Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அஜித் குமார் தோவால் - ராஜபட்சேவின் முப்படைத் தளபதிகளும் ஈழத்தின் இருண்ட எதிர்காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அஜித் குமார் தோவால் - ராஜபட்சேவின் முப்படைத் தளபதிகளும் ஈழத்தின் இருண்ட எதிர்காலமும்

- செந்தில் நாதன்

நாம் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. ஈழத்தமிழர் விவகாரத்திலும் தமிழ்நாட்டின் புவிசார் நலன் சார்ந்த விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதில் மன்மோகன்சிங்கைவிட பலமடங்கு மோசமாகத்தான் நரேந்திர மோடி நடந்துகொள்வார் என்பதில் நமக்கு எப்போதும் சந்தேகமில்லை. அது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவின் சார்பில் இலங்கை சென்று திரும்பிய சுஷ்மா ஸ்வராஜ் எத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவர்தான் இன்று வெளியுறவுத்துறை அமைச்சராக ஆகிறார். ஆனால் இங்கே மோடி சுஷ்மா இருவருக்கும் அப்பாற்பட்டு ஒருவரைப் பற்றிப் பேசுவோம்.

மோடி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள அஜித் குமார் தோவால் பற்றி ஈழ விவகாரத்தில் அக்கறையுடைய நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 2008-09இல் ஈழ இனப்படுகொலைக்கான பிரதான காரணகர்த்தாக்களில் சிவசங்கர் மேனன், எம்.கே நாராயணன் மற்றும் இரு நம்பியார்களின் பங்கு பாத்திரம் பற்றி தமிழ் உலகம் அறியும். அதே வரிசையில் - ஒரு விதத்தில் அவர்களைவிட மிக மோசமான ஒரு 'ராஜதந்திரியை' - மோடி அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கவுள்ளது. அவர் கிருஷ்ணமேனன் காலத்திலிருந்து தொடரும் மலையாள மாஃபியா கும்பலில் ஒருவர் என்பது கூடுதல் விசேடமாகும்.

விக்கிபீடியா அறிமுகம் போதுமென்றால் அவரைப் பற்றிய விவரம் இதோ: 2004-05 இல் இன்டெலிஜென்ஸ் பீரோவின் இயக்குநராக இருந்தவர் அஜித் குமார் தோவால், 1968 கேரள கேடர் பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. அவரது பணிக்காலம் முழுக்க இந்தியாவின் தேசிய இனப் பிரச்சினைகளில் ஈடுபட்டு 'தீவிரவாதிகளை ஒழிப்பதில்' கைதேர்ந்தவர்.

அவர் முதலில் நிர்மூலமாக்கியது மிஸோரம் விடுதலைப் போராட்டத்தைத்தான். பர்மாவிலிருந்து செயல்பட்ட மிஸோ தேசிய முன்னணியின் முக்கிய தளபதிகளை வளைத்துப்போட்டு அந்த அமைப்பையும் இயக்கத்தையும் முடக்கினார். நீண்ட காலம் ஒரு ரகசிய நபராக அவர்களோடு இருந்து, அதன் 7 கமாண்டர்களில் 6 பேரை தம்வசம் திருப்பினார் அஜித். பிறகு சிக்கிமை இந்தியாவுடன் இணைப்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

பஞ்சாபில் இந்திய ராணுவம் 1989 இல் நடத்திய இரண்டாவது 'ஆபரேஷன் ப்ளாக்தண்டர்' நடவடிக்கையின்போது அதில் பங்குபெற்றார். வெளியே இருந்து ராணுவம் தாக்கிய சமயத்தில், பொற்கோவிலின் உள்ளே இருந்துகொண்டே கிளர்ச்சியாளர்களை வீழ்த்த வழிசெய்தார். அதன்பிறகு 1992 இல் பஞ்சாப் சட்டசபைக்கான தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து கொடுத்ததிலும் இவருக்கு பங்குண்டு.

