Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் நடந்த கலவரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு (08-12-2013) சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் காணொளி.

 

 

http://www.dailymotion.com/video/x18614n_fatal-accident-leads-to-riot-in-singapore-s-little-india_fun

 

f44ea142-7b18-49ef-9fd9-690921dc5642_630

 

 

கட்டிட தொழிலாளி தமிழர் ஒருவர் விபத்தில் இறந்ததின் ஆத்திரத்தால் கலவரம் மூண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

source:http://sg.news.yahoo.com/singapore-police--scdf-draw-praise-for-handling-of-little-india-riot-063040963.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2013-12-08T171207Z_1001421504_GM1E9C902V

 

 

2013-12-08T171306Z_1672989936_GM1E9C9027

Ba-YGmRCIAA3Zjo.jpg

 

 

Ba-YNy8CAAEv5Hp.jpg

 

 

Ba-gbSDCAAABOgG.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரத்தால்  மதி  இழப்பது சரியல்ல

சட்டத்தை  மதிக்கணும்...

அது மதிக்கப்படும் நாடுகளில்... :(

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர்: லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம்; 27 பேர் கைது!

 

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில், குமாரவேலு (33) என்ற இந்தியத் தொழிலாளி ஒருவர் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து  400 க்கும் மேற்பட்ட வங்கதேச மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் இணைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களில் காவல்துறையினரின் வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இக்கலவரத்தில் காவல்துறையினர் 10 பேர் உட்பட 18 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெற்காசியப் பிரஜைகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் கடந்த1969 ஆம் ஆண்டில் சீனர்களுக்கும், மலேசிய பிரஜைகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பின்னர், அதாவது 40 ஆண்டுகால வரலாற்றில் இது போன்ற கலவரம் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.
 

 

இந்நிலையில், இது மிகவும் ஆபத்தான நிகழ்வு என்றும், கலவரம் ஏற்பட காரணம் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற வன்முறை, கிரிமினல் நடத்தைகளை அனுமதிக்க முடியாது என்றும், கலவரத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க முடியாது என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க காவல்துறை முழு மூச்சுடன் இறங்கும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் தனது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=22114

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் இந்தமாதிரி வேலையில் உள்ளவர்களை அடிமைபோலவே நடத்தி வருகிறார்கள் முதலாளிகள். இதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசாங்கமும் இதற்கான பொறுப்பில் பங்கேற்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20131209_riotaftermath0013.jpg?itok=cUfB

கலவரத்திற்கு காரணமான வாகனம்

 

 

 

 

20131210_riotaftermath_5.jpg?itok=jmQ8hm

தமிழர் இறந்த இடத்தில் மலர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ... இந்தக் கலவரத்தை தவிர்த்து, அவரின் மரணத்தை... சட்ட ரீதியில் அணுகியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, சிங்கப்பூர் கொடுக்கப் போகும் தண்டனையை நினைக்க... கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.
எமது உறவுகள்..... உணர்ச்சி வசப்பட்டு, எல்லை மீறி விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
விபத்தில் பலியான உறவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, சிங்கப்பூர் கொடுக்கப் போகும் தண்டனையை நினைக்க... கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.

 

littleindiariot_12.jpg?itok=NY92KWQk

 

20131209_riotaftermath0001.jpg?itok=-UJG

 

20131209_riotaftermath0012.jpg?itok=3zrO

 

20131209_riotaftermath0019.jpg?itok=u99X

 

20131209_riotaftermath0036.jpg?itok=CGtY

 

20131209_riotaftermath0011.jpg?itok=B893

 

20131209_riotaftermath0006.jpg?itok=Ebvp

 

20131209_riotaftermath0007.jpg?itok=TYPZ

 

20131209_riotaftermath0008.jpg?itok=guDN

 

20131209_riotaftermath0009.jpg?itok=6Q3L

 

20131209_riotaftermath0010.jpg?itok=_9ik

 

20131209_riotaftermath0025.jpg?itok=aN7c

 

 

மது ஆதிக்கத்தின் விளைவோ இந்த விபரீதம்...? :o

 

ஒருகணம் தன்னை நம்பியுள்ள குடும்பத்தாரை நினைத்திருக்கலாம்.

