Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

இந்த தலைப்பிற்கு இந்த ஒரு வரிகள் மட்டுமே ...............

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

முதல் வசனம் மிக உண்மையானது .

  • கருத்துக்கள உறவுகள்

1461565_161836537360196_1013621302_n.jpg

முதல் வசனம் மிக உண்மையானது .

அப்ப உன்னை நீயே அறிவாய் என்னும் கருத்திற்கிணங்க உங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா ............. :D

காவல்துறை வைத்த வேலியை அகற்றும் எம் மக்கள்

 

995867_480975792019809_1353037414_n.jpg

 

(facebook)

காலையில் கைதுசெய்யப்பட்ட 61 பேர் மற்றும் ஐயா நெடுமாறன் உள்ளிடோர் ரிமாண்ட் செய்யப்படுட்டு திருச்சி மத்திய சிறை நோக்கிபயணம்.ஐயா உடன் கைது செய்யப்பட்ட தம்பி புவன் தகவல்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
5cot.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசத்தில் எம் ஆளுகைக்குள் இருந்தபோது நாம் புதைகுழிகளில் விதைத்த வீரப்பரம்பரைகளது வித்துடலை வெட்டியெறிந்து வீசியதே சிங்களம் அத்துடன் நாம் இன்னுமொரு விதிசெய்ய முனைந்துள்ளோம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை தமிழின எதிரிகள் இப்படி இடித்தழிக்காதுவிடினே நாம் வியப்புறல்வேண்டும். மீண்டும் காலம் எமக்கு எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியிக்கின்றது. இதில் வியப்பேதுமில்லை. தமிழகத்தின் அரசியற்களத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது கருனாநிதியும் காங்கிரசும் இல்லை அத்தோடு தன்னையும்தான் என ஜெயலலிதா தானாகவே அடையளம் காட்டியிருக்கிறார். தவிர முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது தமிழகத்தின் கடைக்கோடிவரை தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றது, தஞ்சையில் பெரியகோவில் பார்ப்பதற்கு அடுத்ததாக இதுவே எதிர்காலத்தில் அனைவரது தேர்வாகவும் இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழின விரோதிகள் முயல்வதற்குமுன்பு எந்தவித சேதாரமும் இல்லாது அதைப் பெயர்த்தெடுத்து நாம் வாழும் புலம்பெயர்தேசத்தில் எங்காவது நிறுவுவதே நல்ல முயற்சி ஆகும். அவைகள் எமது சொத்துக்கள் அவற்றைக் காப்பது எமது கடன்.

 

மேலும் எஜமானர்கள் வீசிய எலும்புத்துண்டுக்காய் இங்கு பல விசுவாச வாலை ஆட்டுகின்றன, விழுங்கிய எலும்புகள் ஜீரணிக்காது பேதியாக்கி வெளியேறும்போது வால்களிலும் ஒட்டிக்கொண்டு, அவை விசுவாச வலாட்டும்போது எமது முகங்களிலும் தெறிக்கின்றன ஆகவே தூர விலகி இருங்கள் இல்லையேல் அசிங்கம் எமக்குத்தான். தேர்தல் காலத்திலும் சில வந்தது பின்பு போனது அதுபோல இவைகளும் வரும் போகும் அதுகளை அதுபாட்டுக்கு விடுங்கோ.

Edited by Elugnajiru

இவாவுக்கு சூப்ரமணிய சாமியும் துக்ளக் சோவும் ஆலோசகர்கள் எண்டால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை புகழ் கருணாநிதியும் இவாவும் ஒரே இந்திய குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இப்ப நிலமை இப்படி எண்டால் மோடி வந்தால் இன்னும் மோசமாகலாம். அவருக்கும் சூப்ரமணிய சாமி ஆலோசகர்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வைகோ ஐயா மற்றும் அனைத்து உணர்வாளர்களுக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

கல்தோன்றி மண்தோண்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன். பெருமையில் தமிழன் வானத்தில் பறந்தான். இப்போதுதான் அவனைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவந்து மண்போட்டு மூடுகிறார்கள். வளர்வதற்கு.

