Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி தமிழில் பதவி ஏற்பார்

Featured Replies

அடடே சிங்கள தேசத்தில் தமிழில் சத்திய பிரமாணம்... சாதிச்சிட்டார் சிங்கம் விக்னேஸ்வரன்... தமிழர் பிரச்சினையை தீர்க்க சல்மான் குர்தீஸ் வருகிறார் எண்டது மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய் விடுகுது...

திங்கள் பதவியேற்பு செவ்வாய் சுயாட்ச்சி...

 

தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. அதாவது 2000 ம் ஆண்டில் தமிழீழம் என்று புருடா விட்டதை போல் இதுவும் புருடா தான்.

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்ட உடன் இலங்கையில் தமிழர்கள் வந்தேறு குடிகளே என்று நிறுவுவதற்கு தங்களை தாங்களே தமிழர்கள் என்று அழைத்துக்கொண்டு தமிழர்கள் மத்தியில் உளவியல் ரீதியான குழப்பத்தை ஏற்ப்படுத்த ஒரு குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது

புலம்பெயர் மக்களின் முயற்சியால்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இஙகே நிலம் தொடர்ப்ன பலத்த விவாதம் நடந்ததுபோல் தெரிகிறது.. தமிழர்களை வந்தேறு குடிகள் என நிறுவ நினைப்பவர்கள் (பொய்யெனத் தெரிந்தும்) சிங்களவர்கள்.. அவர்களின் கதையைக் கேட்டுக்கெண்டு இங்கு தடுமாறுபவர்களுக்கு, அல்லது உள்நோக்கங்களுடன் எழுதுகிறவர்களுக்கு உலக வரலாற்றில் இருந்தே பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்..

ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் பழங்குடியினரின் எண்ணிக்கையைவிட காலனித்துவக்காரரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்காக பழங்குடியினர்தான் வந்தேறுகுடிகள் என்று வாதிட முடியுமா.. மக்கள் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு??

அதைப்போன்ற மற்றும் ஒரு உதாரணம் மலேசிய தீபகற்பமும், சிங்கப்பூர் தீவும்..

ஆனால் இந்த நாடுகளிலெல்லாம் சிங்களத்தைப்போல் யாரும் வரலாற்றைத் திரிப்பதில்லை.

கிருஸ்ணதேவராயர் கண்டிக்கு வந்தாரா? கூடவே தென்னாலிராமனும் வந்தானா?

மன்னரின் பெயர் கீர்த்தி ஶ்ரீ விக்கிரமராஜசிங்கன். அந்த்ஹ காலத்தில் சிங்கள மன்னர்கள் பாண்டிய பெண்களையே மணந்த்ஹனர்.

இதனால் விமலதர்மசூரியவுக்கு பின் வந்த மன்னர்கள் அரைத்தமிழன், 3/4 தமிழன் என்றாகி விக்ரமராஜசிங்கன் முழுத்தமிழனாய் இருந்தான். ஆனால் நாடு சிங்களநாடாயே இருந்த்ஹது.

நாடு எண்டு சொன்னது கண்டி ராச்சியத்தை மட்டும்.

தல கண்டி மன்னனை காக்கபோய்தான் பண்டாரகவன்னியன் தோத்தான் என்பதற்கு நம்பக்கூடிய ஆதாரம் ஒன்றையேனும் காட்டுங்களேன்.

எல்லாளனை வீழ்த்திய பின் தமிழரின் அடையாளங்களை அழித்தவர்கள் ஏன் 5 ஈச்சரங்களையும் விட்டு வைத்தனர்?

அப்படியே யாழ் வரை வந்து ஏன் தமிழர்களை அன்றே முற்றாக அழிக்ககாமல் விட்டனர்?

இப்படி ஒரு பேரவலம் நடந்ததாய் ஏன் ஒரு கவெட்டு, இலக்கிய பதிவு கூட இல்லை?

"மாத்தறை" என்பது "மதுரை" என்ற பெயர் திரிந்து வந்தது. மதுரை என்பது தமிழர்களின் விருப்பமான பெயர். அதனால்த்தான் அவர்களின் மன்னன் கண்ணனின் ஊருக்கும் அந்த பெயர் வைத்தார்கள். தெய்வேந்திர முனை தமிழ்ப் பெயர். கதிர்காமம் தமிழ் பெயர். கதிர்காமக் கந்தனிடம்தான் கைமுனு வாள் வாங்கி எல்லாளனை வென்றவன்.  கதிர்காமத்தை விட பழையனதான் பஞ்ச ஈஸ்வரங்கள்.

