Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி தமிழில் பதவி ஏற்பார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில்.. சிங்கள ஆமிக்காரனை கலியாணம் முடிச்ச தமிழ் பெட்டையாள.. முல்லைத்தீவு முழுக்க வாழ்வது சிங்களவர்கள் என்ற நிறுவல் போல உள்ளது உங்கள் கதை..!

 

விஜயன் வரலாறே சந்தேகத்திற்குரியது. சிங்களவர்களின் பாதி ஜீன்கள்.. சிங்கத்திற்குரியதாக இருக்க வேண்டும். அப்படியாவா இருக்குது............???????????????????!

 

மேலும்.. இன்று எடுத்துப் பார்த்தால் வடக்குக் கிழக்கில் கூட.. தமிழர்களின் பரம்பலைக் காணவில்லை. ஆனால் தமிழர்களின் வரலாறு.. மலையகத்தில் இருந்து.. காங்கேசந்துறை வரை உள்ளது. பொலநறுவையில் கண்டெடுக்கப்பட்ட சிவாலயச் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அதேபோல் மலையகத்தில் காணப்பட்ட சிவ வழிபாட்டுச் சின்னங்கள் சிங்கள அடையாளங்களாக்கப்பட்டுள்ளன.

 

சிவனொலிபாத மலையே சிறீபாத என்று ஆகி.. இப்ப புத்த பாதயவா ஆகி நிற்குது. இதில உருவமே இல்லாத அல்லா வேற அதில காலை வைச்சிட்டுப் போயிருக்காராமில்ல..!

 

இப்படி தமிழர்களின் வரலாறும்.. வரலாற்றுச் சின்னங்களும் பன்னெடுங்காலம் பல்வேறு படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டு தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டதன் விளைவு.. தான் இன்றைய வடக்குக் கிழக்கு.

 

அதிலும் சம்பந்தன்.. சுமந்திரன்.. விக்னேஸ்வரன்.. கிழக்கை விட்டு வடக்கோடு நிற்கிறார்கள். வடக்குக் கிழக்கு தாயகம் கூட பிரபாகரனோட போட்டுது. இப்ப.. வடக்கு தமிழரின் தாயகம் என்று சுங்கிப் போச்சுது. இன்னும் ஒரு 10 வருடம் கழிய வந்து சொல்லுவியள்.. வடக்கு தானே தமிழர் தாயகம் என்றீங்கள். அங்கும் சிங்களவர்கள் இருக்காங்களே என்று.

 

இப்படித்தான் எங்கள் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நாங்கள் மீட்கப் போராடிக் கொண்டிருந்தோம். போராடுகின்றோம்..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply

இந்த உதயனும் இப்ப புலத்திலையோ அடிக்கினம்?

1375867_10151893439736049_807093689_n.jp


சுண்டல் இலங்கை அரசு பும்பெயர் தமிழருடன் பேச்சுக்கு வராது என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?
உங்களுடன் பேசத்தான் வேண்டும் எண்டு யார் வற்புறுத்துவார்கள்?

Australian federal setup ஒரு நல்ல மாதிரிதான்.

தமிழரோ இல்லை சிங்களரோ ஆதிக்குடிகள் என்ற கேள்விக்கு திருத்தமான பதில் இல்லை. சிங்கலவர்கள் தாம் குடியேறிகல் ஆனால் எமகு முதல் வந்தவர்கள் என்கிறார்கள். தமிழ் நாட்டிற்கு பக்கதில் இருந்த்ஹதால் நாம் தான் முதலில் வந்தோம் என்பதும் ஏற்புடையது இல்லை. உதாரணம் நியூசிலாந்த்ஹும் அவுஸ்ரேலியாவும்.

நியூசிலாந்து பக்கம் இருந்தும் Australian Aboriginal மக்கள் அங்கு செல்லவில்லை. ஆங்கிலேயர் சென்றனர்.

விசயன் வந்து 2300 ஆண்டுகள். அந்த் காலத்தில் தமிழர் கடற்படைகொண்ட அரசுகளை காணவில்லை.
எனவே எமகு முதல் அவர்கள் வந்திருக்க சாத்தியம் உண்டு.

எது எப்படி இருப்பினும் இந்து 70% அவர்கள்! முழு அதிகாரமும் அவர்கள் கையில், இப்போ போய் நீங்க எல்லன் லாடா நாட்டுக்கு போங்க இது நம் தீவு என்று சொன்னால் ?

 

இலங்கைத் தமிழர் பூர்வீக வரலாறு என்று கலாநிதி இந்திரபாலா ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.அதை முதலில் வாசித்து விட்டு இலங்கைத் தீவின் தமிழர் வரலாறு பற்றிக் கருத்து எழுதவும். ஒரு விடயத்தை எழுதினால் முதலில் அது பற்றித் தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.
 


நெடுக்கு, நான் அவர்கள் அள்ளும் வரலாற் அரை எண்டு சொல்லவில்லை. ஆனால் நாம் அள்ளும் வரலாற்றுக்கும் ஆதாரமில்லை என்பதே உண்மை .

உதாரனதுக்கு, வியன் வந்த போது இங்கே ஏலவே தமிழர்கள் இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டால்.

1) குவேனி தமிழச்சி என்றால், விசயனுடன் பெண்கள் வரவில்லை என்பதால், விசயனினதும் சகாக்கலினதும் வாரிசுகள் பாதித்தமிழரே. ஆக இது தமிழர் நிலம் எண்டாலும் கூட, தாய்வழியாக இந்த தீவு அவர்களுக்கும் உரியதே?
2) விசயனுக்கு முன்பே தமிழர் பை பெருகி வாழ்ந்த நாட்டில், எப்படி 400 பேருடன் வந்து ஒருவன் ஒரு இனத்தை உருவாக்கி அது நாட்டின் வடகிழக்கு தவிர் பிரதேசன்ஹ்களுக்கும்பரவி 70% ஆனது? காலம் காலமாய் நம இருந்த நிலத்தில், 30 மைல் தூரத்தில் சேர சோழ பாண்டிய பல்லவர் இருந்தும் நாம் எப்படி வடக்கு கிழக்கில் 30% க்குள் மட்டுண்டோம்.

சிங்கல்ஃவர் அள்ளும் வரலாறும்ம்பொய். நீங்கள் சொல்லும் வரலாற்றுக்கு ஆஆரமில்லை. உண்மை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது, யாருக்கும் தெரியாமல்.

