Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியேற்பை புறக்கணிக்கப்போவதாக சிவாஜிலிங்கமும் அறிவிப்பு! - பிளவுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் இருப்பதாக நோக்கர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
MP-sivajilingam-chennai-150.gif

வடமாகாணசபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப்போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது.போர்க்குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தினில் முன்மொழியப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஸ.அவர் முன்னிலையினில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

  

இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தினில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.தன்னிச்சையாக சம்பந்தன் மஹிந்தரை சந்தித்தமை மற்றும் மற்றும் முதலமைச்சரை அவர் முன்னிலையினில பதவியேற்க திட்டமிட்டமை தொடர்பினில் அவர்கள் சீற்றங்கொண்டுள்ளனா. தமிழரசு கட்சியிலும் சரவணபவன் மற்றும் சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் சம்பந்தனது நடவடிக்கைகளால் அதிர்ந்து போயுள்ளனர்.

 

இதனிடையே கூட்டமைப்பினுள் அண்மைக்காலமாக காணப்படும் பதவி ஆசைக்ள மற்றும் முற்றிவரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்ப்போடு பாரிய பிளவுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் இருப்பதாக நோக்கர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

-கொழும்பு செய்தியாளர்-

 

http://seithy.com/breifNews.php?newsID=94302&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து

பார்த்து.........

 

நாம் தயார்

அவர்கள்  சண்டை  முடியட்டும் என சிங்களம்  பந்தாட இடம் தராதீர்கள்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் எப்பவுமே குறுக்கால இழுக்கிற ஒரு சீவன். அவரை நம்பி செய்யப்படுற எந்த வேலைத்திட்டமும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது. இதில தெளிவா இருக்கனும்..! தலைவர் உவையை உள்ள வைச்சிருந்தாலும்.. அளவோட தான் வைச்சிருந்தவர். அவருக்குத் தெரியும் உவைட குணம்.. தொடர்புகள்..!

 

இப்ப எல்லாம் கைய மீறிப் போய்க்கிட்டு இருக்குது. இந்த நேரத்தில்.. சம்பந்தனை.. கூட்டாளிகளை மக்களுக்கு இனங்காட்டி ஒரு அழுத்தம் கொடுப்பதன் மூலமே அவர்களை மக்கள் விருப்பிற்கு இணங்கச் செயற்பட வைக்க முடியும்.

 

இல்ல.. பிஸ்ரலை தான் தூக்கணுன்னா வேற வழியில்ல..! பொதுபல சேன சொல்லுற கணக்கா.. தமிழ் மக்களை பாதுகாக்க.. ஆயுதம் தான் தூக்கனுன்னு எல்லாரும் முடிவு கட்டிட்டா அதை தூக்கித்தான் ஆகனும்..! :icon_idea::rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் விக்கி வழிக்கி வார விட்டால் ஒரே தெரிவு எதிர்ப்பு அணியினர் ஓன்று சேர வேண்டியது தான் எதிர் வரிசையில் அமர்த்தாவது தன்மான தமிழர்களாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கந்தன் ஆசீர்வாதம் கிடைத்தால்... (கிடைக்கும் என்ற நம்பிக்கை தொண்டர்களுக்கு உண்டு)
ஆனந்த சங்கரியுடன் சம்பந்தர் என்றும் இணைந்திருக்க
ஒரு உண்மையான கூட்டமைப்பு மக்களுக்குக் கிடைக்கும்
 

அப்போது மாகாணம் சமஸ்டியாகி
சமஸ்டி ஈழமாக வலம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரிகள் எப்பவுமே வியாபாரத்தில் குறியாகவே இருக்கின்றனர்.

 

சிவாஜிலிங்கம் புறக்கணிப்பதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. மீண்டும் காணாமல்போகப்போகிறார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே அற்பத்தனமான அரசியலில் ஈடுபடுவவரும், சீப்பப்ளிசிட்டி அரசியல் செய்து கூட்டமைப்பை விட்டு வெளியேறி மூக்குடைபட்டவருமாகிய சிவாஜி, ஜனாதிபதி தேர்தலிலே மக்கள் இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டிருப்பார். பாவம் பார்த்து இவரை மீண்டும் சேர்த்ததுதான் கூடட்டமைப்பு செய்த பெருந்தவறு. இபோது கூட இவர் கொள்கைக்காக அலறவில்லை, டெலோவுக்கான மந்திரி பதவியை மன்னாரின் ஓர் படித்த வேட்பாளருக்கு கொடுக்காமல் தனக்கு தரவேண்டும் என்பதற்க்கே இந்த ததிங்கிணதொம் போடுறார்.

வேணும் என்றால் எதிர்வரிசையில் உட்காரட்டும். ஒற்றுமைக்காக, இப்படிக் காரியக்கூத்தாடுபவர்கள் எல்லோரையும் கட்டி இழுக்க முடியாது.

சித்தர் - தசாப்தங்களாக அரசை ஒண்டி பிழைத்த சித்தர், இபோது ஜன்னதிபதி முன் பதவியேற்ப்பை எதிர்ப்பதும் அமைச்சுப் பதவிக்காகவே. இவர்க்கும் சிவாஜிக்கும் வித்யாசமில்லை. ஜோக் என்னவென்றால் நேற்றுவரை இவரை திட்டித்தீர்த புலத்து வியாபாரிகளுக்கு இன்று திடீரென்று இவர் ஹீரோ ஆகிவிட்டார்.

