Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுக்கு விஜயம் செய்த மேர்வின்! கருணாவுடன் இணைந்து பாலத்தினை பார்வையிட்டார்! (படங்கள்)

Featured Replies

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியளாலர் செத்தது குறைவு, ஏனெண்டால் புலிபகுதியில் எந்த ஒர் சுயாதீன ஊடகமும் ஊடகவியலாலனும் இயங்க விட்ப்படவில்லை. UTHR ஶ்ரீதரன் போனவர்களே உயிர்காக்க கொழும்புக்கு ஓடித்தப்பினர். புட்போல் விளையாடியதர்க்காக அதிபர் ஆனந்தராஜாவை போட்டு தள்ளியவர்கள், ஒரு எதிர்ப்பு ஊடகத்தையா தம்மிடையே விட்டுவைத்திருப்பர். தினக்குரல், தினகரனை மட்டுமல்ல, வீரகேசரி தினக்குரலையே தடை செய்த அமைப்பல்லவா இது?

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

இது அப்பட்டமான பொய்...

1996 வரைக்கும் ஈழநாடு , ஈழமுரசு , உதயன், சாரளம் எண்டு பல ஊடகங்கள் புலிகளின் கட்டுக்குள் இருந்து இயங்கியது...

பொருளாதார தடைகாரணமாக அச்சு பொருட்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில் இருந்த பிரச்சினை காரணமாக வன்னியில் தொடரவில்லை...

தவிரவும் மக்களால் இலங்கை சர்வதேச வானொலி ( வவுனியா பக்கம் இருந்து வானவி வானொலி) பிபிசி தமிழ் சேவை , வெரித்தாஸ் , போண்ற ஊடகங்கள் மக்கள் கேக்க எந்த தடையும் இருக்கவில்லை...

கொழும்பு பத்திரிகைகள் வீரகேசரி முதல் அனைத்து வகையும் தாராளமாக புலிகளின் கட்டுப்பாட்டு கடைகளில் கிடைத்தன...

ஓடியவர்கள் பொருளாதார தடைகளை சமாளித்து தங்களின் சுகவாழ்வை காக்க முடியாமல் ஓடி கொழும்பில் சுகவாழ்வையும் தங்களின் நலனையும் பேண சிங்களத்திடம் அடைக்கலம் தேடினார்களே அண்றி மக்கள் சேவைக்காக ஓடவில்லை... இதில் நான் கூட விதிவிலக்கு இல்லை...

Edited by தயா

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

நான்  நினைக்கின்றேன்

உங்களுக்கு

சுதந்திரப்போராட்டத்துக்கும் அடக்குமுறைக்கும்  வித்தியாசம் தெரியவில்லை என்று.

சுதந்திரப்போராட்ட காலத்தில் சிலவற்றை  மக்களின்  நன்மை கருதி தவிர்க்கக்கேட்பது

தவிர்க்கமுடியாதது............

  • கருத்துக்கள உறவுகள்

1870 மில்லியன் பணத்தில் கட்டப்படும் பாலம் மிகவும் பலமானதாக
இருக்க வேண்டும். அதனால்தான் அமைச்சரும் பிரதி அமைச்சரும்
நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்றார்கள்

புலி அழிந்தற்கான காரணத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களை பார்த்து அனுதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை .

எல்லோரும் போராட போனது தமிழ் மக்களின் விடிவிற்கே ஒழிய ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பார்த்து தேவாரம் பாட அல்ல .

இது எமக்கு புதிதுமல்ல வைரமுத்து இப்பவும் கலைஞரை புகழ்ந்து கவிதை வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார் .

doubtmaster_senthil.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சொல்பவர்களே,

இங்கே நாம் ஒன்றும் புனல் வாதம் அனல் வாதம் செய்யவில்லை. சும்மா கருத்து சொல்கிறோம் அவ்வளவே.

நமது நிலையை யாருக்கும் நிறுவத்தேவையில்லை. எமது கருத்தாடல்களை வழமையாக இங்கே வருபவர்கள் தவிர வேறுயாரும் கவனிப்பதாயும் தெரியவில்லை. ஆக சொல்லவருவதை கண்ணியமாக சொல்லுவோம். நிர்வாகம் தன் நிலையை தெளிவாக சொல்லிவிட்டது. இது அவர்களின் எல்லைக்கோடு. அதை நாம் தாண்டினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.

நாம் பூரண கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவராயின் எமக்கு பிடிக்காத கருத்து எழுதப்படும் போது, என் கருத்தை வெட்டினீர்கள், ஏன் அவர் கருத்தை வெட்டவில்லை என்று கேட்பது அழகல்ல.

நிர்மலன் நீங்கள் சொன்ன புலி/அரசு ஊடக சுதந்திரத்தி ஒப்பீட்டில் ஓரளவு உண்மையுண்டு.

அரச கட்டுப்பாட்டில், பல உட்டகவியளாலர் கொல்லப்பட்டனர், காரணம் அவர்கள் அதுக்கு முன் அரசுக்கெதிராக கருத்து எழுதிவந்தனர்.

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியளாலர் செத்தது குறைவு, ஏனெண்டால் புலிபகுதியில் எந்த ஒர் சுயாதீன ஊடகமும் ஊடகவியலாலனும் இயங்க விட்ப்படவில்லை. UTHR ஶ்ரீதரன் போனவர்களே உயிர்காக்க கொழும்புக்கு ஓடித்தப்பினர். புட்போல் விளையாடியதர்க்காக அதிபர் ஆனந்தராஜாவை போட்டு தள்ளியவர்கள், ஒரு எதிர்ப்பு ஊடகத்தையா தம்மிடையே விட்டுவைத்திருப்பர். தினக்குரல், தினகரனை மட்டுமல்ல, வீரகேசரி தினக்குரலையே தடை செய்த அமைப்பல்லவா இது?

அரசு 95% ஊடக அடக்குமுறை செய்தது. புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தனர். இதுதான் உண்மை.

புலிகளின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இல்லாவிட்டாலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு  வெளியில் புலிகளின் ஊடகங்களை விட நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் இன்றும் எழுதி வருகின்றன.ஆகவே உள்ளே/வெளியே க்கு அப்பால் புலிகளை விமர்சித்தவர்கள்  மிக அதிகம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பற்றி சொல்லவே தேவை இல்லை.
 
