Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதோன்றி :D

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சைத்தூன் மரம்

 

ஆர் சுமேரியோ நவீனன் :o:unsure::D ???

 

ஆர் சுமேரியோ நவீனன் :o:unsure::D ???

விளங்கினால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

மருதோன்றி...!

  • தொடங்கியவர்

ஒலிவ் மரம்

 

வணக்கம் பிள்ளையள் !!  நல்லாய் தான் எண்ணை மசாஜ் செய்திருக்கிறியள்  :lol::D . ஒலிவ் எண்ணையை கன சனம் விரும்புறேலை . எங்கடை சனத்துக்கு மணம் குணத்தோடை எண்ணையள் சமையலுக்கு வேணும்  :D . ஆனால் இப்ப இந்த ஒலிவ் எண்ணையையும் பாவிக்க தொடக்கி இருக்கினம் .சுமேரி முதல்  சொன்னதாலை அவாவுக்கே பரிசை குடுப்பம் :) .

 

  • தொடங்கியவர்

43 கஞ்சா செடி ( Cannabis )

 

7nwl.jpg

 

கஞ்சா செடி பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, கனாபிசு சற்றைவா (Cannabis sativa),[கனாபிசு இன்டிகா(Cannabis indica),மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது.  முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.

இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE

 

http://en.wikipedia.org/wiki/Cannabis

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா :D

கஞ்சா செடி

  • தொடங்கியவர்

என்னத்தை சொல்ல ரெண்டும் இல்லை :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவில் ஐந்து இலைகள்தான் இருக்கும் .. :wub:

  • தொடங்கியவர்

கஞ்சா செடி

 

வணக்கம் பிள்ளையள் !!!  எல்லாரும் கஞ்சா அடிச்சிருக்க மாட்டியள் எண்டு நம்பிறன்  :lol:  . நிலமதி அக்கா முதலிலை சொன்னாலும் கஞ்சா எண்டு மொட்டையாய் சொல்லிபோட்டா  :(  . அவா எடுத்துகுடுக்க நவீனன் கோலை அடிச்சுபோட்டர் :D அதாலை அவருக்கே பரிசு போகுது :) .

 

என்னத்தை சொல்ல ரெண்டும் இல்லை :D :D .

 

அட பாவி :o

  • தொடங்கியவர்

44 கம்பு ( pearl millet or Pennisetum glaucum )

 

Grain_millet%2C_early_grain_fill%2C_Tift

 

கம்பு ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,
42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்:

முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.
பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான். இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

http://en.wikipedia.org/wiki/Pennisetum_glaucum

 

Edited by கோமகன்

கம்பு செடி

 

சாமை அல்லது ஊர் வழக்கில் சாமி. இவைகள் எல்லமே புல்லினங்கள். கோதுமை, நெல்லும் புல்லினம். எனவே சாமைப் புல்லு

  • கருத்துக்கள உறவுகள்

வரகுச் சாமைக் கம்புப் புல்லு...! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வரகுச் சாமைக் கம்புப் புல்லு...! :icon_idea:

இந்த முறை உங்களுக்குத் தான், சுவியர்!

 

ஒண்டுமே 'மிஸ்' பண்ணவில்லை! :lol:

  • தொடங்கியவர்

கம்பு செடி

 

வணக்கம் பிள்ளையள் !! கூடினவரை எல்லாரும் கம்பங்கழி குடிச்சிருக்கிறியள் :D :D . இந்த கம்பு ஒரு சிறுதானியப் பயிராகும் . முந்தி ஊரிலை குரக்கன் சாமை இறுங்கு எல்லாம் பாத்திருக்கிறன் . இப்ப செய்யினமோ தெரியாது . நவீனன் முதல் சொன்னதாலை அவருக்கே பரிசு போட்டுது  :)  :)  .

 

  • தொடங்கியவர்

45 கமுகு , பாக்கு, கந்தி சுடைக்காய்( areca palm or areca nut palm betel palm or Areca catechu )

 

areca%20catechu(supari%20palm).jpg

 

பாக்கின்றி தாம்பூலமில்லை. காதல் உணர்வை தூண்டுவதாக கருதப்படும் கமுகு (பாக்கு), நீரிழிவு நோய்க்கும் மருந்தாகும் என்பது உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

கமுகு எனப்படும் பாக்கு மரம் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடுகளில் பயிராகும் மரம். இந்த மரத்தின் பழங்களில் உள்ள விதை பாக்கு எனப்படும். பாக்கு மரப்பழம் 3 செ.மீ. நீளமாக, உள்ளே ஒரே ஒரு விதையை கொண்டிருக்கும். பழங்கள் பழுக்கும் முன்பே மரத்திலிருந்து எடுத்து நார் பாகத்தை பிரித்தெடுத்து, கொட்டைகள் சுடுநீரில் வேக வைத்து, வெய்யிலில் உலர்த்தப்படும். இம்முறையில் எடுக்கப்பட்ட பாக்கு 'டேனின்' (annin) குறைவாக இருக்கும். தவிர அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். சுவையும் கூடியிருக்கும்.

பாக்கு மரத்தின் தாவர பெயர் - Areca Catechu  ஆங்கிலத்தில் Betel Nut palm (Ü) Areca - nut palm சமஸ்கிருதம் - பூகா, ஹிந்தி - சுபாரி, தமிழில் - கமுகு, பாக்கு, கந்தி சுடைக்காய், பல பயன்களை தரும் பாக்கு, பொதுவாக தாம்பூலத்தில் வெற்றிலையுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. வெற்றிலை தின்பவர்களுக்கு இன்றியமையாதது.

பாக்கை முக்கிய உட்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட "பூங்காட்ரிம்" (பாக்கு தவிர வேறு சில பொருட்கள் சேர்ந்தது) மருந்து உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் - பூங்காட்ரிம் மிதமான மற்றும் நடுத்தர தீவிரமான நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும் (அதுவும் பக்க விளைவுகள் இல்லாமல்) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

http://www.xn--wkc4d4acf4a1f5bwce.com/2013/12/blog-post_8116.html

 

http://en.wikipedia.org/wiki/Areca_catechu

Edited by கோமகன்

பாக்கு மரம்

இந்த போட்டிக்கு மினக்கெட்டதிலும் பார்க்க   ஒரு கமுகம் பிள்ளை நட்டு தண்ணி வார்த்திருந்தால் தன்னும் பிரயோசனமானதாக வளர்ந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கமுகம்பிள்ளை...!

 

குறிப்பாகச் சில பிள்ளைகள் : தென்னம்பிள்ளை, கமுகம்பிள்ளை , அணில்பிள்ளை , கீரிப்பிள்ளை ...!  இன்னுமொரு பிள்ளை மறந்திட்டன் , அதுக்காக  வேலுப்பிள்ளை என்று சொல்லக் கூடாது ...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.