Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோடி கோடியாக பணம் கொட்டும் கரப்பான் பூச்சி பண்ணைகள்! - சீனாவில் பிரபலமாகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

china-271013-150.jpg

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு.

மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன. 'வாங்க் பூமிங்' என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், தன்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சியை வளர்க்கிறார். அவர், 2010ம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார். இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை,பல மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார். அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை, 2 டொலரில் இருந்து, 200 டொலராக உயர்ந்து உள்ளது. இதற்கு முதலீடும் மிக குறைவு. ஒரு டொலர் முதலீடு செய்தால், 110 டொலர் லாபம் பார்க்கலாம்.

பண்ணை ஆரம்பிக்க, கரப்பான பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளை தான் வளர்க்கின்றனர். இவை நீளமாக, பெரியதாக கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு. இவற்றை கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பண்ணையில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே, சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஒரு முறை கோடிக்கணக்கான கரப்பான்கள், ஒரு பண்ணையில் இருந்து, 'எஸ்கேப்' ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரியவந்தது. இந்த பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, தொலைவில் வைக்கின்றனர். இப்போது, சீன 'டிவி'களில், கரப்பான் பண்ணை வளர்ப்பு முறை பற்றிய விளம்பரங்கள், பிரபலமாக உள்ளன.

பசி, வறுமையை எளிதாக ஒழிக்க, ஐ.நா., சபை பல ஆண்டுகளாகவே, பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது. பூச்சிகளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவற்றை வளர்ப்பதும் சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கினங்களின் கழிவுகளில் உண்டாகும் மீத்தேன் வாயு, பூமியை வெப்பமாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள, 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர்.

சீனா மற்றும் தென்கொரியா பல்கலைகழகங்கள் கரப்பான் பூச்சியை வைத்து, பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. அணு கதிர்வீச்சை கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி. இவை மூலம், எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 'லீ ஷீவான்' என்ற, 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கை தலையில் தினமும் தேய்த்து கொண்டதால், முடி வளர்ந்ததாக கூறுகிறார். மேலும், முகம் பளபளப்பாக, இவற்றை அரைத்து முகத்தில் கூட பூசலாம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=95852&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சார் இது.. :huh:

அனைத்தையும் உண்ணும் பேய்நிழல் அண்ணா இதையும் உண்பாரா?  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூரில், பிடிக்கும் கடலட்டை, நாம் உண்பதில்லை. ஐப்பானுக்கு ஏற்றுமதி செய்வோம்.

சில நாடுகளில் நாயிறச்சி சாப்பாட்டு மேசையேறும்.

அவரவர் உணவுப் பழக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மகிந்த கூட்டம் சீனாவுடன் அத்தனை ஐக்கியமாக உள்ளது என்று ஒரு ஐயம் இருந்தது!. கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் போராசையே காரணம் என்பது இப்போதுதான் புரிகிறது. :blink:   சிறீலங்கா புகையிரதத் திணைக்களமே தரமான கரப்பான் பூச்சிகளை வளர்த்தெடுக்கும் திறன் கொண்டது. :D  

சீனாவில் தொடங்கி சீனாவில் முடியும் தொடர் கதை:

1.கொண்டாட்டங்களில் சீனா கண்டு பிடித்த பொட்டாசியம் நைட்றேட்டை வைத்து துவக்கு செய்து சண்டை பிடித்தார்கள். 

2.நோபல் கண்டு பிடித்த டைனமட்டை வைத்து கோட்டைகளை தகர்த்தார்கள்.

3. பாஸ்டர் கண்டு பிடித்த நோய்க்கிருமிகளை வைத்து உயிராயுதங்கள் செய்தார்கள்.

4. கியூரி அம்மை, ரோஞ்சன்,  ஐன்ஸ் ரீன் போன்றவர்களின் கண்டுபிடிப்புக்களை வைத்து அணுவைப் பிளந்து குண்டு தாயாரித்து போட்டார்கள். 

5.மனித குலம் இன்னும் வாழ்கிறது. அடுத்த தடவை போர்வரும் போது அழிக்க முடியா சளியன் பூச்சிகளை உற்பத்தி செய்து எதிரி நாடின் மீது வீசி நாட்டை அழைக்க போகிறார்கள் சீனர்கள். இது அணுக்குண்டு,  நோய்க்கிருமி ஆயுதங்கள் எல்லாவற்றிலும் பலம் உள்ளத்தாக இருக்க போகிறது. இனி சீனாவுடன் எந்த நாடாவது சேட்டை விட்டால் இரண்டு பிளேன் லோட் சளியன் பூச்சிதான் தாக்குதல் தொடுக்க வரும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தையும் உண்ணும் பேய்நிழல் அண்ணா இதையும் உண்பாரா?  :lol:

10291821163_af629a8acf_o.jpg

ஆட்டு இரத்த வறை, ஆட்டு மூளை கறியை விட...

