Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி முருகன் தேர்த்திருவிழா- படங்கள்

Featured Replies

007%284%29.jpg
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் சனிக்கிழமை (15) கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வார இறுதி நாளில் தேர்த்திருவிழா உற்சவம் இடம்பெற்றமையினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

முதலாவது காலைப் பூசை 5:30 மணிக்கும் இதனைத் தொடர்ந்து காலசந்திப் பூசை, இரண்டாவது காலப் பூசை, யாக பூசை ஆகியன 7:00 மணிக்கும் இடம்பெற்றன.

முருகனுக்கான அபிசேகம் 7:30 மணியளவிலும் சிறப்பு பூசை 8:30 மணியளவிலும் இடம்பெற்றன.

கொடித்தம்பப் பூசையும் 108 போற்றி வழிபாடும் 8:50 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை 9:30 மணியளவில் இடம்பெற்றது.

மங்கல இசையினை ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோருடன் உள்ளுர் கலைஞர்களான சத்தியமூர்த்தி, வைத்தீஸ்வரன் ஆகியோர் வழங்க, முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேததராய் 10:30 மணியளவில் உள்வீதிவலம் எழுந்தருளினார்.

பக்தர்களின் அரோகரா கோசமும் மங்கல இசையும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் வீதி உலா வந்த காட்சியும் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இருக்கின்றோமோ எனும் பிரமையை எல்லோர் மத்தியிலும் கொண்டு வந்து இருந்தது. அது மட்டுமல்லாது இளையோர்கள் பலர் முருகப்பெருமானை தமது தோள்களில் பயபக்தியுடன் சுமந்து சென்ற காட்சி எதிர்கால சந்ததி ஆன்மீகத்தோடு தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்பதனை கட்டியம் கூறி நின்றது என்றால் மிகையாகாது.

உள்வீதிவலத்தினைத் தொடர்ந்து 11:15 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் விண் அதிர தேரில் எழுந்தருளினார். ஆண்-பெண் இருபாலரும் இணைந்து தேரின் வடம் பிடித்து இழுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பக்தர்கள் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சனம் செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தேர் பின் வீதியில் வந்து கொண்டிருந்த போது அடைமழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து தேர்த் திருவிழாவில் பங்கேற்றுக் கொண்டு இருந்தனர்.

தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததும் பிற்பகல் 1:15 மணியளவில் முருகப்பெருமான் தேரில் இருந்து பச்சை சாத்தப்பட்ட நிலையில் இறக்கப்பட்டு 2:30 மணியளவில் சண்முகார்ச்சனை இடம்பெற்றது.

சாயரட்சை பூசை 3:30 மணியளவிலும் மீனாட்சி அபிசேகம் 3:45 மணியளவிலும் யாக பூசை 4:00 மணியளவிலும் இடம்பெற்றன.

மாலைப் பூசை 4:30 மணியளவில் தொடங்கியதனைத் தொடர்ந்து 5:00 மணியளவில் திருவிளக்குப் பூசை இடம்பெற்றது.

இரண்டாவது பூசையான மாலைப் பூசை 5:30 மணியளவிலும் கொடித்தம்பப் பூசை, 108 போற்றி வழிபாடு ஆகியன 5:50 மணியளவில் இடம்பெற்றன.

வசந்த மண்டபப் பூசை 6:30 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈழத்து கலைஞர்கள் மங்கல இசையினை வழங்க முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேததராய் 7:15 மணியளவில் உள்வீதி வலமும் 7:45 மணியளவில் வெளிவீதி வலமும் எழுந்தருளி செய்தார்.