அது சரி அரசு 5% ஊடக சுதந்திரம் வழங்கியது என்கிறீர்கள்.அப்படி அந்த சுதந்திரம் வழங்கப்பட்டு வந்த செய்திகளில் ஒன்றையும் ஊடகவியலாளரையும் சொல்லுங்கள் .

செங்கொடி ,உங்களின் மேல் சற்று மதிப்பு வைத்திருக்கின்றேன் ,

கருத்துக்களுக்கு  சினிமா படங்கள் ,கொமடி சீன்கள் ,பாடல் காட்சிகள்  போடுபவர்கள் பட்டியலில் போய் முன்றாம் தர தமிழ்நாட்டு கருத்தாளர்கள் போல் ஆகிவிடவேண்டாம் .

நாகரீகமாக தமிழ்நாட்டு உறவுகளை விழிக்க, எழுத முடியாவிட்டால் தங்களின் "சற்று மதிப்பு" எவ்வளவு முக்கியம் அவர்களுக்கு? :(

அவர்கள் தங்களின் "சற்று மதிப்பை" சட்டை செய்தால் தான் அவர்களின் அன்றாட வாழ்கை போகுமா? :o

புலி அழிந்தற்கான காரணத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களை பார்த்து அனுதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை .

எல்லோரும் போராட போனது தமிழ் மக்களின் விடிவிற்கே ஒழிய ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பார்த்து தேவாரம் பாட அல்ல .

இது எமக்கு புதிதுமல்ல வைரமுத்து இப்பவும் கலைஞரை புகழ்ந்து கவிதை வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார் .

நீங்கள் சொல்வதை நீங்களே நம்ப மாட்டீர்கள் எண்டது எல்லாருக்கும் தெரியும்... அப்படி நம்பும் அப்பாவியும் நீங்கள் கிடையாது..

புலிகள் அழிந்ததுக்கு காரணம் என்ன எண்டு எல்லாருக்கும் தெரியும்... உங்களில் சிலர் வெறும் புலிக் காய்ச்சலால் உளறுகிறீர்கள் எண்டதும் தெரியும்...

புலிகளை அழிக்க காரணம் புலிகளின் உரிமை மீறல்கள் எண்டால் சிங்கள அரசு ஏன் இண்டுவரை தண்டிக்கப்படவில்லை... ??? புலிகள் உரிமைகளை மீறினார்கள் எண்டால் சிங்கள இனவாதம் மீறவில்லையா..?? இண்டுவரை சிங்கள இனவாத்திடம் ஏன் பிச்சை அதுவும்  தமிழர்களின் உரிமை பிச்சையாக கேக்கப்படுகிறது...??

அதே சமயம் உலக பயங்கரவாதங்களின் முதல் 100 பேரில் புலிகளின் எவருடைய பெயரும் கிடையாது...

Joseph Kony க்கு எதிராக இன்னும் பல மடங்கு காரணங்கள் இருக்கின்றன ஏன் அழிக்கப்படவில்லை...?? அதுக்கான முயற்சி கூட செய்யப்படவில்லையே ஏன்...??

நீங்கள் சொல்லும் காரணங்கள் வெறும் சப்பைக்கட்டு மட்ட்ம் தான் எண்டது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்...

இதே கேள்விகள் உங்களை நான் முன்னரும் கேட்டு இருக்கிறன் அப்போது போல இப்போது பதில் வராது எண்டது கூட தெரியும்...

Edited by தயா

அண்ணா,

சிறி லங்கா மாட்டுகருத்துகளுக்கு எல்லாம் தெரியும். மொத்தமா 4 பேரும் இங்கு வட்டமிடுகிறார்கள் என்றால் கருணா அம்மானின் திரியை முன் தள்ளுவது தான் குறி.

இங்கு ஒரு ஈழஆதரவாளரும் இவர்களுடன் கருத்தாடி வெல்ல முடியாது.

19 ஊடகவியலாளரை கொன்ற சிறி லங்கா கூட்டத்தை புலிகளிலும் பார்க்க ஊடக சுதந்திரம் கூடியவர்கள் என்று முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்க முற்படும்போது தெரியவேண்டும்.

இவர்களுக்கு தலைப்பில் புலி, தேசிய போராட்டம், தமிழக போராட்டம் இருந்தால் உடனே ஓடி வந்து லூசு கருத்துக்கள் போட்டு திரியை கொழுத்துவார்கள்.

இந்த கருத்து உண்மைதான் ,இங்கு நாலு ஐந்து பேர்கள் தான் உலக அரசியல் தெரிந்தவர்கள் .

இந்த கருத்து உண்மைதான் ,இங்கு நாலு ஐந்து பேர்கள் தான் உலக அரசியல் தெரிந்தவர்கள் .

உண்மை தான் அண்ணை... !   நான் நம்பீட்டன் ... 

நீங்கள் தான் இந்திய நாட்டின் பிரதமர்...   கனடாவுக்கு உத்தியோக பயணமாக வந்து இருக்கிறீர்கள் ... !    :lol:  :lol:  :lol:

பிரான்சிஸ் கரிசனின் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்  "செய்தி தொடர்பாளர்" என்ற அத்தியாயத்தை படிக்கவும் .(அதுவும் குறிப்பாக 99,100 ஆம் பக்கங்கள் )

நீங்கள் தான் உலகம் என்று நினைக்கவேண்டாம் நாம் அதில் ஒரு சிறு துரும்புகள் .இந்த தெளிவு இருந்தால் தான் உலக அரசியல் விளங்கும் .

முடிந்தால் யாரும் அந்த அத்தியாயத்தை இணைத்துவிடவும்.

Frances Harrison அம்மையாருக்கு இருந்த தெளிவு உங்கள் யாருக்கும் கிடையாது...  நடுநிலை பேண அவர் சொன்னவைகளில் சிலது அந்த புத்தகத்துக்கு நடுநிலயாக காட்ட தேவையாக கூட இருந்து இருக்கலாம்...   

அதுகளை மட்டும் தூக்கி பிடிக்கும் உங்களை என்ன சொல்லுறது... 

இது போனவருடம் Frances Harrison அம்மையார் எழுதியது...

