Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'விவாகரத்து' எனும் 'Divorce' !!!

Featured Replies

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது   'கணவன்' !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது   'மனைவி' !
இருவரையும்....
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது  'திருமணம்'  !!

அத்தோடு விட்டானா....?!!
'காமம்' என்றும்...
'காதல்' என்றும்...
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் ...
அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...
எவன் வைத்தான்... தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்...
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!
பிரியமாக இருந்தோரெல்லாம்...
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
'காதல்' என்றால் என்னவென்று...
போதுமான விளக்கம் இல்லை!

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்...
ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...
மனிதன் பிரித்தானா? - இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ...
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

மனிதனை தவிர வேறு எந்தப் பிராணி கலியாணம் என்று கட்டுது..??! அது இஸ்டத்துக்கு பழகுது.. அப்புறம் தன் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்குது. கலியாணம் என்று ஒன்றைக் கட்டிற படியால் தான் விவாகரத்து என்ற ஒன்றும் வருகுது. கலியாணத்தை யார் உருவாக்கினா..???! :lol::D

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

  • தொடங்கியவர்

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

நிழலி....!

பிரிவின் வலிகளை முழுமையாக உணரும் தன்மையும், அதனாலான விளைவுகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகளும்.... நீங்கள் சொன்ன ஆறறிவில்லாத உயிரினங்களிடத்தில் இருப்பதாக தெரியவில்லை.

அவை ஜோடி பிரிவதும்... மனிதர்கள் ஜோடி பிடிவதும் ஒன்றாகாது.

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

சிலருக்கு இந்த பொருள்முதல்வாதத்தில் நடக்கும் வியாபாரம் நட்டமென்றால்.. விவாகரத்து தான் முடிவு..! மனித வாழ்க்கையே வியாபாரமாகிக் கிடக்குது.! :lol:

ஆக்கப் பகிர்விற்கு நன்றி கவிதை. :)

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

நாய் நடுவீதியில் செய்வதன் காரணம், அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு நாயும் அலையாது என்பதால் தான். அதன் கலாச்சாரம் அதன் வாழ்க்கை முறையில் இருந்து வந்தது, மனுசப் பயல் நடு ரோட்டில் நின்று செய்தால் அதைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே நிற்குமே...

நிழலி.... ! கார்த்திகை மாத காலைப்பொழுதுகளில் நீங்கள்  நாய்களைப் பார்த்ததில்லைப் போல..... :wub::lol:

ஆனால், மனிதர்களைப் பற்றி நீங்கள் சொன்னதையும் மறுக்க முடியாதுதான்! :lol::D

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

உண்மைதான் நிலாக்கா! விவாகரத்து என்பது எம் தமிழ் சமுதாயத்திலும் இப்பொழுது சர்வ சாதாரணமாகி வருகின்றது என்பது வருத்தத்துக்குரியது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!

பெண்ணையும் படைத்தான்...!!

இயற்கையை படைத்து...

அவர்களை இயங்கவும் வைத்தான் !!

அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,

அது   'கணவன்' !

பெண்ணுக்கு பெயரிட்டான்,

அது   'மனைவி' !

இருவரையும்....

சேர்த்து வைக்க திட்டமிட்டான்

அது  'திருமணம்'  !!

அத்தோடு விட்டானா....?!!

'காமம்' என்றும்...

'காதல்' என்றும்...

எதிரும் புதிருமாய்,

எதையெதையோ வைத்தான் ...

அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்

மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...

எவன் வைத்தான்... தெரியவில்லை!?

தொண்ணூறு நாளின் பின்தான்,

பெரும்பாலும்...

தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?

தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!

பிரியமாக இருந்தோரெல்லாம்...

பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!

புரிதல் இல்லை!

பரிவும் இல்லை!

'காதல்' என்றால் என்னவென்று...

போதுமான விளக்கம் இல்லை!

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...

ஆனபின்னும் ஆணவத்தில்,

ஆளுக்காள் அடம்பிடித்தால்...

ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...

மனிதன் பிரித்தானா? - இல்லை,

மனிதன் சேர்ந்து வாழ...

கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,

ஒன்றுமட்டும் உண்மை...

'விவாகரத்து' என்று ஒன்றை,

மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

0b7n.jpg

இதைப்பாருங்கள்

06/07/1750 இல்  ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக  இருவர் உயிருடன் கொழுத்தப்பட்ட  இடம் PARIS.

இன்று................???

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

  • தொடங்கியவர்

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

  • தொடங்கியவர்

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

நீஙகள் சொல்வது உண்மைதான்  சோழியன். ஆரம்பத்தில் மிக மிக நெருக்கமாக இருக்கிறார்கள். பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக விலகி விலகி... ஒரு கட்டத்தில் வெறுக்கும் நிலைக்கு செல்கின்றார்கள்.

 விவாக ரத்துக்களுக்கு இதுவும் முக்கியமான ஒரு காரணமாக அமைகின்றது.

கருத்துக்கு மிக்க நன்றி சோழியன்! :)

  • தொடங்கியவர்

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

போதுமென்ற மனமும் போதாது, பொறுமை, புரிந்துணர்வு, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பு என்பனவும் போதாது.

இவைகள் இருந்தால்..... பல திருமணங்கள் முறியும் அவல நிலை வராது.

கருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

  • தொடங்கியவர்

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

ஏனப்பு... இந்த அவசரம்??? :rolleyes:  எடுத்துடுங்க... என்று சொன்னால் எடுத்துடுவீங்களா அஞ்சரன்!? :rolleyes:  :lol:   சிலவேளைகளில் ஒருவழிப்பதைகள் அப்படித்தான்..... "றிவேஸ்" எடுத்தாலும் எடுக்காட்டிலும் ஒன்றுதான்! :icon_idea:

மாட்டிக்கிட்டு முழியுங்கள்.....!!!! :rolleyes::blink::D

  • தொடங்கியவர்

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

புங்கை... நீங்கள் சொன்னதுபோல  விவாகரத்துக்கான பல காரணங்கள் இப்போதைய வாழ்க்கைமுறையிலும், சமூக மாற்றங்களிலும் தோன்றி வருகின்றன. நாம், நமது என்றில்லாமல் நான் , எனது என தனிமைபடுத்துவதும் மிக முக்கிய காரணம்.

'விவாகரத்து' என்பது வாழ்ந்து கசந்து அதன்பின் வந்தால்... ஓரளவு பரவாயில்லை. மனதளவால் கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒன்றாக சேர்ந்து  வாழ ஆரம்பிக்கும் முன்பே எனக்கு 'காதல் பரிசாகக்' கிடைத்தது அது. அதை விதி என்பதா...? சதியென்பதா?? இன்றுவரைக்கும் தெரியவில்லை...!?!?  :(

கருத்துக்கு மிக்க நன்றி... புங்கை! :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

போக்கிரி... சில சமயங்களில் நீங்கள் சொல்லும் பிரிதல் சிறந்ததாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் தாயோ, தந்தையோ பக்கத்தில் இல்லையென்பது நிச்சயம் ஒரு குழந்தையின்  மனதினைப் பாதிக்கும் என்பது உறுதி.

பெயருக்கு சேர்ந்து வாழ்வதை நான் சேர்ந்துவாழ்தல் என்று குறிப்பிடவில்லை. புரிந்துணர்வோடும் சகிப்புத்தன்மையோடும் பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டு தமக்கிடையிலான மனக்கசப்புக்களை ஓரங்கட்டிவிட்டு அவர்களுக்காக வாழ்தலையே குறிப்பிட்டேன்

கருத்துக்கு மிக்க நன்றி போக்ஸ்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.