Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும்

[ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 01:04 GMT ] [ கார்வண்ணன் ]

வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்.

கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் -

*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன்.

*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.

*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.

*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.

*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.

*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.

*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.

*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.

*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20131007109204

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தகவலுக்கு கிருபன்....

  • கருத்துக்கள உறவுகள்

உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்
தமிழ்பற்று இருக்கு
  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமன்ற பதவியேற்பிலே அந்த தமிழ் உரை நிகழ்த்தப்பட்டதாக நியாபகம். உரையின் சாராம்சமே இவரின் பிரதம நீதியரசர் வாய்ப்பில் மண் அள்ளிப்போட்டது.

அது மாத்திரமல்ல 1980ல் இருந்து இவர் தெரிவித்து வந்த அரசியல்/நீதி துறை சார்ந்த கருத்துக்களால் பிரச்சனைக்குள் அகப்பட்டு தொடர் இடமாற்றங்கள் ஒரு வாழ்க்கைமுறையானது. இவர் உயர் நீதிமன்றில் இருந்த சொற்ப் காலத்த்தில் சில மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கியிருந்தார். அதில் சில:
 
1. கைதானப்பின் நடக்கும் கற்பளிப்புக்கு அரசே பொறுப்பு
2. கைதானப்பின் நடக்கும் தாக்குதல்/துன்புறுட்த்லுக்கு அரசே பொறுப்பு
3. சட்டத்துக்கு புறம்பான கைது ஒருவரின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல்
4. சித்திரவதையினூடாக பெறப்படும் வாக்குமூலம் செல்லுபடியற்றது (இதில் ஒருவர் தற் கொலை குண்டுதாரி என பொய் வாக்குமூலம் எழுதவைக்கப்ப்டவர்)
 
Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஒன்றையும் புதிசாச் சொல்லேல்லையே. நீதிபதின்னா.. குறைந்த பட்சம் இதையும் சொல்லேல்லையேன்னா.. அப்புறம் எதுக்கு அந்தப் பதவி..?????! :icon_idea::rolleyes:

இப்படிப் பார்த்தால்... எத்தனையோ சிங்கள.. முஸ்லீம் நீதிபதிகள்.. போலிக்குற்றம் சாட்டப்பட்ட தமிழ் இளைஞர்களை.. யுவதிகளை விடுவித்துள்ளார்கள். அவர்களும் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதியாகப் போட்டியிடலாம் போல இருக்கே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா நெடுக்கு நீங்கள் இலங்கையின் நீதி துறைக்கு கொடுக்கும் சேர்டிபிக்கேட் பிரமாதம். உண்மை என்னவெனில் எல்லா நீதிபதிகளும் கண்ணை மூடிக்கொண்டு தீவிரவாதிகளை அடையுங்கள் சிறையில் என்று தீர்ப்பெழுதியபோது, தமிழராக இருந்தும் திடமாக தீர்ப்பு வழங்கி அதனால் பழிவாங்கலுக்கு உள்ளாகியும் தொடர்ந்த்ஹும் மனச்சாட்சி படிதீர்ப்பு கொடுத்தவர் இவர்.

புலத்தில் ஒடி வந்து உயிரை காப்பாற்றிய படி ஆற்றையும் பிள்ளையள் செத்து நமக்கு நாடு பிடிச்சுத்தராயினமோ என்று அங்கலாய்க்கும் நமக்கு அவரை குறம் சொல்ல லாயக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஓடி வந்ததற்காக எல்லாரும் அப்படி ஓடி வந்ததாகக் கருத முடியாது. மேலும்.. விக்கியரை விட சில சிங்கள நீதிபதிகள் தமிழ் கைதிகள் மீது மனிதபிமானம் கூடக் காட்டி இருக்கும் நிகழ்வுகளும் இருக்குது. அப்படி காட்டி விடுவிக்கப்பட்டவர்களில் எமக்குத் தெரிந்தவர்களும் உளர்..! எல்லா நாடுகளிலும் நீதித்துறையில் நேர்மையான சிலரைக் காண முடியும். அதில் சிறீலங்கா விதிவிலக்கல்ல. அதற்காக சிறீலங்காவின் நீதித்துறையே சிறந்தது என்பதல்ல அர்த்தம். மிக மோசமான நீதித்துறையாகவும் அது உள்ளது. மேலும்.. விக்கியர் பெரிய யோக்கியமானவர் என்றும் கிடையாது. அவர் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக முக்கிய தீர்ப்புக்களையும் வழங்கிய குற்றச்சாட்டுக்கும் உரியவர்..! :icon_idea:

இவர் கம்பன் கழகத்துள் உள்ளிளுக்கப்பட்டதில் இருந்து ஓரளவுக்கு தெரியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் பெரிய யோக்கியமானவர் என்றும் கிடையாது. அவர் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக முக்கிய தீர்ப்புக்களையும் வழங்கிய குற்றச்சாட்டுக்கும் உரியவர்..! :icon_idea:

இவர் கம்பன் கழகத்துள் உள்ளிளுக்கப்பட்டதில் இருந்து ஓரளவுக்கு தெரியும். :icon_idea:

இதற்கான ஆதாரம் இருந்தால், இணைக்கவும்.

நீங்க ஓடி வந்த்ஹீங்களோ நடந்து வந்த்ஹீங்களோ, இனமானப்போர் நடக்கும் போது அதில் கலந்து கொள்ளாமல் நாட்டை விட்டு என்ன காரணுத்த்காகவேணும் வெளியேற எல்லோரும் "ஓடிவந்த்ஹவர்களே".

ஆதாரம் கேட்டது கம்பன் கழக விடயத்துக்கல்ல. தீர்ப்பு விடயத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் உங்களுக்குப் பொருந்தமான வரைவிலக்கணம். அதனையே எல்லோருக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. எத்தனையோ பேர் எத்தனையோ வகையில் போராடிட்டு.. போராட்டத் தேவைப்பாட்டோடு வெளில வந்தவையும் இருக்கினம்..!

மேலும்... இவரின் தமிழினப் படுகொலையாளர்களுக்கு சார்பான தீர்ப்பு என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதன் தொடர்ச்சியே இப்போது மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணமும்.

ஒரு சின்ன உதாரணம்....

25 September, 1982:

"The Mallakam Magistrate, Mr. C. V. Wigneswaran, discharged Lieutenant Mandukodi de Saram and Privates K. J. Silva and R. T. Silva on 22 September, on the instructions of the Attorney General Mr. Shiva Pasupati. The three army men were earlier remanded and then bailed out in connection with the shooting of a lame youth Kandiah Navaratnam at Atchuvely on the night of 20 February."

http://www.uthr.org/BP/volume1/Chapter3.htm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொமெடி. தமிழ் இளஞனருக்கு எதிரா முக்கிய தீர்ப்புகளை வழங்கினார் எண்டு சொன்னியள். ஆதாரம் கேட்டா 1982ல அர்ரோனி ஜெனெரல் கூறியதின் பின் அவர் 3 சிப்பய்களை விடிவித்த ஆதாரத்தை நீட்டுறீங்க.

முதலாவது இது தமிழ் இள்னருக்கு எதிராக அவர் வழங்கிய முக்கிய தீர்ப்பு இல்லை

இரண்டாவது நீதிபதி தான் விரும்பியவரை எல்லாம் பிடித்து அடைக்க முடியாது.

நடந்தது என்னவென்றால், கிரிமினல் குற்றங்களை அரசே தொடுக்கும், அர்ரோனி ஜெனெரல் இந்த மூவருக்கும் எதிரான வாழ்க்கை வாபஸ் பேரு விட்டார். அர்ரோனி ஜெனெரலே வழக்கை வாபஸ் பெற்ற பின், இல்லை இல்லை குற்றவாளிகளை நான் விடவே முடியாது என்று எந்த நீதிபதியாலும் சொல்ல முடியாது. மூன்றாவது வழக்கை வாபஸ் பெற்றவர் சிவா பசுபதி. இவரை பற்றி, போயாட்டத்துக்கு இவர் செய்த பங்களிப்பு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. தெரிந்திருந்த்ஹாலும் என்ன, நரம்பில்லாத நாக்கால் துரோகி, சிங்கள சம்பந்த்ஹி அது இதுன்னு பட்டம் ஏதாவது கொடுத்து விடமாட்டீர்களா என்ன.

