Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு! 
[Monday, 2014-03-03 10:36:54]
ukrain-military-150-world-news.jpg

ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க அந்நாட்டு அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. அதிபர் பதவியிலிருந்து விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு, இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவியேற்றார்.

பதவி பறிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். ரஷ்யாவின் தீவிர ஆதரவாளரான இவரை காப்பாற்றுவதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியா பிராந்தியத்தில் விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும், உக்ரைனின் மேற்கு பகுதியில் 6,000 ரஷ்ய ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தயாராகி விட்டது. அந்நாட்டு ராணுவத்தினரும் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பு குறித்து உக்ரைனின் பிரதமர் யட்சென்யுக் கூறுகையில், ‘நாங்கள் பேரழிவின் விளிம்பில் உள்ளோம். இது மிரட்டல் கிடையாது. எங்கள் நாடு மீதான போர் அறிவிப்பாகும்’ என கூறியுள்ளார்.

சர்வதேச விதிகளை மீறக்கூடாது என பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் ரஷ்யா கேட்காமல் தொடர்ந்து படைகளை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஒபாமா, புடினிடம் பேசுகையில், சர்வதேச விதிகளை மீறும் விதமாக ரஷ்யா நடந்து கொள்வதை கைவிட வேண்டும், இல்லாவிட்டால் சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படும் நிலை ஏற்படும், மேலும், ரஷ்யாவில் நடக்க உள்ள ஜி8 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கும் என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள புடின், ‘உக்ரைனில் வாழும் ரஷ்ய மக்களுக்கு நிஜமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பாதுகாக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது’ என கூறியிருக்கிறார். இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நடந்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=104832&category=WorldNews&language=tamil

Arjun-Rampal-Cartoon-Ra-one.jpg

முள்ளில் விழுந்த சேலையை எடுக்கத்தெரியாமல் உக்ரெயின் விட்ட தவறு.

உக்ரேயினுக்கு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் வேணும்..ரஷ்ய சந்தை வேணும்...ஆனால் கூடி குழாவ EU வேண்டும் என்கிறபடியால் தான் இந்த வினை...

உகிரெயினுக்கு ஐரோப்பிய பொருளாதார சந்தை ரூசியாவினதை விட பெரியது. மேலும் ரூசியாவுக்குத்தான் உக்கிரெனின் விவசாய பொருள்கள் லாபகரமானது. மேற்கு நாடுகளிடமிருந்து கப்பலில் ஏற்றி இறக்கும் செலவில்லாமல் வாங்க முடியும். ரஸ்சியாவுக்கு  உக்கிரெயின் இல்லாமல் எரிபொருள் ஏற்றுமதிசெய்ய கஸ்டம். ஆனால் அது ஒரு நீண்ட நாள் வியாபார தன்மையில்த்தான் நடந்தேற முடியும். ரூசியா மாரியில் வைத்து எரிபொருளைக்காட்டி மிரட்டுகிறது. உக்கிரெயினுக்கும், மேற்கு நாடுகளுக்கும் எரிபொருள் இல்லாமல் மாரி போகாது. ரூசியாவுக்கு மாரியில் எரிபொருளை விற்று முடிக்காவிட்டால் உடனே அது நாறத்தொடங்காது. அதன் தாக்கம் ருசியாவுக்கு தெரியத்தொடங்க 5-10 வருடம் செல்லும். உக்கிரென் தனது உற்பத்திகளை உடனுக்குடன் விற்றுமுடிக்காவிட்டால் அவை பழுதாகும், கம்பனிகளை அடித்து பூட்ட வேண்டிவரும். ரூசியாவிலிருந்த்து முறித்து எடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு லாகரமாக விற்கத்தொடங்க 10-15 வருடம் வேண்டும். யானை பெரித்தானாலும் காச்சுகிற வெய்யிலால் காச்சப்பட்டால் முதளைக்குழத்தில் மூக்கை நீட்டி தண்ணீர் குடித்து வருவதை விதியாக ஏற்க வேண்டியதுதான்.

