Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது ஆட்சியில் சமாதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்" சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி-

chandrika_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் - சந்திரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஒரே நேரத்தில் தாம் முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மத்தியஸ்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டுமென தாம் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் ஆரம்பித்து வைத்த வைத்தியசாலைகளில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போதிலும் தாம் சமாதான முனைப்புக்களை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்னதாகவும், அதன் பின்னரும் புலிகள் என் உயிரை காவு கொள்ள முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருண்ட சில தருணங்களை வாழ்க்கையில் கடந்துள்ளதாகவும், கல்வியும் மத நம்பிக்கையும் வாழ்க்கையை செழுமைபடுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஒர் தலைவர் தம்மை பற்றி மட்டுமே சந்தித்தால் அங்கு ஊழல் மோசடிகள் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'அதிகாரம் கடவுளின் பரிசு என ஆட்சியாளர் கருதி தான் நினைத்ததனை செய்கின்றார். தம்மையம் தமது குடும்பத்தையும் சுற்றி ஆட்சி அதிகாரத்தை வியாபிப்பது மிகவும் ஆபத்தானது' என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி-

தனது ஆட்சி காலத்தில் இராணுவ முனைப்புக்களை விட சமாதான வழிமுறைகளின் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளை அனுக முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

பெங்களுரில் வாழும் கலை சார்பில் இடம்பெற்ற 6வது பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

போர் காலத்தின் போது சமாதானமும் அதேநேரம் அபிவிருத்தி போர் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுவதை தாம் உறுதி செய்துக்கொண்டதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். 

எப்போது விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

தமது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், தாம் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலைகளை திறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஆட்சியில் உள்ளவர் அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102800/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான தேவதை..!

ஒற்றை கண் போன பின் சமாதான தேவதை ஆனவா!

  • கருத்துக்கள உறவுகள்

1994 நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று சனாதிபதியாக சந்திரிகா பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்ப பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முட்பட்டார்.

1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னாதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார். டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைப் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார். அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார். அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.
 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

மாமனும்  மருமகளும் சேர்ந்து செய்த அநியாயங்கள்

சோற்றுக்குள் மறைக்கக்கூடியவையல்ல........ :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.....,  ஓம் இவன்ர காலத்தில்தான் நவாலி தேவாலையப் படுகொலை நாகர்கோவில் பாடசாலை  மீதான படுகொலைகள் நடந்தது எங்களுக்கு தெரியும் இவர் எவ்வளவு சமாதான விரும்பி என்று  

நல்லூர் திருவிழாவில் சந்திரிக்கா காப்பு விற்றார்கள் .மக்களுக்கு யுத்தத்தின் அழிவு பற்றி தெரியும் எனவே சமாதானதை யார் முன்னெடுத்தாலும் ஆதரவு காட்டினார்கள் .

பேச்சுவார்த்தைகள் சீரியசாக நடக்கும் போது இந்திய பத்திரிகைள் சந்திரிகாவை கிண்டல் செய்தார்கள் .புலிகளின் சுயரூபம் இவருக்கு தெரியவில்லை என்று .

அதுவே நடந்தது யுத்த நிறுத்தம் முடித்த இரவே சிறிலங்கா கடற்படை மீது தாக்கி நாப்பதுபேர்கள் வரை இறந்தார்கள் .இரகசியமாக் செய்த சத்தியங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் வழக்கம் போல காற்றில் பறந்தது .

நீலனின் பொதி அது இருந்தாலே இப்போ நிம்மதியாக இருக்கலாம் .

சிங்களவனை  பழி வாங்கமட்டும் புறப்பட்டவர்களுக்கும் அதை ஆதரவழித்தவர்களுக்கும் மனித உயிரின் பெறுமதி பற்றி என்ன அக்கறை .

கடைசியில் எதுவுமில்லாமல் வெள்ளை கொடி பிடிக்கவேண்டிய நிலை .தமிழனும் நடுத்தெருவில் .

ஆனால் சிலர் இன்னமும் சவுண்டிற்கு குறைவில்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை நீங்கள் எழுதும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் .....
 
ஆடு நனையிது என்று ஓநாய் அழுத கதை போன்றது ....
 
தமிழர்கள் மேல் உங்களின் அக்கறை என்பதற்கு அப்பால் புலிகள்மேல் உள்ள காழ்புணர்வே மேலோங்கி கருத்தெழுதும் உங்களை களத்தில் உள்ள  அனைவருக்கும் தெரியும். 

