Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்
 
140526125257_narendra_modi_304x171_ddnew

பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி

இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகமும் கூடுதலாக பாதுகாப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சர்

சுஷ்மா ஸ்வராஜ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்களான வெங்கைய்யா நாயுடு மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர்.

நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பேச்சாளர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கன்னியாகுமரித் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் வி.கே. சிங்குக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மனேகா சஞ்சய் காந்தி புதிய அமைச்சரவையில் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராகியுள்ளார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருத்தி இராணி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

அடுத்து அவர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அமைச்சரவையில் 44 பேர்

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் காபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் தவிர கூட்டணியின் கட்சியினருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், 23 காபினெட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும் அடங்குவர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட தெற்காசியத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வைபவம் நடக்கும் இடத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இராணுவ ஸ்னைப்பர் துப்பாக்கி வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்திவைக்கப்பட்டிருந்தன.

http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140526_modi_swearing_in.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடி தலைமையில் பா ஜா கா வின் ஆட்சி பலமானதாகவும்
ஈழத்தமிழர்களுக்குப் பக்க பலமாகவும் இருக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடி தலைமையில் பா ஜா கா வின் ஆட்சி பலமானதாகவும்

ஈழத்தமிழர்களுக்குப் பக்க பலமாகவும் இருக்க வாழ்த்துக்கள்

 
  • கருத்துக்கள உறவுகள்

 

.....ஈழத்தமிழர்களுக்குப் பக்க பலமாகவும் இருக்க வாழ்த்துக்கள்

 

 

முதலில் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அக்கப்போராக இல்லாமல் இருக்கட்டும், பின்னர் பக்கபலமாக இருப்பார்களாவென பார்க்கலாம். :rolleyes:

 

காங்கிரசும் சரி, ப.ஜ.கவும் சரி, தலைவர்கள் தங்கள் சொந்த மூளையை பயன்படுத்துகிற மாதிரி தெரியவில்லை, செளத் ப்ளாக் அதிகாரிகள் வகுத்துக்கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ஜென்மங்கள்! :wub:

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்டவர்கள் நாங்கள் ,  இவர்களும் நல்லது செய்வார்களென  நம்புவோம்...!

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் சிங்கள அரசுகள்.. அவர்களுக்கு தகுந்த மாதிரி கூழைக்கும்பிடு போட்டு தமக்கு ஆதரவாக்குகிறார்கள்....

நாங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் மல்லுக்கே நிட்கிறோம்....

 if you can't beat them..join them and beath them... அதை நாங்கள் பழக வேண்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியில் இருந்த போதும், அங்கு நரேந்திர மோடி 'ஒரு துறவி போன்றே' வாழ்ந்தார். சொந்த பந்தங்களை தேடிச்சென்று சந்திப்பது இல்லை. உறவினர்களும், முதல்வர் அலுவலகம் வருவது இல்லை.

அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா செய்வது, பத்திரிகைகள் படிப்பது, லேப்டாப்பில் மின்னஞ்சல் பார்ப்பது என்று தான் அவரது அதிகாலை பொழுது விடிந்தது.ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. ஓய்வெடுக்க எங்கும் சென்றது இல்லை. கட்சி அல்லது ஆட்சி என்று தான் அவரது நாட்கள் நகர்ந்தன.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும், கடைநிலை ஊழியர்களிடம் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர். டில்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, 'பிரதமர் இல்லத்தில் பணி புரிய யாராவது விரும்புகிறீர்களா' என்று தனது டிரைவர்கள், உதவியாளர்கள், சமையலாளர்களை கேட்டார் மோடி. பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும், எல்லோரையும் அழைத்து வர முடியாது என்பதால், சமையல்காரர் உட்பட சிலரை மட்டும், டில்லிக்கு அழைத்து வந்தார் மோடி.

ஒரு குடும்ப உறுப்பினரை வழி அனுப்புவது போல், முதல்வர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் மோடியை வழி அனுப்பினர். முதல்வர் அலுவலகத்தில் தான் பயன்படுத்தி வந்த சிவப்பு நிற பேனாவை, அங்கு முதல்வராக பொறுப்பேற்ற ஆனந்தி பென்னிடம் வழங்கி வாழ்த்தினார். பேனாவை பெற்றுக்கொண்ட ஆனந்தி பென், துக்கம் தாங்காமல் அழுதார் என்கிறார் குஜராத் அதிகாரி ஒருவர்.பதிமூன்று ஆண்டுகளில், முதல்வர் பணியில் கிடைத்த ஊதியத்தை, முதல்வர் அலுவலக கடைநிலை ஊழியர்களின் எதிர்கால படிப்புச் செலவிற்கு வழங்கி விட்டார்.