நீங்கள் சொல்லுவது சரி..உக்ரையின் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகால அடிப்படையில் செய்ய வேண்டியதை உடனே செய்ய வெளிகிட்டு தான் இந்த பிரச்னை...காரணம் இன்றுவரை உக்ரெயின் அதிகம் தங்கியிருப்பது ரஷ்யாவிலேயே....

அமெரிக்காவின் இவ்வளவு புது ஆயுதங்களை பார்த்தும் ரஷ்யா தனியே இறங்கியிருகுதென்றால்...அவர்கள் எதோ risk எடுக்கிறார்களா..அல்லது அவர்களிடமும் சரியான ஆயுதங்கள் இருக்கிறதா?????

ரசியாவை இளக்காரமாக எடுக்க முடியாது. அவர்களும் நல்ல எண்ணெய் காசில் புரள்பவர்கள்.

உக்ரைன் எரிவாயு குழாய் பிரச்சினை, மற்றும் சோவியத் காலத்தில் உக்ரைன் தான் கனரக ஆயுத உற்பத்தி செய்ததது. இப்போதும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது.

ரசியாவிற்கு ஐரோப்பாவிடம் இருந்து ஒரு Buffer Zone , எரிவாயு குழாய் பாதுகாப்பு, ஆயுத தயாரிப்பு வளம், கறுப்பு கடல் கேந்திர பாதுகாப்பு என்று இழக்க நிறைய விடயங்கள் உண்டு.

இதில் நவீன ஆயுத போட்டிக்கு இடம் இல்லை. சம்பிரதாய நேட்டோ படைகள் கங்கேரி அல்லது போலந்து ஊடாக உக்கிரெயினுக்குள் போனால் அது ரூசியாவுக்கு பலத்த முன்னெச்சரிக்கையாகிவிடும்.  பத்திரிகைகள் தங்களை விற்க நல்ல தருனமாக அதை எழுதுகின்றன.

அதை விட அமெரிக்காவோ ரூசியாவோ நவீன ஆயுதங்களை கிழ்க்கு, மேற்கு ஐரோப்பா எங்குமே பாவிக்க முடியாது. இதனால் உக்கிரெயினுக்குள் உள்ப்புகுந்த ஆமியை வெளியேற்ற அமெரிக்காவுக்கு உடனடி வழி எதுவும் கிடையாது. ஒரு வேலை செய்யலாம். இதை சாட்டாக வைத்து சிரியாவை அடிக்கலாம். ஆனால் அதற்கு குடியரசுக்கு கட்சிகாரர் அது ஒபாமா பக்கம் பலத்தை கூட்டி தங்களை ஒரேயடியாக விழுத்திவிடும் என்று ஒத்துவரார்கள்.

சோவியத் ஆமி ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அதில் வாங்கிய அடியால் இன்று சோவியத் ரூசியா உடைந்து உக்கிரெயின் பிரிந்து போயிருக்கு. அமெரிக்காவும் பாகிஸ்த்தானும் தலிபானை வைத்து சோவியத் ரூசியாவை விழுத்தினார்கள்.  ரூசியவை உக்கிரெயினால் வெளியேற்ற அதுதான் வழி. 5-10 ஆண்டுகள் ஆகும். ரூசியவை வெளியேற்றி முடிய உக்கிரெயின் தரை மட்டம் ஆகும்.  ஆனால் அப்படி ஒரு தோல்வியை ருசீயா கண்டால் அத்தோடு ரூசியாவின் புகழ் மங்கிவிடும்.  ரூசியா ஏற்கனவே நன்றாக மங்கிவிட்டது. யப்பானும், ஜேர்மனியும் ஆயுதம் தரித்துமுடிய, காலப்போக்கில்  ரூசியாவின் இடம் அமெரிக்கா, சீனா, இந்தியா, யப்பான், ஜேர்மனி, ரூசியா என்று வந்துவிடும்.

