Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

In UK

Cricket - umpire

Football - referee

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் Football என்றால் ரக்பி என்று தான் அழைப்பார்கள் Soccer என்றால் தான் உதைப்பந்தாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்
உலக கோப்பை கால்பந்து: குரோஷியாவை பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

 

brasilien-2014-spiel-gegen-kroatien_7214இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. தொடக்கத்திலேயே பிரேசிலின் ஓலிக் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் நுழைய தவறியது. அதே சமயம் ஆட்டம் தொடங்கிய பதினோராவது நிமிடத்தில் குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக் அடித்த பந்தை தடுக்க முயன்ற பிரேசில் வீரர் மார்சிலோ சரியான சமயத்தில் தனது காலை பின் வாங்காததால் அவரது காலில் பட்டு அவரே குரோஷியாவிற்கு கோல் அடித்து கொடுக்கும்படி அமைந்துவிட்டது. இதனால் 1-0 என்ற கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது. குரோஷியாவிற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணியினர் தீவிரமாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 29வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார் நீண்ட துரத்திலிருந்து அடித்த பந்து சரியாக கோல் போஸ்ட்டில் பட்டு கோலுக்குள் நுழைந்தது. இதனால் ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் மேலும் ஏதும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஏறக்குறைய 62103 பார்வையாளர்கள் இந்த ஆட்டத்தை காண திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கிய 69வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மார் கோல் போஸ்ட்டை நோக்கி விரட்டி சென்றார். அப்போது அவரை கோல் அடிக்காமல் தடுப்பதற்காக குரோஷியா வீரர் லோவ்ரன் அவரது கையை பிடித்து இழுத்ததால் லோவ்ரென்னுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன் நெய்மாருக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்த ப்ரீ கிக்கை பயன்படுத்தி நெய்மார் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். அவர் அடித்த பந்தை குரோஷிய கோல் கீப்பர் கைகளால் தடுத்தும் கூட அதையும் மீறி பந்து கோலுக்குள் நுழைந்தது. இதனால் இன்று தொடங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு கோல் அடித்த பெருமை நெய்மாருக்கு ஏற்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய 90வது நிமிடத்தில் பிரேசில் வீர்ர் ஆஸ்கார் நீண்ட துரத்திலிருந்து அழகாக ஒரு கோல் அடித்து ஸ்கோரை 3-1 என்ற கணக்கிற்கு கொண்டு சென்றார். இறுதி வரை குரோஷியா அணியினர் கோல் அடிக்க முயன்றும் பிரேசில் வீரர்களின் அபார ஆட்டத்தால் அது முடியாமல் போனது. இதனால் 3-1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இரண்டு கோல் அடித்த பிரேசிலின் நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.telonews.com/sritelo/wordpress/?p=48564#more-48564

 

அவுஸ்திரெலியாவில் Football என்றால் ரக்பி என்று தான் அழைப்பார்கள் Soccer என்றால் தான் உதைப்பந்தாட்டம்

 

உந்த உப்பு சப்பில்லாத அமெரிக்காகாறன் வளி வந்த சொல்  தான் உந்த சொக்கர்...    கைகளாலையும் கால்களாலையும் விளையாடும்  விளையாட்டுக்கு பெயர்  Football  எண்டு பெயர் வைச்சதும் அவங்கள் தான்.... 

............

 

குரோசியா வுக்கும்  பிரேசிலுக்கும் நடந்த போட்டியில்   குரேசியா 1-0 எண்ட நிலையில் இருந்த போது  குரேசிய  மெட்றிச்சை  முழங்கையினால் தாக்கினார்  பிரேசிலின் நைமர்...   தொலைக்காட்ச்சியில் அவர் திட்டமிட்டு வேண்டும் எண்றே தாக்கினார் என்பது தெளிவாக தெரிந்தது..  நிச்சயமாக இதுக்கு சிவப்பு அட்டை வளங்கப்பட்டு இருக்க வேண்டும்...  ஆனால் மஞ்சள் அட்டை வளங்கப்பட்டு எச்சரிக்க மட்டுமே செய்யப்பட்டார் நைமர்... 

 

நடுவரின் ஆதரவோடு 12 பேராக களத்தில் நிண்ட  பிரேசில் வெண்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை... !!!  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

............