What If the UN Had Spoken Out on Sri Lanka?
 
http://www.huffingtonpost.co.uk/frances-harrison/un-sri-lanka_b_2135560.html

இதில் இருந்து எனக்கு புரிந்தது அவருக்கு புலிக்காய்ச்சல் இல்லை ...   

  • கருத்துக்கள உறவுகள்

doubtmaster_senthil.jpg

செங்கொடி ,உங்களின் மேல் சற்று மதிப்பு வைத்திருக்கின்றேன் ,

கருத்துக்களுக்கு  சினிமா படங்கள் ,கொமடி சீன்கள் ,பாடல் காட்சிகள்  போடுபவர்கள் பட்டியலில் போய் முன்றாம் தர தமிழ்நாட்டு கருத்தாளர்கள் போல் ஆகிவிடவேண்டாம் .

வணக்கம் அண்ணை

உண்மையில் எனக்கு உங்களின அந்த கருத்து புரியவில்லை. அதனால் தான் அப்படி ஒரு படத்தை போட்டேன். உங்களின் கருத்தை கிணடல் செய்வதற்காக அப்படி செய்யவில்லை. தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

தமிழ்நாட்டு கருத்தாளர்கள் பற்றிய உங்களின் கருத்தை என்னால் ஏற்க முடியாது. அவர்கள் பற்றிய எனது பார்வை வேறு. 

நன்றி.

யாழ். களம் தான் எங்கே நிற்கின்றது என்பதில் பாரிய குழப்ப நிலையில் உள்ளது.

யாழ். களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கோ யாழ். கள நிர்வாகத்துக்கோ ஊடக சுதந்திரம் தொடர்பாக உரையாட எந்தத் தகுதியும் இல்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரபாகரன் தொடர்பில் விமர்சிப்பதனால் நீக்குகின்றீர்கள் என்கிறீர்கள். பிரபாகரன் என்கின்ற தனிமனிதனின் விருப்பு-வெறுப்பினால்தான் ஒட்டு மொத்த தமிழ்த் தேசியமும் கையேந்தி நிற்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

இங்கே சில அறிவுக் கொழுந்துகள் சிறிலங்காவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

அப்படியானால் விடுதலைப் புலிகளின் காலத்தில் மாற்றுக் கருத்தளார்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போனதும் இல்லையா? மனச்சாட்சியின் படி உரையாடுங்கள். இந்தளவோடு ஒப்பிடும் போது சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பரவாயில்லை.

புலிகளின் பகுதியில் எத்தனை ஊடகங்கள் வந்தது? எத்தனை வானொலிகள் இயங்கின? எத்தனை தொலைக்காட்சிகள் இயங்கின? கூறுங்கள் பார்க்கலாம் அறிவுக்கொழுந்து மாணிக்கங்களே!

போரின் இறுதிக்கால கட்ட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அறிவுரை கூற முற்பட்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு, வெளிச்சம் ஆசிரியர் கருணாகரன், க.வே.பாலகுமாரன் உள்ளிட்ட எத்தனையோ பேரை விடுதலைப் புலிகள் ஒதுக்கி வைத்த கதை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் ஒருபக்க சார்பாக கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள் போடுவீர்களாம். மற்றவர்கள் செய்தால் அவன் அவன்ரை ஆள். இவன் இவன்ரை ஆள். என்ன ஐயா உங்கள் நியாயம்?

இங்கே புலிகளுக்கு எதிராக கருத்து போட்டாலே அவர்களின் பணத்தை சுருட்டி சுகபோக வாழ்வு வாழ்கின்றவர்கள் போல் இருப்பவர்கள் அட அட அட இவன் இப்படி தெரிவித்துவிட்டானே என்று கடுப்பாகி பதிலடி கொடுக்கின்றோம் என்று தம்மை யார் என்றே காட்டிக் கொள்கின்றார்கள்.

இவர்கள் எல்லாம் போருக்குப் பின்னைய காலத்தில் வன்னி மக்களுக்கு எதனைத்தான் கொடுத்து கிழித்தார்களோ தெரியாது.

கேட்டால், உமக்கு என்ன தெரியும் நாம் அங்கோ கொடுத்தோம் இங்கே கொடுத்தோம் என்பார்கள். இதனை எல்லாம் உமக்கு நாம் தெரிவிக்க முடியாது என்பார்கள்.

அங்கே எத்தனையோ தனியார் தொண்டு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் தமது சொந்த முயற்சியால் நிதி திரட்டி வன்னி மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அவர்களிடம் புலம்பெயர் நாட்டில் இருந்து நிதி ஏதாவது என்று கேட்டால், அதனை ஏன் கேட்கின்றீர்கள். புலிகளுக்கு எல்லாம் நிதி கொடுத்தார்கள் அவ்வாறு எமக்கு எல்லாம் தந்தால் நாம் எவ்வளவோ செய்து அந்த மக்கள் மூச்சுவிட வழி செய்து விடுவோம் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டு உரையாடினார்கள் அந்த தொண்டு நிறுவன பிரதிநிதிகள்.

தமிழர்களின் ஒட்டுமொத்த தவறுகளை எல்லாம் தூக்கி பிரபாகரன் என்ற தனிமனிதனின் தலையில் போட்டுவிட்டு நாம் எல்லோரும் யோக்கியர் ஆகிவிடமுடியாது.

கடந்தகாலத் தவறுகளை விமர்சிப்பது தொடர்பில் எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் இது விமர்சனம் இல்லை.

பிரபாகரனின் அசைவியக்கங்கள் முடிவுகளின் பின்னால் இந்தச் சமூகமும் அதன் பாரம்பரிய அசைவியக்கமும் இருக்கின்றது. இது கேபிக்கும் பொருந்தும் கருணாவுக்கும் பொருந்தும் டக்ளசுக்கும் பொருந்தும் ஏனைய இயக்கங்கள் அனைத்துக்கும் அனைத்து முரண்பாட்டிற்கும் பொருந்தும். தனிமனித முடிவுகளை சுற்றியுள்ள காரணங்கள் முடிவுகளுக்கு உரிய மனநிலை எங்கிருந்து வருகின்றது என்பதை ஆராய்வதே விமர்சனம்.