பாகிஸ்தானில் ஆறாண்டுகள் இருந்த அஜித். காஷ்மீரில் குக்கா பாரே போன்ற சில குழுக்களை இந்திய ஆதரவு கூலிப்படைகளாக மாற்றியதில் முக்கிய பங்குவதித்தவர். 1999 காந்தகார் விமானக் கடத்தல் விவகாரத்தின்போது, கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதான அதிகாரி இவர்தான். 2005 இல் ஓய்வுபெற்ற அஜித், அதன் பிறகு மிக முக்கிய சர்வதேச விவகார நிபுணராகவும் பாதுகாப்பு விவகார நிபுணராகவும் செயல்பட்டு வருகிறார். லண்டனில் இந்திய தூதரகத்திலும் முக்கிய பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் அவர் ஒரு நிஜமான பாலிவுட் ஸ்டைல் தேசபக்தர், அர்ஜுன், விஜயகாந்த்களின் 'நிஜவாழ்க்கை' முன்மாதிரி. இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும்போது ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்காரனும் பெருமிதம் அடைவான்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தனை மன்றங்களின் (think tanks) ஒன்றான விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் இயக்குநராக தற்போது அஜித் குமார் தோவால் இருக்கிறார். கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா மையத்தின் கிளை நிறுவனமான இந்த அறக்கட்டளை தில்லியில் செயல்பட்டுவருகிறது. 'ரகசிய' காக்கி டவுசர் ஆசாமியான முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ் காலத்தில் சாணக்கியபுரியில் ஒரு இடத்தை வளைத்துப்போட்டு செயல்பட ஆரம்பித்த இந்த அறக்கட்டளை, இன்று மிக முக்கிய அமைப்பாக வளர்ந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாபா ராம்தேவுக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் பின்புலமாக இருந்து காங்கிரஸை காலிசெய்ய 'ஊழல் எதிர்ப்பு போராட்ட' வியூகம் வகுத்து அளித்தது இந்த அமைப்புதான் என்பது ஊரறிந்த ரகசியம். இந்த அறக்கட்டளையின் முக்கிய மற்றும் ஒரே பணி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கும் செயல்திட்டங்களுக்கும் ராஜதந்திர மற்றும் கொள்கை முலாம் பூசுவதுதான். அஜித் தலைமையில் அந்த பணி செவ்வனே நடந்துவருகிறது.

ஈழப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ் எடுக்கும் நிலைப்பாடுகளை புரிந்துகொள்ளவேண்டுமானால், அஜித் குமார் தோவால் இயக்குநராக இருக்கும் இதுபோன்ற சிந்தனை மன்றங்களின் கடந்த கால வெளியீடுகள், அறிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மோடி-சுஷ்மா ஸ்வராஜ்-தோவால் மும்மூர்த்திகளின் இலங்கை விவகார கொள்கை எப்படி இருக்கும்? அவர்களின் கண்ணோட்டங்களை மீள்பார்வை பார்த்த அளவில் மோடியின் இலங்கைக் கொள்கை பின்வரும் தன்மைகளோடு இருக்க சாத்தியம் உள்ளது:

1. இலங்கையின் சீனச்சார்பை இந்தியா லேசாக எடுத்துக் கொள்ளாது. இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை இலங்கை முழுமையாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதில் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்.

2. காங்கிரஸ் அரசு இலங்கை விஷயத்தில் ஒரு appeasement மட்டுமே கடைபிடித்தது. இலங்கையில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கக்கூடிய 'ராஜதந்திர உடைமையான' தமிழர்களை அது இழந்துவிட்டது. மோடி அரசு இலங்கையுடன் இணக்கமாகவும் நடக்கும் பிணக்கையும் உருவாக்கும். ஆனால் இனி அது தமிழர்களை தனது ராஜந்திர உடைமையாக கருத வாய்ப்பில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்களின் சார்பில் அங்கே பெரிய சக்தி ஏதுமில்லை. அத்துடன் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த கால சமன்பாடுகளை மீளவும் முயலும் அளவுக்கு மோடி முட்டாள் இல்லை. நாம் இந்திரா காந்தி காலத்தில் இல்லை என்பதை உணர்ந்துகொண்டுதான் ஆகவேண்டும். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் உருவாக்க உதவியது போல இலங்கையிலிருந்து ஈழத்தை மோடி உருவாக்குவார் என எவராவது கருதினால் அவரைவிட கிறுக்கு வேறு யாரும் இருக்கமுடியாது.

