Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் உறைநிலை பனியால் இயல்புநிலை பாதிப்பு - பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா,

முருகன் கோவணத்தோடு காலந்தள்ள முடியாது என்று மயிலேறி புளோரிடா போயிட்டார்.

விவசாயி விக்,

போன கந்தன் பழையபடி " போன மச்சான் திரும்பி வந்தார் கோமணத்தோடே" என்று மீண்டும் திரும்பி வராட்டி சரி, கனடா நாடு உருப்பட்டுவிடும்.  எதற்கும் கவனமாக இருக்கவும். :D  :D  :D

கடும் குளிரில் அதுவும் மின்சாரம் இன்றி அல்லறும் எம் உறவுகள் எல்லோருடைய சேமத்திற்கும் பழையபடி இயல்பு நிலை விரைவில் மீளவும் எல்லாம் வல்ல இறை அருள் துணை நிற்க நாம் எல்லோரும் மனமுருகி வேண்டுகிறோம்.

இல்லாவிட்டால் விமான போக்குவரத்து தடைப்படாது இருப்பதை ஒரு வரபிரசாதம் என்று எடுத்து அயல் நாடுகளுக்கு இலையேல் எம்மிடம் வரவும். வரவேற்று உபசரிக்க என்றும் தயாராக இருக்கிறோம்.

  • Replies 73
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நம்மளை மாதிரி ஆட்களுக்கு வேலையே ஒரு போராட்டம்தான்.. -30சி இல் வெளியில் நின்று வேலை பார்ப்பது சுகமான அனுபவம்.. :blink: ஆனால் வெள்ளைக்காரன் அப்படியல்ல.. வட துருவத்தில் வேலை பார்ப்பது பெருமளவில் அவர்கள்தான் (கண்வில்லைக் கண்ணாடி போட்டிருந்தால் கண்ணோடு ஒட்டவைக்கும் குளிர்..)

துருவத்தில் வேலை செய்யுற வெள்ளைக்காரனின் தொகையோட ஒப்பிடேக்க.. எம்மவர்கள் அங்க இருந்து அவனுக்கு உழைச்சுக் கொட்டிறதால வாற நன்மை.. அதிகம். அதனால் தான் கூட வைச்சிருக்கிறான்.  :)

ஒரு கணக்கிற்கு.. இப்ப வெள்ளைக்காரனை எடுத்ததுக்கு எல்லாம் புகழ்ந்து.. அசெஸ்ட் பண்ணிட்டு போற எங்கட ஆக்கள்.. இதையே சிங்களவனட்ட செய்தால் அவனும் கூட வைச்சிருக்க அதிக தூரம் பின்னிற்கமாட்டான். மிரண்டு பிடிச்சு.. உரிமை பேசினால்.. வெள்ளைக்காரன் சிங்களவன் என்ற பாகுபாடில்லாமல்.. அடிப்பாங்கள். துரத்துவாங்கள்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் சொந்த நாட்டிற்கு இணையாக வராது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.. அந்த எண்ணம் இல்லாவிட்டால் இப்படியான கருத்துக்களங்களில் யாரும் மினக்கடமாட்டார்கள்தானே நெடுக்ஸ்?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பக்டு பக்டு. fact... fact. :)

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு கதவைத் திறக்காமலே காருக்குள் ஏறலாம்.. கராஜ் க்குளேயே வாழலாம்.. :rolleyes::D

ஓமோம், இவை மட்டுமா? தமன்னாவுக்குத் தெரியாமலே தமன்னாவுக்குப் பக்கத்தில் நிக்கலாம்! (ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, பக்கத்தில் நிக்க மட்டும் தான் முடியும்! :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம், இவை மட்டுமா? தமன்னாவுக்குத் தெரியாமலே தமன்னாவுக்குப் பக்கத்தில் நிக்கலாம்! (ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, பக்கத்தில் நிக்க மட்டும் தான் முடியும்! :icon_mrgreen: )

அதுக்குத்தான் சொல்லுறது.. இருக்கக்குள்ளையே முயற்சி பண்ணிப் பார்க்கோணும்.. :D பிறகு காற்றில் ஓடியாடி என்ன பிரியோசனம். :(:D