 

உமக்கு வரலாறு தெரியவில்லை என்றால் யாருக்கும் தெரியவில்லை என்று எழுத வேண்டாம். பல கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பல புத்தகங்கள் இருக்கின்றன. தேடிப் படித்து விட்டு எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் ஐயா, நீங்கள் என்னத்தையோ நிறுவிறதுக்கு நல்லாக் கஷ்டப் படுகிறியள். அவுஸ்திரேலியாவுக்கும், நியுசிலாந்துக்கும் இடையேயுள்ள ஆகக் குறைந்த தூரம் 1 6 ௦ ௦ கிலோ மீட்டர், விஜயனின் கதையே கட்டுக்கதை! அதுக்குள்ளே அதை ஆதாரமாகக் காட்டும் நீங்கள் சிங்கத்துக்குப் பிறந்த இனம் சிங்கள இனம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?

 

புத்தனின் காலத்தில், சிங்களமும், இந்தியாவின் சேர்ந்திருக்கும் சாத்தியங்களே அதிகம்! புத்தர் கூட வட இந்தியாவிலிருந்து, தென்னிந்தியாவுக்கு நடந்து தான் வந்தார். ஏன், நைனாதீவுக்குக் கூட அவர் நடந்து தான் வந்திருக்கக் கூடும்! அதாவது புத்தன் பிறந்த முன்னூறு வருசத்துக்குப் பிறகு, விஜயன் கப்பல் கட்டி வந்திருக்கிறான் என்றால், புத்தன் தமிழ்நாட்டின் ஊடாக வந்திருக்கிறான் என்றால்,புத்தன் கப்பலை, ஒரிஸ்ஸாவிலிருந்து , தமிழ்நாட்டுக்குத் தலையில் வைத்தா கொண்டு வந்தார்? ஆனால், அவர் வெறும் பிச்சைப்பாத்திரத்துடன்  தான் வந்தார் என்று தான் சரித்திரம் சொல்லுகின்றது!

 

நீங்கள் என்ன கோதாரியையும் எழுதுங்கோ! அது உங்கள் எழுத்துச் சுதந்திரம்! ஆனால், தமிழன் வரலாற்றை மாத்தி எழுதிற வேலையை மட்டும் விட்டுடுங்கோ! :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரபாலாவின் புத்தகத்தையும் ஏனைய புத்தகங்களையும் வாசித்தபடியால்தான் சொல்கிறேன். இலன்கையின் பூர்வீக குடிகள் தமிழர்தான் அல்லது சிங்களவர்தான் என்று நிறுவுவதர்க்கு எந்த ஆதாரமுமில்லை. இதை இந்த்ஹிரபாலவே பலமுறை தெளிவாகம்கூறியுள்ளார். யாழ்ப்பாண வைபவமாலை, மட்டகளப்பு மான்மியம், ஞானப்பிரகசரின் a critical history of Jaffna, ராசநாயகம் முதலியாரின் ancient history of Jaffna மற்ரும் வாழும் புரொபெசர் பத்மநாத்னின் புத்தகம் மற்றும் அவருடைய உரைகள்,கலந்த்ஹுரிஅயாடல் இத்தனைக்கும் பின் தான் சொல்கிறேன், இலன்கையில் இன்ன இனம்தான் இருந்த்ஹது எண்டு இன்ருவரை உள்ள தரவுகளை வைத்து யாராலுமெதுவும் சொல்ல முடியாது.

ஆனால் வரலாறு எப்படியாயும் இருந்த்ஹிருக்கட்டும். இண்டு களநிலமை 70 க்கு 16 (14 முஸ்லீம்கள்) அதுவும் மலியக சொந்த்ஹங்களையும் சேர்த்து. முழு அதிகாரமும் அவர்கள் கையில். இப்போ என்ன செய்யல்லம் இதுதான் கேள்வி.

புங்கை மகாவம்சத்தின் பெரும்பகுதிகளும் புத்தர் இலங்கைக்கு வந்த்ஹதும் கடுக்கதையே, அதில் சந்த்ஹேகமில்லை. நான் முத்லிலே சொல்லிவிட்டே அவர்களின் வரலாறில் பெரும் ஓடைகள் இருக்கு. அதுக்காக நாம் சொல்லுவது உண்மை என்ராகாது, ஆதாரங்கள் இல்லாமல்.

ஆகவே வரலாற்றின் அடிப்படையில் அல்ல வாழ்வியல் அடிப்படையிலெயே ஒரு இனத்திற்கும் நிலத்திற்குமான உரிமை கோரப்படுகிறது என்னும் போது , விஜயனது வரலாறு மட்டும் எப்படி ஒரு உரிமைக் கோரிக்கையாக முடியும்? மீண்டும் முன்னுக்குப் பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி இந்திரபாலாவின் ஆய்வு, பேராசிரியர் பரணவிதானவின் மேற்பார்வையில் எழுதப்பட்டது! புத்த சின்னங்களை, மண்ணுள் புதைத்து விட்டுப் பின்னர் திரும்பிக் கிண்டியெடுத்தவர்  இந்தப் பேராசிரியர் பரணவிதான என்பது நீங்கள் அறியாததல்ல! பேராசிரியர் இந்திர பாலா, மிகவும் தெளிவாக, யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் அகழ்ந்தெடுக்கப் பட்ட புத்தர் சிலைகளுக்கும், தென்னிலைங்கையின் புத்த சிலைகளுக்குமிடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்! பின்னர் தனது ஆய்வுக்கட்டுரையின் 'ஆழத்தை' உணர்ந்த பேராசிரியர், ஆய்விலிருந்து முற்றாகத் தன்னை ஒதுக்கிக் கொண்டதையும் நீங்கள் அறியாமலிருக்க மாட்டீர்கள்!

இந்திரபாலவின் புத்தகத்தின் படி, தமிழ் சிங்கள என்னும் இன அடையாளங்கள் ஏற்பட முன்னரே பழங்குடி இன மக்கள் அங்கே வசித்து வந்தனர். சிங்கள இன அடையாளங்கள் நாளடைவிலேயே ஏற்பட்டன. சிங்கள மொழி என்பது ஏற்பட்ட காலத்திற்கு முன்னரே தமிழ் பிராகிரத மொழி சிறிலங்கா எங்கனமும் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆகவே சிங்கள மக்களுக்கு எவ்வாறு சிறிலங்கா தாயகமோ அவ்வாறே தமீழீழமும் தமிழருக்கு இலங்கைத் தீவில் தாயகம். தமது முன்னுரையிலேயே இந்திரபால எவ்வாறு சிங்கள இனவாதிகளால் வரலாறு திரிக்கப்பட்டு உள்ளது என்பதைத் தெளிவாகவே எழுதி உள்ளார்.

