Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் யாழ்ப்பாண மாப்பிள்ளை உதயனே மன்னிப்பு கேள்: யாழில் உதயன் பத்திரிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Featured Replies

உதயனுக்கு எதிராக கொடிபிடிப்பது தங்கள் அதிகாரத்தின் மிடுக்கை காட்டவே. ரூபவாகினியை அடக்க முதல் மேர்வின் சில்வா தலையால் இரத்தம் ஒழுக ஓடியவர்.உதயன் வன்னியில் மாடு மேய்க்கவா என்று கவிதை எழுதியதாக கிழமைக்கணக்கில் போராட்டம் நடத்தியவர்கள். உதயனுக்குள் உள்ளட்டு சுட்டத்தால் கமருன் அங்கு போனவர்.  தேவானந்த மான நட்ட வழக்கை தொடக்கி வைத்துவிட்டு கோட்டு சுகவீனம் என்று அறிக்கை கொடுத்துவிட்டு, கட்டடம் கட்ட மேசன் வேலைக்குப் போய் அத்திவாரத்துக்கு சீமேந்து போட்டவர். இதனால் சிக்கலான  இந்த விடயத்தை நுணுக்கமாக கையாளப் பார்க்கிறார்கள்.

 

இதனுள் பின்னால் நிறைய இருக்கு.  இதை தமிழ் நாட்டு சினிமா பைத்தியங்களுடன் ஒப்பிட முடியாது. ஐங்கரனுக்கு தெரியும் ஆர் பெடியள்; ஏன் கொடி பிடிக்கிறாங்கள் என்று.  (அதை அவங்களின்ரை வாயாலை கூலிக்குத்தான் வந்தனாங்கள் என்று சொல்ல வைக்க முயலுமாப்பொலிருக்கு. )பொடியல் ஐங்கரன வந்து உயிரை வாங்குது என்று கஸ்டப்படுறாங்கள். ஸ்கூட்டர் காறனுக்கும் தெரியும். அதனால்த்தான் அவனும் சண்டித்தனம் காட்ட வந்தவன். அவன் அந்த உரிமையை பற்றி ஆமியிடம் கதைக்கிறவனோ தெரியாது.

வீட்டுக்கு அடங்காமல், சினிமாக்கு அலைந்து வியஜ்க்கு கொடிக்கு பிடிக்கும் யாழ்ப்பாணத்து திருகுதாளங்கள இந்த மாதிரி வடிவாக எழுதிக்கொண்டு வந்து ஒழுங்காக நிற்கத்தக்க சனமாக இருப்பதில்லை. அவற்றை எழுதி இருப்பதெல்லாம் பெண்கள் என்று கையெழுத்தில் தெரிகிறது. எல்லாமே பெண்களின் கையெழுத்தில்தான் இருக்கு. தமிழ் நாட்டில் கொடி பிடிக்கும் ரசிகர் கூட்டம் வேறு கதை).

 

கமருன் வன்னியில் சிதைந்து அழிந்து எஞ்சிய இடங்களுக்குச் சென்று மிஞ்சிய மக்களைப் பார்க்கப்போனால்தான் ஆச்சரியம் தவிர உதயனுக்கு போனதொன்றும் ஆச்சரியம் கிடையாது.

 

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியை யாழுக்கு இழுத்து நீச்சல் குளம் கட்டி கும்மியடிப்பதுபோல் போரின் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து வரும் சர்வதேசத்தலைவர்களை போரும் அழிவும் நடந்தபோது தேரும் திருவிழாவும் என்று கூத்தடித்த யாழுக்கு அழைத்து அடயாளமும் பெருமையும் தேடிக்கொள்கின்றார்கள்.

 

மையவாதமும் பேரினவாதமும் ஆருயிர் நண்பர்கள் என்ற சூத்திரத்தின் அடிப்படையில் உதயனை நம்ப முடியாது. நீ சுடுகின்ற மாதிரி சுடு நான் அழுகின்ற மாதிரி நடிக்கிறன் என்று தன்னை பிரபலப்படுத்தக்கூடியது உதயன் பத்திரிகை. ஒருபோதும் மையவாதப்பத்திரிகையை நம்ப முடியாது. நம்பவேண்டிய அவசியமும் இல்லை. என்று வன்னி மக்களை கேவலப்படுத்தியதோ அன்றே அதன் நம்பிக்கை முற்றாக கேள்விக்குறியாகிவிட்டது.

