Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்! ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்

Featured Replies

ananthy%20sasi%20469.jpg

கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்! ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம் -

"கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" - இப்படி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தலைமையிலான கட்சி பெரு வெற்றியீட்டியமையைப் பாராட்டித் தாம் வரைந்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார் அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி ஈழத் தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி இந்தியாவில் இடம்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றியானது ஈழத் தமிழ் பெண்களின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு வலிமையான வெற்றியாகவே நாம் பார்க்கிறோம். அவ்வகையில் தமிழகத்தின் வெற்றியின் நாயகியாக விளங்கிய மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் எத்தனையோ பெண்களை உயர் அதிகாரங்களில் இருத்தியது. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆணாதிக்க சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலமே தமது அதிகாரங்களை வெளிப்படுத்தினர். அதனால் அவர்கள் புகழ்பெற்ற பெண்மணிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தனித்துவமான ஆளுமை மூலமும், எந்த முடிவையும் எந்த விளைவுகளுக்கும் அஞ்சாது, தானே எடுக்கும் வலிமை மூலமும் தமிழகப் பெண்களுக்கு மட்டுமன்றி உலகப் பெண்களுக்கே வழிகாட்டும் தலைவியாகவும் நம்பிக்கையூட்டும் துருவ நட்சத்திரமாகவும் விளங்கி வருகிறார். அந்த ஆளுமையும் ஆற்றலுமே அவரைத் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவியாகவும் ஈழத்தமிழ்ப் பெண்கள் நம்பிக்கையூட்டும் ஒளிவிளக்காகவும் உயர்த்தியுள்ளது. நாம் இன்று கொல்லப்பட்ட எமது கணவர்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நம்மவர்களுக்காகவும் மகாபாரத பாஞ்சாலிகளாக குமுறி நிற்கின்றோம். நீதி கோரி வீதிகளில் இறங்கியுள்ளோம். உண்மைகளை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையிலும் உரத்துக் குரல் கொடுத்தோம். எத்தனை அடக்குமுறைகள் எம்மீது ஏவப்பட்ட போதிலும், முள்ளிவாய்க்காலில் பறிக்கப்பட்ட எமது உறவுகளின் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கூட தடுக்கப்பட்ட போதிலும் கூட ஏந்திய போர்க்கொடியை தளரவிடாது இறுகப் பற்றியுள்ளோம். நீதி கோரி நடக்கும் நெடும் பயணத்தில் களைக்காது நீட்டப்படும் கொடு வாள்கள் மத்தியிலும் எங்கள் பயணம் தொடர்கிறது. எமது உரிமைக்குரலுக்கும், நீதி கோரலுக்கும் தமிழகம் தந்த பேராதரவு எமக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. மாணவர்களின் எழுச்சி புதிய பலத்தை வழங்கியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததைப் போன்று தமிழக முதல்வர் தந்த உறுதியான, நேர்மையான ஆதரவு எமது பயணப் பாதிக்கும் பன்னீர் தூவியது! மாண்புமிகு தமிழக முதல்வரே! நீங்கள் ஆதரவு வழங்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஒவ்வொரு படி உயர்ந்தோம் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவிக்கிறோம். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணை விட வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவ்வகையில் நமது துணைவர்களையும், உறவுகளையும் இழந்தும் பிரிந்தும் தவிக்கும் பெண்களின் மனக் கொந்தளிப்பை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் ஐந்து கோடி ரூபாவை அள்ளித் தந்து எமது விடுதலைப் போராட்டத்தை வலுவூட்டியத்தை நாம் காலம் காலமாக நினைவில் வைத்துள்ளோம். அந்த மக்கள் திலகத்தின் ஒப்பற்ற நேர்மையையும் வீரமும் நிறைந்த பாதையில் பயணிக்கும் தங்களை நாம் மனமார வாழ்த்துகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் இந்தியாவின் காங்கிரஸ் அரசின் பங்கு எவ்வாறான முக்கியமானது என்பதை நாம் அறிவோம். எமது மக்களின் உயிரிழப்பில் அவர்களும் பங்காளிகளே. அவர்களுடன் கைகோர்த்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களின் கோபத்தைத் தணித்து இனப்படுகொலைக்கு துணை போனதை நாம் மறந்துவிடவில்லை. காங்கிரஸ், தி.மு.க. கூட்டத்தைப் படுதோல்வியடைய வைத்து நீங்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே! நீங்கள் தொடர்ந்து எமது உரிமைப் போராட்டத்துக்கு குரல் கொடுப்பீர்கள் என்பதிலும் மத்திய அரசை எமது இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவீர்கள் என்பதையும் நாம் திடமாக நம்புகிறோம். மேலும் சரணைடைந்த, காணாமற்போன, உயிரிழந்த நமது உறவுகளுக்கான நீதி கோரி நிற்கும் பெண்களின் போராட்டத்திற்கு வலுவான ஆதரவு தருவீர்கள் என்பதிலும் உறுதி கொண்டுள்ளோம். தங்கள் ஆட்சி நிலை பெறவும், தமிழக மக்களுக்கும், ஈழமக்களுக்கும் தாங்கள் செய்யும் ஒப்பற்ற பணிகள் தொடரவும் எங்கள் வாழ்த்துக்களை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இப்படிக்கு ச.அனந்தி வட மாகாண சபை உறுப்பினர்