3. ஒருவேளை இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகார பகிர்வை மேற்கொள்ளுமானால், இந்திய மாநிலமொன்றின் உரிமைகளுக்கு அப்பால் எந்த ஒரு சுயாட்சி திட்டத்தையும் அதனால் முன்மொழியமுடியாது. காரணம். அதை இந்தியா ஏற்காது. தற்போது காஷ்மீருக்கு உள்ள தனித்தன்மையையே நீக்கவேண்டும் எனக் கூறுகிற மோடி அரசு, காங்கிரஸ் அரசு கூறிவந்த 13 ஆவது சட்டத்திருத்தம் என்கிற அளவைக்கூட ஏற்குமா என்பது சந்தேகமே. இலங்கையின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்திய அரசு முழு உத்தரவாதம் அளிக்கும். ஏனென்றால் அது ஏகத்துவ சித்தாந்த அரசு. சீனாவின் ஆதிக்கம், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தொழில்வாய்ப்பு, தேசிய இன அடையாள மறுப்பு ஆகிய அதே பழைய காரணிகளே மோடி அரசின் இலங்கைக் கொள்கையை வடிவமைக்கும்.

4. ஈழ ஆதரவு சக்திகளை மோடி அரசு ஒரு தம்பிடிக்குக்கூட மதிக்காது. ஆனால் எப்போதாவது அது நமது குரல்களுக்கு செவிசாய்ப்பதாகத் தோன்றினால், பின்புலத்தில் இலங்கை அரசுடனான 'பேரம்' இருக்கிறது என்று மட்டும் அதற்கு அர்த்தம். தமிழ்நாட்டு ஈழ ஆதரவுக்குரல் தமிழ்நாட்டில் பிரிவினை அரசியலுக்கு வித்திட்டுவிடக்கூடாது என்கிற கவலையும் மோடி அரசுக்கு நிச்சயமாக உருவாகும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் போல சற்று 'அலட்சியமாக' மோடி அரசு இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழகத்தில் தமிழ்த்தேசிய வளர்ச்சி குறித்து மோடி அரசு நிச்சயமாக கவலைப்படும். அதை முளையிலேயே கிள்ளி எறிய எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்றே தோன்றுகிறது. சர்வதேச அரங்குகளிலோ இலங்கையுடனான உறவிலோ மன்மோகன்சிங் ஆடிய நாடகங்களைக்கூட மோடி ஆடமாட்டார். (காமன்வெல்த், ஜெனீவா விவகாரங்கள் போல). இலங்கையுடனான உறவில் அவர் தெளிவாக இருப்பார், சீறவேண்டுமெனில் சீறுவார், ஆனால் ஒருபோதும் இலங்கையை விட்டுக்கொடுக்கமாட்டார். ராஜபட்சே இந்த புதிய சமன்பாட்டுக்கு உடன்படாவிட்டால், நிச்சயமாக தூக்கியெறியப்படுவார். இந்தியாவுக்குத் தேவை இலங்கைதான், ராஜபட்சே அல்ல.

5. இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் இந்தியாவின் பங்கு பற்றி இந்த உலகம் ஒருபோதும் பேசாது. எனவே இலங்கை மீதான சர்வதேசிய விசாரணை எல்லாம் இனி வெறும் கனவே. அமெரிக்காவோ மேற்குலகமோ இந்து வலதுசாரி எதேச்சாதிகார பிரதமர் என்று வர்ணிக்கப்படுகிற மோடியிடம்தான் இனி பேரம் பேசப்போகிறது. தெற்காசியாவில் இந்தியாவின் மேலாண்மையை அங்கீகரித்துவிடுவதுதான் நல்லது என்கிற நிலைப்பாட்டை மேற்குலகம் மீண்டும் மறுஉறுதி செய்யும். அதன் நீட்சியாக, இலங்கையை இந்தியாவின் 'பொறுப்பில்' அவை விட்டுவிடும்.

