Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாராகின்றது புதிய கூட்டமைப்பு!! முதற்கட்ட பேச்சு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

new_tamil_allaince.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி மற்றொரு புதிய கூட்டமைப்பினை உருவாக்க முற்பட்டுள்ளார். அவரது முன்னாள் அரசியல் எதிரிகளுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தரப்பு உள்ளிட்ட வௌ;வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்து இப்புதிய கூட்டமைப்பினை உருவாக்க ஏற்பாடாகியுள்ளது.

புதிய கூட்டமைப்புத் தொடர்பான முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் நல்லூரினில் இன்று இடம்பெற்றிருந்த போதும் நீண்ட இழுபறிகளுடன் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டிந்தனர். 

தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும் சிறீடெலோ சார்பினில் அதன் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் ஆகியோருடன் பத்மநாபா அணியின் செயலாளர் நாயகம் சுகு சிறிதரன்  ஆளும் ஜக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் வடக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்த தமிழழகன் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.               
நீண்ட நேரம் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த போதும் சொல்லிக்கொள்ளத்தக்கதாக முடிவேதும் எட்டப்பட்டிருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதன் மூலம் ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துவதெனவும் முடிவு செய்யபட்டுள்ளது.  

 

 

http://www.pathivu.com/news/29010/57//d,article_full.aspx

இந்த கூட்டமைப்பில் உள்ளோரின் கொள்கை ஒன்றே. ஆகவே கொள்கை தொடர்பாக பிரச்சனைகளை எழ வாய்ப்பில்லை. அதை எப்படி அமுல் படுத்துவது தொடர்பாக பல பிரச்சனைகளை எழ வாய்ப்புள்ளது.  இனவெறி அரசை பஞ்சாங்க நமஸ்காரம் செய்வதா? அட்டாங்க நமஸ்காரம் செய்வதா? போன்ற நடைமுறை பிரச்சனைகளில்  இருந்து பல பிரச்சனைகள் பேசி தீர்க்கபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாகும் வரைக்கும்.. ஆனந்த சங்கரி திருந்தவே போறதில்லை. உவரை ஒரு தலைவரா மதிச்சு.. தேசிய தலைவர்.. கூட்டமைப்பில் தலைமை பொறுப்பைக் கொடுக்க.. அதனையும் இடையில்.. சிதறடிக்க முயன்றவர் தான்.. இந்த ஆனந்த சங்கரி. உந்தாளால் தமிழினத்திற்கு தொல்லையே தவிர.. ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தப் புதிய கூட்டமைப்பில் உள்ளவர்களை மக்கள் தான் அரசியலை விட்டே விரட்டி அடிக்கனும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

அவர்கள் அப்படியே  கூட்டமைத்து இருக்கட்டும்

அதவே  தமிழர்களுக்கும் நல்லது

சனியன்கள் ஒன்றாக ஒதுங்குவது நல்லது தானே

ஆனந்தசங்கரி ஒரு தேவைக்கும் உதவாதவர் என்றை அரசு பரிசோதித்துவிட்டுத்தான் முடிவெடுத்தது. தேவாநந்தாவின் கதையும் முடிந்துவிட்டது போலிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்... ஆனந்த சங்கரி வடமாகாண சபை தேர்தலில் தோல்விற்றது.
வென்றிருந்தால்... இன்னும் எவ்வளவு குடைச்சல் கொடுத்திருக்குமோ....

  • கருத்துக்கள உறவுகள்

குப்பைகள் சிதறிக்கிடந்தால், இடமும் சுத்தமாகாது, குப்பைகளாலும் பிரயோசனமில்லை. குப்பைகளை ஒன்று சேர்த்துவிட்டால் இடமும் சுத்தமாகும், குப்பையும் எரிந்தோ, உக்கியோ, எருவாகிப் பயன்தரலாம். :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்... ஆனந்த சங்கரி வடமாகாண சபை தேர்தலில் தோல்விற்றது.

வென்றிருந்தால்... இன்னும் எவ்வளவு குடைச்சல் கொடுத்திருக்குமோ....