http://malarum.com/

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்கு இப்போதுதான் அரசியல் பிடிபடுகின்றது.வாழ்த்துக்கள் அனந்தி

இவர் என்ன கண்ணகி என்பதை விடுத்து பாஞ்சாலி என்ற பாத்திரத்தை எடுகோளாக்கியிருக்கிறார். பாஞ்சாலியினுடைய வாழ்க்கை ஒரு தமிழ் பெண்ணின் வாழ்க்கை அல்லவே!!  :o  :D

இவர் என்ன கண்ணகி என்பதை விடுத்து பாஞ்சாலி என்ற பாத்திரத்தை எடுகோளாக்கியிருக்கிறார். பாஞ்சாலியினுடைய வாழ்க்கை ஒரு தமிழ் பெண்ணின் வாழ்க்கை அல்லவே!!  :o  :D

எதுக்கு மதுரைக்கும் சோதினையை குடுப்பான் எண்டு நினைச்சு இருப்பார்... நாளைக்கு மதுரையை எரிக்க வந்தாலும் எண்டு கண்ணகிகளை தடுத்து சோதினை போடுற வேலை ஜெயா அக்காவுக்கு மிச்சம் பாருங்கோ..

அதுதான் வட இந்தியாவின் அஸ்தினாபுரத்து என்ன ஆனால் எங்களுக்கு என்ன...??

பாஞ்சாலி 5 ஆடவர்களுடன் குடும்பம் நடாத்தியவர் அல்லவா? (குறிப்பிட்ட காலம் ஒவ்வொருவராக என்றாலும்கூட...) வட இந்தியர்களுக்கும் ஆரிய வாழ்க்கை முறைக்கும் பாஞ்சாலியின் வாழ்க்கைமுறை சரியாக இருக்கலாம். ஆனால் எமது சாதாரண வாழ்வில்..?!!  :)

ஐயய்யோ... அது எல்லாம் புனிதமான விசயங்கள். இதை பற்றி எல்லாம் பேசினால் சாமி கண்ணை குத்தும்....   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  ( அது அவரின் தனிப்பட்ட விசயம் எண்டு  பெண்ணிய அமைப்புக்கள் பறையுறதாய் கேள்வி ...   எதுக்கு எனக்கும் உங்களுக்கும் பொல்லாப்பு... ?? ) 

நான் எல்லாம் சபதம் போடும் ,  நீதி கேக்கிறது , மதுரையை எரிக்கிற,  அஸ்தினாபுரத்தை பஸ்பம் ஆக்கிற ( சமஸ்கிருதம் தான்... )  துகளை பற்றி மட்டும் தான் சொன்னனான்...    