ஏம்ப்பா இந்த காபன் மொனோகசைட்டு என்பது எந்த பிறாண்டு? நாளைலை நாம்ப அந்த நாளிலை மோல்சன் கூர் அடிச்சிட்டு   நிலவிலை நடக்கப் போய் தடக்கி விழுந்ததே ஒரு பெரிய கதை. ஆனா பாருங்க இவங்க இந்த காபன் மொனோக்சைட்டை அடிச்சிட்டு கராசுக்குள்ளையே தடக்கு பட்டாம போயிடுறாங்களே. நல்ல ஸ்றோங்கு போலத்தான் இருக்கு.  ஒரு டெஸ்ச் போட்டு பாக்கத்தான் இருக்கு.  :D

எனது பிள்ளைகள் இன்றுதான் மார்க்கம் போனார்கள். 

Justin அண்ணா சொன்னது CO வாயு.. (Carbon Monoxide)

கவனமாகப் பாவிக்க வேணும்! மூடிய வீட்டுக்குள் அல்லது கடாஜுக்குள் வைத்துப் பாவித்தால் காபன் மொனொக்சைட் நச்சினால் உங்களுக்கு எதுவும் தெரியாமலே பரலோகம் போக வாய்ப்புண்டு.

இசை அண்ணா பகிடியாக சொன்னது ஆள் இறந்து விட்டால் இறந்தவரின் ஆவி அதனுள் வாழலாம் என.

பிறகு கதவைத் திறக்காமலே காருக்குள் ஏறலாம்.. கராஜ் க்குளேயே வாழலாம்.. :rolleyes::D

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Anthony_haines-toronto-hidtro-150.jpg

ரொறன்ரோ - நத்தார் தினம் முடிவடைந்த பின்புதான் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கக் கூடிய நிலை ஏற்படும் என ரொறன்ரோ மின்சார சபையானது தெரிவித்திருக்கின்றது எனத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்தத் தகவலை ரொறன்ரோ மின்சார சபை அதிகாரியான Anthony Haines என்பவர் தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர் மின்சாரம் இழந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் திரும்பவும் 25ம் திகதிக்கு முன்பு மின்சாரத்தைப் பெற்றுவிடுவார்கள் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் துப்புரவுப் பணியானது பாரியதாகவிருக்கின்றது எனவும் குறிப்பாக மின்னிணைப்புக் கம்பிகளின்மேல் மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன, தவிர பனிப்படலங்கள் அவற்றின்மேல் படிந்துள்ளன, மின்னிணைப்புக் கம்பிகளும் அறுந்திருக்கின்றன எனத் தெரிவித்திருக்கின்றார்.

-Toronto-hidtro-241213news-339-(6).jpg

-Toronto-hidtro-241213news-339-(7).jpg

-Toronto-hidtro-241213news-339-(5).jpg

-Toronto-hidtro-241213news-447-(4).jpg

-Toronto-hidtro-241213news-400-(1).jpg

-Toronto-hidtro-241213news-400-(2).jpg

-Toronto-hidtro-241213news-450-(3).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=99832&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

-Toronto-hidtro-241213news-450-(3).jpg
-Toronto-hidtro-241213news-339-(7).jpg

தமிழரசு இணைத்த படத்தில்... கனடிய அரசின் (மாநகராட்சி) முன் யோசனை அற்ற, தன்மை.. வெளிப்படையாகத் தெரிகின்றது.

முதிர்ந்த மரங்களை வெட்டா... விட்டாலும், அதன் கிளைகளை வெட்டி இருக்கலாம்.

இங்கு... இலை உதிர் காலத்தில்... நகரத்தில் உள்ள, அத்தனை மரங்களின் கிளைகளும்.. வெட்டப் படும்.

ஸ்நோ.. வந்தாலும், வராவிட்டாலும்... முற்கூட்டியே... யோசிப்பதில், ஜேர்மன்காரர் சிறந்தவர்கள். :D

Edited by தமிழ் சிறி

இலையுதிர்காலத்தில் மரங்களின் கிளைகள் வெட்டப்படுவதற்கு முக்கிய காரணம் உதிரும் இலைகளை அப்புறப்படுத்தும் பஞ்சியில்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இரக்ககுணம் அதிகம்.. கிளைகளைக்கூட வெட்டமாட்டம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இலையுதிர்காலத்தில் மரங்களின் கிளைகள் வெட்டப்படுவதற்கு முக்கிய காரணம் உதிரும் இலைகளை அப்புறப்படுத்தும் பஞ்சியில்... :lol:

துளசி... நீங்கள் பகிடியாகச் சொன்னாலும், உண்மை அதுவல்ல.

