Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் வரை கால அவகாசம்! சர்வதேச விசாரணையைத் தவிர்க்க முடியாது! டேவிட் கெமரூன்

Featured Replies

David-Cameron.jpgஎதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் இலங்கை மேலும் முன்னேற்றமான முனைப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

அடிப்படையான விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்டுள்ள இந்த பணிகள் பராட்டத்தக்கது.

இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். அதனை நான் செய்துள்ளேன்.

30 வருட மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் ஏற்படக் கூடிய சாத்தியமான நிலைமைகள் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எவரும் விடுதலைப்புலிகளின் காலத்தை நோக்கி திரும்ப வேண்டியதில்லை. அவர்கள் மேற்கொண்ட கொடூரமான விடயங்களில் இருந்து விடுப்பட வேண்டும்.

மூன்று தசாப்த கால போருக்கு பின்னர் இலங்கையை அதில் இருந்து மீட்டெடுக்க காலம் அவசியம். இலங்கையின் மீளமைப்பு பணிகளுக்கு பிரித்தானிய தனது உதவிகளை அதிகரிக்கும் என்றார்.

பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் அதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

http://tamilworldtoday.com/

இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2013 - 06:32 ஜிஎம்டி
131116060607_cameron_304x171__nocredit.j

போர்க்குற்ற விசாரணை கோருவோம் என்கிறார் கேமரன்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.

காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு சென்றிருக்கும் டேவிட் கேமரன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்ததாகத் தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக நேற்று அவர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் சமூகத்தினரை சந்தித்தார்.

இன்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், பெருந்தன்மையாக நடந்துகொள்வதன் மூலமாகத்தான் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார் கேமரன்.

மஹிந்தவுடனான தனது சந்திப்புல் கடுமையான கருத்துக்கள் பரிமாறபட்டதாகவும் ஆயினும், இந்த சந்திப்பு தேவையானது, பெறுமடியானதுதான் என்றும் அவர் கூறினார்.

" நான் சொன்னது அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காண விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், இந்த விஷயத்தில் சர்வதேச அழுத்தம் இருப்பது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் கேமரன்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131116_cameronsrilanka.shtml

David Cameron urges Sri Lanka to do more on human rights
_71152062_cam.jpg
 
David Cameron: "It means credible, transparent and independent investigations into alleged war crimes"

David Cameron has urged Sri Lanka's president to go further and faster over human rights issues and reconciliation following the country's civil war.

The prime minister met Mahinda Rajapaksa after a visit to the northern Jaffna region to see the situation facing the country's Tamil minority.

Mr Cameron said he called on him to set up an independent inquiry into alleged war crimes - or face a UN probe.

He said strong views had been expressed but the meeting had been worthwhile.

'Right pathway'

Mr Cameron was speaking at a news conference in the capital Colombo, ahead of the Commonwealth summit in Sri Lanka.

_71152500_71152499.jpgSri Lankan cricket legend Muttiah Muralitharan met the Prince of Wales who is representing the Queen

He said: "I accept it takes time but I think what matters is getting on the right pathway, getting on the right track, because it's only through generosity, through reconciling people that you can make the most of this country.

"So, a frank meeting - of course not everything I said was accepted but I sense that they do want to make progress on these issues and it will help frankly by having international pressure in order to make sure that that happens."

Mr Cameron met world famous Sri Lankan cricketer Muttiah Muralitharan, a Tamil who works for reconciliation in his country.

Spin bowler "Murali" backed the prime minister's decision to travel to Sri Lanka but said he had been misled about the situation in the country.

Murali told journalists: "He must have been misled by other people. People speak without going and seeing the things there. I go on and off. I see from my eyes there is improvement.

"I can't say the prime minister is wrong or not. He hasn't seen the site, he hasn't gone and visited these places - yesterday only."

BBC political editor Nick Robinson, in Colombo, said it was clearly a tense and difficult meeting between the prime minister and Sri Lanka's president.

Meeting boycott

Our correspondent added that Mr Cameron said he would push the UN to set up an independent inquiry at the next meeting of its human rights council in March.