இங்கே நடப்பது ஒருவர் பிரபாகரனில் பிழை என்பதும் மற்றவர் புளட்டில் பிழை என்பதும் கேபியில் பிழை என்று சிலரும் பிரபாகரனில் பிழை என்று சிலரும் ஆளையாள் சுட்டிக்காட்டுவது. யாரோ ஒருவனை சுட்டிக்காட்டும் போது சுட்டிக்காட்டுபவன் தன்னை யோக்கியனான நியாயப்படுத்திக்கொள்கின்றான். இதனால் என்னபிரயோசனம் ? என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகின்றது.

நான் எங்கும் பிரபாகரன் உட்பட கருணா கேபி டக்ளஸ் பத்மநாபா அல்லது எந்த இயக்கத்தையும் அதன் தலமையையும் தனித்து அணுகுவது கிடையாது. சமூகத்துக்கு அப்பால் இவர்களை தூக்கிவைத்து அணுகுவது கிடையாது. கருணா பிரிந்துபோனால் அது ஏன் அவற்றை தூண்டுவது எது எப்படி சாத்தியம் கருணாவுடன் கூட இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் ஒருவன் கூட ஏன் கருணாவை கொல்லவில்லை என்ற பல கேள்விகளும் பாரம்பரிய பிரதேசவாதங்களும் அதன் தாக்கங்களும் என அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கின்றது. அதைவிடுத்து சுகமான ஒரு வழி கருணா என்ற தனிமனிதனை சுட்டிக்காட்டிவிட்டு இது ஒரு யோக்கியமான சமூகம் அதில் நான் ஒருவன் என்ற முடிவுக்கு வருவது. 

இதுபோல் அரசை அண்டிப்பிழைக்கும் டக்ளஸ் என்ன புதினமா? காலனியாதிக்க காலம்தொட்டு அரசை அண்டிப்பிழைக்கும் நிலையில் தொடங்கி இன்றுவரை ஆராய நிறைய விசயம் இருக்கின்றது.

புலிகள் எடுத்த முடிவுகள் கட்டுப்பாடுகள் அது சார்பான கடுமையான நடவடிக்கைகள் இவைகள் எல்லவற்றினது சாராம்சமும் சமூகத்தில் எவ்விதமான வடிவமாக இருந்திருக்கின்றது இன்னும் இருக்கின்றது என்ற பல கூறுகள் இருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்த்தேசீயம் கையேந்திநிற்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனை விட தேசத்தை விட்டு புலம்பெரமுடிவெடுத்த நானே ஒரு பெரும் காரணத்தின் உதாரணம். பேரினவாதத்தை அனுசரித்து அண்டிப்பிழைப்பது என்று முடிவெடுத்தர்கள் ஒவ்வொருவரும் பெரும்காரணம்.

எந்த ஒருவனும் தன்னை யோக்கியன் என்று சொல்லி என்னுமொருவனை சுட்டிக்காட்டத்தகுதியற்றவன். அதற்கு நனோ நீங்களோ எவரோ விதிவில்க்கல்ல. இங்கே பல கருத்துக்கள் இருக்கின்றது நான் டக்ளசின் பக்கம் கேபியின் பக்கம் அல்லது மாற்று இயக்கத்தின் பக்கம் கதைப்பதாக ஆனால் எனது அணுகுமுறை இவை எல்லாம் சமூகத்தின் பக்கவிழைவுகள் என்பதே. அவ்வாறான ஒரு விழைவுக்குள்ளாகவே நான் இருக்கவிரும்புகின்றேன் அன்றி அதிலிருந்து அன்னியப்ட நான் விரும்பவில்லை.

பிரபாரன் உட்பட எந்த இயக்கத்தலமையும் அல்லது எவரும் என ஒவ்வொருவரும் எடுத்த தனிபட்ட முடிவுகள் என்று எதையெல்லாம் சொல்ல முற்படுகின்றீர்களோ அவை எல்லாம் சமூக அசைவியக்கத்தின் விழைவுகள் என்பதையும் அதற்கான காரணத்தையும் நோக்கி நகர்வதே ஆரோக்கியமானது.  

நான் உட்பட எனது ஊரில் உள்ள எல்லோருக்கும் தொற்றுநோய் பரவியிருக்கும் பட்சத்தில், ஒருவரைத்தவிர வேறு ஒருவருக்கும் நோயில்லை நோய் வரவும் வராது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. நோய்த்தடுப்பும் சரியான மருத்துவமும் தான் அவசியம்.

இதுபோல் அரசை அண்டிப்பிழைக்கும் டக்ளஸ் என்ன புதினமா? காலனியாதிக்க காலம்தொட்டு அரசை அண்டிப்பிழைக்கும் நிலையில் தொடங்கி இன்றுவரை ஆராய நிறைய விசயம் இருக்கின்றது.

எவரையும் குற்றம் சாட்ட விளையாத குணம் இது. மேற்கு நாட்டு ஜனநாயக பண்புடன் ஆண்டுவந்த வெள்ளையர் ஆட்சியில் பங்கு கொண்ட இராமநாதனுக்கு ராஜபக்ஷா ஆட்சியில் பங்கெடுக்கும் செயலாளர் நாயகத்துக்கும் பேதமில்லை என்ற வழமையான குயக்க வாதம் இது.

அண்டிப்பிழைப்பவர்கள்  மாற்ற்வர்கள் எல்லோரும் அண்டித்தான் பிழைக்கிறார்கள் என்கிறார்கள். மேற்குநாடுகளுக்கு வந்து புலிகளை போட்டு கொடுத்து அசைலம் கேட்டவரகள் ஆமியால் துன்புறுதப்பட்டு ஓடிவந்தவனை பார்த்து நீயும் ஓடி வந்து தமிழ் இனத்துக்கு துரோகம் தானே செய்தாய்; நானும் ஓடுவந்து அதையேதான் செய்கிறேன் என்கிறார்கள். 

இருந்தாலும் தேர்தலின் பின்னர் புதிய நெடி அடிக்கத்தொடங்கியிருக்கிறது. 80% வீதம் கூட்டமைப்புக்கு. அனுப்பிய ஆமி போட்டிருந்தாலும் 35%- 40 % செயலாளர் நாயகத்துக்கு வந்திருக்க வேண்டும். மகிந்தா நாயகத்தை இனி கிட்டவும் அடுக்க மாட்டார். அடுத்த பாரளும்னறத்தேர்தல் பதவி ஆசைகளுக்குக்கான சவப்பெட்டிக்கு விலை சொல்லும். தூக்கிவிட்டாலும் முடக் குழந்தை நடக்காது என்பதை புரிந்து கொள்ளும் படி தள்ளப்பட்டிருக்கிறார்கள். செயலாளர் நாயகத்தை ஆதரிப்பது கிடையாதாம். யாழில் இருப்பவற்றை யாராவது நீக்குவார்களா? முழு மாற்றம் வரும் வரைக்கும் மேலை போக ஏலாது. இனி யோசிச்சு என்ன பயன். ஆட எடுத்த காவடிதானே. 

