Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் என் குழந்தைகளுக்குச் சொல்லும் சிறுவர் கதைகள்: நிழலி

Featured Replies

இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான்.

 

இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள்  எல்லாம் மறந்து விட்டன. அதுக்காக அப்பப்ப புதுக்கதைகளை இயற்றியோ அல்லது ஏற்கனவே கேட்ட கதைகளுக்கு புது விடயங்களை புகுத்தியோ கதை சொல்வது வழக்கம்.

 

அப்படிச் சொல்லும் சில கதைகளை இங்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன். இவை just சிறுவர் கதைகள் - இதில் எல்லாம் லொஜிக் பார்க்கக் கூடாது.  'அப்பாதான் பெரியவர்' என்ற அரசியலும் அங்கங்க இருக்கும் - பெண்ணிலைவாதிகள் கோபிக்க கூடாது. அத்துடன் நிறைய ஆங்கிலச் சொற்களும் வரலாம் - தனித் தமிழ் அபிமானிகள் மூஞ்சியை சுளிக்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டன்.

 

இனிக் கதைகள்:

 

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

1. நாய்க்குட்டியும் சீகல் பறவையும்:

 

ஒரு ஊரில ஒரு வீட்டில இரண்டு பிள்ளைகள் இருந்திச்சினம். ஒரு அண்ணண், ஒரு தங்கச்சி. . அவர்கள் இரண்டு பேரும் ஒரு நல்ல வடியான குட்டி நாய்க்குட்டியை வளர்த்திச்சினம். எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கின்ற  குட்டி நாய்க்குட்டியை விட வடிவான நாய்க்குட்டி அது.

 

அந்த ஊரில இல் ஒரு Thief வும் இருந்தார். இந்த நாய்க்குட்டியை எப்படியாவது களவெடுத்து ஆருக்காவது வித்துப் போட்டு நல்ல pepperoni pizza வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று plan போட்டு இருந்தார்.

 

ஒரு நாள் இந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் அப்பாவுக்கு பக்கத்தில அப்பாவை கட்டிப் பிடிச்சுக் கொண்டு நல்லா இரவு நித்தா கொள்ளும் போது இந்த thief சத்தம் போடாமல் வந்து ஒரு பெரிய bag ஒன்றால நாய்க்குட்டியை சுத்திக் கொண்டு ஓடிப் போயிற்றார். நாய்க்குட்டியும் நல்லா நித்திரை கொண்டு கொண்டு இருந்ததால கத்தேல..

 

அடுத்த நாள் காலம தான் நாய்க் குட்டி எழும்பிப் பார்த்தது. ஐயோ என் Friends வீடு இது இல்ல, அவர்களையும் காணவில்லை....என்று அழத் தொடங்கி விட்டது. அதே மாதிரி விடிய எழும்பி நாய்க்குட்டியைத் தேடிப் பார்த்து விட்டு  அண்ணணும் தங்கச்சியும் காணவில்லை என்று அழுதிச்சினம்.

 

இப்படி இருக்கேக்கு, அந்த நாய்க் குட்டி ஒரு மரத்துக்கு கீழ படுத்து அழு அழு என்று அழுதுகொண்டு இருந்தது. அப்ப அந்த மரத்துக்கு மேல ஒரு seagull இருந்தது. அது ஏன் இந்த நாய்க்குட்டி அழுகுது என்று கீழ வந்து பார்த்து  'ஏன் பப்பி அழுகிறாய்' என்று கேட்டிச்சு. அதுக்கு அந்த நாய்க் குட்டி 'என்னை யாரோ இங்க வந்து போட்டிட்டினம்...எனக்கு திரும்பி வீட்ட போகத் தெரியாது..எனக்கு என் Friends வீட்ட போகவேண்டும்' என்று சொல்லி இன்னும் கூட அழுதுச்சு.

 

Seagull லுக்கு என்றால் நாயைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. அது அச்சா சீகல். 'சரி அழாத பப்பி உனக்கு நான் ஹெல்ப் பண்றன்' என்று சொல்லி, "உன்னை மாதிரி உன் Friends சும் அழுதுகொண்டு இருப்பினம்... நான் போய் ஒவ்வொரு வீட்டாப் பார்த்து விட்டு வந்து கண்டு பிடிச்சு உன்னையும் கூட்டிக் கொண்டு போறன்'  என்று பறந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் எட்டிப் பார்துச்சு.