இலை உதிர்ந்த பின்... அந்த மரம், தனக்குச் சேர வேண்டிய சக்தியை... கோடை காலத்தில் பெற்றிருக்கும்.

அதனை... நவம்பர் மாதத்தில், எல்லா இடமும் அதிரடியாக வெட்டி, வெட்டிய கொப்புக்களில்... குளிர் தாக்கம் ஏற்படாதவாறு... ஒரு வித பசையை பூசி விடுவார்கள்.

அடுத்த வருடம்... அந்த மரம், இன்னும்... புதுப் பொலிவுடன் வளர்ந்து இருப்பதைப் பார்க்க... அழகாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இரக்ககுணம் அதிகம்.. கிளைகளைக்கூட வெட்டமாட்டம்.. :D

அதனால்... பாதிக்கப் படப் போவது, அப்பாவி நகர மக்கள் தான்.

நான்.. இங்கு வந்த புதிதில்.. இதே நத்தார் நேரம், அடித்த ஒரு புயலில்...

வீதியில்... வாகனம் ஓடிக் கொண்டிருந்த பெண்மணியின் வாகனத்தின் மேல்... மரம் முறிந்து விழுந்து மரணமடைந்து விட்டார்.

ஒவ்வொரு... அனுபவமும், நகராட்சிகளுக்கு... முக்கிய பாடமாக இருந்தால், பல மனித உயிர்களை காப்பாற்றலாம் இசை. :)

நான் சும்மாதான் சொன்னன்.. :D

கனடாவில் வரி அதிகமாக அறவிடுவார்கள்.. அதுக்கேற்றமாதிரி சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு போயிடுங்கள்.. குடிவரவாளர்கள் தொழிற்சாலைகளில் கிடந்து முறிய வேண்டியதுதான்..

வீடற்றவர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் திட்டம் ஒன்று ரொராண்டோ மாநகரில் உள்ளது.. இதற்கான ஒரு அலுவலகமும் உள்ளது.. இதில் வேலை செய்பவர்களில் நூறாயிரம் சம்பளத்தைத் தாண்டியவர்கள் 100 பேருக்கு மேல் இருக்கினமாம்.. இவையள் ஒன்றும் வெட்டி விழுத்திற ஆட்கள் இல்லை.. ஆனால் இவர்கள் வழங்கும் வீடுகளில் கரப்பான் தொல்லை, எலித்தொல்லை என்று பலது இருக்கு.. அதை சரிசெய்ய காசு இல்லையாம்.. இதுபற்றி வானொலியில் ஒரு விவரணம் போட்டார்கள்.

இன்று நானிருக்கும் பகுதியில் அநேகமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களுக்கு மின்சாரம் வந்து விட்டது.

எனக்கு நேற்றிரவு 12:30 மணியளவில் மின்சாரம் வந்தது. 'இனி உங்கள் சூடு வேண்டாம்' என்று சொல்லி மனிசி எழும்பிப் போன பின் தான் மின்சாரம் வந்ததை அறிந்து கொண்டேன்.

பிரிட்ஜில் இருந்த எல்லா சாப்பாட்டு சாமங்களையும் தூக்கி கடாசியாச்சு. முட்டை, cheese, ketchup என்று இருந்த எல்லாத்தையும் Garbage இற்கு போட்டு சுத்தப் படுத்தியாச்சு. நல்லவேளை அதிகமாக இறைச்சி மீன்கள் வாங்கி வைத்து இருக்கவில்லை. ஒரே ஒரு புரொய்லர் கோழி மட்டும் கிடந்தது, அதனையும் பாவம் போ என்று எறிந்து விட்டோம்.