ரூசியாவிடம் சில நல்ல ஆயுதங்கள் இருக்கலாம். அணுஆயுத சண்டை இல்லாமல் சம்பிரதாய சண்டை நடந்தால் மேற்குநாடுகளுக்கு நின்றுபிடிக்க பொருளாதர வக்கிருக்கு. ரூசிய இப்பதான் சோவியத் உடைந்த பின்னர் தலையெடுக்க ஆரம்பிக்கிறது. சண்டைல் இறங்கினால் ஆப்கானிஸ்த்தான் கதைதான் திரும்ப நடக்கும். அப்படி ரூசிய தோற்றால் சண்டை திசை மாறலாம். மேற்குநாடுகள் ரூசியவை எரிக்கிறதிலும் பார்க்க தாங்கள் எரியாமல் இருக்கத்தான் முனைவார்கள். என்வே ரூசியாவுடன் முடிவு தெரியாத சண்டையில் இறங்க மாட்டார்கள். 

இதில் ரூசியா தனக்கு பெரிய நட்டத்தை கொண்டுவந்திருக்கு. ஐரோப்பிய நாடுகள் பனிப்போர் முடிந்துவிட்டத்தாக ரூசியாவுடன் பொருளாதார வர்தகத்தில் இறங்கினார்கள்.  இப்போது அது சரியா என்று நினைக்க போகிறார்கள். பிரதானமாக மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜேர்மனியை திசை மாற வைத்தால் அது ரூசியாவுக்கு பயங்கர அடி. ஆரம்பத்தில் ஜேர்மனி கொஞ்சம் மிரண்டு பிடிக்கும். ஆனால் இறுதியில் மேற்கின் நட்பு நாடுகளுக்கு தலை சாய்த்தாக வேண்டி வரும். அமெரிக்கா G8ல் வைத்து அவசரப்படுத்தினால் சில தடங்கல்கள் வரலாம். G8 ஒன்றுக்கும் காணது. எனவே பொறுமையாக ஆப்கானிஸ்தானில் போட்ட திட்டம் போட்டு செயலில் இறங்கினால் ரூசியா நிரந்தர கேட்டை சந்திக்கும். 

Edited by மல்லையூரன்

இந்த பிரச்னை ரஷ்யாவின் பெரிய சூதாட்டம்...எதை நம்பி இதில் இறங்கினார்கள் என்பது தான் கேள்விக்குறி....

புடின் இரண்டாம் தரம் வந்த போதே...நினைத்தேன்...என்னவோ நடக்கபோகுது என்று....

youtube இல் புடினை பற்றி ஒரு விவரணம் இருக்கிறது.... (அமைதிப்படை அமாவசை மாதிரி தான் ஆள் :) )

எதிர் பார்த்ததைவிட இலகுவில் ரூசியா விட்டுக்கொடுக்க ஆரம்பிக்கிறது போலிருக்கு. புட்டின் இதில் விட்டது நாங்கள் நினைத்ததைவிட பெரிய தவறு போல இருக்கு. உக்கிரெயினின் 150,000 எல்லைக்கரை படைகளை விலக்குகிறது. இதனால் கிறிமியாவாலும் வெளியேற வேண்டி வரும்.

ரூசியா கிரிமியாவை விட்டு வெளியேறினால் வருங்காலத்தில் அதன் படைத்தளதை அங்கே தக்கவைக்கவும் முடியாமல் போகலாம். இனி உக்கிரெயினின் வரும் அரசு வெளிப்படையாக ரூசிய எதிர்ப்பாக இருக்கும் சந்தரப்பம் அதிகம். நேரம் பார்த்து நேட்டொவில் இணைய முயல்வார்கள். 

