Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாம்பழம் கொண்டு வராமல் கனடா வந்த நாரதர்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சுூரியோதமுள்ள நாள். கதிரவன் வானத்திலிருந்து வெயில் எப்படி என்று கேலியாய் கேட்டுக்கொண்டிருந்தான். நானோ நல்ல து}க்கம் திடீரென தொலைபேசி அலறியது "சும்மா வேற வேலை இல்லாமல் நித்திரை கொள்ள விடாமல் யாரே அடிக்குதுகள்" ஒரே அமத்து... து}க்கி போட்டிட்டு நித்திரை தொடர்ந்தது. கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பு தற்போது வீட்டு தொலைபேசிக்கு வந்தது அப்பவும் நான் து}க்கத்தில.; எனது அக்கா வந்து "யாரோ அருவியோ செருவியோ போன் பண்ணினது, ரமாக்கா உடன எடுக்கட்டாம்" அப்ப தான் நினைவுக்கு வந்தது இன்டைக்கு நாரதரைச் சந்திக்கனும் என்று. அப்படியே ரமாக்காவுக்கு போன் பண்ணினா " என்ன நித்திரையே கெதியா வாரும் எல்லாம் ரெடி தானே" சற்று பயம், இருந்தாலும் சுதாகரித்து கொண்டு "ஓம் எல்லாம் ரெடி நான் இப்ப தான் பல்லுத்தீட்டிறன்" என்று சொல்லீட்டு கிளம்பீட்டம்…(பல்லுத்தீட்டி

மாம்பழம் கொணரலீங்களா.... நம்ம நாரத சாமி கொஞ்சம் உசார் பார்ட்டீங்க... தேவலோக ஆள் மாதிரி இல்லீங்க..... ஏன்னா ..சும்மா நயினா ஆத்தா சுத்திகிட்டு ஏமாத்திக்கலாம் என்று யோசிச்சிங்களா...

சந்திப்பு போட்டாவை இணையுங்க சார்..பார்ததுக்குவோம் :lol::lol::D

நிதர்சன் இரவு முழுக்க மெசென்ச்ஜரில இருந்து போட்டு பகலில நித்திரை எண்டா இப்படித் தான் நேரம் பிந்தும்.களத்தில அளவா எழுதும் நிதர்சனின் அறுவையை நிப்பாட்ட எல்லாரும் முயற்ச்சி செய்தம் ஆனா ரமா தான் ஒரு பத்து நிமிசம் பேசாம இருப்பீரா என்று விட்ட சவாலால தான் ஒரு பத்து நிமிசம் ஆவது பேசாம இருந்தார்.பிறகு இன்னொரு பத்து நிமிசம் நான் கேக்க இனி ஏலாது எண்டு போட்டார்.

கன பேரை சந்திதத்தாலும் பல இடங்களுக்கும் சென்றதாலும் களைப்பு, அலுப்பு அதால எல்லாரையும் வடிவா அறுக்க முடியேல்ல.தற்போதைய மன நிலையில் அரசியல் தான் பேச முடிந்தது.குறிப்பா கனடா நிலவரம்.அதால கனக்க கதைக்க விருப்பம் இருந்தாலும் கனக்க கதைக்க முடியேல்ல எல்லாருடனும்.மனைவியும் பிள்ளைகளும் முழு நேரமும் இருக்கவில்லை ஆகவே நிதர்சன் அமைதியாக பேசியதற்குக்கூறிய காரணம் ஏற்புடையது அல்ல.