 

ஆனால் ஒரு வீட்டிலும் அதால கண்டு பிடிக்க ஏலாமல் இருந்துச்சுது.

 

கடைசியாக tired ஆகி, ஒரு வீட்டு வாசலில போய் நிற்கேக்க அங்க இரண்டு சின்னப் பிள்ளைகள் நாய்க்குட்டியைக் காணேல என்று lot of அழுது கொண்டு இருந்திச்சினம். அவர்களைப் பார்த்து 'ஓ இவையள் தான் பப்பியின் Friends என்று கண்டு பிடிச்சு வீட்டு address சை வாசிச்சுக் கொண்டு எழும்பி பறந்து நாய்குட்டியிடம் போனது.

 

'பப்பி நான் உன் ப்ரெண்ட்ஸ் வீட்டை கண்டு பிடிச்சுட்டன் இரவைக்கு யாருக்கும் தெரியாமல் local road டால கூட்டிக் கொண்டு போறன் என்று சொன்னது, பப்பியும் ஓகே என்று சொல்லி அழுறதை நிப்பாட்டிச்சுது.

 

இரவு வந்ததும், Seagull தன் ஒரு செட்டையை பப்பியை பிடிக்கச் சொல்லிப் போட்டு, Slow ஆக நடந்து நடந்து அதன் Friends ட வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிச்சு. நாய்க்குட்டியும் Thanks சொல்லிச்சுது.

 

பிறகு, விடிய அண்ணாவும் தங்கச்சியும் எழும்பி பல்லுத் தீட்ட போகும் போது  அவையள்ட நாய்க்குட்டியின் சத்தம் கேட்க.. ஹையா நாய்க்குட்டி வந்துட்டுது என்று துள்ளிக் கொண்டு போய் பார்த்திச்சினம். அங்க அவர்களின் நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு நின்றிச்சு. இரண்டு பேருக்கும் நல்ல சந்தோசம். அதுக்கு பிறகு நாய்க்குட்டியோட சந்தோசமாக life ல இருந்திச்சினம்.

 

----------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.
  • தொடங்கியவர்

2. பனிமனிதனும் பிள்ளைகளும்

 

ஒரு ஊரில அண்ணாவும் தங்கச்சியும் இருந்திச்சினமாம். அவர்கள் ஒரு நாள் நல்லா பனி கொட்டி முடிஞ்சு நல்லா வெளிச்சம் வந்த பிறகு வெளியில முற்றத்தில போய் ஒரு பெரிய snow man  செய்திச்சினம். அண்ணாவுக்கு நல்லா Craft செய்யத் தெரியும் என்றபடியால வடிவான ஒரு snow man மனிதனைச் செய்திச்சினம். அவர்ட தங்கச்சியும் நல்லா உதவி செய்தவா.  அவா அச்சாப் பிள்ளைதானே...அதான் குழப்படி செய்யாமல் உதவி செய்தவா.

 

கொஞ்ச நேரத்தால snow man பக்கத்தில் நின்று, அந்த தங்கச்சி குதிச்சு குதிச்ச் விளையாடத் தொடங்கினார். அப்ப 'கவனம்  careful லா விளையாட வேண்டும்' என்று ஒரு குரல் கேட்டிச்சாம். அந்த தங்கச்சியும், அண்ணாவா தன்னை careful ஆக விளையாடச் சொன்னவர் என்று பார்த்துட்டு "ok அண்ணா "  என்று சொல்லிப் போட்டு திருப்பியும் குதிச்சு குதிச்சு விளையாடேக்கு திருப்பியும் "கவனம்  careful லா விளையாட வேண்டும்" என்ற குரல் கேட்டிச்சாம். இது அண்ணாவோட குரல் இல்லையே என்று அந்த தங்கச்சி சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு இருக்கேக்கு அண்ணாவும் தனக்கும் ஒரு குரல் கேட்டது என்று யார்ட குரல் என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு அவரும் தேடிப் பார்த்தார்.

 

அப்ப, 'நான் தான் உங்களை கவனமாக விளையாடச் சொன்னனான்' என்று திருப்பியும் குரல் கேட்டிச்சாம்.