நாட்டை விட்டு ஓடி வந்தது - ஓமோம் இப்படித்தான் பல புல பினாமி வியாபாரிகள் சொல்லித்திரியினம். புலத்தில வேலை செய்யசொல்லி தலைவரே அனுப்பினார் எண்டு. என்னக்கும் ஒருத்தர் சொன்னவர், வாறதுக்கு முதல் நாள் தலைவர் தன் கையால பிட்டும் ஆட்டுக்கறியும் சமைச்சு தந்தவர் என்று. ஈரல் பொரியல் செய்யேல்லையே எண்டு கேட்டுட்டு வந்திட்டன். இப்படியும் ஒரு பிழைப்பு. அதுசரி அவர்களின் சொத்தையே இனிவரமாட்டினம் எண்ட துனிவில ஆட்டைய போட்டவை, அவர்தான் ஏஜெண்ட் மூலமா என்னை மட்டுமல்ல என்ன்ரமுழுக்குடும்பத்தையும் அனுபினவை எண்டு சொல்லவே கூச்சப்படப்போகினம்.

அவர் ஒரு ஒரு சின்ன உதாரணம் என்று கூறியுலார். வேறு உதாரணங்கள் அவர் கொண்டுவருவார். அவசரப்படாதீர்கள் கோஷன்.  :mellow: 

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும்

[ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 01:04 GMT ] [ கார்வண்ணன் ]

வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்.

கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் -

*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன்.

*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.

*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.

*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.

*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.

*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.

*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.

*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.

*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20131007109204

ஒரு அசல் மேட்டுக்குடி பூசுவா.

பிரித்தானியாவிடம் இருந்து இந்திய மேட்டக்குடிகளிடம் அதிகாரம் கைமாறியதே இந்திய சுதந்திரமாகும். 17 மில்லியன் மக்களை தீண்டப்படாதவர்காள வைத்தக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீத்திக்கொள்வார்கள்.

புலிகளின் காலத்திற்குப் பின்னரான மேட்டக்குடிகளின் அதிகாரம் நோக்கிய பாய்ச்சல் தமிழர்களுக்கான விமோசனமாக இருக்கவாய்ப்பில்லை.

எதிர்காலத்தில் தாயத்தமிழர்கள் மறுபடியும் இரண்டு அதிகாரசக்திகளுக்கு எதிராக பயணிக்கவேண்டும் ஒன்று சிங்களப்பேரினவாதம் மற்றது தமிழருக்குள் தமிழரை அடக்கி ஆளவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டிக்குடுக்கவும் கூடிய பூசுவாக்களுக்கு எதிராகவும் பயணிக்கவேண்டியிருக்கும்.

எதிர்காலத்தில் ஒருவேளை தமிழர்கள் ஆயுதத்தை  கையில் எடுக்க நேர்ந்தால் ஒன்றுக்கு ஒன்பது அமிர்தலிங்கங்களையும் கதிர்காமர்களையும் பலியெடுப்பதும் அதுவே பின்னர் பயங்கரவாதமாக மாறுவதுமாக இருக்கலாம்.

தற்போதைய நிகழ்வுகள் என்பது மீண்டும் பழைய இடத்துக்கு செல்வதாகவே இருக்கின்றது. இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்காக இருந்த பிரதேசவாதங்கள் மாவட்ட ரீதியாக பலவாக உருவாகும். கூட்டமைப்புக்கு பதில் சக்திகள் உருவாகும்.

என்று ஒரு பூசுவா அதிகாரத்திற்கு வருகின்றானோ அவன் மிகவிரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் எதிரியாவான்.

மாற்றமும் எழுச்சியும் புரட்சியும் அடித்தட்டு மக்களிடம் இருந்து ஆரம்பமானால் மட்டுமே விடுதலையும் விமோசனமும் சாத்தியம்.

குருட்டுக் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காலம் விரைவாகவே பதில்சொல்லும்.

(இது தாயக நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட எனது எண்ணம், மறுப்பவர் மறுக்கலாம். தொடர்ச்சியான விவாதத்தை முன்வைத்து இக்கருத்து இல்லை)

நீங்கள் கூறுவது சரி போலவே உள்ளது, சண்டமாருதன்!