எனது எழுத்தில் சில நேரம் இருக்கும் கோவம் 'கலகம் விழைவிக்கும் நாரதர்' என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் என்ன செய்வது சில நேரம் அப்படி உண்மையற்ற அல்லது மேற்போக்கான கருத்துக்களைக் கண்டால் தான் எழுதத் தோன்றும். நிஜத்தில் இயல்பான சுபாவம் வெளிப்படிருக்கலாம்.மற்றவர்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு எழுதினதில சிலது மறந்திட்டு, எங்கட ரசிகை, யாழ்ல மட்டும் தான் எள்ளுச்சம்பல் பற்றி எழுதுவா என்று பாத்தா அவா அதை செய்து கொண்டுவந்தா! மக்டோனால்ஸ்சில எள்ளுச்சம்பலோட என்னத்தைச்சாப்பிர்றது? தெரிஞ்சுகொண்டு தான் கொண்டு வந்தவா போல, ஆனால் நாங்கள் விடுவமே அருவியும் ,நாரதரும்,நானும் தான் சம்பலையே சாப்பிட்டம் சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கு, யாழ்ல "சமையல் ராணி" பட்டம் இரசிகைக்கு தான். சினேகிதி சாப்பிட மட்டும் தான் வாயத்திறந்தா அருவியும் ரமாக்காவும் பறவாயில்ல. ஆனால் இரசிகையும், சினேகிதியும். கதையில 0

மாம்பழம் கொணரலீங்களா.... நம்ம நாரத சாமி கொஞ்சம் உசார் பார்ட்டீங்க... தேவலோக ஆள் மாதிரி இல்லீங்க..... ஏன்னா ..சும்மா நயினா ஆத்தா சுத்திகிட்டு ஏமாத்திக்கலாம் என்று யோசிச்சிங்களா...

சந்திப்பு போட்டாவை இணையுங்க சார்..பார்ததுக்குவோம் :lol::lol::D

:D:D:D:D:D:D:D

ஆக மொத்தம் மாம்பழம் இல்லையே என்ற கவலை தான் நிதர்சனுக்கு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடும் நிகழ்வெல்லாம் தமிழீழத்திற்கானதாயின், தமிழீழம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை?

சந்திப்புக்களின் அரட்டை அடிக்க முடியும், அரசியல் பேசலாம் ஆனால் அது வெறும் பேச்சளவில் மட்டுமே எடுபடும். களத்திலும், கருத்திலும், அரசியல் பற்றி பேசி, சொல்லிலும்,செயலிலும், அதை செய்வோர், சந்திப்புக்கள், அரட்டையாக போகலாம்.

களத்தில் கருத்துக்கள் மட்டும் தந்து, இடையிடையே அரட்டையும் தந்து திண்ணையில், விறாந்தையில் கூட்டம் போட்டு கொட்டமடித்ததைாய் சொல்வதில் என்ன உள்ளதோ!

விடுதலை உணர்வும், தேசப்பற்றும் மனதில் இருந்தால் போதுமே! அதை சொல்லி காட்ட வேண்டிய அவசியம் இங்கில்லை.

நல்ல கொளுத்தும் வெயில் நான் ரமா சிநேகிதி மூன்றும் பேரும் ரெயினில் இருந்து இறங்கி மியூசியம் வாயிலை அடைந்து விட்டோம். ஆனால் நாரதரையோ அருவியையோ நிதர்சனையோ காணவில்லை. என்னடா இது 2 மணிக்கு நிப்பம் எண்டு சொன்ன ஆக்கள் ஒருவரையும் காணலை எண்டு போட்டு சரி எல்லோருக்கும் நல்ல பசி வாங்கோ சாப்பிடுவம் அவை வரட்டும் எண்டு போட்டு பக்கத்திலிருந்த மக்டோனல்ஸ்க்கு போனம். அப்ப அருவிதான் ரெயினால் இறங்குறன் எண்டு கோல் பண்ணினார். சரி நாங்கள் மக்டோன்ல்ஸ் இருக்கிறம் வாங்கோ எண்டு போட்டு அவர் வந்த அப்புறம் நாலு பேரும் சாப்பிட்டு திருப்ப மியூசியம் வாயிலுக்கு போனம்.