 

வடக்கில் : கீரிமலையில் நகுலேஸ்வரம், 

கிழக்கில் : திருகோணமலையில் கோணேஸ்வரம், 

மேற்கில் : மன்னார் மாந்தையில் திருக்கேதீஸ்வரம், 

தென் மேற்கில்: சிலாபத்தில் முன்னேஸ்வரம் , 

தெற்கில் : தெய்வேந்திரமுனையில் தொண்டீஸ்வரம்.

 

நாடு முழுக்க தமிழர் கையில் இருந்ததற்கான சான்று, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மத்தியில் திட்டமிட்டே பஞ்ச ஈஸ்வரங்களை அமைத்தமை.  தமிழர் தங்கள் சரித்திரம் எழுதிவைப்பத்தில்லை. முதல் முதல் சரித்திரம் தஞ்சையில்தான் எழுத ஆரம்பமானது என்கிறார்கள். அதற்கு முந்தய கல்வெட்டுக்கள் பெரும்பாலும், கட்டளைகள், ஆவணங்கள் மட்டுமே.

 

இலங்கையில் நாடு பூராக தமிழர் கையில் இருந்திருக்கவில்லை என்றால் அதுதான் நிறுவப்பட வேண்டும். மற்றைய வளம் அல்ல. சிங்களவர் வங்காளத்தில் எற்பட்டிருக்க கூடிய மத இன (இயற்கை அழிவுக்காக இருக்காது) பிரச்சனைகளுக்குக்காக மெல்ல மெல்ல இலங்கைக்கு குடிபெயர்ந்த மக்கள். தமிழ் நாட்டின் தென் கரைகளில், இலங்கையின் கரைகளில் இப்படியான குடியேற்றங்கள் நடத்திருக்கு. அமைதியாக குடியேறும் குடும்பங்களை  தமிழ் இராசாக்கள் அழிப்பதில்லை.  

61428_597824106942708_571000427_n.jpg

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நன்றாக இருக்கிறது

எமது வரலாறுகள் பற்றி  எமது இளைய தலைமுறையின் தேடுதலும் அறிவும் புல்லரிக்க வைக்கிறது.

 

யாழ்  களத்திற்குள் புதிதாக புகுந்த சிலர்

இங்கு எதனையும் விதைக்கலாம் என்றும்

இங்கு அதற்கு விளக்கமோ 

எதிர்ப்போ வராது என கணிப்பார்களாயின் அவர்கள் அவமானப்படநேரிடும்.

பெரும் யம்பவான்கள் இங்கு அமைதியாக

அதேநேரம் அவதானித்தபடி உள்ளனர்.

தல கண்டி மன்னனை காக்கபோய்தான் பண்டாரகவன்னியன் தோத்தான் என்பதற்கு நம்பக்கூடிய ஆதாரம் ஒன்றையேனும் காட்டுங்களேன்.

எல்லாளனை வீழ்த்திய பின் தமிழரின் அடையாளங்களை அழித்தவர்கள் ஏன் 5 ஈச்சரங்களையும் விட்டு வைத்தனர்?

வையாபாடல் எண்ட புத்தகத்தை பொழிப்புரையோடை வாங்கி படியுங்கள்... இதுவே யாழ்ப்பாண இராசியம் பற்றி சொல்கிறது...

http://ta.wikipedia.org/wiki/வையாபாடல்

கோயில்களை சிங்களவர் அழிக்காமைக்கு காரணம் இப்போதும் அவர்களும் கோயில்களுக்கு போய் வருவதாலாக இருக்கலாம்... மற்றும் கோயில்கள் எப்போதும் தமிழர்களின் அடையாளமாக யாரும் பார்ப்பதில்லை , காரணம் சமகாலத்தில் சமணமும் பௌத்தமும் தமிழர்கள் மதமாக இருந்தது...

இல்லை கோயில்களை உடைத்து சைவத்தை மதமாக கொண்ட பாண்டியர்களை பகைத்து கொள்ள விரும்பாமல் விட்டு இருக்கலாம்...

