Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தவறு; அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

Featured Replies

ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது போன்றவர்களை விடுதலை செய்தால்,  தவறான தகவலை அனுப்புவதாக அமையும்” என்று கூறியுள்ளார்.

மேலும் விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு போன்றவற்றையே அரசியலாக்க விரும்புவதாகவும், மதரீதியான அரசியலை செய்ய விரும்ப மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
http://www.dailythanthi.com/2014-02-21-Kejriwal-criticises-TN-decision-to-release-Rajiv-Gandhi-killers

இவர் கட்சி தேர்தலில் நிற்பது தமிழ் நாட்டில் இல்லை அதற்கேற்ற அரசியல் தான் அவர் செய்வார் .

திருமுருகன் அரசியல் செய்ய போவது  தமிழ் நாட்டில் .

  • தொடங்கியவர்

இவர் காங்கிரசின் ஆள் என்று அப்பவே சொன்னம்ல... :)

இவர் காங்கிரசின் ஆளா இல்லையா என இன்னும் தெரியவில்லை.

ஆனால் தமிழர்களுக்கு ஆதரவானவராக இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இதுவரைக்கும் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கை பற்றி இவர் விளக்கவில்லை. அதே நேரம் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்காதவர்கள் ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்றில்லை.

பா.ஜ.க வும் தான் 7 பேரின் விடுதலையை எதிர்க்கிறது. தமிழக பா.ஜ.க மட்டும் ஆதரிக்கிறது போலிருக்கு. அதுவும் தேர்தலுக்காக.

இவர் கட்சி தேர்தலில் நிற்பது தமிழ் நாட்டில் இல்லை அதற்கேற்ற அரசியல் தான் அவர் செய்வார் .

திருமுருகன் அரசியல் செய்ய போவது  தமிழ் நாட்டில் .

தமிழ் நாட்டிலும் 15 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்கள்.

திருமுருகன் காந்தி என்ன அரசியல் செய்கிறார்? அவர் எமக்காக குரல் கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்  பற்றி 

நல்லவிதமாக பேசி  வருகிறார்

இது போதும் எமக்கு

தூற்ற.............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர் காங்கிரசின் ஆளா இல்லையா என இன்னும் தெரியவில்லை.

ஆனால் தமிழர்களுக்கு ஆதரவானவராக இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இதுவரைக்கும் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கை பற்றி இவர் விளக்கவில்லை. அதே நேரம் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்காதவர்கள் ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்றில்லை.

பா.ஜ.க வும் தான் 7 பேரின் விடுதலையை எதிர்க்கிறது. தமிழக பா.ஜ.க மட்டும் ஆதரிக்கிறது போலிருக்கு. அதுவும் தேர்தலுக்காக.

டெல்லி முன்னாள்... ஒரு மாத முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரசின் ஆள்.

பா.ஜ.க. வுக்கு கிடைக்க இருக்கும் வாக்குகளை பிரிக்க... காங்கிரசால், களமிறக்கப் பட்டவர் என நினைக்கின்றேன்.

இது வரை... மோடி, இவர்களின் விடுதலையைப் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்க இல்லை என்று நினைக்கின்றேன்.

வைகோவும் அதே... கூட்டணியில், இருப்பதால்... வைகோவின் எண்ணமே... இந்திய‌ பா.ஜ.க.வின் கருத்தாக இருக்கும், என்பது வெள்ளிடை மலை. :D

7 பேர் விடுதலை: பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு, தமிழக பா.ஜ. ஆதரவு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136373

டெல்லி தேர்தலில் யாருமே தனிப் பெரும்பான்மை பெறவில்லை. பா.ஜ.க + கூட்டணி 32 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றியது. சுயேட்சையாக போட்டியிட்ட ஒருவர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார். 36 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியமைக்க முடியும். பா.ஜ.க கூட்டணி வைத்து ஆட்சியமைக்க மறுத்தது. ஆம் ஆத்மி கட்சியும் முதலில் மறுத்தது. அவ்வாறான நிலையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் பின்னர் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது.

இதை வைத்து கேஜ்ரிவால் காங்கிரசின் ஆள் என கூற முடியாது. அது பா.ஜ.க வினர் பரப்பிய வதந்தியாக கூட இருக்கலாம்.

அதற்காக காங்கிரசின் ஆளாக இருக்க மாட்டார் எனவும் கூற முடியாது. காங்கிரசின் ஆளா இல்லையா என்பது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் விடுதலை: பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு, தமிழக பா.ஜ. ஆதரவு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136373

துளசி, நீங்கள் தந்த இணைப்பில்... பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்த கருத்தை.. பா.ஜ.க.வின் முடிவாக கருத்தாக கருத முடியாது.

