Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் புதிய சவால்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NEW CHALLENGES FACED BY SRI LANKAN MUSLIMS - ARREST OF ZAKIR HUSSAIN IN CHENNAI

V.I.S.JAYAPALAN

 

கடந்த ஏப்பிரல் 24ல் இந்திய ஊடகங்கள் எல்லாம் இலங்கையில் இருந்து ஊடுருவிய கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்கிற பாகிஸ்தானிய உளவாளி சென்னையில் கைது என்ற தொடர்ச் செய்திகளால் நிறைந்து வழிந்தது.. பயங்கர வாதச் செயல்பாடுகள், கள்ள நோட்டு பரிவர்த்தனை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் தற்போது கைது செய்யப்ட்டிருப்பதாக சேதிகள் தெரிவிக்கின்றன.

.

ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு முகம்கொடுக்கும் இலங்கை முஸ்லிம்க்ளுக்கும் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். நாகூர் தர்க்கா போன்ற இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாண்மை பிரிவான சூபிகளின் வணக்கத் தலங்கள் பல தமிழகத்தில் உள்ளது. இலங்கைத் தமிழர்களைப்போலவே இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழகம் முக்கியமானதாகும். இதனால் இந்திய தமிழக பாதுகாப்பு ஈழத் தமிழருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படையானதாகும்.  அதுபோலவே இந்திய பாதுகாப்புக்கு ஈழத் தமிழரதும் இலங்கை முஸ்லிம்களினதும் ஆதரவு முக்கியமாகும். இதனை இருசாராரும் உனர வேன்டியது அவசியமாகும். இதனை இலங்கை முஸ்லிம் அமைப்புகளும் இந்திய தமிழக அரசுகளும் உணர்ந்துகொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களில் தனிப் பெரும்பாண்மையனரான  சூபிகள் வலுவான தமிழக கேரழ தொடர்புடையவர்கள். ஒரிருவர் மீதுள்ள சந்தேகதின் அடிப்படையிலோ அல்லது அவர்களது செயல்களுக்காகவோ ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் கலவரப் படுத்துவது அபத்தமானதாகும். அது பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு மட்டுமே சாதகமான சூழலை உருவாக்கும்.

 

ஜாகீர் உசைன் கைதுக்குப்பின்னர் இலங்கையில் இருந்து மேலும் பல பாகிஸ்தானிய உளவாளிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருக்கக்கூடும் என இந்திய உளவு அமைப்புகளால் சந்தேகிக்கப் படுகிறது. மேலும் இந்திய ஊடகங்களில் இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் வளைகுடா நாடுகளிலும் சிரியாவிலும் பயங்கரவாத பயிற்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது..  இதன் அடிப்படையில் இந்தியாவின் பிரபல பத்திரிகையொன்று கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் யார் என்பதை அறிய ஐரோப்பாவில் வாழும் எனது முஸ்லிம் நண்பர்களை தொடர்புகொண்டுள்லது. ஜாகீர் உசைனைப் பற்றி என்னுடைய நண்பர்கலுக்குத் தெரிந்திருக்கவில்லை. யார் இந்த ஜாகீர் உசைன் என்கிற கேழ்விதான் இன்று இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கேழ்வியாக உள்ளது.

 

இலங்கை முஸ்லிம் மக்கள் கைதி ஜாகீர் உசைன் யார்? அவரது உண்மைப்பெயர் என்ன? ஜாகீர் உசைன்னின் உறவுகள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் யாரையாவது இந்திய உளவுத்துறை தொடர்ர்பு கொண்டதா? என்கிற கேழ்விகளுக்கு விடை தேடி அலைகிறார்கள். இதற்கான பதில்களை கொழும்பில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் மக்களின் ஆதவையும் நம்பிக்கையையும் பெறாமல் தென்னிந்தியாவரை பரவலாகியுள்ள பாகிஸ்தானிய ஊடுருவல் பிரச்சினைகளை கையாளுவது சாத்தியமில்லை.      

 

இலங்கையில் முஸ்லிம் அடிபடைவாத பிரச்சினை உள்ளது அதனால் சர்வதேச சமூகத்துக்கு ஆபத்துள்ளது என்று என்று பேரினவாதியான கோத்தபாய சர்வதேச பயங்கரவாத கருத்தரங்குகளில் கூறி வருகின்றார். என்னைக் கைதுசெய்த இலங்கை பாதுகாப்புச் செயலகத்தின் அதிகாரிகளின் பேச்சுகளில் இருந்து ஜேவிபி அமைப்பை அழித்ததுபோல வகாபி அமைப்புகளை அழிக்கிற ஒரு திட்டம் பரிசீலனையில் இருக்கிறதாக ஊகித்தேன். இதுபற்றி இலங்கை முஸ்லிம்களை எச்சரிக்கும் கடமை எனக்குள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பலகீனப்படுத்தும் சூபி எதிர்ப்பை கைவிட்டுவிட்டு சூபிகளுடன் சமாதான சகவாழ்வுக்கு வகாபிகள் முன்வரவேன்டும். சூபி எதிப்பு வகாபிகளை தனிமைப் படுத்தி இலகுவான இலக்குகளாக்கிவிடும். அரச ஆதரவுடன் இயங்கும் சிங்கள பெளத்த பேரின வாதிகளின் நடவடிக்கைகளால் விரக்தியடைதுள்ள இலங்கை முஸ்லிம் இளைஞர்களை அரவனைத்து செல்லும் அமைபு ரீதியான அணுகுமுறைகள் சூபி அமைப்புகளிடமோ முஸ்லிம் தலைமைத்துவத்திடமோ குறிப்பிடத்தக்க அளவில் இன்னும் உருவாகவில்லை. முஸ்லிம் மக்கள் மத்தியில் சிவில் சமூகம் வலுவடையாமல் இத்தகைய பிரச்சினைகளை உருப்படியாக அணுகித்தீர்ப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்.  இப்பிரச்சினதூள்வாரியாகத் தீர்க்கப்படுவது  தமிழ் முஸ்லிம் மக்களிடையான உறவுகளுக்கும் அவசியமானது. தமிழர்கலது பாதுகாப்புத் தொடர்பாகவும் முக்கியமானது. மேலும் முஸ்லிம் மக்கலிடையான உள்வாரி ஜனநாயகமும் சமரச சகவாழ்வும் மீழ இஸ்தாபிக்கப் படுவ மட்டும்தான் முஸ்லிம் இளைஞர்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும். 

