Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் உறைநிலை பனியால் இயல்புநிலை பாதிப்பு - பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Toronto-weather-221213-seithy-(8)-150.jp

உறை பனி மழை மற்றும் ஐஸ் கட்டிகள் பொழிதல், போன்ற திடீர் காலநிலையால் கனடாவின் மத்திய பிரதேசங்கள் செயலிழப்பு. இப்பாதிப்பு காலநிலை கிறிஸ்ட்மஸ் தினம் மட்டும் தொடரலாமெனவும் கருதப்படுகின்றது. ஒன்ராறியோவின் தென்பாகம், கியுபெக் மற்றும் மரிரைம்ஸ் பிரதேசம் ஆகியவை இந்த பாரிய வானிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கபட்டு நிலப்பரப்பு உறை பனியால் மூடப்பட்டுள்ளடுள்ளது.

  

கியுபெக்கில் 3 பாரிய விபத்துக்களும் ரொறன்ரோ மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பல விபத்தக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் பெருந்தெருக்களில் இடம்பெற்றுள்ளன. ஒன்ராறியோவில் 300,000 பாவனையாளர்கள் மின்சாரம் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 250,000 பேர் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

90-ற்கும் மேற்பட்ட பெரிய அளவிலான செயலிழப்பு நகரம் முழுவதிலும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்வதற்கு குறைந்தது 72 மணித்தியாலங்கள் வரை எடுக்கலாம் என ரொறொன்ரோ ஹைட்ரோ பிரிவினர் தெரிவித்துள்ளனர். ரொறொன்ரோ பூராகவும் பனி உறைவினால் அதிகமான மின்மாற்றிகள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மேலும் பல செயலிழப்புக்கள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுவதாக அறியப்படுகின்றது. சுரங்க ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சில GO போக்குவரத்து பேரூந்து சேவைகள் ரொறொன்ரோ Street car சேவைகள் என்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

Toronto-weather-221213-seithy-(6).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(7).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(8).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(1).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(2).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(3).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(4).jpg

 

 

Toronto-weather-221213-seithy-(5).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99668&category=TamilNews&language=tamil

  • Replies 73
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கடுமையான உறைபனிதான்.. வீட்டுக்குள் இருக்கவேண்டிய நிலைமை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோவில் உள்ள உறவுகள் அனைவரும் நிலைமை சரியாக வரும்வரைக்கும் வெளியே செல்வதைத்தவிர்த்து பாதுகாப்பாக குடுப்பத்துடன் இருக்குமாறு அன்பாக வேண்டுகின்றேன்.  :)

இன்று முழுதும் மின்சாரம் இல்லை எமக்கு. சரியாக 3 நாட்கள் எடுக்குமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று முழுதும் மின்சாரம் இல்லை எமக்கு. சரியாக 3 நாட்கள் எடுக்குமாம்

வீட்டில் ஜெனரேட்டர் இருக்கின்றதா நிழலி ? 

இங்கு லண்டனில் மின் இணைப்பு கேபிள்கள் நிலத்துக்கு அடியில் இருப்பதால் சினோ கொட்டினாலும் பிரச்சனை வருவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நாளை காலையும் உறைபனி மழை பெய்யும் என்கிறார்கள் உண்மையா?...............................................காலையில் வேலைக்குப் போக வேண்டும் :(


கடந்த 21 வருடங்களாக கண்டிராத உறைபனியை இம்முறை காண்கிறேன்.

ஒரு மாதிரி மண் வெட்டியால் கொத்தி நடை பாதையில் சினோவை அகற்றியாச்சு ,உப்பு முடிந்துவிட்டது வாங்க போனால் ஒரு இடமும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உப்பு இல்லை என்று கவலைப்படுகிறீர்கள்...சனம் தேனீர் குடிக்க முடியாமல் அவதிப்படுதுகள்... ரிம் கொட்டனில்  நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்கிறார்களாம்.... நான் எனது நண்பர்கள் பலருக்கு அழைப்பு கொடுத்துள்ளேன் எனிரைம் வெல்கம் மை கோம்......:)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 'மாசிக் குளிருக்குப்' போர்த்திக்கொண்டு படுக்கிற ' லங்கா சாறி' இந்தக் குளிரைத் தாங்காதா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் ஜெனரேட்டர் இருக்கின்றதா நிழலி ?