மூத்த தலைவர்கள், தாங்களும்... கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக, இத்துப் போன கருத்துக்களை... தெரிவித்துக் கொண்டிருப்பார்கள். :D 

மோடியின் கருத்தைத்தான்... பா.ஜ.க.வின் தலைமையின் கருத்தாக நாங்கள் பார்க்க வேண்டும். :)

இவர் காங்கிரசின் ஆளா இல்லையா என இன்னும் தெரியவில்லை.

ஆனால் தமிழர்களுக்கு ஆதரவானவராக இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இதுவரைக்கும் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கை பற்றி இவர் விளக்கவில்லை. அதே நேரம் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்காதவர்கள் ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்றில்லை.

பா.ஜ.க வும் தான் 7 பேரின் விடுதலையை எதிர்க்கிறது. தமிழக பா.ஜ.க மட்டும் ஆதரிக்கிறது போலிருக்கு. அதுவும் தேர்தலுக்காக.

தமிழ் நாட்டிலும் 15 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்கள்.

திருமுருகன் காந்தி என்ன அரசியல் செய்கிறார்? அவர் எமக்காக குரல் கொடுக்கிறார்.

இப்ப தானே தவழ தொடங்கியிருகின்றீர்கள் :icon_mrgreen: நடக்க தொடங்க விளங்கும் .

அவரும் பா.ஜ.க தான். அத்துடன் அவர் கருத்தை ஏனைய மூத்த பா.ஜ.க தலைவர்களும் ஆதரிப்பதாக உள்ளது.

மோடி விடுதலைக்கு ஆதரவாக கூட கருத்து வைக்கவில்லை தானே? பின்னர் எப்படி ஆதரவு என கூறுகிறீர்கள்? தேர்தலுக்காக சிலவேளை மௌனம் காக்கலாம்.

காங்கிரசை விட பா.ஜ.க பரவாயில்லை என்றாலும் பா.ஜ.க வும் எமக்கு எதிரான ஒன்று தான். முடிந்தவரை வைகோ ஐயா பா.ஜ.க வை எமக்கு சார்பாக மாற்றட்டும். ஆனால் அது எவ்வளவு சாத்தியம் என தெரியவில்லை.

மற்றப்படி தேர்தல் நேரங்களில் இடம்பெறும் சம்பவங்களை வைத்து ஒரு கட்சி பற்றி முடிவெடுக்க முடியாது. ஜெயலலிதா விடுதலை செய்வதாக கூறியது கூட தேர்தலுக்காக தான். இவ்வளவு காலமும் ஜெயலலிதாவை எதிர்த்தவர்களில் பலர் கூட 7 பேரும் விடுவிக்கப்பட்டால் தாம் ஜெயலலிதாவுக்கே வாக்களிக்கப்போவதாக கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்

இப்ப தானே தவழ தொடங்கியிருகின்றீர்கள் :icon_mrgreen: நடக்க தொடங்க விளங்கும் .

திருமுருகன் காந்தி எமக்காக குரல் கொடுப்பவர். ஆக்கபூர்வமான முயற்சிகளையும் முன்னெடுப்பவர். அவர் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இல்லை. மே 17 இயக்கத்தில் தான் உறுப்பினராக உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் தமிழ்நாட்டில் அரசியல் செய்யப்போவதாக நீங்கள் கூறியதை ஏற்க முடியாது. அதற்கு அவசியம் இல்லை. அவர் ஏற்கனவே எமக்காக குரல் கொடுப்பது போல் தற்பொழுதும் குரல் கொடுக்கிறார். :)

எதற்கும் ஒரு தொடக்க புள்ளி வேண்டும் .

அரசியலுக்குவர மாட்டேன் ,தலைமை ஏற்க மாட்டன்,பதவி எடுக்கமாட்டன் என்று சொன்னவர்கள் அத்தனை பேரும் தான் கடைசியில் அதற்கு  அலை அலையென்று அலைந்தார்கள் .