 

இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் சிலரை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்றுகூறும் இந்திய அரசு வெளிப்படைத் தன்மை இன்றி செயல்பட்டு ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் கலவரப்படக்கூடிய  பாணியில் காரியமாற்றக்கூடாது. இலங்கையில் உள்ள இந்தியதூதரகம் உடனடியாக இலங்கை முஸ்லிம்களின் சிவில்சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்க்கு ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும். இலங்கை முஸ்லிம் மக்கள் ஏற்க்கனவே கலவரம் அடைந்திருக்கிறார்கள். அவர்களை இந்தியா மேலும் கலவரப் படுத்துவது பாகிஸ்உளவுத் துறைக்கு மட்டுமே வாய்பாக அமையும். அத்தகைய ஒரு தவறு நடந்து விடக்கூடாது.

 

 

முஸ்லிம் மக்களின் அச்சத்தை போக்கி அவர்கள் ஆதரவை பெறுகிற முயற்ச்சியில் போதிய அளவு இந்திய அரசோ இலங்கையில் உள்ள இந்திய தூதரகமோ பணியாற்றியுள்ளதாகத் தெரியவில்லை. கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைனைனின் அடையாளத்தை பகிரக்கூடிய அடிப்படைத் தகவல்களை இந்திய தூதரகம் இலங்கை முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ள வேணும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுடனான உறவுகளைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் இலங்கையில்பாகிஸ்தானிய உளவாளிகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும்.

 

ஏற்கனவெ கோத்தபாயா தரப்பு சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் மக்கலைப் பாதிக்கக்கூடிய குற்றச் சாட்டுக்.ளை முன்வைத்து வருகிறது, உள்நாட்டில் புதுபல சேனய போன்ற சிங்கள பெள்த்த அமைப்புகள் முஸ்லிம் மக்கள் மத்தில் மத அடிப்படைவாதிகள் செயல்படுகிறார்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார்க்கள். இவற்றையெல்லாம் மிஞ்சும் விதத்தில் சிங்கள பெளத்த அடிப்படை வாதிகள்  முஸ்லிம்கள் மீதும் அவர்களது வழிபாடிடங்கள் மீதும் இடம்பெறும் தாக்குதல்களில் பெரும்பாலானவற்றின் பின்னே வகாபிகளும் ஏனைய அடிப்படைவாத அமைப்புகளும் இருப்பதாக பேசவும் எழுதவும் ஆரம்பிதிருக்கிறார்கள். தி ஐலண்ட் பத்திரிகை இத்தக்கைய கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரித்து வருகிறது.

 

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலமும் சுபீட்சமும் வளர்ச்சியும் அரசியல் வெற்றிகளும் அவர்கள் உள்வாரியாக ஜனநாயகத்தையும் உள்வாரியான சமாதான சகவாழ்வையும்கௌறுதியாக மீழமைப்பதிலேயே தங்கியுள்ளது.

.இத்தகைய சூழலை கட்டி எழுப்புவது தொடர்பான முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு தேசிய விவாதத்தை பரவலான பள்ளிவாசல் கமிட்டிகளும் முஸ்லிம்னஊடகங்களும் அறிஞர்களும் கல்வி நிறுவனங்களும் முஸ்லிம் சிவில் சமூகமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடனடியாகவே ஆரம்பிக்க வேன்டும்.

 

மத மற்றும் பேரின அடிப்படைவாதம் அது எந்த மதமாக பேரினமாக இருந்தாலும் அது ஒரு புவியிலில் வாழும் இனத்தின் விடுதலை சார்ந்த (Teritorial) இயக்கமல்ல.. அது முடிவில்லாத சித்தாந்தம் (Idiological) சார்ந்த வன்முறையாகும். அத்தகைய அடிப்படைவாத வன்முறைகள் இறுதியில் தான் சார்ந்த மக்களுக்கே பேரழிவாக முடியும்.