தமிழருக்கு பாதுகாப்பு தேடவந்த சந்திரிக்க எங்கே இப்போது? அவவின் நிலை என்ன? அரசியல் அமைப்பு என்றால் என்ன என்று தெரியாமல், அது தீர்வாக்க இருந்திருக்கும், அதைவிட இது நல்ல தீர்வாக இருந்திருக்கும் என்று தன்னைத்தான் பண்டிதராக்கி என்ன பலன்?

  • கருத்துக்கள உறவுகள்

நீலனின் பொதி அது இருந்தாலே இப்போ நிம்மதியாக இருக்கலாம் .

அதை ஒருக்கால் விரிச்சு கொட்டுங்கோ பாப்பம். :D 60 வருடமாக தமிழர்கள் காணாத  தீர்வு பொதிகளா? இப்ப மகிந்தவும் ஒரு பொதியை உங்களுக்கு 13 - ஆக தரபோறாராம். ஐயோ ஐயோ  :D  :D
 
பேச்சுவார்த்தைகள் சீரியசாக நடக்கும் போது இந்திய பத்திரிகைள் சந்திரிகாவை கிண்டல் செய்தார்கள் .புலிகளின் சுயரூபம் இவருக்கு தெரியவில்லை என்று .

 இப்போ சம்பந்தரும் சுமந்திரனும் தடையாக உள்ளார்கள் போல. :huh:

முழு உலகமுமே தமிழருக்கு தீர்வு கொடுக்க சொல்லியுமே சிங்களவர்கள் எப்படி சுத்துமாத்து விடுகிறார்கள் என்பதை அறிந்து விட்டது. நீங்கள் இப்பவும் விரல் சூப்பியாக இருக்கிறீர்கள்.

Edited by nunavilan

நல்லூர் திருவிழாவில் சந்திரிக்கா காப்பு விற்றார்கள் .மக்களுக்கு யுத்தத்தின் அழிவு பற்றி தெரியும் எனவே சமாதானதை யார் முன்னெடுத்தாலும் ஆதரவு காட்டினார்கள் .

பேச்சுவார்த்தைகள் சீரியசாக நடக்கும் போது இந்திய பத்திரிகைள் சந்திரிகாவை கிண்டல் செய்தார்கள் .புலிகளின் சுயரூபம் இவருக்கு தெரியவில்லை என்று .

அதுவே நடந்தது யுத்த நிறுத்தம் முடித்த இரவே சிறிலங்கா கடற்படை மீது தாக்கி நாப்பதுபேர்கள் வரை இறந்தார்கள் .இரகசியமாக் செய்த சத்தியங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் வழக்கம் போல காற்றில் பறந்தது .

நீலனின் பொதி அது இருந்தாலே இப்போ நிம்மதியாக இருக்கலாம் .

சிங்களவனை பழி வாங்கமட்டும் புறப்பட்டவர்களுக்கும் அதை ஆதரவழித்தவர்களுக்கும் மனித உயிரின் பெறுமதி பற்றி என்ன அக்கறை .

கடைசியில் எதுவுமில்லாமல் வெள்ளை கொடி பிடிக்கவேண்டிய நிலை .தமிழனும் நடுத்தெருவில் .

ஆனால் சிலர் இன்னமும் சவுண்டிற்கு குறைவில்லை.

ஓம் ஓம். 300,000 தமிழரை கொன்றவர்கள் நல்லவர்கள். நம்புறம்.

இங்க கனடாவில நடுத்தெருவில் கிரிகெட், சொக்கர் பார்த்து நீங்கள் எவ்வளவு சிரமபடுகிறீர்கள் என்றும் தெரியும்.

ஈழமக்களுக்கா நீங்கள் ரூஜ் ஆறா நீலிகண்ணீர் வடிப்பது நிற்கவில்லை.

கடந்த ஐந்து வருடத்தில் நீங்கள் விடாத சவுண்ட் பொதிகளா?

ஏதாவது மக்களுக்கு புலியை திட்டுவதை விடுத்து செய்யமுடியுமா?

இதை நீங்கள் எழுதும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் .....
 
ஆடு நனையிது என்று ஓநாய் அழுத கதை போன்றது ....
 
தமிழர்கள் மேல் உங்களின் அக்கறை என்பதற்கு அப்பால் புலிகள்மேல் உள்ள காழ்புணர்வே மேலோங்கி கருத்தெழுதும் உங்களை களத்தில் உள்ள  அனைவருக்கும் தெரியும். 