மற்றவர்கள் எப்படியோ திரு நெடுமாறன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர அதை தனது சொந்த சுயநல அரசிலுக்கு பாவித்தற்கான எந்த பதிவும் இல்லை. அவரது அனுபவத்திற்கும்  வயதிற்கும் காங்கிரசில் அவர் இருந்து விலகாமல் இருந்திந்தால் உயர்பதவியில் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வடக்கே இருந்து குரல் விடுகிறார்கள் என்று இதுவும் விடுகுது. அரசியலில் பயணிக்க நெடுந் தூரம் இருக்கு, அதே போல் இவருக்கும் தெற்குக்கும் மிக நெடுந்தூரம். புது விளக்கு மாறு கொஞ்ச நாளைக்கு வடிவாக கூட்டும். பிறகு குப்பைகளை கண்டும் காணாமலும் போகும். யார் என்ன சொன்னாலும் இப்போதைய இந்திய அரசியல் வாதிகளில் சுயமாக முடிவெடுக்கும் திறமை(decision making) ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் இல்லை. பலர் மற்றயவர்கள் படகில் பயணிப்பவர்கள்.

அர்ஜுனின் பிரச்சனை வந்து திருமுருகன் காந்தி புலிகளுக்காக குரல் கொடுக்கின்றார், ராஜீவ் கொலை தொடர்பான சதியின் பின்னனியை வெளியே கொண்டு வரத் துடிக்கின்றார் என்பதுதான்.  ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் போன்றவற்றை விட அர்ஜுன் தனக்கு அதிகம் தெரியும் என்று தானே தன்னை மெச்சுவதால் அவர் எவர் சொல்லையும் கேட்கப் போவதில்லை.

இதே திருமுருகன் காந்தி சூளைமேட்டு கொலை தொடர்பாக டக்கிளசுக்கு வாதாடி இருந்தால் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்.

------------

ஊரில் சில கடைகளின் முன் ஒரு வாங்கு அல்லது கதிரை போட்டிருக்கும். அதில் சில வேலை வெட்டி இல்லாத மனுசர்கள் வந்து அமர்ந்து இருந்து வியாக்கியானம் கதைப்பார்கள். அமெரிக்க அரசியலில் இருந்து அலமேலுவின் மகள் எவருடன் ஓடிப் போனாள் என்பது வரைக்கும் அவர்களுக்குத் தெரியாத விடயமே இல்லை. எல்லாவற்றையும் பிரித்து மேய்பவர்கள் போன்று வெட்டியாக கதைப்பார்கள்.

அன்றைய பத்திரிகையில் செவ்வாயில் விண்கலம் இறங்கப் போகின்றதாம் என்று செய்தி வந்தால், "அது சும்மா பம்மாத்து...அமெரிக்க காரன் எங்காவது பாலைவனத்தில இறங்கிப் போட்டு கதை விடுவான்" என்றளவில் அவர்களது வியாக்கியானம் இருக்கும். இவர்களால் சமூகத்துக்கு ஐந்து சதத்துக்கு பிரயோசனம் இல்லை. எந்தப் பெரிய விடயத்தினையும் மிகவும் மலினமான ஒரு பார்வையில் வைத்து கதைத்து விட்டு சுய திருப்பிதியில் போய் குப்புறப் படுப்பார்கள்.

அர்ஜுனும் இவர்களைப் போன்ற ஒருவர் தான். பாவம், விட்டு விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் பதில் திணிக்கப்பட்டது போல் உள்ளது

மென்று... முழுகாமல்,

சொல்ல வருவதை... விபரமாகச் சொல்லுங்களேன்.

நாலு, பேருக்கு... விளங்கினால், நல்லது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் காங்கிரசின் ஆளா இல்லையா என இன்னும் தெரியவில்லை.

ஆனால் தமிழர்களுக்கு ஆதரவானவராக இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இதுவரைக்கும் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கை பற்றி இவர் விளக்கவில்லை. அதே நேரம் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்காதவர்கள் ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்றில்லை.

பா.ஜ.க வும் தான் 7 பேரின் விடுதலையை எதிர்க்கிறது. தமிழக பா.ஜ.க மட்டும் ஆதரிக்கிறது போலிருக்கு. அதுவும் தேர்தலுக்காக.

தமிழ் நாட்டிலும் 15 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்கள்.

திருமுருகன் காந்தி என்ன அரசியல் செய்கிறார்? அவர் எமக்காக குரல் கொடுக்கிறார்.

வட இந்தியர்கள் ஒருபோதுமே தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக்கொள்ளப்போவதுமில்லை, தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கப்போவதுமில்லை. இது நான் வேலை பார்க்கும் நண்பர்களிடமிருந்து சாதாரண பொதுமக்கள், மற்றும் அரசியல்வாதிகள்வரை நான் கண்டுகொண்ட உண்மை.

டெல்லி முன்னாள்... ஒரு மாத முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரசின் ஆள்.

பா.ஜ.க. வுக்கு கிடைக்க இருக்கும் வாக்குகளை பிரிக்க... காங்கிரசால், களமிறக்கப் பட்டவர் என நினைக்கின்றேன்.