 

இறந்த உறவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

 

 

http://news.asiaone.com/news/singapore/police-explain-why-no-shots-fired-little-india-riot

 

Reason for edit: News source is added.

Edited by ராசவன்னியன்

இந்தியா என்று நினைத்து செய்திருப்பார்கள்...துலைந்தார்கள்...அவர்களும் அவர்களின் குடும்பமும் தான் கஷ்டபட போகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ... இந்தக் கலவரத்தை தவிர்த்து, அவரின் மரணத்தை... சட்ட ரீதியில் அணுகியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, சிங்கப்பூர் கொடுக்கப் போகும் தண்டனையை நினைக்க... கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.

எமது உறவுகள்..... உணர்ச்சி வசப்பட்டு, எல்லை மீறி விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

விபத்தில் பலியான உறவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

நான் அறிந்தவரையில் சட்ட ரீதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இழப்பீடு பெற்றார்கள் என்கிற செய்தியைக் கேள்வியுற்றதில்லை.. அதன் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.. வக்கீல் வைத்து வாதாடுவது எல்லாம் இயலக்கூடிய காரியம் அல்ல.. பிடிக்காவிட்டால் நாட்டைவிட்டுப்போய் விடலாம் என்பதுதான் உள்ளார்ந்த செய்தி.

லிட்டில் இந்தியா பகுதியில் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவார்கள்.. ஆயிரக்கணக்கில் கூடுவதால் தெரு ஓரங்கள் நிறைந்திருக்கும்.. வாகனங்கள் போய் வருவது கடினம். வேற்று இனத்தவர்கள் லிட்டில் இந்தியா பகுதிக்கு பொதுவில் செல்வது குறைவு. அதுவும் வார இறுதியில் மிகக்குறைவு. சீன / மலாய் பேரூந்து ஓட்டுநர்களுக்கு வேறு வழியில்லை. போய் வரத்தான் வேண்டும். அப்போது அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்திருக்கிறேன்.. மிக அருகாக இடிப்பதுபோல் வந்தாலும் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்துவார்கள்.. இது வெறுப்பினால் வந்ததா அல்லது வேறு வழியில்லாமல் செய்கிறார்களா என்று சிந்திப்பதுண்டு.. இதன்காரணமாகவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் போவதில்லை..

பி.கு.: மது அருந்திவிட்டு தகராறு செய்தார்கள் என்றும் கேள்விப்பட்டதில்லை.. பொதுவில் அங்குள்ள கடுமையான சட்டதிட்டங்களுக்கு எல்லாரும் பயப்படுவார்கள்.

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....பி.கு.: மது அருந்திவிட்டு தகராறு செய்தார்கள் என்றும் கேள்விப்பட்டதில்லை.. பொதுவில் அங்குள்ள கடுமையான சட்டதிட்டங்களுக்கு எல்லாரும் பயப்படுவார்கள்.

 

Mr. Dangu, check this news published in media.

 

 

http://news.asiaone.com/news/singapore/they-raided-shops-ammunition

 

SINGAPORE - When an intoxicated construction worker boarded a packed bus and dropped his trousers on Sunday evening, it set the scene for Singapore's first riot in more than four decades.

 

The bus driver wanted him out. Madam Wong, 38, the bus assistant, persuaded Mr Sakthivel Kumaravelu to alight.

The bus driver then quickly closed the bus doors and started to ferry the foreign workers in the bus to Jalan Papan from Tekka Lane.

 

He did not get very far. He was making a left turn into Race Course Road when he heard a loud bang. He then discovered that he had knocked down the drunk man, who was pinned under the left rear wheel of the bus.What followed was pandemonium that ended in a riot involving about 400 people, and 320 policemen to control them.

 

 

20131209-riot2.jpg?itok=_6ogeR2f

 

Mr Sakthivel Kumaravelu has been working in Singapore as a construction worker with Heng Hup Soon, a scaffolding company, for about two years, said a man who identified his body at the Singapore General Hospital (SGH) mortuary on Monday morning.