இதுவரை கிடைத்த நினைவுப்பரிசுகளை அரசு இல்லங்களுக்கு அளித்து விட்டார். கூட்டங்களில் கிடைக்கும் சால்வைகளை, அவ்வப்போது பொது இடங்களில் 'முதல்வர் சால்வை' என்ற பெயரில் ஏலமிட ஏற்பாடு செய்வது மோடியின் வழக்கம். அதில் கிடைக்கின்ற தொகையை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுவார்.டில்லி 7,ரேஸ்கோர்ஸ் ரோடு, பிரதமர் இல்லத்திற்கு இன்னும் சில நாட்களில் குடியேறப் போகும் பிரதமர் மோடி, ஆமதாபாத்தில் இருந்து எடுத்து வந்த 'சொத்து' என்ன தெரியுமா? ஒரு லேப் டாப், ஐ பேட் மற்றும் 5 செட் டிரஸ்! கூடவே விவேகானந்தர் தொடர்பான சில புத்தகங்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான, 120 கோடி மக்களின் அபரிதமான நம்பிக்கையை சுமந்து கொண்டு, பிரதமர் நாற்காலியில் நேற்று காலையில் அமர்ந்து பணியை துவங்கினார் மோடி! மோடி- மோடியாகவே! வித்தியாசம், அன்று முதல்வர்... இன்று பிரதமர்.இனி, தினமும் அதிகாலையிலேயே எழுந்து பணியை துவக்குங்கள் என்று சக அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டார்.

நன்றி ; தினமலர்

இது காவிரிமைந்தன் என்பவரின் பதிவு.........

 

பிரதமர் நரேந்திர மோடியின் style of functioning,

அதாவது வேலை செய்யும் முறை குறித்து சிலவிஷயங்களை சம்பந்தப்பட்ட இடங்களில் படித்துத் தெரிந்து
கொண்டேன். சில விஷயங்களை என் (வடோதராவில்இருக்கும்) இரண்டு நண்பர்கள் மூலமும்,சில டெல்லி
நண்பர்கள் மூலமும் கேட்டு உறுதி செய்து கொண்டேன். முதலில், நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.பிறகு என்னுடைய அபிப்பிராயம்.

 

முதலாவது குஜராத் முதலமைச்சராக அவர் பணியாற்றிய விதம் -

திறமையான, நேர்மையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தன் டீம்-ல் சேர்த்துக்
கொள்வார்.  அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார்.

குறைந்தது 4-5 ஆண்டுகளுக்கு அவர்களை அந்த இடத்திலிருந்து மாற்ற மாட்டார்.

தன் எதிர்பார்ப்பைச் சொல்லி, அதற்காக திட்டங்களை(plan of estimates and expenditure ) தயாரித்துக் கொடுக்கச் சொல்வார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்று கேட்டறிவார். ஒரு வருடம் என்று பதில்
வந்தால், சரி இதை 6 மாதங்களில் முடிக்க வேண்டுமானால் உங்களுக்கு எத்தகைய கூடுதல் உதவி
தேவைப்படும் என்று கேட்பார். அந்த அதிகாரி கேட்கும் உதவி பட்டியல் அப்படியே அனுமதிக்கப்படும்.

இல்லை 6 மாதங்களில் இதை முடிக்க முடியாது என்று பதில் வந்தால், சரி நான் இந்த பொறுப்பிற்கு வேறு
ஆளைத் தேடிக்கொள்கிறேன். நீங்கள் எங்காவது உங்களுக்கு வசதியான இடத்திற்கு டெபுடேஷனில் போகலாம் என்று சொல்லி விடுவார்.

ஒரு அதிகாரி, இதைச் சுலபமாக செய்து முடிக்க வழி இருக்கிறது ஆனால் ஒரு வேளை அது தோல்வியில் முடிந்தால், தணிக்கையாளர்கள் வறுத்தெடுத்து விடுவார்கள், அரசின் பெயர் கெட்டு விடும் என்று சொன்னால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
துணிந்து செய்யுங்கள் – விளைவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார்.

சாதாரண பொது மக்களாக இருந்தாலும் சரி, தொழிலதிபர்களாகவோ, வர்த்தகர்களாகவோ
இருந்தாலும் சரி - ஒருவர் எதாவது மனு கொடுத்தால், இரண்டாவது
முறையாக அவர்கள் அரசைதேடி வரக்கூடாது. வேகமாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கோப்புகள் தேங்கக்கூடாது. follow up குறிப்புகள்
சம்பந்தப்பட்டவருக்கு மொபைல் அல்லது ஈமெயில் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். தன் மனு
எந்த நிலையில் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவருக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. யாருக்கும் தனிப்பட விலக்கு அளிக்கப்படத் தேவையில்லை.
ஒருவேளை விலக்கு அளிக்கப்பட வேண்டிய அவசியம் வந்தால், அது எல்லாருக்கும் பொருந்துவதாக இருக்க
வேண்டும் என்பது அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தகவல் பரிமாற்றங்களும், மேலதிகாரிகள்
எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடிவதாக அப்டேட் செய்யப்பட வேண்டும். வாய்மொழி உத்திரவுகளை யாரும் பிறப்பிக்கக்கூடாது.
அப்படி ஏதேனும் பிறப்பிக்கப்பட்டால், யாரும் அதை ஏற்றுச் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.- இது குஜராத்தில் அவர் செயல்பட்ட முறை.