 

குரோசியா வுக்கும்  பிரேசிலுக்கும் நடந்த போட்டியில்   குரேசியா 1-0 எண்ட நிலையில் இருந்த போது  குரேசிய  மெட்றிச்சை  முழங்கையினால் தாக்கினார்  பிரேசிலின் நைமர்...   தொலைக்காட்ச்சியில் அவர் திட்டமிட்டு வேண்டும் எண்றே தாக்கினார் என்பது தெளிவாக தெரிந்தது..  நிச்சயமாக இதுக்கு சிவப்பு அட்டை வளங்கப்பட்டு இருக்க வேண்டும்...  ஆனால் மஞ்சள் அட்டை வளங்கப்பட்டு எச்சரிக்க மட்டுமே செய்யப்பட்டார் நைமர்... 

 

நடுவரின் ஆதரவோடு 12 பேராக களத்தில் நிண்ட  பிரேசில் வெண்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை... !!!  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

என்ன  செய்வதப்பா?

ஏற்கனவே  போட்டி வைப்பதற்கு  ஏகப்பட்ட பிரச்சினைகள்

வெல்லாது விட்டால் வெளியில் வரமுடியாது

அவனவன் உயிர்க்கவலை அவனவனுக்கு... :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் - குரேசியா 3:1

 

எதிர்பார்த்தது போல் பிரேசில் வென்றுவிட்டது. இதனை வெற்றியாக ஊடகங்களும் ரசிகர்களும் பெரிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் பலர் பிரேசில் அணிக்காக கொடுக்கப்பட்ட தண்டனைஉதை என்பதையே முன்வைக்கின்றார்கள். அது கொடுக்ப்படாவிட்டால் பிரேசில் வென்றிருக்காது என்பது பலரின் கருத்தும். 

இந்த கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய பங்குவகித்தன எனலாம். நான் பார்த்த அநோகமான தொலைக்காட்சி முதல் பத்திரைகை வரை அனைத்தும் தவறான ஒரு கருத்தை முன்வைக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். 

 

முதலாவது கோல் 0:1

பிரேசில் வீரர் குரேசியா நாட்டிற்காக போட்ட கோல் (own goal) இது. அதுவரை குரேசியா பின்னிற்கு நின்று கோல் போகாமல் காப்பதிலயே மும்முரமாக நின்றது. இதை குரேசியா திறமையாக விளையாடி அடித்தது என்று சொன்னால் கொஞ்சம் ஓவர் தான். 

 

இரண்டாவது கோல் 1:1

பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரின் திறமையான விளையாட்டினால் இந்த கோல் போடப்பட்டது. இந்த கோல் போடும் வரை பிரேசில் அணி நன்றாக விளையாடியது. 

 

மூன்றாவது கோல் 2:1

சர்ச்சயை உண்டுபண்ணிய கோல் இது தான். 

 

இதற்கு போய் யாராவது பேனால்டி கொடுப்பார்களா என பொங்கியவர்கள் தான் அதிகம். 

dejan-lovren-penalty.jpg

 

இதில் பிரேசில் வீரர் சற்று நாடகத்தன்மையுடன் கீழே விழுந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

 

FIFA சட்டத்தின்படி பார்த்தால் இந்த பேனால்டி சரியானதே. 

எப்பொழுதும் விளையாடும் போது கைகள் இரண்டும் உடம்புடன் ஒட்டியே இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் Foulஆ இல்லையா என முடிவெடுப்பதற்கு மூன்று முக்கியமான அம்சங்களை கணக்கிலெடுக்கப்படும். 

 

1. பந்திற்கும் வீரர்களிற்கும் இடையிலான தூரம்

2. கோல் போடும் ஒரு சந்தர்ப்பம் பறிபோகின்றதா என்று பார்க்கப்படும்

3. தெரிந்து செய்யப்பட்டதா இல்லையா என்று பார்த்தல்

 

குறிப்பிடப்பட்ட பேனால்டியினை இப்பொழுது இந்த மூன்று புள்ளிகளுடனும் பொருத்திப்பார்க்கலாம். 

 

1. இரு வீரர்களும் மிக நெருக்கமாக பந்திற்காக மோதுகின்றனர். 

 

2. இங்கே ஒரு கோல் போடும் சந்தர்ப்பம் பறிபோகின்றது. கோல் போடுகிறார்களா இல்லையா என்பதைவிட கோல் போடும் சந்தர்ப்பம் தான் பார்க்கப்படும். பிரேசில் வீரர் திரும்பி கோல் நோக்கி பந்தை அடித்திருக்க முடியும். கோல் போகின்றதா இல்லையா என்பது முக்கியமல்ல. 

