Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தட்டி வான்...!!!!

Featured Replies

                                                                             தட்டி வான்

 

1525513_10151951421578002_112326440_n.jp

1.தட்டி வான் தெரியாத ஆரும் யாழ்ப்பாணத்தில இருக்க முடியாது.உந்த மினிவான் வரக்குமுன்னம் தட்டிவான் தான் கொடிகாமம்,பருத்துறை,யாழ்ப்பாணம் றூட் ஓடினது.
காத்தோட்டமா இருந்து அங்கின இங்கின பராக்கு பாத்துக்கொண்டு போறதுக்கு நல்ல வசதி.

2.தட்டி வான் செய்த கொம்பனிக்காரன் இப்ப யாழ்ப்பாணம் வந்தா அதை லச்சகணக்கில காசு குடுத்து வாங்கிக்கொண்டு போவாங்கள்.ஏனெண்டா 100 வருச பழசு தட்டி வான்.இருந்தாலும் எங்கட ஆக்கள் இப்பவும் ஓடுகினம்.

3.பிரச்சினை காலத்தில டீசலோ பெற்றோலோ இல்லாத நேரம் எங்கட ஆக்கள் தட்டிவானை மண்ணெண்ணையில ஒடிக்காட்டினவை.புகை பறக்க காது அடைக்கிற சத்தம் வரும். 

4.கொடிகாமத்தில இருந்து யாழ்ப்பாண சந்தைக்கும், பருத்துறை சந்தைக்கும் மரக்கறியள்,தேங்காய் மூடையள்,பிலாப்பழம்,வாழைக்குலை...இப்பிடி கன சாமானோடை சும்மா ஆடி அசைஞ்சு வாற அழகே அழகுதான்!!

5.தட்டிவானில ஒரு சிக்கல் நிண்டு போறது வலு கஸ்ரம்.ஏனெண்டா உயரம் குறைவு.அதால குனிஞ்சு நிண்டு நாரி கீரியெல்லாம் பிடிச்சுப்போடும்.இருந்து போறதெண்டாலும் கஸ்ரம் தான்.ஏனெண்டா மரச் சீற்றுத்தானே!!! குண்டி அண்டும்.

6.எனக்கு நல்ல ஞாபகம் ... ஊரில கலியாண வீடுகளுக்கு கூட இந்த தட்டிவான் தான் வாடகைக்கு எடுக்கிறவை. எங்கேனும் தூர கோயில் திருவிழாகளுக்கு குடும்பமா போறதெண்டாலும் தட்டிவான் தான்.

7.தட்டி வான் கோர்ண் தான் முந்தி பெரிய புதினம். கையால "பாங்..பாங்" எண்டு தான் முந்தி கோர்ண் அடிப்பினம்(கோர்ண் இக்கு பின்னால பெரிய உருண்டையா ரப்பர் பந்து போல இருக்கும்.அதைப்பிடிச்சு ஊண்டி அமத்த வேணும்).பிறகு சாதாரணமான கோர்ண் வந்திட்டுது.

8.தட்டி வானில முன்னுக்கு வரிசையா கடவுள் படங்கள் இருக்கும்.அதுக்கு வேற பெரிசா சோடிச்சு இருப்பினம்.சில பேர் வாகனம் ஓடத்தொடங்கையுக்க சாம்பிராணி கொழுத்திவிடுவினம்.அதுதான் "car air freshner..."

9.தட்டி வானின்ர ரண்டு பக்கமும் பெரிய கொட்டை எழுத்தில பெயர் எழுதியிருப்பினம்.
பிள்ளையார் துணை,முருகன் துணை எண்டும் இருக்கும்.