Earlier, Mr Cameron travelled to the Tamil-dominated north of the country - the first international leader to do so since Sri Lankan independence in 1948.

At one point, the PM's convoy was surrounded by more than 200 protesters holding pictures of loved ones who they claim were killed by the Sri Lankan armed forces or have disappeared.

Mr Cameron said the visit - in which he also toured a temporary refugee camp and a newspaper office whose printing presses had been burned - had "drawn attention to the plight" of the Tamil minority in the country.

Mr Rajapaksa has said the end of the war has brought peace, stability and the chance of greater prosperity to Sri Lanka.

The Tamils' treatment at the end of the civil war in 2009 has dominated the run-up to the the Commonwealth Heads of Government Meeting (Chogm), taking place in Colombo.

The prime ministers of Canada, India and Mauritius are staying away from the summit in protest over the allegations.

http://www.bbc.co.uk/news/uk-politics-24970142

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய உறவுகள், இன்று இரவு SBS  செய்தியைக் கட்டாயம் பார்க்கவும்!

கமரூனின் அறிவிப்பை,செய்திச் சுருக்கத்தில் இப்போது காட்டினார்கள்!

இத்துடன் ரொனி, கமக்கட்டுக்குள் தலையை மறைத்துக் கொள்வார் என நினைக்கின்றேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மார்ச் வரை கால அவகாசம் - இல்லையேல்: சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது - கமரூன்

16 நவம்பர் 2013

காணொளியுடன் 3ஆம் இணைப்பு:-

http://www.youtube.com/watch?v=pLmuTlAOBXU&feature=player_embedded

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும் அவ்வாறு சுயாதீன விசாரணை நடத்த தவறும் பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அழுத்தம் கொடுக்கப்படும் என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15.11.13) வடக்கிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசிய போதே பிரித்தானிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு நிலைமைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுபோர் நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனத் தெரிவித்த அவர குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகச் சாதகமான ஓர் முன்நகர்வு என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் இடம்பெயர்ந்த மக்கள் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வடக்கின் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் டேவிட் கமரூன் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை செனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட் கமரூன் சுயாதீச விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் வலியுறுத்து

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை உரிய முறையில் விசாரணை நடாத்தத் தவறினால் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் ஏற்கனவே கோரியுள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை சுயாதீன விசாரணைகளுக்கு இணங்க மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்  யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஜனாதிபதியுடன் யதார்த்தமான சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர் தாம் கூறிய அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கருத்து வெளியிட்டு உள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99070/language/ta-IN/article.aspx

பிரதமர் டேவிட் கெமரூன் தாய்நாடு திரும்பினார்
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று பகல் 1 மணியளவில் தாய்நாடு திரும்பினார்.
David-Cameron-1906150_0.jpg
பிரித்தானிய விசேட விமானமொன்றிலேயே பிரித்தானிய பிரதமரும் அவரது குழுவினரும் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
 
இதேவேளை, இன்று காலை 9.50 மணியளவில் கயானா பிரதமரும் தாய்நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

virakesari.lk

இன்று இவ்வாறு கூறி விட்டு நாளைக்கே கூறியதை மறந்து விடாமல் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு கமரூன் தொடர்ச்சியாக குரல்கொடுக்க வேண்டும்.

இனவழிப்பை நடத்தியதே,  நடத்திக்கொண்டிருப்பதே இலங்கை அரசாங்கம் தான். இனியும் அவர்களையே நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர்களுக்கு அவகாசம் கொடுப்பதில் பிரயோசனம் இல்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

சொல்வது ஒன்று .. செய்வது ஒன்று என இருப்பவை மூன்றாந்தர (மூன்றாம் உலக) அரசுகள்தான். மாறாக, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் வாய்க்குள் ஒன்றைப் போட்டுவிட்டால் மென்று தின்னாமல் விடமாட்டார்கள்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆனதைப்போல்..

BBC political editor Nick Robinson, in Colombo, said it was clearly a tense and difficult meeting between the prime minister and Sri Lanka's president.

Mr Cameron said he called on him to set up an independent inquiry into alleged war crimes - or face a UN probe.