  • கருத்துக்கள உறவுகள்

இது அப்பட்டமான பொய்...

1996 வரைக்கும் ஈழநாடு , ஈழமுரசு , உதயன், சாரளம் எண்டு பல ஊடகங்கள் புலிகளின் கட்டுக்குள் இருந்து இயங்கியது...

பொருளாதார தடைகாரணமாக அச்சு பொருட்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில் இருந்த பிரச்சினை காரணமாக வன்னியில் தொடரவில்லை...

தவிரவும் மக்களால் இலங்கை சர்வதேச வானொலி ( வவுனியா பக்கம் இருந்து வானவி வானொலி) பிபிசி தமிழ் சேவை , வெரித்தாஸ் , போண்ற ஊடகங்கள் மக்கள் கேக்க எந்த தடையும் இருக்கவில்லை...

கொழும்பு பத்திரிகைகள் வீரகேசரி முதல் அனைத்து வகையும் தாராளமாக புலிகளின் கட்டுப்பாட்டு கடைகளில் கிடைத்தன...

ஓடியவர்கள் பொருளாதார தடைகளை சமாளித்து தங்களின் சுகவாழ்வை காக்க முடியாமல் ஓடி கொழும்பில் சுகவாழ்வையும் தங்களின் நலனையும் பேண சிங்களத்திடம் அடைக்கலம் தேடினார்களே அண்றி மக்கள் சேவைக்காக ஓடவில்லை... இதில் நான் கூட விதிவிலக்கு இல்லை...

தல நீங்கள் சொன்ன எல்லாமே தமிழ்த்தேசிய ஊடகங்கள். ஆனால் என்றுமே தமிழ் தேசியத்துக்கு எதிரான சிந்தனையில் குறைந்தது வடக்கில் வாழும் தமிழர்களில் 8% தமிழர்கள் இருந்தார்கள். அண்மைய தேர்தல் முடிவுகளும் சொல்வது இதத்தான். ஆனால் இந்த மக்களின் கருத்தை, அது எமக்கு எவ்வளவு ஏற்புடய கருத்தில்லாவிடினும், பிரசுரிக்க புலிகள் விடவில்லை. கே எஸ் ராஜா, ரேலங்கி செல்வராஜா என்று புலிகள் கொன்ற பல ஊடகர்கள் இருக்கினம்.

இவ்வளவு ஏன், 2009 ற்க்கு முந்திய வன்னியில் இருந்து நானோ, அல்லது நிர்மலனோ, அர்யூனோ இங்கே நாம்சொல்லும் கருத்துக்களை சொல்லி இருக்க முடியுமா? நெடுக்கர் விரும்புவது போல் எமக்கு பொடெல்லவா வைத்திருப்பார்கள்?

புலிகள் பற்றி சொல்ல பல விடயங்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் ஊடக சுதந்த்ஹிரத்தை கொடுத்தார்கள் என்பது பொய்க்கதை. வெரித்தாஸ், தமிழோசை போன தமக்கு சார்பான அல்லது தம்மை எதிர்க்காத ஊடகங்களை கேட்க்க விட்ட புலிகள்தான் மக்கள் குரல் கேட்ட ஒரு ஐயாவுக்கு பச்சை மட்டை பூசையும் கொடுத்தார்கள்.

தினமுரசை மட்டுமில்லை, ஓமந்தையில் வைத்து சரிநிகரையே பிடுங்கி எறிந்த சம்பவமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இல்லாவிட்டாலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் புலிகளின் ஊடகங்களை விட நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் இன்றும் எழுதி வருகின்றன.ஆகவே உள்ளே/வெளியே க்கு அப்பால் புலிகளை விமர்சித்தவர்கள் மிக அதிகம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பற்றி சொல்லவே தேவை இல்லை.

அது சரி அரசு 5% ஊடக சுதந்திரம் வழங்கியது என்கிறீர்கள்.அப்படி அந்த சுதந்திரம் வழங்கப்பட்டு வந்த செய்திகளில் ஒன்றையும் ஊடகவியலாளரையும் சொல்லுங்கள் .

சாகும் வரைக்கும் ரிச்சர்ட் டி சோய்சா, சாகும் வரைக்கும் லசந்தா, வெளியேறும் வரைக்கும் திஸநாயகம், பெடெரிக்கா ஜான்ஸ் இப்படி, இன்றுவரை பாக்கியசோதி சரவணமுத்து, லால் விக்ரமதுங்க என்று மிககுறிகிய 5% ஆனால் மிகவும் உயிர்ராபத்தான ஒரு வெளி மாற்றுக்கருத்து உடகவியளாலருக்கு தெற்க்கில் இருந்தது.

விடுதலை புலிகளின் காலத்தில், அவர்கள் பிரதேசத்தில், அவர்கள் ஆளுகைக்குள் இருந்து அச்சில், புலிகளை விமர்சித்து பிரசுரிக்கப்பட்ட ஒரு பத்திரிகை கட்டுரையை உங்களால் காட்ட முடியுமா?

வேணுமானால் அரசு 99% ஊடக அடக்குமுறை செய்தது என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் புலிகள் 100% ஊடக அடக்குமுறை செய்தார்கள்.

யாழ். களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கோ யாழ். கள நிர்வாகத்துக்கோ ஊடக சுதந்திரம் தொடர்பாக உரையாட எந்தத் தகுதியும் இல்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னைப்போன்ற கருத்தாளர்களை உங்களது மேற்கண்டகூற்று அவமதிக்கின்றது. நான் கடந்த ஏழு ஆண்டுகளாக யாழ் கருத்துக்களத்தில் பல்வேறு விடயங்கள் சார்ந்து எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். த.வி.பு சம்மந்தம்மாக காட்டமான கருத்துக்களையும் கூறியுள்ளேன், அதேசமயம் குறிப்பிட்ட ஓர் சிறுவட்டத்தினுள் ஒதுங்கிக்கொள்ளாது பரந்தளவில் பல்வேறு அமைப்புக்கள், குழுக்கள் சார்பாகவும் ஆதரவாகவும், எதிர்த்தும் எனது  மனச்சாட்சிப்படி, நடுநிலமையுடன் கருத்துக்களை கூறியுள்ளேன்.

