Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 3 - காங்கிரசின் தோல்வியும் + பா.ஐ.கட்சி ஆட்சியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009  இல்

முள்ளிவாய்க்கால் கடைசி  நிமிடம்வரை

எதிர்பார்க்கப்பட்டது  காங்கிரசின் தோல்வி.

அது இன்று நடந்துள்ளது

அதுவும் காங்கிரசின் தலைவர்களே ராயினாமா செய்து ஓடும்  அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது...

 

ஈழத்தமிழர்  எதிர்பார்த்த  ஒன்று  

எதிர்பார்த்ததைவிட அழுத்தமாக நிறைவேறியுள்ளது.........

 

பேசலாம் வாங்க.......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் எங்கள் மூதாதையர்கள் அன்று சொன்னார்கள், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

மோடியின் உதவியுடன் இவர்கள் செய்த அட்டூழியங்களை வெளிக் கொண்டு வர வேண்டும்.

மோடியில் எனக்கு பிடித்த ஒரு விடயம் குஜராத்தில் காக்காமாருக்கு அடி போட்டதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா என ஒரு பத்திரிகையாளர் வினவியபோது மோடி சொன்ன பதில் "  செய்யாத குற்றத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்னில் குற்றம் இருந்தால் நீதி மண்றத்தில் விசாரித்து எனக்கு தண்டனை தாருங்கள் தூக்கில போடுங்கள்"  :D  :D  :D

 

புலிகள் காக்காமாரை யாழை விட்டு துரத்தியதற்கு மன்னிப்பு கேட்டது மிக பெரிய தவறு. 

Edited by seeman

மோடியில் எனக்கு பிடித்த ஒரு விடயம் குஜராத்தில் காக்காமாருக்கு அடி போட்டதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா என ஒரு பத்திரிகையாளர் வினவியபோது மோடி சொன்ன பதில் "  செய்யாத குற்றத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்னில் குற்றம் இருந்தால் நீதி மண்றத்தில் விசாரித்து எனக்கு தண்டனை தாருங்கள் தூக்கில போடுங்கள்"  :D  :D  :D

 

புலிகள் காக்காமாரை யாழை விட்டு துரத்தியதற்கு மன்னிப்பு கேட்டது மிக பெரிய தவறு. 

 

இந்தக் கருத்துப்படி சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்ததும் இதே பாணியில் நியாயப்படுத்த முடியும. அதை இந்த உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது.

 

புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள் இருந்தும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை மாறாக அவர்களுக்கு இவ்வுலகத்தால் தண்டனையே வழங்கப்பட்டது.

 

புலி எதை செய்யவேண்டும் என்பது புலிக்கு அப்பல் தீர்மானிக்கப்படும் விசயம் என்பதுக்கும் அத் தீர்மானத்துக்குரிய கருத்து நிலையும் சமூகத்தளமும் இவ்வாறனா கருத்துக்களால் புரிந்துகொள்ளமுடியும். புலி பயங்கரவாதத்தை செய்ததும் போராட்டம் பயங்கரவாதமானதும் அழிக்கப்பட்டதும் இவற்றின் பின்னணியிலேயே.

 

ஜே ஆர் பிரேமதாச சந்திரிக்கா மகிந்தன் என்று எத்தனைபேர் மாறினாலும் சிங்களப்பேரினவாதம் மாறுவதில்லை. அதேபோல்தான் இந்திய மைய அரசியலும் அது சார்ந்த இலங்கத் தமிழர் குறித்த அணுகுமுறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் தோல்வியும், பா.ஜ.க. வின் வெற்றியும் எதிர்பார்த்திருந்தலும்.... இவ்வளவு விஸ்வரூபமான வெற்றியாகவோ, தோல்வியாகவோ எதிர்பார்க்கவில்லை.

 

பா.ஜா.க.  வின் நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு எத்தனை புலம் பெயர் அமைப்புகள் வாழ்த்துக்களோ, பூங்கொத்தோ கொடுத்தன?

 

சிங்களவனில் இருக்கும் உற்சாகம், நம்மவர்களுக்கு இல்லாமல் போனதேன்?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துப்படி சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்ததும் இதே பாணியில் நியாயப்படுத்த முடியும. அதை இந்த உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது.

 

புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள் இருந்தும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை மாறாக அவர்களுக்கு இவ்வுலகத்தால் தண்டனையே வழங்கப்பட்டது.

 

புலி எதை செய்யவேண்டும் என்பது புலிக்கு அப்பல் தீர்மானிக்கப்படும் விசயம் என்பதுக்கும் அத் தீர்மானத்துக்குரிய கருத்து நிலையும் சமூகத்தளமும் இவ்வாறனா கருத்துக்களால் புரிந்துகொள்ளமுடியும். புலி பயங்கரவாதத்தை செய்ததும் போராட்டம் பயங்கரவாதமானதும் அழிக்கப்பட்டதும் இவற்றின் பின்னணியிலேயே.