இந்தியாவின் 'ஆழுமை' மீது எனக்கு என்றுமே நம்பிக்கையிருந்ததில்லை! இனி நம்பிக்கை வரும் என்று நம்பினால், அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகவே இருக்கும்! :o

எனது பார்வையில், எமது பிரச்னையை, எண்பதுகளில் இருந்த நிலைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது என்றே சொல்வேன்!

இழந்த அப்பாவி உயிர்கள், நடத்தப்பட்ட கொலைகள், தொலைந்து போன எமது தலைமுறையின் வாழ்வுகள், இராணுவ அராஜகங்கள் எல்லாமே காளி தேவியின் வேள்விக்குப் பலியிடப்பட்ட நர பலிகளாகப், பார்க்கப்படும் 'பார்வையைத்' தான் என்னால், ஜீரணிக்க முடியாமல் உள்ளது! :icon_mrgreen:

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

எதிர்காலத்தில் தாயத்தமிழர்கள் மறுபடியும் இரண்டு அதிகாரசக்திகளுக்கு எதிராக பயணிக்கவேண்டும் ஒன்று சிங்களப்பேரினவாதம் மற்றது தமிழருக்குள் தமிழரை அடக்கி ஆளவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டிக்குடுக்கவும் கூடிய பூசுவாக்களுக்கு எதிராகவும் பயணிக்கவேண்டியிருக்கும்.

எலும்பில்லா நாக்கினால் பேசும் குணம். தமிழரில் கூட்டிக்கொடுக்கும் அரசியலை ஆரம்பித்துவைத்தது போல்சுவிக் துரையப்பா. தமிழரின் சரித்திரம் தெரியாமல் கருத்து எழுதிறார்கள். SLFP இடதுசாரிக்  கைமுணுக்களுக்கு போல்சுவிக் துரையப்பா யாழ்ப்பாணத்தில் ஓட்டை சிரட்டைகள் தேடி பொறுக்கி எடுத்து கொடுக்கப்போய்த்தான் சிவகுமாரன் கறல் வைத்தவன். நல்ல குடுமபத்தில் பிறந்த ஒன்றும் அங்கே அப்படி எதுவும் செய்வது கிடையாது. இன்றைய செயலார் நாயகமும் போல்சுவிக் துரையப்பாவின் அடிதொடியே.

என்று ஒரு பூசுவா அதிகாரத்திற்கு வருகின்றானோ அவன் மிகவிரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் எதிரியாவான்.

 இந்த கம்யூனிசத்தைத்தான் "மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடை பிடிக்கும் கம்யூனிஸ்டுக்கள்" என்று சிங்களவர் நகைப்பது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அசல் மேட்டுக்குடி பூசுவா.

மாற்றமும் எழுச்சியும் புரட்சியும் அடித்தட்டு மக்களிடம் இருந்து ஆரம்பமானால் மட்டுமே விடுதலையும் விமோசனமும் சாத்தியம்.

குருட்டுக் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காலம் விரைவாகவே பதில்சொல்லும்.

(>)

இதுவும் ஒரு கனவே சாண்டமருதன் ......ஆசியாவிலோ அல்லது உலகத்திலோ அப்படி ஒரு நிகழ்வு நடைபெறபோவதில்லை கற்பனை கதைக்கு மட்டும் சரி.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அசல் மேட்டுக்குடி பூசுவா.

பிரித்தானியாவிடம் இருந்து இந்திய மேட்டக்குடிகளிடம் அதிகாரம் கைமாறியதே இந்திய சுதந்திரமாகும். 17 மில்லியன் மக்களை தீண்டப்படாதவர்காள வைத்தக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீத்திக்கொள்வார்கள்.

புலிகளின் காலத்திற்குப் பின்னரான மேட்டக்குடிகளின் அதிகாரம் நோக்கிய பாய்ச்சல் தமிழர்களுக்கான விமோசனமாக இருக்கவாய்ப்பில்லை.

எதிர்காலத்தில் தாயத்தமிழர்கள் மறுபடியும் இரண்டு அதிகாரசக்திகளுக்கு எதிராக பயணிக்கவேண்டும் ஒன்று சிங்களப்பேரினவாதம் மற்றது தமிழருக்குள் தமிழரை அடக்கி ஆளவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டிக்குடுக்கவும் கூடிய பூசுவாக்களுக்கு எதிராகவும் பயணிக்கவேண்டியிருக்கும்.

