Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம். 
[saturday, 2014-05-10 09:34:14]
Aluthgama-fire-100514-150.jpg
அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் இரண்டு மாடிக் கடை ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்தக் கடைக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று கடைஉரிமையாளரான மொகமட் நயீம்கான், பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
  
சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, கடைக்குள் எடுக்கப்பட்ட எல்லா வீடியோ பதிவுகளும் ஆராயப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.விகாரை ஒன்றில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் கேட்கப்பட்டதாக தாம் அறிந்ததாகவும் மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 8ம் திகதி மாலை 5.00 மணிக்கு கடைக்குத் தீவைக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று அதிகாலையிலேயே தீவைப்பு இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற சுமார் 250 தொடக்கம் 300 பேர் வரை, இந்தக் கடைக்குத் தீவைத்து எரித்துள்ளனர். இதனால் கடைமுற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.http://seithy.com/breifNews.php?newsID=109023&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் இனத்தை பார்த்து சிங்களபெளத்தர்கள் ரொம்பத்தான் பயப்பிடினம் போல .....

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனது   கொலையை   வேடிக்கை  பார்த்தவர்கள்

சகோதரனது அழுகுரலை தமது சுயநலத்துக்காக  பாவித்தவர்கள்

அதற்கான வெகுமதியைப்பெறுவார்கள்

பெறுகிறார்கள்.... :(  :(  :(

சகோதரனது   கொலையை   வேடிக்கை  பார்த்தவர்கள்

சகோதரனது அழுகுரலை தமது சுயநலத்துக்காக  பாவித்தவர்கள்

அதற்கான வெகுமதியைப்பெறுவார்கள்

பெறுகிறார்கள்.... :(  :(  :(

இது நாம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இனி வருங்காலங்களில் சிங்கள பௌத்த இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராகச் செய்து முடிக்கப் போகும் பெரும் அழிவுகளையே இவை கட்டியம் கூறி நிற்கின்றன. கடந்த சில வருடங்களாக இனவாதிகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் மகிந்த அரசின் திரைமறைவு ஒத்தாசையுடன் இடிக்கப் படுகிறது. இன்று வரை அரசுடன் ஒட்டிக் கொண்டு வாய்ச்சவடால் விட்டு வரும் முஸ்லிம் தலைமைகள் அம்பலப் பட்டு நிற்கிறார்கள்.

சிறுவயதில்

அருவரியில் சொல்லித்தந்த கதை  ஒன்று

வருமுன் காப்போன்

வரும் போது காப்போன்

வந்தபின் காப்போன் என்பது.........

இசுலாமிய சகோதரர்கள் தமக்கு வந்தபின்தான் நகர்வார்களாயின்

இந்த அருவரிப்பாடத்தையே  மறப்பார்களாயின்

காலம் கடந்திருக்கும் என்பதை அறியணும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில்

பாடசாலையில் சொல்லித்தந்த கதை ஒன்று

வருமுன் காப்போன்

வரும் போது காப்போன்

வந்தபின் காப்போன் என்பது.........

இசுலாமிய சகோதரர்கள் தமக்கு வந்தபின்தான் நகர்வார்களாயின்

காலம் கடந்திருக்கும் என்பதை அறியணும்..

மிகவும் உண்மை. அவர்கள் உடனடியாக மகிந்தவிடம் போய் கெஞ்ச ஆரம்பிக்கவேணும்.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உண்மை. அவர்கள் உடனடியாக மகிந்தவிடம் போய் கெஞ்ச ஆரம்பிக்கவேணும்.. :huh::D

அதை

இசை  சொல்லணும்.. :lol:  :D

மிகவும் உண்மை. அவர்கள் உடனடியாக மகிந்தவிடம் போய் கெஞ்ச ஆரம்பிக்கவேணும்.. :huh::D

என்ன எங்கட இணக்கவாத அரசியல் யுக்தி மாதிரி இருக்கு? :)

சிறுவயதில்

அருவரியில் சொல்லித்தந்த கதை  ஒன்று

வருமுன் காப்போன்

வரும் போது காப்போன்

வந்தபின் காப்போன் என்பது.........