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறெ பாஞ்சாலி இது வேற பாஞ்சாலி. இந்த பாஞ்சாலி யாழ் கொக்குவிலை இருந்தவ. நீங்கள் ஏன் மேலை சொன்னது இதிகாசத்திலை சொன்ன பாஞ்சாலி என்று அதை நினைக்கிரியள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதத்தாய் அடிமைப்பட்டிருந்த காலத்தில் அந்தத்தாயின் பிள்ளைகளுக்கு வீரமூட்ட, உணர்வூட்ட பாரதத்தாய்க்கு இணையாக பாஞ்சாலியை ஒப்புவமை ஆக்குகிறார் சுப்பிரமணிய பாரதியார். - பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்'.

ஐந்து மூலப்பொருட்களையும் இயக்கும் சக்தியாக பாஞ்சாலி பாத்திரம் தங்கள் பார்வையில் தெரிவதை பல ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

துரியோதன துச்சாதனர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதை அனந்தி அவர்கள் தமிழக முதல்வருக்கு தகுந்த நேரத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

பாரதத்து பாஞ்சாலியும் ஈழத்து தமிழிச்சிகளும் - ஒற்றுமையும் வேற்றுமையும்...
 
பாஞ்சாலி சபதம் (பழி வாங்கும் அறைகூவல்)
 
கௌரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் தருமன், சகுனியின் கபடத்தால் தனது நாடு, படை, பணியாட்கள், செல்வங்கள், சகோதரர்கள் மற்றும் திரெளபதியையும் இழந்தான். அடிமையான திரெளபதியை தன் தொடையில் அமர்த்த, துரியோதனன் தன் தம்பியான துச்சாதனனுக்கு ஆணையிட்டான். துச்சாதனன் திரெளபதியின் நீண்ட கூந்தலை கைகளால் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அத்தினாபுர அரசவைக்கு இழுத்து வந்தான். அத்துடன் திரெளபதியின் துகிலை உரித்தான். இந்த அவமானத்திற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டாள். தன்னை தொடை மீது அமரச் சொன்ன துரியோதனனின் தொடைகளை வீமன் கதாயுதத்தால் அடித்து உடைக்கும் வரை தான் மனஅமைதி அடையமாட்டேன் என்று சபதமிட்டாள் திரெளபதி. பாஞ்சாலியின் சபதத்தைக் கேட்டு துரியோதனன், துச்சாதனன் மற்றும் அத்தினாபுர அவையினர் கேட்டு அதிர்ந்தனர்.
 
கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கும் ஈழத்து தமிழிசிகள்.
 
இலங்கையில் பூர்வீக குடிகளான ஈழத்தமிழர்க்ளின் வீரம் செறிந்த இனவிடுதலப் போராட்டம், மனித குலமே இதுவரைகாணாத பெரும் அவல அழிவுடன் 2009 ஆண்டு மே மாதம் 18 திகதியுடன் முடிவுக்கு வந்தது. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இனத்தின் முப்படைகளும், முப்பதுக்கும் மேற்பட்ட அந்நிய நாடுகளின் படைக்கல, தொழில்நுட்ப, புலநாய்வு உதவிகளோடும் சூழ்சியால், தனித்து நின்ற விடுதலைப் போராளிகளை வீழ்த்தி, திக்கற்ற ஈழத்தமிழர்களை ஈவிரக்கம் இன்றி, சாட்சிகள் இன்றி கொன்று குவித்தனர். 
 