 

இவ்வளவையும் வாசித்தும் இன அடையாளத்தின் தோற்றம் பற்றிய புரிதல் இல்லை என்றால் வாசிப்பில் பிழை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயன் கதை உண்மை என்றோ அல்லது அதன் பால் அமைந்த சிங்கள மேலாதிக்க எண்ணம் சரி என்றோ நான் வாதாடவில்லை. இலங்கை வரலாறு பலவிதமாக புனையப்பட்டது என்பதும், அது சிங்கள மேலாண்மைக்கு முண்டு கொடுக்கு காலத்துக்கு காலம் மாற்றியமைகப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் நான் சொல்லுவது அவர்கள் பொய்சொகிறார்கள் என்பதற்க்காக நாம் சொல்லுவது உண்மை என்ராகாது.

புங்கை, பர் நவிதாரணவின் மேளான்மைவாதமும் வரலாற்றுத்திருபும் அறிந்த்ஹதே. இந்த்ஹிரபாலவை நான் சொன்னதுக்கு காரணம் அவர் உட்பட யாரும் இலங்கையின் பூர்வீகர் தமிழர்தான் எனறு ஒரு போதும் அஒல்லவில்லை என்பதை நிறுவவே.

இன்னொரு விடயம். விஜயன் கதையை ஏற்பது உண்மையில் தமிழரான எமகு நல்லதே. விஜயனில் இருந்து வராவிட்டால் அவர்கள் எங்கிருந்து வந்த்ஹு இப்படி பல்கி பெருகினர்? அப்படியாயின் அவர்கள் தான் ஆதிக்குடியா? இது விசயன் கதைவிட மோசம்மன் கதை :)

திசமாராகம தமிழ் பிராமி பற்றி தெரிந்த்ஹிருப்பீர்கள், இது இதுவரை சொல்லப்பட்ட கதைக்கு நேர் எதிரில் போகிரது, உங்கள் version ஒof history க்கு வலுவும் சேர்க்கிரது. ஆனால் அதை அப்படியே அமுக்கி விட்டார்கள்.

இது எல்லாம் காட்டுவது ஒன்றைத்தான். வரலாறு எப்படியும் இருந்த்ஹிருக்கட்டும், நாம் தான் ஆதிக்குடியாயும் இருக்கட்டும், இந்து நிலைமை 70 க்கு 14. இப்போ என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிராமி புழக்கத்தில் இருந்த்ஹது என்பதால் அது தமிழ் இடம் எண்டு ஆகாது. இஸ்ரேலிலும், இங்கிலாந்திலும் ஆப்கானிலும் ஏன் தமிழ் நாட்டிலும் ரோம சுவடுகள் இருந்தது ஆனால் அவை ரோம நிலங்கள் இல்லை.

அராஸ் மொழியாக தமிழ் இருந்த்ஹிருக்கல்லம். லத்தீன் போல மேம்பட்ட மொழியாக. ஆனால் பெரும்பாலான குடிகள் நீசபாசை எண் கருதப்பட்ட சிங்களத்தை அல்லது அதன் முதல் வடிவத்தை பேணி இருக்கலாம்.

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நெடுக்கு. ரஸ்யா, அமேரிக்கா, ஈயூ, அவுஸ்ரேலியா என்று இனவொழிப்புக்கு ஆயுதமும் கொடுத்து, கப்பல்கலையும் காட்டிக்கொடுத்த நாடுகள் எல்லாம் திடீரென மனச்சாட்சி நெஞ்சை சுட்டு, எந்த ஐநா கண்ணை மூடிக்கொண்டு இருந்த்ஹதோ அதே ஐநாவை கொண்டு விசாரணை நடத்தி, தனி நாடே பெற்றுத்தரும் எனறு நீங்கள் நம்பும்போது.

யுத்தத்தின் முன் தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைபடுத்த சொல்லி இந்தியா வற்புறுத்தும் என்று நாம் எதிர்பார்ப்பதில் என்ன பிழை?

 

"எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நெடுக்கு. ரஸ்யா, அமேரிக்கா, ஈயூ, அவுஸ்ரேலியா என்று இனவொழிப்புக்கு ஆயுதமும் கொடுத்து, கப்பல்கலையும் காட்டிக்கொடுத்த நாடுகள் எல்லாம் திடீரென மனச்சாட்சி நெஞ்சை சுட்டு,"

 

இப்படி நாடுகள் என்று வரையறுக்கும் போது அரசியல் ஆராச்சி ஸ்தம்பிதமாகிறது. உண்மையில் நாடுகள் அந்த இடங்களின் தரையோ வானமோ அல்ல. அங்கு வாழும் மக்களும்; மாறி மாறி வரும் அரசுகளுமே.

 

எப்படி அமெரிக்க மாற்றத்தை சூரிய்னை முகில் மூடிய மாதிரியோ, அல்லது விலகினது மாதிரியோ இயற்கையாக எடுத்து விவாதிக்கும் ஒருவர் இலங்கை மாறி காணி பொலிஸ் அதிகாரம் தரும் என்று எதிர்பார்க்கலாம். மக்களின் ந்டத்தைகளை கண்டு கொள்ள மறுப்பவர்களால் ஜனநாயக அரசையலில் ஏற்படும் மாற்றங்களை விளங்குவது கடினம். இது எல்லாம் உண்மையான அரசியல் ஆராய்வுகள் அல்ல.  

 