இங்கு லண்டனில் மின் இணைப்பு கேபிள்கள் நிலத்துக்கு அடியில் இருப்பதால் சினோ கொட்டினாலும் பிரச்சனை வருவதில்லை

ம் கொட்டினாலும்......தூறுவதே பெரிய விசயம்

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 'மாசிக் குளிருக்குப்' போர்த்திக்கொண்டு படுக்கிற ' லங்கா சாறி' இந்தக் குளிரைத் தாங்காதா? :icon_mrgreen:

கங்காரு தேசத்தில் இப்படி உறைபனி வீழக்கடவது.....? ரோமியோக்கள் லங்கா சாறிக்குள் குளிரைத்தாங்கட்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாகனத்தை ஒருவழியாக மீட்டுவிட்டேன்.. உப்பும் முடிந்துவிட்டது.. சனமெல்லாம் சரியா கஷ்டப்பட்டுப்போச்சு..

பிராம்ப்டன் பக்கமும் கனக்க இடங்களில் மின்சாரம் இல்லை.. குளிர் தாங்காமல் போனால் வந்து நிற்பதற்காக விளையாட்டு அரங்கங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்ர வாகனத்தை நீண்ட நேரம் போராடி மீட்டு கராச்சிற்குள் விட்டுவிட்டேன்....மற்றவையின் வாகனத்தை அவை பார்க்கட்டும்.... :lol:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கங்காரு தேசத்தில் இப்படி உறைபனி வீழக்கடவது.....? ரோமியோக்கள் லங்கா சாறிக்குள் குளிரைத்தாங்கட்டும் :)

கோவிக்காதேயுங்கோ வல்வை! 

 

உங்கள் உறைபனி விரைவில் உருகவேண்டும் என்பது தான் எனது விருப்பமும்! :lol:

 

எங்களுக்கும் வேற பிரச்சனை!

 

நேற்று வெப்பநிலை 40  ஐத் தாண்டி விட்டது! 

 

அந்தக் கொதியில் எழுதின ' பகிடி' தான் அது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருக்கிற இடத்திலை இன்னும் ஒழுங்காய் கொட்டேல்லை....வாறகிழமைக்கு அடுத்தகிழமை சிப்பிலியாட்டும் எண்டுறாங்கள்.... :D

என்னுடைய வீட்டிலும் மின்சாரம் இல்லை ,மின்சாரம் வருவதற்கு 72மணித்தியாலங்கள் எடுக்குமாம் .என்னுடைய நண்பன் வீட்டில்தான் தஞ்சம் .

  • கருத்துக்கள உறவுகள்

கனடா எனக்குப் பிடித்த நாடு என்றாலும்...
கோடையில் அதிக வெப்பமும், குளிர்காலத்தில் அதிக பனியால்.... அன்றாட வாழ்வு முடங்கிப் போவதையும் நினைக்க... வெறுப்பாக இருக்கும்.
இங்கு கிறிஸ்மஸ் நாட்களான 24,25.26´ம் திகதிகளில்..... 10 தொடக்கம் 15 பாகை வரை செல்லும் என்று அறிவித்துள்ளார்கள்.