யாழ் கருத்துக்களத்தின் கலாச்சாரத்தினை புரிந்து அதற்கேற்றவகையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வது உங்களிற்கு முடியாதாயின் நீங்கள் கருத்துக்களை இங்கு பகிராது விலகியிருப்பதே நல்லது. 

இதை நான் ஆமோதிக்கிறேன். யாருக்கு கருத்து கூறும் தகமை இருக்கிறது என்பதை தீர்மானிகா நாம் யார்?

இப்படி தாந்த்ஹோறித்தனமாக மற்றயவரின் கருத்து கூறும் உரிமையில் கைவைக்கிறார்கள் என்று அரசையும் புலிகளையும் விமர்சிக்கும் நாம், அவர்களை போலவே செயல்பட, அல்லது கருத்துரைக்க முற்ப்படுவது ஒரு முரண்நகையே.

எவரையும் குற்றம் சாட்ட விளையாத குணம் இது. மேற்கு நாட்டு ஜனநாயக பண்புடன் ஆண்டுவந்த வெள்ளையர் ஆட்சியில் பங்கு கொண்ட இராமநாதனுக்கு ராஜபக்ஷா ஆட்சியில் பங்கெடுக்கும் செயலாளர் நாயகத்துக்கும் பேதமில்லை என்ற வழமையான குயக்க வாதம் இது.

அண்டிப்பிழைப்பவர்கள்  மாற்ற்வர்கள் எல்லோரும் அண்டித்தான் பிழைக்கிறார்கள் என்கிறார்கள். மேற்குநாடுகளுக்கு வந்து புலிகளை போட்டு கொடுத்து அசைலம் கேட்டவரகள் ஆமியால் துன்புறுதப்பட்டு ஓடிவந்தவனை பார்த்து நீயும் ஓடி வந்து தமிழ் இனத்துக்கு துரோகம் தானே செய்தாய்; நானும் ஓடுவந்து அதையேதான் செய்கிறேன் என்கிறார்கள். 

இருந்தாலும் தேர்தலின் பின்னர் புதிய நெடி அடிக்கத்தொடங்கியிருக்கிறது. 80% வீதம் கூட்டமைப்புக்கு. அனுப்பிய ஆமி போட்டிருந்தாலும் 35%- 40 % செயலாளர் நாயகத்துக்கு வந்திருக்க வேண்டும். மகிந்தா நாயகத்தை இனி கிட்டவும் அடுக்க மாட்டார். அடுத்த பாரளும்னறத்தேர்தல் பதவி ஆசைகளுக்குக்கான சவப்பெட்டிக்கு விலை சொல்லும். தூக்கிவிட்டாலும் முடக் குழந்தை நடக்காது என்பதை புரிந்து கொள்ளும் படி தள்ளப்பட்டிருக்கிறார்கள். செயலாளர் நாயகத்தை ஆதரிப்பது கிடையாதாம். யாழில் இருப்பவற்றை யாராவது நீக்குவார்களா? முழு மாற்றம் வரும் வரைக்கும் மேலை போக ஏலாது. இனி யோசிச்சு என்ன பயன். ஆட எடுத்த காவடிதானே. 

யாரையும் குற்றம் சாட்ட முடியாத சூழலைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

டக்களசை விட நூறுமடங்கு மோசமானவர்களே ராமநாதன் போன்றவர்கள். இன்றைய டக்ளஸ் போன்றவர்கள் அவர்களின் அரசியல் அடிமை வாரிசுகள்.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலம் முழுக்க ஏழைகளின் கல்வியைத் தடுத்தும் அண்டிப்பிழைக்கும் அரசஉத்தியோகங்களை தங்கள் வசம் வைத்தும் கீழ்சாதிப்பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று வழக்காடி வென்று வெற்றிக்கொடிநாட்டி சாதனைசெய்தவர்களும் டக்ளசும் ஒன்றாகமுடியாது. வெள்ளைகள் போனபின்பு அதே பாணியில் சிங்களப்பேரினவாதிகளை அண்டிப்பிழைத்ததின் ஊடாகவே டக்ளஸ் போன்றவர்களை ஒப்பிட முடியும். இதில் பென்னம்பலம் ராமநாதனின் மைத்துனனும் கடந்த 30 வருட கால சிங்களப்பேரினவாதத்தின் உச்சக்கட்ட ஒடுக்குமுறைக்காலத்தில் சிங்கள அரச இயந்திரத்தில் அங்கமுமாக இருந்த  விக்கினேஸ்வரனுக்கும் டக்ளசுக்கும் இடையில் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியாது. உங்களுக்கு திறமையும் புலமையும் அரசியல் ஞானமும் உள்ளதால் வித்தியாசத்தை நுட்பமாகக் காண்கின்றீர்கள்.

இருப்பது சாக்கடைக்குள் இதற்குள் புதிய நொடி பழைய நொடி என்று எதுவும் இல்லை. சாக்கடையை விட்டு வெளியில் வருவது ஒன்றுதான் வழி. நீங்கள் வந்துவிட்டீர்கள் என்னால் வரமுடியவில்லை.

அமெரிக்க சுதந்திரம் அடைந்த போது ஜெபர்சன் கேட்டது மாதிரி அடிமையை ஒழிக்க முன் வரவில்லை. ஆனால் சமுதாயம் வளர அது விலகியது. ஆனால் அப்போது எழுதப்பட்ட அரசியல் அமைப்புச்சட்டம்தான் உலகின் மிகபெரிய ஜனநாயக சட்டமாக இருந்து வருகிறது. ஏன் எனில் அது உடனே தவிக்கமுடியாத அரசியல் பிரச்சனையை விடுவிக்காமல் தூர நோக்கில் மக்கள் எல்லோரும் சமன் என்றதை ஒத்துக்கொண்டது. அதனால் 100 ஆண்டுகள் கழித்து அடிமை ஒழிக்கபட்டது. மாறாக 100 ஆணுகளுக்கு முன்னர் வந்த போல்சுவிக்குகளின் போலித்தனம்தான் இன்றைய முக்கிய அடிமைச்சாசனமாக முள்ளாக குத்துகிறது. 