 

அடுத்ததாக, அவர் டெல்லியில் செய்ய உத்தேசித்திருப்பது -

பொறுப்பேற்ற கையோடு, மத்திய அரசின் அனைத்துத்துறைகளின் செயலாளர்களையும் நேரில் சந்தித்துப் பேச
உள்ளார். வழக்கமாக புது அரசு அல்லது புது பிரதமர் பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலக செயலாளரும்,
மத்திய அமைச்சரவை செயலாளரும் தான் - ஒவ்வொரு துறையைப் பற்றிய குறிப்புகளையும் பிரதமருக்கு நேரில் சமர்ப்பிப்பார்கள்.

மோடி இந்த வழக்கத்தை மாற்றுகிறார். தான் அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் நேரிடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். இந்த விஷயம் அமைச்சரவை செயலாளர் (cabinet secretary ) மூலம் வாட்ஸ் அப்’பில்
போடப்பட்டிருக்கிறது. இதன் கூடவே தெரிவிக்கப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம் தான்மிகவும்
வித்தியாசமானது. பிரதமரை சந்திக்க வரும் செயலாளர்கள், தனது உதவியாளர் யாரையும் கூட அழைத்து வரக்கூடாது.
அவரவர் துறையைப்பற்றி அவரவரே பிரதமருக்கு விளக்க வேண்டும். பிரதமரின் கேள்விகளுக்கும் அவர்களே பதில் தர வேண்டும்.

இந்த செய்தி வெளிவந்ததும், மத்திய அரசின் அனைத்து துறைகளும் பரபரப்பாகி இருக்கின்றன. துறைச்செயலாளர்கள் அத்தனை கோப்புகளையும் மனப்பாடம் செய்யத் துவங்கி விட்டனர் – அனைத்து துறைகளிலும் homework துவங்கி விட்டது என்று
தகவல் கிடைக்கிறது.

 

இனி எனது கருத்து -

சுமார் 40 ஆண்டுக்காலம் மத்திய அரசின் முக்கியமான பிரிவு ஒன்றின், நிர்வாகத் துறையில் பணியாற்றக்கூடிய
வாய்ப்பும், அனுபவமும் எனக்கு கிடைத்திருந்தது. அதிரடியாகச் செயல்படக்கூடிய, மிகவும் நேர்மையான மூத்த அதிகாரிகள் சிலருடன் மிக நெருக்கமாகப் பணி புரியும் சில சந்தர்ப்பங்களும் வாய்த்தன.

தலைமை நேர்மையாகவும், அக்கரையுடனும், வேகமாகவும் செயல்பட்டால் – அந்தத் தலைமையின்
கீழ் பணி புரியும் அத்தனை பேரும் (விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ), அதே வழியில் பயணம் செய்ய நேரிடுகிறது என்பதை நான் பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மிக மந்தமாக செயல்பட்ட பலரும் ஒரு மின் அதிர்ச்சி (shock treatment ) கொடுத்தாற்போல் மாறிவிடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

 

அரசு நிர்வாகத்தைப் பொருத்தவரை – நரேந்திர மோடி அவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருப்பது
மிக நிச்சயமாகப் பெரிய மாறுதலையும், முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வரும்
என்று உறுதியாக நம்புகிறேன். லஞ்சமும், ஊழலும், சோம்பலும், ஆழ்ந்த உறக்கமும் நிரம்பிக் கிடந்த மத்திய அரசின் நிர்வாகம் எழுந்து நிமிர்ந்து, விரைந்து செயல்படத் துவங்கும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது …இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்று
உளமாற வேண்டுகிறேன்...

 

------------------------------------------------------

மேலே உள்ளவை அவரின் பதிவு

இது உண்மை என்றால் ஒரு ஆற்றல் உள்ளவர் பதவிக்கு வந்திருக்கிறார் (தனது முயற்சியினாலேயே...)...

 

இல்லை என்றால்...மோடியின் PR குழுக்கள் இப்படிபட்ட கதைகளை கட்டுகிறார்களா என்றும் யோசிக்க வேண்டும்  :) :)

  • கருத்துக்கள உறவுகள்

மோடி திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் அவரது கால்வாய்த்திட்டங்கள் அடைந்த வெற்றி பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். ஒரு தேடலில் இந்த இணைப்பு கிடைத்தது. 3:30 நிமிடத்தில் இருந்து நீர்வளம் பற்றி சொல்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மோடி  முதல்வராக இருந்து  குஜாரத்திற்கு நல்லதே செய்துள்ளார்....வளம்படுத்தியுளார். பல துறைகளில் குஜாரத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக நிறுத்தியவர். இருந்தும் கிட்டத்தட்ட இந்தியா எனும்  சிறிய கண்டத்திற்குள் பிரதமராக அகல கால் விரித்து நிற்கின்றார்.  ^_^
 
பரீட்சையில் தேறினால் சந்தோசம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.