 

கனடா உறவுகள், அநாவசியமாக வெளியே போய்... ஸ்நோவுக்குள் வழுக்கி விழுவதை தவிர்க்கவும். :)

 

smiley_emoticons_marga_haus_schnee.gif

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாகவே கனடா தேசம் மிகக்குளிர்மிகு நாடுகளில் ஒன்றே, ஐரோப்பிய நாடுகள் போலல்லாது, எப்போதும் சாதகமான காலநிலையை எதிர்பார்க்கவே முடியாது.  இயற்கை பூமியை சமமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பதற்கு இவைகளைத் தவிர்க்க முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலை விடையமாக முதல் முதலில் செல்லும்போது கதிகாமத்தானுக்கும், பக்கத்தூர் ஐயனாருக்கும் நேத்திவைச்சிட்டுப் பயணம் புறப்பட்ட சாதி இந்தத் தமிழ்ச்சாதி. ஆனால் அக்காலத்திலை கதிர்காமத்தானிடம் போகிறதுக்கு கொழும்புப் பயணத்தைவிட சிக்கல் நிறைந்தது எண்டு தெரியாது இவர்களுக்கு.

 

பேய்க்கு வாழ்க்கைப் பட்டுட்டியள் அனுசரித்துப் போங்கோ.

நாளைய பொழுது நல்லபொழுதாக இருக்க அனைவர்க்காகவும் இயற்கையை வேண்டுகிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் பல 'குளிர் பனி' களுடன் அனுபவப்பட்டிருக்கிறேன்!

 

ஆனால் கீழுள்ள படத்தைப் பார்த்த பின்பு, அடி வயித்துக்குள்ள வண்ணத்துப் பூச்சிகள் பறக்கிறது என்னவோ உண்மை!

 

பனியின் பாரம் தாங்காமல், மரம் வளைந்து நிலத்தைத் தொடுவதை, எங்குமே கண்டது கிடையாது! :o

 

 

 

Toronto-weather-221213-seithy-(8).jpg

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், நீங்கள் படத்தில் குறுப்பிட்ட மாதிரி மரங்களில் பனி பூத்திருப்பது ஒரு விடையமே இல்லை. சூழலின் குளிர் அதிகரிக்க காற்றில் ஈரப்பதம் குறைந்துகொண்டே போகும், அனால் எப்போதாவது சில வேளைகளில் குளிர் அதிகமாக இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கக்கூடிய சில அரிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் வெளிச்சூழலில் இருக்கும் எல்லாப் பொருட்களிலும் இப்படிப் பனிபூ பூப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். மேலே உள்ள படத்தில் காணப்படும் பனிப்பூவின் பின்னணிக்கதையும் இதுவே. நான் நினைக்கிறேன் இப்படிப் பனிப்பூ வருவதற்கான காலநிலை மைனஸ் பூச்சியத்திலிருந்து மைனஸ் ஏழு ஆக இருக்கலாம். மற்றப்படி இவைகள் ரசிக்கப்படவேண்டிய விடையங்களே தவிர பயப்படவேண்டியவை இல்லை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், நீங்கள் படத்தில் குறுப்பிட்ட மாதிரி மரங்களில் பனி பூத்திருப்பது ஒரு விடையமே இல்லை. சூழலின் குளிர் அதிகரிக்க காற்றில் ஈரப்பதம் குறைந்துகொண்டே போகும், அனால் எப்போதாவது சில வேளைகளில் குளிர் அதிகமாக இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கக்கூடிய சில அரிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் வெளிச்சூழலில் இருக்கும் எல்லாப் பொருட்களிலும் இப்படிப் பனிபூ பூப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். மேலே உள்ள படத்தில் காணப்படும் பனிப்பூவின் பின்னணிக்கதையும் இதுவே. நான் நினைக்கிறேன் இப்படிப் பனிப்பூ வருவதற்கான காலநிலை மைனஸ் பூச்சியத்திலிருந்து மைனஸ் ஏழு ஆக இருக்கலாம். மற்றப்படி இவைகள் ரசிக்கப்படவேண்டிய விடையங்களே தவிர பயப்படவேண்டியவை இல்லை.

நன்றிகள், எழுஞாயிறு! :D

 

உறைபனியில சறுக்கி விழுந்து, எழும்பி அங்காலையும், இங்காலையும் பாத்திட்டு, ஒண்டும் தெரியாத மாதிரி நடந்திருக்கிறம்!