He said strong views had been expressed but the meeting had been worthwhile.

Our correspondent added that Mr Cameron said he would push the UN to set up an independent inquiry at the next meeting of its human rights council in March.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். அதனை நான் செய்துள்ளேன்.

ஒருதொகை அழகிய தமிழ் ஆங்கில வசனங்கள் காணப்படுகின்றன. ஆனால் வெற்றிலை போட்டால் சுண்ணாம்பு தடவாமல் நமக்கு ஆகாது என்ற முறையில் நமது வசனங்களிலும் ஓரிரு சொற்கள் எழுத வேண்டும்.

"சந்திப்பு என்ற முறையில் இருவரும் ஒருவரின் குடும்பியை மற்றவர் பிடித்துக்கொண்டார். 'டேவிட் கமருனிடம் சில கேள்விகள் கேட்க இருக்கு' என்று தயாராக இருந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி, வருங்கால பிருத்தானிய அரசரை நியமிக்க காத்திருக்கும் பெருந்தகை, தான் பிருத்தானியாவுடன் சணடை போடதயாராக  சீனாவுடன் சேர்ந்து கடல்படைத்தளம், விமானத்தளம் எல்லாம் கட்டி முடித்துவிட்டத்தாக சொல்லியிருப்பார். அதற்கு கமருன் 'வரேக்கை நான் எல்லாம் கொண்டு வந்தனான். ஓடுவதற்கு காரும் கூடத்தான் கொண்டுவந்தனான் , ஆனால் உன்ரை கேள்விகளுக்கு பதில் சொல்ல  ஒரு பெட்டைநாய்குட்டியை மட்டும் கொண்டுவர மறந்துவிட்டேன்' என்று சொல்லிவிட்டு வெளியே வந்திருப்பார் போலிருக்கு"

Edited by மல்லையூரான்

இன்று இவ்வாறு கூறி விட்டு நாளைக்கே கூறியதை மறந்து விடாமல் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு கமரூன் தொடர்ச்சியாக குரல்கொடுக்க வேண்டும்.

இனவழிப்பை நடத்தியதே,  நடத்திக்கொண்டிருப்பதே இலங்கை அரசாங்கம் தான். இனியும் அவர்களையே நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர்களுக்கு அவகாசம் கொடுப்பதில் பிரயோசனம் இல்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

சர்வதேச அரங்கில் ஆவணப்படுத்தியது பெரிய விடயம். தேவைக்கேற்ப மீண்டும் எழும்.

சொல்வது ஒன்று .. செய்வது ஒன்று என இருப்பவை மூன்றாந்தர (மூன்றாம் உலக) அரசுகள்தான். மாறாக, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் வாய்க்குள் ஒன்றைப் போட்டுவிட்டால் மென்று தின்னாமல் விடமாட்டார்கள்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆனதைப்போல்..

இதில் உண்மை இருந்தாலும் பொதுநலவாய மாநாடு நடக்கும் நேரமென்பதால் எதையும் நம்ப முடியவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற இன அழிப்பை பற்றி சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்று. பிறகு எதற்காக அதை நேரடியாக தெரிவிக்காமல் கால அவகாசம் வழங்கி குற்றவாளிகளையே மனித உரிமை மீறல் பற்றி நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு நிவர்த்தி செய்யாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாது என கூறுகிறார்.

இவர் இவ்வாறு தெரிவிக்கும் அதேவேளை இளவரசர் சார்ல்ஸ் மகிந்தவோட நிற்கிறார்.

பத்தாக்குறைக்கு சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என மஹிந்த அறிக்கை விட்டுள்ளார். (அது ஏற்கனவே தெரிந்த விடையம்)

டேவிட் கமரூன் கூறியதை நான் எதிர்க்கவில்லை. நிச்சயம் அவர் கூறிய இந்த கருத்துகள் ஆவணப்படுத்தப்பட்டு தமிழர்களின் போராட்டத்தில் முன்னேற்றத்திற்கு உதவும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது ஒன்று .. செய்வது ஒன்று என இருப்பவை மூன்றாந்தர (மூன்றாம் உலக) அரசுகள்தான். மாறாக, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் வாய்க்குள் ஒன்றைப் போட்டுவிட்டால் மென்று தின்னாமல் விடமாட்டார்கள்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆனதைப்போல்..