 

"யாராது" என்று பார்க்கேக்கு அந்த snow man தான் ஸ்மைல் பண்ணிக் கொண்டு இருந்தாராம்.

 

"ஓ நீங்களா அது...நீங்கள் எப்படி talk பண்ணீறீங்க" என்று இரண்டு பேரும் கேட்டிச்சினம்.

 

"நான் அச்சா பிள்ளைகளோட கதைக்கிறனான்.." என்று snow man சொன்னாராம். அதோட, "உங்களோட எனக்கும் விளையாட விருப்பமாக இருக்கு" என்று சொல்லி அவரும் lot of பாட்டெல்லாம் படிச்சுக் காட்டினாராம். ஆனால் தான் இப்படி கதைச்சு விளையாடுறதை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சொன்னவராம்.

 

இரண்டு பிள்ளைகளும் யாருக்கும் சொல்லாம ஒவ்வொரு நாளும் ஸ்கூலால வந்து home work எல்லாம் செய்து முடிச்சுட்டு நல்ல பிள்ளைகளாக வெளியில வந்து Snow man னோட விளையாடுவினமாம். அவரும் நல்லா பாடி பாடி விளையாடுவாராம். தங்கச்சிக்கு என்றால் தன்ர ப்ரண்ட்ஸ்சுக்கு சொல்ல வேண்டும் என்று ஒரே ஆசை. ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று சொன்ன படியால குட் கேர்ள் ஆக ஒருத்தருக்கும் சொல்லாம இருந்தாவாம்.

 

இப்படி இருக்கேக்க.. கொஞ்சம் கொஞ்சமாக வின்ரர் முடிஞ்சு கொண்டு வந்ததாம்.

 

வின்ரர் முடிஞ்சா என்ன வரும்? ஸப்ரிங் வரும். கொஞ்சம் கொஞ்சமாக hot டும் வரத் தொடங்கிச்சாம். அப்ப, அடுத்த நாள் பின்னேரம் வெளியில போய் Snow man னைப் பார்க்கேக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக melt ஆகத் தொடங்கிட்டாம்.

 

இரண்டு பேருக்கு ஒரே கவலை. இனி அவர் கரைஞ்சு போய்விடுவாரே என்று சொல்லி அழத் தொடங்கிட்டினமாம்.

 

அப்ப melt ஆகத் தொடங்கிக் கொண்டு இருந்த Snow man "இரண்டு பேரும் அழக் கூடாது. Hot வந்தால் நான் அப்படியே water ஆகி போய்விடுவன். பிறகு அடுத்த வின்ரரில் தான் திரும்பி வருவன். நீங்கள் இரண்டு பேரும் இப்ப இருக்கின்ற மாதிரி very good kids ஆக இருந்தால் அடுத்த வின்ரருக்கு திரும்பி வந்து உங்களோட விளையாடுவன்" என்று சொல்லி full ஆக கரைஞ்சு போயிட்டாராம்.

 

அந்தப் பிள்ளைகளும் naughty வேலையெல்லாம் செய்யாமல், home work எல்லாம் செய்து, bad words ஒன்றும் சொல்லாம நல்ல பிள்ளைகளாக இருந்து அடுத்த வின்ரருக்காக wait பண்ணினமாம்.

 

--------------------

  • கருத்துக்கள உறவுகள்

இது பிள்ளைகளை ஏமாத்தி வீட்டுப்பாடங்கள் செய்ய வைக்கிற கதை.. :D

  • தொடங்கியவர்

நல்ல விடயம்.. இதை அப்பிடியே தொடருங்கள்.. மற்றவர்களும் படித்து வீட்டில் ஒப்பேற்றலாம்.. :icon_idea:

 

 

உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு சொன்னீர்களா...

 

நிழலி அண்ணா கொப்பி றைட்ஸ் உரிமையை கெததியா எடுத்திடுங்கோ :lol: ......இன்று பலர் வீட்டில் இந்த கதைதான் பறக்கப்போகிறது - ஹாஹாஹா

 

யாழ் உறுப்பினர்களுக்கு இலவசம்..

 

நான் சுட்டுட்டன். எனக்கு அடுத்த வருடம் உபயோகப்படும்..!