 

 

சவூதி அரேபிய ஆதரவுடன் இயங்கும் பல அடிப்படைவாத அமைப்புகள் உலகம் முழுவதும் தாம் சார்ந்த மக்களுக்கே பேரழிவாக முடிந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தகைய சிக்கல்களால் இலங்கையிலும் சில உள்வாரி வன்முறைகள் இடம் பெற்றுள்ளன. தர்க்காக்கள் தாக்கப் பட்டுள்ளன என தி ஐலன்ட் பத்திரிகை எழுத்தாளர்கள் பட்டியலிடுகின்றனர். முஸ்லிம் மக்கள் மத்தியில் இத்தகைய ஒரு ஜனநாயகமற்ற சூழல் அனுமதிக்கப்படுவது பெரும் ஆபத்துக்களை உருவாகக் காரணமாகிவிடும். இதனை இலங்கை முஸ்லிம்கள் அனுமதிக்கக்கூடாது. சூபி அமைப்புகளும் வகாபிசார் அமைப்புகளும் கலந்துரையாடி முஸ்லிம் மக்களது உள்வாரி உறவுகளில் ஜனநாயகத்தையும் சமரச சகவாழ்வையும் உறுதிபட கட்டியெழுப்ப வேன்டிய கடைசித் தருணம் இதுவாகும். முஸ்லிம் மக்கள் தங்கள் உள்வாரிப் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால். கைமீறிப்போனதும் கையறு நிலையில் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கெதிராக சிங்கள பேரின வாத சக்திகளிடமும் அரசிடமும் சரணடையும் ஆபத்து உருவாகி விடும். சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பும் நெருக்கடிகளும் உருவாகிவிடும்..

 

இலங்கை முஸ்லிம் மக்கள் ஒரு நண்பனின் ஆலோசனைகளாக எனது எச்சரிக்கைகலை எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்மிலங்கைத்தீவில் முஸ்லிம் மக்கள் மலையக மக்கள் ஈழ தமிழ் மக்களிடையான ஐக்கியமும் முற்போக்கான சிங்கள மக்கள் சக்திகளுடனான ஒட்டுறவும் ஓங்குக..

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயா, முதலில் இலங்கையில் வாழும் மிஸ்லீம்கள் சிங்களவனுக்குக் காவடி தூக்குறத நிறுத்தச்சொல்லி உங்கள் நட்பு வட்டாரத்தில கூறுங்கோவன். ராவுப்ஹக்கீம், ரிஸாத் வகையறாக்கள் போன்றோரது அடாவடிகளையும் அடிவருடித்தனத்தையும் நிறுத்தச்சொல்லுங்கோ. தமிழர்கள் முஸ்லீம்களுக்கு வரலாற்றுத் தவறுவிட்டதாக அடிக்கடி கூறுவதால் அவர்கள் தமிழர்களுக்கு செய்த நிந்தனைகளை நியாயப்படுத்தவேண்டாம். கிழக்கு மாகாணசபையது நிர்வாகத்தை முஸ்லீம் ஒருவரது தலமையில் தமிழ்த் தேசியக்கூட்டணி செயற்படுத்துவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில் புதிய உடன்பாடு ஒன்றுக்கு வருவோம் எனக்கூறும்போது ராவுப்ஹக்கீமது சிங்களப்பெண்தொடர்பிலான கொலையைக் காட்டி மகிந்த வளைத்துப்போட்ட விசையம் உண்மையா என உங்கள் நெருங்கிய நண்பர் ஹக்கீமிடம் கேட்டுப்பாக்கலாமே. நாங்களே எழுந்திருக்க வழியில்லாது முக்கி முனகிக்கொண்டிருக்கையில் அவர்களது முதுகையும் தடவிவிடுங்கோ எனக்கேட்பது உங்களுக்கு நியாயமாப்படுகுதோ. காத்தான்குடிப்பக்கம் போய்பாருங்களேன் உங்கள் தாடியைச் சுன்னத் செய்யாது ஊருக்குள்ள வரவிடமாட்டம் என இந்தக்கூட்டம் கூறும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய எழுஞாயிறு

 

 சென்னையில் பாகிஸ்தான் உளவாளியென்ற குற்றச்சாட்டின் பெயரில் கண்டியைச் சேர்ந்த சாகிர் குசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக  இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிய புதிய விவாதங்கள் எழுந்துள்ளது. இக்கட்டுரையும் அந்த விவாதத்தின் ஒருபகுதியே.இந்தக் கட்டுரையை மிகுந்த தயக்கத்துடனேயே யாழ் இணையத்தில் பிரசுரித்தேன்.

 

என் கட்டுரையை ஒட்டி உங்கள் கருத்தை முன்வையுங்கள். வரவேற்பதுடன் பதில் எழுதுவேன். நான் தொடர்ந்து யாழில் எழுதவேண்டும் என  விரும்புகிறவர்கள் நான் இங்கு முன்வைத்துள்ள கட்டுரையை வெட்டி அல்லது ஒட்டியே விவாதிக்க வேன்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் யாழுடன் எப்போதும் இணைந்திக்கவேண்டும் என்பதிலும் உங்களது புலமையிலும் எப்போதும் பிரியமுள்ளவன்,

 

ஆனால் கடந்தகாலங்களில் முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து செய்த துரோகத்தனங்களும், தமிழர்களது போராட்டத்தை அவர்கள் சிங்களவர்களிடம் பெற்ருக்கொள்ளக்கூடிய சலுகைக்கான விலை நிர்ணய சக்தியாகவும் பாவித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

ஈழத்தமிழர்களது வாழ்வாதாரத்தி இலங்கைத்தீவில் மட்டுமல்ல காவிரிப்படுகையில் மிதேன் வாயு எடுப்பது அடங்கலாக சிதைத்துக்கொண்டு இருக்கும்  "தமிழர் விரோததேசம் இந்தியா"போல் இவர்களையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

 

அனால் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழுகின்ற எமக்காக அழுகின்ற, உயிர்விடுகின்ற இஸ்லாமியர்களது உயர்ந்த மனம்கண்டு நான் நன்றியுடையவனாகிறேன். காலப்போக்கில் இலங்கைத் தீவில் வாழும் இஸ்லாமியர்கள் மனம்மாறி ஹக்கீம் ரிஸாத் போன்றோரிலிருந்து விலகி எம்முடன் கைகோர்க்க உங்களைப்போன்றோரது சீரிய பணி தேவைப்படுவதையும் உண்ர்கின்றேன்.