 

ஜே ஆர் பிரேமதாச சந்திரிக்கா மகிந்தன் என்று எத்தனைபேர் மாறினாலும் சிங்களப்பேரினவாதம் மாறுவதில்லை. அதேபோல்தான் இந்திய மைய அரசியலும் அது சார்ந்த இலங்கத் தமிழர் குறித்த அணுகுமுறையும்.

 

ஈழப்போராட்டத்தை வழி நடாத்திச் சென்ற விடுதலைப் புலிகளின் பின்னடைவிற்கு முழுக் காரணமும் சோனியாவையும் நாராயணனையுமே சாரும்.

இந்தக் கிந்தியத்திற்கு அவர்களின் பொய்களையும் பிரட்டுக்களையும் நம்பி மேற்குலகமும் அவர்களின் பின்னால் நின்றதுதான் வரலாற்றுத் தவறு.

இப்போது இந்தியாவை ஆளப்போவது கிந்தியர்கள் அல்ல

இந்தியாவைத் தமது கண்களாகப் போற்றும் பாரதீய ஜனதாக் கட்சியும்

அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுமே.

இந்திய ஒற்றுமைக்கும் அப்பால் அவர்கள் தங்களை இந்துக்களாகவே

பல இடங்களிலும் முன்னிறுத்தியுள்ளார்கள்.

முக்கியமாக மோடி அவர்கள் ஒரு இந்துவாகவே பாரதத்தை ஆளப்போகின்றார். மன்மோகன் சிங் அவர்களின் பின்னால் இருந்து சோனியா இயங்கியது போல ஒரு ஆட்சி இந்தியாவில் இடம்பெறாது.

மோடி தொலை நோக்குச் சிந்தனையாளர்.புரட்சிகரமான பொருளாதார விற்பன்னர். அவருக்குக் கட்டாயம் எங்கே கை வைத்தால் என்ன நடக்கும் என்பதும் தெரியும்.

 

இலங்கை அரசு அவருக்குக் கட்டுப்படப் போவது உறுதியாகிவிட்டது.

இலங்கை அரசு அதிகாரிகள் விடும் அறிக்கைகளைப் பார்த்தாலே அது தெரிகின்றது.

சிங் அவர்களின் ஆட்சியில் இலங்கை அரசு செலுத்திய அதிகாரங்கள் மோடியிடம் எடுபடாது. மோடி அவர்கள் தனக்கு எது சரியாகத் தெரிகின்றதோ அதையே செயல்படுத்துபவர். இது கிந்திய அரசியலுக்கு ஒவ்வாததாக இருந்தாலும் நேர்மையான மோடியின் நேர்மையான பின் தங்கியவர்களுக்கான அரசியலாகவே இருக்கும்.

 

இந்த அரசியலுக்குள் ஈழத்துத் தமிழ் மக்களின் அரசியலும் அடங்கி இருப்பதும் மோடி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மோடியின் அரசில் எங்கள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும் ஈழத்தில் நடக்கும் அவலங்கள் தடுக்கப்படும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. 

 

மோடி தலைமையிலான பிஜேபி யின் அபாரவெற்றி இன்று இந்தியாவிற்கு மிகவும் தேவையான ஒரு மாற்றம் .ராஜீவ் காந்தி தேர்தலில் தோற்றபின் ஒரு நிலையான இந்திய அரசு அமையவே இல்லை .அறுதி பெரும்பான்மையில்லா ஆட்சிகள் ஆட்சி அதிகாரம் இல்லா பிரதமர்கள் ,தலையாட்டி பிரதமர்கள் தலைமைகளில் தொடர்ந்தன .

அதுவும் இத்தாலியில் பிறந்த சோனியா தலயாட்டி பொம்மையாக மன்மோகன்சிங் வைத்து நடத்திய ஆட்சி கேவலத்தின் எல்லை .நேரு பரம்பரைக்கு கொடுக்கும் மரியாதையின் நிமித்தமும் எதிர்த்தால் தமது அரசியலே அஸ்தமித்து விடுமோ என்ற பயத்திலும் பல காங்கரஸ் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை புடுங்குவது லாபம் என்று இருந்துவிட்டார்கள் .