6. ஆசியாவில் அமெரிக்காவை சமநிலைப்படுத்தும் காரணிகளாக உள்ள ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நெருக்கம் பேணுவது நல்லது என மோடி நினைத்தால் (அதில் நிறைய பலன்களும் இருக்கின்றன), இந்தியாவுக்கு புதிய ஆசிய நூற்றாண்டில் கூடுதல் செல்வாக்கு கிடைக்கும். அப்போது இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்கத்தை சீனாவும், தற்காலிகமாகவாவது அங்கீகரிக்கும். மத்திய ஆசியாவில் எப்படி சீன-ரஷ்ய சமன்பாடுகள் வேலை செய்கின்றனவோ, மேற்காசியாவில் எப்படி சீன-ஈரான் சமன்பாடுகள் வேலை செய்கின்றனவோ அதைப் போல சீன-இந்திய சமன்பாடுகள் தெற்காசியாவில் வேலை செய்ய வாய்ப்பிருக்கிறது. (கவனிக்க இது பல் துருவ உலகம் மட்டுமல்ல, வல்லரசுகள் ஒருவருக்கொருவர் பகைவர்கள் அல்லர், போட்டியாளர்கள்). இப்படியொரு நிலையில் உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தெற்காசிய நாட்டாமைக்கு எதிராக கொடி பிடிப்பது மிகவும் கடினமாகிவிடும். அப்போது ராஜபட்சே மிகை சீன சார்பை மறுபரிசீலனை செய்யநேரிடும். இலங்கை இந்தியாவுக்கு அடிபணியும் பட்சத்தில், அதற்கு பிரதியுபகாரமாக, அதனுடைய வரைபடத்தில் ஒரு கீறல்கூட விழாதபடி இந்தியா பார்த்துக்கொள்ளும்.

ஆனால் இந்தியாவின் 'பழைய பாணி' சீன எதிர்ப்பு ராஜதந்திரிகளின் கை மட்டுமே ஓங்குமானால், மேலே நான் குறிப்பிடும் நிலைமை எழாமல் போய்விட வாய்ப்புள்ளது.

ராஜபட்சேவைப் பொறுத்தவரை, அவரால் சீனாவை சரியாக சமாளிக்க முடிந்துவிட்டால், இதைவிட பெரிய சந்தர்ப்பம் வேறொன்றுமில்லை. இந்தியாவுடனான சமன்பாடுகளை 'சரிசெய்துகொண்டால்' போதும், இலங்கையின் சர்வாதிகாரியாக அவரும் அவரது குடும்பத்தினரும் நெடுங்காலத்துக்கு தனது ஆட்சியைத் செலுத்துவர்.

அந்த விதத்தில் பார்த்தால் மோடி, சுஷ்மா, அஜித் ஆகிய மூவரும் ராஜபட்சேயின் எதிர்காலத்தை உறுதியாக பாதுகாப்பார்கள்.

இப்படிப்பட்ட நிலையைத்தான் ஈழ அரசியலும் ஈழ ஆதரவு அரசியலும் எதிர்கொள்ளப்போகின்றன. இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மோடி அரசை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ளக்கூடிய எந்த கட்சியும் இப்போது இல்லை. 1989க்குப் பிறகு தமிழ்நாட்டின் செல்வாக்கு சிறிதுமற்ற, அதே சமயம் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றுள்ள, ஒரு ஹிந்து-ஹிந்தி-ஹிந்துஸ்தான் அரசு ஆட்சிபீடத்தில் இருக்கிறது.

இந்திய தெற்காசிய, ஆசிய மற்றும் உலகளவில் ஆடப்படும் இந்த பிரமாண்டமான ஆட்டத்தைப் புரிந்துகொள்வதே அனுபவமற்ற நம் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் சவாலான காரியம். ஈழம் அமைவதற்கும் அமையாமல் போவதற்கும் நாம் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ போன்றவர்களின் அரசியல்தான் காரணம் என்று இங்கே அடித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற நிலையில், இதைப் பற்றிய உரையாடல்கள்கூட நமக்கு இன்று சாத்தியப்படாமல் போகலாம்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=e891a2ec-205e-49ac-9a36-07addd00e637

இந்த கட்டுரையை எழுதிய செந்தில் நாதனை நினைக்க பரிதாபமாக இருக்கிறது. இவரை போல தான் யாழிலும் சிலர் கொடுத்த காசுக்கு வஞ்ஜகம் இல்லாமல் கொடுத்த காசுக்கு மேலதிகமாக கூவி காணமல் போனார்கள். இந்த கட்டுரையை வாசிக்கும் போது எழுதியவரின் அரசியல் அறிவை நினைக்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதை வாசிக்கும் போது ஒரு விடயமே நினைவுக்கு வருகிறது. 