 

எனது கருத்துக்களும் சொல்லாடலும் தவறாகில் மன்னிக்கவும்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலமும் சுபீட்சமும் வளர்ச்சியும் அரசியல் வெற்றிகளும் அவர்கள் உள்வாரியாக ஜனநாயகத்தையும் உள்வாரியான சமாதான சகவாழ்வையும்கௌறுதியாக மீழமைப்பதிலேயே தங்கியுள்ளது.

.இத்தகைய சூழலை கட்டி எழுப்புவது தொடர்பான முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு தேசிய விவாதத்தை பரவலான பள்ளிவாசல் கமிட்டிகளும் முஸ்லிம்னஊடகங்களும் அறிஞர்களும் கல்வி நிறுவனங்களும் முஸ்லிம் சிவில் சமூகமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடனடியாகவே ஆரம்பிக்க வேன்டும்.

பொயெட்




என்று முஸ்லீம் அரசியல்வாதிகள்  இலங்கையில் தாங்கள் தனித்துவமான ஒரு இனம்
வட கிழக்கில் ஒரு நாடு உருவானால்  எங்களுக்கு ஒரு தனி அலகு வேண்டும் என்று சிங்களவர்களுக்கு முண்டு கொடுத்தார்களோ அன்றே அவர்கள் தங்கள் இனத்திற்குத் துரோகம் செய்தவர்கள் ஆகிவிட்டார்கள்.

என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் லாபங்களுக்காக சிங்கள அரசுடன் ஒட்டி கூட்டமைத்து  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகத் தேர்தலில் களமிறங்கினார்களோ
அன்றே அவர்கள் தங்கள் சொந்த இனத்திற்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆகிவிட்டனர்.

தமிழ்ப் பகுதிகளில் தங்கள் குடியேற்றத்தை விருத்தி செய்யச் சிங்களவர்களுக்குத் தமிழரின் நிலங்களைத் தாரை வார்க்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமான உறவுகள் சீரமைக்கப்படுவதில்  சிக்கல்கள் இருந்தே தீரும்.

இலங்கை முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் அவர்களின் கைகளை மீறிச் சென்று இன்று ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் கைகளில் தங்கியுள்ளது.
அரசியல்வாதிகளோ கையறுந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் பிடிகளில் மாட்டியுள்ளார்கள்.

 

ஆக முஸ்லீம் மக்கள் உண்மையான தங்களின் இன நலன்களுக்கு உரிமைகளுக்கு சுமுகமான வாழ்வாதாரத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் கூடிய அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு ஆதரவளித்தால் சிலவேளைகளில் அவர்களின் உறுதியான வாழ்வாதாரத்திற்கு அது வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே,

 

அவர்களது தலைவர்கள் கவலை தெரிவித்தால் ஆதரவு தரலாம், ஆயினும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லையே. மேலும் இந்த கண்டி நபர் செய்கை மார்க்க கடமை என்று கொண்டாடவும் கூடும்.

 

அவர்கள் கவலை தெரிவித்து கருத்து வெளியிட்டு ஆதரவு கேட்டால் நாம் ஆதரவு தருவதில் நியாயம் உண்டு. நாமே கருத்து தெரிவித்து, அதற்கு அதரவு கோரினால் சரியாகப் படவில்லையே.

 

எனினும் உங்கள் கவலையின் நியாயம் புரிகிறது.

 

தமிழ் நாட்டின் ஆதரவினை நசுக்க, 'இலங்கைத் தமிழர்' என இந்த 'இலங்கை முஸ்லிம்' அடையாளப் படுத்தப் படுவதை, சிங்களம் ரசிக்க, அவர்கள் தலைமை கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்த கவலை எமக்குண்டு, கவிஞரே!

 

மேலும் அவசரத்தில் சொற்பிழை, கருத்துப் பிழை கவனிக்க வில்லை போலிருக்கிறது, எனினும் கவியிடம் இருந்து எதிர் பார்க்க முடியாதே. 

 

இலங்கை முஸ்லிம் மக்கள் கைதி ஜாகீர் உசைன் யார்? அவரது உண்மைப்பெயர் என்ன? ஜாகீர் உசைன்னின் உறவுகள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் யாரையாவது இந்திய உளவுத்துறை தொடர்ர்பு கொண்டதா? என்கிற கேழ்விகளுக்கு விடை தேடி அலைகிறார்கள். இதற்கான பதில்களை கொழும்பில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் மக்களின் ஆதவையும் நம்பிக்கையையும் பெறாமல் தென்னிந்தியாவரை பரவலாகியுள்ள பாகிஸ்தானிய ஊடுருவல் பிரச்சினைகளை கையாளுவது சாத்தியமில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள் சேலையைப் போன்றவர்கள். முள் சேலையில் விழுந்தாலும், சேலை முள்ளில் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான்.. :D ஆனாலும் இலங்கையில் அவர்களது அரசியல் அதை உணர்வதாக இல்லை. இலங்கையில் இருந்து முஸ்லீம் ஒருவர் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கையில் ஈடுபட்டால் அது ஒரு தனிநபர் சார்ந்த விடயமாகப் பார்க்கப்பட மாட்டாது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த இனம் கண்காணிப்பில் இருக்கப் போகின்றது. இந்தியாவுக்கு வியாபார நிமிர்த்தமாக இவர்கள் விசா எடுப்பதுகூட கடினமாகலாம்.