இனி அடுத்த ஒரு கிழமைக்கு ஸ்கார்புரோ, மார்க்கம் பகுதிகளில் இருக்கும் தமிழர்களின், சைனீஸ்களின் கடைகளில் ஒரு உணவுப் பொருளும் வாங்கப் போவதில்லை. வெளியில் எறிந்தால் நட்டம் என்று எப்படியும் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுவதற்கு சந்தர்ப்பம் நிறைய. இரா சுப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளில் கூட அவசரத்துக்கு என்று Generator வைத்து இருக்காமையைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

24 மணித்தியாலங்களுக்கும் மேல் off ஆக இருக்கும் பிரிட்ஜ்சுக்குள் (Refrigerators and Freezers)  இருக்கும் எந்த உணவுப் பொருட்களையும் உண்ணக் கூடாது. முக்கியமாக மீன், இறைச்சி, பால்வகை (Diary products) உணவுப் பொருட்கள், முட்டை போன்றவற்றை உண்ணக் கூடாது. முட்டையை வெளியில் வைத்து இருந்தால் காலவதியாகும் திகதி (expiry date) வரைக்கும் பாவிக்க முடியும். ஆனால் அதனை குளிரூட்டிக்குள் வைத்து பின் குளிரூட்டிக்குள் இருந்து வெளியில் எடுத்தாலோ அல்லது குளிரூட்டி இயங்காது போனாலோ 24 மணித்தியாலங்களுக்குள் அதனை உண்ண வேண்டும். இன்று இங்கிருக்கும் பிரபல பார்மசியான Shoppers drug mart இன் உணவுக் கட்டுப்பாட்டாளரிடம் இது பற்றி விசாரித்து அறிந்து கொண்டேன்.

இன்று ஒரு தமிழ்க் கடையில் இது பற்றி கதைக்கும் போது அங்கு சாமான் வாங்க வந்து இருந்த தமிழ் பெண்மணி ஒருவர் தன் கணவர் மின் தடைப்படும் நாளன்று காலையில் தான் நிறைய மீனும், இறைச்சியும் வாங்கி வந்தவர் என்றும் அவற்றை வெளியில் எறிந்தால் நட்டம் என்றும் சொன்னார். நான் ஒரு '100 டொலருக்கு பார்த்து 1000 டொலருக்கு மேல் வியாதிகளுக்கு மருந்து வாங்கக் கொடுக்க வேண்டி வரும்' என்று சொன்னவுடன் முறைத்துப் பார்த்து விட்டு சென்று விட்டார். பாவம் அவரது கணவரும் பிள்ளைகளும்...

துளசி... நீங்கள் பகிடியாகச் சொன்னாலும், உண்மை அதுவல்ல.

இலை உதிர்ந்த பின்... அந்த மரம், தனக்குச் சேர வேண்டிய சக்தியை... கோடை காலத்தில் பெற்றிருக்கும்.

அதனை... நவம்பர் மாதத்தில், எல்லா இடமும் அதிரடியாக வெட்டி, வெட்டிய கொப்புக்களில்... குளிர் தாக்கம் ஏற்படாதவாறு... ஒரு வித பசையை பூசி விடுவார்கள்.

அடுத்த வருடம்... அந்த மரம், இன்னும்... புதுப் பொலிவுடன் வளர்ந்து இருப்பதைப் பார்க்க... அழகாக இருக்கும். :)

இங்கு பரிஸில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி கிளைகளை வெட்டுவார்கள். வெயிலுக்கு மர நிழழை தேடினால் கிடைக்காது. அதிலிருந்து இவர்கள் உதிரும் இலைகளை அகற்ற பஞ்சியில் இவ்வாறு நடக்கிறார்கள் என்று சொல்லி நக்கலடித்து பழகி விட்டது. :D

ஜெர்மன் சீரியசாகவே முன்யோசனையுடன் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது. :)

  • கருத்துக்கள உறவுகள்

Entru marupadium. Sela edangalil power ellamal poie vedathu.

