Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம்
04 ஜனவரி 2014
 
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ராதீகா இன்று காலை இந்தியா நோக்கிப் பயணித்தார் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்சபேசன் கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
 
ராதீகா சிற்சபேசன் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராதீகா சிற்சபேசன் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அந்தத் தகவல் மறுக்கப்பட்டிருந்ததுடன், தம்மை எச்சரித்ததாக ராதீகா அறிவித்திருந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வருகை தந்திருந்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.

Untitled-1tt.jpg

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ராதிகா சிற்சபேசன் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வடக்குக்கு சென்றிருந்ததுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/?q=node/360369

அங்கும் அவர் அகதி முகாமுக்கு போவாரா? அல்லது கோயிலுக்கும் சீலை கடைக்கும் போவாரா? அல்லது JJ/சோனியா/மோடி/அர்விந்த் கேஜ்ரிவாள்/நெடுமாறன்/வைகோ/சீமான் என்று யாரையும் சந்திப்பாரா? :blink:

இந்த செய்தியை போட்டவர்கள் அதையும் போட்டிருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக சாப்பாட்டுக்கடைக்கு போவார்.

அங்கும் அவர் அகதி முகாமுக்கு போவாரா? அல்லது கோயிலுக்கும் சீலை கடைக்கும் போவாரா? அல்லது JJ/சோனியா/மோடி/அர்விந்த் கேஜ்ரிவாள்/நெடுமாறன்/வைகோ/சீமான் என்று யாரையும் சந்திப்பாரா? :blink:

இந்த செய்தியை போட்டவர்கள் அதையும் போட்டிருக்கலாம்.....

என்றால் தான் கோட்டு கருத்து, புரளி கருத்தெல்லாம் போட்டு நாங்கள் பெரிய சாதனையாளர் என்று சிறி லங்கன் பீலா காட்டலாம்.

ராதிகாவில் சிலர்  இவ்வளவு கோபமாக இருப்பதன் காரணம் புரியவில்லை.ஒரு தமிழ் பெண் மேற்குலகில் அரசியலில் கெளரவமான இடத்தில் இருப்பது சிலரின் எரிச்சலை கிளறிவிட்டுள்ளதா?

அவர் எமக்கு உதவி புரிந்தாரா இல்லையா வேறு விடயம். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் எமக்கு ஏதும் நட்டமா? இல்லையே. ஜாலியாக அவரை வாழ்த்திவிட்டு போகவேண்டியது தானே.

அதெப்படி முடியும்???

தமிழேண்டா.............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாக்கும் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இடையில் நடக்க இருக்கும் தேர்தல் போட்டியில்..... குத்துக்கரணம் அடித்து இலங்கை இந்தியா ஏற்று அரசியல் செய்து திரியும் ராதிகாவை விட வழக்கறிஞர் ஜெனிவா வரை போயிட்டு வந்த கரி ஆனந்தஷங்கரியை கனடிய தமிழர்கள் இந்த முறை பாராளுமன்றம் அனுப்பனும்.....

ராதிகாக்கு தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நினைத்து பயம் வந்திட்டுது..... குத்தாட்டம் கொண்டாட்டம் எண்டு திரிந்த அவரின் லேட்டஸ்ட் அரசியல் தான் இந்த இலங்கை இந்திய விஜயம்....

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா

முள்ளிவாய்க்கல்

நினைவுமுற்றம்

செல்வாரா? 

படம்

எடுப்பாரா?

ராதிகாவில் சிலர்  இவ்வளவு கோபமாக இருப்பதன் காரணம் புரியவில்லை.ஒரு தமிழ் பெண் மேற்குலகில் அரசியலில் கெளரவமான இடத்தில் இருப்பது சிலரின் எரிச்சலை கிளறிவிட்டுள்ளதா?

அவர் எமக்கு உதவி புரிந்தாரா இல்லையா வேறு விடயம். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் எமக்கு ஏதும் நட்டமா? இல்லையே. ஜாலியாக அவரை வாழ்த்திவிட்டு போகவேண்டியது தானே.

சிலவேளை அந்த செய்தி பதிந்தவரின் நோக்கமே அதுவாக இருக்கலாம் தானே..அது ரதிகாவால் எங்களுக்கு ஒருபிரயோசினமும் இல்லை...அவ தமிழ் சினிமா நடிகைகள் மாதிரி...பார்க்க நல்லா இருக்கும் ஆனால் ஒரு வேஸ்ட்.....

 I endorse Gari Anandasangaree....