இராமநாதன் பழக்கத்தில் இருந்த ஒன்றை மாற்றாமையால் அவரை ஜனநாயக வாதி இல்லை என்றும் செயளார் நாயகம் ஜனநாயக வாதி என்றும் முழு பூசனிக்கையை சோற்றுக்குள் மறைபவர்கள் இந்த உண்மைகளைக் காண அறிவுக்கண்கள் இல்லாதவர்கள்.

கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்னர் பாடசாலைகளை கட்டி தனது சொத்து எல்லாவற்றையும் பொது வாழ்வில் செலவிட்ட இலங்கையின் மிகபெரிய கொடையாளியை, இந்தியாவில் கொலை செய்துவிட்டு இலங்கையில் ஒழித்துக்கொண்டு அப்பாவி பெணகளை சிறுமிகளை வதைதுக்கொண்டு, கொள்ளைக்கு மேல் கொள்ளை அள்ளிக்கொண்டு  வடக்கு முழுவதையும் அடிதடிக்குள் ஆழ்த்திகொண்டு இருக்கும் நாயகங்களுக்கு இணையாக எத்தனை தவில் வித்துவான்களும் தூக்கிபிடித்து மேளம் அடிக்கலாம். ஆனால் மக்கள் நம்பவில்லை. நம்ப போவதும் இல்லை. இவர்களை மக்கள் ஒதுக்கி தேவையான நேரம் உள்ளே போட்டு தம் செலவில் உப்பும்  சோறும் கொடுக்க மறக்கப்போவதும் இல்லை. 

இலங்கை முழுவதாலும் கனவானாக கண்டு, அன்றைய தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் தங்களின் ஒரே ஒரு பிரதி நிதியாக சட்ட சபைக்கு அனுப்பி வைத்தது போல தன்னையும் தேர்தலில் அனுப்பவேண்டும் என்று அடிதடியை நடத்தி வந்த நாயகத்துக்கு எதிராக ஆமியே வேட்பாளர்களை தேர்தலில் போட்டார்கள். 

யாரையும் குற்றம் சாட்ட முடியாத சூழலைத்தான் நான் குறிப்பிடுகின்றேன். குற்றவாளிகள் குற்றவாளிகளே  அதை காலம் மாற்றப்போவதில்லை

.................. இன்றைய டக்ளஸ் போன்றவர்கள் அவர்களின் அரசியல் அடிமை வாரிசுகள். இதை சொல்ல தேர்தல் வரை காத்திருந்திருக்க தேவை இல்லை. 2009 புலிகள் தோற்றவுடன் பக்கம் பக்கமாக செயலாளர் நாயகம் யாரும் அல்ல ஒரு அடிமை வாரிசே என்று எழுதியிருந்திருக்கலாம். இந்த நாயகங்கள் இப்போது உணர்வார்கள் தன்னை தேவதூதான காட்டி கட்டுரை வரைந்தவர்கள் தன்னை இபோது அடிமை வாரிசு எங்கிறார்கள் என்பதை. எனவே தான் கோட்டில் நிற்கும் போது தனது நண்பர்கள் தனது எதிரிகளின் முக்கிய சாட்சிகளாவர்கள் என்பதையும் உணரத்தலைப்பட்டிருப்பார்கள்.   மேலும் இதே அடிமை வாரிசுகளாக தாங்கள் அழைப்பவர்களை செயலாளர் நாயகங்களாக மற்ற்வைகளை அழைக்க வைக்க முயன்று தோற்ற  போது எல்லோரும் குத்திகளை குத்திகள் என்று அழைத்த கதையும் இதே தளத்தில்தான் பதியப்பட்டிருக்கிறது.

ஒரு சொல்லு சரியானவர்களை குற்றம் சாட்டாமல் எழுத முடியாதவர்கள்.  இராட்சத குரூர சென்மங்களை நல்லவர்களாக்கி அவர்களின் படியளப்பில் வாழ்பவர்கள்.  

காட்டிக்கொடுத்த துரோகிகள் குற்ற்வாளிகள்.  இதை பொது தத்துவங்களால் மூடி மறைக்க முடியாது. நீதி அதிகாரம் கிடைத்தால் நாயகங்கள்  ஒழிக்க முடியாது.  இராமநாதனுடன் அல்ல, M.G.R உடன் அல்ல காந்தி , SJV யை விட 1000 மடங்கு நல்லவராக இந்த நாயகங்களை காட்டி வாதாடினாலும் கடைசிக் காலம் உப்பும் சோறுமாகத்தான் இவர்களுக்கு இருக்க போகிறது. 

Edited by மல்லையூரான்

தல நீங்கள் சொன்ன எல்லாமே தமிழ்த்தேசிய ஊடகங்கள். ஆனால் என்றுமே தமிழ் தேசியத்துக்கு எதிரான சிந்தனையில் குறைந்தது வடக்கில் வாழும் தமிழர்களில் 8% தமிழர்கள் இருந்தார்கள். அண்மைய தேர்தல் முடிவுகளும் சொல்வது இதத்தான். ஆனால் இந்த மக்களின் கருத்தை, அது எமக்கு எவ்வளவு ஏற்புடய கருத்தில்லாவிடினும், பிரசுரிக்க புலிகள் விடவில்லை. கே எஸ் ராஜா, ரேலங்கி செல்வராஜா என்று புலிகள் கொன்ற பல ஊடகர்கள் இருக்கினம்.

இவ்வளவு ஏன், 2009 ற்க்கு முந்திய வன்னியில் இருந்து நானோ, அல்லது நிர்மலனோ, அர்யூனோ இங்கே நாம்சொல்லும் கருத்துக்களை சொல்லி இருக்க முடியுமா? நெடுக்கர் விரும்புவது போல் எமக்கு பொடெல்லவா வைத்திருப்பார்கள்?

