Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவில் பரப்புரைக்கு தயாராகிறது கூட்டமைப்பு; சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்கிறார் சுரேஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
images.jpg

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது.

 
இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார்.
 
வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பில், அரச படைகளின் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இம்முறை ஜெனிவாவில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் வெளிநாடுகளின்  இராஜதந்திரிகளைச் சந்தித்துவிட்டு ஜெனிவா சென்று அங்கு இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீவிர பரப்புரையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். 
 
இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி  புலம்பெயர் தமிழ் அமைப் புகள் மாபெரும் எழுச்சி மாநாட்டை நடத்தவுள்ளன. 
 
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபை அமைந்துள்ள வளாகத்தில் கவனவீர்ப்புப் போராட்டத்தையும், இலங்கை அரச படைகளினால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் நடத்தவுள்ளன. 
 
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண.இமானுவேல் அடிகளார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். 
 
இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன வென்று அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியிடம்  நேற்று "உதயன்' கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜெனிவாவில் நடத்தவுள்ள மாபெரும் எழுச்சி மாநாடு மற்றும் கவனவீர்ப்புப் போராட்டங்களை நாம் வரவேற்கின்றோம்; எமது ஆதரவையும் வழங்குவோம். 
 
கடந்த முறை போல இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்லவுள்ளது. ஆனால், இம்முறை எமது பரப்புரையைத் தீவிரப்படுத்தவுள்ளோம்.  இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையே எமது முக்கிய வலியுறுத்தலாக உள்ளது. 
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மிகவும் கடுமையான பிரேரணை நிறைவேற்றப்படும் என நாம் நம்புகின்றோம். 
 
அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர் குழுவினர் ஆகியோரிடமும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் சிவில் சமூகத்தினர் வலியு றுத்தியிருந்தனர் - என்று சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்.
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முடிவு

தொடருங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

"நல்லார்.... ஒருவர் உளரேல்... அவர் பொருட்டு, பெய்யெனப் பெய்யும் மழை."
கூட்டமைப்பில்... சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள், இருப்பதால் தான்... அக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளும் விழுகின்றன.
இவரைப் போன்ற செயற்பாட்டாளர்கள் தான்.... தமிழ்மக்களுக்கு தற்போதைய அவசரத் தேவை.

அப்ப சுமந்திரன் சொன்னவர் என்று எங்கட பெருமாள் போட்ட செய்தி பொய்யா? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனும் சம்hந்தரையும் விட்டு மற்றவர்கள் போனால் நல்லது.இந்த 2 பேரும் போனால் கதை கந்தல்தான்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அல்லகை சுமந்திரன் மற்றும் சமந்தர் வருகையை கடவுள் தடுப்பாராக... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுமந்திரன் சொன்னவர் என்று எங்கட பெருமாள் போட்ட செய்தி பொய்யா? 

மன்னிக்கவும் எந்த இணைப்பை கூறுகிறீர்கள்?

மன்னிக்கவும் எந்த இணைப்பை கூறுகிறீர்கள்?

மன்னிக்கவும், தவறு என்னுடையது.

அந்த்த இணைப்பை இனைத்தது நீங்கள் இல்லை.

தவறுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோருகிறேன்.

அந்த்த இணைப்பு இதுதான்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=133840

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
13 ஆபிரிக்க நாடுகளுடன் புலம்பெயர் தமிழர் பேச்சு; ஜெனிவாவில் அரசை மடக்க அதிரடி நடவடிக்கை
 

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 13 ஆபிரிக்க நாடுகளையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

 
இதன்படி, உலகத் தமிழர் பேரவையின் உயர்மட்டப் பிரமுகர்கள், ஜனவரி நடுப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளனர் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அறியமுடிகின்றது.
 
இதுதொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இம்மானுவேல் அடிகளாரிடம் "உதயன்' வினவிய போது,
 
"தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இதற்காக ஆபிரிக்க நாடுகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவோம். 
 
