Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டை கலக்கும் நாகர்படையணி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nagar-padaiyani.jpg
யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் நாகர் படையணி எச்சரிக்கை கடிதங்கள் அரச ஆதரவு தரப்புக்கள் பலவற்றையும் அதிர்ச்சியினில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையுள்ளிட்ட சில பகுதிகிளினல் நேரடியாக தனித்தனி முகவரியிட்டு இத்தகைய எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் அரசகைக்கூலிகளாக இனியும் செயற்பட்டால் கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அரச ஆதரவு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்களிற்கு பரவலாக ‘நாகர் படையணி” என்ற அமைப்பால் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடக்குமாகாண சபைத்தேர்தல் தந்த மோசமான தோல்வியால் விரக்தியில் இருந்த ஈ.பி.டி.பியினருக்கு ‘நாகர் படையணி’ என்ற அநாமதேயக் கடிதம் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெட்டி ஒட்டப்பட்ட புலிச்சின்னத்தைக் கொண்ட கடிதத்தலைப்பிலேயே இந்த எச்சரிக்கைக்கடிதம் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் உயிர்  அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
  • கருத்துக்கள உறவுகள்

அவசர காலச்சட்டம் மேலும் ஒருவருடம் 2/ 3வாக்கு வீதத்தால் பாராளுமன்றத்தில் நீடிக்கப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதுகளும் கடத்தல்களும் அதிகரிக்கும், சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் அப்பாவி உயிர்கள் பறிக்கப்படும்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்திற்கு வடகிழக்கில் இன்னும் புலிகள்

தங்கள் செயற்பாடுகளை நிறுத்தவில்லை

எனப் பீரிசுக்கள் அறிக்கை விடுவார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் பார்க்கும்போது இது அரச புலநாய்வுப் பிரிவினரின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்.  

மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் இருக்கடா உங்களுக்கு எல்லாம் ஆப்பு .

 

 

எங்க இன்னும் ஒருவரும் ஆரம்பிக்க வில்லை ம்ம் தொடங்குங்க :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் இருக்கடா உங்களுக்கு எல்லாம் ஆப்பு .

 

 

எங்க இன்னும் ஒருவரும் ஆரம்பிக்க வில்லை ம்ம் தொடங்குங்க :rolleyes:

இப்ப கொஞ்சம் தெளிஞ்சமாதிரி இருக்கு  :D

இப்ப கொஞ்சம் தெளிஞ்சமாதிரி இருக்கு  :D

 

யாழ் நிலைமை இப்பதான் முழுமையா விளங்கி இருக்கு அடிச்சு ஓட்டனும் இழுக்க கூடாது அண்ணே :D

உண்மையான கள நிலவரம் தெரியாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வடமாகாணசபையின் செயற்பாடுகளை முடக்குவதற்கான பேரினவாதிகளின் தந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் மீண்டும் ஒரு ரத்த ஆறு ஓடாத என்று நாக்கை தொங்கப் போட்டு காத்திருக்கும் தமிழ்நெட் போன்ற புலம் பெயர் பிணவியாபாரிகளின் வேலையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகர் படையணியை நீங்கள் சீரியசாக எடுக்காவிட்டால் போங்கள். இந்த நோட்டீஸ் வந்ததும், புல்லுருவிகள், பூங்குருவிகள் எல்லாம் யாழ்ப்பாணத்தைவிட்டு தலைதெறிக்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதாக, செய்தி வெளியிட்ட இணையத்தள புலனாய்வு செய்தியாளருக்கு தகவல் வந்திருக்கே... தொடங்குதுங்க அடுத்த யுத்தம்.. வெற்றிவேல் வீரவேல்!

இனி அரசு அவதிப்பட்டு தொடக்கிவைத்தால் தானேதான் முடித்துவைக்க வேண்டி வரும். 

 

இந்தியா ஏன் அமெரிக்க கப்பலை பிடித்து வைத்திருக்கு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

மன்மோகன் சிங் பொதுநலவாயத்துக்கு வராவிட்டால் இந்தியாவிலிருந்து வேறு விருந்தினர்கள் வருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு எப்ப படம் எடுக்கும் அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

இனி அரசு அவதிப்பட்டு தொடக்கிவைத்தால் தானேதான் முடித்துவைக்க வேண்டி வரும். 