நான் நினைக்கிறன் ஒசொட்டியா, அபக்காசியா மாதிரி கிரீமியா மற்றும் கிழக்கு உக்ரையின் (எங்கெல்லாம் ரஷ்ய பெரும்பான்மையினர் உள்ளார்களோ) அது உக்ரெயினில் இருந்து பிரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் தனது பேட்டியில் ரஷ்யர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களைக் காக்கும் உரிமை ரஷயாவுக்கு உண்டு என்று சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் இந்திய காங்கிரஸ் இலங்கை பற்றி கதைப்பது நினைவில் வந்து தொலைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியா பிராந்தியத்தில் விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது
ஒரு காலத்தில் இப்படி நடக்க சம்பந்தம் உண்டோ? தன்னாட்சி அதிகாரம் கொண்ட வடமாகணசபையில் சிறிலன்கா படைகள் குவிப்பு....இந்தியா படை எடுக்கும் என்று சிறிலங்கா இராணுவம் வட மாகாணசபையில் குவிப்பு... பலாலி இராணுவதளத்தில் இந்தியா படைகள் குவிப்பு...:D யாவும் கனவுலக கற்பனைகள் ....

நடந்தாலும் நடக்கும்.. :D

ஒரு காலத்தில் இப்படி நடக்க சம்பந்தம் உண்டோ? தன்னாட்சி அதிகாரம் கொண்ட வடமாகணசபையில் சிறிலன்கா படைகள் குவிப்பு....இந்தியா படை எடுக்கும் என்று சிறிலங்கா இராணுவம் வட மாகாணசபையில் குவிப்பு... பலாலி இராணுவதளத்தில் இந்தியா படைகள் குவிப்பு... :D யாவும் கனவுலக கற்பனைகள் ....

இது தான் 1987  இல் நடந்தது (தலைவர் ஒத்துழைசிருந்தா ).....கவுட்டுட்டியே..பரட்டை :) :)

Edited by naanthaan

சிங்களவன் அப்படி நினைத்து தானே முதலில் முரண்டு பிடித்து பார்த்தான் .இந்தியா தமிழர் சார்பான நாடு ,இராணுவ பயிற்சி வேறு கொடுக்குது இனியும் கொழுவினால் உள்ளதும் இல்லாமல் போகும் என்று கையெழுத்து வைக்க சம்மதித்தான் .சற்று முறுகிய பிரேமதாசாவை விடுமுறைக்கு அனுப்பிவிட்டு தனது இயலாமையால் கோபத்தை காட்ட ராஜீவிற்கு துவக்கு பிடியால் ஒன்று கொடுத்தான் .

இந்தா துலைந்தான் சிங்களவன் என்று நாங்களும் மன்னாரில் முந்திரிகை தோட்டமும் கோழிபண்ணையும் போட லண்டனில் இருந்து ஸ்ரவுட் அடித்த படி பிளான் வேறு போட்டுக்கொண்டுஇருந்தோம் .

பிறகு நடந்தது தெரியும் தானே தமிழ் ஈழம் அல்லது சாம்பல் மேடு கதை .

இது தான் 1987 இல் நடந்தது (தலைவர் ஒத்துழைசிருந்தா ).....கவுட்டுட்டியே..பரட்டை :) :)

அப்பிடி கனடாவில மொல்சன் அடித்து கொண்டு கற்பனை செய்தால் நாம் என்ன செய்யமுடியும்?

இந்திய கொங்கிரஸ் குடும்ப இராணுவம் வந்ததற்கு காரணம் சிங்கள செஞ்சேனை ஒழிப்பு.

கொங்கிரஸ் இராணுவம் தமிழர் பகுதியை சிங்களவருக்காக காக்க, சிங்கள இராணுவம் 80,000 சிங்கள சேகுவாரக்களை சகோதர படுகொலை செய்தது.

கொங்கிரஸ் கூட்டத்தை நம்பி அநியாத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்கள்.

சிங்களவன் அப்படி நினைத்து தானே முதலில் முரண்டு பிடித்து பார்த்தான் .இந்தியா தமிழர் சார்பான நாடு ,இராணுவ பயிற்சி வேறு கொடுக்குது இனியும் கொழுவினால் உள்ளதும் இல்லாமல் போகும் என்று கையெழுத்து வைக்க சம்மதித்தான் .சற்று முறுகிய பிரேமதாசாவை விடுமுறைக்கு அனுப்பிவிட்டு தனது இயலாமையால் கோபத்தை காட்ட ராஜீவிற்கு துவக்கு பிடியால் ஒன்று கொடுத்தான் .