சரி இதில நிப்பம் இதால தானே வரணும். அப்ப பிடிக்கலாம். எண்டு நாரதரின் போனுக்கு கோல் பண்ணினால் ரிங் பண்ணுது ஆன்சர் இல்லை. அடக் கடவுளே 2 மணிக்கு வாறன் எண்டு சொன்ன ஆளை இன்னும் காணலை போனுக்கும் ஆன்ஸர் இல்லை. உவரை எப்படி தேடிப்பிடிக்கப் போறம் எண்டு கேக்க ரமா சொன்னா வாசலில நிண்டு நாங்கள் "நாரயணா நாராயணா" எண்டு சொல்லுவம் அப்ப அவருக்குத் தெரியும் தானே எண்டு இப்படி நாங்கள் மாறி மாறி கடி பட்டுட்டு இருக்க ஒரு ராக்சி வந்திச்சு அதுல 4 பேர் வருகினம் இவைதான் ஆக்கள் போல கிடக்கு எண்டு ரமா சொன்னா. சரி பொறுங்கோ பார்ப்பம் அவையாத் தான் இருக்கோணும் எண்டு சொல்லிட்டு திரும்பி பார்த்தால் அவை தான் நான் நாரதர் எண்டு கொண்டு நாரதர் வந்தார். அப்புறம் நாங்கள் யார் யார் என்று அறிமுகப் படுத்திட்டு மனைவி பிள்ளைகளை எங்களுக்கு அறிமுகம் செய்வித்தார்.

சரி என்னடா நாரதரே வந்துட்டார் இந்த நிதர்சன் எங்க இன்னும் காணலை எண்டு போட்டு அவருக்கு கோல் பண்ணினால் அவர் கதைக்கிறது எங்கயோ பாதளத்தில இருந்து கதைக்கிற மாதிரி ஒண்டுமே விளங்க இல்லை சரி எண்டு போட்டு எங்க இருந்து கதைக்கிற எண்டு யோசிச்சுட்டு அவையளும் இன்னும் சாப்பிட இல்லை எண்டிச்சினம் கடை ஏதும் அயலில இருக்கோ எண்டு கேக்க. அந்த மக்டோனல்ஸ் தான். அப்ப நிதர்சன் கோல் பண்ணினார் நாங்கள் மக்டோனல்ஸ்ல இருக்கிறம் நீங்க அங்க வாங்கோ எண்டு போட்டு நாங்கள் மக்டோல்ஸ்க்கு போய் சில நிமிடங்களில் நிதர்சன் வந்தார். அவரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்திட்டு எல்லோரும் கதைத்துக் கொண்டு இருந்தோம். அப்பப்பா நிதர்சன் வந்த நேரத்தில இருந்து வாய் மூடவே இல்லை, அவரின் கதையை நிப்பாட்ட ரமா 5 நிமிடம் கதைக்காமல் இரும் பார்ப்பம் எண்டு சொன்னா பாவம் அவர் கஷ்டப்பட்டு இருந்தார். சிறிது நேரத்தின் பின் அவரது மனைவியும் பிள்ளைகளும் மியீசியம் பார்க்க போய்விட்டார்கள் நாங்களும் நாரதரும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

கள உறவான நாரதரை மட்டும்மல்ல அவரது குடும்பத்தாரையும் காணப்போகின்றோம் என்ற சந்தோசத்தை தவிர கண்டவுடன் எல்லோரும் நன்றாக கதைப்பார்களா? இல்லாவிடின் முழிசிக்கொண்டு இருக்கவேண்டுமா என்ற கேள்வியும் மனதில் எழமால் இல்லை. ஆனால் கண்டவுடன் ஒரே ஒரு வணக்கம் அதற்கு அப்புறம் சொல்லவே தேவையில்லை. எல்லோரும் பலகாலம் பழகியவர்கள் போல் கதைத்தோம். நாரதர் களத்தில் போல் அதிகம் பேசவில்லை இருந்தாலும் கருத்தில் நல்ல தெளிவும், நிஜத்தை கூறுவனவாகவும் இருந்தன. அவரது மனைவி, பிள்ளைகள் எல்லோரும் எங்களுடன் சகஜமாக ஒரு குடும்ப உறுப்பினருடன் பழகுவது போல மிகவும் நன்றாக பழகினார்கள். நல்ல அண்டர்ஸ்டாண்டிங் எல்லோரும். அவர்கள் எல்லோரையும் சந்தித்தது எங்கள் எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.அந்த மாலைச் சந்திப்பு பிரிய மனம் இல்லாது எல்லோரும் போக வெளிக்கிட்டுட்டும் நின்று கதைத்து விட்டுத் தான் சென்றோம்.மிகவும் இனிமையான ஒரு நிகழ்வு

.