 

அவன் இவன் தமிழ்நாட்டுப் பயித்தியங்கள் என்ற உங்கள் எகத்தாள சொல்லாடல்களில் யாழ்பாணியத்தின் இயல்பு தாராளமாகத் தெரிகின்றது.

 

அவர்கள் உதயனுக்கு எதிராக ஆர்பாட்டம் பண்ணுவதும் நடிகரை ஆதரிப்பதும் அவர்களது உரிமை. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!!

Vijay-100x80.jpgஇனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை…

…வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதினம் ஆடி 2011

பெடியல் முகத்தை காட்ட தயார் இல்லாமல் இருக்கிறாங்கள். அவங்கள் வாதாடேலை. வெளிட்நாடிலை இருந்து பணம் வந்து கிடைக்கும் ஸ்கூட்டர்காறன்தான் வாதாடுகிறார். 

 

ஓம் அதுவும் பேச்சு சுதந்திரம் பற்றி சொல்லி எங்களை புலரிக்க வைத்துவிட்டார் அந்த மோட்டார் சைக்கிள் மேதாவி!!!

கமருன் வன்னியில் சிதைந்து அழிந்து எஞ்சிய இடங்களுக்குச் சென்று மிஞ்சிய மக்களைப் பார்க்கப்போனால்தான் ஆச்சரியம் தவிர உதயனுக்கு போனதொன்றும் ஆச்சரியம் கிடையாது.

 

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியை யாழுக்கு இழுத்து நீச்சல் குளம் கட்டி கும்மியடிப்பதுபோல் போரின் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து வரும் சர்வதேசத்தலைவர்களை போரும் அழிவும் நடந்தபோது தேரும் திருவிழாவும் என்று கூத்தடித்த யாழுக்கு அழைத்து அடயாளமும் பெருமையும் தேடிக்கொள்கின்றார்கள்.

 

மையவாதமும் பேரினவாதமும் ஆருயிர் நண்பர்கள் என்ற சூத்திரத்தின் அடிப்படையில் உதயனை நம்ப முடியாது. நீ சுடுகின்ற மாதிரி சுடு நான் அழுகின்ற மாதிரி நடிக்கிறன் என்று தன்னை பிரபலப்படுத்தக்கூடியது உதயன் பத்திரிகை. ஒருபோதும் மையவாதப்பத்திரிகையை நம்ப முடியாது. நம்பவேண்டிய அவசியமும் இல்லை. என்று வன்னி மக்களை கேவலப்படுத்தியதோ அன்றே அதன் நம்பிக்கை முற்றாக கேள்விக்குறியாகிவிட்டது.

 

அவன் இவன் தமிழ்நாட்டுப் பயித்தியங்கள் என்ற உங்கள் எகத்தாள சொல்லாடல்களில் யாழ்பாணியத்தின் இயல்பு தாராளமாகத் தெரிகின்றது.

 

அவர்கள் உதயனுக்கு எதிராக ஆர்பாட்டம் பண்ணுவதும் நடிகரை ஆதரிப்பதும் அவர்களது உரிமை. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

அப்பாடா! அந்த பொடியங்களை அடக்கு முறையால் நகைச்சுவை காட்சிப்பொருளாக  தெருவில் நிறுத்திவைத்திருப்பது மட்டும் உங்கள் உரிமையா? அந்த உரிமையை அந்த பெடியங்கள் கேடக முடியாதவாறு அவர்களின் வாயைக்கட்டி வைத்திருந்து அவர்கள் ஐங்கரனுக்கு பதில் சொல்லாமல் நீங்கள் இங்கே வந்து அந்த பையங்களுக்காக பதில் சொல்வது உங்கள் உரிமையா? ஐங்கரன் சட்டப்படியான அவர்களின் பிரதிநிதி. அவருக்கு அரசு எப்படி செய்லாளர் நாயகம் காட்டிக்கொடுத்து போராட்டங்கள் முடக்கப்பட்டது என்றதை பற்றி அந்த பெடியங்களுக்கு விளக்க உரிமை இருக்கு. அவர்களுக்காக தலைமறைவாக கதைக்காமல் வெளிப்படையாக பிரத்தித்துவம் வரும் வழிவகளை தெளியவைத்துவிட்டு கத்தைத்தால் நன்றாக இருக்குமே.