இது வரை... மோடி, இவர்களின் விடுதலையைப் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்க இல்லை என்று நினைக்கின்றேன்.

வைகோவும் அதே... கூட்டணியில், இருப்பதால்... வைகோவின் எண்ணமே... இந்திய‌ பா.ஜ.க.வின் கருத்தாக இருக்கும், என்பது வெள்ளிடை மலை. :D

உண்மைதான் இவர் காங்கிரசால் பிஜேபிக்கு கிடைக்க இருக்கும்  இமாலய வெற்றிய குரப்பதட்க்கும் ஓட்டுக்களைப் பிரிப்பதற்கும் காங்கிரசால் உருவாக்கப் பட்டவர்கள் . தமிழ் நாட்டிலும் சிலர் இவரது வாலைப் பிடிச்சு தொங்க பார்த்தவர்கள் நல்ல வேளை பூனை வெளிய வந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனின் பிரச்சனை வந்து திருமுருகன் காந்தி புலிகளுக்காக குரல் கொடுக்கின்றார், ராஜீவ் கொலை தொடர்பான சதியின் பின்னனியை வெளியே கொண்டு வரத் துடிக்கின்றார் என்பதுதான்.  ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் போன்றவற்றை விட அர்ஜுன் தனக்கு அதிகம் தெரியும் என்று தானே தன்னை மெச்சுவதால் அவர் எவர் சொல்லையும் கேட்கப் போவதில்லை.

இதே திருமுருகன் காந்தி சூளைமேட்டு கொலை தொடர்பாக டக்கிளசுக்கு வாதாடி இருந்தால் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்.

------------

ஊரில் சில கடைகளின் முன் ஒரு வாங்கு அல்லது கதிரை போட்டிருக்கும். அதில் சில வேலை வெட்டி இல்லாத மனுசர்கள் வந்து அமர்ந்து இருந்து வியாக்கியானம் கதைப்பார்கள். அமெரிக்க அரசியலில் இருந்து அலமேலுவின் மகள் எவருடன் ஓடிப் போனாள் என்பது வரைக்கும் அவர்களுக்குத் தெரியாத விடயமே இல்லை. எல்லாவற்றையும் பிரித்து மேய்பவர்கள் போன்று வெட்டியாக கதைப்பார்கள்.

அன்றைய பத்திரிகையில் செவ்வாயில் விண்கலம் இறங்கப் போகின்றதாம் என்று செய்தி வந்தால், "அது சும்மா பம்மாத்து...அமெரிக்க காரன் எங்காவது பாலைவனத்தில இறங்கிப் போட்டு கதை விடுவான்" என்றளவில் அவர்களது வியாக்கியானம் இருக்கும். இவர்களால் சமூகத்துக்கு ஐந்து சதத்துக்கு பிரயோசனம் இல்லை. எந்தப் பெரிய விடயத்தினையும் மிகவும் மலினமான ஒரு பார்வையில் வைத்து கதைத்து விட்டு சுய திருப்பிதியில் போய் குப்புறப் படுப்பார்கள்.

அர்ஜுனும் இவர்களைப் போன்ற ஒருவர் தான். பாவம், விட்டு விடுவோம்.

நிழலி போன்ற கருத்தாளார்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை

அவரும் எத்தனை  நாளைக்குத்தான் தன்னைக்கட்டிப்போடுவது....??

புலிகளை  ஆதரிக்கும் ஒரே  காரணத்துக்காக

எவரையும் தூற்றமுடியுமா??

நிறைய சீக்கியர்களுக்கும் தெலுங்கர்களுக்கும்...எங்கள் மேல் நிறைய அனுதாபம் உண்டு.....

கேசரிவலா ஒரு conservative இந்தியன் ஆக தான் வருவான்....

திருமுருகன்காந்தியோ அல்லது வேறு யாருமோ ஏன் இது நாள் வரை சுபிரமணிசாமியையும் சந்திரசாமியையும் விசாரிக்க சொல்லி கோர்ட் ஏறவில்லை??? (கோர்ட் அந்த வழக்கை ஏற்காது ஏனென்றால் எந்த ஒரு ஆதாரமும் இல்லை)

911-World trade centre bombing உம் அமெரிக்க -இஸ்ரேல் கூட்டு சதி என்று நல்ல..அதில் கூறப்பட்ட எதையுமே மறுக்க முடியாத படமே உள்ளது....