 

பிள்ளைக்கா அல்லது பேரன் பேத்திக்கா? :D

 

நவீன  சிறுவர் கதை நல்லாயிருக்கு ... கொடுத்து வைச்ச குழந்தைகள் .எனக்கு.  tired..........அம் மா வோடு போய் படு என்று சொல்லாத  அப்பா ..... :D

 

எனக்கு இரண்டு பேரில் ஒருவராவது வந்து என்னுடன் படுக்க வேண்டும். கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு படுக்காமல் விட்டால் வெறுமையாக இருக்கும்.

 

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி . பிள்ளைகளுடன் தொடர்பாடல் என்பது முக்கியம் . எங்களுக்கு சிறுவயதில் அம்மாச்சி அப்பாச்சி இருந்ததால் நாங்கள் இன்று எமது வாழ்வில் நேர்மையாக நடக்கின்றோம் . வருங்காலத்தையும் அவர்களுக்கு புரிந்த மொழியில் இப்படியான கதைகளால் செம்மையாக முடியும் .பொதுவாக அப்பாதான் குடும்பங்களில் கதைசொல்லியாக இருப்பார் . எனக்கு அப்பாச்சி தான் கதைசொல்லி .

 

எனக்கு சின்ன வயதில் அம்மா கதைகள் சொல்லி ஆரம்பித்தார். 4 வயதில் குருநாகல் என்ற ஊரிற்கு அப்பாவுக்கு மாற்றலாகியதால் நாமும் போனோம். எமக்குத் தந்த quarters இருந்த அதே வளவுக்குள் தான் குருநாகல் பொது நூலகமும். அங்கு நிறைய தமிழ் சிறுவர் கதைப் புத்தகங்கள் அப்ப இருந்திச்சு. பாலமித்திரா, அம்புலிமாமா, ரத்னபாலா என்று நிறைய. அதோட மாஸ்ரர் சிவலிங்கம் சிந்தாமணிப் பேப்பரி சிறுவர் பக்கத்தில் எழுதிக் கொண்டு வந்த கதைகள் வேறு.  கதைகள் கதைகள் கதைகள் என்று ஒரே கதைகள்.

 

எப்பவும் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது அவர்களின் மொழியை அல்லது அவர்களுக்கான மொழியில் தான் கதை சொல்ல வேண்டும். அடிக்கடி இந்த விடயத்தில் தடுமாறிப் போய்விடுவேன்.

 

தொடர்ந்து எழுதுங்கள். இக்கதையினைதான் நேற்று இரவு என்னுடைய பிள்ளைக்கு சொன்னேன்.

 

அவுஸ் வந்தால் ஒரு நேரச் சாப்பாடு கூப்பிட்டுத் தர வேண்டும்...

 

 

சிறுவர்கள் கதைகள் அவர்களது எண்ணங்ளையும் ஆற்றலையும் வளப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நிழலி உங்களைப்போல நானும் பிள்ளைகள் பாலர்பாடசாலை போகத் தொடங்கும் போது இப்படி கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதுபோன்ற கதைகள் இல்லை. நீதிக்கதைகள் 200வரையில் பிரதியெடுத்து வைத்து சொல்லுவேன்.

 

9வயதில் மகள் தானாக டொச்மொழிப்பாடத்திற்கான 4கதைகள் எழுதியிருந்தாள். டொச் ஆசிரியை பெற்றோர் சந்திப்பில் அதுபற்றி சொல்லி மற்றைய பெற்றோரையும் கதைகள் சொல்லுமாறும் பிள்ளைகளின் மொழியாற்றலையும் மேம்படுத்தும் எனக்கூறி மகளுக்கு தனது சார்பில் பரிசிலும் வழங்கியிருந்தா. அந்தக்கதைகளை வெப்சைற்றிலும் போட்டிருந்தேன். சேவர் அழிந்த போது அதுவும் இல்லாது போய்விட்டது.பழைய சீடிகளில் தேடுகிறேன். கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

 

இயன்றவரை பிள்ளைகளுக்கு சிறுவயதில் கதைகள் சொல்லிக்கொடுத்தல்  குழந்தைப்பாடல்கள் சொல்லிக்கொடுத்தல் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் வல்லமையை கொடுக்கும். 12வயதின் பின்னர் எங்களுடைய கதைகளைக் கேட்கும் அளவு பிள்ளைகளுக்கு நேரம் வராது. படிப்புகள் அதிகரிக்க எங்களோடு மினக்கெடும் நேரமே குறைந்துவிடும். 
 