இசுலாமிய சகோதரர்கள் தமக்கு வந்தபின்தான் நகர்வார்களாயின்

இந்த அருவரிப்பாடத்தையே  மறப்பார்களாயின்

காலம் கடந்திருக்கும் என்பதை அறியணும்..

உண்மை தான். இந்த இனவெறியை எதிர்கொள்ளும் வகையிலான தலைமை அவர்களிடம் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் இனவாத அரசிற்கு முண்டு கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

இது நாம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இனி வருங்காலங்களில் சிங்கள பௌத்த இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராகச் செய்து முடிக்கப் போகும் பெரும் அழிவுகளையே இவை கட்டியம் கூறி நிற்கின்றன

அப்போ இதற்கு முன்பு பெரும் அழிவுகள் ஏதும் நடக்கவில்லையா ...?

சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஏன் தமிழர், முஸ்லிம்களை ஒன்று படுத்துகிறீர்கள் 

இது அவர்களது பிரைச்சினை அவர்களது மட்டும் பிரைச்சினை 

நான் என்மக்களுக்காககூட அடிவாங்கவில்லை .....

------------

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

அப்போ இதற்கு முன்பு பெரும் அழிவுகள் ஏதும் நடக்கவில்லையா ...?

சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஏன் தமிழர், முஸ்லிம்களை ஒன்று படுத்துகிறீர்கள் 

இது அவர்களது பிரைச்சினை அவர்களது மட்டும் பிரைச்சினை 

நான் என்மக்களுக்காககூட அடிவாங்கவில்லை

தமிழர்கள் முஸ்லிம்கள் தமது அடையாளங்களை விட்டு ஒன்றுபட வேண்டுமென்று சொல்ல வரவில்லை. இனவாதிகளுக்கெதிராக தமிழர், முஸ்லிம்கள் மட்டுமல்ல இனவாதத்தை எதிர்க்கும் சிங்கள மக்களும் ஒன்றுபட வேண்டும். இதனை வெறும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சனை என்று நீங்கள் பார்ப்பது தவறானது. கடந்த காலங்களில் இது தமிழனின் பிரச்சனை என்று அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் சந்தர்ப்பவாத தலைமைகள் இனியாவது தமது தவறை உணர்வார்களா தெரியவில்லை.

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

நல்ல  கருத்து

தொடருங்கள்

எமது சகோதரனை 

எமக்கான  நண்பனை

எமக்கான  உறவுகளை 

நாமும்  மறப்போமாயின்

அதே தவறை  நாமும் செய்தவர்களாவோம்

ஆனால் இழப்பதற்கு எதுவுமற்ற  தமிழரது இன்றையநிலை

சிங்களத்தின் விடாப்பிடியான  கோரமுகம்

மற்றும்

வரலாறு

அதன் பாடங்கள்

நில்  கவனி  செல் என்றே  திரும்ப  திரும்ப  சொல்கிறது...

Edited by விசுகு

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலைய தீ வைப்புக் காடைத்தனம் : அமைச்சர் றிஷாட்

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புக் காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலைஅளுத்கமயில் உள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீன்  மேலும் குறிப்பிடுகையில்,

5431rishard1.jpg"குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வர்த்தகர்களே இனவாத கும்பலை துாண்டிவிட்டு இந்த செயலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் சில பௌத்த பிக்குகள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வர்த்தக நிலையம் எரிந்துள்ளது என்றால்  இது திட்டமிடப்பட்ட சதியாக இருப்பதற்கு பலமான சாத்தியக் கூறு இருக்கின்றது.

இலங்கையின் காவல் துறையினர் நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு சிக்கலான குற்றச் செயல்களைக் கூட கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தமது திறமையினை வெளிப்படுத்திய பல சந்தரப்பங்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடாவடித்தனங்கள் அல்லது வன் செயல்கள் தொடர்பான குற்றவாளிகள் முழு நாட்டிற்கும் மட்டுமல்ல முழு உலகத்திற்குமே தெரிந்தாலும் இலங்கையின் காவல் துறையினருக்கு மாத்திரம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ் நிலை காணப்படுகின்றது.