இராஜபக்சாவும் அவன‌து தம்பியான கோத்தபாய இராஜபக்சாவும் இப் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி, "ஈழத்து தமிழிச்சிகளை உங்கள் காம வெறிக்கு இரையாக்குங்கள், தமிழ் இளைஞர்களை கொன்று கடலுக்குள் வீசுங்கள்" என்று தமது ஆக்கிரமிப்பு படைகளுக்கு ஆணையிட்டனர். அதன்படியே  ஆக்கிரமிப்பு படைகளுகளும், தமிழிச்சிகளை துகிலுரிந்தனர், மானபங்கப் படுத்தினர், அவர்களது குழந்த்தகளையும் கணவன்மார்களையும் கொன்று குவித்தனர். இதனால் பாஞ்சாலி போல்  பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழிச்சிகள் நீதி கேட்டு குமுறி நிற்கின்றனர். நீதி கேட்டு குமுறி பாஞ்சாலிகளை, புலன் பெயர்ந்த மாற்றுக் கருத்துக்கொண்ட மாணிக்க மனிதர்க்ள் பரிகாசம் செய்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

பாரதத்தாய் அடிமைப்பட்டிருந்த காலத்தில் அந்தத்தாயின் பிள்ளைகளுக்கு வீரமூட்ட, உணர்வூட்ட பாரதத்தாய்க்கு இணையாக பாஞ்சாலியை ஒப்புவமை ஆக்குகிறார் சுப்பிரமணிய பாரதியார். - பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்'.

ஐந்து மூலப்பொருட்களையும் இயக்கும் சக்தியாக பாஞ்சாலி பாத்திரம் தங்கள் பார்வையில் தெரிவதை பல ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

துரியோதன துச்சாதனர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதை அனந்தி அவர்கள் தமிழக முதல்வருக்கு தகுந்த நேரத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இதுக்குத்தான்

உங்களைப்போன்ற   நாலு  பேர் இங்கு வேண்டும் என்பது.

சோழியானே  சறுக்கியிருக்கிறார்..... :D

இதுக்குத்தான்

உங்களைப்போன்ற   நாலு  பேர் இங்கு வேண்டும் என்பது.

சோழியானே  சறுக்கியிருக்கிறார்..... :D

மேலும் கருத்து தெரிவிக்கலாம்.. ஆனால் அது நம்மை நாமே கொச்சைப்படுத்துவதாக அமையும் என்பதால் நிறுத்தியிருந்தேன்.

சுப்பிரமணிய பாரதியார் சிறந்த கவி. ஆனால் அவரும் பிராமணர்தான். ஆனால் அவர்கள் தமது பலமான இருப்பில் இருந்து கொண்டு எதைக் கூறினாலும் தகுதியானவற்றை வடிகட்டி எடுக்க வேண்டியது எமது அறிவல்லவா?!

பாஞ்சாலி ஐந்து ஆடவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவள் என்பது தெள்ளத் தெளிவு. இப்படியானவர்களுடன் எப்படி ஈழத்துப் பெண்களை ஒப்பிட்டார் என் நினைத்தேனே தவிர... அனந்தியை மட்டம் தட்டுவது எனது நோக்கம் இல்லை.

இப்படியான கருத்துகள் எம்மின பெண்களை கொச்சைப்படுத்துபவர்களின் வாய்க்கு அவலாக இருக்க கூடாது என்பதுமட்டுமே எனது நோக்கம். 'அனந்தியே கூறுகிறார்' என எவரும் அவரைச் சுட்டி இகழாதிருப்பார்களாக!!  :)

நன்றி  ஐயா

விளக்கத்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பெண்ணின் துணிவு மட்டும் எங்கள் தலைவர்களுக்கும் மக்களும் வந்தால் மோடி சொல்லுவது போல,- ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடி வைத்தால் இந்தியா 120 கோடி அடி முன்னோக்கி போகும் என்கிறது போல; சிங்களவன் இருக்க இடத்தை விட்டு தானே விலகுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

போரிலே நேரடியாகப் பாண்டவர்களை வெற்றி அடைய முடியாத கௌரவர்கள் குறுக்கு வழியால் அவர்களை வென்று காட்டுக்கு அனுப்பினர். சூதாட்டத்தில் தர்மர் பாண்டவர்களின் எல்லாச் சொத்துக்களையும் இழந்து இறுதியில் திரௌபதியையும் இழக்கின்றான்