நாங்கள் ஒன்றாக பல்கலைகழகம் ஒன்றில் (நானும் அவரும் ஒரே வகுப்பில் படிக்கவில்லை) படிக்கும் போது...அவர் பகுதிநேரமாக ஒரு Sports Drinks கம்பனி ஒன்றில் வேலை செய்தார்...நங்கள் தமிழ் மாணவர்கள் ஒரு விளையாட்டு போட்டி நடத்தும் போது தனது கம்பனியில் "promote" பண்ணுகிறேன் என்று சொல்லி அன்று முழுவதும் drinks கொண்டுவந்தார்...இது நடந்தது 22 வருடங்களுக்கு முன்...அவர் அப்படி செய்திருக்கவேண்டியதே இல்லை.. ஆனால் எங்களது பெடியள் தானே...என்னால் முடிந்தது என்று செய்தார்...

அரசியல் வாதி என்றால் மக்களை/தமிழர்களை தானும் அவர்களுள் ஒருவன் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்...Torontoஇல் ward councillor/MLA/MP பதவிகளுக்கு போட்டியிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன் நிறைய பேருக்கு உணர்வுபூர்வமான உதவும் எண்ணம் இல்லை...தமிழர்களின் எண்ணிக்கை பலத்தை...தங்களுக்கு சாதகமாக்குகிரார்கள்..எந்த தமிழ் அரசியல்வாதியாலும்  அவர்கள் பிரதிநிதிபடுத்தும் மக்களுக்கோ..."தமிழருக்கோ" ஒரு பிரயோசினமும் இருக்கவில்லை...2009வரை "வேறு ஒரு" agenda இருந்த படியால் இவர்கள் வந்தார்கள்...இனி தெரியும்.....

இவ்வளவு மன உளைச்சலில் இருக்கும் நீங்கள் அரசியலில் இறங்கலாமே?

மற்றோரை குறை கூறாமல் எப்படி ஒரு அரசியல்வாதி இருக்கவேண்டும் என்று வென்று காட்டலாம்.

இல்லையென்றால் புரியாணி பொட்டலத்திற்கும் ஸ்போர்ட்ஸ் ட்ரின்கிற்கும் வாக்கு போடவேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க செய்யுறதையும் விடமாட்டாங்க ,தாங்களும் செய்யமாட்டாங்க 

இவங்க செய்யுறதையும் விடமாட்டாங்க ,தாங்களும் செய்யமாட்டாங்க 

நந்தன் கேள்வியே...என்ன "செய்தார்கள்/செய்கிறார்கள்" என்பது தான்....

ஒன்றுமே செய்யாமல் தமிழர் என்பதற்காக மட்டும் வாக்குப்போடுவது... மிகவும் ஆபத்தான ஒன்று...

இந்தியாவை மாதிரி ஒரு மடைமையானவர்கள் தான் நாங்கள்...

Edited by naanthaan

இந்தியாவை போல நாமும் மடமையானவர்கள் என்ற தங்களின் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இந்திய பாரம்பரியம் என்ற சாக்கடையில் பல நூற்றாண்டுகளாக ஊறிய மட்டைகள் நாம். அதன் தொடர் ச்சியே தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவை நோக்கி ஓடுவது.

எம்மை நான்கு நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த ஐரோப்பியருக்கு அடங்கி வாழத் தெரிந்த நாம் அவர் களின் முன்னேற்ற யுக்தியை பிரதியீடு (copy)செய்திருந்தாலேயே முன்னேறி இருப்போம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் கேள்வியே...என்ன "செய்தார்கள்/செய்கிறார்கள்" என்பது தான்....

ஒன்றுமே செய்யாமல் தமிழர் என்பதற்காக மட்டும் வாக்குப்போடுவது... மிகவும் ஆபத்தான ஒன்று...

இந்தியாவை மாதிரி ஒரு மடைமையானவர்கள் தான் நாங்கள்...

உண்மை.. ஸ்கார்பறோ செவ்வாறு தொகுதிக்கும், கனடாவுக்கும் என்ன செய்தார் என்பதை வைத்து அடுத்த தேர்தலில் மக்கள் வாக்குப் போடுவார்கள்.. :D

எதிர்க்கட்சி எம்.பீக்கள் வெல்லது ஆழும் கட்சி எம்.பீக்கள் செய்யாமல் விடுவதாலேயே. எதிர்க்கட்சி  எம்.பிக்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை தம்மை மக்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிப்பதே. மேற்கு நாடுகளைப் பொறுத்தளவில் ரதிகாவின் குத்தாட்டம் நல்ல அறுமுக செயல்பாடு. ஆழும் கட்சி எம்.பிக்களுக்கு பேசத்தெரியாவிட்டாலும் எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு பேசத்தெரிய வேண்டும்.