 

http://news.asiaone.com/news/singapore/little-india-riot-victim-road-traffic-accident-sparked-mob-identified

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் இராசவன்னியன் அண்ணா.. குடித்துவிட்டு தகராறு செய்தார்கள் என்று கேள்விப்படவில்லை என்று சொன்னேனே தவிர குடிக்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லை.. :unsure:

சிங்கையை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.. மேற்குலகம் ஒன்றில் வாழ்வதால் மனித உரிமைகள் பற்றிய எதிர்பார்ப்புகளும் அதிகமாகிவிட்டன.. சிங்கையில் இன்று வாழ்ந்து கொண்டிருந்தால் இந்தத் தொழிலாளியைப் பற்றிய விமர்சனம் மட்டுமே என்னிடம் இருந்திருக்கும்..

நீங்கள் இணைத்த ஊடகச் செய்தியின் எழுத்துவடிவமே ஆச்சரியத்தை வரவழைக்கிறது.. நீதி மன்றத்தின் தீர்ப்பு வராமல் இங்கெல்லாம் உண்மைபோல் எழுதமாட்டார்கள்..

பிரேத பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் அது ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட முன்னரே குடித்திருந்தார் என எழுதியுள்ளார்கள்.. ஆடையைக் களைந்தார் என்கிறார்கள்.. இங்கெல்லாம் "alledgely intoxicated", "alledgely dropped his pants" என்றுதான் எழுதுவார்கள்.. இல்லாவிட்டால் நின்றவன் போனவன் எல்லாம் நீதிபதி ஆகிவிடுவான்.. :unsure:

ஈழப்போராட்டத்திலும் இன்றுவரை "alledged war crimes" என்று இவர்கள் எழுதுவதற்கும் இதுவே காரணம்..

நிற்க.. ரொராண்டோவில் G20 மாநாட்டின்போது வெள்ளைகள் செய்த கவன ஈர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதில் காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன.. கடைகள் தாக்கப்பட்டன.. காவல்துறையினரும் தாக்கப்பட்டார்கள்.. அவர்களும் திருப்பித் தாக்கினார்கள்.. அது குறித்த ஒரு வழக்கு அண்மையில் நடந்து முடிந்திருந்தது.. அந்தத் தீர்ப்பின்படி தேவைக்கு அதிகமான பலத்தை பாவித்தார் என்று ஒரு காவல்துறை அதிகாரி தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.. :rolleyes: ஈழப்போர் உச்சககட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது தமிழர்களும்தான் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.. ஆர்ப்பாட்டங்கள் முடியவும் அநேகர்கள் குப்பைகளை தொட்டிகளில் போட்டுச் சென்றார்கள்.. :rolleyes:

அப்படிப்பட்ட தமிழர்கள்.. அதுவும் சிங்கப்பூரில் கலகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் இது நெடுநாட்கள் புகைந்து கொண்டிருந்த விடயமாகப் படுகிறது.. உணரக்கூடியதாகவும் உள்ளது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் இராசவன்னியன் அண்ணா.. குடித்துவிட்டு தகராறு செய்தார்கள் என்று கேள்விப்படவில்லை என்று சொன்னேனே தவிர குடிக்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லை.. :unsure:

....

அப்படிப்பட்ட தமிழர்கள்.. அதுவும் சிங்கப்பூரில் கலகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் இது நெடுநாட்கள் புகைந்து கொண்டிருந்த விடயமாகப் படுகிறது.. உணரக்கூடியதாகவும் உள்ளது..

சிங்கபூரில் வாழும் பல்வேறு நாட்டு மக்களிடையே சமூகத்தில் பழகும்போது இனரீதியான பாகுபாடும்,துவேசமும் உலவுவது பற்றி அதிகம் தெரியாது. ஆனால் கலவரம் நடந்த லிட்டில் இந்தியாவின் பகுதிகளில், மக்கள் வெளிப்படையாக எங்கும் குடிக்கலாமென அனுமதி உள்ளது. இந்த கலவரத்தினால் தற்பொழுது அந்த அனுமதியை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளார்கள்.