எதிர்காலத்தில் ஒருவேளை தமிழர்கள் ஆயுதத்தை  கையில் எடுக்க நேர்ந்தால் ஒன்றுக்கு ஒன்பது அமிர்தலிங்கங்களையும் கதிர்காமர்களையும் பலியெடுப்பதும் அதுவே பின்னர் பயங்கரவாதமாக மாறுவதுமாக இருக்கலாம்.

தற்போதைய நிகழ்வுகள் என்பது மீண்டும் பழைய இடத்துக்கு செல்வதாகவே இருக்கின்றது. இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்காக இருந்த பிரதேசவாதங்கள் மாவட்ட ரீதியாக பலவாக உருவாகும். கூட்டமைப்புக்கு பதில் சக்திகள் உருவாகும்.

என்று ஒரு பூசுவா அதிகாரத்திற்கு வருகின்றானோ அவன் மிகவிரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் எதிரியாவான்.

மாற்றமும் எழுச்சியும் புரட்சியும் அடித்தட்டு மக்களிடம் இருந்து ஆரம்பமானால் மட்டுமே விடுதலையும் விமோசனமும் சாத்தியம்.

குருட்டுக் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காலம் விரைவாகவே பதில்சொல்லும்.

(இது தாயக நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட எனது எண்ணம், மறுப்பவர் மறுக்கலாம். தொடர்ச்சியான விவாதத்தை முன்வைத்து இக்கருத்து இல்லை)

உங்கள்  கருத்தடன் முரண்படமுடியாத அளவுக்கு என் இனம் உள்ளது உண்மைதான்

ஆனால் உடன்படமுடியவில்லை

காரணம் 

கிட்டத்தட்ட

100  வருட போராட்டத்தில்  தமிழர்களிடம் பெரும் அனுபவமும் 

வலியும் இருக்கிறது

அது 

எம்மையும்  ஏன் வழி தவறும் தலைவர்களையும்  அது வழி நடாத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொமெடி. தமிழ் இளஞனருக்கு எதிரா முக்கிய தீர்ப்புகளை வழங்கினார் எண்டு சொன்னியள். ஆதாரம் கேட்டா 1982ல அர்ரோனி ஜெனெரல் கூறியதின் பின் அவர் 3 சிப்பய்களை விடிவித்த ஆதாரத்தை நீட்டுறீங்க.

முதலாவது இது தமிழ் இள்னருக்கு எதிராக அவர் வழங்கிய முக்கிய தீர்ப்பு இல்லை

இரண்டாவது நீதிபதி தான் விரும்பியவரை எல்லாம் பிடித்து அடைக்க முடியாது.

நடந்தது என்னவென்றால், கிரிமினல் குற்றங்களை அரசே தொடுக்கும், அர்ரோனி ஜெனெரல் இந்த மூவருக்கும் எதிரான வாழ்க்கை வாபஸ் பேரு விட்டார். அர்ரோனி ஜெனெரலே வழக்கை வாபஸ் பெற்ற பின், இல்லை இல்லை குற்றவாளிகளை நான் விடவே முடியாது என்று எந்த நீதிபதியாலும் சொல்ல முடியாது. மூன்றாவது வழக்கை வாபஸ் பெற்றவர் சிவா பசுபதி. இவரை பற்றி, போயாட்டத்துக்கு இவர் செய்த பங்களிப்பு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. தெரிந்திருந்த்ஹாலும் என்ன, நரம்பில்லாத நாக்கால் துரோகி, சிங்கள சம்பந்த்ஹி அது இதுன்னு பட்டம் ஏதாவது கொடுத்து விடமாட்டீர்களா என்ன.