கரப்பான் பூச்சி பொரியல் பறவாயில்லை. :D  :lol:

COCKROACH'S LAST WORDS TO A MARRIED MAN WHO IS ABOUT TO KILL IT.

?
?

?

?

?

?

?

?

?

"GO AHEAD AND KILL ME, YOU COWARD!! YOU ARE JEALOUS OF ME BECAUSE YOUR WIFE IS AFRAID OF ME AND NOT AFRAID OF YOU!!!!!!!!!!!!!!!!!"

:D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10291821163_af629a8acf_o.jpg

ஆட்டு இரத்த வறை, ஆட்டு மூளை கறியை விட...

கரப்பான் பூச்சி பொரியல் பறவாயில்லை. :D  :lol:

நூடில்ஸுக்கு கரப்பானை வறுத்து பிரட்டியெடுக்க அந்தமாதிரியிருக்கும்.....கிட்டத்தட்ட  கூனிறால் கருவாடு ரேஸ்ற் வரும். சாப்பிடேக்கை அப்பப்ப வெள்ளைவைனை உறிஞ்சியிழுக்க இன்னும் கரப்பான்ரை ரேஸ்ற்  தூக்கும். :D

இதெல்லாம், சுத்தமா பண்ணையில வளர்கிறது அண்ணோய்.

ஊரில, கிடைக்கும் பாருங்க, கக்கூசுக்குள, மூலையில விளக்குமாறுக்கு அடியில, அது...... ம்... ம்.

ஆளை அப்பிடியே மேல, தூக்கும்....

.

கைலாயம் அல்லது வைகுண்டம் தான்....

அனைத்தையும் உண்ணும் பேய்நிழல் அண்ணா இதையும் உண்பாரா?  :lol:

அப்படியே ரெசிப்பியை தேடி எடுத்து இணைத்தால் இன்னும் நல்லம்.... :icon_mrgreen:

துளசிக்கு, சப்பாட்டுக்கு ஆர்வம் வரத்தக்கதாக,  நாதமுனி மாதிரி எழுத தெரியவில்லை. :lol: இனி நிழலி ரெடி

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

10291821163_af629a8acf_o.jpg

ஆட்டு இரத்த வறை, ஆட்டு மூளை கறியை விட...

கரப்பான் பூச்சி பொரியல் பறவாயில்லை. :D  :lol:

என்னதான் வறை, கறி, பொரியல் என்று இருந்தாலும், உந்தக் கரப்பொத்தானை கையிலை அள்ளுறதைப் பார்க்க ஒருமாதிரியாத்தான் இருக்கு. காய்ந்த கரப்பொத்தானை இடித்துத் தூளாக்கி ஓமப்பொடியாகச் செய்தால் பொக்கற்றிலையும் கொண்டு திரியலாம். எனக்கும் கொஞ்சம் தாடா என்று கேட்கும் பிரன்ஸ்சுக்கும் கொடுக்கலாம். :icon_idea: 

நான் அருவருப்பு காரணமாக இதற்குள்  வரக்கூடாது என தள்ளி  நின்றேன்

இப்ப  எதுக்கு பிரான்சை  இதுக்கள் இழுக்கின்றீர்கள்??? :lol:  :D

வாய்க்குள் போட்டுக்கொள்ள மறுத்ததால்

வந்தவினையைப்பாருங்கள்

இனி ஆளுக்கொன்று வாய்க்குள் போட்டுக்கொள்ளுங்கள் :lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

அரண்டவனுக்கு மருண்டது எல்லாம் பேய் கதை போல தான் உங்கட கதையும்..

France இல்லை, Friends

ஸ்லிப் ஒப் Paanch's பிங்கர்ஸ், மை லோர்ட்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ரெசிப்பியை தேடி எடுத்து இணைத்தால் இன்னும் நல்லம்.... :icon_mrgreen:

ஓகே....

கரப்பொத்தானை... கட்டிலுக்கு கீழே கண்டாலும், குசினியில் கண்டாலும்....

அடிச்சு நசுக்காமல்... மெல்லமாக பிடித்து....

அதன் மீசையை.. முறுக்கி சாக்கொண்ட பின்...

சிறிது... மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும், உப்பும் தடவி.....

13 நிமிடம் ஊற, வைத்த பின்.....

ஆனைக்கோட்டை நல்லெண்ணை....... ஊற்றிய, வாணலியில்...

பொன்னிறமாக... பொரித்து எடுத்தால்,

சுவையான...

மொறுமொறுப்பான... கரப்பொத்தான்... சிப்ஸ்.. தயார்.

இதனை... அயல் வீட்டிலுள்ள சிறுவர்களும், முதியவர்களும்... விரும்பி உண்பார்கள்.

விற்றமின் சக்தி நிறைந்தது... கரப்பான் பூச்சி பொரியல்.