 

இந்தியா ஏன் அமெரிக்க கப்பலை பிடித்து வைத்திருக்கு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

மன்மோகன் சிங் பொதுநலவாயத்துக்கு வராவிட்டால் இந்தியாவிலிருந்து வேறு விருந்தினர்கள் வருவார்கள். 

 

ஏன் பிடித்து வைத்திருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இரணைமடு விமான நிலையத்தை சுற்றி கண்ணி வெடிகள் புதைகப்பட்டிருக்காம் அவசர அவசரமா

என்னமோ நடக்குது பட் என்னண்டு தெரியல்ல

குண்டு இல்லாமல் திரி மட்டும் கொழுத்துகின்ற பலர் இங்கு போல் அங்கும் இருக்கினம்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பலரது எழுத்தக்களையும் பார்க்கும்போது

யார் இவற்றை 

ஊக்குவிக்கிறார்கள்?

மறைமுகமாக விரும்புகிறார்கள்??

இவை இல்லாது விட்டால்  கருத்து எழுதக்கூட  வக்கில்லாது இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.... :(

இது சின்னக் கேள்வி. இந்தியா தன்னை அமெரிக்கா தனது கடல் கரையில் வைத்து வேவு பார்ப்பத்தாக சந்தேகிக்கிறது.

 

ஆனால் சீனா கப்பல்கள் வந்து போயிருக்கின்றன. சீனா ஊடுருவல்கள் வடக்கில் நடக்கின்ற்ன. சீன இராணுவம் இந்தியாவுக்குள் வருகிறது. அதையெல்லாம் வழமையில் இருட்டடிப்பு செய்த்துவிடுகிற இந்தியா அமெரிக்க கப்பலுக்கு துடித்து பதைக்கிறதைதான் கவனிக்க வேண்டும்.

 

இந்தியா இலங்கை விடையத்தில் தமிழருக்கு எதிராக நடந்து கொள்வதும் கூட அமெரிக்கா தொடர்பான கொள்கையால் என்றது, சீனா தொடர்பான கொள்கையால் என்பதை விட சரியான கூற்று. JR காலத்தில் இந்தியா இலங்கையில் இறங்கியது சீனாவுக்காக அல்ல என்பது தெரியும்.

 

எனவே ஐ.நா ஊடாக மேற்குநாடுகள் வழங்கதக்கது ஒன்றுதான் தமிழருக்கு தீர்வாகலாமேயன்றி, மாறாக பொதுநலவாயத்தை வைத்து 13ம் திருத்தத்தை அமூல் படுத்துவித்து இந்தியா தீர்வொன்றை இலங்கையில் கொண்டுவருவது கனவு மட்டுமே என்ற நிலைக்கு மேற்கு நாடுகளை மகிந்தா தள்ளினாரேயானால் இந்தியா மகிந்தாவை தனது நண்பனாகவும் கருதாமல் தலையிட வேண்டி வரும்.  அது ஏதாவது ஒரு காரணத்துக்காக பொதுநலவாய மகாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டியதானால் இந்தியாவுக்கு சர்வதேசம் பலரும் கேட்க இலங்கை தனது நண்பன் என்று கூறமுடியாமல் போகும் . இது நடந்தால் அகில நாடுகளுக்கு இலங்கையும், அதன் அதிபர் ராஜபக்ஷாவும் தனது நண்பர்கள் அல்ல என்று இந்தியா கூறுவதாக இருக்கும். இப்படி இலங்கையை குற்ற நாடு ஒன்றாக இந்தியா குற்றம் சாட்டினால் அந்த சந்தர்ப்பத்தை மேற்குநாடுகள் பிடித்துகொள்ளாமல் இருக்க இந்தியா முந்தவேண்டியிருக்கும். 