ரதிகா எதுவும் செய்யாமலேதான் பதவிக்கு வந்தார். அதன் ஒரு காரணம் தோரிக்கட்சியும், லிபறலும் செல்வாக்கு இழந்தமையால் ஆகும்.நடுவு நிலை போக்கு கொண்ட கனேடியர்களிடம் லிபறல் திரும்ப திரும்ப வரும். அதை ராதிகா புரிந்து வைத்திருக்க வேண்டும். முன்னர் ஒரு தடவை எட் புறாட் பெண்ட் பிரதமராக வரமுடியாத போது பதவி விலகினார். 

ராதிகா மாதிரியானவர்களுக்கு பொறுப்பு அதிகம்...காரணம் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எல்லா தரப்பாலும் அதிகமாக கவனிக்கப்படும்...அதுவும் பிழையான செயல் செய்தால் அது இன்னும் அதிகமாக வெளிச்சப்படுத்தபடும்.....

  • கருத்துக்கள உறவுகள்

பலர் நினைக்கினம் ராதிகா ஒழுங்காகச் செயற்படாததினால்தான் எமக்கு ஈழம் கிடைக்கவில்லை என்று. அவர் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர். அவர் போட்டியிட்டு வென்ற தொகுதியில் வாழும் எல்லா இன இனத்தவர்களுக்கும் பொதுவானவர். அங்கு வாழும் எல்லா இனத்தவர்களின் நிகழ்வுகளுக்கு அழைக்கும் போது அவர் நிச்சயம் கலந்து கொள்ளவேண்டும். சிட்னியை எடுத்துக் கொண்டால் முன்பு ஸ்ரத்வில்ட் தொகுதியில் வெற்றி பெற்ற வேர்ஜீனியா ஜட்ச் அவர்கள் தமிழர்களின் நிகழ்வுகளில் தமிழர்களின் கலாச்சார உடைகளை அணிந்து கலந்துகொள்பவர். அதே போல ராதிகா அவர்களும் வேறின நிகழ்வு ஒன்றில் நடனம் ஆடியிருக்கிறார். சிலர் சொல்லினம் அவர் சிறிலங்கா இந்தியாவுக்கு சுற்றுலா செல்கிறார் என்று. ஏன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா செல்லக்கூடாதா?. ராதிகா கனடா பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டது ஈழத்தமிழருக்கு பெருமை. அவர் ஒருவரினால் மட்டும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.

ஒரு தமிழ் பெண் மேற்குலகின் பலமான ஒரு நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதும், வேற்றின மக்கள் அவரை தமது விழாக்களுக்கு மரியாதை கொடுத்து அழைப்பதும் அவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் எமக்கு பெருமைதானே. நடனம் என்பது மனித குலத்தின் சந்தோசத்தின் வெளிப்பாடு. அதில் தவறு ஒன்றும் இல்லை. நாம் எல்லோரும் பார்ட்டிகளினல்  நடனம் ஆடுவதில்லையா? இது உலக வழமை தானே.

ராதிகாக்கு தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நினைத்து பயம் வந்திட்டுது..... குத்தாட்டம் கொண்டாட்டம் எண்டு திரிந்த அவரின் லேட்டஸ்ட் அரசியல் தான் இந்த இலங்கை இந்திய விஜயம்....

சுண்டலின் இக்கருத்துக்கும் கோத்தபாய ராஜபக்சாவின் கீழே உள்ள இணைப்பில் வந்த கருத்துக்கும் வித்தியாசமில்லை. http://www.yarl.com/forum3/index.php?showtopic=134271 சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர் -கோத்தாபய ராஜபக்ஷ

அவுஸ்திரெலியாவில் 2009க்கு முன்பும் பின்பும் ஒரு கவனயீர்ப்பிலும் கலந்துகொள்ளாமல் ஓடி ஒளிக்கும் சுண்டல், கனடாவில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்து கேள்விகேட்கிறார். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி சுண்டல்.