எனது அமைச்சுக்குள் பொலிசாரின் கண்களுக்கு முன்னாலே புகுந்து காட்டு தார்பார் நடாத்திய,  நாட்டின் தொலைக்காட்சி நிலையங்களுக்கூடாக, முழு நாட்டிற்குமே அடையாளப்படுத்தப் பட்டவர்களை, இன்னும் நமது காவல் துறையினரால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். மட்டுமல்லாமல் எனது அமைச்சிற்குள் வைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளை திட்டியவர்களையே அவர்களால் அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

தெமட்டகொடயில் வைத்து மாட்டிறைச்சி ஏற்றி வந்த லொறியை தீயிட்டுக் கொளுத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 இற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வரை அடையாளம் காணப்பட வில்லை.

அதேபோன்று அளுத்கமவில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம்  பொலிஸாரால் குற்றவாளிகள் இனங்காணப்படாத மற்றுமொரு சம்பவமாக இந்த வரிசையில்  இடம் பிடிக்க அனுமதிக்க முடியாது.

பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு அரசு உரிய நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தம்புள்ள பள்ளிவாசல் கை வைக்கப்பட மாட்டாது என்று  அமைச்சு கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்தில் எமக்கு ஜனாதிபதியினால் தரப்பட்ட வாக்குறுதிக்கு மத்தியில் குறித்த ஒரு மத குருவின் அழுத்தம் காரணமாக அந்த பள்ளிவாசலின் இருப்பு மீண்டும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இவ்வாறான நிலமைகள் தொடர அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசுக்குள்ளிருந்து கொண்டு  நாம் போராடுகின்றோம்.

ஆனால் அரசு  வாய் வீச்சில் பிரச்சினை இல்லை என்று சொல்லிக்கொண்டு நாளாந்தம் முஸ்லிம்கள் இனவாத சக்திகளிடமிருந்து முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல் இருக்குமாயின், முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஜனநாயக சட்ட வரம்பிற்கு உட்பட்டு,  அரசாங்கத்துக்கு வெளியே நாங்கள் தேட வேண்டி ஏற்படும் " என தெரிவித்துள்ளார்.

metronews.lk/article.php?category=news&news=5431#sthash.NqUJhRJo.dpuf

இது நாம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இனி வருங்காலங்களில் சிங்கள பௌத்த இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராகச் செய்து முடிக்கப் போகும் பெரும் அழிவுகளையே இவை கட்டியம் கூறி நிற்கின்றன. கடந்த சில வருடங்களாக இனவாதிகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் மகிந்த அரசின் திரைமறைவு ஒத்தாசையுடன் இடிக்கப் படுகிறது. இன்று வரை அரசுடன் ஒட்டிக் கொண்டு வாய்ச்சவடால் விட்டு வரும் முஸ்லிம் தலைமைகள் அம்பலப் பட்டு நிற்கிறார்கள்.

உண்மை தான். இந்த இனவெறியை எதிர்கொள்ளும் வகையிலான தலைமை அவர்களிடம் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் இனவாத அரசிற்கு முண்டு கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளே.

தமிழர்கள் முஸ்லிம்கள் தமது அடையாளங்களை விட்டு ஒன்றுபட வேண்டுமென்று சொல்ல வரவில்லை. இனவாதிகளுக்கெதிராக தமிழர், முஸ்லிம்கள் மட்டுமல்ல இனவாதத்தை எதிர்க்கும் சிங்கள மக்களும் ஒன்றுபட வேண்டும். இதனை வெறும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சனை என்று நீங்கள் பார்ப்பது தவறானது. கடந்த காலங்களில் இது தமிழனின் பிரச்சனை என்று அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் சந்தர்ப்பவாத தலைமைகள் இனியாவது தமது தவறை உணர்வார்களா தெரியவில்லை.

ஐயா தங்களில் உண்மை  இருந்தால் தங்கள் நல்ல மனத்தால் சிலவற்றை தவறாக புரிந்துகொள்கிறீர்களாக இருக்கலாம்.. 

1. இலங்கையில் இந்திய அடிதொடியாக கருதப்படும் தமிழரழிந்த அழிவிலிருந்து மீள வழி எதும் கண்டுபிடிக்கவில்லை.