 

நீச்சல்தாடகம் நாம் நீந்த கட்டவில்லை. செயலாளர் நாயகம் தவணடை அடிகத்தான் கட்டியது.  அது போகுது.

 

வடமாகாண மக்களுக்கு தாங்கள் விரும்பியவர்களை தெரிந்து அவர்கள் செலவளிக்க என்று பணத்தை ஒதுக்க உரிமை இருக்கு. பழைய நொண்டி இராணுவத்தளபதி தமிழர் இடத்தைவிட்டு வெளியேறி அவர்களுக்கு 13ம் திருத்தத்தின் கீழ் இருக்கும் உரிமையின் கீழ் அவர்கள் விரும்பும் நீச்சல் தட்டாகம் கட்ட இடம்கொடுப்பாரா அல்லது மந்த வாதம் தான் தொடர்ந்து புரிய போகிறாரா? அவர்களுக்கு தாங்கள் விரும்பும் நுரை சோலை கட்டி அவர்களை தெரிந்த மக்களின் தலை மீது கடன்களை போட எல்லா உரிமையும் இருக்கு. அதுதான் இலங்கை அரசியல் அமைப்பு.

 

உதயன் காரியாலத்தை கமருண் பார்க்க போக ஏன் அந்த போட்டோவில் நிற்பது எல்லாம் மோடையா பத்த்ரிகைகளின் நிரூபர்கள் மட்டும் படையெடுத்திருந்தார்கள்?

 

நீங்கள் உதயனை நம்ப வேண்டியதில்லை. ஐ.நா வுக்கு மேர்வின் சில்வாவின் கல்யாண புறோக்கர் வேலையில் நம்பிக்கை இல்லையாம். அதனால் கமருன், அரசு சுண்ணாகத்தில் ஒழித்து நடத்திவரும் அகதிகள் முகாமில் நல்ல பெண்கள் இருக்கிறார்களா என்று போய் பார்த்தார்.  ஐ.நா.வுக்கு சம்பந்தரின் கல்யாண புரோகர் வேலயில்தானாம் நம்பிக்கை. இந்த நம்பிக்கை குறைவை சரிசெய்ய மையவாதம் தியரியில் ஏதாவது சொல்லியிருக்கா? அல்லது இன்னொருதடவை ரூபவாகினில் வாங்கத்தான் இருக்கு என்று சொல்கிறதா?

 

ஒன்று மகிந்தாவை கமருனினால் உள்ளே போடமுடியுமோ தெரியாவிட்டாலும் நெடுந்தீவு ரொக்சனுக்கு பிறகு செயலாளர் நாயம் வீட்டில் தனிய படுப்பதில்லையாம். அதுதான் கதிர்காமர் விட்ட பிழையாம். எதற்கும் அப்பன் தாதுசேனன் கட்டிய காலவீவில் அவனையே  கொண்டே காசிப்பன் போட்டதுதான் மோடையா சரித்திரம். நீச்சல் தடாகத்தை கட்டிவைத்து காவல் இருக்கட்டும் செய்லாளர் நாயகம்.  புதிய அரசர் காசியப்பன் தன் கடமையை முடிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

Vadivelu.jpg
 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a26e28ab-da6c-4235-88d3-2da43dc42544

 

ஜில்லா விமர்சனத்திற்கு எதிராக யாழ்நகரில் ஆர்ப்பாட்டம்! - வடமாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன் ஆவேசம்!!


இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும் பாடு தெரியாது இப்படி கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூத்தாடிகளை தலையில் வைத்துக் கூத்தாடும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் இவ்வளவு காலமும் இருக்கவில்லை. சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதியிருந்தனர். ஆனால் தற்போது அங்குள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனைப் போல் தமிழகத்திலும் யாராவது துணிந்து செயற்படுவார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது இவ் இணையத்தளம்

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a26e28ab-da6c-4235-88d3-2da43dc42544

 

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூத்தாடிகளை தலையில் வைத்துக் கூத்தாடும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் இவ்வளவு காலமும் இருக்கவில்லை. சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதியிருந்தனர். ஆனால் தற்போது அங்குள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனைப் போல் தமிழகத்திலும் யாராவது துணிந்து செயற்படுவார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது இவ் இணையத்தளம்

 

கலைஞர்களை கூத்தாடிகள் என்பதே ஒரு மோசமான சொற்பதம். அப்படிப் பார்த்தால் எம் ஜி ஆருக்கும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் இருந்த உறவு கூத்தாடிக்கும் பிரபாரகனுக்கும் இடையில் இருந்த உறவா?

