Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு சின்ன உதவி....

Featured Replies

வேலையில்கூட நான் மிகவும் விரைவாக வேலை செய்வேன்.  மிக நன்றாகவும் வேலை செய்வேன்.  ஆனால், மற்றவர்களின் கண் பட்டோ அல்லது அவர்களின் நெகடிவ் சக்தியோ ஏதோ ஒன்று எனக்கு அடிக்கடி பிரச்சனையையே தந்து கொண்டிருக்கிறது.  அது அவர்களின் பொறாமையாகக் கூட இருக்கலாம்.  பொறாமையினால் என்னை அவர்கள் மேலிடத்திற்குப் போட்டுக் கொடுக்கிறார்கள் போலும்.

போக்கிரி விரைவாகவும் வேகமாகவும் வேலை செய்வது மிகவும் அவசியம் அதை தொடருங்கள் அத்துடன் சாதுரியமாக உங்கள் வேலையை மேலிடம் அறிவதும் மிக்க அவசியம் லாபகமாக உங்கள் பெயர் அடிபட வேலை செயுங்கள்.......சில வெள்ளைக்காரர் வேலை செய்வதை அவதானித்து முக்கிய இடங்களில் உங்கள் பெயர் பதியுங்கள் ....

என் நெருங்கிய உறவினர் ஒருவர். 
 
அவரின் பேரன் வெள்ளையர் இலங்கைய ஆண்டபோது யாழில் இருந்து கொழும்பு வந்தவர். வியாபரங்கள் பல நன்றாகச் செய்து கொழும்பில் பல கோடி சொத்துகள் சேர்த்தார். பின் இவரின் மருமகன் ( மேற் சொன்ன உறவினரின் அப்பா) வியாபரத்தை பொறுப்பேற்று இன்னும் விருத்தி செய்தார்.
 
அப்பா இறந்த பின் சொத்துகளைப் பிரிக்க இவருக்கும் கணிசமான பங்கு வந்தது. இவரும் பல வியாபரங்களை ஒன்றின் பின் ஒன்றாகச் செய்து அத்தனையும் நட்டம்.
 
சொத்து பிரிக்கும் போது வந்த கடைகள், காணிகள், பணம் என்று எல்லாம் இழந்து பல லட்சம் கடனாளி ஆகிவிட்டார்.
 
மனைவியின் சீதனாமாக வந்த வீடும் இழந்து விட்டார்.
 
இப்போது இருக்கக் கூட சொந்த வீடில்லை. சகோதரர் ஒருவரின் வீட்டில் இருக்கிறார்.
 
அவரின் சகோதரர்களும் பல முறை கோடிக்கு மேல் பணம் கொடுத்து அவரை மேல் எழுப்பிவிட முயன்று அதுவும் பலன் அழிக்கவில்லை.
 
அவரின் மனைவியிடம் கதைத்த போது அவ சொன்னா.. 
 
"அவருக்கு காலம் சரியில்லை."
 
"காண்டம் பார்த்தனாங்க..."
 
 
   *  *   *   *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *
 
 
இவரின் கதைக்கும் போக்கிரியின் கதைக்கும் பல இடங்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒரு இடத்தில் ஒற்றுமை இருக்கிறது.
 
 
கெடு குடி சொல் கேளாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காண்டத்திலை என்னப்பா சொன்னவங்கள்? அங்கையும் தண்ணியே.... :(

உங்களின் ஆதங்கம் விளங்குகிறது.  நீங்கள் கொஞ்சக் காலத்திற்கு மிகவும் சிக்கனமாக இருக்கப் பாருங்கள்.  உங்களுக்கு வேலை இருப்பதால் இந்தப் பிரச்சனைகள் ஒரு காலகட்டத்திற்குள் ஒரு முடிவுக்கு வரும்.  அந்தக் காலகட்டத்தை நீண்ட நாட்களாகப் பாருங்கள்.  முடிந்தளவு விரைவில் எங்காவது சென்று ஊர் சுற்றிவிட்டு வாருங்கள்.