அதன் பின்னர் துரியோதனன்  திரௌபதியைச் சீண்ட நினைத்துத்  தன் தம்பி துச்சாதனன் மூலம் துகிலுரிய முயன்றும் அது கண்ணனின் வருகையால் நடைபெறவில்லை

இந்த நிலையில் ஈழத்துப் பெண்கள் இன்று இருக்கின்றனர்.
கண்ணன் வந்து திரௌபதியைக் காப்பாற்றியது போன்று
ஈழத்துப் பெண்களை யார் காப்பாற்றுவார்கள் என்பதையே ஆனந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என நினைகின்றேன்.

சகுனியின் சூழ்ச்சியில் சூதாட்டத்தின்  பெயரால் அரசை இழந்து சொத்துக்களை இழந்து ஆயுதங்கள் இழந்து ஏன் தங்களையும் இழந்த பின்னர் தங்கள் மனைவியர்களையும் இழந்த பாண்டவர்கள் வேறு யாருமல்ல சிங்களத்தின் சூழ்ச்சியால் கௌரவ நாடுகளின் ஒத்துழைப்புடன் எல்லாவற்றையும் இழந்துவிட்ட    தமிழீழ  மக்களே. அவர்களின் துணைவியர்கள் வீரமுள்ள பாஞ்சாலிகள் என்பதில் என்ன தவறு??   

பாஞ்சாலி என்பதும் எனக்கு நினைவிற்கு வருவது அவளுடைய சபதமே. அந்த வகையில் இழந்த உறவுகளுக்காக நீதிகேட்டு அந்த நீதி கிடைக்கச் சபதம் எடுத்த பெண்களைப் பாஞ்சாலிகள் என்பதிலும் தவறு  இல்லையே.

முக்கியமாகப் பாஞ்சாலி ஐவரையும் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. அர்ஜுனனால் மணந்து கொள்ளப்படவேண்டியவள். குந்தியின் ஒரு வார்த்தையால் அதற்குக் கட்டுப்பட்டு ஐவரையும் மணந்து  அறம் செய்தவள்தான் பாஞ்சாலி. பாஞ்சாலி என்றதும் பரத்தை அவள் என நினைப்பது மகா தவறு.  

குறிப்பு; மகா பாரதம் உண்மை என்றால் பாஞ்சாலி போற்றப்பட வேண்டியவளே

வட இந்தியர்களது கலாச்சாரப்படி பாஞ்சாலி போற்றப்பட வேண்டியவளாக இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை வலியுறுத்தும் தமிழர் கலாச்சாரத்தைப் பொறுத்தளவில் பாஞ்சாலியின் வாழ்வுமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

பரத்தையர் குல வழிவந்த மாதவியைக்கூட ஒருவனுக்காகவே வாழ்ந்ததாகக் கொண்டாடுவதுதான் சிலப்பதிகாரம் எனும் தமிழ் நூல்.

தனது கணவனின் உயிரை அநியாயமாகப் பறித்த பாண்டியனை எதிர்த்து, அதற்குக் காரணமானவர்களை அழித்த வீரத் தமிழிச்சி கண்ணகி அல்லவா?!  :)

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயப்படுவாரே.. அந்த மனிசி.. புருசனை தொலைச்சிட்டு.. நிற்குது.. அவாவப் போல.. 90,000க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் நிற்கிறார்கள்.. நீங்கள்.. கண்ணகியோ.. பாஞ்சாலியோன்னு.. விவாதம் செய்துகிட்டு இருக்கீங்க.

இதே நிலைமை உங்க வீட்ட என்றால்.. இப்படி விவாதிக்க நேரம் இருக்குமோ அல்லது.. எப்ப உறவுகள் திரும்பி வருங்கள் என்ற துடிப்பும் ஏக்கமும் கண்ணீரும்.. இருக்குமோ..???!