 

உள்ளுர் அரசியலில் இதனால் உண்டான தாக்கத்தை விட வெளிநாடுகளிலும், வெளிநாடுகளாலும் இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானமும் பாதிப்பும் தான்  அதிகம் .உலக நாடுகளால் நகைப்பிற்குரிய நாடாகவும் அண்டை நாடுகளால் கையாலாகாத ஒரு நாடாகவும் ஆகிவிட்டிருந்தது .பாகிஸ்தான் ,சீனா தொடங்கி இலங்கை கூட வாலாட்டிக்கொண்டே இருந்தது .

இந்த தேர்தலில் மோடிக்கு கிடைத்த அறுதி பெரும்பான்மை இந்தியாவிலும் சரி வெளியுறவு கொள்கையிலும் சரி ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் .

மோடி மாற்றத்தை உடன் கொண்டுவருகின்றாரோ இல்லையோ அயல் நாடுகள் முன்னர் இருந்த தமது நிலையில் இருந்து  மாற்றத்தை கட்டாயம் கொண்டுவருவார்கள் .

 

இலங்கை நிலைமை (எமது நிலைமை ).

காங்கிரஸ் ,சோனியா ,ராகுல் ஈழதமிழர்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கமுடியாது .எதிர்பார்க்கவும் கூடாது .நாங்கள் செய்த அலுவல் அப்படி .

 

அறுதி பெரும்பான்மை இல்லாமல் ஜெயலிதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் தமிழர்களுக்கு நல்லது என்பது எம்மவர் பலரின் அபிப்பிராயம் .என்னை பொறுத்தவரை இல்லவே இல்லை .ஜெயலலிதா தன்னை முதன்மை படுத்தி எந்த விடயத்திலும் ஒரு முட்டுக்கட்டை கொடுத்து மோடியை கையாலாகாதர் ஆக்கிவிடுவார் .இப்போ மோடியின் கையில் தனி பலம் இருக்கு நினைத்தை செய்யலாம் .(ராஜ்யசபையில் பெரும்பான்மை இல்லை என்ற விடயமும் இருக்கு ).

இனி இலங்கை செய்ய போகும் அரசியலிலும் ,தமிழ் நாட்டில் இருந்து வரும் அழுத்ததிலும்,எம்மவரின் அரசியலிலும் தான் ஈழ தமிழர்களின் எதிர்காலம் இருக்கு .முன்னர் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் இந்தியாவை கொண்டு சிங்களவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நிலையை உருவாக்கவேண்டும் .

முதல் சில வருடங்களில் எதுவித அனுகூலமும் தெரியாதவிடத்து திட்டி தீர்த்து முறித்துக்கொண்டு மோடியையும் துரோகியாக்காமல்  பொறுமையாக எமது அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லக்கூடியவர்களுடாக கொண்டு சென்று எமக்கான ஒரு தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் . பொறுத்தார் பூமி ஆள்வார்.

இந்தியாவின் வெளிநாட்டுகொள்கையில் மாற்றம் கொண்டுவருவது என்பது இலகுவான விடயம் அல்ல .பதின்மூன்றாம் திருத்த சட்டத்திற்கு மேலே எந்த இந்திய அரசும் போகத்தயங்கும் .முதலில் அதையாவது எடுக்க முயற்சிக்கவேண்டும் என்பதே எனது நிலை .

(புலம்பெயர்ந்த தமிழன் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று உண்ட களை தீர கத்துவான் ,அவர்களை மோடியை அண்ட விட்டால் உள்ளதையும் கெடுத்துவிடுவார்கள் பின்னர் கடைசி வரை ஈழத்தமிழன் ஆண்டிதான் .புலம் பெயர்ந்தவன் அப்பவும் புது படம் ஏதும் காட்டுவான் )

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் கட்டமைப்புகள் பல அடுக்குகளாக ஆழ வேர் ஊன்றி புரையெடுத்துப்போய் உள்ளது இதை இப்போது மோடியோ அன்றேல் மேடியின் அப்பன் வந்தாலும் முற்றாகச் சீர்செய்யமுடியாது. அப்படிச் சீர் செய்ய எத்தனித்தாலும் மோடியின் முதல் ஐந்து வருட ஆட்சிக்காலம் போதாது. மாறாக தெற்கு மாடத்துக்காரர்கள் ஒரு அளவுக்குமேல் வெளியார் யாரையும் தங்கள் விடையங்களில் கையடிக்க விடமாட்டார்கள் இது மோடிக்கும் பொருந்தும்.

 

ஆக ஈழத்தமிழர் விடையம் மோடியின் ஆட்சியில் எமக்குச் சார்பான திசையில் போகும் என எண்ணமுடியாது.