 

கூடும் தொழிலாளிகள் சிறிது பொறுப்போடு நடந்திருந்தால், இந்த விளைவு நடந்திருக்காது என்ற சிரத்தைதான். இனி வேலை தேடிவரும் வெளிநாட்டவருக்கு என்னென்ன புதிய கடும் கட்டுப்பாடுகள் வரப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உறவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

எந்த நாடானாலும் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்  படுவது தவிர்க்கப் பட வேண்டும்.

தனிமனித  மனதுக்குள் இருக்கும் வக்கிரம்தான் இம்மாதிரி நேரத்தில் கிளர்ந்தெழுந்து தன் ஆக்ரோசத்தைத்  தீர்த்துவிட்டு அடங்கி விடுகின்றது! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அங்கு அவர்கள் அங்கு அடிமைகள்தான்.. மேலும் கெடுவதற்கு வாய்ப்பில்லை..

நான் வாழந்த இடத்திற்கு அருகில் குப்பைகள் சேகரிக்கும் இடத்தில் ஓரிரு வங்காளதேச வேலையாட்கள் இருந்தார்கள்.. அவர்கள் தங்குவதற்கு வீடு கிடையாது.. குப்பைகள் சேகரிக்கப்படும் கட்டடத்துக்கு உள்ளேயே சமைத்து, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார்கள்.. கூட்டிவந்த சிங்கப்பூர் ஒப்பந்ததாரருக்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் இருககவில்லை.. அரசாங்கத்துக்கும் தெரியாமல் இல்லை..

மாதச்சம்பளம் $500 அளவில் கிடைக்கும்.. ஒழுங்கான ஒரு வீட்டு அறை எடுத்து வாழவேண்டும் என்றாலே மாதம் $350 தேவைப்படும்.. இதை அறிந்தும் அறியாததுபோல் இருப்பதுதான் அங்குள்ள அரசாங்கம்..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உறவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

 

தமிழன் என்றால் இளக்கமாக போச்சு உலகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை இதெல்லாத்துக்கும் காரணம் எமக்கென்று குரல்கொடுக்க ஒரு நாடு இல்லை அதனை பெறும்வரைக்கும் இந்தமாதிரியான துரதிஸ்ரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.   :(

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உறவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

தமிழன் என்றால் இளக்கமாக போச்சு உலகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை இதெல்லாத்துக்கும் காரணம் எமக்கென்று குரல்கொடுக்க ஒரு நாடு இல்லை அதனை பெறும்வரைக்கும் இந்தமாதிரியான துரதிஸ்ரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். :(

உண்மை தமிழரசு.. நாடில்லாத கொடுமை இதைவிட்டால் வேறு வழியில்லை என்று எண்ண வைக்கிறது.. அதுவே முடிந்தவரை சமாளித்துப்போவோம் என்கிற அடிமை மனப்பான்மையையும் உருவாக்குகிறது..

வட இந்தியர்களை இங்கே காண்கிறேன்.. என்ன ஒரு இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்கள்??!! பின்புலத்தில் தமக்கென்று ஒரு நாடு உள்ளத என்கிற எண்ணமே காரணம்.. பணத்துக்கும், பாதூகாப்புக்கும் என்று நாட்டைவிட்டு ஓடும் தமிழர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது.. ஆனால் அந்த அடிமை எண்ணத்தில் சிறு மாற்றம் வந்துள்ளதுபோல் தோன்றுகிறது..

அகால மரணமடைந்த தமிழரின் ஆன்மா அமைதி பெறட்டும்.. அவரது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தமிழரசு.. நாடில்லாத கொடுமை இதைவிட்டால் வேறு வழியில்லை என்று எண்ண வைக்கிறது.. அதுவே முடிந்தவரை சமாளித்துப்போவோம் என்கிற அடிமை மனப்பான்மையையும் உருவாக்குகிறது..