இந்தா துலைந்தான் சிங்களவன் என்று நாங்களும் மன்னாரில் முந்திரிகை தோட்டமும் கோழிபண்ணையும் போட லண்டனில் இருந்து ஸ்ரவுட் அடித்த படி பிளான் வேறு போட்டுக்கொண்டுஇருந்தோம் .

பிறகு நடந்தது தெரியும் தானே தமிழ் ஈழம் அல்லது சாம்பல் மேடு கதை .

அருச்சுன் 100 மேற்பட்ட பிழையான அனுமானங்களை "பிறகு நடந்தது தெரியும் தானே தமிழ் ஈழம் அல்லது சாம்பல் மேடு கதை" இதற்குள் செருகிறார்.

1.மகிந்தாவும், JRம் புலிகள் மீது போர்தொடுத்த காரணம் நாட்டை காப்பாற்ற மட்டும்.

2.JR இன் தந்திரம்தான் முள்ளிவாய்க்காலில் வென்றது.

3.முள்ளி வாய்க்காலுக்கு இந்தியா மட்டும்தான் உதவியது.

4.இந்தியாவுக்கு நேருமுதல் முசோலினி வரை ஒரேயொரு அயல் உறவுக்கொள்கை. அது மாறவே இல்லை.

5.விடுமுறையில் சென்ற பிறேமதாசா திரும்பி வரவே இல்லை. அதனால் அதனால் JR ஆரால் பயந்து போடப்பட்ட கையெழுத்தை மாற்றி பிறேமத்தாசா IPKF யை த்ரிருப்பி அனுப்பவில்லை. 

6.13ம் திருத்தம் JR அல்ல தீர்வாக தமிழருக்கு கையெழுத்து போடப்பட்டு கொடுக்கப்பட்டது.

7. முள்ளிவாய்காலில் சந்திரிக்காவுக்கும் கதிர் காமருக்கும் பங்கு எதுவும் இருக்கவில்லை.

8. 1987 பிறகு புலிகள் எப்பவுமே சமாதான உடன்படிக்கைகள் எதிலும் கையெழுத்து போடவில்லை.

............

.............

மல்லை சொன்னது எல்லாம் 87இல் நாம் விட்ட பிழையின் முடிவுகள்...அதை தான் நாம் அனுமானித்து முடிவுகள் கசப்பாக இருந்தாலும் எடுத்திருக்க வேணும் :)

ஒரு கதைக்கு 87இல் இந்தியா சொன்னதெற்கெல்லாம் தலைவர் சம்மதித்திருந்தால் இப்போ இலங்கை (வட+கிழக்கு) யில் என்ன நடந்திருக்கும்? யாரும் நன்மை தீமைகளை சொல்ல முடியுமா?

நான் சொல்லுவேன்...

வடகிழக்கு - தமிழ்நாடு ஆகவாவது வந்திருக்கும் (தலைவர் இல்லாமல் :) ) (best case)

                     - பாகிஸ்தான் மாதிரி வந்திருக்கும் (worst case)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர்.. 1987 ஐ உதாரணமாக்குகிறார்கள்.

ரஷ்சியா.. ரஷ்சிய மொழி பேசும் மக்களை காக்கும் உரிமையை உக்ரைனில் கொண்டுள்ளது. அதன் கீழ் தான்.. 1991 இல் உக்ரைன்.. பிரிந்து போகவும் அனுமதிக்கப்பட்டது.

1987.. இரு நாடுகளுக்கிடையே நடந்த ஒப்பந்தம். இந்தியப் படைகள் அந்த ஒப்பந்தத்தை அமைதி வழியில்..அமுல்படுத்த அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று.

ரஷ்சியா = இந்தியா அல்ல.

தமிழீழம் = உக்ரைன் அல்ல.

