Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னவென்று கூறுவீர்களா ????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பி மிகவும் இக்காட்டான சூழலில், என்னிடம் தன் நோய் பற்றிக் கூறினார். எனக்கு அடியும் விளங்கவில்லை. நுனியும் விளங்கவில்லை.நீண்ட காலமாக நோய்களுடனேயே போராடிக்கொண்டு இருக்கிறார். என்னால் ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு இதுபற்றி ஏதும் தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

அவருக்கு ESR - Erythrocyte Satimantation Rate என்னும் ஒரு சிம்டம்ஸ் இருக்கிறதாம்.

முன்பு HI 24 ஆக இருந்தது இப்ப 54

Arterites - Temporal என்று சொல்லப்படும் நோயும் தலையில் அடிக்கடி வருகிறதாம்.

Lymph - Node என்று கழுத்தைச் சுற்றி கட்டிகள் ஏற்பட்டு மறைகின்றனவாம்.

முதலில் TB இருக்கலாம் எனச் சந்தேகித்து நான்கு மாதம் குளிகை பாவித்து இப்ப அது இல்லை என்கின்றனர்.

Inflamation - Immune systerm இருப்பதனால் தலை அடிக்கடி வெடிப்பதுபோல் வருகிறதாம்

முள்ளந்தண்டில் 21 தடவை குத்தி நீர் எடுத்து பரீட்சித்தும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வைத்திய சாலையில் கூறுகின்றனர்.

கடைசியாக தலை வெடிக்கின்றது என்று வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர்கள் திறந்த அறுவைச் சிகிச்சை செய்துதான் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அதைச் செய்தால் தான் இறந்து விடுவேன் என எண்ணி இவர் அங்கு செல்ல மறுக்கிறார்.

உங்களில் யாருக்காவது ஏதும் விளங்குகிறதா ????

  • கருத்துக்கள உறவுகள்

ESR - erythrocyte sedimentation rate

இது சிம்டம் அல்ல. இது எமது குருதியில் உள்ள சிவப்பு அணுக்களை வீழ்படிவாக்கி அதன் அளவை காணும் முறை.

இது பொதுவாக.. கீழ் வரும் அளவுகளில் இருக்க வேண்டும்.

  • Men under 50 years old: less than 15 mm/hr
  • Men over 50 years old: less than 20 mm/hr
  • Women under 50 years old: less than 20 mm/hr
  • Women over 50 years old: less than 30 mm/hr

உங்கள் நண்பிக்கு இதன் அளவு கூடி இருப்பதால்.. கீழ்க்காணும் ஏதாவது ஒரு நோய் அல்லது பலமான நோய்த்தொற்று இருக்கலாம்.

  • Autoimmune disorders (எமது வெண்கலங்களே எமது கலங்களை தாக்குவது)
  • Certain forms of arthritis (சில வகையான மூட்டு நோய்கள்)
  • Inflammatory diseases that cause vague symptoms ( சில வகை தாக்கங்களால் ஏற்படும்.. சோர்வு.. மனநிலைக் குழப்பம்...)
  • Tissue death (இழைய இறப்பு)
  • Tuberculosis (காச நோய்)
  • Cancer (புற்றுநோய்)

அவருக்கு என்ன பிரச்சனை என்பதை அறியவே பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

இது பெரும்பாலும்.. எமது வெண்கலங்களே எமது உடற்கலங்களை தாக்கும்.. Autoimmune disorders வகைக்குள் அடங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால்.. சரியான பகுப்பாய்வுகள் இன்றி அப்படிச் சொல்ல முடியாது. எனவே உங்கள் நண்பி.. இதற்குத் தீர்வு தேவை என்றால்.. வைத்தியர்களின் சொற்படி நடந்து கொள்வதே நன்று. அவசியம்.

நிணநீர் முடிச்சு (Lymph - Node) வீக்கம்..  பொதுவாக.. தொற்றுக்கள் இருந்தால் ஏற்படும். Arterites - Temporal இதுவும் தலைக்கு குருதியை கொண்டு செல்லும் நாடிகளில் ஏற்படும் தொற்றுக்களால்.. அவற்றில் ஏற்படும் பாதிப்பால்..வருகிறது. இதன் காரணமாக பலமான தலையிடி இருக்கும்.