10.எஙகட பள்ளிக்கூடத்தின்ர(ஹாட்லிக்கல்லூரி) உத்தியோக பூர்வ வாகனம் "தட்டிவான்"தான்.நான் அறிய 2002 வரைக்கும் நாங்கள் எங்க போறதெண்டாலும் தட்டிவான் தான்.பிறின்சிப்பல் முன்னுக்கு ஏறி இருப்பார். பின்னுக்கு வானுக்கு வெளிய ஒரு வாங்கில் மாதிரி சங்கிலியால கொழுவி விட்டி இருப்பினம்.அதில இருந்து போறதுக்கு அடிபிடிப்படுவம்.ஏனெண்டா பின்னால இருந்து என்ன சேட்டை விட்டாலும் பிறின்சிப்பலுக்கு தெரியாது.

11. தட்டி வானில போய் யாழ்ப்பாணத்தில இறங்குற கிறிக்கற்,வுட்போல் ரீம் எங்கட பள்ளிக்கூடம் தான்.தட்டி வானில போனாலே உடன சொல்லுவாங்கள் "உது ஹாட்லி ரீம்" எண்டு.சிலருக்கு நக்கல்.ஆனா எங்களுக்கு பெருமை.

12.மச் முடிஞ்சு திரும்பி வரேக்க "எங்கட கொலிஜ் .... ஹாட்லிக்கொலிஜ்"
"கொலிக் கொலிஜ் ..ஹாட்லிக்கொலிஜ்" எண்டு கத்திக்கொண்டு வருவம்.வாற வழியில தட்டிவானுக்குள்ளால எட்டி பூவரசம் குழையை புடுங்கி றோட்டால வாற பெட்டையளுக்கு எறிவம்.அதுவும் பின்னால இருக்கிறபொடியளின்ர சேட்டை பெரும் சேட்டை!!

13.உப்பிடி சேட்டை விட் சில சனம் மோட்டச்சைக்கிள்ள துரத்தி வந்து கேமை கேட்ட சம்பவம் கனக்க...கனக்க....

14. இன்னும் ஒண்டை மறந்திட்டன், சமாதான காலத்தில முகமாலைக்கும் கொடிகாமத்துக்கும் தட்டி வான் தான் றூட் ஓடினது.நான் மினிவானில ஏறமாட்டன்.. காத்து நிண்டு தட்டி வானில தான் ஏறிப்போவன்.

ஏனெண்டா எனக்கு வாகனத்தில ஏறினா "சத்தி" வரும். மினிவான் எண்டா ஜன்னல் திறக்க முன்னம் ஆருக்கும் மேல சத்தி எடுத்துப்போடுவன்.(நெக்ரோ சோடா குடிச்சிட்டு ஒருக்கா மினி வானில போய் வெள்ளை வேட்டி கட்டின மனிசன் ஒராளில "சத்தி" எடுத்து அந்தாளிட்ட கிழிய கிழிய ஏச்சு வாங்கின பிறகு எனக்கு மினி வானில போக பயம்).தட்டி வான் எண்டா "சத்தி" வந்தாலும் வெளிய உடன எட்டி எடுக்கலாம்.ஏனெண்டா எல்லாப்பக்கமும் திறந்து இருக்கும்.

15.தட்டி வானில போடுவினம் அருமையான இடைக்கால பாட்டுகள்.....ஆனா ஆரம்பத்தில "பிள்ளையார் சுழிபோட்டு.." எண்ட பத்திப்பாட்டை போட்ட பிறகுதான் சினிமாம்பாட்டு போடுவினம்.

16.மினிவானுக்கு குடுக்குற காசைவிட தட்டிவானுக்கு குறைவு.அதுவும் ஒரு முக்கிய காரணம் நான் தட்டிவானில ஏறுறதுக்கு....

 

1521218_10151951410553002_318246246_n.jp

 

 


தமிழ்ப்பொடியன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தட்டிவான் நீங்கள் பிறப்பதற்கு முன்னர் அல்லவ ஓடியது  ....  :D

 

 

நான் நினைக்கின்றேன் 2006 ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த வேளையில் கொடிகாமத்தில் இருந்து மந்திகையூடாக பருத்தித்துறை செல்லும் தட்டிவானில் ஏறி சென்றஞபகம் வாங்கில் போன்ற குசன் இல்லாத பலகை பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு நாட்டுக்கு சென்று இருக்கையில் இருந்து போக நோகின்றது என்று வானுக்குள் நின்று செல்ல கிளீனர்  தம்பி இடம் இருக்க ஏன் அண்ணை நிக்கிறியள் என்று என்நிலமை புரியாமல் கேட்டது மறக்க முடியாத அனுபவங்கள்.     
 