உக்ரைனில்.. ரஷ்சிய மொழி பேசும் மக்கள் உள்ளார்கள். ரஷ்சியாவின் ஆட்சிப் பீடத்தில் ரஷ்சிய மொழி பேசு மக்கள் உள்ளார்கள். ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் அந்த நிலை. தமிழகத்திடம்.. இராணுவ ரீதியில் தமிழீழத்துக்கு உதவும் அதிகாரம் இல்லை..!

1987 இல் தலைவர் விட்டுக் கொடுத்திருந்தாலும்.. 13ம் திருத்ததுக்கு உள்ளுக்குத்தான் எல்லாம் நடந்திருக்கும். அங்க ஒரு அதிசயமும் நடந்திருக்காது. சும்மா.. விட்டால் படம் காட்ட என்றே ஒரு குழு இருக்குது.

1989 இல் இந்தியாவின் பேச்சைக் கேட்டு மாலைதீவு பிடிக்கப் போய் இன்னும் ஜெயிலில் கிடக்குது கொஞ்சத் தமிழ் சனம்.. புளொட் என்ற பெயரில்.. இப்படியான.. கறுமாந்திரங்களை தனது நலனுக்காக ஹிந்தியா செய்யுமே தவிர.. ரஷ்சியா மாதிரி செயற்பட ஹிந்தியர்களுக்கு நமது தமிழ் இரத்தம் அல்ல ஓடுகிறது..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்கன் நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் போய் பொலிஸ்வேலை பாக்கலாம்...ஆனால் ரஷ்யா பக்கத்துவீட்டு கதவைக்கூட தட்டக்கூடாது....இது என்ன நியாயம்????? :D
 
இன்னும் பல நூறுவருடங்கள் சுயமாக வாழ்வதற்க்கான இயற்கைவளங்கள் ரஷ்யாவிடம் நிறையவே உள்ளது.இதே போல் அமெரிக்காவிடமும் உள்ளது.....இவர்கள் இருவருக்கும் உள்ள உட்பிரச்சனையால்  பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் மட்டுமே. :icon_idea:

http://youtu.be/8eE0PDdQDNk

அன்று நெப்போலியன், ஹிட்லர் காலத்தில் இருந்து, இன்று ஒபாமா காலம் வரையில், மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் எல்லோரும், ரஷ்யாவில் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காகவே வியூகம் அமைக்கிறார்கள். இந்த ஆவணப் படத்தை பார்த்தால், மூன்றாம் உலகப் போருக்கு தயாராகும் சர்வதேச அரசியல் நெருக்கடிக்கான காரணம் புரிந்து விடும். அறுபதாண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப் பட்ட ஆவணப் படம், இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவது ஆச்சரியம். இன்றைய சர்வதேச அரசியல் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும், கட்டாயம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

மூலம்  - கலையகம்

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய – உக்ரைன் எரிவாயு விவகாரம்! அரசியல் பனிப்போர்?

CartoonRussiaUkraine-300x203.jpgதடைப் பட்டிருந்த, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் இரண்டு வாரகால இடைவெளியின்
பின்னர் மீள ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
27 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், தனது இயற்கை எரிவாயுத் தேவையில் கால்வாசியை ரஸ்யாவிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்;றது. உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நாடான ரஸ்யா தனது எரிவாயு உற்பத்தியின் 80 வீதத்தை அயல்நாடான உக்ரைன் ஊடாக நீண்ட காலமாக அனுப்பி வருகின்றது.
 