 

உண்மைதான் சிறி

 

எனக்கு சோர்வுகள் ஏற்படும் போதெல்லாம்

தேர்தல்களில் தாயகதமிழர்கள் காட்டும்  

இது போன்ற திடமான  கணிப்புக்கள் என்னை தூக்கி  நிமிர்த்தியுள்ளன.

அந்தவகையில் ஆனந்த சங்கரியையும் சரியாகவே மக்கள் தூக்கி  எறிந்திருந்தனர்.

 

அத்துடன்

பொறுப்புக்கொடுக்கப்பட்டவர்களும்

அதன் சுமையை

அதன் தார்ப்பரியத்தை

தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு பின்னரே உணர்ந்தனர்

விக்கினேசுவரர் உட்பட..............

  • கருத்துக்கள உறவுகள்

யோ.புரட்சி என்ற கவிஞன் எழுதிய கவிதையொன்று இதுதான் இப்ப நினைவுவருது:

 

புரட்சியின் கவிதை :-

 

சி.வி விக்னேஸ்வரன்

 

சில தமிழர் இதயங்களில்
ஒரு போராளி.

சில தமிழர் இதயங்களில்
ஒரு வெறும் ஆளி.

 

சிலர் சொல்வர்
இவர் தமிழ் வழிகாட்டி.

சிலர் சொல்வர்
இவர் யாருக்கோ வழிகாட்டி.

 

சிலர் சொல்வர்
இவரால் விடுதலை என்று.

சிலர் சொல்வர்
இவரால் போய்விடும்

விடுதலை என்று.

 

சிலர் சொல்வர்
ஏதாவது இவர்
பெற்றுத் தருவாராம்.

சிலர் சொல்வர்
இருந்ததையும் இவர்
கொடுத்திடுவார் என்று.

சிலவர்க்கம் சொல்லும்
இவர்
தனிநாட்டுப் பிரியரென்று.

சிலவர்க்கம் சொல்லும்
இவர்
தமிழ்த்தேச எதிரியென்று.

 

சிலர் சொல்வர்
இவரின் வெற்றி
தமிழர் வெற்றி என்று.

சிலர் சொல்வர்
இவரின் வெற்றி
தமிழின் எதிரிகளின்
வெற்றி என்று.

 

இவரின் காலம்
பொற்காலம் ஆகுமா?
இல்லை
தமிழர்க்கு இதுவே
கற்காலம் ஆகுமா?

 

இவர்
ஏதேனும் நகர்த்துவாரா?
இல்லை
இவரை யாரேனும்
நகர்த்துவார்களா?

 

ஆரம்பத்திலேயே
அடி சறுக்குவாரா?
இல்லை
ஆரம்பத்திலேளே
அடி கொடுப்பாரா?

 

தேர்தல் காலத்தில்
சீறிய சீற்றம்
இப்போதும் தொடருமா?

இல்லை வெறும்
சிரிப்பு மட்டும் நீளுமா

ஏதேனும்
கிடைக்கச் செய்வாரா?

இல்லை
இருந்ததையும்
கொடுத்து விடுவாரா?

 

ஆயிரமாய் கேள்விகள்
இந்த
அரசியல் தலைமைமீது.

அவருக்கும் சுமைகள்
ஆயிரமாய் தலைமீது.

 

ஒன்று உண்மை
தமிழர்கள் நீதிபதிகள்.

நிரபராதியை விடுவிக்கவும்
குற்றவாளியை தண்டிக்கவும் தெரிந்தவர்கள்.
காலம் கடந்தாவது………

 

 

ஒன்று உண்மை

தமிழர்கள் நீதிபதிகள்.

நிரபராதியை விடுவிக்கவும்
குற்றவாளியை தண்டிக்கவும் தெரிந்தவர்கள்.
காலம் கடந்தாவது………

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சம்பந்தர்,சுமத்திரன் ஆகியோரின் அறிக்கைகள் பொறுப்பை உணர்ந்த மாதிரித் தெரியவில்லை.புதிய கூட்டமைப்பில் சேர அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு.

ஆனால் சம்பந்தர்,சுமத்திரன் ஆகியோரின் அறிக்கைகள் பொறுப்பை உணர்ந்த மாதிரித் தெரியவில்லை.புதிய கூட்டமைப்பில் சேர அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.