புலிகளை  பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டு

அதை ஆவேசமாக  அமுல்படுத்தினார்கள்

தற்பொழுது..............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி அரசு எதிர்பார்க்காத நேரத்தில் பிரித்தானியப் பிரதமர்

சுயாதீன விசாரணை நடக்காவிட்டால் சர்வதேச விசாரணைக்குப்

பிரித்தானியா  குரல் கொடுக்கும் எனக் கூறியது வரவேற்கத்தக்கது.

ஆனால் சிறி லங்கா அரசு மீண்டும் ஒரு விசாரணைக்குழுவை

அமைத்துச் சர்வதேசத்திற்கு பதில்  கொடுக்கும்.
 
இந்தியா அமைதியாகச் சிரித்துக் கொள்ளும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by Muhil

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாயநாடுகளின் மாநாட்டையே 

சிறீலங்காவை  எச்சரிக்கும்

சிறீலங்காவின்  இனப்பிரச்சினை  பற்றி  பேசும் மாநாடாக மாற்றுவது என்பது சிறிய  விடயமல்ல.

அதனைச்செய்த அத்தனை  உறவுகளுக்கும்  நன்றிகள்

தொடரட்டும் தங்கள்   பணி.

  • கருத்துக்கள உறவுகள்

சரணாகதிக்கும், சார்பு ஆதவைப் பாவிப்பதற்கும் வேறுபாடு உண்டு. எங்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை ஆதரிப்பதோடு, அதை மேலும் மேலும் கொண்டு செல்வதைத் திணிப்பதில் தான் எங்களின் வெற்றி இருக்கின்றது. ஒரு காலத்தில் புலிகள் மீதான தடைக்கும் தீபக் ஓப்ராயின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாக நேற்று ஒரு நண்பர் சொன்னார். எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியவில்லை. அவர் ஆனையிறவில் வைத்த மலர் வளையத்தில் கூட இரண்டு மாறுபட்ட அர்த்தம் கொண்டு வசனங்கள் இருந்தன, ஆங்கிலத்தில் கொல்லப்பட்ட அனைத்து இலங்கையருக்கும் என்றும், தமிழில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கும் என்று எழுதியிருந்தது. இது எவ்வகை அரசியல் ஆக இருப்பினும், இவர்களை எப்படி நாங்கள் பாவிக்கப் போகின்றோம் என்பது தான் எங்களின் தேவை..

கெலன் மக்ரேயோ, சனல் 4 எங்களுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்வதைத் தவிர்ப்போம். அது சிங்கள அரசு சொல்வதை நியாயப்படுத்துவது போலாகி விடும். அவர்கள் நியாயத்தைச் சொல்கின்றார்கள் எனும்போது அது மற்றவர்களிடம் போய்ச் செல்லும். தவிர, அது சரணாகதி என்பதில் இருந்து விலத்தி நிற்க வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதைக்கு, தமிழகத்தில் போராட்டங்கள் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை என வைத்துக்கொள்வோம். காம்ரன் இவ்வளவு வெளிச்சததுக்குள் நின்றிருப்பாரா? இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது..

மாறாக, சிங், சோனியாஜீ மற்றும் ராகுல் பையன் மூவரும் சிதம்பரம், நாராயணசாமி, ஞானதேசகன், மகிந்த சகிதமாக இலங்கைத்தீவு முழுவதும் நின்று படம் எடுத்திருப்பார்கள்.. இந்தியாவின் இரும்புப் பிடிக்குள் இலங்கை முழுவதுமாக வந்திருக்கும்..

மாறாக இந்த பொதுநலவாய மாநாட்டின்மூலம் மேற்குலகம், இந்தியாவுக்கு எதிரான செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது.. அதாவது, 'கொள்கையை சரிப்படுத்து.. இல்லாவிட்டால், சரிப்படுத்த வைப்போம்' என்பது..