 

" THE DOGS BARK. BUT THE CARAVAN MOVES ON "  :D  :D  :D  :lol:  :lol:  :lol: 

மோடி ஒரு போதும் தமிழ் ஈழத்தையோ தமிழ் தேசியத்தையோ அங்கீகரிக்க மாட்டார். 13 ம் திருத்ததின் மூலம் இந்திய மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகார பரவலாக்கலை நடைமுறை படுத்த சிங்க ராஜாவை வலியுறுத்துவார். அப்படி கொடுத்தால் சிங்கள மக்களிடம் சிங்க ராஜா போரில் வென்று ஏற்படுத்திய சிங்க வம்ச ராஜா இமேஜ் எடுபடாது. சிங்க ராஜா முரண்டு பிடிப்பார். மோடியிடம் முரண்டு பிடித்தால் என்ன நடக்கும் என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. மோடி யாரென்று தெரிந்தவர்களுக்கு அது புரியும். சிங்க ராஜாவின் அணுகுமுறையே மோடியை தமிழ் ஈழம் நோக்கி நகர செய்யும். விரைவில் காட்சிகள் மாறும். இது தான் கால நியதியின் வரலாற்று கட்டளை. குரைத்தவர்களும் கூவினவர்களும் வெகு விரைவில் காணாமல் போவார்கள்.  :D  :D  :D  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஒரு போதும் தமிழ் ஈழத்தையோ தமிழ் தேசியத்தையோ அங்கீகரிக்க மாட்டார். 13 ம் திருத்ததின் மூலம் இந்திய மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகார பரவலாக்கலை நடைமுறை படுத்த சிங்க ராஜாவை வலியுறுத்துவார். அப்படி கொடுத்தால் சிங்கள மக்களிடம் சிங்க ராஜா போரில் வென்று ஏற்படுத்திய சிங்க வம்ச ராஜா இமேஜ் எடுபடாது. சிங்க ராஜா முரண்டு பிடிப்பார். மோடியிடம் முரண்டு பிடித்தால் என்ன நடக்கும் என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. மோடி யாரென்று தெரிந்தவர்களுக்கு அது புரியும். சிங்க ராஜாவின் அணுகுமுறையே மோடியை தமிழ் ஈழம் நோக்கி நகர செய்யும். விரைவில் காட்சிகள் மாறும். இது தான் கால நியதியின் வரலாற்று கட்டளை. குரைத்தவர்களும் கூவினவர்களும் வெகு விரைவில் காணாமல் போவார்கள். :D :D :D :icon_idea:

அதே.. அதே.. :D

யாரப்பா இந்த கோமாளி, ரோம்ப்ஸ் தான் குறைக்கிறார், மறைமுகமாக விடுதலை போராட்டத்தை கைவிடிஎன்று மிரட்டுகிறார், மோடியின் வரவின் பின்னர் இப்படியான பல கட்டுரைகள் உலாவுகின்றன, முக புத்தகத்திலும் இப்படியான 2 கட்டுரைகள் பார்த்தேன்.

யாரப்பா இந்த கோமாளி, ரோம்ப்ஸ் தான் குறைக்கிறார், மறைமுகமாக விடுதலை போராட்டத்தை கைவிடிஎன்று மிரட்டுகிறார், மோடியின் வரவின் பின்னர் இப்படியான பல கட்டுரைகள் உலாவுகின்றன, முக புத்தகத்திலும் இப்படியான 2 கட்டுரைகள் பார்த்தேன்.

 

யார் கோமாளி யார் குரைப்பது யார் கூவுவது என்பதெல்லாம் வெகு விரைவில் தெரியத்தான் போகுது அன்பரே. மோடி ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அண்ணன் தாங்கள் இருக்கிறீர்கள் அடுத்த கட்ட போரை தலைமையேற்று நடத்தி எமக்கு நல்ல தீர்வை பெற்று தருவீர்கள் என்கிற நம்பிக்கை தங்கள் பதிவை வாசிக்கும் போது ஏற்படுகிறது.  :D  :D  :D  :lol:  :lol:  :lol: 

சீமான் தனது பெயரை வடிவேலு என்று மாத்தினால் நல்லது .கருத்துக்கள் அவ்வளவும் செம கொமடி .

சிங்களவனுக்கு (அது ஜே ஆர் தொடங்கி ராஜபக்சா வரை ) தான் என்ன செய்கின்றான் என்று தெளிவாய் தெரியும் .

ஆடுற மாட்டை ஆடி கறக்கவும் பாடுற மாட்டை பாடி கறக்கவும் அவன் phd எடுத்துவிட்டான் பள்ளிகூடம் போகாத எம்மட கோஸ்டிகள் கொச்ச்டையான் கிராபிக்ஸ் மாதிரி  இப்பவும் அசைகின்றார்கள் . :icon_mrgreen:  :icon_mrgreen: . 