 

இலங்கையில் தமிழ்த்தரப்புடன் சேராமல் தாங்கள் தனி இனம் என்று இவர்கள் சொல்லலாம். அதற்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லீம் ஆதிக்கம் இவர்களுக்கு பின்புல சக்தியாக இருக்கலாம். ஆனால் அங்கே இன்னும் சில தசாப்தங்களில் எண்ணை வளம் வலுவாகக் குறைந்துவிடும் என்கிறார்கள். அதன் பிறகு இவர்களது அரசியல் வாய் பிளந்துவிடும். கேட்பதற்கு ஒரு ஈ, காக்கா இருக்காது.. :o  :D

 

 

கட்டுரைக்கு நன்றி கவிஞரே.

 

ஈழத்தில் சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களுக்கான உரிமைகளை பெற்று தம் இருப்பை பேணுவதற்கு அவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் உங்கள் கட்டுரையை வரவேற்கின்றேன். 

 

உங்கள் கட்டுரை தொட்டுச் செல்லும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் - முக்கியமாக கிழக்கில் இன்று தீவிரம் பெற்று வரும் சூபி, வகாபி சார் அமைப்புகளுக்கு எதிராக கிழக்கிலும் சரி, முழு இலங்கையிலும் சரி விவாதிக்கக் கூடிய முஸ்லிம் தலைமைகளோ அல்லது புத்தி சீவிகளோ இருக்கின்றனரா? இவ் அடிப்படைவாத அமைப்புகள் ஈற்றில் தமிழர்களுக்கும் எதிராக இயங்கக் கூடிய சூழல் இருக்கும் போது,  இவற்றை பற்றிய பிரக்ஞை தமிழ் அமைப்புகளிடம் இன்று தோன்றியுள்ளதா?

 

இன்னுமொன்று,

 

ஜாகீர் உசைன்  கைதின் பின், இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரக் கூடிய சூழல் இருக்கும் நிலையில்  அது இலங்கை முஸ்லிம்கள் மீதும், பாகிஸ்தான் உளவு அமைப்பு மீதும் கடும் போக்கை கையாளத் தொடங்குமாயின் அது அப் போக்கு தமிழர்களுக்கு சாதகமாக அமையக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படும் அல்லவா?  ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் பலம் பொருந்தியதாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் தென்னகம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஜாகிர் உசைன் கைதின் பின் பல தமிழக அமைப்புகள் சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர் அல்லவா?  இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன.

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் தமிழ் முஸ்லிம் மக்களிடை எஞ்சியுள்ள நல்லுறவுக்கு முஸ்லிம்கள் தரப்பில் சூபிகளின் பங்களிப்பு முக்கியமானது. எதிர்காலத்தில் இலங்கைதீவில் குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் தாயகத்தில் உருவாகபோகும் பலமான தமிழ் முஸ்லிம் உறவுகளில் முஸ்லிம் தரப்பு அத்திவாரக் கல்லாக அமையப்போகிறவர்கள் சூபிகள்தான். இதை நாம் புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய ஒரு இலக்கை அடைய நமக்கு தமிழ் நாட்டு முஸ்லிம்களின் ஆதரவும் அவசியம். 1970 களின் எண்ணைச் செளிப்பின்பின்னர் சவூதி அரேபிய ஆதரவுடன் வளற்ச்சிபெற்ற வகாபி சார் அமைப்புகள் சமரச சகவாழ்வை ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாக்கப் படவேண்டும்.

 

பமேற்படி நிகழ்வை பாரதி ஜனதாவும் ஏனையவர்களும்  முஸ்லிம் விரோத அடிப்படையில் கையாண்டால் அது முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கை அரசையும் இந்திய அரசையும் சேர்த்து வைக்கிறதாகவே அமையும். அடிப்படையில் இது இலங்கை முஸ்லிம்கள் எதிர் இந்தியா பிரச்சினையல்ல. இது பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளுக்கு இடமளித்து ஒத்துழைக்கும் இலங்கை அரசு எதிர் இந்தியா பிரச்சினையாகும்.

 

ஒத்துக்கொள்கிறீர்களா நிழலி? பதில் எதிர்பார்த்து

Edited by poet

 

 

பமேற்படி நிகழ்வை பாரதி ஜனதாவும் ஏனையவர்களும்  முஸ்லிம் விரோத அடிப்படையில் கையாண்டால் அது முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கை அரசையும் இந்திய அரசையும் சேர்த்து வைக்கிறதாகவே அமையும். அடிப்படையில் இது இலங்கை முஸ்லிம்கள் எதிர் இந்தியா பிரச்சினையல்ல. இது பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளுக்கு இடமளித்து ஒத்துழைக்கும் இலங்கை அரசு எதிர் இந்தியா பிரச்சினையாகும்.

 

ஒத்துக்கொள்கிறீர்களா நிழலி? பதில் எதிர்பார்த்து

 

கவிஞரே,

 

நீங்கள் கூறியிருப்பது போன்று இது 'இது பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளுக்கு இடமளித்து ஒத்துழைக்கும் இலங்கை அரசு எதிர் இந்தியா பிரச்சினையாகும்.' என்றால்   எப்படி முஸ்லிம் விரோத அடிப்படையில் இலங்கை அரசையும் இந்திய அரசையும் சேர்த்து வைக்கும்?

 

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கும் சீன உளவு அமைப்புகளுக்கும்  இலங்கை உதவி புரிகின்றதென நிலையான ஆட்சி கொடுக்க கூடிய காங்கிரஸ் அல்லாத அரசு  நம்பினால் அதன் கோபம் இலங்கை அரசு மீதுதானே திரும்புவது தானே நியாயம்?