புலம்பெயர் தமிழர்கள் சிலரின் நடவடிக்கைகள்.. 2009 க்குப் பின் மனிதாபிமான அளவுக்கு மிஞ்சிப் போய்க்கிட்டு இருக்குது. ஏன் என்று தான் புரியல்ல..??! ஒருவேளை பிரபாகரன் இல்லை என்ற எண்ணத்தில் மனிதத்தையும் தொலைத்து விட்டார்களோ..???! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்களது கலாச்சாரப்படி பாஞ்சாலி போற்றப்பட வேண்டியவளாக இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை வலியுறுத்தும் தமிழர் கலாச்சாரத்தைப் பொறுத்தளவில் பாஞ்சாலியின் வாழ்வுமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

பரத்தையர் குல வழிவந்த மாதவியைக்கூட ஒருவனுக்காகவே வாழ்ந்ததாகக் கொண்டாடுவதுதான் சிலப்பதிகாரம் எனும் தமிழ் நூல்.

தனது கணவனின் உயிரை அநியாயமாகப் பறித்த பாண்டியனை எதிர்த்து, அதற்குக் காரணமானவர்களை அழித்த வீரத் தமிழிச்சி கண்ணகி அல்லவா?!  :)

பாஞ்சாலி வருடத்திற்கு ஒரு கணவன் என பாண்டவர்கள் ஐந்துபேருடனும் வாழ்க்கை நடத்தியவள்.அதிலிருந்து பாண்டவர்களோ பாஞ்சாலியோ தவறவில்லை.

ஆனால் கணவனை இழந்த பெண்கள் அதுவும் ஈழப்பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் வாழவேண்டும் என்பதும் தவறு.

இதுவும் பெண்களை அடிமையாக்கி வைத்திருக்கும் எங்கள் ஆணாதிக்கம்.

பழமைவாதம்,இன்றைய ஈழப்பெண்களுக்கு இது சரிவராது. :D

உங்கள் கருத்துகளில்தான் படித்தவன் அகதி என்ற பாகுபாடுகள் முகிழ்த்து நீடிக்கின்றன.

அவர்களின் தொலைப்பை மற்றவர்கள் எள்ளி நகையாடக்கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதப்படுபவை உங்களுக்கு விளங்காதுவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

:)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பாஞ்சாலி முக்கியமா இல்லை அனந்தி விட்ட அறிக்கை முக்கியமா,கொஞ்சமாவது அரசியலில் முன்னேற விடுங்கப்பா

அப்ப ஈழப் பெண்கள் புதுமையாக கணவன்மாரை மாற்றலாம் என்கிறீர்களா?!

(விதவா விவாகத்தை இங்கு குறிப்பிடவில்லை.)  :)

இப்ப பாஞ்சாலி முக்கியமா இல்லை அனந்தி விட்ட அறிக்கை முக்கியமா,கொஞ்சமாவது அரசியலில் முன்னேற விடுங்கப்பா

அனந்தியின் அறிக்கை வரவேற்க வேண்டியது. அம்மாவுக்காக கண்ணகியை விலத்தி... பாஞ்சாலியை புகுத்தி இருக்கலாம்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துகளில்தான் படித்தவன் அகதி என்ற பாகுபாடுகள் முகிழ்த்து நீடிக்கின்றன.

அவர்களின் தொலைப்பை மற்றவர்கள் எள்ளி நகையாடக்கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதப்படுபவை உங்களுக்கு விளங்காதுவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

:)

எங்கள் கருத்தில் என்றில்லை. உலகளாவிய குடிபெயர்வு தொடர்பான ஆவணங்களிலும்.. இதே பாகுபாடுள்ளது. அதைப் பற்றி இன்னொரு தலைப்பில் கதைக்கலாம் தேவை ஏற்பட்டால்.