 

உங்களின் கார்ப்பயம் எனக்கு விளங்குகிறது.  ஏனெனில் எனக்கும் இந்த நிலை வந்திருந்தது.  சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய காரும் பழுதாகிவிட்டது.  உடனடியாக வாங்கக்கூடிய நிலை இருக்கவில்லை.  எனது வேலையிடம் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.    காரில் போவதானால் அரை மணி நேரத்தில் போய்விடலாம்.  ஆனால், பஸ்சில் சென்றபோது போவதற்கே இரண்டரை மணிநேரம் எடுத்தது.   நான்கு பஸ் மாறிச் செல்ல வேண்டியிருந்ததால் இரண்டரை மணிநேரம் எடுத்தது. சம்மர் நேரம் என்பதால் கொஞ்சம் சமாளிக்கக்கூடியதாக இருந்தது.  வின்ரர் என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே காரில்லாது விட்டால் வேலைக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகவே விளங்குகிறது.  உங்களுக்கு வேறு இரண்டு வேலை என்பதால் காரில்லாவிட்டால் அது மிகவும் கடினம்தான்.  ஆகவே, காரை வேலைக்குச் செல்வதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.  முடிந்தால் சிறிய சிறிய பிரச்சனைகளைத் திருத்தப் பாருங்கள்.

 

தயவுசெய்து முடிந்தவரை உளவியலாளரிடம் செல்வதைத் தடுக்கப் பாருங்கள்.  அப்படிச் சென்றால் அது உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரப் பார்க்கும்.  உங்களுக்கு மிகவும் பிடித்த விடயங்களைச் செய்யுங்கள்.

 

உங்களின் உழைப்பிற்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.  உங்களின் எதுவுமே உங்களைவிட்டுப் போகாது.  இன்றில்லாவிட்டாலும் ஒரு காலத்திற்குப் பின்னரேனும் உங்களுக்குக் கிடைக்கும்.  நீங்கள் சொல்வது போல பணம் மட்டுமே வாழ்க்கையில்லைதான்.  ஆனால், பணம் இல்லாமலும் நாம் வாழ முடியாது.  முடிந்தவரை கொஞ்சக் காலத்திற்கு மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்.  அதன்பின்னர், நீங்கள் விரும்பியபடி வாழலாம்.  மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

காசை மிச்சம் பிடித்தால் நிம்மதியை விலைக்கு வாங்கி விட முடியுமா?...காசை மிச்சம் பிடிக்க முடியுதில்லை என்று அவர் அழுகிறார்.எப்படியாவது மிச்சம் பிடியுங்கோ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.எப்படி மிச்சம் பிடிக்கிறது என்று சொல்லிக் கொடுங்கவன்

  • கருத்துக்கள உறவுகள்

காசை மிச்சம் பிடித்தால் நிம்மதியை விலைக்கு வாங்கி விட முடியுமா?...காசை மிச்சம் பிடிக்க முடியுதில்லை என்று அவர் அழுகிறார்.எப்படியாவது மிச்சம் பிடியுங்கோ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.எப்படி மிச்சம் பிடிக்கிறது என்று சொல்லிக் கொடுங்கவன்

 

அதுதான் ஏற்கனவே சொல்லியிருக்கு.. வலுக்கட்டாயமான சேமிப்புதான் நிலைக்கும். இது எனது அனுபவம் மட்டுமே. வங்கியை நேரடியாக எங்கள் கணக்கில் இருந்து ஒரு தொகையைக் கழித்து சேமிப்பில் போடுமாறு செய்துகொள்ள வேண்டும்.

 

மாத வருமானத்தில் பத்து வீதம் குறைந்து எமது கணக்குக்கு வந்தால் அதற்கேற்றமாதிரி வாழப் பழகிக் கொள்வோம். அது பெரிய விடயமல்ல.

 

சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட பணம் இருந்தால் அதை அடிப்படையாகக் கொண்டு பல வகையான கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதைப் பயன்படுத்தி வீடு வாங்கி வாடகைக்கு விட்டால்...