 

மரங்களில் பனி பூத்திருக்கிறதைக் கண்டிருக்கிறன்!

 

ஆனால், பனியுறைஞ்சு  மரம் வளைஞ்சு போய், நிலத்தில தொடுகிறதை முந்திக் கண்ட நினைவில்லை! அது தான் அப்படி எழுதினனான்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துகளை கடைப்பிடிக்க அறிவுறுதப்பட்டுள்ளது.  

 

 

-Toronto--weather21sst22nd-150-seithy.jp

உறைபனி மழை காரணமாக ரொரண்டோ பெரும்பாகத்தில் சுமார் 250,000 மின்பாவனையாளர்களுக்கு இன்று திங்கட்கிழமையும் பரவலாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரொரண்டோ ஹைட்ரோ மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இன்று ரொரண்டோ பெரும் பாகத்தில் விசேட காலநிலை எச்சரிக்கை தொடர்கின்றது. முடிந்தளவும் வாகனப் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடைபாதைகளிலும் சறுக்கும் தன்மை அதிகமாக காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. பெரும்பாலான வீதிகளில் போக்குவரவு கட்டுப்படுத்தி சமிக்கைகள் பாதிப்படைந்துள்ளதால் பயண விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  

இதேவேளை ரொரண்டே பியர்சன் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்,தற்போது வரை சுமூகமான விமான சேவைகள் இடம்பெறுவதாகவும் ஒரு சில விமானங்கள் மட்டுமே தாமதமான தரிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நகரின் பெரும்பாலான வீதிகளில் நூற்றுக்கணக்காக வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளதாகவும் எனினும் உயிரிழப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுவதுடன் கைபேசி நிறுவனங்களது சேவைகள் நேற்று மாலையுடன் தடைப்பட்டுள்ளமையால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மொன்றியல் பியர் ருடோ சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Lake Huron, வடபகுதி முதல், ஒட்டாவா வலி (Ottawa valley)) வரையான பிரதேசங்களில் பனிக்கட்டி மழை பெய்வதுடன், 15 சென்ரிமீற்றர் வரையான பனிப்பொழிவும் இடம்பெறலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. தெற்கு ஒண்டாரியோ முதல் பிரின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட் வரை பனிப் புயல் வீசும் எனவும் சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோவில் 300,000 மக்கள் இருளில்

 

ரொறன்ரோ நகரில் தற்போது ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக 300,000 மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தத்தளிக்கின்றார்கள். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்தப் பனிப் புயலானது மிக மோசமான நிகழ்வு எனவும் இவ்வாறான சம்பவம் பல காலத்திற்கு நிகழவில்லை எனவும் கூறப்படுகின்றது. ரொறன்ரோ நகரில் உறைபனி மழையோ அல்லது உறைபனித் துகள்களோ ஏதாவது ஒருவடிவத்தில் 24 மணித்தியாலங்களாகப் பொழிந்த சம்பவம் இது என வர்ணிக்கப்படுகின்றது.

இவ்வாறு அதிகளவு உறைபனி பொழிந்த காரணத்தினால் பழைய மரங்களில் அதிகளவு தேங்கவேண்டிய சந்தர்ப்பங்களில் அந்த மரங்கள் அதிகமான முறிந்து விழுந்துள்ளன. மரங்கள் முறிந்து கார்கள், வீடுகள் என்பவற்றின்மேல் விழுந்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களினால் கிட்டத்தட்ட 300,000 மக்கள் தொகையினரின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரங்கள் மின்சாரம் அற்ற நிலையில் வாழந்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. 100,000ற்கும அதிகமான மக்கள் தென் ஒன்றாரியோவில் மின்சாரமின்றித் தவிக்கி;ன்றனர்.
கனடிய மின்சாரத் துறையினர் மிக மோசமான வானிலை மாற்றம் ஏற்படும் மேலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பாக எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் அதிகமான காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள்.
மிகவும் மோசமாகவானிலை காணப்படுகின்றபோதும் மின்சாரத்துறையினர் தங்களால் முடிந்தளவிற்கு மின்சாரம் வழங்குகின்ற பணியினை மேற்கொள்கின்றனர் எனவும் குறிப்பாக மருத்துவ நிலையங்களுக்கு உடனடி முன்னுரிமை அளிக்கப்படுகின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரொறன்ரோவில் கிட்டத்தட்ட 20 சமூக வீட்டுக் கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது. இந்தக் கட்டிடங்களில் ஆயிரக்கணக்கானனோர் வதிவதாகவும் அவர்கள் மின்சாரம் இன்றிப் பெரிதும் சவால்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரியவருகிறது.