நாட்டை விட்டு ஓடி வந்தது - ஓமோம் இப்படித்தான் பல புல பினாமி வியாபாரிகள் சொல்லித்திரியினம். புலத்தில வேலை செய்யசொல்லி தலைவரே அனுப்பினார் எண்டு. என்னக்கும் ஒருத்தர் சொன்னவர், வாறதுக்கு முதல் நாள் தலைவர் தன் கையால பிட்டும் ஆட்டுக்கறியும் சமைச்சு தந்தவர் என்று. ஈரல் பொரியல் செய்யேல்லையே எண்டு கேட்டுட்டு வந்திட்டன். இப்படியும் ஒரு பிழைப்பு. அதுசரி அவர்களின் சொத்தையே இனிவரமாட்டினம் எண்ட துனிவில ஆட்டைய போட்டவை, அவர்தான் ஏஜெண்ட் மூலமா என்னை மட்டுமல்ல என்ன்ரமுழுக்குடும்பத்தையும் அனுபினவை எண்டு சொல்லவே கூச்சப்படப்போகினம்.

இது ஒரு சின்ன உதாரணம்... நாம் தமிழர் சீமானின் அறிக்கையில் இது குறித்து விலாவாரியாகவும் சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பார்க்கவும்...

சுடுபட்டவன்... தமிழன். யாரோ.. ஆகாயத்தில இருந்து வந்து சுட்டிட்டு போயிட்டினம். ஆகவே இந்தத் தீர்ப்பு தமிழனுக்கு எதிரானதல்ல. சிங்களவனுக்கு எதிரானது... ஏன்னா அப்பாவி சிங்களச் சிப்பாயை குற்றவாளி ஆக்கிட்டினம்... இது தான் உங்களின் கருத்து இங்கும்...............??????!

சிங்களப் படைகள் செய்த குற்றங்கள் இப்படித்தான் மறைக்கப்பட்டன. நீதிக்கு அப்பால் பூசி மொழுகப்பட்டன. அதற்கு ஒரு காலத்தில்... விக்னேஸ்வரன் போன்றவர்களும் காரணமாக இருந்துள்ளார்கள்.

சிங்களப் படைகளை அட்ரானி ஜெனரல் கேட்டார் என்று விட்டாச்சு..! அட்ரானி ஜெனரல் பிடிக்கச் சொல்லிச் சொன்னா.. தமிழ் அப்பாவியையும் பிடிப்பீங்க. உள்ள வைப்பீங்க. அவர் விடச் சொன்னா குற்றவாளிகளையும்.. விடுவீங்க..! அப்புறம் எதுக்கு நீதிபதின்னு குந்திக்கிட்டு இருக்கனும். பதவியை நீதியோட செய்யமுடியல்லைன்னா.. விலகிட வேண்டியது தானே. அதையேன்.. இவ்வளவு தமிழ் மக்கள் பாசமுள்ள விக்னேஸ்வரன் செய்யேல்ல. இறுதிவரை சிங்களம் பென்சன் கொடுக்கும் வரை அட்ரானி ஜெனரல் சொன்னதற்கு அமைய.. தமிழர்களுக்கு எதிராக தீர்ப்பளிச்சிட்டு தானே இருந்தீர்கள். எத்தனையோ தமிழ் நீதிபதிகள் தொழிலைவிட்டே போயிருக்காங்களே..???!

அட்ரானி ஜெனரல் தான் நீதிபதியா..???! அவரை கேள்வி கேட்க யாருக்குமே அதிகாரம் இல்லையோ..????! என்னமா கதை அளக்கிறார்கள். அரச தரப்பு வக்கீலின் விளக்கம் எப்போதும் நீதி என்று எவன் சொன்னது..?????????!

ஓடிவந்திட்டு.. அவன் அப்படி ஓடிவந்தான்.. நான் இப்படி ஓடிவந்தான் என்று அளந்துக்கிட்டு இருக்கிறது நீங்க தான். ஆனால் நாங்க சொல்லவாறது நாட்டை விட்டு வெளியேறிய எல்லோரும் போராட்டத்தை தவிர்க்கனுன்னு வரேல்ல. வேறு பல காரணங்களாலும் வந்துள்ளனர். போராட்ட நோக்கம் கருதியும் வந்துள்ளனர். ஒன்றை விளங்கிக்க முடியல்ல.. பொத்திக்கிட்டு இருப்பது அழகு..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ஒரு அசல் மேட்டுக்குடி பூசுவா.

