார். அவற்றில் ஒன்றையாவது எப்போதாவது பதிந்தார்களா? அது கவலைக்குரிய விடையம். எத்தனயோ இன்னல்களில் அவதிப்படும் ஈழத்தமிழ் மக்களை இந்த விடயத்தில் Family Court Judges ஆக மாற்றமுயல்வது அவசியமானதுதானா?

ஒருவேளை இது இலங்கையில் நடந்த மாகாண சபை தேர்தல் தோல்விகளை மறைக்க தோழர் தியாகு மீது நடத்தப்படும் பாச்சலா இது?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அவர்கட்கு,  

எட்டுக்கொரிக்கைகளை முன்வைத்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட திரு தம்பிராஜா என்பவர் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவரைப்பற்ரியும் கொஞ்சம் கிளுகிளு கதைகளை அவுத்துவிடுங்கோவன்.

எமக்காக தீயை மூட்டிய தியாகி முத்துக்குமாரின் தந்தை உடல்நலம் பதிப்பு அடைத்து இருக்குறார் என கேள்வி அவருக்கு எவராவது உதவி செய்யலாம் அவர்களின் குடும்பத்துடன் தொடர்வு கொள்ள முயற்சி செய்கிறோம் கிடைத்தவுடன் நேரடியா அவருக்கு நீங்கள் முடிந்த பணம் அனுப்பலாம் முடிந்தவர் செய்யுங்கோ .

வெளிநாடுகளிலுள்ள நண்பர்களில் யாராவது முத்துக்குமாரின் தந்தைக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா? மிகச் சிறிய உதவி என்றாலும் பரவாயில்லை. நீங்கள் தரும் ஒவ்வொரு டாலரும்/பவுண்ஸ்சும்/பிரான்ங்கும் இங்கு பதியப்படும். மிகவும் வெளிப்படையான சேகரிப்பாக இது இருக்கட்டும். வெளிநாட்டில் தனியொருவர் இதைக் கையாள வேண்டாம்.

எமக்காக தீயை மூட்டிய தியாகி முத்துக்குமாரின் தந்தை தொழிலில்  பதிப்பு அடைத்து இருக்குறார் என கேள்வி அவருக்கு எவராவது உதவி செய்யலாம் அவர்களின் குடும்பத்துடன் தொடர்வு கொள்ள முயற்சி செய்கிறோம் கிடைத்தவுடன் நேரடியா அவருக்கு நீங்கள் முடிந்த பணம் அனுப்பலாம் முடிந்தவர் செய்யுங்கோ .

வெளிநாடுகளிலுள்ள நண்பர்களில் யாராவது முத்துக்குமாரின் தந்தைக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா? மிகச் சிறிய உதவி என்றாலும் பரவாயில்லை. நீங்கள் தரும் ஒவ்வொரு டாலரும்/பவுண்ஸ்சும்/பிரான்ங்கும் இங்கு பதியப்படும். மிகவும் வெளிப்படையான சேகரிப்பாக இது இருக்கட்டும். வெளிநாட்டில் தனியொருவர் இதைக் கையாள வேண்டாம்.
 