 

  • வீட்டுக்கடனை வாடகைக்காரர் ஓரளவு அடைத்துத் தருவார்..  :huh:
  • வியாபாரத்தில் இறங்கிவிட்டதால் பலவகையான வரிக்கழிவுகள் கிடைக்கும்..  :rolleyes:

இப்படி பல திட்டங்களை நிறைவேற்றலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஒருவனுக்குத் துன்பம் வந்த வேளையில், அதனை நிவர்த்திசெய்யும் வழிமுறைகளை நாங்கள் அனைவரும் கூடி ஆராய்ந்து அறியத்தருவதற்கு ஆலாய்ப் பறக்கிறோம். எங்கள் இனத்துக்கு துன்பம் வந்த வேளையில், அதனை நிவர்த்திசெய்வதற்கு ஒன்றுகூடத் தயங்குவது மட்டுமன்றி, அந்த இனத்தையே கூறுபோட்டு பிறாண்டிப் பிய்தெறிந்து கூப்பாடு போடுகின்றோம். இச்செயல் தமிழனிடம் இடையே வந்ததா? இரத்தத்துடன் பிறந்ததா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

காலில் செருப்பில்லை என்று கவலைப்பட்டவன் காலே இல்லாத ஒருவனைக் கண்டு அந்த கவலையை விட்டான் என்று எங்கோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.

 

எம்மை விட எத்தனையே மடங்கு துன்பத்தை அனுபவிப்பவர்கள் இருக்கின்றார்கள். சிறைகளில் அகதிமுகாம்களில் வதைகூடங்களில் பசி பட்டிணி ஊனம் என்று நிறைந்திருக்கின்றது. ஏதோ ஒரு விதத்தில் இவ்வாறான நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் உங்கள் துன்பம் குறைவானது அல்து நீங்கள் பரவாயில்லை என்ற நிலை உண்டு. அவ் நிலைகளை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். என்னிடம் என்ன இல்லை என்று சிந்திக்க முதல் என்ன உள்ளது என்று தேடுங்கள்,

 

எங்கள் சமூகம் ஒரு ஒட்டுண்ணி சமூகம் அல்லது ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கு நிகரான சமூகம். ஒருவன் உழைப்பை உறிஞ்சி ஒன்பதுபேர் வாழ முற்படும் சமூகம். அதுவும் வெளிநாடு செல்லுதல் என்ற அடிப்படையானது பல விடங்களில் ஒரு அடிமையை உழைப்புக்கு அனுப்பும் நிலை. அதை குடும்பம் பந்தம் பாசம் பொறுப்பு என்ற சோடனைகளால் மறைத்துவிடுவார்கள். அதேபோல் தனக்கான வாழ்வை வாழ்வதை விட அடுத்தவனுக்காக பக்கத்து வீட்டுக்காரனுக்காக அடுத்தவன் என்ன சொல்வான் நினைப்பான் என்பதற்காக வழ்பவர்கள் அதையே அனுதினமும் யோசிப்பவர்கள் ஏராளம். குடும்பம் அதை தாண்டிய சமூகம் இவற்றில் எந்த நீதியும் நேர்மையும் மனிதநேயமும் கிடையாது. இது ஒரு மோசமான சமூக குடும்ப சூழல். பலரின் வாழ்வு இந்தச் சமூகச் சூழலில் சிறைப்பட்டுள்ளது. இந்த நரகத்தில் இருந்து  விடுவித்துக்கொள்வது அவரவரின் கெட்டித்தனம்.

 

சந்தோசம் என்பது அவரவர் மனம் சார்ந்தது. சிலருக்கு நீச்சல் குளத்துடன் வீடு இருந்தால் தான் சந்தோசம் சிலருக்கு ஒரு தேத்தண்ணியும் ஒரு சிகரெட்டும் போதும் சந்தோசத்துக்கு.

பச்சையை குத்துவம் எண்டால் ........... முடிஞ்சுபோச்சு.
 
உண்மைதான் !
 