பிரித்தானியாவிடம் இருந்து இந்திய மேட்டக்குடிகளிடம் அதிகாரம் கைமாறியதே இந்திய சுதந்திரமாகும். 17 மில்லியன் மக்களை தீண்டப்படாதவர்காள வைத்தக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீத்திக்கொள்வார்கள்.

புலிகளின் காலத்திற்குப் பின்னரான மேட்டக்குடிகளின் அதிகாரம் நோக்கிய பாய்ச்சல் தமிழர்களுக்கான விமோசனமாக இருக்கவாய்ப்பில்லை.

எதிர்காலத்தில் தாயத்தமிழர்கள் மறுபடியும் இரண்டு அதிகாரசக்திகளுக்கு எதிராக பயணிக்கவேண்டும் ஒன்று சிங்களப்பேரினவாதம் மற்றது தமிழருக்குள் தமிழரை அடக்கி ஆளவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டிக்குடுக்கவும் கூடிய பூசுவாக்களுக்கு எதிராகவும் பயணிக்கவேண்டியிருக்கும்.

எதிர்காலத்தில் ஒருவேளை தமிழர்கள் ஆயுதத்தை  கையில் எடுக்க நேர்ந்தால் ஒன்றுக்கு ஒன்பது அமிர்தலிங்கங்களையும் கதிர்காமர்களையும் பலியெடுப்பதும் அதுவே பின்னர் பயங்கரவாதமாக மாறுவதுமாக இருக்கலாம்.

தற்போதைய நிகழ்வுகள் என்பது மீண்டும் பழைய இடத்துக்கு செல்வதாகவே இருக்கின்றது. இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்காக இருந்த பிரதேசவாதங்கள் மாவட்ட ரீதியாக பலவாக உருவாகும். கூட்டமைப்புக்கு பதில் சக்திகள் உருவாகும்.

என்று ஒரு பூசுவா அதிகாரத்திற்கு வருகின்றானோ அவன் மிகவிரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் எதிரியாவான்.

மாற்றமும் எழுச்சியும் புரட்சியும் அடித்தட்டு மக்களிடம் இருந்து ஆரம்பமானால் மட்டுமே விடுதலையும் விமோசனமும் சாத்தியம்.

உங்களுக்கு மேட்டுக்குடி காய்ச்சல் அதிகள் எதுக்கெடுத்தாலும் மேட்டுக்குடி பிரச்சனை. முதலில் உங்கள் மனதுகளில் இருந்து சாதியத்தை தூக்கி எறியுங்கள் . பதவிக்கு வந்தவன் தமிழனா? இனப் பற்றாளனா? என்று பலர் கருத்தை சொன்னால் நீங்கள் இடையில் மேட்டுக் குடி அவர் சாத்துக் குடி என்று சப்பை கட்டுகிறீர்கள். அதாவது காட்டி பிளஸ் கூட்டி கொடுப்பவன்  தாழ்த்தப் அட்ட சமூகத்தில் இருந்து வந்தால் உங்களுக்கு பிரச்னை இல்லை நல்லாய் ஆதரிப்ப்பீங்கல் காரணம் மேட்டுக்குடி காய்ச்சல். ஆனால் தப்பி தவறி வந்தவர் ஒரு மேட்டுக் குடி என்றால் அது உங்களுக்கு பிரச்னை. இந்தியாவின் பெரும் சாதிப் பிரச்னை இலங்கையிலும் வளரனும் என்று நினைப்பவர்கள் நீங்கள். இனியாவது வாறவன் தமிழனா இனமானம் உடையவனா என்று பாருங்கள்.

மாற்றமும் எழுச்சியும் புரட்சியும் அடித்தட்டு மக்களிடம் இருந்து ஆரம்பமானால் மட்டுமே விடுதலையும் விமோசனமும் சாத்தியம்.

குருட்டுக் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காலம் விரைவாகவே பதில்சொல்லும்.

கருணா, பிள்ளையான், டக்கி, ராஜபக்சா குடும்பம், ஏன் தமிழ் நாடில் கருணாநிதி.....

நிறைத்தான் எழுச்சியும் புரட்சியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு சட்டம் தெரியாட்டி அதுக்கு விக்னேஸ்வரன் என்ன செய்ய முடியும்.