அண்மையில் பிளேக் காங்கிரசில் கூறிய வசனம். "இலங்கை நம்மை ஏமாற்றிவிட்டது" என்பது. ஆனால் மன்மோகன் சிங் இரண்டுவருடங்களுக்கு முன்னர் சொன்ன வசனம் "நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்"  என்றது.  கடந்த ஐ.நா கூட்ட நேரம் சு.சாமியை இலங்கைக்கு உதவிக்கு அனுப்பினார்கள்.  அது போக மன்மோகன் சிங் ஐ.நா பிரேரணைகள் முடிய மகிந்தாவுக்கு மன்னிப்புக்கடிதம் அனுப்பினார். போரின் பின்னர் கிருஸ்ணா கூறிய வசனம் இலங்கை கொடுப்பதை மட்டும் தான் தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது. மேலும் 2012 ல் மாட்டுப்பொங்கலுக்கு வந்த கிருஸ்ணா கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குதான் போய் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றது.  (இப்படியான ஜில்மால்களை அமேரிக்கா ஆடவில்லை.) அதற்கு முதல் 2011 டிசெம்பரில் இலங்கை சென்ற பிளேக் சொன்னது பேச்சுவார்த்தை நடந்து அதில் ஏற்கப்பட்ட விடையங்களை தெரிவுகுழுவில் விவாதித்தால் போதும் என்றது.  இந்தியா தேர்தலை நடத்துவிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்களால் தள்ளப்பட்டார்கள்.  இது ஐ.நா.பிரேர்ணையை எதிர்த்த மாணவர்களால் நடந்து முடிந்த அலுவல்.  இரண்டு நாட்டையும் ஒத்துப்பார்ப்பவர்களுக்கு விளங்கும்  அமெரிக்காவில் போரின் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கு, அதனால் அமெரிக்காவில் கொள்கை மாற்றம் ஏற்பட்டிருக்கு.  இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. அதனால் கொள்கையில் மாற்றம் இல்லை என்பது. இதில் தேர்தல் வருவத்தால் சில இக்கட்டுக்களை இந்தியா சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்காக இந்தியா கவனமாக செயல்ப் படுகிறது. அண்மையில் சுதர்சன நாச்சியப்பன் ஒவ்வொருநாளும் சென்னையில் ஒரு பேச்சு பேசியது இந்தியாவின் தடுமாற்றங்களைத்தான் காட்டுகிறது. எனவே இந்தியாவை முழுவதாக நம்ப முடியாது. 

 

சல்மான் குத்ர்திஷ் முன்னால் சத்தியபிரமாணம் எடுப்பது நல்லதல்ல. (நான் கூட்டமைப்பு அதை தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. கூட்டமைப்பு இந்திய வாக்குறுதியை வைத்துத்தான் மக்களை வெளியே வந்து வாக்களிக்க வைத்தது.) இதே மாதிரியேதான் தலைவரை மிரட்டி திம்பு உடன்படிக்கை எழுத முயன்றது இந்தியா. இந்திய பலவீனத்தை வைத்துத்தான் இன்று மூன்று சிங்கள மந்திரிகள் தாம் எதையும் கொடுக்க வேண்டியத்தில்லை என்றும், அதனால் தமக்கு எந்த பிரச்சனையும் எழாது என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்கள். 

ஆனாலும் இந்த கருத்துக்கு பின்னர் கொடுத்த தங்களின் சில விளங்கங்கள் யாதர்த்தமானவையாகவும் படுகின்றது.

சுண்டல் இலங்கை அரசு பும்பெயர் தமிழருடன் பேச்சுக்கு வராது என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

உங்களுடன் பேசத்தான் வேண்டும் எண்டு யார் வற்புறுத்துவார்கள்?

Australian federal setup ஒரு நல்ல மாதிரிதான்.

தமிழரோ இல்லை சிங்களரோ ஆதிக்குடிகள் என்ற கேள்விக்கு திருத்தமான பதில் இல்லை. சிங்கலவர்கள் தாம் குடியேறிகல் ஆனால் எமகு முதல் வந்தவர்கள் என்கிறார்கள். தமிழ் நாட்டிற்கு பக்கதில் இருந்த்ஹதால் நாம் தான் முதலில் வந்தோம் என்பதும் ஏற்புடையது இல்லை. உதாரணம் நியூசிலாந்த்ஹும் அவுஸ்ரேலியாவும்.

 

இராவணின் கதையில் காலத்தை சொல்ல முடியாது என்றாலும், விஜயன் இலங்கைகு வந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு முன்னர் வடக்கில் இந்த கதை இருந்திருக்கிறது.

நியூசிலாந்து பக்கம் இருந்தும் Australian Aboriginal மக்கள் அங்கு செல்லவில்லை. ஆங்கிலேயர் சென்றனர்.

 

அது முழுமையான ஆராச்சி அல்ல. தமிழர் கப்பல்களை கிரேக்காலத்தில் பயன்ப்சுத்தியிருக்கிறார்கள். சிந்துவெளியார் எகிப்த்துக்கு கப்பல் விட்டிருக்கிறார்கள். அது அவுஸ்திரேலிய பழங்குடிகளிடம் இருந்தா தெரியாது. மற்றது மனித புதைகளை நியுசிலாந்து கண்டு பிடிகாதவரைக்கும் தான் அங்கு பழங்குடிகள் போய் அழியவில்லை என்பது நிரூபிக்கப்படாதது.. மேலும் இது வெல்லாம் தமிழரின் பரம்பலே என்பது வெளிவரும் போது இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு போனவர்கள் இந்தியவிலிருந்து இலங்கைக்கு வரவில்லை என்பது வலிந்த விளக்கம். 

விசயன் வந்து 2300 ஆண்டுகள். அந்த் காலத்தில் தமிழர் கடற்படைகொண்ட அரசுகளை காணவில்லை.

எனவே எமகு முதல் அவர்கள் வந்திருக்க சாத்தியம் உண்டு.

எது எப்படி இருப்பினும் இந்து 70% அவர்கள்! முழு அதிகாரமும் அவர்கள் கையில், இப்போ போய் நீங்க எல்லன் லாடா நாட்டுக்கு போங்க இது நம் தீவு என்று சொன்னால் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை - இராவணின் கதை உண்மையே ஆகிலும் இராவணன் தமிழன் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. வால்மீகி அவனை இந்து என்கிறார் ஆனால் அவன் தமிழன் என்று சொல்லவில்லை. மகிந்த தேரருக்கு முதல் சிங்களவரும் இந்த்ஹுக்களே.

இலங்கை அகண்ட தமிழகத்தின் தொடர்சியே - இந்த கருத்து லாஜிக்கலாக இருக்கிறது. ஆனால் நெடுக்கு சொல்வதுபோல பூகம்பம் சுனாமி வந்து இலங்கை பிரிந்து எனும் கருத்துக்கு இதுவரை ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஒருவேளை last ice age முடிவில் கடல் மட்டம் உயரும் போது இலங்கை பிரிந்த்ஹிருக்கலாம். அப்படியாயின் அது 10,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கும். எப்படி நீட்டினாலும் தமிழினத்தின் வரலாற்றை 5000 வருடங்களுக்கு மேல் நீட்ட சாத்தியமில்லை.