இது என்ன கொடுமை உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா நாங்கள் தமிழக பிழைப்பு அரசியலை விமர்சனம் செய்கிறம் அதை நிங்களா முடிவு எடுத்து புலிகளுக்கு எதிரான கருத்து மாற்றுவது உங்க தப்பு ஐயாமாரே .

 

எங்க கொள்கையும் எங்கள் இலக்கும் எங்கள் தலைமையும் சரியா இருக்கு எனக்கு சீமான் போறவர் தேவை படாதவர் அவ்வளவுதான் நாங்கள் சீமானை நம்பி போராட போகவில்லை பாருங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து விரைந்து செல்லும்  
ஈழத்தமிழன் இனவிடுதலைப் போராட்டம் 

ஐயா பழ.நெடுமாறன் உட்பட 83 பேரும் திருச்சி சிறையில் அடைப்பு. 27ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க தஞ்சை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆணை.

 

(facebook)

நன்றி பேஸ்புக் ..ட்விட்டர் ...மேலதிக செய்திகளுக்கு இணைத்து இருங்கள் :D

 

 

காமன் வெல்த்தும் ..மாணவர் போராட்டமும் காணமல் போயிட்டு சின்ன சுவர் இடிப்பில் இதுதான் இந்திய அரசியல் யுத்தி .

ஐயா பழ.நெடுமாறன் உட்பட 83 பேரும் திருச்சி சிறையில் அடைப்பு. 27ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க தஞ்சை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆணை.

 

(facebook)

 

அப்ப ஜெயலலிதா இடித்து முடிக்கத்தான் நினைக்கிறா.

 

தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுவத்தற்கு அவர்களுக்கு என்ன தடை என்று கேட்கிறா. 

முதலமைச்சர் செயலலிதா அரசின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பை வண்மையாகக் கண்டிக்கின்றேன் !- தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை.
=======================================

தமிழக முதல்வர் செயலலிதாவின் கட்டளையைத் தலைமேற் கொண்டு இன்று (13.11.2013) விடியற்காலை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் 'திருப்பணி'யில், மாவட்ட வருவாய்த்துறையும், காவல்துறையும், தமிழக நெடுஞ்சாலைத்துறையும் கூட்டாக ஈடுபட்டன.

சுற்றுச்சுவரை முற்றாக இடித்துத் தகர்த்துவிட்டனர். 60 அடி அகலத்திற்கு, சுற்றியிருந்த பூங்காவையும் நாசம் செய்து விட்டனர். கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றை, அப்புறப்படுத்திவிட்டனர்.

இந்த அட்டூழியங்களுக்கு அவர் சொல்கின்ற காரணம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கில் பூங்கா எழுப்பியிருக்கிறார்கள், எனவே இடித்தோம் என்கிறார்கள். இந்த பூங்காவையும் சுற்றுச்சுவரையும் அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு எதையும் செய்யவில்லை.

சாலையோரம் உபரியாகக் கிடந்த இந்த புறம்போக்கு நிலத்தில், நெடுஞ்சாலைத்துறையின் எழுத்து வடிவிலான ஒப்புதலோடு தான், பூங்கா அமைக்கப்பட்டது. இப்பொழுது, அந்த உத்தரவை நாங்கள் நீக்கி விட்டோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலையில் கூறினார்கள்.

சாலையோர பூங்கா அமைத்துக் கொள்ளத் தனியாருககு அனுமதி வழங்கும் விதிமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் இருக்கிறது. அவ்விதியின்படி, கொடுக்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இரத்து செய்வதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, இரத்து செய்தது பற்றிய செய்தியை எழுத்துவடிவில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை அவர்களும், நானும் உரிமை இரத்து செய்து கொடுத்த நகலைக் காட்டுங்கள் என்று கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, அவர்களாக எழுதிக் கொண்ட அறிக்கையைக் காட்டினார்களே தவிர, அந்த அறிக்கையை தொடர்புடையவரிடம் கொடுத்து பெற்றுக் கொண்டோம் என்பதற்கான கையொப்பமுள்ள நகலை அந்த அதிகாரி காட்டவில்லை. எனவே, நீங்கள் இப்பொழுது ஜோடனையாகத் தயாரித்துக் கொண்ட அறிக்கை இது என வாதிட்டோம்.

அடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், இப்பொழுதுள்ள ஒட்டுமொத்தக் கடடுமானத்தோடு முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறந்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன், ஆக்கிரமிப்புப் பற்றி தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற ஆணைக்குப் புறம்பாக இடிப்பது சட்டவிரோதம், நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக் காட்டினோம். அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. அவர்கள் இடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

சுற்றுச்சுவர்களை முழுமையாக இடித்த பிறகு, பூங்காவை நாசப்படுத்திய பிறகு, முற்றத்தில் உள்ள மண்டபங்களுக்குச் செல்லும் பாதையையும், கம்பி வேலிகட்டி அடைத்தார்கள். அந்த முற்றத்திற்குள் நுழைய எந்த வாசலும் அவர்கள் வைக்கவில்லை.

முற்றத்தின் மண்டபங்கள் பட்டா நிலத்தில் உள்ளது. அது உலகத் தமிழர் பேரமைப்பினுடையத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களது பெயரில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமானது. அதற்குப் போவதற்குப் பாதை வேண்டும். அதுமட்டுமல்ல, அய்யா நெடுமாறன் குடியிருக்கும் வீடு அதிலுள்ளது. அவ்வீட்டில் மனைவி, மகள் ஆகியோருடன் நெடுமாறன் குடியிருந்து வருகிறார். அவர்களையும் சேர்த்து உள்ளே வைத்து கம்பி வேலி வைத்து அடைத்துவிட்டால்,எப்படி வெளியே வருவார்கள்?

துப்பாக்கிச் சூடு நடத்தி நெடுமாறனை சுட்டுக் கொன்றால் பழி வரும் என்று அஞ்சி, கம்பி வேலி அடைப்புக்குள் பட்டினி கிடந்து சாகட்டும் என செயலலிதா இந்தத் திட்டம் போட்டிருக்கிறாரா? என்று கேட்டோம்.

ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைப்பதற்கு, யாருக்கு உரிமை இருக்கிறது? எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? என்று கேட்டபிறகு, அதிகாரிகள் யோசித்து, வீட்டுக்கு செல்லும் பாதையை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் பாதையை கம்பி வேலி கட்டி அடைத்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் இடிக்கிறார்கள் என்ற செய்திப் பரவியதும் மக்கள் திரண்டுவிட்டார்கள். அந்த மக்கள் ஆவேசத்தோடு அதிகாரிகள் போட்ட வேலியை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் அந்த மக்களைக் கைது செய்து, தஞ்சை நகரில் காவலில் வைத்துள்ளார்கள்.

அய்யா பழ.நெடுமாறன் அவர்களையும், அவரோடு முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் உட்கார்ந்திருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை உள்ளிட்ட பலரையும் காவல்துறை கைது செய்து கொண்டுபோனது.

இந்த அநீதியைக் கண்டித்து, த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட 17 தோழர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் ரெ.ரெங்கராசு தலைமையில், மறியல் செய்த மகளிர் ஆயம் ஒன்றியப் பொறுப்பாளர் தோழர் மீனா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றும்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடந்து கொண்டுள்ளன.

நேற்று மாலை, காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியா செல்லககூடாது என்று சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் போட்டு பரபரப்புக் காட்டிய முதலமைச்சர் செயலலிதா, இன்று காலை விடிவதற்குள் ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்திருப்பது, இட்லரின் செயல்பாட்டை நினைவுட்டுகிறது.