உசாத்துணை:

http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003638.htm

http://www.localhealth.com/article/vague-symptoms

http://www.nhs.uk/Conditions/Blood-tests/Pages/What-it-is-used-for.aspx

20991740100_462.jpg

Erythrocyte_Sedimentation_Rate-1.jpg

ESR - செங்கலங்கள் வீழ்படிவாக்க விகிதம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ். காச நோயும், புற்று நோயும் இல்லை என்று கூறிவிட்டனர். வேறு என்ன நோய் என்று ஏன் கூறாமல் விட்டுள்ளனர் ???

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ். காச நோயும், புற்று நோயும் இல்லை என்று கூறிவிட்டனர். வேறு என்ன நோய் என்று ஏன் கூறாமல் விட்டுள்ளனர் ???

இன்னும்.. அவர்கள் முற்றாக நிராகரிக்கவில்லை. காச நோய் நம்மில் பலர் நினைப்பது போல.. சுவாசப்பையை மட்டும் தாக்குவதில்லை. அது முண்ணான்..மூளையை தாக்கும் வகையிலும் உண்டு. ஆனால்.. இவருக்கு அது தான் என்று சொல்லவில்லை. அதற்கான பரிசோதனைகளையும் அவர்கள் செய்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். முள்ளந்தண்டில் இருந்து நீர் எடுத்தபடியால். மேலும்.. நிணநீர்.. மற்றும் குருதி.. என்பு மச்சை.. பரிசோதனைகள் செய்தால் தான் உண்மையில் என்ன பிரச்சனை என்று தெரியும். அதற்காகத்தான்.. அவர்கள் இவற்றை வலியுறுத்துகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்காமல்.. முடிவு தேட முடியாது.

மூளையில் குருதிக்கலன் பாதிப்புப் பற்றியும் அவர்கள் ஆராய வேண்டி இருக்கும். ஏனெனில்.. மூளையில் மிகவும் நுண்ணிய சிக்கலான குருதிக்கலன் நிலமை உள்ளது. அங்கு எங்கு பிரச்சனை என்பதை கண்டறிவதில் அவர்கள் இடர்படக் கூடும். அறுவைச் சிகிச்சை தவிர.. பிற வழிமுறைகளும் உள்ளன. ஆனால்.. இவர்கள் அறுவைச்சிகிச்சையை விரும்புவதற்கும் காரணங்கள் இருக்கக் கூடும். அவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால் நிச்சயம் விளக்குவார்கள். விளக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

நான் பரியாரி இல்லை. 
 
ஆனால் உங்கள் நன்பியின் நோய் அறிகுறிகள் இப்படி சொல்கிறது.
 
பிரித்தானிய மருத்துவத் துறைமேல் எனக்கு எள்ளளவும் மரியாதை இல்லை.
 
என் உறவினர் ஒருவரை பிழையாக வைத்தியம் செய்து கொன்றார்கள். இத்தனைக்கும் அவர் ஓர் சிறப்பு வைத்தியர்.
 
இப்பொழுதெல்லாம் வைத்தியர்களை விட இணையத்தில் உள்ள அமெரிக்க, அவுஸ் அரசாங்க மருத்துவ‌ தளங்கள் மற்றும் பிரபல பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளையே கூடுதலாக நம்புகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

Autoimmune disorders (எமது வெண்கலங்களே எமது கலங்களை தாக்குவது) அல்லது மூளைக்கான குருதிக்கல பாதிப்பு இருக்கக் கூடும்.

இவருக்கு உள்ள அறிகுறிகளை வைச்சு நோக்கும் போது.. இது இருக்க வாய்ப்புள்ளதாகப் படுகிறது. ஆனாலும்.. பரிசோதனைகளின் முடிவு இல்லாமல்.. வெறும் அறிகுறிகளை வைச்சுக் கொண்டு.. அறுதியிட்டு தீர்மானிக்க முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் பரியாரி இல்லை. 
 
ஆனால் உங்கள் நன்பியின் நோய் அறிகுறிகள் இப்படி சொல்கிறது.
 
பிரித்தானிய மருத்துவத் துறைமேல் எனக்கு எள்ளளவும் மரியாதை இல்லை.
 