குறிப்பாக மேற்குலக நாடுகளில்தான் புலம்பெயர் தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர். அங்கு எமது அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் அங்கு புலம்பெயர் தமிழர்கள் பெரிதாக இல்லை. எனவே, எமது குழுவினர் சென்று அந்நாட்டு அரச பிரதிநிதிகளிடம் தனித்தனியாகப் பேச்சு நடத்த வேண்டியுள்ளது" - என்றார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 13 நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும். இவற்றில் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்குச் சார்பாகச் செயற்படும் போக்கை கொண்டவையாகும். கடந்தமுறை அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு கொங்கோ, உகண்டா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன.
 
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இலங்கைக்கு மறைமுக ஆதரவை வழங்கிய 8 நாடுகளுள் அங்கோலா, பொட்ஸு வானா, பேர்க்கினாபசோ, செனகல் ஆகிய ஐந்து  நாடுகளும் ஆபிரிக்க நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இம்முறை பிரேரணை ஏதாவது வந்தால் அதை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கிலும் இலங்கைக்கு சார்பான இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடவேண்டாம் என கோரிக்கை விடுக்கும் வகையிலுமே ஆபிரிக்க நாடுகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சு நடத்தவுள்ளது.
 
மற்றுமொரு ஆபிரிக்க நாடான கென்யா இலங்கையுடன் சிறந்த நட்புறவை பேணுகிறது என கூறப்பட்டாலும் இரு நாடுகளுக்குகிடையில் தேயிலை ஏற்றுமதி விவகாரத்தில் பணிப் போர் நிலவுகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோதும் அதற்கு எதிராக கென்யா பரப்புரையை முன்னெடுத்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 
 
எனவே, இம்முறை வாக்களிக்கும் தகுதிப்பெற்றுள்ள கென்யா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இராஜதந்திர ரகசியமாகும்.  அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்திருந்து பெனின் நாட்டுக்கு 2014 வரை மனித உரிமை சபையில் அங்கத் துவம் இருக்கின்றது.
 
அதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தலைமையில் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை கடிதமொன்றை எழுதவும் உத்தேசித்துள்ளது.
 
இதற்கிடையில் ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசும் தயாராகிவருகின்றது. இதன் ஓர் அங்கமாக அமைச்சர்களை மட்டத் தூதுக்குழுவை ஜனவரியில் பரப்புரைகளுக்காக களமிறக்க அது தீர்மானித்துள்ளது. 
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 13 நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும். இவற்றில் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு சார்பாகச் செயற்படும் போக்கை கொண்டவையாகும்.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=328292540929696911#sthash.mji1DM0d.dpuf

 

Edited by பிழம்பு

NDTV.com இல் வந்துள்ள செய்தி.

 

Tamil National Alliance to push for international probe into Sri Lanka war crimes

December 28, 2013

 

Colombo:  Sri Lanka's main Tamil party has said it will push for an independent international probe into alleged war crimes committed during the final phase of the civil war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009.

Tamil National Alliance (TNA) legislator Suresh Premachandran said that his party would push their case when the UN Human Rights Council meets next March in Geneva.

The party would also brief the international and diplomatic communities on the need to conduct an independent investigation.

Reacting to the TNA's plan, government spokesman and Information Minister Keheliya Rambukwella dismissed it as the TNA's separatist intent in the current post-conflict phase.

"This is nothing new from the TNA. They have always sided with the LTTE's separatist campaign," Rambukwella said.

"They must try to resolve problems within the country rather than going international against the state," he said.

Sri Lanka has been censured by two successive UNHRC resolutions which demanded speedier action to achieve reconciliation with the island's Tamil minority.

The resolutions, moved by the US and backed by India, urged Sri Lanka to show results in full implementation of recommendations of its own reconciliation arm, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).

Sri Lanka is expected to face its third successive resolution criticising its human rights record at the UNHRC meet in March.

Tamils and the international community have brought pressure on Colombo for lack of implementation of the LLRC's advice accusing the government of dragging its feet.

The government however maintains that a considerable number of recommendations have already been implemented while some of them need more time for implementation.

 

http://www.ndtv.com/article/world/tamil-national-alliance-to-push-for-international-probe-into-sri-lanka-war-crimes-464233

சுரேஷ் . :icon_mrgreen: .எல்லாம் காலம் செய்த கோலமடி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.