 

3. இது தான் முக்கியமான காரணமாக நான் பார்க்கின்றேன். பேனால்டி பெட்டிக்குள் கைகளை மிகவும் அவதானமாக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கையை அகல விரித்தோ அல்லது எதிரணி வீரர் தோழ்களின் மீதோ போட்டு மோதுவது பேனால்டிக்கே வழிவகுக்கும். இது அடிமட்டத்தில் விளையாடுகின்ற ஒரு சிறுவனிற்கே இங்கு கற்றுத்தரப்படுகின்றது. குரேசிய வீரரிற்கும் இது தெரிந்திருக்கும். 

 

பேனால்டி வழங்குவதற்கான மூன்று காரணங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

குரேசிய வீரர் மிகவும் மென்மையாக தானே பிடித்தார் என்று பலர் குற்றம் சொல்வார்கள். மென்மையாகவோ கடுமையாகவோ என்பதை அந்த நேரத்தில் சம்மந்தப்படாத எவராலும் கணிக்க முடியாது. ஒரு நொடி கைளால் மென்மையாகவும் இழுக்க முடியும் கடுமையாகவும் இழுக்க முடியும். எது எப்படியிருந்தாலும் இந்த மென்மை/கடுமை இரண்டும் FIFA சட்டத்தில் செல்லுபடியாகது. 

 

இந்த பேனால்டி குரேிசிய வீரரின் முட்டாள் தனத்தினாலும் பிரேசில் வீரரின் அதிஷ்ரத்தினாலும் வந்தது என்று சொல்லலாம். ஆனால் நடுவரை இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

 

நான்காவது கோல் 3:1

இது ஓரளவிற்கு எதிர்பார்த்த ஒன்று தான். குரேசிய அணி முழுவீச்சுடன் முன்னோக்கி விளையாடிதால் பிரேசில் அணிக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது எனலாம். 

 

 

இந்த ஆட்டத்தை வெல்வதற்கு குரேசிய அணி பெரிதாக உழைத்தது போல் தெரியவில்லை. இடையிடையே கோல் நோக்கி ஒன்றிரண்டு பந்துகள் சென்றன. அத்துடன் பிரேசிலின் உதவியுடன் ஒரு கோலும் போடப்பட்டது. 

 

நெய்மாருக்கு சிகப்பு அட்டை வழங்கியிருக்க வேண்டும் என்ற வாதம் 50%-50% என்றே நான் நினைக்கின்றேன். 

உதைபந்தாட்ட போட்டிகளை பொறுத்தவரை அதிஷ்ரமும் கைகொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நேற்று நெய்மாரிற்கு சிகப்பு அட்டை கிடைக்காதது பிரேசிலிற்கு மகிழ்ச்சியே. 

 

 

 

 

 

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

பிறேசில்  வீரர் தவறுதலாக  குரோசியாவுக்கு ஒரு கோல் போட்டுவிட்டார்.  பின்பு குரோசி இன்னொரு கோலும் போட்டது. அதில் கோலி பெரிதாகத் தாக்கப்படவில்லை, ஆனால் நடுவர் அதை மருத்து விட்டார்.  ம்..ம் நாட்டாமைக்குத்தான் முதல் மரியாதை...! :)

  • கருத்துக்கள உறவுகள்

பிறேசில்  வீரர் தவறுதலாக  குரோசியாவுக்கு ஒரு கோல் போட்டுவிட்டார்.  பின்பு குரோசி இன்னொரு கோலும் போட்டது. அதில் கோலி பெரிதாகத் தாக்கப்படவில்லை, ஆனால் நடுவர் அதை மருத்து விட்டார்.  ம்..ம் நாட்டாமைக்குத்தான் முதல் மரியாதை...! :)

 

இதிலும் நடுவர் சரியாகவே முடிவெடுத்துள்ளார்.  :wub:

 

பேனால்டி பெட்டிக்குள் இருக்கும் சிறிய 5மீற்றர் பெட்டி என்பது பந்துகாப்பாளரின் பாதுகாப்புஅரண். அதற்குள் பந்துகாப்பளைரை மெதுவாக தொட்டாலே Foul கொடுக்கப்படும். அதுவும் அவர் பாய்ந்துகொண்டிருக்கும் போது இவரை இலகுவாக முட்டுவதே Foul தான். இதுவும் சட்டமே. 

  • கருத்துக்கள உறவுகள்

............