ஆகா ஆகா.. எல்லாம் அருமையான கருத்துக்கள். நல்ல காலம்நாரதர் மாம்பழம் கொாண்டு போகலை.. போாயிருந்தால் இன்னும் நிறைய வந்திருக்கும். :P :lol:

ஏற்கனவே அறிமுகமான கள உறுப்பினார்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பு. அதில் முக்கிய விருந்தாளி யாழ்களத்திற்கும் முக்கியமானவர். முன்பு ஒருகாலம் அவருடன் கதைக்க பயமாக இருக்கும். அதற்கு காரணம் அவரின் கருத்துக்கள் தான். எப்போது எம்எஸ்என் கண்டாலும் எதாவது எழுதினீர்களா? இல்லாவிடின் எழுதிய விடயங்களுக்கு நீண்டதொரு விளக்கமும் தந்து மேலும் எழுத ஊக்கமளிக்கும் கலகத்தை நன்மையில் முடிக்கும் நாராதர் அண்ணாவை காணத்தான் போய் கொண்டிருந்தோம். சினேகிதியும் நானும் சிறு பேரூந்து பயணத்தின் பின் ரசிகையை சந்தித்து பின்னார் சந்திப்புக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்கு போனோம். சரியாக 2 மணி ஆனால் ஒருவரையும் காணவில்லை.. சினேகிதி பசியால் அழத் தொடங்கி விட்டா. இனியும் சாப்பாடு கொடுக்கவிட்டால் வீதியிலே இருந்து விடுவா போலிருந்தது. ஆகவே பக்கத்தில் இருக்கும் மக்டொனல்ஸ்க்குள் போக அருவியும் நம்முடன் சேர்ந்து கொண்டார். கொஞ்சமாக ஒடர் பண்ணி (பிறகு மற்றவர்களும் வர சாப்பிட வேண்டும் எல்லோ) சாப்பிட்டு விட்டு மற்றவர்களின் வருகைக்காக ரொன்ரோ கண்காட்சி சாலை பக்கமாக நடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்தின் பின் நாரதர் அண்ணா தனது பாரியாருடன் பிள்ளைகள் சகிதம் தரிசனம் தந்தார்.

இவரின் கருத்துக்களை பார்க்கும்போது எல்லாம் இவரை ஒரு கடினமானவர் என்று தான் நினைத்திருந்தேன். கதைத்து கொண்டிருக்கும்போது தான் இவரா இப்படியெல்லாம் கருத்து எழுதுவது என்று வியப்பு தான் மேலோங்கியது.

மீண்டும் மக்டொன்ல்ஸ் போய் சின்ன சாப்பாடுகளாக எடுத்து விட்டு கதைக்க தொடங்கினோம்.

ஐயா சாமி அங்கும் வந்து அரசியல் தான். பின்னார் கொஞ்சம் ஏசி கொஞ்சம் நாட்டு நடப்புகளை பற்றி கதைத்தோம்.

நாரதர் அண்ணாவின் குடும்பம் மிகவும் சந்தோசமாகவும் கலகலப்பாகவும் இருந்தார்கள். ஊருக்கு தான் உபதேசம் நமக்கு இல்லை என்பது போல் பலர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள் வையுங்கள் தமிழ் படிப்பியுங்கள் என்று மேடையில் முழங்குவார்கள். ஆனால் அவரிகளின் பிள்ளைகளுக்கு ஒழுங்கான பெயர் இருக்காது. ஆனால் நாரதர் அண்ணா தனது பிள்ளைகளுக்கு ஒழுங்கான அழகான தமிழ் மணம் வீசக்கூடிய பெயர்களை சூட்டியிருக்கின்றார். பிள்ளைகள் அதுவும் கடைசி சுட்டி அழகாக வணக்கம் வணக்கம் என்று சொல்லி தமிழிலே கதைத்து கொண்டிருந்தர்கள். மனைவி அழகாக சிரித்து கதைத்து கொண்டிருந்தரர்.