2. இலங்கையில் இலங்கையை அடிதொடியாக கொண்ட தமிழர் தள்ளப்பட்ட அழிவுப்பாதையை, நிறுத்த முயற்சிகள் இல்லை.

3.இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழர், சிங்கள கிறிஸ்த்தவர்கள் பிரதிநிதித்துவம் இல்லாததால் அழிக்கப்படுவதற்காக தெரியப்படிருக்கிறார்கள். 

4. இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள், தலைமைகளின் சுக போகத்துக்காக பிரதிநிதித்துவங்களால் அழிப்புக்கு கையளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

5. இலங்கையில் சகல மக்களும் பாரிய அழிவொன்றை நோக்கி முன் தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிரல் வகையில்த்தான் இலங்கை இனப்பிரச்சனைகளின் கடுமை இருக்கு. முஸ்லீம்களுக்கு இருக்கத்தக்க இன அழிப்புப் பயம், சிங்களவர்கள் தாங்களே அழிந்து படுவ்திலும் சற்று கூடியது மட்டுமே. இதுவரையில் முன்னால் சென்று மற்றய இனங்களை அழிக்காதவர்களான இந்திய, இலங்கை வழித்தமிழர், சிங்கள கிறிஸ்த்தவர்கள், அவர்கள் காக்கப்பட வேண்டும். 

1915 ல் இனப்போராட்டத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்த முஸ்லீம் தலைமைகள் முன்னால் வந்து இனங்களை காப்பாற்ற வேண்டும்.  உங்கள் கோரிக்கைகள் இனங்களுக்காக இருக்கலாம். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தில் இதை நீங்கள் சேர்க்க வேண்டிய இடம் முஸ்லீம் மக்கள் அல்ல. அவர்கள் தங்கள் கடமையாக சென்ற தேர்தலில் அரசுக்கு எதிராகத்தான் வாக்களிததார்கள். எனவே நீங்கள் இதை எடுத்து சென்று நேராக பேசவேண்டிய இடம் தலைமைகளே. அரசில் இருக்கும் தலைமகளுக்கு தினம் ஒரு கடிதம் எழுதுங்கள். 

இந்த கடை விவகாரம் இனத்துவேசமா, அல்லது அரசாங்க உள் ஆட்களின் வியாபாரப் போட்டியா எனபது கூட உங்களுக்குத் தெரியாது. பாசன் பக் கடையின் உள்ளே சிங்களவர்கள் சென்றதாக வழக்குப்போட்ட கடைக்காரர் அரசுடன் இயங்குவதற்காக வழக்கை வாபஸ் பெற்றார். இதற்கு யார் பொறுப்பு? அரசில் இருப்பது கடையை தொடர்ந்து நடத்துவதை விட லாபகரமாக இருந்தால் அவர்கள் கடையை விட அரசைத்தான் காப்பாற்றுவார்கள். இதில் நமக்கு என்ன பங்கு கிடைக்கப்போகிறது?

இந்தக் கடைக்காக இவ்வளவு வாடி வதங்கும் நீங்கள் கோபின் மனைவி சிறையில் வாங்கிய அடிகளின் போது கழிந்த கருவேதனைக்க ஒரு சொல் இங்கு வந்து எழுதியிருக்கிறீர்களா? ஏன் ஐயா இது வரையில் தமிழரின் துன்பம ஒன்றுக்காவும் எழுத வராத நீங்கள். இதற்கு மாரடிக்க ஓடி ஓடி வருகிறீர்கள். நாளை முள்ளிவாய்க்கால் துக்க தின வாரம் ஆரம்பமாகிறது. உங்கள் கவலையைக் காட்ட ஒரு பந்தி எழுதி இங்கே பதிவிட முடியுமா? 