தமிழனை அழித்ததில் சிறிலங்கா அரசிற்கு இருக்கும் பங்கு அளவிற்கு புலிகளுக்கும் இருக்கு என்று நான் நம்புகின்றேன் .

தமிழர்கள்  மேல் அக்கறை இருப்பதால் தான் புலிகளில் இந்த கோபம் .

ஆனால் 3 இலட்சம் பேரை கொன்ற சிங்களவன் மீது, ஒட்டு குழு மீது இவருக்கு கோபமே வராதாம்?

இவருக்கு இவரின் மீது தான் அக்கறை என்று எல்லோருக்கும் இங்கு தெரியும்.

Edited by விவசாயி விக்

  • கருத்துக்கள உறவுகள்

புளட் அழிக்காததையோ புலிகள் அழிச்சுப்போட்டினம்.புலிகளின் அழிவுக்கு புளட்டும் ஒரு காராணம்.நீங்கள் புளட்டில் சேர்ந்த நாள் ஒன்றில் இருந்தே புலி எதிர்ப்பு வாந்தியை உங்களுக்கு ஊட்டியுள்ளார்கள்.மற்றும்படி ஒரு அக்கறையுமில்லை ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுணனின் அம்மா.! குந்திதேவியா..? சந்திரிகாவா...??

வியாசரும், விசய் ரீவியும், கலைஞர் ரிவியும் எங்களைப் போட்டுக் குழப்போ குழப்பென்று குழப்புதுகள். :blink:

யாழில் பலரில் பிடித்த விடயமே இதுதான் .

அப்பா என்ன செய்கின்றார் என்று கேட்டால்

"அம்மா குளிக்கின்றா " என்பதுதான் .. :icon_mrgreen:

சிங்கள அரசுகள் செய்த ஒப்பந்தங்களும் அவை கிழித்தெறியப்பட்ட வரலாறுகளும் தெரிந்ததுதான் ,

ஆனால் 83 இனக்கலவரத்தின் பின் இந்தியா ஓரளவு நேரடியாக தலையிட்ட பின்

நடந்த ஒப்பந்தங்கள் எல்லாம் குழப்பியது புலிகள் தான் ,

இதை எந்த சர்வதேச நாடுகளிலும் போய்கேட்டுப்பார்க்கலாம் .

புலம் பெயர்ந்தும் பங்கருக்குள் இருந்தால் "அம்மா குளிக்கிறா " பதில் தான் வரும் .

அம்மா குளிக்கும் போது அப்பா என்ன செய்கிறார்?? :icon_mrgreen:  :icon_mrgreen:

யாழில் பலரில் பிடித்த விடயமே இதுதான் .

அப்பா என்ன செய்கின்றார் என்று கேட்டால்

"அம்மா குளிக்கின்றா " என்பதுதான் .. :icon_mrgreen:

சிங்கள அரசுகள் செய்த ஒப்பந்தங்களும் அவை கிழித்தெறியப்பட்ட வரலாறுகளும் தெரிந்ததுதான் ,

ஆனால் 83 இனக்கலவரத்தின் பின் இந்தியா ஓரளவு நேரடியாக தலையிட்ட பின்

நடந்த ஒப்பந்தங்கள் எல்லாம் குழப்பியது புலிகள் தான் ,

இதை எந்த சர்வதேச நாடுகளிலும் போய்கேட்டுப்பார்க்கலாம் .

புலம் பெயர்ந்தும் பங்கருக்குள் இருந்தால் "அம்மா குளிக்கிறா " பதில் தான் வரும் .

அரசியலை கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதுங்கள். யார் யாருடன் 1983 பிறகு ஒப்பந்தம் செய்தார்கள்? அவை எத்தனை? JVP எதற்கு வழக்கு போட்டது? இதில் சர்வதேசம் எங்கே வந்தது?  பகவதி கமிசன் ஏன் விசாரணையை இடையில் நிறுத்தியது. SLMM  எண் தாங்கள் போனார் என்று சொல்லும் அறிக்கை இருந்தால் அதை பதிய முடியுமா?