இருப்பிடத்துக்கு முருகப்பெருமான் சென்றதனைத் தொடர்ந்து ஈழத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் வழங்கிய மங்கல இசை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்த்தசாமப் பூசையுடன் தேர்த்திருவிழா உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

வார இறுதி நாளில் தேர்த் திருவிழா உற்சவம் இடம்பெற்றதனால் பல மாநிலங்களில் இருந்தும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான முருகப்பெருமானின் பக்தர்களுக்கு தாகசாந்தி மற்றும் அன்னதான ஏற்பாடுகளை சிட்னி முருகன் ஆலய சைவமன்ற நிர்வாகம் சிறப்பாக செய்து இருந்தது.

முதற்தடவையாக சிட்னி முருகனின் வருடாந்த மஹோற்சவ நிகழ்வுகளை Youtube இணையத்தளம் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு சைவமன்ற நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. அந்த வகையில் தேர்த் திருவிழா உற்சவமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
001%2857%29.jpg
002%2837%29.jpg
005%288%29.jpg
006%284%29.jpg
010%283%29.jpg
014%282%29.jpg
015%281%29.jpg
018%281%29.jpg
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாய் இருக்கு .  பகிர்வுக்கு நன்றி ஆதவன்..! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாய் இருக்கு

முருகனும்  ஆட்களும்  கூட  வடிவாக  இருக்கினம்

ஒருக்கா  அங்கால வரணும் என்று தோன்றுகிறது

 

பகிர்வுக்கு நன்றி ஆதவன்..!  :D

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் முள்ளிவாய்க்கால் போராட்டத்திற்கு இவளவு கூட்டம் வந்ததில்ல அரோகரா

தமிழர்கள் என்றுமே புரியாத புதிர்கள் தான் ........

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது .....
ஈழ தமிழரக்ளுக்கு சொந்தமானதா ?  முருகன் என்றால் தமிழர்கள் உடையாதகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
கோவிலுக்கு சென்ற அனைவரும் நிச்சயம் .........உலகில் உள்ள அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று 
தமது சுய விளம்பரம் முடிய  இறுதியில் பிரார்த்தித்து இருப்பார்கள். (நாங்கள் போகாவிட்டாலும் பலன் கிடைக்கும்)
உலகில் ஆட்கள் சுகமில்லாது இருப்பது என்பது இவர்களுக்கு தெரியாத மாதிரி ஒரு நாடகம் கடவுளுக்கு போட்டு காட்டியிருப்பார்கள்.
உண்மையிலேயே உலகில் எல்லோரும் சுகமாக இருப்பது உங்கள் வேண்டுதல் என்றால் எனக்கு தேர் இழுக்காமல் அவர்களுக்கு உதவலாமே என்று கடவுள் கேட்டால் முழிக்க வேண்டி வரும் என்பதால் ......
முன் கூட்டியே அது தமக்கு தெரியாத மாதிரி ஒரு பாசாங்கு செய்து ...
நான் எனக்கு மட்டும் கும்பிட வரவில்லை ....
மற்றவர்களுக்கும் பிரார்த்திக்கிறேன் ...... ஒருக்கா பாருங்கோ .....
 
கடவுளை யார் ஏமாற்றுகிறான் ??????
மனிதனா ?
மதவாதியா ?
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்றுமே புரியாத புதிர்கள் தான் ........

 

தமிழர் சுயநலப் பதர்கள். இதைப் புரியாத புதிர் என்று வேற சொல்லுவாங்களா. :lol::icon_idea:

தேர் திருவிளா அன்று நிறைய களவும் நடந்ததாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனோ. கனடா முருகனோ, ஹம் அம்மாளச்சியோ....
தமது கோவில் வருமானத்தில், ஒரு.. 20 சத விகிதத்தையாவது,
தாயகத்தில்... போரினால் வாழ்க்கையை.. இழந்து தவிக்கும் தமிழ் குடும்பத்தினருக்கு...
உதவ முன் வர வேண்டும்.