சீமான் தனது பெயரை வடிவேலு என்று மாத்தினால் நல்லது .கருத்துக்கள் அவ்வளவும் செம கொமடி .

சிங்களவனுக்கு (அது ஜே ஆர் தொடங்கி ராஜபக்சா வரை ) தான் என்ன செய்கின்றான் என்று தெளிவாய் தெரியும் .

ஆடுற மாட்டை ஆடி கறக்கவும் பாடுற மாட்டை பாடி கறக்கவும் அவன் phd எடுத்துவிட்டான் பள்ளிகூடம் போகாத எம்மட கோஸ்டிகள் கொச்ச்டையான் கிராபிக்ஸ் மாதிரி  இப்பவும் அசைகின்றார்கள் . :icon_mrgreen:  :icon_mrgreen: . 

 

 " THE DOGS BARK. BUT THE CARAVAN MOVES ON "

                    :D   :D   :D   :lol:   :lol:   :lol: 

Edited by seeman

தமிழார் மீதான உளவியல் போர் இப்போது உச்சத்திற்கு சென்று உள்ளது, இதில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,எமது வெற்றி அண்மையில் தான் உள்ளது, எமக்கு சாதகமான் காரணிகளை கண்டறிந்து எமது வெற்றியை பெறும் தருணம் இது.தமிழனுக்கு ஈழம் போய் ஒரு சாதாரண்ச் தீர்வு கூட கிடையாது என்ற போக்கிலேயே அண்மைக்காலமாக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன, அதற்குக் காரணம் அரசியல் நிலைமை எமக்கு சாதகமாக மாறியுள்ளமையே, அதனால் தான் எமது விடுதளிக்கு எதிரானவர்கள் இப்படியான கட்டுரைகளை இணைக்கிறார்கள்.

தமிழார் மீதான உளவியல் போர் இப்போது உச்சத்திற்கு சென்று உள்ளது, இதில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,எமது வெற்றி அண்மையில் தான் உள்ளது, எமக்கு சாதகமான் காரணிகளை கண்டறிந்து எமது வெற்றியை பெறும் தருணம் இது.தமிழனுக்கு ஈழம் போய் ஒரு சாதாரண்ச் தீர்வு கூட கிடையாது என்ற போக்கிலேயே அண்மைக்காலமாக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன, அதற்குக் காரணம் அரசியல் நிலைமை எமக்கு சாதகமாக மாறியுள்ளமையே, அதனால் தான் எமது விடுதளிக்கு எதிரானவர்கள் இப்படியான கட்டுரைகளை இணைக்கிறார்கள்.

 

எமது அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களும் எமது விடுதலைக்கு எதிரானவர்கள்தான்.  :D  :D  :D  :lol:  :lol:  :lol:  :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஈழம் போய் ஒரு சாதாரண்ச் தீர்வு கூட கிடையாது என்ற போக்கிலேயே அண்மைக்காலமாக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன, அதற்குக் காரணம் அரசியல் நிலைமை எமக்கு சாதகமாக மாறியுள்ளமையே, அதனால் தான் எமது விடுதளிக்கு எதிரானவர்கள் இப்படியான கட்டுரைகளை இணைக்கிறார்கள்.

அப்படியா! எமக்கு சாதகமான அரசியல் நிலைமைகளை விளக்கும் கட்டுரைகளை தாரளாமாக இணையுங்களேன். அல்லது நீங்களே படையுங்களேன்.

நம்பகத்தன்மை வாய்ந்த இணையத்தளங்கள் என்று நான் குளோபல் தமிழ் நியூஸ், பொங்குதமிழ், புதினப்பலகை ஆகியவற்றைத்தான் படிப்பதுண்டு. தேசியச் செயற்பாட்டின் உச்சமாக துரோகிப் பட்டங்கள் கொடுக்கும் இணையத் தளங்களை அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது அதிகாரங்களை  தெற்காசியப் பிராந்தியத்தில் இன்னும் ஊன்ற வைக்க எதையும் செய்யும். ஆனால் மோடி பிரதமர் ஆன பின்னர் அவர் ஏழைகளின் நண்பர் என்ற ரீதியில் அடக்கப்பட்டவர்களும் அடக்கப்படுபவர்களும் அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள்.அதையும் மோடி  புரிந்துவைத்திருப்பார்.

மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களுக்கும்
தற்சமயம் ஒரு கலங்கரை விளக்கு. அந்த ஒளி எவ்வளவு தூரம் ஒளியைப்
பாய்ச்சுகின்றது என்பது இன்னும் சில காலங்களில் தெரியும்.
அதுவரை எமக்கு இது போன்ற கட்டுரைகள் தேவையற்றது.

யாரையும் நம்பி பிழைத்த காலம் இனி மேல் முடியாது ....அவர்களுக்கு அவரவர் இலாபமே நோக்கம் . நாமும் double game விளையாட கற்று கொள்ள வேண்டும் ....யாரையும் பகைக்காமல் நோகாமல் நுங்கு சாப்பிட கற்று கொள்வதே இப்போதிய நியதி ..காலம் மாற வேஷங்கள் மாறலாம் .........

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் நம்பி பிழைத்த காலம் இனி மேல் முடியாது ....அவர்களுக்கு அவரவர் இலாபமே நோக்கம் . நாமும் double game விளையாட கற்று கொள்ள வேண்டும் ....யாரையும் பகைக்காமல் நோகாமல் நுங்கு சாப்பிட கற்று கொள்வதே இப்போதிய நியதி ..காலம் மாற வேஷங்கள் மாறலாம் .........

 

மிகச்சரியான  பார்வை

நன்றி

இந்த கட்டுரையை எழுதிய செந்தில் நாதனை நினைக்க பரிதாபமாக இருக்கிறது. இவரை போல தான் யாழிலும் சிலர் கொடுத்த காசுக்கு வஞ்ஜகம் இல்லாமல் கொடுத்த காசுக்கு மேலதிகமாக கூவி காணமல் போனார்கள். இந்த கட்டுரையை வாசிக்கும் போது எழுதியவரின் அரசியல் அறிவை நினைக்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதை வாசிக்கும் போது ஒரு விடயமே நினைவுக்கு வருகிறது.

" THE DOGS BARK. BUT THE CARAVAN MOVES ON " :D :D :D :lol: :lol: :lol:

"Leaders need fresh impetus to sustain their power. The propaganda machinery of the government is aided and abetted by scare-mongers such as sycophant Tamil websites, the editors of which are handsomely rewarded who plug in fabricated details and who have an axe to grind lend flimsy evidence the LTTE are re-grouping. It is ironic these website editors are spongers on western governments while bartering their own kith and kin to the Sri Lankan government to feed their debauchery and idle lifestyle."

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140825#entry1013913

  • கருத்துக்கள உறவுகள்

 

Don't see any political party speak much on national security issues: Ajit Doval
 
(Ajit Doval's comments are…)
Former director of the Intelligence Bureau and the youngest police officer to ever receive the Kirti Chakra, Ajit Doval heads the Vivekananda International Foundation (VIF). In an interview with Nistula Hebbar, he spoke about security issues, politics and how Narendra Modi is yet to articulate his strategic vision. Doval's comments are significant in the light of his having been regarded as a close confidante of BJP leader LK Advani and his authorship of a paper on black money that was adopted by the party.
As a security expert, what is your view of recent reports on Lashkar-e-Taiba's alleged attempts to recruit Muslims in Muzaffarnagar's riot camps?
I find it difficult to believe simply because there has been no official authentication of these news reports which have appeared. Areport appears and everyone talks about it without going into the fact that LeT as an organisation is a particular kind of creature. Nobody goes into their recruitment strategies, how they've recruited in the past etc. We need more information on this before it can be believed.
As part of your work for the VIF you have also issued a paper on black money along with (RSS ideologue) S Gurumurthy, which was commissioned by the BJP. Would you say you have right-wing sympathies, ideologically speaking?
The paper was written first and the BJP took it up later as part of their campaign to bring back black money from abroad. As for right wing, just what do you mean by that? As far as I am concerned, the entire country is right wing as we don't have collectivised ownership of resources and have the concept of private property. That is my understanding of right and left-wing ideologies predicated on ownership of resources. I stand for a strong nation with a strong economy so that we have enough resources to spend 2.5% of GDP on strengthening defence capabilities, enough to compete with China and others. You need to spend, and you have to take a strong nationalist view on these issues.
BJP prime ministerial candidate Narendra Modi also seems to advocate a strong nationalist view on these issues. Are you in sympathy with them?
I don't really know. He (Narendra Modi) hasn't articulated his views on many issues. There could be (a point of agreement) but I haven't really heard much. Why him, I don't see any political party speak much on security issues, maritime security which is so important, things that need to addressed at a fundamental level.
 