அவர்களின் தொலைப்பை நீங்களே எள்ளி நகையாடுவது போலவே தான் இந்தத் திரி போய்க்கிட்டு இருக்குது..??!

புரியல்ல... அவர் தமிழ் பெண்களின் அவல நிலையை எடுத்துகாட்ட..ஒரு உவமைக்காக சொன்னதை தூக்கிப்பிடிச்சு.. இப்படி ஒரு விவாதம் அவசியம் தானா..????????????????!

அதிலும்.. தமிழ் சமூகத்தில்.. சாதி ஒழிப்பை முதன்மைப் படுத்திய புரட்சிக் கவி.. பாரதிக்கும்.. பிராமண அடையாளம்..????! இவை எல்லாம்.. இந்தத் தலைப்பில்.. எப்படி இந்தப் பெண்களின் அவலத்திற்கு முடிவு எழுத ஜெயலலிதாவை சிந்திக்கத் தூண்டும்..???!

இங்கு போய்க் கொண்டிருப்பது.. பதியப்பட்ட செய்திக்கு.. அநாவசியமான.. விவாதம். அதனைச் சுட்டிக்காட்டுவதே எங்களின் வருகையின் நோக்கம். மற்றும்படி.. குடிபெயர்பு பற்றிய பாகுபாடு எழுதனுன்னா.. நிறைய ஆதாரங்களோடு எழுத முடியும்...! ஆனால்.. அது இப்ப அவசியம் இல்லை..! :icon_idea::rolleyes:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய் என்று எதற்காக நீ அழுகிறாய?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.

மேலே உள்ளவை பகவத் கீதையின் வசனங்கள்.. 2004இல் யாழ் சென்றபோது, முக்கியமாக பல கடைகளில் தொங்குவதைக் கண்டேன்.
இதை ஏன் சொல்லி வைத்ததுபோல் பலரும் தூக்கி வைத்திருக்கிறார்கள் என் யோசித்தாலும் அப்போது காரணம் புரியவில்லை. 80 களுக்குப் பிறகு புதிதாக முழைத்த அனுமார் ஆலயங்கள்போல இதுவும் ஒரு பாசனாக்கும் என் நினைத்தேன். ஆனால் 2009 இன் பின்புதான் புரிந்தது... இப்படியான அழிவுகளை இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு மக்களை ஆக்கும் நுணுக்கமான திட்டம் இது என்பது.

அதனால்தான் எனக்கு இந்த பாஞ்சாலி... கண்ணன்.. கீதை என்பவற்றில் உடன்பாடு கிடையாது.  :)

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் கீதா உபதேசம்.. என்பது.. பாரத இதிகாச.. பாத்திரங்களான.. பாண்டவர்களுக்கு அறிவுரை சொல்வதாக இருந்திருக்கலாம்.

ஆனால்.. எங்கள் மக்களுக்கு நிஜ மனிதன்.. பிரபாகரன் செய்த உபதேசமே போதுமானது.

சிங்களவனின் கொடூரப் பிடியில்... இருந்து வந்த ஒரு பெண்.. பாஞ்சாலி எங்கிறார் என்றால் அதற்குள் அந்தப் பெண்ணின் மன வலிதான் பொதிந்துள்ளதே தவிர.. பாரத இதிகாச பாத்திரப் பிரதிபலிப்பல்ல..! அந்தப் பாத்திரம் சுமந்து வந்த வலியின் தன்மை தான் உணர்த்தப்படுகிறது.. இந்த உவமை மூலம்.

கீதா உபதேசம்.. காட்சிப்படுத்தப்பட்டதற்குக் காரணம்.. சாதாரண மனித ஆசா பாசங்களுக்கு அப்பால் நாம் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதற்கே...! :icon_idea:

Edited by nedukkalapoovan

எங்கள் கருத்தில் என்றில்லை. உலகளாவிய குடிபெயர்வு தொடர்பான ஆவணங்களிலும்.. இதே பாகுபாடுள்ளது. அதைப் பற்றி இன்னொரு தலைப்பில் கதைக்கலாம் தேவை ஏற்பட்டால்.

