Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜினாமா செய்யும் தீர்மானத்தை கைவிட்டார் செல்வம் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2(2451).jpg
-எஸ்.றொசேரியன் லெம்பேட்

டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைச்கலநாதன் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ்.மாவட்டத்திற்கு   வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. 

கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன். 

ஆனால், எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்கமாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜினாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மைமையை உணர்ந்து எனது இராஜினாமா தீர்மானத்தை கைவிட்டுள்ளேன்' என்று  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. முடியல்ல.. இவ்வங்கட காமடி.. வேற..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்ததுதான்.,அடிக்கடி தமிழ்நாடு போய் வராதீங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எல்லாம் கலைஞரிடத்தில் கற்றுக்கொண்டதுதான்  :D
 

இது மாத்திரமில்லை இந்த திரியில் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=130383&p=944948இன்னொரு காமடி போகுது 

முன்னபின்ன யோசிக்காமல் அறிக்கை விடுறது பிறகு அவசொன்னா இவசொன்னா எண்டு கதையை மாத்துறது.

 

முன்னபின்ன அபிப்பிராயத்தை கேட்டு பலகினாத்தானே எல்லாம்.

அறிவுபூர்வான முடிவு. தனிப்பட்ட முடிவுகளாயினம் சரி அரசியல் முடிவுகளாயினும் சரி முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சிவசப்படாது நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. சிறிய விடயங்களுக்காக முரண்பட்டு கொள்ளாமல் ஒற்றுமை, புரிந்துணர்வு அவசியம். ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளால் அடைந்த இழப்புக்கள் பட்டறிவு உண்டு.

இருக்கும் தலைவர் பதவியே எதிர்பாராது கிடைத்தது என்பது செல்வம் அண்ணனுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகின்றேன் எதற்கும் இனியாவது அறிக்கைகள் விடுவதற்கு முன்னர் பலதடவை யோசித்து அறிக்கைவிடுங்கள் இல்லையெனில் இருக்கிறதும் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் விட்டிட்டு ஓட டெலோ வின் தலைமை பொறுப்பை ஏற்று அதை கட்டிக்காத்த பெருமை செல்வம் MP க்கு உண்டு அந்த வகையில் செல்வத்தின் முடிவு சரியானதே

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி வகையறாக்களோடு ஒப்பிடால் செல்வம் எவ்வளவோ மேல். நல்ல முடிவு செல்வம். முடிந்தால் சிவாஜிஜை வெளியில் போடப்பாருங்கள். குழப்பங்காசி.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.