சீதன பிரச்சனையால் கூட பெண்களுக்கு பாதிப்பில்லை. அதை யாரோ ஒரு ஆண்தான் உழைக்கிறான்.
மாப்பிளையின் தாயார்தான் அதிகமான இடத்தில் சீதனத்தை முன்னிலை படுத்துவார். 
காரணம் அதன் கஷ்டம் அவர்களுக்கு புரியாது.
  • கருத்துக்கள உறவுகள்

போக்கிரி உங்கள் செலவுகளை குறையுங்கள். Excel sheet இல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் தனித்தனியாக பதியுங்கள் மாத முடிவில் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மீரா, நான் அதிகம் செலவழிப்பதில்லை.  வரும் வருமானம் செலவுகளுக்கே போதாமல் உள்ளது.  அன்றாடம் தேவையானவற்றைக்கூடத் தேவை வரும்போது மட்டுமே வாங்குகிறேன்.  நான் செய்த ஒரே பிழை அந்தச் சீட்டுக்காரரை நம்பியதுதான். நான் உழைத்த அனைத்தையும் செலவழிக்காமல் சீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டேன்.   நான் சீட்டு எடுக்கும்போதெல்லாம் அவர் எனக்குப் பிரித்துத் பிரித்துத் தந்ததனால் என்னால் சேமிப்புக்குள் போட முடியவில்லை. எனது நோக்கமே சீட்டுக்களை எடுத்து பெரிய முதலீட்டுக்குள் போட நினைத்திருந்தேன்.  பெரிதாக ஆசைப்பட்டதனாலோ என்னவோதான் எனக்கு இவ்வளவு சிக்கலும்.  

 

அதே நேரத்தில் சில மாதங்களாக என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.  அதனாலேயே இவ்வளவு கஸ்டமும்.  அந்தச் சீட்டுக்காரருக்கும் அவருடைய சீட்டுக்காசைச் சில மாதங்களாகக் கொடுக்காமல் அவருக்கும் ஒரு பாடம் கற்பித்து விட்டேன்.  அதனால், அவர் இனிமேல் என்னுடன் கொழுவமாட்டார் என நினைக்கிறேன்.  இப்போது நான் இரண்டு வேலை செய்கிறேன்.  வரும் வருமானம் இந்தக் கடன்களைக் கொடுக்கவே போதாமல் உள்ளது.  வேலையிலும் பல பிரச்சனைகள் தலை தூக்குகின்றன.  அதனால்தான் இந்த வேதனை.  எனக்கு எப்பவுமே இப்படி அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன.  என்னதான் கவனமாக இருந்தாலும் ஒரே பிரச்சனையாக் கிடக்குது.  இரண்டு வேலையும் நிலைத்திருந்தால் இந்த வருடக் கடைசிக்குள் எல்லாம் முடித்து விடுவேள்.  ஆனால், அந்த வேலைகளுக்கும் ஆப்பு வந்துவிடுமோ என்பதுதான் எனது கவலை. 
 

 

குமாரசாமி, நான் காண்டம் பார்த்தது கனநாளைக்கு முதல்.  காண்டத்திலை நான் நல்லா இருப்பேன் என்று சொன்னார்கள்.  இரண்டு வேலை செய்வேன் என்று சொன்னார்கள்.  நல்ல பதவியில் இருப்பேன் என்று சொன்னார்கள்.  அந்தந்த வயதில் என்னென்ன நடக்கும் என்று சொன்னார்களோ அது எதுவும் பெரிதாக நடக்கவில்லை. 

 

இனி முழுச் சுயநலவாதியாக மட்டுமே இருப்பதாக முடிவு செய்து விட்டேன்.  என்னை ஏமாற்றிய அத்தனை பேருக்கும் முன்னால் அவர்கள் எல்லோரையும் விட அதிகப் பணக்காரனாகவும் அதிக வசதிகளோடும் வாழ்ந்து காட்டிவிட்டுத்தான் சாவேன்.  என்னவொன்று, அந்தச் சீட்டுக்காரர் ஏமாற்றமால் இருந்திருந்தால் இப்பவே அப்படித்தான் இருந்திருப்பேன்.  அவர்களுக்கு முன்னால் இப்பவும் அவர்கள் நகைக்கிற அளவுக்குத்தான் இருக்கிறன் எண்டதுதான் வருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வத்தால் ஆகாதெனினும் - முயற்சி

மெய்வருந்தக் கூலி தரும்  !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.