Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் ....வாங்கோ ..2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஐந்து ஆசனங்கள்?? :unsure: சொன்னால் நாங்களும் செய்வமில்ல.. :D

உடற்பயிற்சி விடயத்தில் எப்பவுமே போராட்டம்தான்.. கடந்த ஆறுமாசமா ஏதோ பரவாயில்லாமல் போகுது.. ஒரு அஞ்சு கிலோ குறைக்கவேணும் எண்டு கனகாலமா கனவு காணுறன்.. :wub:

ஏன் போட்டி எதிலும் பங்குபற்றப் போறியளோ ???????

  • Replies 52
  • Views 4.4k
  • Created
  • Last Reply

இந்த பிறக்க இருக்கும் புதியஆண்டு உலக தமிழர்விடிவிற்கான ஆண்டாக பிரகடனம் செய்வோம்....
அத்துடன் உடல் மெலிய ஈழத்தில், தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சிறுவர்கள்,முதியவர்களை
உணவை கோப்பையில் இடும் போது ஒருகணம் நினையுங்கள் பின் அளவாக சாப்பிட தொடங்கிவீர்கள் ..பின்னர் சமையலின் அளவும் குறையும்.
சமையல் குறைய சேமிக்கும் பணத்தை அம்மக்களுக்கு சென்றடைய செய்யுங்கள்...

உடலும் அளவகாக இருக்கும்..
உதவியதாகவும் இருக்கும்...
எல்லாம் மனம் இருந்தால் இடம் உண்டு..இல்லையா? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

வாழ்த்துச்செய்தியாக்கும் என்றுதான் வந்தேன்

பார்த்தால்

நம்ம தம்பி  குனிஞ்சு நிமிர முடியாதுள்ளான் என்று தெரிகிறது

(93 கிலோ என்பது ரொம்ப அதிகம் :(  :( )

ஏன் ராசா

கற்றது தான் ஆயிரமிருக்கே..

காலையில  ஒரு அரை மணி நேரம் அதுகளை  கலந்து செய்தாலன்ன???

பழைய உங்கள் நண்பர்  ஒருவர் அடிக்கடி என்னைப்பார்க்கவருவார்

அண்ணை

உங்களை  இப்படி  வைத்துக்கொண்டு

நாட்டை ஆரோக்கியமாக எப்படி எம்மால  பார்க்கமுடியும் என்பார்??

அதே கேள்விதான் தங்களிடமும்..........

எனது கிலோவையும் எழுதுவம் என்று தான் நினைத்தேன்

துளசி  உங்களுக்கு எழுதியதை பார்த்தால்

கிலோவை  எழுதினால் இனி  என்னை  அடையாளம் கண்டு கொள்வார்  என்பதால் வேண்டாம் :D

அடுத்து

நெடுக்கு சொன்னது போல்

நடந்து ரெயில் எடுத்து தான் கடந்த 2 மாதமாக வேலைக்கு வாறேன்

5 கிலோ குறைந்துள்ளேன்.. :icon_idea:

இந்த பிறக்க இருக்கும் புதியஆண்டு உலக தமிழர்விடிவிற்கான ஆண்டாக பிரகடனம் செய்வோம்....
அத்துடன் உடல் மெலிய ஈழத்தில், தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சிறுவர்கள்,முதியவர்களை
உணவை கோப்பையில் இடும் போது ஒருகணம் நினையுங்கள் பின் அளவாக சாப்பிட தொடங்கிவீர்கள் ..பின்னர் சமையலின் அளவும் குறையும்.
சமையல் குறைய சேமிக்கும் பணத்தை அம்மக்களுக்கு சென்றடைய செய்யுங்கள்...

உடலும் அளவகாக இருக்கும்..
உதவியதாகவும் இருக்கும்...
எல்லாம் மனம் இருந்தால் இடம் உண்டு..இல்லையா? :)

நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் யோசிக்கணும்

சேமிக்கணும்

அந்த மக்களை  நேசிக்கணும்

Edited by விசுகு

எனக்கும்  இப்போ தான் உடம்பை பற்றி சிறிது அக்கறை வந்திருக்கு ,வெளிநாடு வெளிகிட்ட நாள்முதல் ஏதாவது ஒரு ஸ்போட்ஸ் செய்துகொண்டு வந்தேன் .(கிரிக்கெட் ,உதைபந்து ,பாட்மின்டன்) இப்ப நாலு ஐந்து வருடங்கள் எதுவுமில்லை .தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி வரப்பாக்கின்றது .மனைவியுடன் சேர்ந்து யோகா செய்ய இப்ப சிலகாலமாக முயலுகின்றேன் .தொடரவேண்டும் .

