Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் படிப்பறிவற்ற மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது. யுனைட்டெட் நேஷன்ஸ் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பல ஆய்வில் பல முக்கிய காரணிகளை மையமாக கொண்டு துவங்கப்பட்டது, இதன் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது என் இந்த அமைப்பு தெரிவித்தது. இதில் படிப்பறிவில்லாத மக்கள் எந்த நாட்டில் அதிகமுள்ளனர் என்ற ஆய்வும் அடங்கும். உலகில் இந்தியாவில் தான் படிப்பறிவில்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர், அதாவது உலகெங்கிலும் இவ்வாறு படிப்பறிவின்றி வாழும் மக்களின் எண்ணிக்கை 287 மில்லியனாக உள்ளது இது உலக மக்கள் தொகையில் சுமார் 37 சதவீதம் என்று யுனெஸ்கோவின் எஜுக்கேஷன் ஃபார் ஆல் (இஎஃப்ஏ) குளோபல் மானிட்டரிங் தகவலறிக்கை தெரிவிக்கிறது. "2008 ஆம் ஆண்டில், ஈஎஃப்ஏ குளோபல் மானிட்டரிங் தகவலறிக்கை "அனைவருக்கும் கல்வி என்பதை சாதிக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்பியிருந்தது. 2015 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இத்தருணத்தில் அவ்விலக்கை எட்டுவது சாத்தியமன்று என்று அதே தகவலறிக்கை கூறுகிறது," என்று யுனைட்டெட் நேஷன்ஸ் எஜுக்கேஷனல், சயின்டிஃபிக் அண்ட் கல்ச்சுரல் ஆர்கனைஸேஷனின் (யுனெஸ்கோ) டைரக்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் ஐரினா பொக்கோவா, இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2014/01/31/india-has-the-highest-population-illiterate-adults-unesco-002063.html

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முட்டாள்களாக இருக்கும்வரைதான் காங்கிரஸ் போன்ற குடும்ப அரசியல் கட்சிகளால் ஆட்சி நடத்தம் முடியும். படித்துவிட்டாலோ, மேலைத்தேய நாடுகளில் நடப்பதுபோல தூக்கியெறிந்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன்!

 

சசி வர்ணம் சொல்லிட்டாங்க!  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு! :rolleyes:

பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரமுண்டு! :icon_idea:

யுனைட்டெட் நேஷன்ஸ் அமைப்பு அறிவைக் கணிப்பதற்கு எந்த வரைவிலக்கணத்தைக் கையாண்டு வருகிறது.?? :huh::lol:

படித்தும் படித்தும் படியாதொரை எப்பிடி கணக்கிடுவது? 

பாடசாலை படிப்பெல்லாம் பெரிய மேதைகளை உருவாக்க இல்லை. சாகும் வரை குழப்படி இல்லாமல் ஒரு பெட்டிக்குள் இருந்து செய்த வேலையை திருப்பி திருப்பி செய்ய பழக்குவது தான் இந்த காலத்து படிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரை எழுதவும், வாசிக்கவும் தெரிந்துவிட்டால் அதுதான் "படிப்பறிவு" என்று வரைவிலக்கணம் உள்ளதாக முன்பு வாசித்த ஞாபகம்.

இந்தக் கட்டுரையில் உள்ள 37% என்கிற கணக்கு பிழையல்லோ..?!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரை எழுதவும், வாசிக்கவும் தெரிந்துவிட்டால் அதுதான் "படிப்பறிவு" என்று வரைவிலக்கணம் உள்ளதாக முன்பு வாசித்த ஞாபகம்.

இந்தக் கட்டுரையில் உள்ள 37% என்கிற கணக்கு பிழையல்லோ..?!

 

இதென்ன படியாத ஆள் மாதிரிக் கேள்வி? பச்சைப் பிழை. ஏழு பில்லியன் மொத்த சனத்தொகையில் 0.3 பில்லியன் என்பது 37% அல்ல. நியூஸ் எழுதின ஆள் திருப்பி தரம் ஒண்டில இருந்து படிக்க ஆரம்பிக்க வேணும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன படியாத ஆள் மாதிரிக் கேள்வி? பச்சைப் பிழை. ஏழு பில்லியன் மொத்த சனத்தொகையில் 0.3 பில்லியன் என்பது 37% அல்ல. நியூஸ் எழுதின ஆள் திருப்பி தரம் ஒண்டில இருந்து படிக்க ஆரம்பிக்க வேணும்! :D

பிழை என்று தெரிந்தாலும் சும்மா அப்பிடி எழுதி விடுறதுதான்.. :D எல்லாத்துக்கும் மரியாதைதான் காரணம்.. மரியாதை. :lol:

படிப்பில்லாத ஒரு தலைவரைதான் இந்தியா கொண்டுவரவேண்டும் ஏனெனில் அவருக்குத்தான் படிப்பின் அருமை தெரியும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.