 

பா.ஜ.க ஆட்சியமைக்கும் எனில் அதன் முஸ்லிம் எதிர்ப்பை தமிழர்கள் தமக்கு சாதகாமாக பயன்படுத்தி அதனை  பாகிஸ்தானுக்கு சார்பான இலங்கை அரசின் மீதான எதிர்ப்புணர்வாக மாற்ற முடியாதா?

 

அனைத்தையும் இழந்து அநாதையாக நிற்கும் நாம்  பா.ஜ.அரசு ஆட்சிக்கு வரும் எனில் அதன் முஸ்லிம் எதிர்ப்பை சாதகமாக்கி எமக்கான ஆதரவை இந்தியாவிடம் இருந்து பெறக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து காய் நகர்த்தல் சரியான விடயமாக இருக்காதா?

 

எம் பிரச்சனையில் இந்தியாவின் ஆதரவு இல்லாவிடின் காத்திரமாக எதுவுமே அமைந்து விடாது என்பது யதார்த்தமாக இருக்கும் போது, உருவாகும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களைக் கூட விட்டு விடக்கூடாது என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாண் ஏற்றிய அரிச்சுணனுக்கு பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்ததுபோல நமக்கு முதல் எதிரிமட்டுமே தெரிந்திருந்தால் எப்பவோ கதையை முடித்திருக்கலாம்.. எப்பவும் பறவையின் கழுத்து இலங்கை அரசு மட்டும்தான். அவர்கள் மட்டும்தான் எப்போதும்  எங்கள் முதல் எதிரி. ஏனையவர்களல்ல. 

 

பறவையின் கழுத்தை விட்டுவிட்டு மரத்தையும் முழுக் காட்டையும் இலக்காக்கிய எல்லோரும் தோற்றுப்போவார்கள். இதுதான் வரலாற்றின் பாடம். .

ராஜதந்திரமின்மை மட்டுமல்ல  அதீத ராஜதந்திரம்மும் இறுதியில் சுய அழிவுக்குத்தான் வழிவகுக்கும்.  

கவிஞரே.. என்னதான் இராஜதந்திரம் என்றாலும் நாங்கள் மாடு திண்டாலும் அவங்க பண்டி தின்னாங்கள்... ஆராவது ஒருதராவது முள்ளிவாய்க்கால்பற்றி கதைக்கிறார்களோ, சொல்லுங்கள்!! :o  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் முஸ்லிம்களும் பல பிரிவுகளாக தமக்குள்ளேயே பிரச்சினைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் சிங்களவர்கள் ஒற்றுமையாக தமது இலக்கை நோக்கி நகர்கின்றார்கள். எதிர்காலத்தில் இலங்கைத்தீவு எப்படி இருக்கும் என்பது சிங்களவர்களின் கைகளில்தான் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

'பொயட்டு' முசுலிம்களுக்கு உருகிற இந்த உருகு, சொந்த ஈழத்தமிழருக்கே இந்தளவிற்கு உருகியிருப்பாரா என்பது சந்தேகமே! :lol:

 

நிறம் மாறிய பூ! :).

முஸ்லீம்களுக்கு இப்போது தவ்ஹீத் வெறி கூடி விட்டது...அது அடங்கும் வரை எல்லாருக்கும் பிரச்னை தான்......

 

"இலங்கையில் முஸ்லிம் அடிபடைவாத பிரச்சினை உள்ளது அதனால் சர்வதேச சமூகத்துக்கு ஆபத்துள்ளது என்று என்று பேரினவாதியான கோத்தபாய சர்வதேச பயங்கரவாத கருத்தரங்குகளில் கூறி வருகின்றார். என்னைக் கைதுசெய்த இலங்கை பாதுகாப்புச் செயலகத்தின் அதிகாரிகளின் பேச்சுகளில் இருந்து ஜேவிபி அமைப்பை அழித்ததுபோல வகாபி அமைப்புகளை அழிக்கிற ஒரு திட்டம் பரிசீலனையில் இருக்கிறதாக ஊகித்தேன் இதுபற்றி இலங்கை முஸ்லிம்களை எச்சரிக்கும் கடமை எனக்குள்ளது."  இது ஏன்? அவகளின் தீவிரமான போக்கினால் தானே அழிவை எதிர் நோக்குகிறார்கள்...அவர்களே சூபிக்களை கொள்ளும் போது...எப்போது நாகூர் தர்க்காவை இடிக்கலாம் என்று பார்த்துகொண்டு இருக்கிறார்கள்....

இன்று சிரியாவில் கொல்லப்படுவார்கள் வகாபிகலாலேயே மிகவும் மிருகத்தனமாக கொல்லப்படுகிறார்கள்....

 

மேலே வன்னியன் சொன்னது போல் முஸ்லீம்கள் மேல் அதுவும் பயங்கரவாதத்தை வளர்க்கும் முஸ்லீம்கள் மேல் ஏனிந்த அனுதாபம்?

அதுவும் இலங்கை/இந்திய அரசுகள் அவர்கள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று மிக வருந்துகிறீர்கள்?

 

poet: நீங்கள் ஒரு வகாபி முஸ்லீம் என்றால் ...உங்களது இனத்தை காக்க முயலுகிறீர்கள் என்று எடுக்கலாம்...நீங்கள் அப்படி இல்லை என்றால் இந்த அனுதாபம் இவர்கள் மேல் தேவையற்றது....அவர்கள் விதைப்பதையே அறுவடை செய்வார்கள்...

