Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி  எழுதியது போல் நான் எழுதியிருந்தால்.........??? :(  :(  :(

 

தாங்கள் சுகமாய் இருந்துகொண்டு ஊரிலை இருக்கிறவையை சிலுவை தூக்கச்சொல்லுறார் எண்டு சொல்லுவினம்...... :(

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1) ஏன் சிங்களவர் எண்டா அசைலம் அடிக்க கூடாதே? அப்ப லசந்த்ஹ விக்ரமதுங்க போன்றோர், யுத்த வீடியோக்களை வெளியிட்டார்கள் எல்லோரும் அடைகலம் கேட்க லாயக்கில்லாதவர்களா?

2) #The Government says one of the Sinhalese may have a case for seeking asylum but opted to be handed back to Sri Lanka# இதை எப்படி நம்பலாம்? Did he have access to a lawyer? Did he plead his case in front of a judge? Nothing. அதிகாரிகளும் நேவிக்காரனும் சேர்ந்து மிரட்டி இருப்பார்கள்.

3)# The statement also said that all of the people on board were "safe and accounted for" and the boat was not in distress.# படகு கடலில் தத்த்களிக்கவில்லை என்றும் சகலரும் கணக்கெடுக்கப் பட்டனர் என்றுதான் இதில் சொல்லப் பட்டிருக்கு. ஒப்படைக்கப் பட்ட யாரும் இலங்கை அரசால் துன்புறுத்தப் படவில்லை என்று இதில் எங்கும் சொல்லவில்லை. ஏனென்றால் மீளளிக்கப்பட்ட 4 தமிழர்க்கும் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கும், டோனி அபொட்டுக்கும், எனக்கும் உலகத்துகுமே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் படகை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் ஆனால் இன்னுமொரு பத்திரிக்கை வடிவ செய்தியில் இலங்கையில் அனுப்பப்பட்டவர்கள் நலம் என்று கூறி இருக்கின்றார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

உட்கட்சிப் பூசல்கள், அமைச்சர் ஒருவரின் ஊழல் என்பன லேபரின் மதிப்பைக் குறைத்தன தான். லேபரை விட ஜூலியாவின் மதிப்பைத்தான் மிகவும் குறைத்தன. வேட்பாளராக கெவின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு ஜூலியா பின்தள்ளப்பட்டவுடன் உட்கட்சிப் பூசல்கள், ஊழல் என்பனவும் பின் தள்ளப்பட்டன. ஆனால் கெவின் அகதிகள் விடயத்தில் மிகவும் மென்போக்கானவர் என்ற அபிப்பிராயம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அகதிகள் விடயத்தை தேர்தலில் லிபரலும் மீடியாக்களும் பெரிதாக்கின. 
 
பெரும்பான்மை மக்களுக்கு அகதிகளை பிடிக்கவில்லை
 
 
 
A strong majority of Australians, 60 per cent, also want the Abbott government to “increase the severity of the treatment of asylum seekers.”

 

 

 

நீங்கள் சொல்வதில் உண்மையுண்டு...ஈசன்!

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன online edition இல்லாத பத்திரிகை அது சுண்டல்? :)

உங்கட ஸ்மார்ட் போன்ல அந்த செய்தியை படமெடுத்து இங்க இணையுங்கோ புண்ணியமா போகும்.

ஒரு பேப்பர், பாரிஸ் ஈழநாடு, புதினம் போல அரிசி மாவரிக்கும் பேப்பரா இருக்காது எண்டு நம்புறன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் படகை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் ஆனால் இன்னுமொரு பத்திரிக்கை வடிவ செய்தியில் இலங்கையில் அனுப்பப்பட்டவர்கள் நலம் என்று கூறி இருக்கின்றார்கள்...

 

ஆமிக்கு முன்னாலை நிண்டு கொண்டு எவன் ஆமி எனக்கு அடிக்குதெண்டு சொல்லுவான்?????? :icon_idea:  :icon_idea:

 

சொல்லணும்...இல்லையேல் சொல்ல வைக்கப்படும்....... :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

மேலைத்தேய நாடுகளில் இருக்கும் கருத்துச்சுதந்திரம் எழுத்துச்சுதந்திரம்  சிறிலங்காவில் இல்லை...இதுதான் மூலப்பிரச்சனை. :)

  • கருத்துக்கள உறவுகள்

All are believed to have been transferred yesterday to a Sri Lankan naval vessel off the Sri Lankan Port of Batticaloa yesterday. Officials from the Australian High Commission in Colombo observed the transfer.