யுனேஸ்கோ 90 களின் இறுதியில் நிகழித்ய ஒரு டிஎன் ஏ ஆய்வில் மனித இனம் ஆபிரிக்க ( சோமாலியா) வில் இருந்து 4 கட்டங்களாக உலகம் முழுவதும் பரவியது என்றும் அதில் ஒரு வழி தரைவழியாக ஆபிரிக்கா-மத்யகிழக்கு-சிந்துவெளி-மதுரை-பர்மா-இந்த்ஹோனேசியா வழியாக அவுஸ்ரேலிய பங்குடிகள் வரை சென்றது என்று கூறுகிறது. ஒரு குறிபிட்ட ஜீனின் பரம்ப்லை வைத்தே இது கணிக்கப்பட்டது. ஆக நாம் ஒரு கூட்ட் த்தை சேர்ந்த்ஹிருந்த்ஹாலும் கட்டாயம் ஒரு இனத்தை சேர்ந்த்ஹவர்களாக இருக்க வேண்டியதில்லை.

கிரேக்க தொடர்பு - கிரேக்கம் அதன் காலமும் கிமு 500 இல் இருந்து கிபி 800 வரையானது. இதில் கடைப்பகுதியிலே அதாவது தமிழ் சாம்ராஜ்ஜியங்கள் முதலில் எழுந்த கி.பி 600 தொட்டு 1300 காலத்தில்தான் கிரேக்கத்துடன் தமிழகம் தொடர்பு படுகிறது. ஆனால் கிமு 200 லேயே எல்லாளன் ஆட்சி நடக்கிறது. ஆக கிரேக்கத்து போக முதல் தமிழர் இலங்கைக்கு வந்த்ஹு விட்டனர்.ஆனால் கிமு 530 விஜயன் வந்த்ஹதாக கூறப்படும் காலத்தில், தமிழகம் இலங்கையுடன் எப்படி தொடர்பும்பட்டிருந்த்ஹது என்பதற்கு பெரிதாகமாதாரம்மில்லை.

எகிப்து தொடர்பு பர்ரி நான் அறிந்த்ஹுருக்கவில்லை. இருப்பினும் சிந்த்ஹுவெளியார் கடல்போகும் நாகரிகம் இல்லை என்பது எண் ஊகம். ஆகவே எகிப்துட்ந்னான அவர்களின் தொடர்பு தரைமார்கமாயிருந்த்ஹிருக்கலாம்.

விஜயன் கி.மு 530ல் வந்தான் என்று எந்த ஆதரமும் இல்லை. அது எழுதப்பட்டது இந்தியாவில் இருந்து வந்த பிக்குகளால். அப்போது இலங்கையில் சிங்கள்வரிடம் கதைகள் எழுததக்க மொழி இருக்கவில்லை. புத்தர் இலங்கைக்கு வந்தாரா தெரியது. வங்காளக் குடிகள் வந்தார்கள் என்பதுதான் நடந்தது. புத்தம் பரவிய பின்னர்தான் வங்க்காள குடிகள் இலங்கை வந்திருக்க வேண்டும். சங்கமித்தாவால் இலங்கையை புத்தமாக மாற்றியிருந்திருக்க முடியாது.

 

நீங்களே தெரிந்துதான வைத்திருக்குகிறீர்கள் கறுப்பினம் பரம்பியதை பற்றித்தான் DNA ஆராச்சி என்று. ஆனால் அது அவுஸ்திரேலியாவுக்கு போன திராவிட குடிகளை பற்றிய விளக்கம் அல்ல.

 

இராமன் காலத்தில் தரை வழிப்பயணம்தான் இருந்தது. கப்பல் தமிழகத்தில் கூட இருந்திருந்தால் பாலம் கட்டும் கதை வந்திருக்காது. இராமனும் தரை வழிதான் பயணம் செய்தான் தமிழ் நாட்டை கடந்துதான் வந்தான். இதுதான் கடலை கடப்பதில் அந்தக்காலத்தில் தமிழருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதிருந்தபடியால் அவர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ள்ப்பட கூடியது. தெற்கில் கிறிஸ்துக்கு முன்னர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்த வங்காளக் குடிகள் இராமாயன காலத்தில் இருக்கவில்லை. அவர்களை பற்றிக் கதை பேசவில்லை. வால்மீகி கர்ணபரம்பரை கதையை எழுதியிருந்தாலும் பாவித்திருக்கும் பெயர்கள் பிற்கால பாழி தொடர்பில்லாத பெயர்கள். தமிழுடன் சேரும் பெயர்கள்.

 

இலங்கையில் இருக்கும் குடிகள் (பிரதானமாக) இரண்டு. ஒன்று வங்காளிகாள். மற்றயது தமிழர்கள். இலங்கையில் ஆரியர்கள் இல்லை. எனவே ஒருகட்டத்தில் வாழ்த மக்கள் வங்காளிகள் இல்லை என்றால் அவர்களை த்மிழர்கள் என்று நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அவர்கள் தமிழர்கள். 

 

பஞ்ச ஈஸ்வரங்களும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரானவை.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை DNA ஆய்வுப்படி 50000 ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்க விலிருத்து தமிழ்நாடு வழியாக அவுஸ்ரேலியா போனவர்களே அபொர்ஜினிகள். அதன் பின் குக் போகும் வரை அவர்கள் தனித்து விடப்பட்டு இருந்தனர். திராவிட, ஆரிய, தமிழ் சிங்கள பிரிவுகள் தோண்ரும் முன்பே இது நடந்து விட்டது.

ஆக அவர்களை திராவிடர்/ தமிழர் என்பதும் சோமாலியாவில் வசிப்பவர்களை தமிழர் என்பதும் ஒன்றே. இவர்கள் நாம் தமிழராக முன்பே நம்மை விட்டு பிரிந்தோர். அவர்களை தமிழர்/திராவிடர் என்பது சரியில்லை.

நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் யாரும் சொல்லவில்லை. எனக்கும் பதில் தெரியாது. கேள்வி இதுதான்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களாயின்,

இவ்வளவு அருகில் பல லட்சம் (அப்போது) தமிழர் இருக்க வளம் மிக்க இலங்கைக்கு ஏன் வரண்ட தமிழ்நாட்டில் இருந்து பெரும் மக்கள் பெயர்வு நடக்கவில்லை?

வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்திருந்தால், விஜயனோ இல்லை வேறுயாரோ வங்காள குடியேறிகள் ஒரு தமிழன் செறிந்துவாழும் மண்ணில் வந்து எப்படி அரசோச்சவும் நாடுமுழுவதும் பரவவும் முடிந்தது. அவர்கள் வங்காள சாம்ராஜியஹ்த்தில் இருந்து வந்து தமிழரை தோற்க்கடித்தார் என்பது நம்பக்கூடியது. ஆனால் அப்படி ஒரு கடல் செல்லும் வங்க பேரரசு இருந்த்ஹதாயோ அவர்கள் கடல் ஏறி நாடு பிடித்ததாயோ இந்திய வரலாற்றிலும் இல்லை. மாறாக தமிழர்தான் கிபி 300 இல் இருந்து 1300 வரை 1000 ஆண்டுகள் இந்த பிராந்த்ஹியத்தையே கட்டி ஆண்டார்கள். அப்படி தமிழர்கள் பலாமாயிருந்த கால்த்தில் எப்படி சிங்கள மன்னர்களால் தமிழரை நாட்டின் ஏனைய பகுதுகலின்றும் வடக்குகிழக்கு நோக்கி விரட்ட முடிந்த்தது. அவர்களால் எப்படி பேரினமாயும் எம்மை சிற்றினமாயும் ஆக்க முடிந்த்ஹது?

அனைத்திற்க்கும் மேலாக ஒரு வந்தேறு இனமே பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதி வைத்திருக்கும்ம்போது, வளம் மிக மொழியுடய மக்கள் ஏன் தாம் இலங்கை முழுமையை ஆண்டதையும் பின் வடகிழக்கு நோக்கி துரத்தப்பட்டதையும் பதிவு செய்யவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமில்லை தமிழ் இலக்கியங்களிலும் ஏன் இலங்கையின் தமிழரசு பர்ரி பெரிதாக எதுவுமில்லை?

அடடே சிங்கள தேசத்தில் தமிழில் சத்திய பிரமாணம்... சாதிச்சிட்டார் சிங்கம் விக்னேஸ்வரன்... தமிழர் பிரச்சினையை தீர்க்க சல்மான் குர்தீஸ் வருகிறார் எண்டது மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய் விடுகுது...

திங்கள் பதவியேற்பு செவ்வாய் சுயாட்ச்சி...

நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் யாரும் சொல்லவில்லை. எனக்கும் பதில் தெரியாது. கேள்வி இதுதான்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களாயின்,

இவ்வளவு அருகில் பல லட்சம் (அப்போது) தமிழர் இருக்க வளம் மிக்க இலங்கைக்கு ஏன் வரண்ட தமிழ்நாட்டில் இருந்து பெரும் மக்கள் பெயர்வு நடக்கவில்லை?

வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்திருந்தால், விஜயனோ இல்லை வேறுயாரோ வங்காள குடியேறிகள் ஒரு தமிழன் செறிந்துவாழும் மண்ணில் வந்து எப்படி அரசோச்சவும் நாடுமுழுவதும் பரவவும் முடிந்தது. அவர்கள் வங்காள சாம்ராஜியஹ்த்தில் இருந்து வந்து தமிழரை தோற்க்கடித்தார் என்பது நம்பக்கூடியது. ஆனால் அப்படி ஒரு கடல் செல்லும் வங்க பேரரசு இருந்த்ஹதாயோ அவர்கள் கடல் ஏறி நாடு பிடித்ததாயோ இந்திய வரலாற்றிலும் இல்லை. மாறாக தமிழர்தான் கிபி 300 இல் இருந்து 1300 வரை 1000 ஆண்டுகள் இந்த பிராந்த்ஹியத்தையே கட்டி ஆண்டார்கள். அப்படி தமிழர்கள் பலாமாயிருந்த கால்த்தில் எப்படி சிங்கள மன்னர்களால் தமிழரை நாட்டின் ஏனைய பகுதுகலின்றும் வடக்குகிழக்கு நோக்கி விரட்ட முடிந்த்தது. அவர்களால் எப்படி பேரினமாயும் எம்மை சிற்றினமாயும் ஆக்க முடிந்த்ஹது?

கண்டியின் கடைசி மன்னன் கிருஸ்னதேவராயன் தமிழில் தான் கையெழுத்து போட்டான்... அவனை காக்க போய் தான் பண்டாரகவன்னியன் நாட்டை இழந்தான்...

எல்லாளனை அனுராதபுரத்தில் வீழ்த்திய பின்னர் தமிழரின் அடையாளங்கள் இலங்கையில் திட்டமிட்டு அளிக்கப்பட்டன. தமிழ் பெயர்கள் எல்லாம் சிங்களத்தில் மாற்றம் அடைந்தன... இல்லை அது சிங்களம் எண்று நிறுவ பட்டன...

உதாரணத்துக்கு சிறீமாவோ பண்டாரநாயக்கா எண்ட பெயர் பண்டார நாயகம் எனும் தமிழ் பாண்டிய வம்ச பெயர்...

வரலாற்றிலை எல்லாம் இருக்கு படிக்க தெரியாமல் உளறாதீர்...

அனைத்திற்க்கும் மேலாக ஒரு வந்தேறு இனமே பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதி வைத்திருக்கும்ம்போது, வளம் மிக மொழியுடய மக்கள் ஏன் தாம் இலங்கை முழுமையை ஆண்டதையும் பின் வடகிழக்கு நோக்கி துரத்தப்பட்டதையும் பதிவு செய்யவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமில்லை தமிழ் இலக்கியங்களிலும் ஏன் இலங்கையின் தமிழரசு பர்ரி பெரிதாக எதுவுமில்லை?

அதுக்கு காரணம் இலங்கையில் தமிழினம் அன்னிய படை எடுப்பால் அடிக்கடி தோல்வியை அடைந்தமை... உடரட்ட , ருகுணு , ரஜரட்ட சிங்கள அரசுகளில் ரஜரட்டவை தவிர எவையும் போர்களை கூட பெரிய அளவில் காணவில்லை...

நான் பார்த்த DNA கட்டுரைகள், படங்கள் சில குடும்பங்களை மட்டுத்தான் ஆபிரிக்காவில் இருந்து வந்த்தாக நிறுவியிருக்கிறார்கள். இதுதான் தமிழ் நாட்டில் நடந்தது. இதுதான் அவுஸ்திரேலியாவிலும் நடந்தது.  ஆனால் திராவிடர் 10,000 ஆண்டுகளுக்குள் பரவிய குலம். இவர்கள்த்தான் உலகின் பல பாசைகளில் தமிழ் சொல்கள் இருப்பதற்கு காரணமானவர்கள். அவர்களே அம்மா அப்பா, ஒன்று இரண்டு போன்ற சொற்கள் உலக மொழிகள் எல்லாவற்றிலும் காணப்பட காரணமானவர்கள். ஆனால் இந்த சொற்கள் ஆபிரிக்க மொழிகளில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதை யாரும் பதிந்து இல்லை. எனவே இவரகள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர்வந்த ஆபிரிக்கர் அல்ல.  இவை சம்பந்தமான பல பதிவுகள் யாழில் உண்டு.