 
பகிர்விற்கு நன்றி தமிழ்ப்பொடியன்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த தட்டிவான் அனுபவம் உண்டா என்பது மறந்துபோச்சு.. ஆனால் வரிசையா கடவுள் படம் இருந்ததை பார்த்த மாதிரி ஒரு ஞாபகம்.. :unsure:

பதிவுக்கு நன்றி தமிழ்ப்பொடியன்..

எனக்கு நிறைய இருக்கு இதில் போன அனுபவம் தட்டிவான் நேர போகுதா அல்லது ஒரு கரையா சாய்யுதான் போகுமா என்றுதான் இன்னும் புரில்ல :D

 

நன்றி பகிர்விற்கு பொடியன் .

எனக்கும் உந்த தட்டில் வானில் ஏறின அனுபவம் இருக்கு. நன்றி தமிழ்பொடியா பழைசுகளை நினைவுபடுத்துவதற்கு!! :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிறைய இருக்கு இதில் போன அனுபவம் தட்டிவான் நேர போகுதா அல்லது ஒரு கரையா சாய்யுதான் போகுமா என்றுதான் இன்னும் புரில்ல :D

 

நன்றி பகிர்விற்கு பொடியன் .

 

இது ஒரு நல்ல  கேள்வி !  

 

வானின் அம்சங்கள் !

 

வானுக்கு நீளமான செசி உண்டு, அதை நான்கு சில்லுகளுக்கும் பக்கத்தில் இருக்கும் வில்லுத்தகடுகள் வில்லுப்போல் வளைந்துநின்று தாங்கிப் பிடிக்கும்.

அந்த வில்லுத்தகடுகளைக் கோர்த்து நடுவில் ஒரு நீன்ட பெரிய ஆணி பூட்டி இருக்கும்.

 

பயணிகளும் , வீதிகளும் !

 

வானில சனம் நிறைய ஏறினால்  இறங்க வசதியாக இடப்பக்கம்தான் கூடுதலாய் நிப்பினம் தமிழ்பொடியன் உட்பட  ,

வீதிகள் வானவில் போன்று இருக்கும். ஓவசியர்மாரின் டெக்னிக் மழைக்காலத்தில் நீர் வீதியைவிட்டு விரவாய் ஓட ,

நிறையப் பள்ளங்கள் கரயோரமாய் இருக்கும்.

 

வானின் சமனிலை மாற்றங்கள் !

 

1)  இப்ப வான் வீதியில் பள்ளங்களிள்  விழுந்து விழுந்து எழும்பி ஓடுதா, சனம் எல்லாம் கூடுதலாய் இடப்பக்கம் நிக்குதா, அதனால் இடதுபக்க  வில்லு நிமிர்ந்து வயலின் ஆகிவிடுகிறது.

 

2)  நடுவில்  உள்ள  ஆணி உடைந்து விடுகிறது.

 

3) சமயத்தில் வில்லுத்தகடே உடைந்து விடும் . ஆனாலும் வான் நிக்காது உரிய இடத்துக்கு வந்தே சேரும் ...!

 

இது போன்ற காரணங்களால் வான் ஒரு கரையாய்  சாய்ந்து போகிறது...!  :D :D

 

 

 

                                                                             தட்டி வான்

 

10.எஙகட பள்ளிக்கூடத்தின்ர(ஹாட்லிக்கல்லூரி) உத்தியோக பூர்வ வாகனம் "தட்டிவான்"தான்.நான் அறிய 2002 வரைக்கும் நாங்கள் எங்க போறதெண்டாலும் தட்டிவான் தான்.பிறின்சிப்பல் முன்னுக்கு ஏறி இருப்பார். பின்னுக்கு வானுக்கு வெளிய ஒரு வாங்கில் மாதிரி சங்கிலியால கொழுவி விட்டி இருப்பினம்.அதில இருந்து போறதுக்கு அடிபிடிப்படுவம்.ஏனெண்டா பின்னால இருந்து என்ன சேட்டை விட்டாலும் பிறின்சிப்பலுக்கு தெரியாது.

