Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

33 வது யாழ் தமிழ் நூலக அழிப்பு தினம் – மே31 – யூன் 2.1981

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.பொது நூலகம் இனவெறிபிடித்த காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.

இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப்போக்குக்கு உரம் ஊட்டியது.

20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று.

(மே31 – யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள்.

இலங்கை தமிழர்கள் இன்றளவும் மீட்க முடியா இழப்பாக இந்த நூலகம் திகழ்கிறது. தமிழ் சமூகத்தின் பண்பாடு, இலங்கை மண் உடனான அவர்களது உறவு, இலங்கையின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பு, அதோடு, இலங்கை அரசியலில் அவர்களுக்கு இருந்த முக்கியத்துவம் என அனைத்துக்கும் ஆதாரமாக இருந்ததாலேயே அந்த பொக்கிஷம் குறிவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

http://thainilam.mullimalar.in/

1981 MAY 31-  தமிழர் வாழ்வில் மட்டும் அல்ல எனது வாழ்விலும் மறக்கமுடியாத நாள்.

 

1981 யூலையில் ஜே ஆர் மாவட்ட சபை தேர்தலை அறிவித்தபின் தமிழர் கூட்டணியின்  மாவட்ட சபை தேர்தலுக்காகான பிரச்சார கூட்டம் நாச்சிமமார்கோவிலடியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது .

(MAY 25 திகதி யு என் பி முதன்மை வேட்பாளர் ஆ .தியாகராஜா புளொட் சுந்தரத்தால் சுட்டுக்கொல்லப்பாட்டிருந்தார்.   சிறிதளவு டென்சன் அப்போதே இருந்தது .)

தேர்தலில் பங்குபற்றவேண்டாம் என்று தமிழ் இளைஞர் பேரவை அறிவித்திருந்தது .இந்த கூட்டத்தை எப்படியும்  குழப்பவேண்டும்  என்று உமா சொல்ல  மாணிக்கம் அது ஒரு சின்ன விடயம் என்றுவிட்டு போய் பாதுகாப்பிற்கு நின்ற பொலிஸ்காரரின் துவக்கை பறித்து இரண்டு போலீஸ்காரர்களையும் சுட்டுவிட்டார் .அன்று இரவு நாச்சிமார் கோயில் தேர் எரிக்கபட்டு ஆமியின் வெறியாட்டம் தொடங்கியது .அடுத்த நாள் சில அரசாங்கத்திற்கு சொந்தமான கடைகள் உடைக்கப்பட்டன .ஊரடங்கு சட்டம் போடப்பட்டுவிட்டது .

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலடிக்கு நண்பர்களை சந்திக்கபோனேன் .யாழ் நூலகம் இரவு எரிக்கப்பட்டுவிட்டதாகசொன்னார்கள் .விடுப்பு பார்க்க இரண்டு சயிக்கிளில் மூன்று பேர்கள் புறப்பட்டு போனோம் .வீதியெங்கும் வெறிச்சோடி இருந்தது .பயம் என்றால் என்னவென்று தெரியாத வயது அதை விட தினமும் சென்றுவரும் பாதையும் இடங்களும் எள்ளளவிற்கும் பயத்தை தரவில்லை .

 

பிரவுண்வீதியால் யாழ் போய்சேர்ந்தால் பஸ் நிலையதில் ஒரு காக்கை குருவி இல்லை .சற்று வித்தியாசமான ஒரு உணர்வு அப்போதுதான் வந்தது .என்னுடன் வந்தவன் ஒருவன் அஞ்சாநெஞ்சன் அவன் சயிக்கிளில் தான் நான் முன்னுக்கு இருக்கின்றேன் .

யாழ் நூலகத்தை சுற்றி ஒரே புகை மண்டலம் .எப்படியும் வாரத்தில் இரு நாட்கள்  நான் உலக விடயங்களை  அறியும் ஒரே இடம் எரிகின்றது .சயிக்கில்களை  முனியப்பர் கோவில் பக்கம் திருப்ப துரையப்பா விளையாட்டரங்கு ஆமிகாரர்கள் பெரிய சத்தமாக பைலா பாடல்கள் போட்டுவிட்டு நடனமாடிக்கொண்டு இருக்கின்றார்கள் .

மச்சான் வீட்டை போய் சேருவம் என்று சயிக்கிளை அமத்த தொடங்கி வெலிங்டன் தியேட்டரை நெருங்க தனி சயிக்கிளில் வந்த நண்பன் சயிக்கிளை நிற்பாட்டி உடைபட்டுகிடக்கும் BMC ( BUILDING MATERIAL CORP) உள்ளே போகின்றான் . 