புகைப்படம்.
1390499_528700177208085_1724462509_a.jpg
தமிழினத்தின் சாபக்கேடு தியாகிகளை மறப்பது ! Sampath Kasinathan Ramesh Babu A கொளத்தூரில் உள்ளவர்கள் இந்த செய்தியை உடனே பகிரவும் மனதை பாதித்த செய்தி அனைவரும் க...ட்டாயம் படியுங்கள்! தெரிந்தால் தகவல் கொடுக்கவும் நேற்று கொளத்தூரில் உள்ள எனது அழகு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தேன். அப்படி மாற்றி அமைக்கும் போது தேவை இல்லாத பொருட்களை அங்கயே வைத்து விட்டு சென்றேன். அதை இன்று பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு விடலாம் என்று என்னுடைய அழகு நிலைய பணிப்பெண்ணிடம் அந்த வேலையை ஒப்படைத்தேன், அவளும் ஒரு முதியவரை அழைத்து வந்து பழைய பொருட்களை எல்லாம் கொடுத்தாள்.அதன் மதிப்பு 80 ரூபாய் என சொன்னவர், அவரிடம் உரூபாய் 60தான் இருந்ததென கூறி மீதி கொடுக்க வேண்டிய 20 ரூபாயை பிறகு கொடுக்கிறேன் ,இப்போது பணம் இல்லை என சொல்லி விட்டு சென்றார்! யார் அவர் தெரியுமா ? ? ? ? ? என் இனம் செத்து மாள்வதை காண பொறுக்காமல் அதை தடுக்க,என் உயிரை தருகிறேன் என்று தனதுயிரை தீக்கிரையாக்கினவீரத் தமிழன் "முத்துக் குமாரின் " தந்தை அவர்! இந்த இனத்திற்காக தன் மகன் கொடுத்த உயிரை கொச்சைப்படுத்த விரும்பாமல் தமிழக அரசு கொடுத்த லட்சங்களை வேண்டாம் என்று சொல்லி பணத்தை தூக்கி எரிந்தவர்தான் இந்த தந்தை. ஆனால் இன்று இவரது நிலை ? ? ? ? வயதான அவர் வெயிலிலும் மழையிலும் வீணாக போகும் பொருட்களை வாங்கி விற்கும் நிலை !!!!!!!!!!!!!!!!!!!! அவரது தொடர்பு என்னை கேட்டதற்கு,அவரிடம் அலைபேசி இல்லை என்றார்! இந்த நிலையிலும் தன்னை தமிழ் உணர்வாளர்களும்,கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என பதிவு செய்யவே இல்லை அந்த தன்மானத் தந்தை! முத்துக்குமரனின் தியாகத்தை பேசும் நாம் ,அவனது வயதான பெற்றோருக்கு என்ன செய்தோம் இது வரை! இனியாவது செய்வோமா?""
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் அனியாயத்திற்கு அப்பாவியா இருக்கிறீங்களே  ம்....... :lol: :lol:

இனி எவரும் இந்தபக்கம் வரமாட்டினம் அண்ணே :D

மாப்பு தியாகுக்கு வைச்சுட்டியே ஆப்பு....இந்தாள் ஏன் இவ்வளவு மும்முரமா போராடுது என்று யோசித்தேன்....காசு problem ஆக்கும்

இதே போல் தான் மகேந்திரன் மீதும் குற்றச்சாட்டு ஒரு பெண்ணை வைத்து முன் வைக்கப்பட்டது.அப்போது அவரும் தீவிரமாக போராட முயன்றார். சீமான் மீதும் இவ்வாறான ஒரு பிரச்சாரம் ஒரு நடிகையை வைத்து துவங்கி இடையில் காணாமல் போனது. அதெப்படி இப்படி போராட்டங்கள் நடக்கும் தறுவாயில் தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வெளியே வருகின்றன?

இதன் பின்னணி என்ன என்பது நாளடைவிலேயே தெரிய வரும்.

மகேந்திரன் மீதான குற்றச்சாட்டை உடைத்ததே நான்தானே   உங்களிற்கு நியாபக மறதி எண்டு நினைக்கிறன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்கள் கொடுத்த வங்கி இலக்க கணக்கு  அவரது  முதல் மனைவியின் மூத்த மகளுடையது் ஏன் அவரிற்கு வங்கி கணக்கு கிடையாதா? அதற்கும் அப்பால் தியாகுவிற்கும்  தாமரை(கவிஞர்)நடந்த  பிரச்சனைகளின்போது  என்னுடன் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களையும்  பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால் அங்கை  டமிழ் டேசியம்  டங்கராயிடும்.

ஏன் ஒரு தனி நபரின் குடும்பச் சண்டைக்கும் தமிழத் தேசியத்திற்கும் என்ன தொடர்பு?

மகேந்திரன் மீதான குற்றச்சாட்டை உடைத்ததே நான்தானே   உங்களிற்கு நியாபக மறதி எண்டு நினைக்கிறன். :lol:

இப்படியான விடயங்கள் உங்களுக்குத் தான் நல்லாத் தெரியும். நான் இந்த தனி நபர் குடும்ப விடயங்களைக் பற்றிக் கணக்கில் எடுப்பதில்லை. அது சரி மகேந்திரன் மீது யார் குற்றம் சுமத்தியது?  அதன் பின்னணியில் எதாவது  உளவு அமைப்பு இருந்ததா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஒரு தனி நபரின் குடும்பச் சண்டைக்கும் தமிழத் தேசியத்திற்கும் என்ன தொடர்பு?