Immigration sources confirmed 37 of the 41 were Sinhalese, not Tamils, and the transfer had been undertaken in calm seas with no health issues.

Immigration minister Scott Morrison confirmed last night that the boat’s passengers had all been safely returned with the co-operation of the Sri Lankan government and that Australia’s international obligations had been met.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. மொழி

  • யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:
  • மிகவும் முக்கிய நிகழ்காலத்துக்குரிய செய்தி / அரசியல் அலசல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது எனில் சுருக்கமாக தமிழில் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கம் தந்துவிட்டு மிகுதியை இணைக்க அல்லது மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.
  • அல்லது அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் பதியப்படல் வேண்டும்.
  • அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்.

 

 

 

அறப்படித்தவர்களுக்காக.....

இங்கு நாங்கள் சுண்டலையோ அவுசையோ, கப்பலில் போனவர்களையோ போட்டு தாளிப்பதில் என்ன பிரயோசினம்.....அகதிகள் சாசனத்தில் கையோப்பமிட்டதால் அகதிகள் (உண்மையான அகதிகளாகவே இருந்தாலும்) நினைப்பது எல்லாம் அவுஸு செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா....

 

நாங்கள் எங்களுக்கு இசைவாக மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் எல்லா பிரச்சனைக்குமே காரணம்......

 

ஒருவரின் நல்லதன்மையை அதிகம் சோதித்தாலும் பிரச்சனைகள் எழும் ..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.....

 

அவுஸ்திரேலியா எதிர் நோக்கும் அல்லது அதை விட கூட அகதிகளை இத்தாலியும் சந்திக்கிறது....அவர்கள் (இத்தாலியர்கள்) அதை எப்படி கையாளுகிறார்கள்....என்ன நடக்கிறது என்று யாரவது ஒப்பிட்டாலும் நல்லது.......

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாங்கள் சுண்டலையோ அவுசையோ, கப்பலில் போனவர்களையோ போட்டு தாளிப்பதில் என்ன பிரயோசினம்.....அகதிகள் சாசனத்தில் கையோப்பமிட்டதால் அகதிகள் (உண்மையான அகதிகளாகவே இருந்தாலும்) நினைப்பது எல்லாம் அவுஸு செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா....

 

நாங்கள் எங்களுக்கு இசைவாக மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் எல்லா பிரச்சனைக்குமே காரணம்......

 

ஒருவரின் நல்லதன்மையை அதிகம் சோதித்தாலும் பிரச்சனைகள் எழும் ..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.....

 

அவுஸ்திரேலியா எதிர் நோக்கும் அல்லது அதை விட கூட அகதிகளை இத்தாலியும் சந்திக்கிறது....அவர்கள் (இத்தாலியர்கள்) அதை எப்படி கையாளுகிறார்கள்....என்ன நடக்கிறது என்று யாரவது ஒப்பிட்டாலும் நல்லது.......

 

நாந்தான், அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, அது ஒரு 'கண்டமாகும்'!

 

அருகிலிருக்கும், இந்தோனேசியாவின் சனத்தொகை மட்டும் 260  மில்லியனாவது இருக்கும்!

 

பிலிப்பைன்ஸின் சனத்தொகை 100 மில்லியன்!

 

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை வெறும் இருபத்தைந்து மில்லியன்!

 

இலங்கையின் சனத்தொகை வெறும் இருபத்தைந்து மில்லியன்!

 

இந்தப் புவிப் பிராந்தியத்துக்கு, 'இசைவாக்கம்' அடையாத, வெள்ளைத்தோல் கொண்ட இனம், அண்மையிலுள்ள மற்ற நாடுகள், மக்கள் தொகையால் நிரம்பி வழியும் போது, தாங்கள் ஆக்கிரமித்த இந்தக் கண்டத்தை, அவர்களுக்கு விட்டுக்கொடுப்பது தானே, நியாயம்? :D

 

இயற்கையின் பரம்பலை, இவர்கள் 'வலிந்து' தடுப்பது போல், உங்களுக்குத் தெரியவில்லையா? :icon_mrgreen:

 

அவுஸ்திரேலியாவோ, அல்லது இத்தாலியோ, தங்கள் நீண்ட கால நலனுக்காக, தங்கள் எல்லைகளைக் கொஞ்சமாவது  திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும்!