 

அப்படியே யாழ் வரை வந்து ஏன் தமிழர்களை அன்றே முற்றாக அழிக்ககாமல் விட்டனர்?

இப்படி ஒரு பேரவலம் நடந்ததாய் ஏன் ஒரு கவெட்டு, இலக்கிய பதிவு கூட இல்லை?

அனுராத புரத்தை தலைநகராக கொண்டு இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த எல்லாளனின் காலம் கிமு 145 முதல் கிமு 101 எண்று மகாவம்சம் சொல்கிறது... அதற்கு 400 வருடங்களுக்கு முன்னரே விஜயன் இலங்கை வந்தான்...

பௌத்தம் தோண்றியதும் அதே கிமூ 500 களிலேயே... ! அதன் பின் கிமூ 200 ம் ஆண்டிலேயே சங்கமித்தையும் , மகிந்தனும் இலங்கையில் பௌத்தம் பரப்ப வந்தனர்...

பின்னர் எல்லாளனுக்கு பிறகு எந்த தமிழ் மன்னனும் 7 ம் நூற்றாண்டு வரை இலங்கயில் ஆட்சிக்கு வரவில்லை.. யாழ்ப்பாணத்தை இறுதியாக ஆண்ட சிங்கள மன்னன் சப்புமல்குமர ( செம்பக பெருமாள்) ... அவனிடம் இருந்து களப்பிரர்கள் கைப்பற்றினர் ... களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் எண்று சொல்லப்படும்...

பின்னராக காலங்களில் தமிழகத்தில் இருந்து படை எடுத்து வந்த அரசர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை நிறுவினர்... முதலில் வல்லிபுணத்திலும், தொண்டமனாற்றிலும், 16 நூற்றாண்டு வரை இவர்கள் ஆட்சி செய்தாலும் இவர்களை தமிழ் மக்கள் ஆரிய சக்கரவர்திகள் எண்றே கூறி வ்ந்தனர்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆச்சரியம் தமிழும் ஆட்சி மொழிதான் சிறிலங்காவில் 

 

திரு விக்னேஸ்வரன் அவர்கள் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்ய மகிந்த ராஜபக்சவும் டமிலில் உரையாற்றுவார்   :D

//இவ்வளவு அருகில் பல லட்சம் (அப்போது) தமிழர் இருக்க வளம் மிக்க இலங்கைக்கு ஏன் வரண்ட தமிழ்நாட்டில் இருந்து பெரும் மக்கள் பெயர்வு நடக்கவில்லை?//

 

உலகின் காலனிலை என்பது எப்போதும், எல்லா இடத்திலும் ஒன்றாக இருந்ததில்லை.இன்றைய காலனிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு இருந்தது என்பது தவறு.ஆகவே வரண்ட தமிழ்நாடு என்பதுவும் தவறு.

மேலும் ஒரு இன மக்கள் மற்ற இனமாக மாறி இருக்கிறார்கள். ஒரு ஐம்பது ஆண்டுகளில் புத்தளம் நீர்கொழும்பு பிரதேசங்களில் இருந்த தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாறி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்து தான் இனம் மாறும் என்பது வரலாற்று ரீதியாகத் தவறான பார்வை.மேலும் மக்கட் தொகை வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சி காரணாம கடந்த நூறு ஆண்டுகளில் தான் பல் ஆயிரம் மடங்கு அதிகரித்தது.

 

பல இயற்கைக அழிவுகள் ,படையெடுப்புக்கள், நோய்கள் என குடிப் பரம்பலுக்கு பல காரணிகள் காரணமாக இருந்து இருக்கின்றன.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.

1) தமிழர் பூர்வக குடிகளா இல்லையா என்பது தேவையற்ற விடயம். இபோது நிலைமை 70:14 இதை எப்படி தீர்க்கலாம், என்பதே பிரச்சினை. இதுவே எண் கருத்து. மற்ரும் படி தமிழரை வந்த்ஹேறு குடி என்று சொல்லும் எந்த உள்நோக்கமும் எனக்கில்லை. ஆனால்