 

குரோசியா வுக்கும்  பிரேசிலுக்கும் நடந்த போட்டியில்   குரேசியா 1-0 எண்ட நிலையில் இருந்த போது  குரேசிய  மெட்றிச்சை  முழங்கையினால் தாக்கினார்  பிரேசிலின் நைமர்...   தொலைக்காட்ச்சியில் அவர் திட்டமிட்டு வேண்டும் எண்றே தாக்கினார் என்பது தெளிவாக தெரிந்தது..  நிச்சயமாக இதுக்கு சிவப்பு அட்டை வளங்கப்பட்டு இருக்க வேண்டும்...  ஆனால் மஞ்சள் அட்டை வளங்கப்பட்டு எச்சரிக்க மட்டுமே செய்யப்பட்டார் நைமர்... 

 

நடுவரின் ஆதரவோடு 12 பேராக களத்தில் நிண்ட  பிரேசில் வெண்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை... !!!  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

நேற்று உந்த விளையாட்டு சம நிலையில் முடிந்து இருக்க வேண்டும்... நடுவர் பிரேசில் பக்கம் நின்றார்..ஆரம்பத்தில் நடுவர் கொஞ்சம் பரவாயில்லை பிறக்கு தன்ட ஊத்த வேலையை காட்ட வெளிக்கிட்டார்.......

Edited by பையன்26

ஊர்க்காவலன் விரிவாக எழுதியுள்ளீர்கள் ஆனால் விபரங்கள் சற்று பிழை ,

இன்று பத்திற்கு மேற்பட்ட உதைபந்தாட்ட பிரபலங்களின் செவ்வி படித்துவிட்டேன் எவருமே அது பனால்டி கொடுத்தது சரி என்று சொல்லவில்லை .

 2010 ஆண்டு சவுத் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பையில் பிரேசில் விளையாட்டு வீரருக்கு பிழையாக சிவப்பு கார்ட் காட்டி நெதர்லாந்தை இறுதி போட்டிக்கு போக வைத்தவர் இதே யப்பான் நடுவர் தான் .அதை நேற்று சமம் செய்துவிட்டாராம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெற்று நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியில் பிரேசில் 3: 1 என்ற அடிப்படையில் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. ஆரம்பத்தில் குராசியாவின் விளையாட்டு  பிரேசில் அணி என்பது ஒரு பிரமாண்டமானது என்ற ரசிகர்களின் கணிப்பைத் தகர்த்தது, எந்தவித அச்சமுமின்றி ஆடிய அணி பிரேசிலின் தவறினால் ஒரோ கோலைப் பெற்றுக் கொண்டது.

அதையடுத்து முக்கியமான நிகழ்வாக நெய்மாரின் விதி மீறல் பார்க்கப்படுகின்றது. பந்து மேலே இருந்து கீழ் நோக்கி வரும்போதே நெய்மார் தனது முழங்கையை உயர்த்தி எதிர் வீரனையும் ஒரு பார்வையில் அவதானித்துப் பந்தை தலையால்  அடிப்பதைப் போல அடித்து முழங்கையால் எதிரணி வீரனையும் தாக்குகின்றார்.
அதற்காக நெய்மாருக்கு எச்சரிக்கை அட்டை வழங்கப்பட்டு விளையாட்டுத் தொடர சில நிமிடங்களில் நெய்மார் தனது அபார விளையாட்டினால் பிரேசிலுக்கு ஒரு கொலைப் பெற்றுக் கொடுத்தார்:

 

மத்தியஸ்த்தரின்  நெகிழ்வுப்போக்கால்  நெய்மார் இங்கே தொடர்ந்தும் விளையாடியது ஆச்சரியப்படத் தக்கதல்ல.
மத்தியஸ்தர் தனது நிலையை விளையாட்டு முடியும் வரை தொடர்ந்து செல்ல வேண்டும் அதாவது விளையாட்டின்போது அவர் கடும்  போக்கையா அல்லது நெகிழ்வுப்போக்கையா கடைப்பிடிப்பது எனத் தீர்மானித்தால் முடியும் வரை அப்படியே அதைச் செயல்படுத்தவேண்டும். தருணத்திற்கேற்ற மாதிரி தனது நிலையை மாற்றக் கூடாது.