என் உறவினர் ஒருவரை பிழையாக வைத்தியம் செய்து கொன்றார்கள். இத்தனைக்கும் அவர் ஓர் சிறப்பு வைத்தியர்.
 
இப்பொழுதெல்லாம் வைத்தியர்களை விட இணையத்தில் உள்ள அமெரிக்க, அவுஸ் அரசாங்க மருத்துவ‌ தளங்கள் மற்றும் பிரபல பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளையே கூடுதலாக நம்புகிறேன். 

நான் கூட.. இங்கு GP இடம் போவது குறைவே. நானே என்னைப் பரிசோதித்துக் கொள்வேன். அது கூடிய திருத்தமானதாக உள்ளது. ஒரு முறை.. தோலில் ஏற்பட்ட தழும்புகளுக்கு அங்க போனால்.. அவர்கள்.. அலேர்ஜிக் மருந்தை தந்தார்கள். அது குணமாகவில்லை. அப்புறம் பார்த்தால்.. அது carpet mites ரால் வந்த பிரச்சனை.  carpet மாற்றி.. மரப்பலகை அடிக்க.. தோலில் வந்த பிரச்சனையும் போயிட்டுது. எதிர்காலத்தில்.. சிமாட் போன்களே எமக்கு நல்ல வைத்தியர்களாக உருவாகப் போகின்றன. :)

சரிதான்,
 
ஆனால், இங்க மருந்துத்துண்டு GP மட்டும் தான் தர முடியுமே! ஊரிலை எண்டால், எட்டாப்பு படிச்சாலும், கேக்கிற மருந்த தூக்கி தர, பார்மசில ஒருத்தர் இருப்பார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிதான்,
 
ஆனால், இங்க மருந்துத்துண்டு GP மட்டும் தான் தர முடியுமே! ஊரிலை எண்டால், எட்டாப்பு படிச்சாலும், கேக்கிற மருந்த தூக்கி தர, பார்மசில ஒருத்தர் இருப்பார

ஏன் காசு குடுத்தால் மருந்து தருவார்கள் தானே வைத்தியர் இல்லாமலேயே.

வர\வுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நெடுக்ஸ் , ஈசன்,நாத முனி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால்  மருத்துவதுறையினர்  சொல்லவதை முயற்சிப்பது  நன்று .... இன்னொரு வைத்தி யா சாலையில் காட்டுவதும் நன்று  . நோயாளிக்கு இடமாற்றம் மன மாற்றம் தரும். மன அமைதி தரும்  விடய யங்களில் ஈடுபடுவதும் , விருப்பமான  உறவுகளோடு உரையாடுவதும் பலன் தரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பரியாரி இல்லை. 
 
ஆனால் உங்கள் நன்பியின் நோய் அறிகுறிகள் இப்படி சொல்கிறது.
 
பிரித்தானிய மருத்துவத் துறைமேல் எனக்கு எள்ளளவும் மரியாதை இல்லை.
 
என் உறவினர் ஒருவரை பிழையாக வைத்தியம் செய்து கொன்றார்கள். இத்தனைக்கும் அவர் ஓர் சிறப்பு வைத்தியர்.
 
இப்பொழுதெல்லாம் வைத்தியர்களை விட இணையத்தில் உள்ள அமெரிக்க, அவுஸ் அரசாங்க மருத்துவ‌ தளங்கள் மற்றும் பிரபல பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளையே கூடுதலாக நம்புகிறேன். 

டாக்குத்தர்மார் உண்மையிலையே தெய்வத்துக்கு சமம்.
 
இப்பவெல்லாம் தக்கிமுக்கி டாக்குத்தருக்கு படிச்சு பாஸ் பண்ணினாலே காணும்......அங்காலை வருத்தக்காரருக்கு மருந்து எழுதிக்குடுக்கிறதெல்லாம் வலுசிம்பிள்.......ஏலாட்டி போனால் இப்ப இருக்கவே இருக்கு கூகிள்/விக்கிபீடியா..... ஒரு மனிசனுக்கு இந்த இடத்திலை வலியிருந்தால் இன்ன வருத்தம்....அதுக்கு இதுதான் மருந்து....டாக்குத்தற்ரை பிரச்சனை முடிஞ்சுது....டாக்குத்தர் தந்த மருந்துக்கு வருத்தம் மாறாமல் அடுத்த கிழமை திருப்பி போனியளெண்டால்  இருக்கவே இருக்கு அடுத்தமருந்து. :D
 