புலிகள் பற்றி சொல்ல பல விடயங்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் ஊடக சுதந்த்ஹிரத்தை கொடுத்தார்கள் என்பது பொய்க்கதை. வெரித்தாஸ், தமிழோசை போன தமக்கு சார்பான அல்லது தம்மை எதிர்க்காத ஊடகங்களை கேட்க்க விட்ட புலிகள்தான் மக்கள் குரல் கேட்ட ஒரு ஐயாவுக்கு பச்சை மட்டை பூசையும் கொடுத்தார்கள்.

தினமுரசை மட்டுமில்லை, ஓமந்தையில் வைத்து சரிநிகரையே பிடுங்கி எறிந்த சம்பவமும் உண்டு.

உங்கட சப்பை கட்டலுக்கு புலிகளை இதுக்கை இழுக்காதேங்கோ...  

வன்னியிலை நீங்கள் வாழாமல் சும்மா இலங்கை கொழும்பை மத்தியாக வைத்த பத்திரிகைகள் வரவே இல்லை எண்டது சுத்தமான பொய்...  

ஒருவேளை வெரித்தாஸ் வானொலி புலிகளுக்கு சார்பாக இருந்து இருக்கலாம் ஆனால் பிபிசி தமிழ் எப்போ உங்களுக்கு புலிகளின் சார்பாக மாறினது எண்டு எனக்கு தெரியவில்லை...   இலங்கை சர்வதேச வாவொலிலை புலிகள் வன்னிக்குள் அனுமதிக்கவில்லை எண்டது கூட  பொய்யானது...  

புலிகள் எந்த ஊடகங்களையும் ஒடுக்கவில்லை...   தணிக்கையும் செய்யவில்லை....   வீரகேசரியில் வந்த தாரகியின்  பல கட்டுரைகள் போரியல் ரீதியிலும் ,  அரசியல் ரீதியிலும் புலிகளை விமர்சிச்சு வந்தவைகளை  நான் நிறைய தடவைகள் படித்தும் இருக்கிறேன்... 

தென்னிந்தியாவில் இருந்து வந்த எந்த  வார இதழ்கள் புலிகள் சார்பாக வந்தன...  வேண்டும் எண்டால் ஓரளவு ராணி , இதழை சொல்லலாம்...   நாளாந்த ஏடு மாலை மலரையும் சொல்ல முடியும்...   மற்றும் படி எல்லாமே வன்னிக்குள் கிடைத்தன...    சினிமா படங்கள் உட்பட...  

KS ராஜா மக்களின் குரல் அமைப்பாளர்  கிடையாது மக்களின் குரலை  தொகுத்து வளங்கியவர் மட்டும் தான்...   இலங்கை வானொலியில் புலிகளை பற்றி கேவலமாக செய்திகள் வாசித்த பலர் கனடாவிலை  TVI  யில் பார்க்க கூடியதாக இருக்கு...  

ஒரு ஐயாவுக்கு புலிகள் பச்சமட்டை அடி கொடுத்தார்கள் என்பதில் கூட நம்பக தன்மை கிடையாது...  அதுக்கு உங்களால் விபரங்களை தரமுடியும் மட்டும்...  ( அடி வேண்டியவர் யார்...?? ) 

நான் உங்களிடம் கேக்கும் கேள்வி ஒண்டு இருக்கு UTHR காறரும் சரி  நீங்கள் புலிகளால் கொல்லப்பட்ட  நேர்மையான ஊடகர் எண்டு சொல்லும் யார்   புலிகளையும்  அரசாங்கத்தையும் ஒரு கோட்டில் வைத்து சமமாக விமர்சித்தவர்கள்....?? 

அப்படி விமர்சித்த ஆதாரங்களை தாருங்கள்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இதழ்களோ, அல்லது இந்திய இதழ்களோ தம்மை விமர்சிக்காதவற்றை மட்டுமே புலிகள் அனுமதித்தார்கள். மற்றும் படி தமது கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு உடய எதையும், எவரயும் புலிகள் தம் பிரதேசத்தில் இருந்து செயல்பட விடவில்லை. தமிழோசை ஆனந்தி போனபின்னேதான் புலிச் சார்பில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்பும், தமிழோசை இலங்கை வானொலியியை புலிகள் தடை செய்யாமல் விட்டதுக்கு காரணம் 1) இந்த தொழில்நுட்பம் (radio waves jamming) அவர்களிடம் இருக்கவில்லை. இருந்தாலும் அதை இதில் பாவிக்க அவர்கள் விரும்பவில்லை. 2) இலங்கை வானொலியின் புழுகு யாரும் அறிந்ததே, எனவே அதை தடை அல்லது ஜாம் பண்ணி ஒரு பிரயோசனமும் இல்லை 3) பிபிசி யை தடை செய்தால் பெயர் இன்னமும் டேமேஜ் ஆகி விடும்.

ஶ்ரீதரன் உன்மயான மனித உரிமை ஆர்வலர் இல்லை ( அபத்தமான கருத்து) ரேலங்கி, ராஜா எல்லாம் அரசுக்கு வால் பிடித்தார்கள் என்பதெல்லாம் சப்பைக்கட்டு. இப்படிதான் திசநாயகத்தை புலி முத்திரை குத்தியது அரசு.

அவர்கள் என்ன நோக்கத்தில் செயல்பட்டாலும் அவர்களின் கருத்தை அவர்கள் சொல்லும் உரிமையை மறுக்க முடியாது. எமக்கு பிடிக்காத கருத்தை சொல்கிறார் என்பதற்க்காக, நீதி விசாரண இன்றி நாயை சுடுவது போல ஊடகவியளாலரை சுட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மட்டை அடி வாங்கிய ஐயா எனக்கு நன்கு தெரிந்தவர். இப்போ செத்தும் போய்விட்டார். அது ஏன், அரச அதிபர் பஞ்சலிங்கம், நீதிபதி ராமச்சந்த்ஹிரன், செஞோன்ஸ் அதிபர் ஆனந்த்ஹராஜா, ரஜனி திரணகம இன்னும் பலர் மரனதண்டனை கொடுக்கும் அளவுக்கு செய்த குற்றம்தான் என்ன? விபரத்தை தாருங்கள் விசாரிக்கிறோம் என்று நீங்கள் சொல்லும் இதே கருத்தைதான் இப்போது ஆறும் சொல்கிறது. இந்த விடயத்தில் மட்டும் தமிழ் கொலைகாரரும், தமிழரல்லாத கொலை காரரும் ஒரே மாதிரி சிந்த்ஹிக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.