நம்மில் நிதர்சன் தான் உற்சாகம் கூடி ஒரே கதைத்து கொண்டிருந்தார். அத்துடன் ரசிகை கொண்டு வந்த எள்ளுச்சாம்பலையும் எல்லோரும் பதம் பார்த்தோம்.

இந்த முறை சினேகிதியின் சத்தம் கொஞ்சம் குறைவு தான். கொஞ்ச நேரம் நிதர்சனுடன் கடிபட்டு கொண்டு இருந்தார்.

அமைதியாக இருக்கும் அருவி எப்படி அரசியல் என்றாவுடன் வாய் மூடமால் கதைக்கின்றரோ தெரியலை?

இனி எங்கையாவது ரசிகையுடன் போவது என்றால் கட்டாயம் கணனியுடன் தான் போவது என்று முடிவு எடுத்தாச்சு. அப்படி போய் யாழிற்கு இணைப்பு கொடுத்து விட்டு தான் ஆளை கதைக்க விடவேணும் என்று தீர்மானம் செய்யப்பட்டிருக்கும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அடுத்த முறை யாரவது ரசிகையை சந்திக்க போனால் தயவு செய்து கணனியையும் கொண்டு போங்கள் என்று இப்பவே சொல்லிவிடுகின்றென்.

சந்தோசமாகவும் ஒரு நல்லதொரு அன்புக்குரிய குடும்பத்தை சந்தித்த சந்தோசத்துடன் எப்போது இனி பார்ப்போம்? என்றா ஏக்கத்துடனும் அவரவர் வழி திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

ஒண்று கூடலை ஒழுங்கு படுத்தியவர் யார் எண்டதை இதுவரை சஸ்பென்சாகவே வைத்து இருக்கிறியளே.....

அந்தாளை எதுக்கு எண்டு நீங்கள் கேக்க முன்னமே சொல்லீடுறன்.... லண்டன் காறர் செய்யாததை நீங்கள் செய்ததை பாராட்டு இரண்டு வசனம் எழுத்தான்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்,,,, யாழ் மெம்பெர்ஸ் ஒவ் கனடா காரர்களுக்கு வேலை வெட்டி இல்லையோ?? :evil: :evil: :evil:

அடுத்த ரேர்ன் யாருடையது??? இப்பவே சொல்லுங்கப்பா,, அடுத்த பகுதியை வாசிக்க ஆவலா இருக்கு.. :oops: அட இப்பவே சொன்னால்த்தானே நிதர்சன் ஒரு பக்கத்தாலையும், ரசிகை என்னொரு பக்கத்தாலையும், அடுத்தவர் சொருவி சா அருவி ஒரு பக்கத்தாலையும், ஏதோ சந்திரனுக்கு போய்ட்டு வந்த ஆக்கள் மாதிரி பீத்திக்க ரெடியாவினம்.... :evil: :evil: :evil: ( கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமை மாடு ஏறோப்பிளேன் ஓட்டுமாம்...) :evil: :oops:

ஓய்,,,, யாழ் மெம்பெர்ஸ் ஒவ் கனடா காரர்களுக்கு வேலை வெட்டி இல்லையோ?? :evil: :evil: :evil:

அடுத்த ரேர்ன் யாருடையது??? இப்பவே சொல்லுங்கப்பா,, அடுத்த பகுதியை வாசிக்க ஆவலா இருக்கு.. :oops: அட இப்பவே சொன்னால்த்தானே நிதர்சன் ஒரு பக்கத்தாலையும், ரசிகை என்னொரு பக்கத்தாலையும், அடுத்தவர் சொருவி சா அருவி ஒரு பக்கத்தாலையும், ஏதோ சந்திரனுக்கு போய்ட்டு வந்த ஆக்கள் மாதிரி பீத்திக்க ரெடியாவினம்.... :evil: :evil: :evil: ( கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமை மாடு ஏறோப்பிளேன் ஓட்டுமாம்...) :evil: :oops:

sinhalakesifj2.jpg

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு சின்னா!