உண்மையிலையே சத்திரசிகிச்சை செய்யிற டாக்குத்தர்மார் தெய்வத்தை விட மேல்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான்,
 
ஆனால், இங்க மருந்துத்துண்டு GP மட்டும் தான் தர முடியுமே! ஊரிலை எண்டால், எட்டாப்பு படிச்சாலும், கேக்கிற மருந்த தூக்கி தர, பார்மசில ஒருத்தர் இருப்பார்.

antibiotic வாங்கத்தான்.. GB மருந்துத்துண்டு வேணும். இங்கு பொதுவாக.. flu.. common cold.. hay fever  போன்ற பிரச்சனைகள் தான் அதிகம். இவற்றிற்கு.. மருந்து தேவையில்லை. இயற்கையாகக் குணமாகும். சிம்டத்தைக் குறைக்க.. சாதார வலி நிவாரணிகளை எடுக்கலாம். அத்தோடு.. BP..கொலஸ்ரோல்.. அயன்.. விற்றமின் D மற்றும் குளுக்கோஸ் பிரச்சனை தான். இவற்றை உணவு வழக்கம் மூலம் கட்டுப்படுத்துவதே சிறந்தது. அதோடு.. நல்ல உடற்பயிற்சி இருந்தால்.. இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

சராசரி.. ஒரு வாரத்திற்கு 30 மணி நேர உடற்பயிற்சி இருந்தால்.. அதற்காக ஜிம் போகனுன்னு இல்லை.. நடத்தல்.. சைக்கிள் ஓடுதல்..வீட்டு வேலைகள் செய்தல்.. அத்தோடு சாதாரண உடற்பயிற்சிகள்.. போதும்.

டாக்குத்தர்மார் உண்மையிலையே தெய்வத்துக்கு சமம்.
 
இப்பவெல்லாம் தக்கிமுக்கி டாக்குத்தருக்கு படிச்சு பாஸ் பண்ணினாலே காணும்......அங்காலை வருத்தக்காரருக்கு மருந்து எழுதிக்குடுக்கிறதெல்லாம் வலுசிம்பிள்.......ஏலாட்டி போனால் இப்ப இருக்கவே இருக்கு கூகிள்/விக்கிபீடியா..... ஒரு மனிசனுக்கு இந்த இடத்திலை வலியிருந்தால் இன்ன வருத்தம்....அதுக்கு இதுதான் மருந்து....டாக்குத்தற்ரை பிரச்சனை முடிஞ்சுது....டாக்குத்தர் தந்த மருந்துக்கு வருத்தம் மாறாமல் அடுத்த கிழமை திருப்பி போனியளெண்டால்  இருக்கவே இருக்கு அடுத்தமருந்து. :D
 
உண்மையிலையே சத்திரசிகிச்சை செய்யிற டாக்குத்தர்மார் தெய்வத்தை விட மேல்..

இப்ப எல்லா டாக்டர்களும்.. இணையத்தில்.. பிரச்சனைகள் ஆராய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுக்கு முக்கியம். தானா முடிவெடுப்பதிலும் ஆராய்ந்து முடிவெடுக்கவே பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னரும்.. டாக்டர்கள் பிழை விட்டிருக்கிறார்கள். 1000 பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியன் என்ற பழமொழி எம் தமிழ் உரையாடலில் உள்ளது.

சத்திரசிகிச்சையின் போது.. ஏராளமான தவறுகள் நிகழ்கின்றன. என்ன.. இயற்கை எமக்களித்துள்ள சந்தர்ப்பத்தால் அவை அறியாமலே திருத்தப்பட்டு விடுகின்றன. அதனால் அவர்கள் தப்பிக் கொள்கிறார்கள். அதற்காக திறமை மிக்கவர்கள் இல்லை என்று இல்லை. நிச்சயமாகப் பலர் இருக்கிறார்கள்... இப்போதும். எப்போதும் இருப்பார்கள். :):icon_idea:

antibiotic வாங்கத்தான்.. GB மருந்துத்துண்டு வேணும். இங்கு பொதுவாக.. flu.. common cold.. hay fever  போன்ற பிரச்சனைகள் தான் அதிகம். இவற்றிற்கு.. மருந்து தேவையில்லை. இயற்கையாகக் குணமாகும். சிம்டத்தைக் குறைக்க.. சாதார வலி நிவாரணிகளை எடுக்கலாம். அத்தோடு.. BP..கொலஸ்ரோல்.. அயன்.. விற்றமின் D மற்றும் குளுக்கோஸ் பிரச்சனை தான். இவற்றை உணவு வழக்கம் மூலம் கட்டுப்படுத்துவதே சிறந்தது. அதோடு.. நல்ல உடற்பயிற்சி இருந்தால்.. இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

சராசரி.. ஒரு வாரத்திற்கு 30 மணி நேர உடற்பயிற்சி இருந்தால்.. அதற்காக ஜிம் போகனுன்னு இல்லை.. நடத்தல்.. சைக்கிள் ஓடுதல்..வீட்டு வேலைகள் செய்தல்.. அத்தோடு சாதாரண உடற்பயிற்சிகள்.. போதும்.

 30 மணித்தியாலமா... அட பாவிகளா.. தினசரி 4 மணித்தியாலமா... உடற்பயிற்சி செய்துபோட்டு வேலைக்குப் போகாமை போர்த்து மூடிக்கொண்டு படுக்கத்தான் சரி.  :o

  • கருத்துக்கள உறவுகள்

 30 மணித்தியாலமா... அட பாவிகளா.. தினசரி 4 மணித்தியாலமா... உடற்பயிற்சி செய்துபோட்டு வேலைக்குப் போகாமை போர்த்து மூடிக்கொண்டு படுக்கத்தான் சரி.  :o

இதில்.. நீங்கள் நடக்கிற நேரம்.. வீட்டு வேலை செய்யுற நேரம்.. கடையில தூக்கிப் பறிக்கிற நேரம்.. மாடிப்படி ஏறி இறங்கிற நேரம்.. இதற்கு மேலதிகமாக உடற்பயிற்சி செய்யுற நேரம்.. எல்லாம் அடங்கும். ஆகவே கூட நடந்தீங்கன்னா.. குறைய உடற்பயிற்சில் நேரத்தை செலவு செய்யலாம். அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்கினாலும் குறைக்கலாம். வீட்டு வேலைகள்.. கூவர் பிடிப்பது.. தோட்டவேலைகள் செய்வது.. நிலம் துப்பரவு செய்வது.. என்று.. தசைகளுக்கு வேலை கொடுக்கும் வேலைகள் செய்தால்.. அதனையும் கணக்கில் எடுக்கலாம். ஆக 4 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்துதான்.. இதனை கவர் பண்ணனுன்னு இல்லை. ஆனால் தீவிர உடற்பயிற்சி சிறிதளவு என்றாலும்.. இதில் அடங்கனும். :):icon_idea:

உப்பிடித்தான் எனது வைத்தியர் தினசரி ஒரு மணித்தியாலம் நட என்றாரா.. நானும் சந்தோசமா வேலையில தினமும் 8 மணித்தியாலம் நடக்கிறேன் என்றேனா.. அது கணக்கிலை சேர்ப்பில்லை என்று என்ரை சந்தோசத்திலை மண்ணைப் போட்டிட்டாரு.  :(

குட்டிக்குட்டி நடைகளை கணக்கில் எடுக்க முடியாது என்றில்லை. எடுக்கலாம். ஆனால்.. அந்த நடைகளால் செலவழியும் சக்தியை விட கூட உணவால் மேலதிகமாக உள்ளெடுக்கப்பட்டால்.. அந்த நடைகளை பெரிசாகக் கணக்கில் எடுக்க முடியாது. நடைகள் கூடிய சக்திச் செலவுள்ளதாக இருக்க வேண்டும். தசைகளுக்கு கூடிய வேலை தருவனவாக இருக்க வேண்டும். அந்த வகையில் நீண்ட தூர நடைகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடை கணிப்பானை பொருத்திட்டு நடந்து காட்டுங்க நிச்சயம்.. வைத்திய அதனை கவனத்தில் எடுப்பார். அப்படி.. அமைந்தால் தான் உணவு எரிப்பில் அவற்றை பெறுமதி மிக்கதாகக் கருத முடியும். :)

sharma-obesity-pedometer2.jpg

சிமாட் போன் வைத்துள்ளவர்கள்.. Pedometer போன் உள்ளவர்கள் இதனை கணிக்க முடியும். ஐபோன்.. அன்ராயிட் போன்களின் இவை வருகின்றன. அதற்குரிய அப்ஸ்களும் உள்ளன.  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காசு குடுத்தால் மருந்து தருவார்கள் தானே வைத்தியர் இல்லாமலேயே.