சீமானின் ஆட்கள் தமிழ் மார்கெட் போன நடிகர்/நடிகைகள் மாதிரி தங்களை யாரும் மறக்ககூடாது என்பற்காக ஒரு படம் காட்டுவது தான்....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையை அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறானது என்றும் தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாலர் சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுவிக்க முயற்சிப்பது தவறு என்கிற ரீதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.இரத்தினச் சுருக்கமாக அவர் பேசியிருப்பதிலிருந்தே பிரச்சினையின் ஆழ அகலங்கள் தெரியாமல், முழு புரிதல் இல்லாமல் சொல்லப்பட்டக் கருத்து அது என்பது தெளிவாகிறது. ஈழப் பிரச்சினை பற்றி பிரசாந்த் பூஷனோடு ஒரு முறை இடிந்தகரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அது பற்றி தனக்குப் பெரிதாக தெரியாது என்று உண்மையைச் சொல்லி அதிகம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதே பக்குவமும் முதிர்ச்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், யோகேந்திர யாதவுக்கும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.இந்தியாவின் அடுத்தத் தலைமுறை தலைவர்களான இவர்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைப்பது ஒரு மிக முக்கியமானக் கடமையாக இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதனைத் திறம்பட செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன்.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அபாண்டமாகக் குற்றஞ்சாட்டப்பட்டத் தோழர்களை விடுவிக்க முன்வரும் தமிழக அரசைப் பாராட்டுவோம்.இவ்வாறு சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

That's tamil

  • கருத்துக்கள உறவுகள்

கெஜ்ரிவால் ஒரு வட இந்தியன்.. அந்த நிலத்திற்கு ஏற்றமாதிரித்தான் அவர் தாளம் போட முடியும்.

காஷ்மீர் விவகாரத்தில் எப்படி சிக்குப்பட்டாரோ அதேபோல ராஜீவ் விவகாரத்திலும் சிக்குப்படுகிறார். இவரை நம்பி அரசியல் செய்வது உதயகுமாரன் இவ்வளவு காலமும் கட்டிக்காத்த நற்பெயருக்கு இழுக்காகவே வந்து முடியும்.

Edited by இசைக்கலைஞன்

அர்ஜுனின் பிரச்சனை வந்து திருமுருகன் காந்தி புலிகளுக்காக குரல் கொடுக்கின்றார், ராஜீவ் கொலை தொடர்பான சதியின் பின்னனியை வெளியே கொண்டு வரத் துடிக்கின்றார் என்பதுதான்.  ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் போன்றவற்றை விட அர்ஜுன் தனக்கு அதிகம் தெரியும் என்று தானே தன்னை மெச்சுவதால் அவர் எவர் சொல்லையும் கேட்கப் போவதில்லை.

இதே திருமுருகன் காந்தி சூளைமேட்டு கொலை தொடர்பாக டக்கிளசுக்கு வாதாடி இருந்தால் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்.

------------

ஊரில் சில கடைகளின் முன் ஒரு வாங்கு அல்லது கதிரை போட்டிருக்கும். அதில் சில வேலை வெட்டி இல்லாத மனுசர்கள் வந்து அமர்ந்து இருந்து வியாக்கியானம் கதைப்பார்கள். அமெரிக்க அரசியலில் இருந்து அலமேலுவின் மகள் எவருடன் ஓடிப் போனாள் என்பது வரைக்கும் அவர்களுக்குத் தெரியாத விடயமே இல்லை. எல்லாவற்றையும் பிரித்து மேய்பவர்கள் போன்று வெட்டியாக கதைப்பார்கள்.

அன்றைய பத்திரிகையில் செவ்வாயில் விண்கலம் இறங்கப் போகின்றதாம் என்று செய்தி வந்தால், "அது சும்மா பம்மாத்து...அமெரிக்க காரன் எங்காவது பாலைவனத்தில இறங்கிப் போட்டு கதை விடுவான்" என்றளவில் அவர்களது வியாக்கியானம் இருக்கும். இவர்களால் சமூகத்துக்கு ஐந்து சதத்துக்கு பிரயோசனம் இல்லை. எந்தப் பெரிய விடயத்தினையும் மிகவும் மலினமான ஒரு பார்வையில் வைத்து கதைத்து விட்டு சுய திருப்பிதியில் போய் குப்புறப் படுப்பார்கள்.

அர்ஜுனும் இவர்களைப் போன்ற ஒருவர் தான். பாவம், விட்டு விடுவோம்.

அண்ணாச்சி உங்கள் கருத்து கண்டு ரொம்ப மகிழ்ச்சி. இன்னும் ஒருவர் விடயத்தில் நீங்கள் தெளிவா ஒரு முடிவு எடுத்தால் யாழ்  சரியான பாதையில் பயணிக்கும் என்பது அடியேனின்  கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.