 

குஜராத் வேறு டெல்கி வேறு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து மோடியின் கையில் அற்புத விளக்குக் கிடைத்தால் சிலநேரம் எமக்குச் சார்பாக நல்லது நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடியுடன் தமிழ் கட்சிகள் கூட்டு சேர்ந்து அரசாங்கம் அமைக்காததுதான் நல்லது. சேர்த்திருந்தால் அதை தமது நலனுக்கே பாவிப்பார்கள். இதில் ஈழ விவகாரம் என்பது கடிதம் எழுதுவதிலேயே முடிந்து விடும் அதாவது ஒரு மிக மிக சிறிய விடயமாகவே நோக்கப்படும்.

இப்பொது மோடியின் கையில் தான் எல்லாம் உள்ளது. அவர் விரும்பினால் எமக்கு உதவி செய்வார் இல்லைஎன்றால் உபத்திரம் செய்யாமல் இருப்பார்.

இந்தியப்படை ஈழமெங்கும் பரவி நின்ற போது, இவனுகளை இங்கிருந்து வெளியேற்றுவது கடினம் என்று நினைத்த போது, இந்தியாவின் ஆட்சி மாற்றம் எமக்கு ஒத்துழைத்தது. இந்த முறை எமக்கு பெரிதாக உதவ மாட்டார்கள், ஆனால் இலங்கை விவகாரத்தில் எங்காவது காங்கிரசு விட்ட தவறுகள் (இந்தியா விட்ட தவறுகள் அல்ல) இருகின்றனவா என்று பார்த்து அல்லது யாரவது சுட்டிக் காட்டினால், நிச்சயம் காங்கிரசை பழி வாங்க நடவடிக்கை எடுப்பார்கள். அப்போ அது எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே

 

நேரமின்மையால் வரமுடியாததற்கு மன்னிக்கவும்.....

 

முள்ளி  வாய்க்கால் இறுதித்தருணம்வரை

புலிகள் இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி  மாறும்

அதனால் போரின்நிலையை  மாற்றலாம் என நம்பிக்கொண்டிருந்தது  எல்லோருக்கும் தெரியும்

இதன் மூலம் சிறீலங்காவுக்கான  ஒரு துணையை  வெட்டுவதன் மூலம் 

களத்தில் தமது பலத்தை அதிகரிக்கலாம் என்று நினைத்திருப்பார்களானால்

கடைசிவரை அவர்களது பலம் குன்றாமல் இருந்தது என்பது பொருள்.

அத்துடன் இந்தியா  விலகுமாக இருந்தால்

பல  நாடுகள் விலகும்  என்பதும் கணிப்பாகும்.

 

இன்று  புலிகள் விரும்பிய  மாற்றம்

அதுவும் நினைத்துக்கூட  பார்க்கமுடியாத காங்கிரசின் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது

ஈழத்தமிழினம்

இதை  எவ்வாறு   எடுத்துக்கொள்ளப்போகிறது???

எமக்கான  இந்த மாபெரும் சந்தர்ப்பத்தை

எவ்வாறு பாவித்து

மகிந்தவை  தனிமைப்படுத்தப்பொகின்றோம்? என்பதே இன்றைய  கோடிபெறும் கேள்வியாகும்...

2009 இன் நடுப்பகுதியில் இந்திய மருத்துவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் இருந்த ஒரு ரோ மருத்துவ அதிகாரி (மேஜர் தர) எனக்கு சிகிச்சை அளித்தார். குஜராத்தை சேர்ந்த அந்த அதிகாரியை என் காயங்கள் காரணமாக அடிக்கடி சந்திக்க வேண்டி வந்தது.

அவர் அன்று சொன்னது, நீங்கள் இப்பவே தாமதிக்காது குஜராத்தில் ஒரு தமிழ் சங்கத்தையோ அல்லது தமிழ் காலாச்சார மையத்தையோ அல்லது ஒரு தமிழ் பாட சாலையையோ திறவுங்கள்.

அதை மையப்பொருளாக வைத்து கொண்டு குஜராத் மாநில அரசுடன் தொடர்பகளை ஏற்படுத்துங்கள். நிச்சயாமாக மோடி தான் அடுத்த பிரதமர் என்று சொன்னார். 5 வருடங்களுக்கு முன்னர் அவர் சொன்னது இன்று நடக்கிறது.

நாங்கள் அன்றைக்கே ஒரு மையத்தை திறந்தோ அல்லது வேறு வழியாகவோ குஜராத் அரசுடன் ஒரு நட்புறவை பேணி இருந்தால் இன்று மோடியை நெருங்குவது சுலபமாக இருந்திருக்கும்.

இனியாவது நாங்கள் இன்றைக்கு நடப்பதை பற்றி அலம்பி கொண்டிருக்காமல் இன்னும் 5-10 வருடங்களில் நடக்கப்போவதை பற்றி ஆராய்ந்து எமக்கான இலட்சியத்தை அடையும் பாதையை தேர்ந்து எடுப்போம்.

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.