 

இன்றைய முதலமைச்சர் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார் கூட ஏன் சீமான கூட  திரைப்படத்துறை கலைஞர்கள்தான். அவர்களையும் யாழ் மையவாதிகள் கூத்தாடிகள் என்று அணுகுகின்றனரா?

 

ஒரு கலைஞனுக்கு ரசிகன் இருப்பது கூட சிறிலங்களா இராணுவத்தின் திட்டமிட்ட செயலா? உலகில் அதி உன்னத அதி மேன்மை தங்கிய புனித புண்ணியவான்கள் நீங்கள்.  அவர்களாக எக்காலத்திலும் எச்சூழ் நிலையிலும் அதி உன்னதத்தில் இருந்து கீழிறங்க மாட்டார்கள். அப்படி ஏதாவது நடந்தால் அதுக்கு என்னுமொருவன் தான் காரணமாக இருப்பான். அதாவது சிறிலங்கா ராணுவம் அல்லது வேறு நாட்டு புலநாய்வுத் துறைகள்.

 

உங்களுக்குகென்று சொந்தக் கலைகள் கிடையாது. அன்றய தேவராத்தில் இருந்த இன்றைய திரைபடக்கலைகள் வரை தமிழ்நாட்டின் இறக்குமதிகள்தான். உலகின் முற்றுமுழுதான் இரவல் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன். இந்த நிலையில் செருக்கு தலைக்குமேல்.

 

உங்கள் சமூக முரண்பாடுகளும் சைகோ மனநிலையும் உங்களுக்குள் எக்காலத்திலும் கலைகளை வளரவிடாது. இது வரலாற்று உண்மை. உங்கள் கலைகளை உங்களுக்குள் ஒருவர் படைப்பை என்னொருவர் ஏற்கப்போவதில்லை எனவே அவை வளரவும் போவதில்லை.

Edited by சண்டமாருதன்

"ஒரு கலைஞனுக்கு ரசிகன் இருப்பது கூட சிறிலங்களா இராணுவத்தின் திட்டமிட்ட செயலா?" உங்களுக்கு ஆச்சரியமாக படுகிறதா தெரியவில்லை. ஆனால் அந்த குழப்பத்தால் இதுதான் ஆசியாவின் ஆச்சரியம் என்பதை மறந்துபோகலாமா? பிரதமர் கடத்த, பொலிசு வினியோகிக்க, அரச குடும்பம்விக்க,... சுங்கத்தில் நின்றவர்களின் கழுத்து நெரிவது ஆசிய அதிசயத்தின் பாகமில்லையா?

 

"இன்றைய முதலமைச்சர் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார் கூட ஏன் சீமான கூட  திரைப்படத்துறை கலைஞர்கள்தான்."

இதை எழுதும் போட கூட விளங்கவில்லையா ஈழத்தமிழரின் கொப்பிஅடிக்கும் பண்பாடுதான் தமிழர்சுக்கட்சியின் மையவாத பா.உக்களாக சட்டத்தரணிகளை மட்டும்தான் தெரிந்துவந்தார்கள் என்பதும், அதைத்தான் இந்த பெடியன்களுக்கு ஐங்கரநேசன் விளங்கப்படுத்தினார் என்பதும். கொப்பி அடித்து ஐங்கரநேசன் மாதிரியான சினிமா நடிகர்களை ஈழத்தமிழர் அரசியல்வாதிகளாகத் தெரிந்தாலும் பரவாயில்லை. எழுதிக்கொடுத்ததை விளங்க ஆர்வம் காட்டாமல் அப்படியே கொண்டுவந்து பதிவதும் ஆசியாவின் ஆச்சரியம்தான். அகிலம் காலால் நடப்பதை பார்த்து கொப்பி அடித்து ஈழத்தமிழர் காலால் நடக்கிறார்கள். அது அவர்களின் கொப்பி அடித்த பண்பாடு. பரவாயில்லை. அது சாதாரணம். ஆனால் ஆசிய அதிசயத்தின் வாலுகள் அந்த அதிசயமான நடத்தையைப் பார்த்து தாமும் வாலால் நடக்கிறார்கள். அது அவமானம்.