11. தட்டி வானில போய் யாழ்ப்பாணத்தில இறங்குற கிறிக்கற்,வுட்போல் ரீம் எங்கட பள்ளிக்கூடம் தான்.தட்டி வானில போனாலே உடன சொல்லுவாங்கள் "உது ஹாட்லி ரீம்" எண்டு.சிலருக்கு நக்கல்.ஆனா எங்களுக்கு பெருமை.

12.மச் முடிஞ்சு திரும்பி வரேக்க "எங்கட கொலிஜ் .... ஹாட்லிக்கொலிஜ்"

"கொலிக் கொலிஜ் ..ஹாட்லிக்கொலிஜ்" எண்டு கத்திக்கொண்டு வருவம்.வாற வழியில தட்டிவானுக்குள்ளால எட்டி பூவரசம் குழையை புடுங்கி றோட்டால வாற பெட்டையளுக்கு எறிவம்.அதுவும் பின்னால இருக்கிறபொடியளின்ர சேட்டை பெரும் சேட்டை!!

13.உப்பிடி சேட்டை விட் சில சனம் மோட்டச்சைக்கிள்ள துரத்தி வந்து கேமை கேட்ட சம்பவம் கனக்க...கனக்க....

 

 

 

தமிழ்ப்பொடியன்

 

 எங்கட ஹாட்லிப் பெடியள பொறுத்தவரையில் அந்தக்காலத்தில 'தட்டிவான்'தான் மிகப்பிடித்தமான சொகுசு வாகனம். :wub:  றோஸா மினிபஸ் எல்லாம் வேணாம்.... தட்டிவான்தான் வேணுமெண்டு அடம்பிடிச்சுக் கேட்டிருக்கம். :lol:

அதெல்லாம்... எம் கல்லூரிக் காலத்தின் இனிய கனாக்காலங்கள். எப்பவும் மறக்க முடியாத ஞாபகங்கள் .

ஆனால்.... இப்போதைய ஹாட்லிப்பெடியளின்ர விருப்பம் எப்படி இருக்கோ தெரியவில்லை...!? :unsure:

 

பழசுகளையெல்லாம் தோண்டியெடுத்து  கடந்தகால பசுமை ஞாபகங்களை கிளறிவிட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பொடியனுக்கு மிக்க நன்றி! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊர்ப்பக்கம் இந்தத் தட்டி வான்கள் கொஞ்சம் குறைவு!

 

ஆனால், வடமராட்சி நண்பர்களுடன் அவர்களின் ஊர்களுக்குப் போனபோது, இதில் பயணித்த அனுபவம் உண்டு!

 

சில வேளையில, பின் பக்கத்துச் சீற்றிலையிருந்து, முன்னால இறங்கிறதுக்குள்ள, கனபேரைத் தடவிக்கொண்டு வரவேண்டியிருக்கும்! :D

 

ஊர் நினைவுகளை மீட்டும், தமிழ்ப்பெடியனுக்கு நன்றிகள்!

வடமாகாணத்து ஏழைகளின் தோழன் தட்டிவான் . தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த தட்டிவான் பின்பு நாகரீகம் என்ற போதையினால் மறக்கடிக்கப்பட்டதும் வரலாறு . எம்மனதில் பாடம் போட்டு உறைநிலையில் இருந்த நினைவுகளை உருக்கி மீண்டும் கொண்டுவந்ததிர்ற்கு பெடிக்கு பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிவானில் பின்னுக்கு நின்று போவது ஒரு தனிச்சுகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டிவானில் பின்னுக்கு நின்று போவது ஒரு தனிச்சுகம்.

