Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம் )

Featured Replies

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம்)

10014925_840819795944674_2033617915_o.jp

நெற்கொழு தாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் . என்னுடன் கூடப் பயணித்த கொழுவனை பற்றி மற்றையவர்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சித்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றயவர்கள் நெற்கொழு தாசன் என்று அழைத்தாலும் நான் அவரை "கொழுவன்" என்றே அழைப்பது வழக்கம். அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. அவர் கவிதைகளுக்கான சொற்களை கொழுவுவதில் வல்லவர் .

நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அனால் அவரின் பல கவிதைகள் " ஒப்பாரி கவிதைகள் " என்ற வகையிலேயே எனக்குத் தெரிகின்றது. சோகம் அல்லது பிரிவாற்றாமை என்பது வாசகர்களை கவரும் உத்திதான். ஆனால் ஒருவர் ஒப்பாரி வகையான கவிதைகளை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பாரானால் அது வாசகர்களிடையே ஆரம்பத்தில் கவர்ந்தாலும், அது காலப்போக்கில் வாசகர்களிடையே ஒரு வித சலிப்பை ஏற்படுத்தி விடும் .உதாரணமாக

"இவர்களுக்கிடையில் நானும்.... "

"வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி, 
அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின் ஊர்க் கதைகளாலும் 
ஏக்க விளிப்புக்களாலும் 
அரைகுறைத் தூக்கங்களாலும் 
நீண்ட தொடரூந்துகளும் 
நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன.... 
என்னையும் சுமந்துகொண்டு... "

என்ற கவிதையில் ,புலம் பெயர் நாட்டில் உள்ள ஒருவனது இருப்பு பற்றிய ஆவேசம் வலிகளாக வெளிவருகின்றது . ஆனால் அந்த வலியை சொன்னால் மட்டும் போதுமா ?? அந்த வலியை வெற்றியாக்க வேண்டிய நம்பிக்கை தரும் கவி வரிகளை தவற விடுகின்றார் .

மேலும்

நாளை நானும்... ,  

"பரவுகின்ற வெறுமை 
தின்னத்தொடங்குகிறது 
ஒவ்வொன்றாக.... 
நான், 
இழந்து கொண்டிருக்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த 
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை. நாளை, 
நானும் கூடு திரும்பாவிட்டால் ..." 
 
என்ற கவிதையில் தனது இருப்பு பற்றிய உறைநிலையையே காட்ட விழைகின்றார் . இந்த இரண்டு கவி வரிகளிலும்  , தான் இனி வருங்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற நம்பிக்கை தரும் ஒர்ம வரிகளை என்னால் அடயாளப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன் . எனது மதிப்புக்கு உரிய வ ஐ செ ஜெயபாலன் ஒரு கவிதையில் தனது இருத்தல் பற்றி இப்படி குறிப்பிடுவார்,

"இயற்கை மரணம்
எம்மை அழைக்கும் வரை
மூக்கும் முழியுமாக
வாழவே பிறந்தோம் !!

என்று. இது தான் இருத்தலுக்கான நம்பிக்கையான எதிர்வுகூறல் .

என்னைப் பொறுத்த வரையில் , நெற்கொழுதாசன் ஒரு குறிப்பிட்ட வகையான பாடுபொருளுக்குள் தன்னை அமிழ்தாது பல்முனை பாடுபொருள்களை கொண்டு கவி புனைய வேண்டும் . அதே வேளையில் எழுத்துச் சமசரங்களுக்கு இடம் கொடுக்காது மனதில் பட்டதை வெளியே கொண்டு வருகின்ற மனத்துணிவு இருக்க வேண்டும் . ஏனெனில் கூனிக் குறுகி , குழைந்து வளைந்து எழுதுபவர்கள் எல்லாம் காத்திரமான படைப்பாளியாக முடியாது .

இறுதியாக, இந்த நிகழ்வு யாரால் ஒழுங்கமைக்கப்பட்டது ?? என்பதனை விட அந்த நிகழ்வில் என்ன பேசப்பட்டது என்பதே முக்கியமாகின்றது . நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருக்க பிரான்சின் மூத்த எழுத்தாளர்கள் " ரகசியத்தின் நாக்குகளை " காய்த்தல் உவத்தல் இன்றி விமர்சித்து இருக்கின்றார்கள் . இதே போன்று யாழ்ப்பாணத்தில் திருமலை கலாமன்றத்திலும் பல மூத்த படைப்பாளிகள் காய்த்தல் உவத்தல் இன்றி இவருக்கான விமர்சனங்களை தந்துள்ளார்கள். நெற்கொழுதாசனுக்கு ஓர் இலக்கிய அங்கீகரிப்பு இடம் பெற்று இருக்கின்றது . இந்த நிகழ்வானது மூத்த எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும் இடையில் ஓர்  இணைப்பு பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும் நெற்கொழு தாசனின் ஏற்புரையில் " தன்னை போல பல குண்டுமணிகள் பிரசுர வசதிகள் இன்றி இருக்கின்றார்கள் . அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இங்கு உள்ள மூத்த படைப்பளிகளுடைய கடமை " என்ற வேண்டுகோளுடன் விழா நிறைவுக்கு வந்தது .

மேலதிக படங்கள்:
 
10245425_853909097969077_1149169034_n.jp
 
Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கோ...

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

சுய மதிப்பீடு?

  • கருத்துக்கள உறவுகள்

சுய மதிப்பீடு?