1933ஆம் ஆண்டு மே முதல் நாள், இலட்சக்கணக்கான மக்களை, தொழிலாளர்களைத் திரட்டி மே நாள் கொண்டாடினார் இட்லர். அந்த பெருந்திரள் கூட்டத்தில் பேசிய இட்லர், இன்று முதல் ஜெர்மன் தேசமெங்கும் இரண்டு முழக்கங்கள் ஒலிக்க வேண்டும் என்றார். அது, "உழைப்பை மதிப்போம்! உழைப்பாளியை கவுரவிப்போம்!" என்ற முழக்கங்களாகும் என்றார். ஆனால் மறுநாள் விடிந்தவுடன், நாளேடுகளில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன, தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என செய்தி வந்தது. செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு நிகழ்வு. இட்லரின் தந்திரத்தை ஒத்ததாக இருக்கிறது.

இலங்கையில், ஈழ விடுதலைக்குப் போராடிய வீரர்களுக்கு, மக்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களையெல்லாம் இராசபக்சே இடித்தான். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை முதலமைச்சர் செயலலிதாவே இடிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் இந்த சட்டவிரோதச் செயலுக்கு, நடுவண் அரசின் தூண்டுதல் இருக்கும் என்ற போதிலும், முதலமைச்சர் செயலலிதாவின் தீவிர முனைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழினத்தின் மீது இந்திய அரசுக்கு எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ, அதே அளவுக்கு காழ்ப்புணர்ச்சி செயலலிதாவுக்கும் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழக அரசின், முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு அழிவு வேலையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அய்யா பழ.நெடுமாறன் உட்பட கைது செய்யப்பட்ட தோழர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதே வேளை, தமிழக, இந்திய அரசுகளின் தமிழின விரோதச் செயல்களை தமிழ் மக்கள் எதிர் கொள்வார்கள், முறியடிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படிக்கு,
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

============================================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

(facebook)

உன்னால் வாழ முடியாவிட்டால்- திருமணம் செய்யாதே!
உன்னால் வாழ வைக்க முடியாவிட்டால்- குழந்தை பெற்றுக் கொள்ளாதே!
உன்னால் போராட முடியாவிட்டால்-
புரட்சி பன்னாதே!
....
.
.
அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்
உயிரை இழந்தோம்!
இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
மானத்தை இழந்தோம்!
###
மறுபடியும் எங்கள் வலிகளை வைத்து காமெடி பண்ணிவிட்டார்களே-:(

 

(நன்றி ..பேஸ்புக் )

 

முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........

முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........

நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே .

 

இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .

 

நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே .

 

இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .

அந்த துயர் நிறைந்த சுமைகளை, கொடுமைகளை  தமிழ்நாட்டு உறவுகள் மட்டும்  அல்ல உலகத்தின் எந்த ஒரு தமிழாலோ ,அல்லது சக்தியாலோ தடுக்கமுடியவில்லை ,முடியாதிருந்தது அதுதான் யதார்த்தம் ......................இன்றைய யதார்த்தத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சாதகமான நிலைகளை நாம் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவற்றை எம் சந்ததிக்கு சாதகமாக்குவதே புத்திசாலித்தனம் ....................

அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்

உயிரை இழந்தோம்!

இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

மானத்தை இழந்தோம்!

 

 

மேலுள்ள கருத்து சரியானது அல்ல. மானத்தை இழந்தது தமிழக அரசும் அதன் இந்திய இயக்குனர்களும் தான். இவாரான சம்பவங்கள் தான் சந்ததி சந்ததியாக நின்று அவர்களின் மானத்தை வாங்கும். நீங்கள் இருந்து பாருங்கள். வேறொருவன் இவர்களுக்கு இனோரு விடயத்தில் இதையே செய்வான். அப்போது இவர்கள் பாத்துக்கொண்டிருக்க வேண்டி வரும். இன்று ஜப்பான், இன்டொநேஷியா, ஜர்மனி, ஆவெஸ்திராலியா, அமெரிக்க போன்ற எல்லா நாடுகளின் அங்கிருந்த மக்களுக்கும் மற்றோருக்கும் அவர்கள் செய்த பல சீறிய மற்றும் பெரிய குற்றங்கள் இன்றைய தலைமுறையை தலைகுனிய வைக்கின்றது.  

530342_315741228567123_1538914535_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.