லோகத்தாசனை பாம்பு தீண்டி இறந்த போது சந்திரமதி மகனே நான் ஆண்ட நன்னாட்டு மக்கள் என்னை விட்டு போனார்கள்! நல்லுறவுகள் போனார்கள்! என்னைக் கட்டிய கணவன் என்னை அடிமையாக விற்றுவிட்டு போனான். எல்லாவற்றுக்கும் என்னுடன் கடசி வரை இருந்த நான் பெற்ற பிள்ளை நீயும் கூடவா என்னை விட்டுவிட்டு போவிட்டய்! என்று கதறி அழுதாள். அப்போது விசுவாமித்திரர் அந்தண வடிவில்  அங்கு வந்து "அடியே என் பணம் போச்சே" என்று மனம் கலங்கினார். முஸ்லீம் தலைமைகள் தங்கள் பணம் போச்சே என்று கலங்க உரிமை உண்டு. ஆனால் அதை நீங்கள் சந்திரமதி மாதிரி சகலத்தையும் இழந்து தவிக்கும் அபலையின் வருத்ததுக்கு நிகராக்க திரும்ப திரும்ப  வந்து இங்கே இணைக்காதீர்கள்.  உங்களின் திருட்டு தனத்தை குறைத்து உண்மையான வேதனைகளுக்கு எதிராக போராடுங்கள். 

உங்களை மாதிரி ஆக்களைத்தான் மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடை பிடிக்கும் சோசலிஸ்டுக்கள் என்பார்கள். உங்களுக்கு கொழும்பில் பெய்யும் மழை ஒரு நாளும் தோலில் இறங்கி உறைத்தது கிடையாது. கொழும்ப்பில் பெய்யும் மழைக்கு மரத்து போகும் தோல் மொஸ்கோ மழைக்கு எப்படி ஐயா துடித்து துடித்து நடுங்குகிறது? இது மழைக்கு வரும் குளிர் நடுக்கமா அல்லது நாடகமா?

Edited by மல்லையூரன்

...முஸ்லீம்களுக்கு இருக்கத்தக்க இன அழிப்பு பயம், சிங்களவர்கள் தாங்களே அழிந்து படுவ்த்திலும் சற்று கூடியது மட்டுமே. இதுவரையில் முன்னால் சென்று மற்றய இனங்களை அழிக்காதவர்கள், இந்திய, இலங்கை வழித்தமிழர், சிங்கள கிறிஸ்த்தவர்கள். அவர்கள் காக்கப்பட வேண்டும்.

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஏனைய சிறுபான்மையினரைத் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. இம்முறை அது முஸ்லிம்களை நோக்கித் தனது கொலைக் கரங்களைக் கொண்டு செல்வது வெளிப்படை. சிங்களவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளக் கூடிய சாத்தியத்தை இதனுடன் ஒப்பிடுவதன் நியாயத்தை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

...1915 ல் இனப்போராட்ட்த்தை இலங்கைக்கு அறிமுகம் செய்த முஸ்லீம் தலைமைகள் முன்னால் வந்து இனங்களை காப்பாற்ற வேண்டும்...

உங்கள் வரலாற்றுப் புரிதல் விநோதமாக உள்ளது. ஏற்கனவே கல்வியமைச்சர் பதியுதீன் தான் தரப்படுத்தலின் சூத்திரதாரி என்ற வகையில் ஒரு கருத்தைத் திணிக்க முயன்றீர்கள். 1915 கலவரத்தில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்கள் முஸ்லிம்களாயிருந்தாலும் தமிழர்களும் சில சமயங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதல்களுக்குள்ளாகின. இந்த அழிவினை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்று எழுதுகிறீர்கள்.

...இந்த கடை விவகாரம் இனத்துவேசமா, அல்லது அரசாங்க உள் ஆட்களின் வியாபார போட்டியா எனபது கூட உங்களுக்குத் தெரியாது...

பிக்குகள் சகிதம் வந்து வியாபார நிலையங்களும் மத வழிபாட்டிடங்களும் நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கப் படுகின்றன. இது குறித்து உங்களுக்கு மேலதிக தகவல் தெரிந்தால் அறியத் தாருங்கள்.

...இது வரையில் தமிழரின் துன்பம ஒன்றுக்காவும் எழுத வராத நீங்கள். இதற்கு மாரடிக்க ஓடி ஓடி வருகிறீர்கள். நாளை முள்ளிவாய்க்கால் துக்க தின வாரம் ஆரம்பமாகிறது. உங்கள் கவலையை காட்ட ஒரு பந்தி எழுதி இங்கே பதிவிட முடியுமா?...