 

ஒருதடவை வி.பொன்னம்பலம் காங்கேசந்துறை தொகுதில் பேசும் போது அண்ணாத்துரையும் M.A தான் நானும் M.A தான் என்றார். காகம் நடக்கும் போது தான் அன்னம் மாதிரியே அரக்கி, அசைந்து நடப்பதால் தானும் அன்னம் என்று நினைப்பதுண்டாம். நடிப்பத்தால் M.G.R = விஜையாக நிறுவியதை பார்க்க ஏன் குருடன் தன் மனைவி, குழந்தைக்கு கொடுத்த பால் விக்கியது என்ற கண்டுபிடித்த கதையின் பொருள் விள்ங்குகிறது. 

 

அடுத முறை எழுதி தருபவற்ற்றுக்கு விளக்கமும் கேட்டால் நல்லது.

 

"உங்களுக்குகென்று சொந்தக் கலைகள் கிடையாது. அன்றய தேவராத்தில் இருந்த இன்றைய திரைபடக்கலைகள் வரை தமிழ்நாட்டின் இறக்குமதிகள்தான். உலகின் முற்றுமுழுதான் இரவல் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன். இந்த நிலையில் செருக்கு தலைக்குமேல்." அடிமையாக போனவனுக்கு பெருமை இல்லை என்று சொல்ல வருவது புரிகிறது. அது ஆசிய அதிசயத்தில் வாலுகளுக்கு மட்டும்தான் பொருந்த்தும். தமிழீழத்துக்காக போராடுபவன் யாரும் தன்னை அடிமையாக கொள்வதில்லை.

 

ஆனால் விஜய் எழுதும் திவ்விய பிரபந்தங்களை/ தேவாரங்களை படிக்கத்தான் இலங்கை அரசரும் அடிக்கடிதிருப்பதி போய்வருகிறார் என்றதை மறக்காவிட்டால் நல்லது. புத்தமே கொப்பி. சிந்து வெளியில் தமிழரின் தத்துவங்கள்தான் அவை. புததம் பரவேண்டும் என்று தவம் இருப்பவர்கள் Originalகளைக் கண்டுபிடிப்பதை பார்க்க ஆசியாவின் ஆச்சரியமாக இருக்கிறது. புத்தம் தமிழை வளர்த்தது என்றதை எழுத்திக்கொடுக்க கொண்டுவந்து வாசிப்பவர்களுக்கு பண்டிதர்களுக்கு எல்லாம் மேலான அடியார்க்கு நல்லான் யாழ்ப்பணத்தவர் என்பது தெரியாது. மயில்வாகனப்புலவரின் கதை தெரியாது. அண்மையில் சங்க இலக்கியங்களை திரும்ப உலகிற்க்கு கொண்டுவந்த தாமோதரம் பிள்ளையை தெரியாது. சென்னையிலும் தமிழீழத்திலும் சைவத்தை மீட்டெடுத்த ஆறுமுக நாவலரை தெரியாது. ஏன் ஸெக்ஸ்பியரை மொழி பெயர்த்த விபுலானந்தரின் திற்மை கூடத் தெரியாது. அதனால் மட்டும்தான் சேக்ஸ்பியரை ஆங்கிலத்தில் படிப்பதிலும் பார்க்க விபுலாந்தரின் தமிழில் படிக்கும் போது சுவை கூட என்பார்கள் உண்டானது. சிதம்பரமோ பஞ்சபூத தலங்களோ தமிழ் நாட்டுக்கு வரமுன்னர் பஞ்சஈஸ்வரங்கள் ஈழத்தில் 5000 வருடங்களாக இருக்கிறது என்ற சரித்திரம் தெரியாது. இராமாணய காலத்தில் இராவணன் வணங்க திருகோனேஸ்வரம் இருந்தது தெரியாது. லெமூரிய கண்ட கருத்துகோளில் முதல் சங்க தென் மதுரை ஈழத்தில்தான் இருந்தது.  கொப்பி என்று சொல்லிக்கொடுக்க அந்த குப்பையை இங்கே கொண்டுவந்து கொட்டிவிட்டு போகிறார்கள். தமிழீழத் தமிழ்தான் அசல் தமிழ் என்றதையும் மற்றவை எல்லாம் திரிந்தவை(மற்ற மொழிகளில் கடன் வாங்கியவை, கொப்பி அடித்தவை)  என்றதை ஆசிய அதிசயத்தின் வாலுகளுக்கு தெரிந்த்திருக்க சந்தர்ப்பம் இல்லை. சொல்லியபடி எழுதிக்கொடுத்ததை பதிந்துவிடும் Brain Washed அப்பாவி அடிமைகள். நிச்சயமாக இந்த மூளை கலங்கலில்  பார்க்க சைக்கோ நல்ல நிலை