 

"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பொயட்டு' முசுலிம்களுக்கு உருகிற இந்த உருகு, சொந்த ஈழத்தமிழருக்கே இந்தளவிற்கு உருகியிருப்பாரா என்பது சந்தேகமே! :lol:

 

நிறம் மாறிய பூ! :).

அன்புக்குரிய ராசவன்னியன்,

1960பதுகளின் பிற்பகுதிகளில் தமிழர் மத்தியில் சமூக நீதியை உறுதிப் படுத்த ஆயுதம் துக்கியவர்களில் சிறை சென்றவர்களில் நானும் ஒருவன். இதற்க்குப் பதிவுகள் உண்டு. அதன்பின்னர் தி ஐலண்ட் இதழிலும் நோர்த் ஈஸ்ட் கரால்ட் இதழிலும் தமிழர் ஆயுதப் போராட்டத்தில் ராணுவ புவியியல் அணுகுமுறையின்  தந்தை என்று தாராக்கி சிவராம் பதிவு செய்திருக்கிறார். தமிழருக்காக நான் எவ்வளவு உருகிருக்கிறேன் என்பதை அறிந்த போராளிகள் சிலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ஓயாத அலைகள் வெற்றியின்பின்னர் அமைப்பு எனக்கு தோழர் பாலகுமாரனூடாக நன்றி தெரிவித்ததை அறிந்தவர்கள் சிலரும் இன்று  இனகொலைக்கு தப்பி வாழ்கிறார்கள்..

அவர்கள் எப்போதாவது இதுபற்றி எழுதவோ பேசவோ கூடும். .

 

அரசியல் இராணுவ ரீதியான பிழைகழை சுட்டிக்காட்டி விமர்சிக்காமல் திருத்தாமல் வெற்றிகரமான பாதைகளை கண்டடைய முடியாது என்பதே என் நிலைபாடாக இருந்தது. நீங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற் பட்டவர் நீங்கள் சுதந்திரமாக எங்களை விமர்சிக்கலாம். எங்களுக்கு இராணுவப் புவியியல் தொடர்பாக சில குறிப்பிட்ட ப்பணிகளை செய்துதாருங்கள் என இயக்க தலைமை புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முன்னணிப் போராளி அமரர் யாழ்வேந்தன் மூலம் 1996ல் என்னக்கு தெரிவித்தது.

 

இவை பற்றியெல்லாம் பேசவேண்டிய தேவை எனக்கில்லை. புகழ்பெற எனக்கு பல துறைகள் இருக்கிறது. பாது காப்பு ஆய்வுகள் தொடர்பாக இந்துசமுத்திரம் எனது களமாக விரிவடைந்துவிட்டது.

.

எதிர்கால சந்ததிக்காக தமிழர் விடுதலைக் களத்தில் நான் கண்டதும் கேட்டதும் பற்றி எழுத வேன்டும் என முடிவு செய்துள்ளேன். எங்கள் வெற்றி தோல்விகளுக்கான புறக்காரணிகளும் அகக்காரணிகளும் பற்றி விரிவாக எழுதவேன்டும்.

 

மிகவும் தயக்கத்தோடுதான் யாழில் எழுதுகிறேன். எதற்குமே நேரமில்லாத வாழ்வு என்னுடையது. முதல் எழுத்தும் கடைடசி எழுத்தும் சரியாக இருந்தால் எத்தனை தரம் திரும்ப திரும்ப வாசித்தாலும் எழுத்துப்பிழைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அதனால் நான் எழுதுவதை வாசிப்பதில் உங்களுக்கும் சிரமம் தயக்கம் இருக்கலாம். இதுபற்றி யாழில் எழுதினால் விவாதம்

திசை திரும்பிவிடும் தயவு செய்து விவாதப் பொருளோடு நிற்போம்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

'பொயட்' நீங்கள் கூறியபடியே இருக்கட்டும்.. ஈழத்தில் பல்வேறு துறைகளில் விற்பன்னரகள் இருந்தும் ஒருங்கிணைந்து பொது இலக்கு நோக்கி நகராமல், செயபடாமல் ஈழம் திக்கற்று நிற்கிறதே ஆதங்கமதான்..

 

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், ஒற்றுமை இல்லாமல் தங்கள் நாட்டை அந்நியருக்கு தாரை வார்த்தனர், மதுரையின் இருண்டகாலம் தொடர்ந்தது. சோழர்கள், நாயக்கர்கள், இசுலாமியர்கள் இறுதியில் ஆங்கிலேயர்களென மதுரை கொள்ளை போய் சிதைந்தது..

இன்று அதே கதி ஈழத்திலும் தொடர்கிறது..

 

இன்னொரு அலாவுதின் கில்ஜியோ, மாலிக் கபூரோ, வேறொரு நாயக்கரோ தமிழர்களுக்கு தேவையா? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் அவசியம் பற்றி உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். எப்பவும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பளிக்கும் அமைப்புகள் எங்கள் மத்தியில் இருக்கவில்லை. எனக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

 

பல்துறை விற்பனர்களின் கருத்துகளுக்கு களம் அமைக்கும் ஒரு பக்கத்தை யாழ்களம் ஆரம்பிக்கலாம். அதைஆங்கத்தவர்களும் பதிவு செய்து அங்கத்துவம் பெறுகிறவர்களும் பட்டும் உழ்நுழையும் பக்கமாக வைத்திருக்கலாம். ஆட்சேபணை இல்லாத பகுதிகளை யாழில் மீழ் பிரசுரம் செய்யலாம்.

