Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணித்து வளியனுப்பும் திறன் பூனைகளுக்கு உண்டா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

USA-cat-150-news.jpg

மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்... ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் 'ஆஸ்கர்'.

  

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில

செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

 

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

 

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு �ஆஸ்கர் பூனை� என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

 

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, "ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது" என்கிறார்.

 

"சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும்.எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94807&category=CommonNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூனைக்கு.... ஆஸ்கார் விருது கொடுத்து...... கௌரவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேதியியலும் இல்லை.. ஒன்றுமில்லை.. யம தூதர்களின் பாசக்கயிறு கண்ணுக்குத் தெரிகிறது.. :o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வேதியியலும் இல்லை.. ஒன்றுமில்லை.. யம தூதர்களின் பாசக்கயிறு கண்ணுக்குத் தெரிகிறது.. :o:rolleyes:

 இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அதே கயிறு தானா? :o

 

ரொம்பப் பழைமை வாதியா இருப்பார்கள் போல இருக்கே, யம தூதுவர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மனிதர்களுக்கு புலப்படாத விடயங்கள் அனைத்தும் மிருகங்களுக்கு புரியும் என்பது நம் முன்னோர்கள் கூற்று. இயற்கை அனர்த்தங்கள் அதாவது புயல்,நிலநடுக்கம், கடல்பெருக்கெடுப்பு போன்றவற்றை மிருகங்களும் பறவைகளும் முன்கூட்டியே அறிகின்றனவாம்.
 
ஊரிலும் யாராவது மரணிக்கப்போகின்றார்கள் என்றால் நாய்கள் ஊளையிடும்....சுடலைக்குருவி அபாயக்குரல் தரும். ஆந்தைகள் அலறும்.

 

 
ஊரிலும் யாராவது மரணிக்கப்போகின்றார்கள் என்றால் நாய்கள் ஊளையிடும்..

 

 

 

அநுபவத்தில் கண்டிருக்கின்றேன், அப்பாடா இந்த வெளி நாடுகளில் உந்தப் பிரச்சனை இல்லை, நன்றி இறைவா!!

எப்பிடித் தான் மிஸ்டர் நாய் கண்டுபிடிக்கிறாரோ தெரியாது.

இது பற்றிய ஆக்கங்கங்கள் இருந்தால் இணைத்துவிடுங்கோப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

அநுபவத்தில் கண்டிருக்கின்றேன், அப்பாடா இந்த வெளி நாடுகளில் உந்தப் பிரச்சனை இல்லை, நன்றி இறைவா!!

எப்பிடித் தான் மிஸ்டர் நாய் கண்டுபிடிக்கிறாரோ தெரியாது.

இது பற்றிய ஆக்கங்கங்கள் இருந்தால் இணைத்துவிடுங்கோப்பா!

ஆக வெளிநாடுகளிளா? ஒரு நாளில் இருந்து ஒரு மாதம்வரை நித்திரை வராமல் பன்னுவதற்க்கு வெள்ளைகளிடம் நிறைய உண்மை போன்ற பக்கேச் கதைகள் உள்ளன உதாரணத்துக்கு கூகுளில் black dog red eyes என்று தட்டி வரும் கதைகளில் ஒன்றை படிக்கவும் அதன் பிறகு கறுப்பு நாயை எங்கு கண்டாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் ஏற்படும்.கொசுறு தகவல் நம்ப நண்பர் ஒருத்தர் அடாவடி பன்னும் அயல் வெள்ளையை சமாளிக்க கறுப்பு நாயை வளர்க்க தொடங்கிய பிற்பாடு காலையும் மாலையும் வணக்கத்துடன் வெள்ளை அடங்கிட்டுது . :)

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் விடியல் காலையிலேயே அலைமகள் எனும் நேயருக்காக  :D

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் விடியல் காலையிலேயே அலைமகள் எனும் நேயருக்காக  :D

 

 

என்னே  பாசம்

என்னே பாசம்

விடிய  விடிய  தங்கை தூங்காதிருக்க....