"அப்பா எங்கே?" என்றால் "அம்மா குளிகிறா" என்றால் பரவாயில்லை. ஆனால் "அப்பா நெல்லு மூட்டை சக்குக்குள் இல்லை" என்பது அப்பவித்தனமல்ல,  உண்மையான காட்டிக்கொடுப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி அடுத்த ரவுண்டுக்கு இப்பவே கதை வசனம் எழுதிறா. இப்பவே காட்சிகள் கண்ணக் கட்டுகின்றன. என்ன மாமா ரத்வத்தை தான் கூட இல்லை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை யாரும் வாரிசை களம் இறக்க தளம் பார்க்கிறா போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சிறீலங்கா அரசும், அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்ப் புலி எதிர்ப்புக் குழுக்களும், ஒட்டுண்ணிகளும். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு சிறீலங்காவில் நடக்கும் கொலை, கொள்ளை, கொடுமைகளைச் சுமத்துவதற்கு புலிகள் இல்லையே!! :o

முள்ளிவாய்காலுக்கு முதல்தான் என்ன நடந்தது என்று தெரியாது என்று நினைத்தேன் அதற்கு பிறகு நடப்பதும் தெரியாது போல இருக்கு . :icon_mrgreen:

கடைசி தும்பளயானின் படங்களையாவது பார்த்திருக்கலாம் . :icon_idea:

சனம் நிம்மதியாக இருப்பது புலிகளுக்கு  பிடிக்காது பிறகு பிழைப்பிற்கு எங்கு போவது . :D

தும்பளையானின் படத்தில் எந்த இடத்தில் மக்கள் ந்ம்பதியாக இருக்கிறார்கள் என்று எழுதிப் போட்டிருக்கு. மக்கள் இல்லாத சீன ரோட்டுக்களைதாம் நாம் ஏற்கவே மியன்மார் படங்களில் பார்த்தோமே. வறசனம் தானே சொல்லுது ஆமீ போற பாதைகளை செப்பனிட்டுவிட்டு மக்கள் பயணிக்கும் பாதைகள் குண்டும், குழியாக இருக்கு என்று. மன்னால் பஸ்கதை திரியைத்தன்னும் வாசீச்சிருக்கலாம். நடேஸ்வராக்கல்லூரியால் கலைபட்டவைவை நிம்மதியாய்த்தானே இனி இருக்கலாம். ஆமி தனக்கு ரோட்டு போட்டு ந்மிமத்தியாக தோட்டம் செய்து மலிவாக சனத்துக்கு விற்கிறது. இதை பற்றித்தான் அருச்சுன் சொல்கிறார். .எல்லோரும் மலிவாக காய்பிஞ்சு வாங்கி சந்தோசமாக சமைத்து சாப்பிடுகிறார்களாம்.  

ஆயிரம் எழுத்துக்கள் சொல்வதை ஒரு படம் சொல்லும் . :icon_mrgreen: .

KFC யில் இருந்து காய்பிஞ்சா சாப்பிடுகின்றார்கள் . :D

வீரத்திற்கும் ஜில்லாவிற்கும் பால் ஊத்தினது மியான் மாரிலா. :icon_idea:

 போராட்டம் நடக்கும் போதுதான் கட்டு கட்டா அள்ளி விட்டீர்கள் ,இனி உந்த பருப்பு வேகாது  . :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்காலுக்கு முதல்தான் என்ன நடந்தது என்று தெரியாது என்று நினைத்தேன் அதற்கு பிறகு நடப்பதும் தெரியாது போல இருக்கு . :icon_mrgreen:

கடைசி தும்பளயானின் படங்களையாவது பார்த்திருக்கலாம் . :icon_idea:

சனம் நிம்மதியாக இருப்பது புலிகளுக்கு  பிடிக்காது பிறகு பிழைப்பிற்கு எங்கு போவது . :D

உலகின் சகல அசைவுகளையும் தெரிந்த நீங்கள்!!!! முள்ளிவாய்க்கால் முடிவின் பின் அங்கே நடக்கும் பகிரங்கமான சிங்கள குடியேற்றங்களையும்.....பல இராணுவ ஆக்கிரமிப்புகளையும் தெரியாமல் இருக்க என்ன  திரை உங்களைப்போன்றவர்களை மறைக்கின்றதோ தெரியவில்லை? :lol:  :lol:  :lol:
உங்களைப்போன்றவர்கள் நாளைக்கு கிடைக்கிற பிலாக்காயை விட இண்டைக்கு கிடைக்கிற கிலாக்காயே மேல்....எண்ட சுயநல புத்தியுள்ளவர்கள். :icon_idea:
 
சர்வதேசமே தமிழீழத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன எனும்போது...இவர்களுக்கு மட்டும் சகலதும் சொர்க்கபுரியாக தெரிகின்றது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.