 

உள்ளுக்கை குந்தியிருக்க விட்டுட்டாலும்?????

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

ஜெரா

எங்கட ஊரில் பென்னம்பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தவர். கட்ட, உருள மாதிரி குண்டான தோற்றம். நல்ல இருண்ட வெள்ள. அவருக்கு எங்க போனாலும் முதலிடம்தான் வேணும். இடப்பெயர்வு காலங்களில மலங்கழிக்கிறதுக்கு காலையிலயே வரிசையில நிக்கவேணும். அதில கூட வரிசையில நிக்காம, அந்தப் பணக்காரர் வந்தவுடன, உள்ளுக்கப் போகக்கூடிய சகல செல்வாக்குகளோடயும் தான் இருந்தவர். பெரிய பெரிய துப்பாக்கிகள் வச்சிருந்த பெடியள்கூட இந்த அய்யாவுக்குத் தனி மரியாத குடுப்பாங்கள். அப்படியான இந்தப் பெரியவர் ஒருக்கா முதல் முதலாப் பள்ளமடு போனவர். அதாவது, முதல்முதலா ஆமிக்காரனப் பார்க்கப் போறார்.

1995 காலப்பகுதியெண்டு நினைவு. பள்ளமடுதான் இப்ப ஓமந்தை மாதிரி வடக்கையும் தெற்கையும் பிரிக்கிற இடமா இருந்தது. இங்கால இருந்து பெடியங்கள் செக் பண்ணுவாங்கள். அங்கால இருந்து அவங்கள் செக் பண்ணுவாங்கள். பெடியங்களின்ர கட்டுப்பாட்டுப் பக்கமிருந்து போற ஆக்கள, ஏத்திக் கொண்டு போற ஆக்கள் ஆமிக்காரன்ர பொயின்ட் அடி வரைக்கும் கொண்டு போய் விட்டிட்டு, அங்கியிருக்கிற சனங்கள ஏத்திக் கொண்டு வருவாங்கள்.

எங்கட பெரியவருக்கு முதலிடம்தானே வேணும். வாகனத்திலயும் முதலிடம். ட்ரைவருக்குப் பக்கத்திலயே இருந்திட்டார். பெடியள் செக் பண்ணி அனுப்பிட்டாங்கள். வாகனம் ஆமீன்ர பொயின்ருக்குள்ள போயிட்டு. அவன் இறங்கி வேகமாத்தான் ஓடச் சொல்லுவான் (2004,2005 களில் முகமாலைப் பொயின்ட்ல நடக்கிற ஆமி செக்கிங்க கற்பனை பண்ணிக் கொள்ளுங்கோ). சனமெல்லாம் பழக்க தோசத்தில இறங்கி வேகமா ஓடிக் கொண்டிருக்கு. எண்டைக்குமில்லாம, எவரெடி பட்டரிய கண்டோஸ்க்குள்ள வச்சிக் கடத்தின மனுசிய பிடிச்ச கடுப்பில நிண்ட ஆமிக்காரர் கிழடுகட்டயளயும் அடிச்சி விரட்டிக் கொண்டிருக்கிறாங்கள். பெரியவருக்கு எல்லாம் புதுசுதானே, ஆறுதலா இறங்கி, மெல்லம பொயின்ற நோக்கி நடந்தவர். இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஆமிக்காரன் வந்து விட்டான் அடி. றோட்டில போட்டு, கும்மி எடுத்திட்டான். அடி தாங்க முடியாத பணக்கார ஐயா வந்த பாதையாள பெடியங்களின்ர பொயின்ற் பக்கமா ஓடத் தொடங்கிட்டார். ஆமிக்காரனும் விடுறதா இல்ல. திரத்தித் திரத்தி அடிக்கிறான். இனி வந்தா பெடியளின்ற துப்பாக்கி சூடுவிழும் எண்ட இடம் வரத்தான் துரத்திறத விட்டவன்.