கந்தப்பு, tulpen இங்கு ராதிகா நடனம் ஆடுவதால் அவரை யாரும் தூற்றவில்லை.... Canadaஇல் எல்லா MPகளும் மற்ற சமூகங்களில் தம்மை அறிமுகபடுத்தவும், அடுத்த தேர்தலுக்கு வாக்குகளை பலப்படுத்தவும் எல்லா நிகழ்சிகளுக்கும் செல்வார்கள்... (உதாரணமாக நீங்கள் www.liberal.ca  என்னும் தளத்துக்கு சென்று பாருங்கள் அங்கு Canadaவின் ஒரு பெரிய கட்சியின் தலைவர் சீக்கிய குருத்துவாராவில் சப்பாத்தி சுடுவதை)

ராதிகாக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது ..அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பது தான்....அவர் இலங்கை பிரச்சனையை மட்டும் கதைத்தால் ..அவரை MP ஆக தெரிவு செய்தது இலங்கை பிரச்சனையை பற்றி மட்டும் கதைக்கவா? அவர் நன்றாக படித்திருகின்றார் ஆகவே அவர் கனடிய சமூகம் முழுமைக்கும் பொருந்த கூடிய பலவிடயங்களை செய்தாரா அல்லது அதை பற்றி நாடுளுமன்றத்தில் விவாதத்திற்கு உள்ளாக்கினாரா?

இசை சொன்ன மாதிரி அவவின் அடுத்த தேர்தல் முடிவு அவர் இப்போது என்ன செய்தார் என்பதை வைத்து தான்...ஆனால்

கடந்த தேர்தலில் அவர் எடுத்தது 19000 சொச்சம் வாக்குகள் தான்... Canadaஇல் 40% மக்கள் தான் வாக்களிப்பது... அவரது தொகுதியில் ஒரு 30000 தமிழர்கள் இருந்தாலே போதுமானது..அவர்களை ஏதாவது "தமிழ் கதைகள்" சொல்லி எல்லா வாக்குகளையும் வளைத்தால் MP ஆக வர போதுமானது... ராதிகா இப்போது கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் எடுக்கும் படங்களை தமிழ் மக்களின் அனுதாபத்தை பெற உபயோகிப்பார் என்பது தான் குற்றசாட்டு..(செய்வாரோ இல்லையோ தெரியாது)...

ராதிகாவின் தளத்தை பாருங்கள்..அவர் MP ஆக வந்து ஏதாவது முயற்ச்சித்தாரா என்று ஒன்றும் இல்லை...

அவர் தனது தொகுதியில் இடம்பெறும் பிரச்சனைகளையும், முழு உலகையும் பாதிக்கும் விடையங்களையும் கதைத்து அத்தோடு இலங்கை பிரச்சனைகளையும் கதைத்திருக்கலாம்...

ஆனால் அவர் எதையுமே ஆக்கபூர்வமாக செய்வதாக காணவில்லை....அப்படி செய்தார் என்றால் முழு தமிழருக்கும் பெருமையே...

ஆனால் அடுத்த தேர்தலை மட்டும் மனதில் வைத்துகொண்டு ஏதாவது செய்தார் என்றால்...அது தமிழருக்கு மடைப்பட்டம் கட்டுவது போலாகும் (இது அவவுக்கு மட்டும் இல்லை...தமிழர் என்று சொல்லி தேர்தலில் நிற்பவர் எல்லாருக்கும் தான்)...

Ruby Dhalla என்ற சீக்கிய பெண்ணும் MP ஆகா இருந்து பெயரை கெடுத்தது தான் மிச்சம் (அதுவும் வேலைக்காரரை இந்தியாவில் இருந்து கொண்டுவந்து கொடுமைபடுத்தி)..

Edited by naanthaan

கனடாவில் மார்க்கம் நகரில் சீனர்கள் வெவ்வேறு கட்சியில் மோதுவார்கள்.

ஸ்காபுரோவில் தமிழர்கள் மோதுகிறார்கள்.

வூட்பிரிசில் இத்தாலியர்கள் மோதுகிறார்கள்.

டவுன் டவுனில் யூதர்கள் மோதுகிறார்கள்.

டான் போர்த்தில் கிரேக்கர் போட்டியிடுகிறார்கள்.

மிசிசாகாவில் இசுலாமியர் மோதுகிறார்கள்.

பிரம்ப்டனில் சீக்கியர்கள் மோதுகிறார்கள்.

ஒக்வில்லில் குரோஏசியன் போட்டியிடுகிறார்கள்.

ஹமில்டனின் ஐரிஷ் போட்டியிடுகிறார்கள்.

கிச்சினரில் ஜெர்மன்காரர் போட்டியிடுகிறார்கள்.

ஆகவே தமிழர் எத்தனை பேரும் போட்டியிட்டு வெல்லலாம்.

இங்க ஒருவர் லிபரல் கட்சிக்கு கிரீஸ் பூசவே ராதிக்காவை தாக்குகிறார்.

அவருடைய கார்ல்டன் பழைய மாணவ நண்பனும் சந்திரிக்காவின் குடும்ப நண்பரும் 500 வாக்குகள் கூட பெறவில்லை.

இந்த முறை எந்த சிறி லண்கனை பப்பா மரத்தில் ஏற்றபோகிரார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.