இப்படியான விடயங்கள் உங்களுக்குத் தான் நல்லாத் தெரியும். நான் இந்த தனி நபர் குடும்ப விடயங்களைக் பற்றிக் கணக்கில் எடுப்பதில்லை. அது சரி மகேந்திரன் மீது யார் குற்றம் சுமத்தியது?  அதன் பின்னணியில் எதாவது  உளவு அமைப்பு இருந்ததா?

அதுதான் சொல்லிட்டனே உங்களிற்கு ஞாபக மறதி எண்டு என்னுடைய பழைய பதிவுகளில் அது உள்ளது இலங்கையரசின்  அன்றைய  சென்னை தூதுவர் அம்சாவினால்  நடத்தப்பட்ட நாடகம். அதனை அப்பவே வெளி கொண்டந்திட்டம்.நன்றி வணக்கம்

 இல்லை அந்தப் பெண்ணும் ஒரு மலையக ஈழத்தவர் ஆனால் இந்தியர் என்று பொய் சொல்கிறார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். இவர் பின்னாலும் ஹம்சா போல் ஒருவர் இருக்கலாம் தானே? அதனால் தான் கேட்டேன், இதன் பின்னணியிலும் உளவு அமைப்புக்கள் இருக்கின்றனவா என்று.

மேலும் இதற்கும் தமிழத் தேசியத்திற்கும் என்ன சம்பந்தம் என்னும் கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே?

இங்கு தமிழ் தேசியம் என்பது தன்னை காப்பாற்ற  அவ்வளவுதான். அதோடை வங்கி இலக்கம் வந்தவரை லாபம்.சுபம். நாங்க  ரீ குடிச்சாலும்  தீயா  வேலை செய்வம் :lol: :lol:

Edited by sathiri

இதே போல் தான் மகேந்திரன் மீதும் குற்றச்சாட்டு ஒரு பெண்ணை வைத்து முன் வைக்கப்பட்டது.அப்போது அவரும் தீவிரமாக போராட முயன்றார். சீமான் மீதும் இவ்வாறான ஒரு பிரச்சாரம் ஒரு நடிகையை வைத்து துவங்கி இடையில் காணாமல் போனது. அதெப்படி இப்படி போராட்டங்கள் நடக்கும் தறுவாயில் தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வெளியே வருகின்றன?

இதன் பின்னணி என்ன என்பது நாளடைவிலேயே தெரிய வரும்.

இந்த வீடியோ சாத்திரி அண்ணாவின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். காரணம் தியாகு ஐயா போராட்டம் ஆரம்பித்த பின்னர் இவ்வீடியோ 3 oct 2013 அன்று  youtube இல் ஏற்றப்பட்டுள்ளது. 5 oct 2013 சாத்திரி அண்ணா கட்டுரை எழுதியுள்ளார். (இரு நாட்களுக்குள் இவர் கைக்கு வீடியோ வந்துள்ளது.)

அந்த பெண் கூட இவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு அவ்வாறு சொல்ல வைக்கப்பட்டும் இருக்கலாம்.

போராட்டத்தை குழப்புவதே இவர்களின் நோக்கம்.

Edited by துளசி

தியாகுவின்  6 நாள் உண்ணாவிரத போராட்டத்தை குழப்பவே  தீவிரமாக  செயல்படும்  இவர்கள் , புலிகளுக்கு  எவ்வளவு  எடஞ்சல்களை  கொடுத்து  இருப்பார்கள்!! :o

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் அனியாயத்திற்கு அப்பாவியா இருக்கிறீங்களே  ம்....... :lol: :lol:

அதுதான் நேசக்கரத்தை நீடுழி வாழ்க என்று வா பாடிநீர்களோ???
 
வாழ்க ! வாழ்கவே !
நீடுழி வாழ்கவே!

சந்தடி சாக்கிலே .............
எங்கட பெயரையும் நாங்கள் காப்பாத்தி ஆகணும் !