2) தெற்க்கு கூறும் வரலாறை போல் நீங்கள் கூறும் வரலாறும் ஊகம்,இனமானம், என்பவற்றின் அடிப்படையிலே உல்லது என்பதையே நான் சொல்ல வந்தேன். எப்படி சிங்கலவர்க்கு அவர்கள் வரலாறு உண்மை போல தெரிகிறதோ அப்படி உங்களுக்கும் உங்கள் வரலாறு உண்மை எனத்தெரியலாம். உதாரணத்து 5 ஈச்சரங்கள். இவை பற்றி முதன் முதலில் உள்ள குறிப்பு 7ம் நூற்றாண்டு தேவாரங்களே. ஆனால் நான் சொன்னதைப்போல 200 கிமுவிலேயே எல்லாளன் இருக்கிறார். ஆனால் அந்த காலத்தில் ஈச்சரங்கள் பர்ரி எந்த குற்ப்புமில்லை. ஆக நீங்கள் சொல்லும் வரலாற்ற்க்கும் ஆதாரமில்லை. இது தமிழ்நாடு இல்லை எனறு நீங்கள் நிரூபிக்கும்வரை இது தமிழ்நாடென்றே கொள்ளபடும் எனும் கருத்துத்தை எந்த வரலாறாசிரியர் ஏற்க்கர். இது விதண்டாவாதம்.

3) ஆனால் உண்மை என்னவெனில், தமிழரோ, இந்த்ஹியரோ, அல்லது வேறு எந்த நாட்டவரோ வரலாற்றுப் புத்திசீவிகள் யாரும் இதுவரை நாம்சொல்லும் இந்த வரலாற்றை ஆதரிக்கவில்லை. இதற்கு ஞானப்பிர்காசர், ரசாநாயகம் இந்திரபாலா (தமிழர், தந்த்தை செல்வாவின் உறவினர்) என்று பலரை உதாரனம் காட்டலாம். தலயிடம் ஆதாரம் கேட்டா விக்கிபீடியா வை நீட்டுறார், நல்ல வேளை குமுதத்தையோ ஆனந்த விகடனையோ நீட்டவில்லை.

இந்தத் திரியில் வரலாற்றைக் கொண்டு வந்து சிறிலங்கா தமிழருக்கு உரியது அல்ல என நிறுவ முனைந்தவர் கோசன்.இப்போது பூர்வக் குடிகள் என்பது தேவையற்ற விடயம் என்கிறார்.

இவரது பிரச்சினை என்ன வென்று தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.

1) தமிழர் பூர்வக குடிகளா இல்லையா என்பது தேவையற்ற விடயம். இபோது நிலைமை 70:14 இதை எப்படி தீர்க்கலாம், என்பதே பிரச்சினை. இதுவே எண் கருத்து. மற்ரும் படி தமிழரை வந்த்ஹேறு குடி என்று சொல்லும் எந்த உள்நோக்கமும் எனக்கில்லை. ஆனால்

2) தெற்க்கு கூறும் வரலாறை போல் நீங்கள் கூறும் வரலாறும் ஊகம்,இனமானம், என்பவற்றின் அடிப்படையிலே உல்லது என்பதையே நான் சொல்ல வந்தேன். எப்படி சிங்கலவர்க்கு அவர்கள் வரலாறு உண்மை போல தெரிகிறதோ அப்படி உங்களுக்கும் உங்கள் வரலாறு உண்மை எனத்தெரியலாம். உதாரணத்து 5 ஈச்சரங்கள். இவை பற்றி முதன் முதலில் உள்ள குறிப்பு 7ம் நூற்றாண்டு தேவாரங்களே. ஆனால் நான் சொன்னதைப்போல 200 கிமுவிலேயே எல்லாளன் இருக்கிறார். ஆனால் அந்த காலத்தில் ஈச்சரங்கள் பர்ரி எந்த குற்ப்புமில்லை. ஆக நீங்கள் சொல்லும் வரலாற்ற்க்கும் ஆதாரமில்லை. இது தமிழ்நாடு இல்லை எனறு நீங்கள் நிரூபிக்கும்வரை இது தமிழ்நாடென்றே கொள்ளபடும் எனும் கருத்துத்தை எந்த வரலாறாசிரியர் ஏற்க்கர். இது விதண்டாவாதம்.