இது வரையில் நூற்றுக் கணக்கான பதிவுகள் பல்வேறு திரிகளில் பதிவாகியிருப்பதை நீங்கள் பார்வையிட முடியும். முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கு முன்பு "உள்ளை விட்டு அடிக்கப் போறாங்கள்", "ஸ்டாலின் கிராட்" என்று சில கோமாளிகள் இங்கே எழுதிக் கொண்டிருந்ததையும் அதற்கான எதிர்வினையாக வரப் போகும் ஆபத்தினை எதிர்வு கூறும் பதிவுகளும் கூட உள்ளன.

...லோகத்தாசனை பாம்பு தீண்டி இறந்த போது சந்திரமதி மகனே நான் ஆண்ட நன்னாட்டு மக்கள் என்னை விட்டு போனார்கள்! நல்லுறவுகள் போனார்கள்! என்னைக் கட்டிய கணவன் என்னை அடிமையாக விற்றுவிட்டு போனான். எல்லாவற்றுக்கும் என்னுடன் கடசி வரை இருந்த நான் பெற்ற பிள்ளை நீயும் கூடவா என்னை விட்டுவிட்டு போவிட்டய்! என்று கதறி அழுதாள். அப்போது விசுவாமித்திரர் அந்தண வடிவில் அங்கு வந்து "அடியே என் பணம் போச்சே" என்று மனம் கலங்கினார். முஸ்லீம் தலைமைகள் தங்கள் பணம் போச்சே என்று கலங்க உரிமை உண்டு. ஆனால் அதை நீங்கள் சந்திரமதி மாதிரி சகலத்தையும் இழந்து தவிக்கும் அபலையின் வருத்ததுக்கு நிகராக்க திரும்ப திரும்ப வந்து இங்கே இணைக்காதீர்கள். உங்களின் திருட்டு தனத்தை குறைத்து உண்மையான வேதனைகளுக்கு எதிராக போராடுங்கள்....

உஙகள் மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வேடிக்கை பார்க்கத்தேவையும் இல்லை. குட்டையை குழப்பத்தேவையும் இல்லை. சிவனே என்று நம்பாட்டைப் பார்த்தால் போதும்.

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஏனைய சிறுபான்மையினரைத் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. இம்முறை அது முஸ்லிம்களை நோக்கித் தனது கொலைக் கரங்களைக் கொண்டு செல்வது வெளிப்படை. சிங்களவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளக் கூடிய சாத்தியத்தை இதனுடன் ஒப்பிடுவதன் நியாயத்தை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

1.நீங்களே கடைசி முடிவில்த்தான் முஸ்லீம்கள் தெரியப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்கள். அதாவது நான் போட்ட நிரல் சரி என்கிறீகள்.   ஆனால் அதில் பின்னர் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்கே புரியவில்லை என்பதை உங்கள் எழுத்து தெளிவாக காட்டுகிறது.

2.நீங்கள் சிலவற்றை ஆளமாக பார்த்தால்த்தான் அது புரியும். சிங்களவரின் இனவாதம் சிலரின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்தப் படுகிறது.  இலங்கையில் இனத்துவேசம் ஆட்சியை கைப்பற்ற பயன் பட்டு வந்தது.  அம்மாந்தோட்டை விவகாரம் சிங்களவர்கள் தம்மை அழிக்கிரார்கள் என்றதை மட்டும் தான் சொல்லும்.  இப்போ UNHRC கமிசனரின் அறிக்கைப் படித்தால்தான் இலங்கையில் நடப்பது விளங்கும்.

உங்கள் வரலாற்றுப் புரிதல் விநோதமாக உள்ளது. ஏற்கனவே கல்வியமைச்சர் பதியுதீன் தான் தரப்படுத்தலின் சூத்திரதாரி என்ற வகையில் ஒரு கருத்தைத் திணிக்க முயன்றீர்கள். 1915 கலவரத்தில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்கள் முஸ்லிம்களாயிருந்தாலும் தமிழர்களும் சில சமயங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதல்களுக்குள்ளாகின. இந்த அழிவினை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்று எழுதுகிறீர்கள்.