வட இந்தியர்களை இங்கே காண்கிறேன்.. என்ன ஒரு இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்கள்??!! பின்புலத்தில் தமக்கென்று ஒரு நாடு உள்ளத என்கிற எண்ணமே காரணம்.. பணத்துக்கும், பாதூகாப்புக்கும் என்று நாட்டைவிட்டு ஓடும் தமிழர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது.. ஆனால் அந்த அடிமை எண்ணத்தில் சிறு மாற்றம் வந்துள்ளதுபோல் தோன்றுகிறது..

அகால மரணமடைந்த தமிழரின் ஆன்மா அமைதி பெறட்டும்.. அவரது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

 

அதனால் தானோ  என்னவோ...

 

ஈழத்தமிழருக்கு

போன இடத்தில் எதற்கு தனிநாடு என்று இன்றும் கேட்கிறார்கள் போலும்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தானோ என்னவோ...

ஈழத்தமிழருக்கு

போன இடத்தில் எதற்கு தனிநாடு என்று இன்றும் கேட்கிறார்கள் போலும்.... :( :(:(

தமிகத்தைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.. சரியான விழிப்பூட்டல் இல்லாமையே காரணம்.

இந்த  சம்பவத்தில் பிழை  முழுக்க முழுக்க தமிழக தொழிலாளர்கள் பக்கமே
இதில் தமிழன் என்று சொல்லி பரிதாபம் தேடவோ இனவெறி என சொல்லவோ ஏதுமில்லை ..

ஒரு நாட்டிற்கு தொழில் தேடி  வந்தால்  அந்த நாட்டின் சட்ட திட்டம்களை மதிக்க தெரிஞ்சிருக்க வேண்டும்  கண் மண் தெரியாமல் குடித்து விட்டு  தமிழகம் என நினைச்சு பஸ் எரிப்பதும் கலவரத்தில் ஈடுபடுவதும் எந்த விதத்தில் நியாயம்
மலேசியா போலீஸ் ஆக இருந்தால் சுட்டு இருப்பான் அந்த இடத்தில் குறைந்தது 100 பேராவது இறந்தோ காயபட்டோ இருப்பார் , சிங்கபூர் போலீஸ் அடிக்கவும் முடியா சுடவும் முடியா கல்லெறி போத்தல் எறிபடும் போது நிக்க முடியா ஓடிவிட்டார்கள்  கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் ஜீப் ampulance  பஸ் தீயணைப்பு வாகனம் போன்றவற்றை எரித்தார்கள்


ஆனால் ஒன்று நிச்சயம்  கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் தப்ப முடியா ஆக குறைந்தது 7 வருடம் சிறை  சவுக்கடி போன்றன கிடைக்கும் .
பங்களா தேஷ் தொழிலாளர்களை விட இந்திய தொழிலாளர்கள் நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள்  சீன முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளர்களை நன்கு பிடிக்கும்  தொழிலாளர்களுக்குரிய  (தங்குமிடம்) போன்றன குடுத்து மிக நன்றாக  தான் சிங்கபூர் அரசாங்கம் எல்லாரையும்  பராமரிக்கிறது
 

  • கருத்துக்கள உறவுகள்

தேக்காவிலை தண்ணியை போட்டிட்டு டெஸ்காவிலை  குருவிட்டை(சிங்கையில் குருவி என்றால்  விலை மாதுக்கள்) போறதுக்காக  வந்திருப்பான்.  வீதியை கடக்கிற சிவப்பு விளக்கு எரிந்திருக்கும். அது மும்பை  சிகப்பு விளக்கு என்கிற நினைப்பிலை பயபுள்ளை  றோட்டிலை காலை வைச்சிருப்பான்.வேகமாய் வந்த பஸ்   பச்சக்...

பல அனுமான கதைகள், அப்படியாய் இருந்திருக்கும், இப்படியாய் இருந்திருக்கும் என்று  வருகிறது. ஒரு வேளை வீட்டில் இருந்து குடித்து கொண்டு நியாயம் பேசவது மட்டும்தான் சரியாக படுகிறதாக்கும்.

 

1.சிங்கபூரில் குடித்தவர் பஸ்சில் பயணம் செய்ய முடியுமா முடியாதா? 