 

நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இந்தியாவா, மேற்குநாடுகளா எமது பிரச்சனையில் தலயிட வேண்டியது என்ற பனிப்போர் இருக்கிறது என்பது. இது  உண்மை என்றதை ஏற்க தயாராக இருக்க வேண்டும். இந்தப் பனிப்போர் ஓயும் வரை நமக்கு யாரும் துரும்பு எடுத்து போடப்போவதில்லை. இதை பலதடவைகள் நாம் சர்வதேச புலி எதிப்புக்கொள்கையாகவோ அல்லது சர்வதேச தமிழர் எதிர்ப்புக்கொள்கையாகவோ தடுமாறுகிறோம். இந்த தடு மாற்றத்துக்கு எண்ணை ஊற்றுபர்கள் நமது சந்தரப்பவாத அரசியல் ஆழம் இல்லாத கருத்துக்கள் எழுதும் மாற்றுக்கள். சில அரசியல் அறிஞ்ஞர்கள் வெளிவிடும் சில கருத்துகளை தவறாக விளங்கிக்கொள்ளும் மாற்றுக்கள் காங்கிரசின் மேற்குநாட்டு பீதியை இந்தியப் பாதுகாப்பு கொள்கையாகவும் டமாரம் அடிக்கிறார்கள்.  இன்று இந்தியா சீனாவுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ரூசியாவுடன் சென்றவாரம் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்தது. ஆனால் மேற்கு நாடுகளுடம் மட்டும்தான் தனது போட்டியை வைத்துகொள்கிறது. "இந்திய பாதுகாப்பு கொள்கை" மாற்றுகள் இந்த விசேடங்களை தாங்கள் விளங்கப்படுத்த வேண்டும் என்று அக்கறை கொள்வதில்லை.


பலரது எழுத்தக்களையும் பார்க்கும்போது

யார் இவற்றை 

ஊக்குவிக்கிறார்கள்?

மறைமுகமாக விரும்புகிறார்கள்??

இவை இல்லாது விட்டால்  கருத்து எழுதக்கூட  வக்கில்லாது இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.... :(

 

இது பகிடி சேட்டை கருத்து.

 

யாழில் வைக்கும் கருத்துகளை நம்பி சர்வதேசம் இயங்குவதாக சொல்லவரும் விளக்கம். சும்மா பொறுப்பு இல்லாமல் சாயம் பூசும் செயல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகர் படையணிக்கு சின்னமாக பாம்பைஎல்லோ போடவேண்டும் ...... :unsure: ஏன் இவர்கள் புலிச்சின்னத்தைக் கொண்ட கடிதத்தலைப்பிலேயே இந்த எச்சரிக்கைக்கடிதம் எழுதினவை ? :blink: இதில் இருந்து இது அரச பயங்கரவாதிகளின் வேலை என்பதினை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது .

அண்மையில் இரணைமடு விமான நிலையத்தை சுற்றி கண்ணி வெடிகள் புதைகப்பட்டிருக்காம் அவசர அவசரமா

என்னமோ நடக்குது பட் என்னண்டு தெரியல்ல

இலங்கை அரசு புலிகள் வருவார்கள் என்று நம்புகிறதா? அப்போ உண்மையில் இலங்கையில் அடக்கு முறகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை தொடக்கி வைத்த JVP இனி வரவே வராது. ஆகவே தமிழரை மட்டும் கவனித்தால் போதும் என்று நினைக்கிறதா. 

 

இன்று புலிகள் வருவார்கள் என்று சொல்லி இராணுவத்தை வடகில் வைத்திருப்பதால் ஒரு நாள் வரவிருக்கும் புலிகளுக்கு இன்று வானத்தை நோக்கி சுடுவது அவசியம் என்று நம்பியா இப்படி செய்கிறது.

 

அல்லது இலங்கை சர்வதேச நடத்தைகளுடன் தானும் தனது நடத்தைகளை சமபடுத்த வேண்டும் என்று நினைக்கிறதா?

 

கேள்விகளை பல திசைகளில் போட்டால் தொர்டந்து ஆராய்ந்து கொண்டு போகலாம். ஆனால் இதுவரையில் முடிந்து போய்விடாத தமிழர் பிரச்சனையை வைத்து நாம் சர்வதேச நிகழ்வுகளுக்கு முடிவு ஏன் கூறுவான்?