இங்கே கொள்கை என்பது தமிழர் தொடர்பான கொள்கைகள் அன்று. மாறாக சீனா தொடர்பான தீர்க்கமான எதிர்க்கொள்கைக்கு இந்தியாவை மாற்றுதல்.

இந்தியா அடிபணிந்து சீன எதிர்ப்பு அரசியலுக்குள் வந்துவிட்டால் மேற்கும் இந்தியாவும் இணைந்தே இலங்கைத்தீவில் கால் பதிக்கும்.

தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் வேறு நல்ல தெரிவுகள் இல்லை.. இந்தியாவில் ஆட்சிமாற்றம், இந்தியாவின் கொள்கை மாற்றங்களை இலகுவாக்கித் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

"what doesn't kill you, makes you stronger"

"உங்களைச் சாகடிக்காத எதுவும் உங்களைப் பலசாலியாக்கும்" என்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். பிரிட்டனின் பிரதமர் யாழ்ப்பாணம் வரை வந்து பார்த்து, ராஜபக்ஷவிடம் முகத்திற்கு நேராகவே எச்சரிக்கையும் விட்ட பின்னரும் சிறிலங்கா விறைச்சுக் கொண்டு நிண்டால், இனி இதை விட ஒரு புடுங்கியும் எம்மை மிரட்ட இயலாது என்ற நிலைக்கு சிறிலங்கா போகலாம்! கமரூனின் எச்சரிக்கையை சிறி லங்காவின் சவப்பெட்டியில் கடைசி ஆணியாக மாற்றும் வேலையை நாங்கள் தான் செய்ய வேண்டும்! இது வரை இருந்த உழைப்பு இன்னும் இரட்டிப்பாகட்டும்! அதிக மக்கள் பிரதிநிதிகள் எங்கள் தமிழ் இளையோரிடையே இருந்து மேற்கு நாடுகளில் உருவாகட்டும்!

சகோதரங்களே, சரியும் யானைக்கு சின்ன உதை கொடுக்கும் எலிகள் போல, இப்பவாவது சிறிலங்கன் விமானசேவை உட்பட சிறி லங்காவுக்கு டொலர்களும் யூரோக்களும் சென்றடையும் வழிகளை மனமுணர்ந்து புறக்கணியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதைக்கு, தமிழகத்தில் போராட்டங்கள் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை என வைத்துக்கொள்வோம். காம்ரன் இவ்வளவு வெளிச்சததுக்குள் நின்றிருப்பாரா? இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது..

மாறாக, சிங், சோனியாஜீ மற்றும் ராகுல் பையன் மூவரும் சிதம்பரம், நாராயணசாமி, ஞானதேசகன், மகிந்த சகிதமாக இலங்கைத்தீவு முழுவதும் நின்று படம் எடுத்திருப்பார்கள்.. இந்தியாவின் இரும்புப் பிடிக்குள் இலங்கை முழுவதுமாக வந்திருக்கும்..

மாறாக இந்த பொதுநலவாய மாநாட்டின்மூலம் மேற்குலகம், இந்தியாவுக்கு எதிரான செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது.. அதாவது, 'கொள்கையை சரிப்படுத்து.. இல்லாவிட்டால், சரிப்படுத்த வைப்போம்' என்பது..

இங்கே கொள்கை என்பது தமிழர் தொடர்பான கொள்கைகள் அன்று. மாறாக சீனா தொடர்பான தீர்க்கமான எதிர்க்கொள்கைக்கு இந்தியாவை மாற்றுதல்.

இந்தியா அடிபணிந்து சீன எதிர்ப்பு அரசியலுக்குள் வந்துவிட்டால் மேற்கும் இந்தியாவும் இணைந்தே இலங்கைத்தீவில் கால் பதிக்கும்.

தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் வேறு நல்ல தெரிவுகள் இல்லை.. இந்தியாவில் ஆட்சிமாற்றம், இந்தியாவின் கொள்கை மாற்றங்களை இலகுவாக்கித் தரும்.

அத்துடன் இந்தியா, தற் பாதுகாப்பு' எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்!