சாத்திரி,

நீங்கள் எழுதியதில் உள்ள உண்மை, பொய் எனக்குத்தெரியாது. அண்மைய உலகநடப்பு, அரசியல் செய்திகளையும் பார்க்க அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், உங்கள் பதிவின் அடிப்படையில் சில விடயங்களை நோக்கியபோது இவ்வாறு சொல்லத்தோன்றுகின்றது:

கவிஞர் தாமரை அவர்களின் உள்வீட்டுப்பிரச்சனைகளை தெருவுக்கு இழுத்து அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

அடுத்ததாக, உள்வீட்டுப்பிரச்சனைகளையும், சமூகநடத்தைகளையும் ஒப்பிட்டு காரண, காரியங்கள் கற்பித்தால் அதிலிருந்து ஒருவருமே தப்பமுடியாது. இங்கு யோக்கியவான்கள், இராமன் என்று எவரும் கிடையாது. தனது உடம்பின் அழுக்கை கழுவித்துடைத்தபின்னரே சமூக விடயங்களினுள் கால்பதிக்கலாம் என்றால் பல்வேறு சமூக பொறுப்புக்களில் உள்ள 95%ஆனோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டியதுதான். அப்படிப்பார்த்தால் உலகில் இதுவரை காலமும் நடைபெற்ற புரட்சிகளும் சாத்தியமில்லை.

இங்கு நான் தியாகு என்பவருக்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் தர்க்கரீதியாகவும், யதார்த்தரீதியாகவும் உங்கள் பதிவு தவறானதாகத்தெரிகின்றது. கவிஞர் தாமரை அவர்களின் மரியாதைக்குத்தான் உங்கள் இந்தப்பதிவு இழுக்கு.

Edited by கரும்பு

இனி எவரும் இந்தபக்கம் வரமாட்டினம் அண்ணே :D

///எங்கள் அன்பு தகப்பன் குமரேசன் (முத்துகுமாரின் தந்தை) அவர்களின் குடும்ப நண்பர் "ஊமை அழகிரி" இன்று என்னோடு பேசினார்! நான் வேதனையோடு போட்ட பதிவினால் சிலர் ,இதற்காக தான் இனத்திற்காக என்று யோசிக்காமல்-தன் சொந்த குடும்பத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று தவறாக கருத்து தெரிவிக்கிறார்களாம்!

அதனால் எனது பதிவினை நீக்க சொல்லி கேட்டு கொண்டதன் பேரில்,நேற்று நான் போட்ட பதிவினை நீக்கி விட்டேன்! காரணம் அப்பா குமரேசன் தனது சொந்த தொழிலை விரும்பி செய்வதாகவும்,மற்றவர்கள் உதவி செய்ய முன் வந்தால் "என் மகன் எந்த மக்களுக்காக உயிரை விட்டானோ,அவர்களுக்கு இந்த உதவியை செய்யுங்கள் என சொல்லி மறுத்து விடுகிறாராம்!"

இது போன்ற ஒர் நல்ல மனிதருக்கு பிறந்ததால் தான் என் தம்பி தன் குடும்பம் பற்றி யோசிக்காமல்- தன் இனம் பற்றி யோசித்து -நேசித்து தியாக தீபமானான்!

தயவுசெய்து யாரும் இரக்கப்படுகிறேன் என சொல்லி என் முத்துகுமரனின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்!/////

Senkodi Vijiஎன்ற தோழி மேற்கண்ட நிலைச்செய்தியைப் பதிவிட்டிருந்தார்.

முத்துக்குமாரின் தந்தையின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் தலைவணங்குகிறோம்.

முத்துக்குமாருடைய தந்தையின்ஒப்புதல் மற்றும் நேரடித் தொடர்புக்காகக் காத்திருக்கிறோம். அவர் தன் மகனின் பெயரால் கிடைக்கும் எந்த உதவியையும் மறுத்துவருவதாக அறிகிறோம். "அப்படி நீங்கள் உதவி செய்வதாயின் எனது மகன் யாருக்காக உயிர்விட்டானோ அவர்களுக்குச் செய்யுங்கள்"என்று அவர் கூறிவருவதாகவும் அறிந்தோம். ஆகவே, அவர் விரும்பாதவிடத்து இந்த முயற்சி அப்படியே கைவிடப்படும்.

அவரது ஒப்புதல் கிடைத்தபின் மீண்டும் உரையாடலாம் நண்பர்களே... தாங்களாக முன்வந்து இவ்விடயத்தில் தம் நல்லிதயத்தை வெளிப்படுத்திய நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் நன்றி...

பேயை சாட்டி பூதம் ஒரு திசையில் காசு சேர்த்து கொண்டிருக்க...............
இதையேன் இப்ப பப்ளிக் ஆக்குகிறீர்கள்?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.