ஐயா அண்டைக்கு ஓடின ஓட்டத்த ஊர் சனம் முழுவதும் பார்த்து, சிரிப்புக்கும், அழுகைக்கும் இடையிலான ஒரு உணர்வில நிண்டவையாம். ஐயா அதுக்குப் பிறகு முள்ளிவாய்க்கால் சண்ட முடியும் வரைக்கும் ஆமிக்காரன் பக்கம் தலைவச்சும் படுக்கேல்ல.

இப்பிடியான ஒரு மரண நினைவ கந்தையாண்ணைக்கு குடுத்தது தட்டிவான் (பயணிகளை சுமந்துசெல்லும் வாகனம்) தான் என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நினைவு கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருந்தது.

இன்னொன்று, சாவகச்சேரிப்பக்கம் இது அடிக்கடி நடக்கும். பயணிகள் பேருந்துக்காகக் காத்திருப்பர். தட்டிவான்கள் புறப்படும். யாரும் ஏறமாட்டார்கள். உரிய இடங்களுக்கான பேருந்து வரும். ஏறமாட்டார்கள். எல்லாப் பேருந்துகளும் போய் முடிந்ததும், அவர்கள் அங்கேயே காத்திருப்பர். கடைசித் தட்டிவான் இரவு 8 மணிக்குப் புறப்படும். எல்லோரும் பாய்ந்தடித்து அதில் ஏறிக் கொள்வர். ஏன் முதலே ஏறியிருக்கலாமே, பேருந்தில் அல்லது தட்டிவானில் என்று கேட்டால், பகலில தட்டிவான்ல போறது வெட்கமாம்…ம். இப்பிடியும் ஒரு லா..லா.. பயணம்!

இப்படித்தான் வடக்கில் வாழும் நடுத்தர வயதைத் தொட்ட பெரும்பாலானவர்கள் இந்தப் பயணத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் நிழற்படம் மாதிரி நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் இந்த லா..லா.. பயணங்கள்.

அதென்ன லா.. லா..பயணம்?

சில பயணங்கள் 110 வயசு ஆச்சியையும் குழந்தையாக்கிவிடும். பொக்கை கன்னங்களில் பங்கர் வெட்டும். அந்தப் பயணங்களை நினைக்கவே சந்தோச மிகுதிபொங்கும். துள்ளிக் குதிக்கச் செய்யும். அப்படி குதிக்கச் செய்யும் பயணங்களைத் தருவது தட்டிவான்கள். சிலர் இதனை தட்டிபஸ் என்று நினைவுபடுத்துகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் பலரும் பல சொற்களை உச்சரிப்பர். அதில் பிரபலமானது லா… லா… லல்லல்லா… ஆகவே, அதையே தட்டிவான் பயணத்துக்கும் பொருத்தி லா..லா… பயணமாக மினுக்கித் தந்தார் உடுத்துறையில் இருக்கும் துஸ்யந்தன் என்கிற தட்டிவான் சாரதி..

இனி போவோமா லா..லாவுக்குள்ள?

தட்டிவான், இதன் தாயகம் பிரிட்டன். தரமான பொருள்களைக் கொள்வனவு செய்வதில் வல்லவர்களான எம்மவர்கள் ஜப்பான் பொருள்களைக் காணமுன்பு, பிரிட்டன் பொருட்களைத்தான் கண்டனர். ஜப்பான் யமஹா மாதிரி 1980களுக்கு முதல் பிரிட்டன் தட்டிவான்தான் நம்மவர் இறக்குமதியில் முன்னிலையில் நின்றது. எங்கள் படலைகளுக்குள் மாடு வராமலும், தெருவில் செல்வோர் எட்டிப் பார்த்தால் வளவுக்குள் இருப்போர் தெரியாமல் இருப்பதற்கும் கிடுகினால் மறைப்பானாக உருவாக்கப்பட்டதே தட்டி. வெள்ளைக்காரனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக வாகனங்களின் இருபக்கங்களிலும், கிடுகுக்குப் பதிலாகக் கம்பியினால் அமைத்து, உள்ளே இருப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும், இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. காரணப் பெயர் வைப்பதில் கில்லாடிகளான நம்மவர்கள் அதற்கு உடனே சூட்டிய திருநாமம், ‘தட்டிவான்’.