இங்கு பரிஸில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி கிளைகளை வெட்டுவார்கள். வெயிலுக்கு மர நிழழை தேடினால் கிடைக்காது. அதிலிருந்து இவர்கள் உதிரும் இலைகளை அகற்ற பஞ்சியில் இவ்வாறு நடக்கிறார்கள் என்று சொல்லி நக்கலடித்து பழகி விட்டது. :D

ஜெர்மன் சீரியசாகவே முன்யோசனையுடன் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது. :)

உண்மையில்; கொலண்ட் ஒரு சிறிய நாடாக இருந்தாலும் .கடலுக்கு கீழ் இருந்தாலும் உலகில் எவருக்கும் இல்லாத பாதுகாப்பை இந்த மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்குவதை உணர்கிறேன் /..............மரம் வெட்டுவதில் இருந்து ,புள்ளி செதுக்குவதில் இருந்து ,உப்பு தூவுவதிளிருந்து ...........கடல் கரை பாது காப்பில் இருந்து ..............வீதிகளை தடை செய்வதிலிருந்து ....................இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .......இங்கு நான் வாழ குடுத்து வச்சவன் என்றே சொல்வேன் ............. :D

உண்மையிலும் உண்மை :)

இன்று மாலையில் கடுங்காற்று வீசப்போவதாகவும் அதனால் மீண்டும் பல இடங்களில் மின் விநியோகம் பாதிப்படையலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளனர்.

அவதானமாகவும் ,பாதுகாப்பாகவும் உறவுகள் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்ஜில் இருந்த எல்லா சாப்பாட்டு சாமங்களையும் தூக்கி கடாசியாச்சு. முட்டை, cheese, ketchup என்று இருந்த எல்லாத்தையும் Garbage இற்கு போட்டு சுத்தப் படுத்தியாச்சு. நல்லவேளை அதிகமாக இறைச்சி மீன்கள் வாங்கி வைத்து இருக்கவில்லை. ஒரே ஒரு புரொய்லர் கோழி மட்டும் கிடந்தது, அதனையும் பாவம் போ என்று எறிந்து விட்டோம்.

மின்சாரம் நின்றவுடன்... வெளியில் அடித்த குளிருக்கு,

குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த பொருட்களை எடுத்து... பல்கனியில் வைத்திருந்தால்,

புரொய்லர் கோழியை..._font_b_Frozen_b_font_font.jpg_120x120.j எறிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனையால தான், நம் முன்னோர் 'பிரிட்ஜ்' வைத்திருக்கவில்லை என நினைக்கிறேன்! :icon_idea:

கணவாய்க் கருவாடும், பாரைக்கருவாடும் எப்பவமே கை விடாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை: ஏமாற்றம் வளர்கிறது 

கனடாவில் இயற்கையின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 6 நாட்களாகியும் மின்சாரம் மீள இணைக்கப்படாத நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் ஏக்கமும் விரக்தியும் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. பொதுவாக இந்த வருடம் மக்கள் விரும்புகின்ற வெள்ளை நத்தார் தினம் மக்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் சிலரது வீடுகளில் வெளச்சம் இல்லை என்ற கருத்தும் நிலவுகின்றது. 

வெள்ளிக்கிழமை காலையில் ஹைட்றோ நிறுவனத்தின் தகவலின்படி இன்னமும் 32,000 நபர்கள் .இருளில் இருப்பதாகத் தெரிவ்pக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஹைட்றோ நிறுவனத்தின் மின்சார இணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அத்தனை நபர்களும் நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியவர்களே. பின்சார இணைப்புப் பணியாளர்கள் தொடர்ந்து தம் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்களால் இயன்றவர்களுக்கு வெளிச்சத்தை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ரொறன்ரோவின் வடபகுதியில் 9,000 நபர்கள் இன்னமும் மீள் இணைப்பைப் பெறவில்லையென ஹைட்றோ நிறுவனம் வெள்ளிக்கிழமை காலையில் தெரிவித்திருக்கின்றது. 
 
வியாழக்கிழமை கிடைத்த தகவலின்படி குவிபெக்கில் 2,500 நபர்களும், நியுபுறுன்ஸ்விக்கில் 14,000ற்கு அதிகமானவர்களுக்கும், மின்சாரம் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் ஏற்பட்டுள்ள மின்சாரத் துண்டிப்பைச் சரி செய்வதற்காக மணிர்ரோபா, ஒட்டாவா, வின்சர், அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து பணியாளர்கள் வருவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மின்சாரம் வழமையான நிலைக்குத் திரும்பும் என அறியமுடியவில்லை. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.