 

அடுத்ததாக பிரேசில் அணிக்குத் தண்டணை உதை வழங்கப்பட்டது மத்தியஸ்த்தரின் மாபெரும் தவறு. பிரேசில் வீரர் மீது குராசிய வீரர் பெரிய அளவில் தனது அழுத்தத்தைப் பிரயோகிக்க வில்லை.
பிரெட் என்ற அந்த  வீரர் குராசிய அணி வீரர் தன் தோளின் மீது கையை வைத்திருக்கின்றார் என்ற ஒரு காரணத்தைத் தனக்குச் சாதமாக்கியுள்ளார். அந்தத் தருணத்தை மீண்டும் உற்று நோக்கத் தேவையில்லை.வெளிப்படையாகவே பிரெட் என்ற பிரேசில் அணி வீரர் தன் தோள் மீது கைகள் அழுத்தும் போது தொடர்ந்தும் விளையாட முயற்சிக்காமல் கீழ் நோக்கிச் சரிகின்றார். இது மத்தியஸ்த்தரை ஏமாற்றும் வேலை.இந்த நிலையில் பிரெட்டிற்கு எச்சரிக்கை அட்டை வழங்கியிருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்திருக்கும்.
அடுத்தது பிரேசில் மூன்றாவது கோலை அடிக்க முன்னர் குராசிய  வீரர்
ஒருவர் மீது பிரேசில் அணி வீரர் ஒருவர் காலால் அடித்திருந்தார் அதையும் மத்தியஸ்த்தர் கவனத்தில் எடுக்காமல் விட்டிருந்தார்.
மொத்தத்தில் குராசிய அணியினர்  மத்தியஸ்த்தரால் தோற்கடிக்கப்பட்டனர் என்ற கருத்தை ஏற்படுத்த மத்தியஸ்த்தரே காரணமாகிவிட்டார்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை நடை பெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் மெக்சிக்கோ

1:0 எனும் கோல்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஸ்பெயின் 1:நெதர்லான்ட் 5

நெதர்லான்ட்  வெற்றிபெற்றுள்ளது.

 
  • கருத்துக்கள உறவுகள்

Revenge is sweet for the Dutch 5-1 demolition கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்றதுக்கு வட்டியும் முதலுமாக முதற்போட்டியிலே பழி வாங்கியது கொலண்ட்5;-1 -உலக சம்பியன் ஸ்பெயின் மிகமோசமன தோல்வியை சந்துத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்ட நடுவர்கள் சூடு வாங்காமல் இருக்க பிறேசிலின் சார்பாக விளையாடியிருப்பார்கள்.. :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்ட நடுவர்கள் சூடு வாங்காமல் இருக்க பிறேசிலின் சார்பாக விளையாடியிருப்பார்கள். இந்த லொள்ளுதானே வேணாங்கிறது.

விளையாட்டிலை நடுவர்கள் பக்க சார்பாக நடந்து கொள்வது  அந்த விளையாட்டை கொல்வதோடை ரசிகர்களை அந்த விளையாட்டின் மீதான ரசிப்பு தன்மையை கொல்வது போண்றது...  நல்ல தொரு விளையாட்டை இரசிக்க முடியுமே அண்றி அவர்களின் அழுகுணியாட்டங்களை எல்லாம் பாராட்ட முடியாது... 

 

இதுக்கு தண்டனை உதை குடுத்த  நடுவரை என்னாலை பாராட்ட எல்லாம் முடியாதப்பா...   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

https://www.youtube.com/watch?v=SVEX9S9D8qc

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் கொலம்பியா எதிர் கிரேக்லாண்ட் விளையாட்டு ஆரம்பம் ஆக்கப் போகுது...கொலம்பியா அணியில் கொலம்பியாவில் பஸ் ஓடின ஒருதர் கால்பந்து நல்லா விளையாடுறார் என்று அவர கொலம்பியா அணியில் செர்த்து இருக்கினம் பாப்போம் அவர் எப்படி விளையாடுறார் என்று...மோனாக்கோ கிளப்பிள் விளையாடும் கொலம்பிய நச்சத்திர வீரர் இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை...கொலம்பியா அணிக்கு அவர் இல்லாதது பெரிய இழப்பு தான்

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது  இந்த விளையாட்டு லிங்கை இணைத்து விடவும் தயவுடன்...!

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டு சனலில் காட்ட மாட்டினமா கால் பந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

யாராவது  இந்த விளையாட்டு லிங்கை இணைத்து விடவும் தயவுடன்...!

 

http://cricfree.eu/live/index.php

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றுக்கு பூச்சியம் கொலம்பியா அணி ஆரம்பத்திலையே கலக்கள் ஆட்டம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.