3) ஆனால் உண்மை என்னவெனில், தமிழரோ, இந்த்ஹியரோ, அல்லது வேறு எந்த நாட்டவரோ வரலாற்றுப் புத்திசீவிகள் யாரும் இதுவரை நாம்சொல்லும் இந்த வரலாற்றை ஆதரிக்கவில்லை. இதற்கு ஞானப்பிர்காசர், ரசாநாயகம் இந்திரபாலா (தமிழர், தந்த்தை செல்வாவின் உறவினர்) என்று பலரை உதாரனம் காட்டலாம். தலயிடம் ஆதாரம் கேட்டா விக்கிபீடியா வை நீட்டுறார், நல்ல வேளை குமுதத்தையோ ஆனந்த விகடனையோ நீட்டவில்லை.

 

இதென்ன அநியாயமா இருக்கு? இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே வடக்கு-கிழக்கை இனைத்தே தமிழரின் தீர்வாக மாகாண சபை அதிகாரங்களுடன் உருவாக்கினார்கள். நாம் சொல்லும் வரலாறு என்ன? வடக்கு-கிழக்கு தமிழரின் தாயகம். அதை இந்தியாவும் ஆதரித்தது.. 1987 இல். சிங்களவரின் பூமி பற்றி இங்கு கவலைகள் கிடையாது.

 

இலங்கை என்கிற நாடே 1948 இல்தான் உருவானது. சிறீலங்கா எனும் பெயர் 1972 இல்தான் உருவானது. 65 ஆண்டுகால வரலாற்றுக்காக ஆயிரமாண்டு வரலாற்றை நிராகரிப்பது பேதமை.

 

முன்பு இருந்திராத ஒரு நாடு (சிறீலங்கா).. முன்பு இருந்திராத தேசியம் (சிறீலங்கன்). இவற்றுக்காக தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அண்மைய தேர்தல் முடிவுகளும் அதற்கு ஒரு நல்ல சான்று.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது 100% சரி. வடகிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய எம் பாரம்பரிய நிலம். மீதி சிங்களவரின் பாரம்பரிய நிலம். இதற்க்கு 500 ஆண்டுகள் நிலத்தில் வாழ்ந்த்ஹாலே போதும் ( உதாரணம் கொசோவோ). இனப்பிரச்சினைக்கும் தீர்வுக்கும் யார் பூர்வீக குடிகள் என்பதற்கும் சம்பந்த்ஹமில்லை. ஆனால் இங்கு சிலர் முழுத்தீவின் பூர்வ குடிகள் தமிழரே என்றனர். அதற்கு எந்த peer review மூலம் ஏற்றுக்கொள்ளபட்ட ஆதாரமுமில்லைல். இதை மட்டுமே நான் கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் இந்த திரியில் நான் வரலாறை இழுத்தான் என்பது பொய்பிரட்டு. நெடுக்கு ஒரு பதிலில் முழுத்தீவின் பூர்வகுடிகள் தமிழர் எனறு சொல்ல, நான் அதற்க்கு ஆதாரமில்லை எனறு சொல்லப்போக, இப்படித்தான் இந்த திரியில் வரலாறு கலந்த்ஹது. எதயும் தெளிவா வாசிச்சா விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் வரலாற்றைக் கொண்டு வந்து சிறிலங்கா தமிழருக்கு உரியது அல்ல என நிறுவ முனைந்தவர் கோசன்.இப்போது பூர்வக் குடிகள் என்பது தேவையற்ற விடயம் என்கிறார்.

இவரது பிரச்சினை என்ன வென்று தெரியவில்லை?

போற போக்கை பார்த்தால் பேசாமல் தமிழரல்லாம் சிங்களத்தை படிச்சு புத்த சமயத்துக்கு மாறுங்கோ எல்லா பிரச்சினையும் முடியும் என்றும் அறிவுரை பொழியுங்கள் போலை கிடக்கு நாரதர் .

ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் பழங்குடியினரின் எண்ணிக்கையைவிட காலனித்துவக்காரரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்காக பழங்குடியினர்தான் வந்தேறுகுடிகள் என்று வாதிட முடியுமா.. மக்கள் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு??