அடுத்த வருடம் குடி கட்டாயம் குறைக்க முடிவு எடுத்துள்ளேன் .உலகம் சுற்ற ஆசை உடலில் வலு இல்லாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் போட்டி எதிலும் பங்குபற்றப் போறியளோ ???????

என்னுடய உயரத்துக்கு ஐந்து கிலோ கூட உள்ளேன் என்று டாக்குத்தர் ஐயா தெரிவித்துவிட்டார்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன அநியாயமாக்கிடக்கு......  நாங்களே 85கிலோ கவலையே படாமல் இருக்கம் இவங்கள் என்னடா என்றால் ஆளாளுக்கு அலறிக் கொண்டு திரிகிறாங்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடய உயரத்துக்கு ஐந்து கிலோ கூட உள்ளேன் என்று டாக்குத்தர் ஐயா தெரிவித்துவிட்டார்.. :blink:

இது இரண்டும் நம்பும்படியாக இல்லை

சந்தித்தவன் என்ற  முறையில்........... :D

உதென்ன அநியாயமாக்கிடக்கு......  நாங்களே 85கிலோ கவலையே படாமல் இருக்கம் இவங்கள் என்னடா என்றால் ஆளாளுக்கு அலறிக் கொண்டு திரிகிறாங்கள்... :lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டும் நம்பும்படியாக இல்லை

சந்தித்தவன் என்ற  முறையில்........... :D

நீங்கள் சந்திச்சு ஒன்றரை வருடமாச்சு அண்ணாச்சி. :icon_mrgreen:

கடந்த வருடத்தினைப் போல இந்த வருடமும் ஒரு 5 கிலோ வாவது குறைப்பது என்பதுதான் வீர சபதம். ஒரு மாதிரி 3 கிலோ குறைத்து விட்டேன், இன்னும் 2 கிலோ மீதி இருக்கு.

பச்சைத் தேனீர் தான்  சரியான மருந்து! ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை குடிக்கின்றேன். வாரத்தில் இரண்டு நாள் மதியத்துக்கு பச்சைக் காய், இலைகள் என்று சலாட் செய்து அதற்குள் ஒலிவ் ஒயில் விட்டு சாப்பிடுவது, ஒவ்வொரு கிழமையும் மூன்று நாளேனும் treadmill இல் ஓடுவது என்று போகுது

உலகில் ஆக்க கடினம் அழிப்பது சுலபம் என்று சொல்வார்கள்...ஆனால் உடம்பு வைக்கும் விடயத்தில் மாறி நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சந்திச்சு ஒன்றரை வருடமாச்சு அண்ணாச்சி. :icon_mrgreen:

நம்பும்படியாக  இல்லை

18  மாதத்தில்

36 கிலோவா??? :D  :D  :D

உதென்ன அநியாயமாக்கிடக்கு......  நாங்களே 85கிலோ கவலையே படாமல் இருக்கம் இவங்கள் என்னடா என்றால் ஆளாளுக்கு அலறிக் கொண்டு திரிகிறாங்கள்... :lol:

:o :o

நம்ப முடியவில்லை. :o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடத்தினைப் போல இந்த வருடமும் ஒரு 5 கிலோ வாவது குறைப்பது என்பதுதான் வீர சபதம். ஒரு மாதிரி 3 கிலோ குறைத்து விட்டேன், இன்னும் 2 கிலோ மீதி இருக்கு.

பச்சைத் தேனீர் தான்  சரியான மருந்து! ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை குடிக்கின்றேன். வாரத்தில் இரண்டு நாள் மதியத்துக்கு பச்சைக் காய், இலைகள் என்று சலாட் செய்து அதற்குள் ஒலிவ் ஒயில் விட்டு சாப்பிடுவது, ஒவ்வொரு கிழமையும் மூன்று நாளேனும் treadmill இல் ஓடுவது என்று போகுது

உலகில் ஆக்க கடினம் அழிப்பது சுலபம் என்று சொல்வார்கள்...ஆனால் உடம்பு வைக்கும் விடயத்தில் மாறி நடக்குது.

நீங்கள் அதிகம் சிரமப்படவேண்டிய  தேவையில்லை.

உங்களுக்கு அளவான  உடல்.