2. ஒருவரின் உடையில் தப்பு இருந்தால் அதை பஸ் சாரதி திருத்த முடியுமா அல்லது அது நடத்துனரின் பணியா?

3. அதற்கு ஒருவரை பஸ்சால் இறமுடியுமா? முடியாதா?

4. எந்த் அளவுக்கு பஸ்சில் குடிகாரர் உடல் ரீதியாக சாரதியுடன் அல்லது பயணிகளுடல் சண்டையில் இறங்கினார்?

5. எந்த நிலைப்பாடுகளில் சாரதி பயணிக்கு உடல் ஊறு வரத்தக்க நிலையில் வண்டியின் கதவுகளை சாத்த முடியும். 

6. நடைப்பயணி ஒருவர்அசைந்து கொண்டிருக்கும் வாகனத்தால் தாக்கப்படால் முதல் குற்றம் சாரதி மீதி என்ற மேற்கு நாடுகளின் நிலைப்பாடு சிங்கபூரில் இருக்கா இல்லையா?

7.பின்னர் சர்ரதிப் பெண் மீது மதுசார பரிசோதனை நிகழ்தப்பட்டதா? அல்லது அவருக்கு போதை இருக்கவில்லை என்பது முடிந்த முடிவாக இருந்ததா?

 

நியூயோர்க்கில் ஜக்சன் கைட் என்ற இடம் 15-20 ஆண்டுகளுக்கு முன்னர் சார்தாஜிகளின் கையில் இருந்தது. இன்று வங்காளிகள் முழுவதாக வாங்கிவிட்டார்கள். அங்கு ஒருதடவை வங்காளிகளுக்குள் ஒரு தேர்தல் நடை பெற்றது. இரண்டு கட்சிகளுக்குமிடையில் முறுகல் வந்தது. அங்கேயிருந்த வெள்ளை பொலிசிகள் வங்காளிகளைஉம்  "இன்னொரு பாக்கிகளாக" நினைத்து மிரட்டலில் இறங்கினார்கள். இரண்டு கன்னையும் பொலிசை சூழ்ந்து கொண்டது. பொலிசு மேலிடத்துக்கு கோல் போட்டர்கள். பதில் கிடைத்திருந்திருக்கும். அதன் பின்னர் சமாதானமாக தங்க்ளை விடுவித்தார்கள். அதன் பின்னர் அங்கு காணப்பட்ட தலைவர்கள் போன்ற்வர்களுடன் பேசி கூட்டத்தை கலைய வைத்தார்கள். வங்காளிகள் பாகிஸ்தானுடன் போராடும் போது அவர்களுக்குள் எங்கள் அளவுக்கு துரோகிகள் புகுந்து போராட்டத்தை குழப்பவில்லை. அது மட்டுமல்ல தப்பின துரோகிகளுக்கு இன்றும் தண்டனை கொடுக்கிறார்கள். தெற்காசிய இனங்களில் வங்காளிகள் மட்டும் "இன்னொரு பாக்கிகள்" அல்ல. அவர்கள் ஒரு இடத்தில் நின்றால் நிலைமையை விளங்கி உரிமைக்காக போராடத்தான் செய்வார்கள். தமிழர் அவர்களின் பின்னால் சேர்ந்த்து போராடலாம். அல்லது தொடை நடுங்கலாம். ஆனல் அவர்கள் பின் வாங்க மாட்டர்கள். 

 

வங்காளிகள் மட்டும்தான் இந்திய இனங்களில் எல்லாவற்றிலும் வித்தியாசமாக நீங்கள் அவர்களின் கடைகளுக்கு போனால் மரியாதையாக உங்களை அணுகி பொருள்களை விற்பார்கள். உணவகங்களில் சமனாக இருத்தி  சாப்பாடு போடுவார்கள். மற்றைய இனம் எல்லாவாறினதும் கடையில் இருப்பவர்கள் நம்மவர்களை கண்டால் காடைதனம் பண்ணி இழக்கரமாக நடத்தி வெளியில் அனுப்பிவிடுவார்கள். இந்திய இனங்களில்,  இன்று தமிழனுக்கு நடந்த கொலை தங்களுக்கு நாளை என்றதை உணரக்கூடிய இனம் வங்காளிகள் மட்டும்தான்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

b5398z.jpg

 

No evidence foreign workers in riot unhappy with employers or govt.