எங்க லண்டனில தானோ இருக்கிறியள்?
 
காசு கொடுத்து கவுன்டரில வாங்கிற மருந்து, பணடோல், கல்போல் தான்.
 
டாக்குத்தர் துண்டு இல்லாமல் மருந்து தந்தால், அவையின்ட பார்மசி இழுத்துப் பூட்டிப் போடுவினம்.
 
இங்க தடுமளுக்கு, காச்சலுக்கு எண்டு போக அதெல்லாம் மூண்டு நாளுல சரியாயிடும் எண்டு டாக்குத்தர் துரத்திப் போட்டார்.
 
அதே விசயத்துக்கு கொழும்பில போன சமருக்கு ஒரு டாககுத்தரட்ட போக, அந்தாள் anti-biotic, panadol எண்டு 42 குளுசைகள தந்து 2000 ரூபா காசையும் பறிச்சுப் போட்டுது.
 
எங்கை எண்டாலும், வியாதியும், குணமடைதலும், அதிஸ்டம் தான்.

Edited by Nathamuni

 தொட்டதுக்கும் வைத்தியரிடம் ஓடாமல் கை மருந்துகள் பாவிச்சால் ஒரு பிரச்னையும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

யார நம்பினாலும் லண்டன் மருத்துவ துறையை மட்டும் நம்பாதீர்கள் தவறாக சிகிச்சை அளித்து என்னுடைய உறவினர் ஒருவரையும் கொன்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மருத்துவம் மூலம் நன்றா இருந்தவர்கள் எல்லாம் லண்டன் சென்று மருத்துவம் பார்க்க வெளிக்கிட்டு மண்டைய போட்டது தான் மிச்சம் அப்பிடி ஒரு ராசி லண்டன் க்கு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் வெளிநாட்டினரும் ஒப்பீட்டளவில் சுலபமாக வைத்தியர்களாகிவிட முடியும் என நினைக்கிறேன். வட அமெரிக்காவில் மிக சிரமம். இங்கு மருத்துவம் உட்பட பல துறைகள் சுய வரைமுறைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. (Self-regulated professions)

இதனால் புதிய மருத்துவர்களை உள்வாங்கும்போது மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட பிற மருத்துவர்கள்தான் தீர்மானிப்பார்கள். வெறும் அதிகாரிகள் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார நம்பினாலும் லண்டன் மருத்துவ துறையை மட்டும் நம்பாதீர்கள் தவறாக சிகிச்சை அளித்து என்னுடைய உறவினர் ஒருவரையும் கொன்றார்கள்....

வருத்தத்திற்கு ஒழுங்கான மருந்து கொடுக்கப்படாமலும்.....உரிய நேரத்தில் (இந்த குளிசையை போடுங்கோ...வருத்தம் நிக்காட்டி வாற கிழமை வாங்கோ) சிகிச்சை அளிக்கப்படாமலும் நடந்த மரணங்கள் அதிகம்.
 
மருத்துவ தவறினால்.........நான்கு மரணச்சடங்குகளுக்கு சென்றுவந்த பெருமை எனக்குண்டு. :(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்ப அவசர சிகிச்சை என்றால் குடும்ப வைத்தியரிடம் உள்ள தாதியே வைத்தியம் பார்க்கிறார். நான் போகும் நேரமெல்லாம் எதோ எனக்கும் அவர்களுக்கும் ஒத்துப் போவதே இல்லை :D அங்கே இருக்கும் ஆண் வைத்தியர் இருவர் மட்டும் நல்லவர்கள்.

ஒருமாதிரி என் நண்பியை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தாச்சு. ஏதும் நடக்கக் கூடாது எண்டு நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.