சர்வதேச விசாரணை எனும் நிலை வந்தால், பாங்கி மூனிலிருந்து, நாராயணன் ஊடாக, சிவசங்கர் மேனன் வரை கோவணத்துடன் நிற்க வேண்டி வரும்!

'காந்தீய முகமூடி' காற்றில் பறக்கும் நிலை விரைவில் வரும்!

கமலேஷ் சர்மாவின் திருகுதாளங்களும் வெளிவந்த நிலையில் 'சர்வதேச பறையா' நிலைக்கு இந்தியா என்னும் நாடு தள்ளப்படும் நிலை வரும்!

குறிப்பு: 'பறையா' என்னும் ஆங்கில வார்த்தையின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு தெரியாததால் தான் அந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டி வந்தது! எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை! 

"!

சகோதரங்களே, சரியும் யானைக்கு சின்ன உதை கொடுக்கும் எலிகள் போல, இப்பவாவது சிறிலங்கன் விமானசேவை உட்பட சிறி லங்காவுக்கு டொலர்களும் யூரோக்களும் சென்றடையும் வழிகளை மனமுணர்ந்து புறக்கணியுங்கள்!

உதை மட்டும் செய்ய மாட்டீனம் ,அவைக்கு சொகுசாவெல்லா போக வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

உதை மட்டும் செய்ய மாட்டீனம் ,அவைக்கு சொகுசாவெல்லா போக வேணும்

தெரியாத சனத்துக்கு நாங்கள் அறிவூட்ட வேணும்! சொந்தங்களைப் பார்க்க சிறி லங்கா போற பயணிகளுக்கு மாற்று விமான சேவைகள் உண்டு, கட்டார் விமான சேவை, எமிரேட்ஸ் விமான சேவை, இவையெல்லாம் "தட்டி வான் " வைச்சு சேவை நடத்தவில்லை! அவையும் நவீன புதிய எயார்பஸ் விமானம் தான் விடுகீனம். இவை சிறிலங்கனை விட பாதுகாப்பிலும் சிறந்த நடைமுறைகள் கொண்ட சேவைகள். உங்கட புரியாணிப் போதையைக் கொஞ்சம் மறந்திட்டு சிறிலங்கனுக்கு ரற்றா காட்டுங்கோ எண்டு நாங்கள் எடுத்துக் சொல்ல வேணும்!

அவர்களை கனகாலமாக நாங்கள் ‘அறிவூட்டி’ வருகிறோம். சனம் மாறுது இல்லையே.. எடுத்துச சொல்வோம். எடுத்துச் சொல்வோம்...  (FYI: கத்தார் ஏர்வேஸிலும் புரியாணி போடினம்)

அவர்களை கனகாலமாக நாங்கள் ‘அறிவூட்டி’ வருகிறோம். சனம் மாறுது இல்லையே.. எடுத்துச சொல்வோம். எடுத்துச் சொல்வோம்...  (FYI: கத்தார் ஏர்வேஸிலும் புரியாணி போடினம்)

அறிவூடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நமது நியாயங்களை சொல்லி அறிவூட்டுவது மற்றது அவர்களது லாபங்களை அல்லது பயத்தை கிளறி அறிவூட்டுவது. ஸ்ரீ லங்கன் விமானசேவையில் அவர்கள் பயண சீட்டை பதிவு செய்யும் போதே அவர்கள் பற்றிய விபரங்கள் சிங்கள புலனாய்வு துறைக்கு போகிறது என்று பரப்புரை செய்து பாருங்கள். சில வேலை பலன் கிடைக்கலாம்.

அவுஸ்திரேலிய உறவுகள், இன்று இரவு SBS  செய்தியைக் கட்டாயம் பார்க்கவும்!

கமரூனின் அறிவிப்பை,செய்திச் சுருக்கத்தில் இப்போது காட்டினார்கள்!

இத்துடன் ரொனி, கமக்கட்டுக்குள் தலையை மறைத்துக் கொள்வார் என நினைக்கின்றேன்! :icon_idea:

Emily Howie ‏@EmilyHowie 18 Nov

Far from denouncing war crimes at #CHOGM, @TonyAbbottMHR went jogging with SriLankan army commander & president's son http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=92320 

:icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.