அப்படியே ரெசிப்பியை தேடி எடுத்து இணைத்தால் இன்னும் நல்லம்.... :icon_mrgreen:

அதுதானே, எங்கை இன்னும் இந்தப்பக்கம் காணவில்லை என்று பார்த்தன்.. :lol:

ஓகே....

கரப்பொத்தானை... கட்டிலுக்கு கீழே கண்டாலும், குசினியில் கண்டாலும்....

அடிச்சு நசுக்காமல்... மெல்லமாக பிடித்து....

அதன் மீசையை.. முறுக்கி சாக்கொண்ட பின்...

சிறிது... மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும், உப்பும் தடவி.....

13 நிமிடம் ஊற, வைத்த பின்.....

ஆனைக்கோட்டை நல்லெண்ணை....... ஊற்றிய, வாணலியில்...

பொன்னிறமாக... பொரித்து எடுத்தால்,

சுவையான...

மொறுமொறுப்பான... கரப்பொத்தான்... சிப்ஸ்.. தயார்.

இதனை... அயல் வீட்டிலுள்ள சிறுவர்களும், முதியவர்களும்... விரும்பி உண்பார்கள்.

விற்றமின் சக்தி நிறைந்தது... கரப்பான் பூச்சி பொரியல்.

மிளகுத் தூள் போடத் தேவையில்லையா இதுக்கு தமிழ் சிறி? நான் நினைக்கின்றன், இதோட சின்ன வெங்காயத்தினை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தாளித்துப் போட்டால் இன்னும் நல்லா சுவை வரும் என்று,

அது சரி, இதில் ஆண் கரப்பான் (சேவல் கரப்பான் என்று இப்போதைக்கு பெயர் வைப்பம்) நல்லதா பெண் கரப்பான் (கோழிக் கரப்பான்) நல்லதா?

நான் அருவருப்பு காரணமாக இதற்குள்  வரக்கூடாது என தள்ளி  நின்றேன்

இப்ப  எதுக்கு பிரான்சை  இதுக்கள் இழுக்கின்றீர்கள்??? :lol:  :D

வாய்க்குள் போட்டுக்கொள்ள மறுத்ததால்

வந்தவினையைப்பாருங்கள்

இனி ஆளுக்கொன்று வாய்க்குள் போட்டுக்கொள்ளுங்கள் :lol:

காதுக்குள் ஒன்று ஒளித்திருந்திருக்கும்.  ஆனால் உந்த பின்னல் போடுகிற தலைக்கு தீயணைக்கும் படையின் தண்ணிஅடிக்கிற  மிசின்தான் வேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

காதுக்குள் ஒன்று ஒளித்திருந்திருக்கும்.  ஆனால் உந்த பின்னல் போடுகிற தலைக்கு தீயணைக்கும் படையின் தண்ணிஅடிக்கிற  மிசின்தான் வேணும். :D

நீங்க வேற.........

அவர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் தான் தொழில்.

பக்கத்தால் போனால்

3 நாட்களுக்கு நாசியில் மணமிருக்கும் :D

பூச்சிகள் பெருக சிறந்த இடம்

ஆனாலும்  அதிக  காலம்  அதற்குள்  இருந்தால்

பூச்சிகளுக்கும்  வருத்தங்கள் வரலாம் :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உவாக்......, ஓங்காளிக்குது....
நியானி, ஹெல்ப், மீ.....

  • கருத்துக்கள உறவுகள்

உவாக்......, ஓங்காளிக்குது....

நியானி, ஹெல்ப், மீ.....

ஏன்  சிறி?

எத்தனை  மாசம்..........??? :icon_mrgreen:

வயித்தின்ர  படத்தைப்போடுங்கோ

பார்த்துச்சொல்லுறன் :lol:  :D

மிளகுத் தூள் போடத் தேவையில்லையா இதுக்கு தமிழ் சிறி? நான் நினைக்கின்றன், இதோட சின்ன வெங்காயத்தினை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தாளித்துப் போட்டால் இன்னும் நல்லா சுவை வரும் என்று,

அது சரி, இதில் ஆண் கரப்பான் (சேவல் கரப்பான் என்று இப்போதைக்கு பெயர் வைப்பம்) நல்லதா பெண் கரப்பான் (கோழிக் கரப்பான்) நல்லதா?

எனக்கு கொஞ்சம் அதிகம் மிளகாய்த்தூள் போட்டு

பெண் கரப்பானில் செய்து எடுத்து

 குளிர்ப்பெட்டிக்குள் போட்டு வையுங்கோ

வரும் போது சாப்பிட....... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சம் அதிகம் மிளகாய்த்தூள் போட்டு

பெண் கரப்பானில் செய்து எடுத்து

 குளிர்ப்பெட்டிக்குள் போட்டு வையுங்கோ

வரும் போது சாப்பிட....... :D

சீனாக்காரன் தமிழ் மண்ணிலும் புகுந்திட்டான். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.