1.உங்களுக்கு அவர் சூத்திர தாரியாக  இல்லாமல் இருக்கலாம் ஆனல் எப்படி தமிழில் தோற்றும் போது முஸ்லீம் மாணவர்கள் குறைந்த புள்ளிகளூடன் போகலாம் என்றதாக இருந்தது? இன்று சட்டக்கல்லூரி அனுமதி முறையை சிங்களவர்கள் கல்லூரி முன்னால் உண்ணவிரதம் இருந்து எதிர்த்துப் போராடினார்கள் என்றதை மறக்க வேண்டாம். சட்டக்கல்லூரி அனுமதி முறைக்கு கக்கீம் தவிர எந்த சிங்களவரும் சூத்திரதாரி இல்லை.  

2.அதைப்பற்றி நீங்கள்தான் சரித்திரத்தை படித்துத்தெரிய வேண்டும். இன்று எந்த நேரமும் எந்த ரோட்டின் வழியும் எந்தச் சமய ஊர்வலமும் போக முடியாது என்று  தடுப்பு வாங்குவது கஸ்டம். அன்று அவர்களுக்கு வெள்ளைகளிடம் இருந்த ஆதரவு காரண்மாக இரவு 12 மணிக்கு முதல் போக முடியாது என்று தடுப்பு வாங்கினார்கள். ஆனால் 12 மணிக்குப் பிறகு போகலாம் என்று வாங்கிய அனுமதியை நிறைவேற்றாமல் தடுத்தவர்கள் மதச் சண்டைக்கு ஆயத்தாமனவர்கள் மட்டுமே.  

பிக்குகள் சகிதம் வந்து வியாபார நிலையங்களும் மத வழிபாட்டிடங்களும் நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கப் படுகின்றன. இது குறித்து உங்களுக்கு மேலதிக தகவல் தெரிந்தால் அறியத் தாருங்கள்.

என்னிடம் விபரம் கேட்பதற்கு, என்னிடம் அனுமதி வாங்கி செய்யும் அலுவல் அல்ல அது. மத நிலையங்கள் தாக்கப்படும் போது அது எப்படி எப்படி அது மசூதியானால் மட்டும் உங்கள் வீட்டுக்கு தந்தி வந்தி நீங்கள் விழித்தஸ்யாழில் ஓடு வந்து நிற்கிறீர்கள்? அந்த விபரம் இருந்தால் அறியத்தாருங்கள். 

இது வரையில் நூற்றுக் கணக்கான பதிவுகள் பல்வேறு திரிகளில் பதிவாகியிருப்பதை நீங்கள் பார்வையிட முடியும். முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கு முன்பு "உள்ளை விட்டு அடிக்கப் போறாங்கள்", "ஸ்டாலின் கிராட்" என்று சில கோமாளிகள் இங்கே எழுதிக் கொண்டிருந்ததையும் அதற்கான எதிர்வினையாக வரப் போகும் ஆபத்தினை எதிர்வு கூறும் பதிவுகளும் கூட உள்ளன.

முன்னரும் குடை பிடித்த பதிவுகளை கண்டத்தால்த்தான் அதை சொல்ல வந்தேன். "ஊள்ளேவிட்டு அடிக்கபோறாங்கள்" உங்களின் குரோத வம்புத்தனமான கதையில் நீங்கள் கொட்டும் அன்பு புரிகிறது.

உஙகள் மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி!

யூ வெல்கம்! வேண்டும் போது கேளுங்கள் கொடுக்கப்படும்

Edited by மல்லையூரன்

நாங்கள் வேடிக்கை பார்க்கத்தேவையும் இல்லை. குட்டையை குழப்பத்தேவையும் இல்லை. சிவனே என்று நம்பாட்டைப் பார்த்தால் போதும்.

உதவவும் கூட போகலாம். ஆனால் தானமும் தருமமும் தன் தனக்கு மிஞ்சியதே. 