உங்களின் படத்தையா போட்டிருக்கின்றீர்கள்? "தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை! தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை" என்று, அக்காளுக்கு, கட்டி வைக்கும்போது, இதைத் தான் சொல்கின்றார்கள் என்று தெரியாமல் ஏமாந்து போனமே! :oops: :oops: :oops:

ஆகா மீண்டும் ஓர் சந்திப்பா? சந்தோசமாக இருக்கு.

ஆமா படம் எடுக்கல்லையா இம்முறை? :roll: சோ கொஞ்சம் நம்ப முடியாமல் இருக்குதே.மக்டொனால்ட் படம் மட்டும் போட்டு இருக்கிறீங்க ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

கமரால பிலிம் ரோல் இல்லையாம் அதான்...

  • கருத்துக்கள உறவுகள்

நம்மன்ட யாழிற்கு வாற சிட்னி பெரிசும் அங்க தான் தமிழை வளர்த்து கொண்டு நிற்கிறார் முடிந்தால் அவரையும் படம் எடுங்கோ

:roll: :roll: :roll:

ஏம்பா கந்தப்புவை காட்டிக் கொடுக்கிறது நல்லாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா கந்தப்புவை காட்டிக் கொடுக்கிறது நல்லாயில்லை

யார் இப்ப சொன்னது கந்தப்புவென்று.......

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்,,,, யாழ் மெம்பெர்ஸ் ஒவ் கனடா காரர்களுக்கு வேலை வெட்டி இல்லையோ?? :evil:  :evil:  :evil:  

அடுத்த ரேர்ன் யாருடையது??? இப்பவே சொல்லுங்கப்பா,, அடுத்த பகுதியை வாசிக்க ஆவலா இருக்கு.. :oops: அட இப்பவே சொன்னால்த்தானே நிதர்சன் ஒரு பக்கத்தாலையும், ரசிகை என்னொரு பக்கத்தாலையும், அடுத்தவர் சொருவி சா அருவி ஒரு பக்கத்தாலையும், ஏதோ சந்திரனுக்கு போய்ட்டு வந்த ஆக்கள் மாதிரி பீத்திக்க ரெடியாவினம்.... :evil:  :evil:  :evil: ( கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமை மாடு ஏறோப்பிளேன் ஓட்டுமாம்...) :evil:  :oops:

டன்னுக்கு வேற இல்லப்பாருங்க,

எவன் எங்க எப்பிடி சந்திச்ச உமக்கென்னையா? வந்தமாக, படிச்சமா போனமான என்றில்லாமல், தொன தொனத்திட்டு! :evil: :evil: அடுத்த ரோன் உங்கள தான் எதிர்பார்கினமாம் போங்கவன்! போன உங்கடை சந்திப்பு பற்றி எழுதின குளிருமாக்கும் :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்பா கந்தப்புவை காட்டிக் கொடுக்கிறது நல்லாயில்லை

கந்தப்பு கனடாவில நிக்கிறார் என்று ஆதிவாசி சொல்லவே இல்ல! :( :arrow:

:lol::lol::lol::lol::D:lol:

picturethasan30014px0pb4.th.jpg

படத்தை முழுமையாக பார்க்க படத்தில் அழுத்தவும்-யாழ்பாடி

:D:lol::lol:-----------------------------------------------------

சந்திப்பை ஒருங்கமைதவர்களுக்கு நன்றிகள். நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.கனடேயத் தமிழரின் உபசரிப்புக்கும் 'தாராள' மனசுக்கும் நன்றி.தேவை இருக்கும் இடத்திற்கு உங்கள் உதவிகள் செல்லட்டும்.மனதில் இருக்கும் அன்பை முக மலர்வால்,கருதுக்களால், மனித நேயத்தால் தொடர்ந்து காட்டுங்கள் அது போதும்.தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் உங்கள் பாதையில் உறுதியுடன் முன்னேறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.