கொஞ்சம் வண்டி இனி மேல் வைக்காமல் பார்த்துக்கொண்டால் சரி

நிழலி அண்ணா கூறியது போல் பச்சை தேயிலை வாங்கி தேனீர் போட்டு குடிக்கலாம்.

Lipton_Green_Tea_Classic_25_torebek_eksp

சில நேரங்களில் சாதாரண உணவை தவிர்த்து சலாட் உண்பதும் நல்லது.

335239.jpg

இரவு நேரங்களில் உணவிற்கு பதிலாக பழங்கள் உண்ணலாம்.

Fruit_Basket_exotic.jpg

அனைத்தையும் விட நிறைய தண்ணீர் குடியுங்கள்.  :)

சாப்பாட்டை குறைவாக உட்கொள்ள முடியாவிட்டால் சாப்பிட முன் ஒரு பழத்தை உண்டு விட்டு / சிறிதளவு நீர் அருந்தி விட்டு சாப்பிட தொடங்கினால் விரைவில் வயிறு நிறைந்து விடும். அதிகளவில் உண்ண தேவையில்லை. :):lol:

(படங்கள்: google)

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டின் முன் தண்ணீர் குடித்தால் வாய் உமிழ்நீரும் வயிற்றுக்குள் சென்றுவிடும்.. பிறகு உண்ணப்போகும் உணவு செரிமானம் அடைவதில் பங்கம் ஏற்பட்டுவிடும்..

பசி வந்ததும், உணவைக் கண்டதும் வாயில் நீர் சுரப்பதில் ஒரு அர்த்தம் உண்டுதானே.. :D

உமிழ்நீரை விழுங்குவதால் என்ன பிரச்சினை? நாள் முழுக்க விழுங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்? :rolleyes:

வெள்ளைக்காரரின் உணவு பழக்கவழக்கங்களில்... முதலில் சலாட், soup போன்றவற்றை உள்ளெடுத்து விட்டு தானே main dish ஐ உண்கிறார்கள். :rolleyes:

உமிழ்நீர் வாயில் உணவுடன் கலந்து வயற்றுக்குள் போகும்போது செரிமானம் இலகுவாகும் என்று எங்கோ படித்த ஞாபகம். அதில் ஏதோ என்சைம் உள்ளதென்று கேள்வி.. :unsure:

உமிழ்நீர் வாயில் உணவுடன் கலந்து வயற்றுக்குள் போகும்போது செரிமானம் இலகுவாகும் என்று எங்கோ படித்த ஞாபகம். அதில் ஏதோ என்சைம் உள்ளதென்று கேள்வி.. :unsure:

நீர் அருந்தினாலும் பின்னரும் நாக்கில் உணவை வைத்ததும் உமிழ்நீர் சுரக்கும் தானே.  :unsure: சரி சரி, எதுக்கும் பழம் ஏதும் உண்டு விட்டு உணவை உட்கொள்ளலாம். இறுதியில் நீரருந்தலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கையில் வெண்ணையிருக்க நெய்க்கு அலைவானேன்?.

யேர்மன் நண்பர் ஒருவர், நிறை 100 கிலோவிற்கும் மேல். வாகனத்தில் ஏறுவதற்கும் சிரமப்படும் உடம்பு. ஒருமுறை சுவிசில் வாகனத்தில் சென்றபோது அதனைத் தவறாகச் செலுத்தியதால் 150 யூரோக்களுக்கு மேல் தண்டம் கட்டும்படி கோரப்பட்டது அவர் கட்டவில்லை. சில வருடங்களின்பின்பு அங்கு போகவேண்டிய தேவை ஏற்பட்டது போனார். திரும்ப வரவில்லை. பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். மூன்று மாதங்களின் பின்பு திரும்ப வந்தார் 30 கிலோ போன இடம் தெரியவில்லை. வாகனத்தில் ஏறும் சிரமமும் நீங்கிவந்தார். <_<:D :D

Edited by Paanch

ஹா ஹா முடியலைண்ணா.. :lol:

5 star hotel இல் இருப்பதை விட சுவிசிலுள்ள ஜெயிலுக்குள் இருக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். :) ஆனால் உள்ளே இருந்தாலும் அங்கிருக்கும் farm இல் அல்லது வேறு எதிலும் சம்பளமும் தந்து வேலை செய்ய விடுவார்களாம். உண்மை பொய் தெரியவில்லை. :unsure: முடிந்தால் கேட்டு சொல்லுங்கள். :D உண்மையெனின் அப்படி ஏதும் செய்து மெலிந்தாரோ? :icon_mrgreen:

ஆனால் பணம் கட்டாமல் விட்டிட்டு சில வருடங்களின் பின் சென்றால் பிடித்து உள்ளே போட்டாலும் வட்டியுடன் சேர்த்து பணம் கட்டியே தீர வேண்டும். அத்துடன் குற்றம் செய்தார் என பதிவும் இருக்கும். :rolleyes: பிறகு heart attack வராத குறையா திரும்பணும். :lol:

எப்பொழுது சிரித்து வாழுங்கள் எதையும் பெரிய அளவில் போட்டு குழப்பி கொள்ளாமல் இதுகும் கடந்து போகும் என்று எண்ணி கடந்து போங்கள் மனம் லேசா இருந்தால் உடலுக்கு மருந்து தேவையில்லை இறுக்கங்கள் தான் முத ல் நோயின் தொடக்கம் .

பக்கத்தில் எங்காவது போகவேண்டும் என்றால் வாகனத்தை தவிர்த்து நடந்து போய்  பழகுங்கள் உடலுக்கு நல்லது .

வாழ்க்கையை போகும் போக்கில் விட்டு வாழுவம் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதால் எதையும் நான் பிளான் பண்ணுவது இல்லை .. :D

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இண்டைக்கு காலையிலை என்ரை மனுசி ஒரு பாண்துண்டையும் பால்கலந்த தேத்தண்ணியையும் மேசையிலை நாய்க்கு வைக்கிறமாதிரி வைச்சிட்டு ஒருமாதிரி சிலுப்பிக்கொண்டு போனா....எனக்கு எதோ பிரச்சனை இருக்கெண்டு விளங்கிச்சுது...ஆனால் என்னபிரச்சனெயெண்டு விளங்கேல்லை.....ஒண்டும் கதைக்காமல் இவங்கடை காய்ஞ்ச தவிட்டு பாண்துண்டை தேத்தண்ணியோடை மிண்டி விழுங்கிப்போட்டு போடவேண்டிய குளிசையையும் ஒரு முறடு தண்ணியோடை அப்பிடியே அமுக்கி விழுங்கிப்போட்டு யன்னலை பார்த்துக்கொண்டு நிண்டு இண்டைக்கு வேலையிலை என்னென்ன செய்யோணுமெண்டு யோசிச்சு பிளான் பண்ணிக்கொண்டு நிண்டன்.......
அப்ப என்ரை ஆள் எனக்கு கிட்ட வந்து....என்னப்பா யோசிக்கிறியள்.....இண்டைக்கு ஆரோடை கொழுவுப்படலாமெண்டே யோசிக்கிறியள்?......... :huh:
எனக்கு விளங்கவேயில்லை.......நான் ஆரோடை கொழுவினனானாப்பா எண்டு கேக்க.............அது தான் உந்த இன்ரநெற்றிலை நடக்கிற கூத்துக்களை சொன்னனான்... :o
நேற்றும் ஆரோடையோ பிரச்சனைப்பட்டுருக்கிறியள்? ^_^
முந்தநாளும் ஏதோ பிரச்சனை போலை கிடக்கு.....? <_<
ஏனப்பா முகம் தெரியாத ஆக்களோடை பிரச்சனைப்படோணும்? :(  :icon_idea:
இதெல்லாம் எல்லாம் ஆரிட்டை பழகின பழக்கம்? <_<
உங்கடை வயதென்ன? :o  இனிமேல் வயதுக்கேத்த மாதிரி கதைக்கோணும் .......பழகோணும்...
இப்பவும் குமரன்கள் மாதிரி விடியவிடிய இன்ரநெற்றிலையிருந்து அலட்டி பிரச்சனைப்படுறது....வடிவில்லை....ஒரு நல்லதை.....நல்ல விசயங்களை சொன்னாலும் பரவாயில்லை!!!!சும்மா படங்களை போடுறது.....பாட்டுக்களை போடுறது.....
ஒரு வயதுக்குமேலை பக்குவம் பண்பாடு வரோணும்......இனி உந்த இன்ரநெட்டுக்களை விட்டுட்டு.....பேசாமல் உங்கடை பாட்டை பாருங்கோவனப்பா.......ஏன் தேவையில்லாமல் மற்ற ஆக்களோடை பிரச்சனை!!!!??????::::
 
நான் திருப்பி ஓண்டும் கதைக்கேல்லை.....பேசாமல் வேலைக்கு போட்டன்....அங்கை வேலையிடத்திலை நிண்டு யோசிச்சுப்பார்த்தான்......பாவியவள் சொன்னதும் சரியாத்தான் தெரிஞ்சுது.......சும்மா என்னத்துக்கு எல்லாரோடையும் பிரச்சனைப்படோணும்......அதாலை யாழ்களத்துக்கு வந்து வாசிக்கிறதோடை சரி....வேறயொண்டுமில்லை எண்டு மத்தியானம் முடிவெடுத்தன்....
 