அண்ணன்  கண் விழித்து இணைத்த இணைப்பை பாரீர்......... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆக வெளிநாடுகளிளா? ஒரு நாளில் இருந்து ஒரு மாதம்வரை நித்திரை வராமல் பன்னுவதற்க்கு வெள்ளைகளிடம் நிறைய உண்மை போன்ற பக்கேச் கதைகள் உள்ளன உதாரணத்துக்கு கூகுளில் black dog red eyes என்று தட்டி வரும் கதைகளில் ஒன்றை படிக்கவும் அதன் பிறகு கறுப்பு நாயை எங்கு கண்டாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் ஏற்படும்.கொசுறு தகவல் நம்ப நண்பர் ஒருத்தர் அடாவடி பன்னும் அயல் வெள்ளையை சமாளிக்க கறுப்பு நாயை வளர்க்க தொடங்கிய பிற்பாடு காலையும் மாலையும் வணக்கத்துடன் வெள்ளை அடங்கிட்டுது . :)

 

நீங்கள் போட்ட படத்தில ஒண்டும் விளங்கவில்லை. நீங்கள் உங்கள் நாய்க்கு வடிவாகப் பழக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னே  பாசம்

என்னே பாசம்

விடிய  விடிய  தங்கை தூங்காதிருக்க....

அண்ணன்  கண் விழித்து இணைத்த இணைப்பை பாரீர்......... :lol:  :D  :D

பேய்கதை வேணும் என்று அவதான் அடம்பிடிச்சா! அதுதான் யூரியுப்லையிருந்து பிடிச்சுக்கொண்டுவந்து விட்டணான் .பேய் இருப்பது உண்மையென்றால் இரவுகளில் முக்கியமாண கட்டிடங்களின் தானியங்கி உணர்திறன் உள்ள பாதுகாப்பு வீடியோகமராக்களில் ஆதாரம் கிடைச்சிருக்கும் .ஆனாலும் bt telecom field engineerஆய் இரவு வேலையில் இருக்கும் நம்மாள் கடவுளுக்குமுன் பேயை பலவிதங்களில் பார்த்து விட்டானாம் , அப்ப server buildingன் அலாம் சிஸ்டம் ஏன் வேலை செய்வதில்லையோ? என்று கேட்க்க ஆவி எப்படி மாட்டுபடும் என்கிறான் இப்போதுள்ள பேய்களுக்கு பாழடைந்த பங்களாக்களை விட சேர்வர் கட்டிடங்கள் தான் ரொம்ப பிடிக்கும்போல் உள்ளது. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போட்ட படத்தில ஒண்டும் விளங்கவில்லை. நீங்கள் உங்கள் நாய்க்கு வடிவாகப் பழக்கவில்லை.

 

இருங்க உங்களுக்கு ஒண்டு வேண்டினால் ஒண்டு இலவசம் என இரண்டு பேயை அனுப்பி வைக்கிறன் .நாயா? நம்முடையது ஊரிலைதான் வயதுபோய் மாதத்தில் ஒருநாள் போனுக்குள்ளாலைதான் என் குரலைகேட்டு குரைக்கிரார். :o

திங்கள் விடியல் காலையிலேயே அலைமகள் எனும் நேயருக்காக  :D

 

 

நன்றி பெருமாளே. ஆனால் நான் பார்க்கவே இல்லை!

எண்டாலும் ஒருக்காப் பார்ப்பம் எண்டு மனதை திடப்படுத்திக் கொண்டு பார்த்தால் ஒண்டுமே இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் ஒருக்காப் பார்ப்பம் எண்டு மனதை திடப்படுத்திக் கொண்டு பார்த்தால் ஒண்டுமே இல்லையே!

அதுதான் பேய்ய்ய்ய்ய்ய்....................... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பேய்ய்ய்ய்ய்ய்....................... :D  :D  :D

 

 

என்றாலும்

பார்க்க செய்து போட்டீர்களே

நீங்கள் பேய்க்காய்தான்............ :lol:  :D    

(உங்களிடம் பச்சை  வாங்கும் நான்.....??? :D  :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும்

பார்க்க செய்து போட்டீர்களே

நீங்கள் பேய்க்காய்தான்............ :lol:  :D    

(உங்களிடம் பச்சை  வாங்கும் நான்.....??? :D  :lol: )

சரி சரி பார்த்தது பார்ததாக இருக்கட்டும் இந்த வீடியோவை பார்த்து கொஞ்சம் றிலாக்ஸ் பன்னிகொள்ளுங்க சத்தியமாய் இதில் பேய் இல்லைங்க ,,,,,,, :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமாதிரி றிலாக்சிங்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.