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

  • தொடங்கியவர்

நன்றி  கோ...

எதற்கு நன்றி ஐயா ?? எமது கள உறவை ஆக்க பூர்வமான விமர்சனத்தை கொடுத்தது அவருக்கு ஊக்க மருந்தை கொடுப்பது எமது கடமையல்லவா ?? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

அதில்லை விசுகர், "சுய மதிப்பீடு" எண்டதும் நெற்கொழு தாசன் எழுதினதாக்கும் எண்டு நான் வந்து பாத்தன். கோ "என் மதிப்பீடு" எண்டு போட்டிருக்கலாம்!

  • தொடங்கியவர்

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அர்ஜுன் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்

சுய மதிப்பீடு?

தவறுக்கு வருந்துகின்றேன் சுட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி . கருத்துக்களத்தில் வாத்தியார் இல்லாத குறை இப்பதான் தெரியுது  :lol:  :D  :D  .வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி  :)  .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

உண்மையில் எனக்கு இந்த வரிகள் விளங்கவில்லை . எனது பார்வையில் ஓர் விமர்சனக் கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வை தந்திருக்கின்றேன். விசுகரோ அவரின் பார்வையில் தந்திருக்கின்றார் . என்னைப் பொறுத்த வரையில் இருவரின் கண்ணோட்டங்கள் வேறாக இருந்தாலும் , யாழின் சார்பில் கொழுவனை மேலும் ஊக்கபடுத்துவதில் முளுமையடைந்ததாகவே எண்ணுகின்றேன் . ஆக்கத்தைப் படித்து கருத்து தந்ததிற்கு மிக்க நன்றிகள் வல்வை சகாரா  :)  :)  .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

அர்யூன் உங்களின் கருத்திடுகை என்பது நான் எழுதியதை எவ்வளவு தூரத்திற்கு விளங்கி இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது. அங்கிடுதட்டி வக்காளத்து என்பதன் அர்த்தம் என்ன?, இங்கு புதுவைக்காக எப்படிப்பட்ட வக்காளத்து வாங்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என் கருத்திடல் பற்றிய நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

எனக்கு துணிவு இல்லை எண்டு சொன்ன முதல் ஆள் நீங்கள்தான் எண்டு நினைக்கிறன்  :unsure:  . எனக்கு இரட்டை நாக்குகள் கிடையாது என்பதை யாழ் கருத்துக்கள வரலாற்றை திருப்பி பாருங்கள்  :)  :)  . வரலாறு முக்கியம் அமைச்சரே :lol: :lol: :D .

  • தொடங்கியவர்

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

உங்களுடைய  கருத்துடனும்

வருத்தத்துடனும்

ஆவேசத்துடனும்  ஒத்துப்போகின்றேன்....

இந்த நடைமுறை மாற்றப்படணும் என்ற நிலையிலேயே  நானும் இருந்தேன்

இருக்கின்றேன்

இதற்காக பல முயற்சிகளையும்   செய்து தோற்றவன்  என்ற  வருத்தமும் உண்டு

இறுதியாக எமது  ஊர்ச்சங்கத்தினூடாக  

சில புத்தக  மற்றும் குறுவெட்டு வெளியீடுகளைச்செய்த போதும் கூட

கசப்பான அனுபவங்களே நடந்தேறின

அத்துடன்

மாற்றுவோம் என  ஒன்றிணைந்தவர்கள்

வெளியீட்டுக்கு கிடைத்த பணத்தை ஒரு சதமும் தெளியாது சென்றுவிட

ஒருங்கமைத்த  நாம் சுமையைச்சுமந்ததும் நடந்தேறியது.......

அந்த  சோக  கீதத்தினை  இங்கு எழுத விரும்பவில்லை...

எனது திரியை  ஆரம்பிக்கும் முதலே

அது பற்றி  எழுதியிருந்தேன்......

...........................................................................................................................................................................................

நன்றி  தம்பி  நெற்கொழு.....

நான் எனது பார்வையில் என்று மட்டுமே  எழுதுவேன்

அது தங்களது  நூல் வெளியீட்டு விழாவின் பிரதிபலிப்பாக  இருக்குமே தவிர

நூலினைப்பற்றிய பார்வையாக இராது

அதனை வேறு எவராவது யாழில்  செய்தால் நன்றாக இருக்கும்

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

பாவம் குமாரசாமியார் நித்திரை இல்லாமல் அலைய போறார் :D  :lol:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

என்னால் முடிந்த அளவு இதில் செய்திருக்கின்றேன் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாயினி .

  • தொடங்கியவர்

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

வரவுக்கு மிக்க நன்றி சுபேஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சனியன்று நான் பரீசிலுள்ள புத்தகக் கடைகளில்  இப் புத்தகத்தை  வாங்குவதற்காக (அறிவாலயம் , தமிழாலயம்) விசாரித்தேன். தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.

அப்படியே தமிழ்சூரியனின் சீடீயும்  ( லுன்னில்)  வாங்க முடியவில்லை...!

சுவி அண்ணா சில நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட cd கள் வெளியே செல்லாதவாறு எதோ நடந்திருக்கு ........அலசி ஆராய்ந்து எனது எனேர்ஜிஜை விரயமாக்க விரும்பவில்லை .அதனால் நானே சமருக்கு  களத்தில் நேரடியாக இறங்குவதென்று தீர்மானித்துள்ளேன் .வெகு விரைவில் cd  உங்கள் நாட்டிற்கு கிடக்கும் அண்ணா .நன்றிகள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.