 

போரினால் இலங்கை வென்ற குடிகள்தான் வங்காளிகள் என்றது நிறுவப்பட வேண்டியது. அதைவிட அவர்கள் அந்த காலத்தில் பௌத்தர்களாக இருந்திருந்த்தால் சமாதான குடியேற்றம் நடந்திருக்கத்தான் வழி உண்டு. கிடத்தட்ட இலங்கை முஸ்லீம்கள் போன்ற ஒரு குடியேற்றம். பெரும்பாலும் ஆண்கள் வந்தது உண்மையாகவும், இவர்களுக்கு பெண்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்ததும் சில கர்ணபரம்பரை சம்பவங்களுக்கு மகாவம்சம் கற்பனை ஊட்டியதாக கொள்ள வேண்டும்

 

களப்பிரயர் காலத்தில் தமிழர் எங்கும் பெரிதாக அதிகாரம் கொண்டிருக்கவில்லை. வெளிநாடுகளை தமிழர் ஆண்டது பல்லவர் காலத்தின் பின்னர்தான். அதற்கு முன்னர் தமிழர் வியாபாரக்குடியேற்றங்கள்தான் செய்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணதேவராயர் கண்டிக்கு வந்தாரா? கூடவே தென்னாலிராமனும் வந்தானா?

மன்னரின் பெயர் கீர்த்தி ஶ்ரீ விக்கிரமராஜசிங்கன். அந்த்ஹ காலத்தில் சிங்கள மன்னர்கள் பாண்டிய பெண்களையே மணந்த்ஹனர்.

இதனால் விமலதர்மசூரியவுக்கு பின் வந்த மன்னர்கள் அரைத்தமிழன், 3/4 தமிழன் என்றாகி விக்ரமராஜசிங்கன் முழுத்தமிழனாய் இருந்தான். ஆனால் நாடு சிங்களநாடாயே இருந்த்ஹது.

நாடு எண்டு சொன்னது கண்டி ராச்சியத்தை மட்டும்.

தல கண்டி மன்னனை காக்கபோய்தான் பண்டாரகவன்னியன் தோத்தான் என்பதற்கு நம்பக்கூடிய ஆதாரம் ஒன்றையேனும் காட்டுங்களேன்.

எல்லாளனை வீழ்த்திய பின் தமிழரின் அடையாளங்களை அழித்தவர்கள் ஏன் 5 ஈச்சரங்களையும் விட்டு வைத்தனர்?

அப்படியே யாழ் வரை வந்து ஏன் தமிழர்களை அன்றே முற்றாக அழிக்ககாமல் விட்டனர்?

இப்படி ஒரு பேரவலம் நடந்ததாய் ஏன் ஒரு கவெட்டு, இலக்கிய பதிவு கூட இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

மொழியையும் ,மத அடையாளங்களையும் வைத்து யார் முதல் வந்தது என்று சொல்ல முடியாது....உதாரணத்திற்கு இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்பு அரேபிய எழுத்துகளும்,பள்ளிவாசல்களும் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டால் சிறிலங்காவின் பூர்வீக குடிகள் அரேபியர்கள் தான் என சில புத்திஜீவிகள் ஆதாரத்துடன் கூறக்கூடும்...ஆனால் உண்மை அதுவல்ல என்பது யாருக்கு தெரியப்போகுது.................மொழியும் ,மதமும் மக்களிடையே சில சமயம் அன்பாகவும்,சிலசமயம் அதிகாரத்துடனும் திணிக்கடுகின்றது.சில சமயம் மக்கள் தங்களது தேவைகருதி மொழியையும் ,மதத்தையும் தேர்வு செய்கிறார்கள...உதாரணம் புலத்தில் நாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணதேவராயர் கண்டிக்கு வந்தாரா? கூடவே தென்னாலிராமனும் வந்தானா?

மன்னரின் பெயர் கீர்த்தி ஶ்ரீ விக்கிரமராஜசிங்கன். அந்த்ஹ காலத்தில் சிங்கள மன்னர்கள் பாண்டிய பெண்களையே மணந்த்ஹனர்.

இதனால் விமலதர்மசூரியவுக்கு பின் வந்த மன்னர்கள் அரைத்தமிழன், 3/4 தமிழன் என்றாகி விக்ரமராஜசிங்கன் முழுத்தமிழனாய் இருந்தான். ஆனால் நாடு சிங்களநாடாயே இருந்த்ஹது.

நாடு எண்டு சொன்னது கண்டி ராச்சியத்தை மட்டும்.

தல கண்டி மன்னனை காக்கபோய்தான் பண்டாரகவன்னியன் தோத்தான் என்பதற்கு நம்பக்கூடிய ஆதாரம் ஒன்றையேனும் காட்டுங்களேன்.

எல்லாளனை வீழ்த்திய பின் தமிழரின் அடையாளங்களை அழித்தவர்கள் ஏன் 5 ஈச்சரங்களையும் விட்டு வைத்தனர்?

அப்படியே யாழ் வரை வந்து ஏன் தமிழர்களை அன்றே முற்றாக அழிக்ககாமல் விட்டனர்?

இப்படி ஒரு பேரவலம் நடந்ததாய் ஏன் ஒரு கவெட்டு, இலக்கிய பதிவு கூட இல்லை?

 

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் வேறு ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் வேறு. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இயற்பெயர் கண்ணுச்சாமி நாயக்கர் என்பதாம். இவர் தென்னிந்தியாவின் மதுரை நாயக்கர் மரபினைச் சார்ந்தவர். இவர் தமிழரல்லர் தெலுங்கர். தயவுசெய்து வரலாறு தெரியாவிட்டால் அதை தவிர்த்துவிடுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபை எனும் பொம்மை சபைக்கு விக்னேஸ்வரன் அவர்கள் மகிந்த முன்னிலையில் கொழும்பில் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்துவிட்டார் என அறியமுடிகிறது.

தமிழ் பிராமி புழக்கத்தில் இருந்த்ஹது என்பதால் அது தமிழ் இடம் எண்டு ஆகாது. இஸ்ரேலிலும், இங்கிலாந்திலும் ஆப்கானிலும் ஏன் தமிழ் நாட்டிலும் ரோம சுவடுகள் இருந்தது ஆனால் அவை ரோம நிலங்கள் இல்லை.