அதுக்கு மட்டுமில்ல, இதுக்கும் 30 வயசு!

தட்டிவான் அறிமுகமானதுடன் இலங்கையும் இரண்டாகப் பிளவுபட்டது. தமிழர்கள் பொருளாதாரத் தடைகளைக் கண்டனர். எரிபொருள் விலையேற்றத்தால் தேங்காய் எண்ணெயில் வாகனம் செலுத்தும் பொறிமுறையைக்கூட நம்மவர்கள் கண்டுபிடித்தனர். பஞ்சில் விளக்கெறித்தனர். பனங்காய் சவர்காரமாகியது. இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்தெட்டுப் புதிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான், தட்டிவான்களில், குறைந்த செலவில் பயணம் போகலாம் என்பது. யாழ்ப்பாணத்துக்கு உள்ளேயேதான் பரீட்சார்த்த பயணங்கள் நடந்தன. யாழ். நகரப்பகுதியிருந்து சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி என்றும், பின்னர் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் இதர ஊர்களுக்கும் தட்டிவான் பயணம் ஆரம்பமானது.

உள் அமைப்பு

ஆரம்ப கால தட்டிவான்களின் முன் அமைப்பு பிரமாண்டாதாக இருக்கும். பெரிய லைற் ஹெற்கள். ஆந்தையின் கண்கள்போல இருக்கும். வாகனத்தின் முன் பகுதி சதுரமாக இருக்கும். ஹோர்ன், இப்போது மீன் விற்பவர்கள் அடிப்பதுதான். கொஞ்சம் பெரியதாக இருக்கும். மாடுகளையும், சன நெரிசலையும் சைற் எடுக்க, அதை அமத்தினால் போம்பி… போம்பி… என்று சத்தம் வரும்.

தட்டிவானின் பின் பக்கம் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்வர். சிலர் கதவு யன்னல் எல்லாம் வைத்து, திறந்து ஏறக்கூடிய வசதியுடன் அமைத்திருப்பர். அதன் கீழே ஏறுவதற்கு ஒரு இரும்புப் படியிருக்கும். அதில் காலை வைத்து, மேலிருந்து கட்டித் தூக்கப்பட்டிருக்கும் கயிற்றில் பிடித்துக்கொண்டு ஏறலாம். உள்ளே இருபக்கமும் நீளமான வாங்கு வாகனத்தோடு அசையாதபடி இணைக்கப் பட்டிருக்கும். அதில் நெருக்கமாக அமர்ந்து, நடுவில் கீரைப்பிடி போல பயணிகள் அடுக்கிக் கொள்வர். ஊர்கதை, உறவுக் கதையுடன் பயணம் பறக்கும். ஊர்ப் பெரியவர்கள், மாமன், மச்சான், வாகனக்காரரின் குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்கள் தட்டிவான் ட்ரைவரின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்வர். பின் படியில் கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு புழுதியோடு பகிடிவிட்டுக் கொண்டு வருவார் நடத்துநர். பயணிகள் அதிகமென்றால், தட்டிவானுக்கு மேலாகவும் காளையர்கள் அமர்ந்து பயணம் செய்வர். தட்டிவானுக்கு மேலிருந்து பயணம் செய்வது காளையடக்கி, காதலியை கரம் பற்றுவதற்கு சமமானது. காதலியுடனோ, காதலிக்க காத்திருக்கும் பெண்ணுடனோ பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் காளையர்கள் தட்டிவான் முதுகில் பயணம் செய்து, பாடல் பாடி, தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதுண்டு. மேலிருந்து குண்டுகள் விழுமென்றோ, மல்யுத்தம், காளையடக்கல் நடக்குமென்றோ நினைக்கக்கூடாது. காட்டுவழியால் தட்டிவான்கள் 20 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்போது, மரக் கிளைகள் தலையில் அடிக்கும். அதில் அடிவாங்காமல், தப்பிப்பது அந்தக் கால காளையர்களின் வீரங்களில் ஒன்று.