12வயது வரையும் இயன்றவரை பெற்றோர்கள் உணவூட்டுவது வரை இத்தகைய கதைகள் சொல்லுவதை வரை பிள்ளைகளுடன் அதிகம் மினக்கெடுவது நல்லம். ஆனால் இப்போது 6வயதிலேயே ரியூசனுக்கு அனுப்பியே தாய்மொழியைக்கூட கற்பிக்க தொடங்கியுள்ள அவசரமான உலகமாகீட்டுது. பிள்ளைகளுடனான நெருக்கத்தையும் இத்தகைய கதை சொல்லல் ஏற்படுத்தும்.

 

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பொதுவாக நான் நீதிக் கதைகள் என்று அச்சாகி வரும் கதைகளைச் சொல்ல விரும்புவதில்லை. பிள்ளைகள் நாளை பார்க்கப் போகும் யதார்த்ததுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமிருக்காது என்பதால் கூடியவரைக்கும் தவிர்த்து விடுவேன். அத்துடன் நான் சொல்லும் கதைகளிலும் தியாகம், விட்டுக் கொடுத்து விட்டு வெறுமையாக நிற்பது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவேன்.

உங்கள் கதைசொல்லும் விதமானது நல்ல உத்தி. எனினும் இவை எழுத்து மூலமும் பிரதிகளாக வருவது எதிர்காலத்தில் இத்தகைய கதைகளை பிள்ளைகளுக்கு கொடுக்க ஆதரவாக அமையும். 

 

சிறுவயதில் பிள்ளைகளுக்கு மிருகங்களை வைத்தே கதைகள் புனையப்படுகிறது. அந்த வகையில் பிள்ளைகள் மிருகங்களை பெரியவர்கள் நாங்கள் அன்பு செலுத்தாமைபோல பிள்ளைகள் தவிர்க்கமாட்டார்கள். எல்லா மொழிகளிலும் வரும் சிறுவர் கதைகள் பெரும்பாலும் நாங்கள் தமிழில் கொண்டுள்ள கதைகளை ஒத்தவையே. இவற்றிலும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகள் இருக்கிறது. அத்தகைய கதைகளை சில மாற்றங்களோடு பிள்ளைகளை சென்றடைய வைக்கலாம். 

 

மகன் 4வயதாக இருக்கும் போது முருகன் பிள்ளையார் மாம்பழ கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். முருகனுக்கு பழம் கிடைக்காதது ஏன் என சொல்லிக் கொண்டு வரும் போது மகன் சொன்னான். தனக்குத் தெரியும் ஏன் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லையென. காரணம் கேட்ட எனக்கு சொன்னான். முருகன் பாக்கிங் கிடைக்காமல் தான் தாமதமாகியிருப்பார் அதாலைதான் பழம் கிடைக்கேல்லயென.
 
இப்படி பல கதைகள் சொல்லிய போத பல்வேறுபட்ட சுவாரசியமான விடயங்களை பிள்ளைகள் தங்கள் கற்பனையில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது பெரியவர்கள் கற்பனைகளைக்கூட விஞ்ஞான ரீதியாக சிந்திக்கிறார்கள். சிறுவயதில் சொல்லப்பட்ட காரணமற்ற தடைகளைக்கூட இப்போது தாங்கள் தெளிவடைந்து விளக்கும் நிலமையில் உள்ளார்கள். 
 
பெற்றோர்கள் பிள்ளைகளின் சிந்தனையை வளர்க்க சிறுவயது முதலே நேரத்தை ஒதுக்கி பிள்ளைகளுடன் மினகெட வேணும்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள், நிழலி!

 

எப்ப பாத்தாலும், இந்தத் திரியுக்குள்ளை, நான் வாற நேரம் பாத்துப், 'பச்சை' கையை விரிக்குது! :lol:

நீங்கள் லேட்டா வாறபடியா பச்சை காலாவதியாகிவிடுகிறதே !!!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.