 

கோயிலில்... ஆடம்பரம், ஆர்ப்பாட்டாங்களுக்கு அப்பால்...மனித நேயம் என்று, ஒன்றுள்ளது.
அதனை... கோவில் நிர்வாகத்தினர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அது, இல்லையேல்.... "கோவில் என்பது... கள்வர் குடியிருக்கும் குகை" என்பது போலாகி விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர் திருவிளா அன்று நிறைய களவும் நடந்ததாம்.

 

களவு,காதல்,குழந்தைப்பொடியள் காணாமல் போறதுகள் இல்லாட்டி திருவிழாவிலை ஒரு கிக் இருக்காது..... :lol:
இருந்தாலும் ஐரோப்பிய,கனேடிய லெவலுக்கு சிட்னிமுருகனும் வந்துட்டார் எண்ட சந்தோசம் வானை பிழக்குது.. :D
  • கருத்துக்கள உறவுகள்

001%2857%29.jpg
 

ஐயர்மார் எல்லாரும்.... சிவப்பு "யூனிஃபோமோடை..." நிக்கிறாங்க.

இதிலை... செஃப் ஐயர் யார்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

001%2857%29.jpg

 

ஐயர்மார் எல்லாரும்.... சிவப்பு "யூனிஃபோமோடை..." நிக்கிறாங்க.

இதிலை... செஃப் ஐயர் யார்? :rolleyes:

கோவிலுக்குள் 'தலைப்பாகை', உத்தரீயம் என்பன அணிதல், குற்றமாகக் கருதப்படுகின்றது!  :o  

 

இப்ப ஆரு, ''Chief' எண்டு பிடிச்சிருப்பீங்கள் எண்டு நினைக்கிறன்! :D

தேர்திருவிழா போகமுடியாமல் போய்விட்டது. மற்றத்திருவிழாக்கள் போனனாங்கள்.
 
அனால் ஒருக்காலும் இந்தக் கோயிலில எனக்கு பக்தி வந்ததேயில்லை.
 
எனக்கு கோவில் கருங்கல்லாலையும் வெளி வீதி மணலிலயும் இருந்தால் தான் பக்தி வரும்.
 
ஆகக் குறைந்தது வெளி வீதி மணலிலயும் கோவில் உள்பகுதி சற்று வெளிச்சம் குறைவாகவும் இருக்க வேண்டும். (பக்திக்கு)
 
அந்த வகையில் ஹெலென்ஸ்பேர்க் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் நல்ல பக்தி வள்ளல்.
  • கருத்துக்கள உறவுகள்

 

தேர்திருவிழா போகமுடியாமல் போய்விட்டது. மற்றத்திருவிழாக்கள் போனனாங்கள்.
 
அனால் ஒருக்காலும் இந்தக் கோயிலில எனக்கு பக்தி வந்ததேயில்லை.
 
எனக்கு கோவில் கருங்கல்லாலையும் வெளி வீதி மணலிலயும் இருந்தால் தான் பக்தி வரும்.
 
ஆகக் குறைந்தது வெளி வீதி மணலிலயும் கோவில் உள்பகுதி சற்று வெளிச்சம் குறைவாகவும் இருக்க வேண்டும். (பக்திக்கு)
 
அந்த வகையில் ஹெலென்ஸ்பேர்க் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் நல்ல பக்தி வள்ளல்.

 

 

ஒவ்வொருத்தருக்கு.... ஒவ்வொரு பிரச்சினை. ஈசன்.

சிட்னி முருகன் கோயிலின் உள் வெளிச்சம், கூடப் போட்ட படியால், தான்.....

எனது, முன்னாள் பாடசாலை நண்பனையும், நாலு சொந்தக்காரரையும்.... கண்டு பிடிக்கக் கூடியதாக இருந்தது.

வெளிச்சம், போட்டது எல்லாம்... நன்மைக்கே.... :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் ஓடிப்போய் 100 வோல்ட் பல்ப் வாங்கி திரிபுரசுந்தரியை ஜொலிக்க விடுங்கள்....! மக்கள் உறவுகளுடன் உறவாடட்டும்...!!  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.