ice-1-265x300.jpg ice-2.jpg ice-3.jpg ice-4-300x198.jpg
இன்று நடைபெற்ற பத்திரிகை மாநாடொன்றில் பிரிமியர் கத்லீன் வைன் மின்சாரத்ததை மீள வழங்குவதற்கு தங்களால் முடிந்தளவில் செய்கின்றோம் எனத் தெரிவித்திருக்கி;னறார்.
காலநிலை அவதான நிலையமானது தொடர்ந்து உறைபனித் துகள்கள் விழுந்து கொண்டிருக்கின்றன எனவும் மேலும் பனிப் பொழிவு நிகழ்வதற்கு 60 சதவீதம் சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றது.
ரொறன்ரோவில் போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது ளவசநநவஉயச கள் ஓடவில்லை. சில இடங்களிலுள்ள சுரங்கப் போக்குவரத்துத் தரிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளன

ice-5-300x168.jpg ice-6-300x168.jpg
ஞாயிற்றுக் கிழமை கிட்டத்தட்ட 200 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன என ரொறன்ரோ விமான நிலையம் தெரிவித்திருக்கின்றது.   சில மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டும் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் 6 குழந்தைகள் அங்கிருந்து வேறு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது.
இவற்றைத் தவிர வோண் பிரதேசம், மார்க்கம், யூனியன்வில்லா, அயுறா, றிச்மண்ட் ஹில் மற்றும் தோண்ஹில் போன்ற பகுதிகளிலும் மின்சாரத் துண்டிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.      பீல் பிரதேசத்தில் அதிகளவு மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன. பொலிசார் அந்தப் பகுதியில் வதியும் மக்களை முடிந்தவரையில் வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுள்ளார்கள்.

 

 

http://www.canadamirror.com/canada/19565.html#sthash.9EzDzIdk.dpbs

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகள்  கவனமாக இருங்கள்

அறிவுரைகளுக்கமைய  நடந்து கொள்ளுங்கள்

 

எனக்கு கனடாவில் பிடிக்காத ஒரே ஒரு விடயம் இந்தக்குளிர்தான்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடைபெற்றது பனிப்பொழிவு அல்ல..

தெற்கில் இருந்து வந்த புயல் சின்னம் (storm system) கனடாவுக்குள் நெருங்கும்போது துருவப்பகுதியில் இருந்து வரும் குளிர் காரணமாக குளிர்ந்த சூழலுக்குள் வருகிறது.. வழமையாக பனியாகப் பொழியும்.. ஆனால் இந்த முறை குளிர் பனியை உருவாக்கும் அளவுக்கு இல்லை. ஆகவே மழைத்தூறலாக விழுந்தது..

ஆனால் தரைமட்டத்தில் சுழியத்திற்குக் கீழ்ப்பட்ட காலநிலை நிலவியதால் விழுந்த தூறல்கள் பனிக்கட்டியாக (ice) திரட்சி பெற்றன.. இதை உறையும் மழை (freezing rain) என்பார்கள்.

இதனால் மரங்களில், நிலத்தில், வாகனங்களில் விழுந்த தூறல்கள் படிப்படியாக இறுகிவிடும். மின்சாரக்கம்பிகள், மரக்கிளைகளில் பாரம் அதிகரித்துவிடும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.