நாகர் படையணிக்கு சின்னமாக பாம்பைஎல்லோ போடவேண்டும் ...... :unsure: ஏன் இவர்கள் புலிச்சின்னத்தைக் கொண்ட கடிதத்தலைப்பிலேயே இந்த எச்சரிக்கைக்கடிதம் எழுதினவை ? :blink: இதில் இருந்து இது அரச பயங்கரவாதிகளின் வேலை என்பதினை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது .

 

ஐயா! புலியும் வரவில்லை கிலியும் வரவில்லை. இதில் நீங்களே தடுமாறினால் இலங்கை பிரச்சாராம் யாரை யாரை எல்லாம் தடுமாறும் வலுவுள்ளதாக இருக்கின்றதென்பது விளங்குகின்றது. 

 

வேண்டுமானால் இந்த மிரட்டல்களை சீனா இரணைமடு விமான நிலையத்தை முழு அளவிலான விமான படைத்தளமாக அமைத்துக்கொள்ள விரும்புகிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள். 

புலிகள் இல்லாமல் காஞ்சு போய் இருக்கிறது  அரச ஒட்டுக்குழுக்கள் தான்... !   கொடுப்பனவுகள் வேணும் எண்டால் விசுவாசத்தை காட்ட புலிகள் இல்லாட்டாலும் வால்களையாவது ஆட்டி காட்டீனம்... 

 

 

Edited by தயா

உங்கள் கருத்தை இலங்கை அரசுக்கு தொடர்ந்து அரசியல் செய்ய புலிகள் தேவைப்படுவதால் இப்படி நடந்து கொள்கிறது என்னலாம்.  அது சரியாக இருக்க வேண்டுமாயில் தெற்கில் அதற்கு தேவையான நிகழ்வு வேண்டும்.... தேர்தல், கலவரம், அள்ளுகொள்ளை ஒன்றில் அரசு மாட்டி அவதி......

 

எதற்காக இந்தியா லக்க்ஷ்ர் ஈ தொய்யா மட்டக்களப்பில் செயல்படுவதாகவும்  யாழ்ப்பாணத்தினூடக பயங்கரவாதிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவ முயகிறார்கள் என்றும் கூறுகிறது? ஒன்றில் அது உண்மையாக இருக்க வேண்டும். அல்லது அதற்கும் நாம், இதில் நடந்து கொள்வது போலவே, ஒரு நோக்கம் கற்பிக்க வேண்டும்.

 

நிறைய கேள்விகள் எழபோகும் காலம் பொதுநலவாயம் முடிந்து வரும் முதல் இரண்டு மாதங்கள். வழமை போல கேள்விகள் சப்பென்று அடங்க போகும் காலம் பங்குனியில் ஐ.நா கூட்டத்தொடர் முடிவடையும் காலம். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பசி உள்ள பிச்சைக்காறன் தெருவில் நடந்து போறவன் ஒவ்வொருவனையும் தனக்கு காசு போடத்தான் வருவதாக நினைப்பது வழக்கம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி மல்லை.. சில புதிய விடயங்களை சிந்திக்கக்கூடியவாறு இருந்தது..

ஆழமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி மல்லை.. சில புதிய விடயங்களை சிந்திக்கக்கூடியவாறு இருந்தது..

சிலதை சிந்தித்து பார்க்காலாம். அதில் பிழையும் வரும் சரியும் வரும். ஆனால் நமது மனதார்த்தமான நம்பிக்கை நியாமான சிந்தனை ஒன்றின் பின்னர் நாம் சரியைத்தான் அடைந்திருக்கிறோம் என்பது. விளங்கியவன் அல்லது கூடத்தெரிந்தவன் பிழையை சுட்டிக்காட்லாம் அல்லது உண்மையை நடந்து முடியும் வரைக்கும் காத்திருந்து கண்டு கொள்ள வேண்டும்.

 

சிந்திக்க விரும்பாவிட்டால் அஞ்சரன் செய்தது மாதிரியும் செய்து விட்டு வேட்டி மண்ணை தட்டிப்போட்டும் எழுந்து போகலாம். :lol:

 

மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் இருக்கடா உங்களுக்கு எல்லாம் ஆப்பு .

 

 

எங்க இன்னும் ஒருவரும் ஆரம்பிக்க வில்லை ம்ம் தொடங்குங்க :rolleyes:

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.