இந்நிலையில், உக்ரைன் நாட்டுடன் செய்து கொள்ளப்பட்ட எரிவாயு விநியோக ஒப்பந்தம் நீடிப்புச் செய்யப்படாத நிலையிலும், எரிவாயுக் கொள்வனவு நிதி  தரப்படாமையினாலும் 2009 ஜனவரி 01ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஸ்யா அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்காக ரஸ்யாவிலேயே தங்கியிருக்கும் நிலையில் எரிவாயு விநியோக நிறுத்தம் இந்த நாடுகளில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை துருக்கி, கிரோக்கம், பல்கேரியா, மசிடோனியா, ஒஸ்ரியா, உக்ரைன், சேர்பியா, றுமெனியா, குரொசியா,
ஸ்லோவேனியா, பொஸ்னியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் பெருமளவில் ரஸ்ய இயற்கை வாயுவையே உபயோகித்து வருகின்றன. இவை தவிர யேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் ரஸ்ய இயற்கை வாயுவையே ஓரளவு உபயோகித்து வருகின்றன.
இந்நிலையில், இயற்கை வாயு விநியோகம் தடைப் பட்டமையானது மேற்குறித்த நாடுகளில் கடுங்குளிரான காலப் பகுதியில் பலத்த பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்து. குளிரூட்டிகள் இயங்குவதற்குத் தேவையான எரிவாயு இல்லாமையால் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களை மூட வேண்டி ஏற்பட்டது. வீடுகளில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட பாரம்பரிய முறையிலான விறகு எரியூட்டிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் உருவானது.
அதேவேளை, மேற்படி விவகாரம் அரசியல் ரீதியான மோதல்களையும் விவாதங்களையும் கூடத் தொடக்கி வைத்துள்ளது.
மேற்குலகுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ரஸ்யாவின் எரிவாயு விநியோகத்தில் ஐரோப்பா தங்கியிருக்க வேண்டிய நிலையைத் தொடர்ந்து அனுமதிக்கலாமா என்றொரு கேள்வி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே எழுப்பப்பட்டு விவாதிக்கப்படும் அளவிற்கு இதன் தாக்கம் அமைந்துள்ளது.
இதேவேளை, இந்த எரிவாயு விநியோகம் தடைப் பட்டமைக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே காரணமாகக் கூறப்பட்ட போதிலும் ரஸ்யா அரசியல் ரீதியாகச் சாதிக்க விரும்பிய பல விடயங்களும் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைனின் தற்போதைய அரசுத் தலைவர் விக்ரெர் யூசென்கோ மேற்குலக சார்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பவர். அதேவேளை பிரதமராக இருக்கும் யூலியா ரிமோசென்கோ அம்மணி அவரைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு தமது ஆதரவை வழங்கி விக்ரர் யூசென்கோவை வீழ்த்த ரஸ்யா விரும்புகின்றது. எதிர்வரும் அக்டோபரில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எரிவாயு விவகாரத்தை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி ரஸ்யா செயற்பட்டுள்ளதாக நம்பப் படுகின்றது. இறுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட 10 வருடத்திற்கான எரிவாயு ஒப்பந்தத்தில் ரஸ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டினும், உக்ரைன் பிரதமர் யூலியா ரிமொசென்கோ அம்மையாருமே கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
இது தவிர தெற்கு ஒஸ்ஸற்றியா விவகாரத்தில் ஜோர்ஜியா மீது ரஸ்யா பதிலடி கொடுத்த வேளை உக்ரைன் நடந்து கொண்ட விதமும் கூட ரஸ்யாவுக்குக் கடுப்பைத் தந்திருந்தது. இந்த ஒருவார மோதல் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் முன்னைநாள் உறுப்பு நாடான உக்ரைன், ரஸ்யாவுக்கு எதிராக ஜோர்ஜியாவை ஆதரித்திருந்தது. அத்துடன் கருங்கடல் பிராந்தியத்துக்குள் அமெரிக்க மற்றும் ஜேர்மன் நாட்டு யுத்தக் கப்பல்கள் வருவதற்கும் அனுமதித்திருந்தது.
போதாதற்கு நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பிலும் கூட அங்கத்துவம் கோரி உக்ரைன் விண்ணப்பித்துள்ளது. ரஸ்யாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நேட்டோவில், உக்ரைன் அங்கத்துவம் பெறுவதென்பது ரஸ்யாவுக்கு பிடிக்காத விடயம் என்பது வெளிப்படையானதே.
இத்தகைய பின்னணியிலேயே இந்த எரிவாயு விநியோகத் தடை அமுல்படுத்தப் பட்டிருந்தது. மேற் கூறிய வாதம் உண்மையானால், ரஸ்யா தனது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளமை நன்கு புலனாகின்றது. பாதுகாப்பு என்ற போர்வையில் தனது அண்டை நாடுகளில் அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவுச் சக்திகள் வேரூன்றுவதைத் தடுத்துவிட சகலவிதமான சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க ரஸ்யா முடிவு செய்துள்ளது.
பலப் பிரயோகம் மூலமோ இராசதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகவோ தனக்குப் பாதுகாப்பானதொரு சூழலை உருவாக்க ரஸ்யா எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகவே
இந்த இயற்கைவாயு விநியோக நிறுத்த விவகாரத்தை பார்க்கலாம்.
மறுபுறம், அமெரிக்காவில் புதிய அரசுத் தலைவராக ஒபாமா பதவியேற்க இருந்த தருணத்தில் தனது உள்ளக் கிடக்கை என்ன என்பதை வெளிக்காட்டும் ஒரு காட்டியாகவும் இவ் விவகாரத்தைப் பார்க்க முடியும்.