அவர்களின் தொலைப்பை நீங்களே எள்ளி நகையாடுவது போலவே தான் இந்தத் திரி போய்க்கிட்டு இருக்குது..??!

புரியல்ல... அவர் தமிழ் பெண்களின் அவல நிலையை எடுத்துகாட்ட..ஒரு உவமைக்காக சொன்னதை தூக்கிப்பிடிச்சு.. இப்படி ஒரு விவாதம் அவசியம் தானா..????????????????!

அதிலும்.. தமிழ் சமூகத்தில்.. சாதி ஒழிப்பை முதன்மைப் படுத்திய புரட்சிக் கவி.. பாரதிக்கும்.. பிராமண அடையாளம்..????! இவை எல்லாம்.. இந்தத் தலைப்பில்.. எப்படி இந்தப் பெண்களின் அவலத்திற்கு முடிவு எழுத ஜெயலலிதாவை சிந்திக்கத் தூண்டும்..???!

பாரதி சாதி ஒழிப்பை பாடுகிறேன் என்று என்னென்ன சாதி உள்ளதென்று விபரமாகப் பாடலில் பதிவு செய்திருப்பதுதான் உண்மை. அதேபோல ஈழம் என்பதையே உச்சரிக்க மனமின்றி சிங்களத் தீவு என்று பாடியவந்தான் அவன். இதுதான் இன்றூவரையும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிராமணர்களின் நிலைப்பாடு.

இங்கு போய்க் கொண்டிருப்பது.. பதியப்பட்ட செய்திக்கு.. அநாவசியமான.. விவாதம். அதனைச் சுட்டிக்காட்டுவதே எங்களின் வருகையின் நோக்கம். மற்றும்படி.. குடிபெயர்பு பற்றிய பாகுபாடு எழுதனுன்னா.. நிறைய ஆதாரங்களோடு எழுத முடியும்...! ஆனால்.. அது இப்ப அவசியம் இல்லை..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஈழப் பெண்கள் புதுமையாக கணவன்மாரை மாற்றலாம் என்கிறீர்களா?!

(விதவா விவாகத்தை இங்கு குறிப்பிடவில்லை.)  :)

நிச்சயமாக ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவது அவரது சொந்த உரிமை. இங்கே அண்ணன் , தம்பி ,அப்பா என்று யாரும் அவர்களின் முடிவுகளில் தலையிட முடியாது.

குறிப்பாக ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்க அடிமையில் அடக்கப்பட்டு கணவனே கண் கண்ட தெய்வம்..... கல்லானாலும் கணவன்.... புல்லானாலும் புருஷன்...... ஒருவனுக்கு ஒருத்தி....ஒருத்திக்கு ஒருத்தன்... இல்லையென்றால் போர்த்து மூடிப்படு .....

என்றெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈழத்துப் பெண்கள் உலகம் என்றால் கணவன் பிள்ளைகள் இல்லாவிட்டால் சமையல் மற்றதெல்லாம் ஆண்கள் பார்த்துச் சொல்வார்கள் என்று அடைபட்டு இருப்பது தவறு.

தனக்கு தவறு எனும் பட்சத்தில் கணவனைத் தூக்கியெறிய ஈழத்துப்  பெண்கள் முன்வரவேண்டும். விவாகரத்து என்பது ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் பெண்கள் குறைவு. காரணம் ஆணாதிக்கம்

இரண்டாவது திருமணம் செய்யும் ஈழத்துப் பெண்கள் இன்னும் குறைவு காரணம் ஆணாதிக்கம், ஆண்களால் பழி வாங்கப்படுவோம் என்ற அச்சம். இதையெல்லாம் உடைத்து.... ஏற்கனவே உடைபட்டுக் கொண்டிருக்கின்றது..இன்னும் ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வரவேண்டும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.