சேவையும், சேவைக் காலமும்

1980ஆம் ஆண்டுகளில் தொடங்கி யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாக, சமாதானம் நெருங்கிய 2000ஆம் ஆண்டு வரைக்கும் தட்டிவான்களின் சேவை மிக முக்கியமாக இருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வில் சிறியளவு பணியாற்றினாலும், உள்ளூரளவில் அதிக பணியை தட்டிவான்கள் ஆற்றியிருக்கின்றன. பயணிகளை, அலுவலக உத்தியோகத்தர்களை ஏற்றி இறக்குவதை விட, வியாபாரிகளை ஏற்றி இறக்கும் பணியையும் செய்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் நடத்திய சண்டைகளுக்கும், காயப்பட்ட, மரணித்த போராளிகளை களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தட்டிவான்களைப் பயன்படுத்தினர். புலிகளிடம் தட்டிவான்கள் இருக்கவில்லை. “டீசலுக்கு ஓட்டம்” என்ற பிரிவுக்குள் இது இடம்பெறும். முதல் நாள் பொதுமக்களை ஏற்றினால், மறுநாள் முழுதும் புலிகளுக்கு தட்டிவானை ஓடவேண்டும். அதற்குப் பணமில்லை. பயண செலவுக்கான டீசலை வழங்குவார்கள்.

மரணித்த போராளிகளை உரிய பெற்றோர்களின் வீட்டிலிருந்து துயிலுமில்லங்கள் நோக்கி எடுத்துச் செல்லும் பணியையும் தட்டிவான்கள் ஆற்றின. மனதை உருக்கும் ஒரு துயரக் கீதத்தை பிறப்பிக்கும் ஸ்பீக்கரை தட்டிவானின் மேலாகக் கட்டி, அதனைச்சுற்றியும் சிப்பு மஞ்சள் கொடிகள், வாழை மரங்கள் கட்டி, நடுவில், தட்டிவானின் நடுவில் குறித்த விடுதலைப் புலிப் போராளியின் உடலம் வைக்கப்பட்டிருக்கும். அதன் கால் மாட்டில் இரு போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பர். தலை மாட்டில் தாயும் ஏனைய உறவினர்களும் அமர்ந்து, துயிலுமில்லம் வரைக்கும் அழுதபடி வருவர். அந்தத் தட்டிவானைக் கண்டதும் மக்கள் வீதியால் பயணிப்பவர்களும், ஊர்களுக்குள் வேலை செய்கின்றவர்களும் தட்டிவான்களைப் பார்த்தபடி அமைதியாக நிற்பர். டயர்கள் தட்டுப்பாடான அந்தக் காலகட்டத்தில் வைக்கோல் அடைந்தும், மண் அடைந்தும், காற்றில்லாமலும் போரில் மரணித்தவர்களின் உடல்களைக் காவின தட்டிவான்கள்.

இப்போது உடுத்துறையில் 10 தட்டிவான்கள் இயங்கும் நிலையில் இருக்கின்றன. அவை கிளிநொச்சிக்கு மீன் கொண்டு செல்பவர்களை ஏற்றி இறக்கும் பணியைச் செய்கின்றன.

இப்படியே பொருளாதாரத் தடைகள், பாதைத் தடைகள், இடப்பெயர்வுகள் என அலைந்துழன்ற தமிழர்களைக் காவியதில் தட்டிவான்களின் பங்கு, மாட்டு வண்டில்களுக்கும், சயிக்கிள்களுக்கும் முந்திய இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிலிருந்து வந்த மினி பஸ்கள் அந்த இடத்தைப் பிடித்துத் தட்டிவான்களை மறக்கச் செய்துவிட்டன.

http://maatram.org/?p=1844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.