 

SINGAPORE: There is no evidence to suggest that the foreign workers involved in the Little India riot were unhappy with their employers or the government, said Law and Foreign Affairs Minister K Shanmugam.

 

He was responding on Tuesday to various comments made which implied that such unhappiness was a cause for the riot.

Mr Shanmugam said: "Looking at what the majority of Singaporeans want, they will want us to treat the foreign workers in a humane way.

 

“You know, the majority, they recognise that many of them are needed. They recognise that many of them are good people, they are here to earn a living. But we must make sure the minority don't create trouble."

 

Mr Shanmugam said there was no excuse for the violence.

 

However, swift and decisive action will be taken against those who break the law, where the full force of justice has to be meted out.

 

He acknowledged that violence cannot be completely eliminated, even among Singaporeans, but rules are there to reduce it to a minimum for a peaceful and orderly society.

 

Mr Shanmugam said Singaporeans accept the norms of societal behaviour, and foreigners working in the country should do the same.

 

He said it was premature to say if any laws need to be tweaked as a result of the riot.

 

http://www.channelnewsasia.com/news/singapore/no-evidence-foreign/917780.html

 

 

சிங்கப்பூரில் இறந்த தமிழர் உடல் அடக்கம்.

 

புதுக்கோட்டை: சிங்கப்பூரில் நடந்த கலவரத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த குமாரவேலின் உடல், நேற்று இரவு சென்னை வந்தது.

 

இன்று காலை, அவரின் சொந்த ஊரான அரிமளம் அடுத்த சத்திரம் என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=870220

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அமைச்சரின் கூற்று என்னைமாதிரி நினைப்பவர்கள் நிறையப்பேர் உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. :D

இறந்தவருக்கு இரங்கல்கள். 

 

உயிரோடு போய் உடலாக திரும்பி வந்தவருக்காகன நட்ட ஈட்டை சிங்கபூர் கட்ட வேண்டும். தமிழ்ன் என்ற முறையில் கிந்திய தூதரகம் பேசாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு எடுக்க வேண்டும். 

 

மந்திரி சண்முகம் வெளிநாட்டு  தொழிலாளர்கள் அவர்களின் தொழிலுக்கான தேவை ஒன்று சிங்கபூரில் இருப்பதை  உணர்ந்து கொண்டிருப்பதால் சண்டித்தனம் காட்டுகிறார்கள் என்று கூறுகிறார். இந்த ஆள் யாழ்ப்பாணத்து கங்காணிகள் ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்தில் பேசியதைவிட கீழ்த்தரமாக பேசுகிறார். இதை சிங்கபூர் தொழிலாளர் இயகங்கள் UN HRC க்கு எடுத்து செல்ல வேண்டும். சரவதேச தொழிலாளர் இயகங்களுடன் இணைந்து வியர்வையும் குருதியும் கலந்து வரும் சிங்கப்பூர் பொருள்களுக்கு பகிஸ்கரிப்பு கொண்டுவர செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மந்திரிக்கு சிங்கபூருக்கு தேவை இருந்தால் மட்டும்தான் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளே விட வேண்டும் என்பது புரியும். மனிதர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி பார்க்கும் ஆசைக்காக சிங்கபூருக்கு அழைப்பதை நிறுத்துவார்கள். அதன் பின்னர் அவர்களை இருக்க இடம் இல்லாமல், உடுக்க உடுப்பில்லாமல், சமூக அந்தஸ்து என்ற ஒன்றை உணரமுடியாமல், குடிகாறர்களாக, வன்முறையாளர்களாக,  குற்றவாளிகளாக மாற்றி வைத்திருந்துவிட்டு, பிணமாக திருப்பி அனுப்ப தைரியம் வராது. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.