தன் வீட்டுப் பிள்ளை பசியால் நாள் முழுவதும் அழும் போது, "இப்போதுதான் இராசாத்தி அம்மாளின் பிள்ளைக்கு மூன்றாம் முறை ஊட்டிவிட்டு வருகிறேன். அதற்கு பசியை தாங்க தெரியாது " என்று படப்பாயம் கொட்டும் அம்மாவை என்ன செய்ய முடியும்?

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு என்ன ஆயிற்று ......? :(

எப்போதிலிருந்து அவர்கள் நமக்கு சகோதரர்கள் ஆனார்கள் 

என் தாய் கதறிய போது என் சகோதரன் எங்கே....?

என் தந்தையை டயரில் போட்டபோது என் சகோதரன் எங்கே....? 

என் அக்காவையும் தங்கையையும் மாறி மாறி மனித உயிர் என்பதையும் மதியாமல் கற்பழித்த போது என் சகோதரன் என்ன செய்து கொண்டிருந்தான்....?

என் அண்ணனும் தம்பியும் நான்காம் மாடியில் வதைக்கப்பட்ட போது எங்கே  My Brother...?

உள்ளதையும் என் சகோதரன் என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டான் ....!

இந்த சகோதரத்துவத்தை நாம் கட்டாயம் மதித்தே ஆகவேண்டும் :blink: 

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த இனவாதிகள் சிறுபான்மை இனத்தை நசுக்குவதில்  முதலில் தமிழர்களை அடக்கி வெற்றி கண்டுள்ளார்கள்.அந்த மமதையில் இன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்த வண்ணமே உள்ளன. சிறுபான்மையினரின் ஒற்றுமை ஒன்றே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இதற்கு சிறந்த உதாரணம் கிழக்கின் உள்ளூராட்சி தேர்த்தலில் சிங்கள அரசு கைப்பற்றியது. ஹக்கீம், அரசுடன் சேராமல் கூட்டமைப்புடன் சேர்ந்து இருப்பின் மகிந்த அரசு கிழக்கின் உள்ளூராட்சி சபையை கைப்பற்றி இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அதே ஹக்கிமுக்கு மீண்டும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்குமானால், ஹக்கிமின் செயல்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிற கருத்து உறுதியாகும். அப்படி நடந்தால் தமிழர்கள் தமக்கு தேவையில்லை என முஸ்லிம்கள் எண்ணுகிறார்கள் என்றாகிவிடும். :rolleyes:

போடமாட்டார்கள் என்று எண்ண முடியவில்லை..! :D

முதலில் தமிழனை சிறுபான்மை என் கூறுவதை நிறுத்தவும்,தமிழன் பூர்வீகக் குடியினர், முஸ்லிம் வந்தேறு குடியினர்.

தமிழர்கள் கட்சிக்கு தமிழர்களும் முஸ்லிம்கள் கட்சிக்கு முஸ்லிம்களும் சிங்கள கட்சிகளுக்கு சிங்களவரும் வாக்களிப்பது என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது. ஹக்கீம் தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் ஹக்கீம் ஒரு போதும் கூறவில்லை தான் கூட்டமைப்புடன் சேர மாட்டேன் என்றோ அல்லது அரசுடன் சேரப்போகின்றேன் என்றோ. ஆனால் அரசுடன் டீலை ஏற்கனவே போட்டு விட்டு அதாவது தான் தனியாக போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை சுவீகரித்து விட்டு பின்னர் வந்து சேர்கிறேன் என்பதே. இது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தேர்த்தலுக்கு பின்னர் தான் தெரிய வந்தது.

முதலில் தமிழனை சிறுபான்மை என் கூறுவதை நிறுத்தவும்,தமிழன் பூர்வீகக் குடியினர், முஸ்லிம் வந்தேறு குடியினர்.

சிங்களவரும் வந்தேறு குடியினரே.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும் வந்தேறிகளே. யக்கர், நாகர் வேடரே பூர்வ குடியினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும் வந்தேறிகளே. யக்கர், நாகர் வேடரே பூர்வ குடியினர்.

சிங்களம்,தமிழ் போன்ற மொழிகளும்....பெளத்தம்,சைவம்,இஸ்லாம்,கிறிஸ்தவம் போன்ற மதங்களும் வந்து புகுந்து கொண்டன.......இவர்களிடையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.