அனந்தி அக்கா -அளந்து அடிவைப்பா என்று நம்புவோம். மாவையும் இதில் முரண்பட்டிருந்தாலும், புலத்து புண்ணியவான்களை விட திரமறவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் கட்டாயம் தெரிந்த்ஹுருப்பார். யாரின் வேண்டுகோளின் படி இந்த நல்லெண்ண சமிக்ஞையை கூட்டமப்பு அரசின் பால் காட்டுகிறது என்பது அவருக்குத் தெரிந்த்ஹிருக்கும். இனத்தின் எதிர்காலம் கருதி மாவை, இந்த விசயங்களை அனந்தி போன்றோருக்கு எடுத்துக்கூறி அவர்களையும் சேர்க்கவேண்டும். குறிப்பாக புலத்து பினாமி வியாபாரிகளின் பிண வியாபார உத்தி பற்றி மாவை அவவுக்கு சொல்லுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அப்புறம் புலத்தில் இருந்து கொண்டு பிஸ்டல் குறூப்பை அனுப்புவோம் என்பதெல்லாம் வெத்துஜம்பம்.ஆனைக்கோட்டை கொள்ளையர்களை அடுத்த தலைமுறை புரட்சியாலர் எனறு சொன்னதைப்போல. பிஸ்டல் என்ன உங்கள் கதைகேட்டு ஒரு பிசுக்கோத்தையும் தூக்க நிலத்தில் இருக்கும் யாரும் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் புலத்தில் இருந்து கொண்டு பிஸ்டல் குறூப்பை அனுப்புவோம் என்பதெல்லாம் வெத்துஜம்பம்.ஆனைக்கோட்டை கொள்ளையர்களை அடுத்த தலைமுறை புரட்சியாலர் எனறு சொன்னதைப்போல. பிஸ்டல் என்ன உங்கள் கதைகேட்டு ஒரு பிசுக்கோத்தையும் தூக்க நிலத்தில் இருக்கும் யாரும் தயாரில்லை.

 

உதுகளுக்கு பிஸ்டல் கூடிப்போட்டு. வாள் போதும். ஆமிக்காரனட்ட காசைக் கொடுத்தாலே செய்து முடிச்சிட்டு.. பழியையும் அழகாப் போட வேண்டிய இடத்தில போட்டிட்டு போய்க்கிட்டு இருப்பான். :lol::D

 

ஏதோ சிறீலங்காவில பிஸ்டலே வெடிக்காத கணக்கோ எல்லோ ஒருவர் கதை அளக்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் அல்லது தேசத்தின் விடுதலை விரும்பிகள் 

எப்போதும் அந்த விடுதலையின் பாதையிலே பயணம் செய்வார்கள்
தலைவர்கள் தடம் மாறுவது பலமுறை நடந்துள்ளது.
மக்கள் விழிக்கும் வரை தலைவர்களுக்கு ஆதாயமும் மகிழ்ச்சியும் தான் கிடைக்கும்

 

இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!

இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..
 
ananthi's FB page

1379517_473519736088494_1649134769_n.jpg

Edited by narathar

//அப்புறம் புலத்தில் இருந்து கொண்டு பிஸ்டல் குறூப்பை அனுப்புவோம் என்பதெல்லாம் வெத்துஜம்பம்.ஆனைக்கோட்டை கொள்ளையர்களை அடுத்த தலைமுறை புரட்சியாலர் எனறு சொன்னதைப்போல.//

 

மேலே எழுதியவை யார் சொன்னவை ? இதற்கான ஆதாரத்தைத் தரவும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தினக்கதிர் ஆசிரியர்க்கு ஏன் இந்த வேண்டாத வேலை. காசி ஆனந்தன் விக்கி மேல பாய, இவர் காசிமேல பாய்ஞ்சு பிராண்டினவர். கூடவே சம்பந்த்ஹர் மட்டுமில்ல புலிகளும் தனிநாட்டை கைகவிட்டவை எனறு சொன்னவர். தனிநாட்டை கைகவிட்டதை நியாப்படுத்தினவர்.

இப்ப திடீரென்று சிங்களசம்பந்தி விக்னேஸ்வரன் என்றுறார். ஏன் அப்ப இவர்க்கு உந்த்ஹ விடயம் தெரியாதோ. தனிநாட்டை கைவிட்டா அந்த்ஹ நாட்டு ஜனாதிபத்யிட்ட பதவியேற்பதுதானே முறை. அப்ப தனிநாட்டை கைவிட்டத ஆதரிச்ச இவர் இதை எப்படி எதிக்கலாம்?

இதில் பொய்த்தனமா அனந்தி அக்காவையும் இழுத்து செய்தி புனைகிறார். இவரும் ஒரு பினாமி யாவாரியோ? சந்த்ஹேகம் மட்டுமே.

சிலருக்கு பதில் இடுவதில்லை என்பதை இன்னொருதிரியில் நாம் மிகவும் நாகரீகமாக சொல்லியுள்ளேன்.

ஸோ மை ஆன்சர் இஸ் "நோ கொமெண்ட்ஸ்".

நெடுக்கு,

பிஸ்டல் வெடிக்குத்குதானப்பா, ஆனா நீங்கள் சொன்ன கோரிக்கைகளுக்காக இப்ப அங்க சீனவெடியும் வெடிப்பதில்லை.

ஒருமாதிரி கூட்டமைப்பை பிரிச்சு நோன்க்கேடுக்க கணக்கபேர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போலகிடக்கு.

 

இந்த மாதிரியான ஒரு நிலைமை உள்ளூராட்சி தேர்தலின் பின்னரும் இருந்தது இப்பவும் இருக்கு.

 

அரசியல் கட்சிகள் பதவிக்காக அடிபடுவது ஒன்றும் புதுசிள்ளத்தானே.. 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.