பலப் பிரயோகம் மூலமோ இராசதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகவோ தனக்குப் பாதுகாப்பானதொரு சூழலை உருவாக்க ரஸ்யா எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகவே இந்த இயற்கைவாயு விநியோக நிறுத்த விவகாரத்தை பார்க்கலாம்.

மறுபுறம், அமெரிக்காவில் புதிய அரசுத் தலைவராக ஒபாமா பதவியேற்க இருந்த தருணத்தில் தனது உள்ளக் கிடக்கை என்ன என்பதை வெளிக்காட்டும் ஒரு காட்டியாகவும் இவ் விவகாரத்தைப் பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2bildgas_zpsf5b0f62f.jpg

ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரேனின் முக்கியத்துவத்தை இங்கே காணலாம்.

2 வெற்றி.

ஒலிம்பிக்ஸிலும் வெற்றி.  இது வரையில் இதிலும் வெற்றிதான்.

ஒபாமா மட்டும்தான் G8யை புறக்கணிப்பார்.  இது குளத்தோடு கோவித்துக்கொண்டு கழுவாமல் திரிபவர் போலிருக்கும்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மேற்கு நாடுகளுக்கு எரிவாயு தடங்கள் இல்லாமல் வரவேண்டுமாயின் உக்ரெயினும் ரூசியாவும் ஒற்றுமையாக இந்தால்த்தான் நல்லது.  இந்த மாதிரி சிண்டு முடிஞ்சு வைத்திருந்தால் தாங்கள் தானே அடிக்க கஸடப்போகிறார்கள். உக்ரெயினை ரூசியாவுடன் விட்டால் எல்லாமே இலகுவாக இருக்கும் போலிருக்கு. 

எப்பவோ வாசித்தது...முதல் பிரச்சனையே இந்த பைப் லைன் களால் தான்...முதலாவது உக்ரெயின் அந்த பைப்களால் போகும் காஸ் களுக்கு வரி விதித்தது...அதிலிருந்து தன தேவைக்கு எடுத்தது....முதலும் இந்த பிரச்சனை வந்தது.. அதனால் தான் ரஷ்யா பிரிக்கபார்கிறதோ தெரியாது...ஒரு பைப்லைன் முழுவதும் ரஷ்ய கட்டுப்பாட்டில் வரும்.... ரஷ்யா அமெரிக்காவிலும் பார்க்க கெட்டிதனமானது உலக வரைமுறைகளை தனது லாபத்துக்கு வளைப்பதில் (அமேரிக்கா மதிப்பதில்லை).... க்ரிமீயாவையும் அதை அண்டிய தென் உக்ரேயினையும் ரஷ்யாவோடு இணைத்தால் ஒரு நேரடி பைப்லைன் ரஷ்யாவின் கையில் வரும்...உக்ரேயினை நம்ப தேவையில்லை....

ஐரோப்பிய (ஜெர்மெனிய) பத்திரிகைகள் இதை பற்றி என்ன எழுதுகின்றன???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.