இப்ப உதாரணதுக்கு நீங்க என்ன அடிச்சிட்டீங்க எனறு வைங்க. இது நடந்தது கனடாவில். கனடா போலிஸ் என்னை கைது செய்யுது. வழக்கு கோட்டுக்கு வந்த போது, சாட்சி ஏதுமில்லை வழக்க தொடரவிருப்பம் இல்லை என்று போலிஸ் அல்லது அட்டோனிஜெனரல் கோர்ட்டில் சொல்கிறார். அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு என்னை விடுவிப்பதை தவிர வேறு வழியில்லை.

இதுதான் சட்டம். சந்த்ஹேகம் எண்டால் தெரிந்த பிரகிராசி யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.

வேலையை விட்டிடு வரேல்லையே என்பது விதண்டா வாதம். இலங்கையில் வேலை செய்த எல்லா தமிழரும் வேலை விட்டு வந்த்ஹார்களா என்ன?

:o

கனடா போலிஸ் ரொம்ப மோசம். :wub: அடி வேண்டினவனையே கைது செய்யும் போலீசா :rolleyes:

:D

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு சட்டம் தெரியாட்டி அதுக்கு விக்னேஸ்வரன் என்ன செய்ய முடியும்.

இப்ப உதாரணதுக்கு நீங்க என்ன அடிச்சிட்டீங்க எனறு வைங்க. இது நடந்தது கனடாவில். கனடா போலிஸ் என்னை கைது செய்யுது. வழக்கு கோட்டுக்கு வந்த போது, சாட்சி ஏதுமில்லை வழக்க தொடரவிருப்பம் இல்லை என்று போலிஸ் அல்லது அட்டோனிஜெனரல் கோர்ட்டில் சொல்கிறார். அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு என்னை விடுவிப்பதை தவிர வேறு வழியில்லை.

இதுதான் சட்டம். சந்த்ஹேகம் எண்டால் தெரிந்த பிரகிராசி யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.

வேலையை விட்டிடு வரேல்லையே என்பது விதண்டா வாதம். இலங்கையில் வேலை செய்த எல்லா தமிழரும் வேலை விட்டு வந்த்ஹார்களா என்ன?

இது இராணுவம் பொதுமக்களை சுட்ட வழக்கு. சிவில் வழக்கு அல்ல..! பாதிக்கப்பட்டவர் இருக்கத்தக்கதாக சாட்சி இல்லை என்று சொல்லி.. விடுவிக்க இயலாது. அட்ரானிஜெனரல் சொல்வதை எல்லாம் நீதிபதி நம்பனும் என்றில்லை. மேலதிக விசாரணைக்கு அல்லது இராணுவ பொலிஸின் உள்ளக விசாரணை அறிக்கைக்கு உத்தரவிடலாம்..! அப்படி நடந்த வழக்குகள் உள்ளன. நீங்கள் கொஞ்சம் பெட்டிக்கு வெளில வந்து சிந்திக்கனும். அட்ரானிஜெனரால் மறுக்கப்பட்டு.. ஆனால்.. பின்னர் மேலதிக விசாரணை அதிகாரிகளால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில்.. விடுவிக்கப்பட்ட பலர் உளர்..! இந்த வழக்கிலும் அதையே கோரி இருக்கலாம்..!

அண்மையில் கூட திருமலை 5 மாணவர்கள் கொலை வழக்கில்.. சாட்சிகள் இல்லை என்று கைவிடப்பட்ட விசாரணைகள்.. வெளியார் அழுத்தம் காரணமாக அதிரடிப்படையினரின் கைதோடு தொடர்கிறது..!

நீங்கள் கனடாவை கொண்டு வந்து இதற்குள் செருகி.. சிறீலங்காவின் மோசமான நீதிநடைமுறைகளை மறைக்க முற்படக் கூடாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பார்வை உங்களுக்கு காளான். இதற்கு நான் சர்வதேச விசாரனை கோருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதமில்லை. ஒருவர் நீதியான முறையில் பணியாற்ற இயலாத இடத்தில்.. அவரால் எப்படி நீதிக்குப் புறம்பாக கருமமாற்ற முடியும். எத்தனையோ தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னர் கடமையில் இருந்து வெளியேறிப் போயினர்..! காரணம்.. சிங்களவர்களால் தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பாரபட்சம்.! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.