 

"உங்கள் சமூக முரண்பாடுகளும் சைகோ மனநிலையும் உங்களுக்குள் எக்காலத்திலும் கலைகளை வளரவிடாது." தமிழரை அழித்தொழிக்க கங்கணம் கட்டியிருப்பவர்கள் தமிழர் தமது கலைகளை வளரவிடுகிறார்கள் இல்லை என்று அங்கே ஆமியை அனுப்பி பெடியளை தெருவில் காட்சிப்பொருளாக நிறுத்தி வத்து கலை வளர்க்கிறார்களாம். "ஆடு மழையில் நனைகிறதே" என்று கண்ணீர் வடிக்கிறார்கள். Holywoodல் அந்த கலைவளர்ப்பை பற்றிச் சொல்லிக்கொடுக்க ஒரு புத்தகம் எழுதலாமே. இந்த வெள்ளைகாற மோடையாக்களுக்கு கலை வளர விஜேயின் Cutout களுக்கு நிறை பால் வார்க்க வேண்டும் எனபது புரிவதில்லை 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பொடியள் கொஞ்சப்பேர், வேலை வெட்டி இல்லாமல் திரியுறாங்கள் போல கிடக்குது.

பாஸ்போட்டை எடுத்து, நல்ல ஏசன்சியாப் பாத்து, சவூதிச்கோ, சுவிசுக்சோ, லண்டன், பாரீஸ், ரொரண்டோவுக்கு கெதியா ஏத்திப் போடுங்க!

  • கருத்துக்கள உறவுகள்

அட! எனக்கு இண்டைக்குத் தான் பிடி பட்டுது, யாழ் மையவாதம் எண்டா யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஊடகம், இத்தியாதிகளா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் அதற்கெதிராகப் போராட்டம் செய்ய முடியாத வகையில் ஆயுத பலத்தால் அடக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஆனால் இப்படியான ஒரு போராட்டம் இத வரை யாலத்தில் ஈழத்தமிழ் மக்கள் மர்ரியில் நடந்ததேயில்லை.சிலவேளை இதற்கும் ஏதாவது பின் புலம் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.ஐங்கரநேசனை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் வாயே திறக்கவில்லை.மோட்டார் சைக்கிளில் வந்தவர் மட்டும் உரிமை பற்றிக் கதைக்கிறார்.அநேகமாக ஒட்டுக்குழு ஆதரவாளராக இருக்கக்கூடும்.அவருடைய பிள்ளை உருப்பட்ட மாதிரிதான்.முதலில் தமிழரின் உரிமைக்கான பேராட்டததை நடத்துங்கோ.அது கிடைத்தபின் இதுபோல சில்லறை விடயங்களுக்கு போராட்டம் நடத்தலாம்.உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இடம்பெயர்ந்த சனங்கள் இன்னும் மீளக்குடியேறவில்லை.முள்ளிவாய்க்காலில் பட்ட அவலத்திற்கு அமெரிக்கா ஜெனிவாவுக்கு தீர்மான் நிறைவேற்ற நாடு நாடாய் அலைந்து கொண்டிருக்கிறது.புலிகள் இல்லாத நாட்டில் எலிகள் துள்ளி விளையாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட! எனக்கு இண்டைக்குத் தான் பிடி பட்டுது, யாழ் மையவாதம் எண்டா யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஊடகம், இத்தியாதிகளா? :lol:

மதில்மேல் பூனைமாதிரி மையமா வாதத்தை முன் வைக்கிறது எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறன்.. :huh::unsure:

உந்த மைய வாதி ஒரு தமிழரே அல்ல, அவர் தமிழ் மக்கள் இடையே இல்லாத ஒன்றை விதைத்து குழப்பத்தை ஏற்படுத்த முனைபவர், எப்போதும் மறைமுகமாக தமிழர் முஸ்லீமிடம் மண்டியிட வேண்டும் என்ற கருத்தை விதைப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.