 

இசைக்கலைஞனின் உதாரணம் மிகச்சரியானது.
வந்தவனாலேயே மகாவம்சம் எழுதப்படமுடியுமாயின் தமிழன் ஏன் எழுதிவைக்கவில்லை என்று கோசன் கேட்கிறார்.  அமெரிக்க பூர்வகுடிகளின் சரித்திரம் முதலாவது ஐரோப்பிய சந்திப்போடு தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசத்திற்கு தூரதேசத்தில் இருந்து பயணித்து வேறு மக்கள் வரவேண்டுமாயின், அவ்வாறு வந்த மக்கள் உள்ளே இருப்பவர்களைக் காட்டிலும் பலதை எதிர்கொண்டவர்களாகக் கட்டாயம் இருப்பர். நோயெதிர்புச் சக்தி போன்ற விடயங்கள் வந்தர்களிற்கு உள்ளுக்குள் இருப்பவர்களைக் காட்டிலும் அதிகம் இருக்கும்.  ஒரு சக்தி கடல் கடந்து வந்தது என்றால் அந்தச் சக்தியின் வரவால் நோய் போன்ற விடயங்களும் பூர்விகக் குடிகளின் எண்ணிக்கை குறைப்பில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். வடக்கு கிழக்கு நோக்கி போர் மூலம் தான் பூர்விக குடிகள் விரட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதில்லை. நோய் கூட அதற்குக் காரணமாகியிருக்கலாம்.. பொதுவாக நீண்டகாலம் சந்திக்காத முற்றுமுழுதான பிறத்தி மக்கள் சந்திக்கும போது தான் இத்தகைய நோய்கள் ஏற்படும். விஜயனும் நாங்களும் வெள்ளையரும் பூர்வகுடிகளும் போன்ற தூரம் அற்றவர்களாக இருப்பினும், வெளித்தொடர்பற்ற மக்களாக அன்றைய இலங்கையர் தீவிற்குள் இருந்திருப்பதற்கான சாத்தியம் அதிகம். எனவே நோய் என்ற காரணி புறக்கணிக்க முடியாதது. நீங்கள் கூறும் ஏன் எங்கள் தொகை சிறுபான்மையானது என்பது இந்தக் கோணத்திலும் நோக்கப்படவேண்டியது.
 
அமெரக்காவின் ஏகப்பட்ட பூர்வகுடிகள் ஐரோப்பிய சந்திப்போடு நோய்வாய்ப்பட்டு இடம் தெரியாது போனார்கள். உலகில் கடைசியாக அறியப்பட்ட பூர்வகுடிகள் வரை, வரலாற்றை எழுதிவைக்க வேண்டிய தேவை காலாதிகாலமாக ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்தவர்களால் உணரப்பட்டமை குறைவே. குhரணம் அவர்கள் ஒரு நிரந்தரத்தைத் தமது நிலம் சார்ந்து உணர்ந்தார்கள். வாய்வழிக் கதைகள் வாயிலாக மரபுகள் மாறாது வழமைகள் மாறாது வாழ்வு நகர்ந்தது. எப்பவுமே வரலாற்றை எழுதத் தலைப்படும் குணம் வந்திறங்கியவனில் தான் அதிகம். ஏனெனில் நிரந்தரமின்னையில் ஒரு நிரந்தரத்தைக் கண்டுவிடும் ஒரு முனைப்பு அது--மேலும் ஒரு தேசத்திற்கு வருபவர்கள் பூர்வகுடிகளைக்  காட்டிலும் ஆவணப்படுத்தலில் தேர்ச்சியுடையவர்களாக இருப்பர். அதுவும் கடல்வழிப் பயணம் என்பன அத்தகைய தகைமைகளைக் கொண்டிருக்கும்..
 

Edited by Innumoruvan

எல்லாளன் இருந்ததாக எந்த 7ம் நூற்றாண்டு தேவாரங்களிலும் சொல்லி இல்லை. அது ஏட்டாம் நூற்றாண்டு மகாவம்சத்தில்தான் சொல்லியிருக்கு. 

 

மாகாவம்சம் எழுதிய பிக்குக்கள் 7ம் நூற்றாண்டு திருஞானசம்பந்தருடன் முரண்பட்டுக்கொண்டு 8ம் நூற்றாண்டில் இலங்கை வந்தர்வர்களேதான். சம்பந்தரும் சுந்தரரும்தான் தேவாரங்களில் இலங்கையின் இரண்டு திருதலங்களைப்பற்றி பாடினார்கள். யாரும் 7ம் நூற்றண்டில் பஞ்ச ஈஸ்வரங்களைப்பற்றி தமிழ் நாட்டில் பாடவில்லை. 