போன கையுடன் திரும்ப மின்னல் வேகத்தில் வருகின்றான் . பின்னால் துப்பாக்கியுடன் இரு ஆமிக்காரர்கள் .சைக்கிளுடன் நின்ற நண்பன் பறந்துவிட்டான் மற்ற  சயிக்கிளை எடுக்க நேரமில்லை ஓடுகின்றோம் .நான் லிங்கம் கூல் பாருக்கு அருகில்  இருக்கும் வீட்டிற்குள் பாய்ந்துவிட்டேன் .அதற்குள் இருந்த ஒரு வயோதிப மனுசி என்னை திட்டி தீர்க்கின்றார் .காலையில் இதே இடத்தில்  தான் மூன்று இளைஞர்களை சுட்டார்களாம்.சிறிது நேரத்தில் மெல்ல வெளியில் வந்து பார்த்தால் பெருமாள் கோயிலடியில் நண்பன் நடந்து போவது தெரிந்தது .

நண்பன் முதுகில் ஆமிக்காரன் எறிந்த பொல்லு பட்டு வீங்கிப்போயிருக்கு .அப்படியே சுற்றிக்கொண்டு யோகேஸ்வரன் எம் பி வீட்டிற்கு போகின்றோம் .பலர் அங்கு நடந்த பிரச்சனைகளை பற்றி கதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் .எங்கட சயிக்கில் பிரச்சனை கேட்பாரற்றுபோகின்றது .ரெயில் பாதைக்கு அப்படியே வந்து தண்டவாளத்தால் நடந்தபடியே ஊர் வந்து சேருகின்றோம் .

அடுத்தநாள் நண்பனின் முதுகு இன்னமும் வீங்கி எண்ணை பூசிக்கொண்டுவந்தார் .எங்களை விட்டு ஓடிய நண்பரின் சயிக்கில் தான் தொலைந்தது .

இன்று இருப்பது போல் அன்று அது ஒரு பெரியவிடயமாக மனதை  பாதித்ததாக ஞாபகமில்லை .

இது நடந்து அடுத்த மாதமே நான் இலங்கையை விட்டு வெளிக்கிட்டுவிட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

10384147_756636144389260_558805892966134

 

"ஒரு இனத்தை நீ அழிக்கப் போகிறாயா.. முதலில் அவர்களின் வரலாற்றை அழி" என்ற இன அழிப்பு சூத்திரத்திற்கமைவாக சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் 1981 மே 31 ம் திகதி அழிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆவண அறிவுக் கருவூலம்

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமைதான். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்நிகழ்வின் தாக்கம் குறைந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமைதான். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்நிகழ்வின் தாக்கம் குறைந்து விடும்.

நீங்கள் கூறுவது ஓரளவுக்கு உண்மை தான், வன்னியன்!

 

ஆனாலும், இரசாயனம், பௌதீகம், கணக்கியல் போன்றவற்றை முதன்மைப் பாடங்களாக, நாங்கள் படிக்கும் காலங்களில் எமது கல்லூரி நூலகங்களில், போதுமான புத்தகங்கள் இருப்பதில்லை. இருப்பவைகளும், மற்றைய மாணவர்களால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்!

 

அப்போதெல்லாம், எமக்கு தேவையான புத்தகங்களுக்கும், எமக்கும் இடையேயிருந்த இடைவெளி, ஒரு 'றலி' சைக்கிள் மட்டுமே!

 

அந்த அளவுக்கு எமது தேவைகளை ஈடு செய்தது, இந்த நூலகம்!

 

நுணாவிலான் மேலே சொல்வது போல, இந்த நூலகத்தின் எரிப்பே, ஒரு கலாச்சார அழிப்பின் ஆரம்பம் என்று சொல்வேன்!

 

இந்தியாவில் 'நாலந்தா பல்கலைக்கழகம்' எரிக்கப்படமைக்கு நிகரானதே, இந்த நூலக அழிப்பாகும்! 

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமைதான். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்நிகழ்வின் தாக்கம் குறைந்து விடும்.

 
 
எரிந்ததை பார்த்தோம் எனும் விளம்பரம் இப்போ போதுமானதாக இருக்கிறது சிலருக்கு.
எப்படியும் அடுத்ததடுத்த வருடங்களில் அது பொரடித்து போக.
புலிதான் எரித்தது என்று சொல்வார்கள் .......
 
33வருடம் கழித்தும் அதை சிங்கள இராணுவம் எரித்ததாக சொல்கிறார்களே என்ற வியப்பு மட்டுமே எனக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.