ஆனால் அதிலையும் ஒரு பிரச்சனை என்னெண்டால்  "சங்கீதம் பாடினவன்ரை வாயும் சிரங்கு சொறிஞ்சவன்ரை கையும் சும்மாயிருக்காது" எண்டது போலை.......நமக்கு மத்தியானம் எடுத்த முடிவும் சரிவராது.
 
அதாலை நைசாய் கொஞ்சம்கொஞ்சமாய் 2014லை யாழ்களத்தை விட்டு ஒதுங்குவம் எண்டு முடிவெடுத்திருக்கிறன். :)  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா முடியலைண்ணா.. :lol:

5 star hotel இல் இருப்பதை விட சுவிசிலுள்ள ஜெயிலுக்குள் இருக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். :) ஆனால் உள்ளே இருந்தாலும் அங்கிருக்கும் farm இல் அல்லது வேறு எதிலும் சம்பளமும் தந்து வேலை செய்ய விடுவார்களாம். உண்மை பொய் தெரியவில்லை. :unsure: முடிந்தால் கேட்டு சொல்லுங்கள். :D உண்மையெனின் அப்படி ஏதும் செய்து மெலிந்தாரோ? :icon_mrgreen:

ஆனால் பணம் கட்டாமல் விட்டிட்டு சில வருடங்களின் பின் சென்றால் பிடித்து உள்ளே போட்டாலும் வட்டியுடன் சேர்த்து பணம் கட்டியே தீர வேண்டும். அத்துடன் குற்றம் செய்தார் என பதிவும் இருக்கும். :rolleyes: பிறகு heart attack வராத குறையா திரும்பணும். :lol:

உண்மைதான் தங்கையே! அவர் குற்றப்பணம் வட்டியோடு கட்டி, வரும்பொழுது சிறிது பணமும் கையில் கொண்டுவந்ததாகக் கூறிய ஞாபகமுள்ளது. உங்களுக்கு இந்தச் செயல்முறையில் ஆர்வம் இருந்து அதனைப் பின்பற்றவோ, அன்றி நண்பர், நண்பிகளுக்கு உதவ விரும்பினால், நண்பரைத் தேடிப்பிடித்துக் கேட்டு விபரம் எழுதுகிறேன். :D :D

ஐயையோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை. :lol:

அப்படியானால் உள்ளே வேலை செய்து சம்பளம் பெற்று வட்டியோடு குற்றப்பணம் செலுத்தி மிகுதி பணத்தை கொண்டு வந்துள்ளார். இத்தகவல் போதுமானது. நன்றி விளக்கத்துக்கு. :) வேறு விபரங்கள் அவரிடம் கேட்க அவசியமில்லை என நினைக்கிறேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் எல்லாம் ஆரிட்டை பழகின பழக்கம்? <_<

உங்கடை வயதென்ன? :o  இனிமேல் வயதுக்கேத்த மாதிரி கதைக்கோணும் .......பழகோணும்...

குமாரசாமியண்ணை உங்கடை பதிவை என்ரை மனிசிக்குக் காட்டினனான். அவ உங்கடை மனிசியின்ரை வாய்க்குச் சக்கரைபோட்டுக் கழுத்துக்கு பூமாலையும் போடவேண்டுமென்று ஒற்றைக் காலிலை நிக்கிறா. அவ மற்றக்காலையும் தூக்கமுன்பு எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்லிக் காப்பாற்றுங்கோ. :( :(

ரூ லேற் :( ....முந்தியெல்லாம் நான் சாடையாய் முழுசிப்பாத்தாலே அடங்கின சீவன்.......
 
இப்ப நான் முழுசிக்காட்ட பாவியவளுக்கு பின்னாலை மூத்தவனும் மூத்தவளும் என்னைவிட பெரிசாய் முழுசிக்காட்டீனம்.......இந்த கலிகாலத்திலை அடங்கி அமசடக்காய் வாழுறதுதான் புத்திசாலித்தனம்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.