அராஸ் மொழியாக தமிழ் இருந்த்ஹிருக்கல்லம். லத்தீன் போல மேம்பட்ட மொழியாக. ஆனால் பெரும்பாலான குடிகள் நீசபாசை எண் கருதப்பட்ட சிங்களத்தை அல்லது அதன் முதல் வடிவத்தை பேணி இருக்கலாம்.

 

//ஆகவே வரலாற்றின் அடிப்படையில் அல்ல வாழ்வியல் அடிப்படையிலெயே ஒரு இனத்திற்கும் நிலத்திற்குமான உரிமை கோரப்படுகிறது//

 

இதைத் தானே நான் முதலிலேயே சொன்னேனே ? தமிழ்மக்களின் போராட்டம் சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான எதிர் அடையாள அரசியலால் எழுந்தது. மூத்தகுடி ஆள ஒரு நிலம் வேண்டும் என்னும் அடிப்படையில் எழவில்லை.

 

சிறிலங்கா அரசு என்பதே , சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் அடைப்படையில் கட்டிஅமைக்கப் பட்ட ஒன்று. அது ஒரு போதும் தமிழருக்கு தன்னாட்ச்சி அடிப்படியில் ஆன ஒரு அரசைத் தரா.அப்படித் தந்தால் அந்த அரசு கவிழும். அதனாலயே சொல்கிறோம் சம்பந்தர் செல்லும் பாதை எந்த அரசியல் அடிப்படையும் அற்ற பாதை.இந்தியா அவர்களை நட்டாற்றில் ஒரு நாள் விடும். அந்த நிர்க்கதியான நிலையை தமிழர்கள் கூட்டாகச் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை. செல்ல வேண்டியவர்கள் சென்று மடியலாம்.

Edited by narathar

//

இனி இரண்டாவது கேள்வி – தமிழ் மிதவாதிகள் அல்லது மென்சக்திகளால் தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முடியுமா? என்பது. 
 
இந்த இடத்தில்தான் கடந்த மாகாண சபை தேர்தல் பிரசாரக் களத்தில் காணப்பட்ட ஒரு அகமுரண்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டும். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அதிகமதிகம் அனைத்துலக சமூகத்தின் தெரிவுகளுக்கு நெருக்கமாகக் காணப்பட்டது. ஆனால், பிரசாரக் களத்தில் முன்வைக்கப்பட்ட சுலோகங்களில் ''தாயகம், தேசியம், சுயநிர்ணயம்' ஆகிய சொற்கள் மந்திரம்போல திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்டன. இது ஒரு இடைவெளி. அதாவது அனைத்துலக சமூகம் எதைக் கைவிடக் கேட்கிறதோ அதுதான் பிரசாரத்தில் மந்திரம்போல உச்சரிக்கப்பட்டது. 
 
ஆயின் அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் தமிழ் மக்களுடைய ஆகப் பிந்திய ஆணைக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அல்லது அது கூட்டமைப்பின் பிரசார உத்திக்கும் அதன் மெய்யான நிகழ்ச்சி நிரலுக்கும் இடையிலான தூரமா? இந்த இடைவெளியைக் கூட்டமைப்பு எப்படிக் கடக்கும்?
 
அனைத்துலக சமூகம் விரும்புகிறதோ இல்லையோ இப்பொழுது தமிழர்களிடம் வன்சக்தி இல்லை. மென்சக்திதான் இப்போதைக்குள்ள ஒரே சாத்தியமான வழி. ஒரே தெரிவு. கிறிஸ்துவுக்கு முன் சீனாவில் வாழ்ந்த சென் சூ. எனப்படும் ஒரு ஞானி ஒரு தீர்க்கதரினமுரைத்;திருந்தார். ''அறிவு ஒரு நாள் சக்தியாக மாறும்......அப்பொழுது அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி யுத்தங்கள் வெல்லப்படும்....' என்று.தமிழர்களைப் பொறுத்த வரை சுமார் நான்காண்டுகளுக்கு முன் வரை உயிரை ஆயுதமாகப் பயன்படுத்திய ஒரு இயக்கம் அவர்கள் மத்தியில் இருந்தது. அது ஒரு வன்சக்தி. அது இப்பொழுது இல்லை. அனைத்துலக சமூகம் அந்த வெற்றிடத்தை மென்சக்திகளால் நிரப்ப முயன்று வருகிறது.
 
இந்நிலையில், யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் வன்சக்திகளின் மத்தியில், ஜாதகக் கதைகளில் மட்டும் போதிசத்வர் பிழைத்திருக்கும் ஒரு நாட்டிலே, அறிவை ஆயுதமாகக் கையாண்டு தமது  கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கப்போகும் ஒரு மென்சக்திக்காகவா தமிழர்கள் காத்திருக்கிறார்கள்....?//
 
நிலாந்தனின் அண்மைய கட்டுரையில் இருந்து, இங்கே பொருந்தும் என்பதற்காக.
 
 

//அறிவை ஆயுதமாகக் கையாண்டு தமது  கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கப்போகும் ஒரு மென்சக்திக்காகவா தமிழர்கள் காத்திருக்கிறார்கள்....?//

 

அவ்வாறான ஒரு மென் சக்தி தமிழர் கூடமைப்பிற்குள் இருந்தே வரக் கூடிய சுவடுகள் ஏற்கனவே தெரிகின்றன.

ஹ்ம்ம் அப்பிடியே உங்களுக்கு ஒரு பெட்டி அல்வாவும் திருநெல்வேலி ல வாங்கிட்டு வர சொல்லணும் குர்ஷித் கிட்ட :D

மகிந்த கூட தான் தமிழா பேசுறாரு தமிழன் தமிழா பேசி பதவி பிரமாணம் செய்தா என்னமோ விடிஞ்சிடும் எண்ட மாதிரி எல்லா உங்க துள்ளி குதிப்பு இருக்கு

 

 சமஸ்சி என்ற நடைமுறை சாத்தியமாக தீர்வுக்காக பாடுபடுவோம் என்று கூறும் கோசானுக்கே ஒரு பெட்டி திருநெல்வேலி அல்வா என்றால் இன்னும் தனிநாடு, போராட்டம் வார்த்தை மாயஜாலம் காட்டுபவர்களுக்கு எத்தனை பெட்டி அல்வா வேண்டும்?  அல்லது தனிநாடு என்று அவர்கள் எம்மை ஏமாற்ற நினைப்பதலால் அந்த அல்வாவும் எங்களுக்கு தானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.