Were you upset that Prime Minister Manmohan Singh also didn't refer to these issues in his press conference?
I do find it strange that the Prime Minister didn't speak about any of these issues in his press conference. That could be because of the nature of the occasion. As I said earlier, no political party seems to be engaging in any meaningful dialogue on these issues.
It's being said that you might find an important place in any future NDA government, even as National Security Advisor? Are you a member of the BJP?

That is absurd and hypothetical. I am not a member of any political party, have never been. I don't think I'd like to accept any position in any government.

 

நாம் சில விடயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஈழத்தமிழின அழிப்புக்கு முதன்மைப்

பொறுப்பு சோனியா அரசு. ஈழத்தமிழர் பிரச்சினையை அமைதிவழியில் தீர்ப்பதற்கு இராசபக்சவுடன் பேசி

அவரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தவேளையில் அதில் தலையிட்டுக் குழப்பியது சோனியா அரசே.இது

வெறும் ஊகமல்ல, உண்மையான விடயம். எனவே அந்த அரசின் வீழ்ச்சி என்பது எமக்குப் பெரிய தடைநீக்கி

-- இருள் நீக்கி. தீர்வுவிடயத்தில் கடந்த 5 ஆண்டுத்தேக்கம் இனி இருக்காது.முன்னேற்றம் நிச்சயம் இருக்கும்.

 

மோடியிடம் இருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் இராசபக்சவுடன் முதல் சந்திப்பிலேயே

நடந்துகொண்டவிதம் மிகுந்த நம்பிக்கை தருகிறது. வெளியுறவுக்கொள்கை ஆலோசகராக அவர் ஜெயசங்கர்

சுப்பிரமணியம் என்ற தமிழரை நியமிக்கலாம் என்ற தகவல்; அவர்  'பார்த்தசாரதி/அமைதிப்படை' தொடர்புகள்

கொண்டவர் என்பதுவும் மேலும் உற்சாகமூட்டுகிறது.ஆனால் அதற்கு சிறிது பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

 

பிரதமர் மோடி வேறுபட்ட இந்திய அரசியல்வாதி. தமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளைப்

பேணுபவர்; ஊழல்கள் அற்றவர்; குடும்பம்,உறவினர்கள் என்பவற்றில் சிக்குப்படாதவர்; ஓரளவான துறவி

என்றே கூறலாம். எனவேதான் நாம் அவரை நின்று நிதானித்து மதிப்பிடவேண்டும்.

 

இந்திய,பிற ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்துள்ள 'இந்துத்தீவிரவாதி' 'முஸ்லிம்களின் எதிரி' போன்றவற்றை

அவசரப்பட்டு ஏற்றுக்கொள்ளக்கூடாது. மூன்றுமுறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்திருக்கிறார்.அதன்

படிமுறை வளர்ச்சியாக இப்போது பிரதமராக அறுதிப்பெரும்பான்மையுடன் உயர்ந்து நிற்கிறார். எனவேதான்

இவர் கவனிக்கப்படவேண்டியவராக  இருக்கிறார்.

 

இவர் நமக்கு 'ஈழம்' வாங்கித்தருவார் என்று  நான் சொல்லவில்லை. அதற்கு நாம் தொடர்ந்து போராடவேண்டும்.

ஒற்றுமையுடன், விழிப்புடன், நீண்டகாலம் ஒரு துறவு மனப்பான்மையுடன் போராடவேண்டும்.அது முற்றாகத்

தமிழர்களின் ஒன்றுபட்ட உழைப்பிலேயே, போராட்டத்திலேயே தங்கியுள்ளது.

 

பிரதமர் மோடி அவர் ஏற்கனவே கூறியபடி ஈழத்தமிழர்களுக்கு சமத்துவமான, நீதியான, கௌரவமான,

ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற உதவலாம்.அவர் பதவியேற்று ஒரு வாரம் தான் ஆகிறது.நியாயமான

காலத்தை அவருக்கு வழங்கி சிறிது பொறுத்திருந்து பார்ப்போம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140719&hl=

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138454&hl=

 

 

 

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.