 

கதிர்காமத்தை அருணகிரிநாதர் பாடினார்.

 

பஞ்ச ஈஸ்வரங்கள் பற்றிய ஆராச்சிகள் வேறு இடங்களில் காணப்படுபவையே.  மகாவசம் எழுதப்பட முன்னர் இலங்கை வந்த பல்லவர்கள் இருந்த திருகோணமையைத்தான் திருத்திக்கட்டினார்கள். 

 

எல்லா விளக்கத்தின் பின்னரும் கதிர்காமம், தேவேந்திரமுனை, மதுரை போன்ற பெயர்கள் காணப்படுவதை சிங்களவர்கள் வரமுன்னர் அங்கே தமிழர்கள் இருக்கவில்லை என்று கூறிக்கொண்டு  விளக்குவது கடினம்.

 

நிச்சயமாக மத்தறைதான் தென் மதுரையா என்றதைக் கூட கண்டு பிடிக்க அங்கு அகழ்வாய்வுகள் செய்ய இடம் தரமாட்டர்கள்.

 

30 வருடங்களுக்கு முன்னர் தமிழ் கிராமங்களாக இருந்த கிழக்கின் கிராமங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த அவை தமிழ் கிராமங்கள் என்பது விளங்கப்படுத்தப்பட வேண்டும்.

 

நகுலேசுவரம் கோயில் 350px-Overgrown_Statues.jpg
ஈழப்போரில் குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவரம் கோயிலின் கோபுரம்

240px-Sri_Lanka_location_map.svg.png
8px-Gold_temple_icon.png
நகுலேசுவரம் கோயில்
இலங்கையில் நகுலேஸ்வரத்தின் அமைவிடம்

ஆள்கூறுகள்: 17px-WMA_button2b.png9°49′0″N 80°0′0″Eஅமைவு17px-WMA_button2b.png9°49′0″N 80°0′0″E பெயர் பெயர்: கீரிமலை நகுலேசுவரம் கோயில் அமைவிடம் நாடு: இலங்கை மாகாணம்: வடக்கு மாவட்டம்: யாழ்ப்பாண மாவட்டம் அமைவு: கீரிமலை,காங்கேசன்துறை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை வரலாறு கட்டப்பட்ட நாள்: கிமு 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்

 

 

 

விஜயன் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு பஞ்சஈஸ்வரங்கள் (அய்ந்து ஈஸ்வரங்கள்) இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அய்ந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் அதனை விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர். 

 

 

Edited by மல்லையூரான்

“மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழர்களும், மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?” 
ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் “வடக்கே தமிழர்களும் தெற்கே சமுத்திரமும் இருக்கும் போது, நான் எப்படி நின்மதியாக படுக்கமுடியும்” என்று திரித்துப் பாட புத்தகங்களில் திரிக்கப்பட்டுள்ளது. 
மகாவலி கங்கைக்கு மேலே என்று உள்ளதை உள்ளபடி கூறினால், தமிழர்கள் மலைப்பகுதியான கண்டிக்கும் மேலேயும் கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எண்பிக்கப்படுகிறது. அதனை மறைக்கவே வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மாற்றிச் எழுதி வைத்துள்ளார்கள். 

. தலயிடம் ஆதாரம் கேட்டா விக்கிபீடியா வை நீட்டுறார், நல்ல வேளை குமுதத்தையோ ஆனந்த விகடனையோ நீட்டவில்லை.

விக்கி பீடியாவின் இணைப்பு வையா பாடல் புத்தகம் சம்பந்தமானது...! அது ஆதாரம் கிடையாது...

தமிழாகம் செய்யப்பட்ட மகாவம்சமும் , வையாப்பாடல் பொழிப்பு உரையும் ஆதாரமாக காட்டப்பட்டதே அண்றி விக்கி பீடியா அல்ல...

எதையும் சரியாக பார்க்காமல் எழுந்தமானத்துக்கு கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்...

தவிர தொல்பொருள் ஆதாரம் இணையத்திலை காட்ட முடியாது... அதை தேடி பார்க்க வேண்டிது உங்களின் கடமை... மூலங்களை மட்டும் தான் எங்களால் காட்ட முடியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.