 

கலந்துரையாடல் வாய்ப்புகள் உருவாக்கப்படாமல் ஒருபோதும் ஒருங்கிணைப்பு ஏற்படுவதில்லை..

பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதெல்லாம் கானல் நீர் தான். காங்கிரசுக்கு விடுதலைப் புலிகளோடு மட்டும்தான் முரண்பாடு. ஆனால் பா.ஜ.க வுக்கு தமிழர்கள் என்ற இனத்தைக் கண்டாலே ஆகாது. அவர்களின் ஆணிவேரான ஆர்.ஸ்.ஸ் ஒரு தீவிர ஆரிய இயக்கம். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணிய சுவாமி, சோ இவர்களை கண்டுமா பா.ஜ.க வால் நன்மை விளையும் என்று நம்புகிறீர்கள்??.  இப்பொழுது இந்தியாவிலிருந்தும் தமிழக தலைமைகளாலும் எந்தவிதமான காத்திரமான முடிவுகளையும் இலங்கைமேல் பிரயோகிக்க முடியாது.

உங்களுக்காக மட்டுமே குரல் கொடுக்காது மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்கும்போதுதான் உலகம் உங்களை உற்று  நோக்கும். உங்களின் பெருந்தன்மை மற்றவர்களுக்கும் தெரியவரும். உங்களது போராட்டத்திற்கு மேலும் வலு சேரும். உங்களின் நல்ல எண்ணம் கண்டு மற்றவர்களும் சேர்ந்து போராடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அவன் என்னை அடிக்கும்பொது இவன் பார்த்துக் கொண்டு இருந்தான் அதனால் நானும் அவனை அடிக்கும்போது பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று கூறுவது சாதரண ஒரு கடைக்கோடி பாமர மனிதனின் மனநிலை. இப்படி கூறுவதால் இருவருமே அழிந்து போவதற்கான வாய்ப்புதான் அதிகம். நீங்கள் பாமரனாகவே இருக்கப் போகிறீர்களா அல்லது முஸ்லீம் தமிழர்களையும் அரவணைத்து வரலாறை வழிநடத்தப் போறீர்களா என்பது உங்கள் சிந்தைகளில்!!

பொயட் உங்களுக்கு நோக்கத்துக்கு எனது ஆதரவு உண்டு.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆதிதிய இளம்பிறையன்,

 

குறித்த காலப்பகுதியில் இந்தியாவை ஆழப்போவது பஜகாவா காங்கிரசா என்பது இந்திய மக்களின் முடிவு. அதில் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை உணராமல் தேர்தல் கால்த்தில் ஒருசில கட்சி எழுத்தாளர்கள் எங்கள்மீது வாந்தி எடுத்து விட்டார்கள். அதனை மறந்து விடலாம்.

 

இந்திய மக்களது தேர்தல் நிலைபாடுகளுடன் முரண்படுவதோ மோதுவதோ ஒருபோதும் எங்கள் நிகழ்ச்சி நிரலாக முடியாது. இந்திய மக்கள் தெரிவுகளை அங்கீகரித்து எங்கள் மக்களைக் காப்பாறும் நோக்கத்துடன் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர நமக்கு வேறு மார்க்கங்களில்லை நிகழ்ச்சி நிரல்களுமில்லை.

 

உலகில் குறிப்பாக அரசியலில் வரலாற்றுக் காலம்தொட்டே மாற்றம் மட்டுமே மாறாமல் தொடர்கிற நியதியாக உள்ளது. 

 

பஜகவோ காங்கிரசோ அவை மக்களதும் புதிய கூடணிக் கட்சிகளது நிலைபாடுகளுக்கு ஏற்ப ஓரளவாயினும் மாறவே செய்யும்.                                      

 

பஜக/காங்கிரஸ் ஆட்ச்சியல்ல எங்கள் வழிகளையும் வெற்றி வாய்ப்புகளையும் உருவாக்குவது. பாஜக காங்கிரஸ் ஆட்ச்சிக்காலங்களில் மாறும் கூட்டணி நிலமைகளால் மாற்றமடையும் அரசியல்  வெளிகளூடாக எமது பயணத்தைத் தொடரும் எமது ஆற்றல் மட்டும்தான் எங்கள் மக்களுக்கான வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

Edited by poet

கவிஞர் அண்ணா,

இசுலாமிய சகோதரங்களுடன் சேர்ந்து நாம் அரசியல் போராட்டம் நடத்துவது முக்கியம் என்பது எனது கருத்து.

அதே நேரம் எமது இன பிரச்சினை மத பிரச்சினையாக மாறிவிடாமல் பார்க்க வேண்டும்.

ஆனால் இசுலாமிய அரச அடிவருடிகள், இலண்டனில் போராடிய இசுலாமியர் ஒரு அமைப்பு தான் இந்த புலம்பெயர் போராட்டத்தால் சிங்களவரால் உள்ளூர் இசுலாமியர் பாதிக்கபடுவர் என்று போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இசுலாமிய சமூகமே பிரிந்திருக்கும் போது நாம் எப்படி உதவுவது?

It was one organisation out of 20 or so organisations that exist in the UK, coming from one specific part of the UK (and comprising of members largely from around the same geographical area in Sri Lanka) and around 650 out of a potential 25,000 + (exact figure is not known) Sri Lankan Muslims living in the UK.  Hence it was a minority out of a minority.  Why am I emphasising this?   Because poor journalism is creating much more problems than there exists.   It is also because it is necessary to show that there was not only no widespread support for this from within the UK and even actually from Sri Lanka.  In fact the majority of the Sri Lankan Muslim organisations and individuals in the UK did not support the protest.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140108#entry1009024

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.