 

இல்லை, ஒரு கதைக்குச் சொன்னேன்!  சிந்தியுங்கள்!

 

தமிழர்கள் வருவதால், ஏதோ 'கற்புப்' பறிபோய்விட்டது போலத் துள்ளிக்குதிக்கும் அவுஸ்திரேலியாவின் வயது, வெறும் இருநூறு வருடங்கள் மட்டுமே! :wub:

 

அருகிலிருக்கும் 'சீனாவின்' வயது ஐயாயிரம் வருடங்கள் ..!

 

தமிழனின் வரலாற்றின் வயது  ஆகக்குறைந்தது மூவாயிரம் வருடங்கள்..! :D

 

இந்தப் புவிப் பிராந்தியத்துக்கு, 'இசைவாக்கம்' அடையாத, வெள்ளைத்தோல் கொண்ட இனம், அண்மையிலுள்ள மற்ற நாடுகள், மக்கள் தொகையால் நிரம்பி வழியும் போது, தாங்கள் ஆக்கிரமித்த இந்தக் கண்டத்தை, அவர்களுக்கு விட்டுக்கொடுப்பது தானே, நியாயம்? :D

 

இயற்கையின் பரம்பலை, இவர்கள் 'வலிந்து' தடுப்பது போல், உங்களுக்குத் தெரியவில்லையா? :icon_mrgreen:

 

அவுஸ்திரேலியாவோ, அல்லது இத்தாலியோ, தங்கள் நீண்ட கால நலனுக்காக, தங்கள் எல்லைகளைக் கொஞ்சமாவது  திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும்!

 

இல்லை, ஒரு கதைக்குச் சொன்னேன்!  சிந்தியுங்கள்!

 

மிழர்கள் வருவதால், ஏதோ 'கற்புப்' பறிபோய்விட்டது போலத் துள்ளிக்குதிக்கும் அவுஸ்திரேலியாவின் வயது, வெறும் இருநூறு வருடங்கள் மட்டுமே! :wub:

 

அருகிலிருக்கும் 'சீனாவின்' வயது ஐயாயிரம் வருடங்கள் ..!

 

தமிழனின் வரலாற்றின் வயது  ஆகக்குறைந்தது மூவாயிரம் வருடங்கள்..! :D

 

நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்குது..மேலே பச்சையில் குறித்திருப்பது மாதிரி சிந்திப்பதால் தான் நானும் பெரிதாக வெட்கம் இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கிறேன் :) ....ஆனால் இப்போது அவர்கள் வர வர எம்மை பிச்சைகார்கள் மாதிரி நடத்துவது  தான் எரிச்சலை தருகிறது..எப்படி இவர்களுக்கு யாரவது "பலத்தோடு" விளங்க வைக்க போகிறார்கள் என்பது தான் எனது அவாவும்.... (சீனாவும் உலகை வெல்ல வேண்டுவோம் :) )

 

நான் சொல்ல விரும்பியதும் மேலே நீங்கள் கூறியமாதிரி உலகின் உள்ள எல்லா வளம் பொருந்திய இடம்களும் "வெள்ளை இனத்தவர்களின் கட்டுப்பாட்டில்....இல்லை என்றால் வளமான இடங்களின் மண்ணின் மைந்தர்களிடையே போட்டி/பொறாமையை ஊக்கி விட்டு அந்த இடங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறார்கள்)

அவர்கள் போட்ட சமாதான சமதர்ம வேஷம் (1940களுக்கு பின்னான) இப்போது வெழுக்க தொடங்கி விட்டது :)

இதற்கு என்ன முடிவு என்பது தான் கேள்வி...

அகதிகள் சாசனத்தில் கையோப்பமிட்டதால் எம்மை விட சொல்லுகிறோம்...அவர்கள் அதிலிருந்து விலகி விட்டால் என்ன செய்வீர்கள்?? :) அதற்கு பின்...நாம் நாடு பிடிக்க படையுடன் அல்லவா வரவேண்டும்

( மற்றது ரஷ்யாவிலேயும் குடியேறோனும்..அவங்கள் தான் உலகின் ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரை பரந்து இருக்கிறார்கள் :) )

 

 

Edited by naanthaan

கனடாவும் இப்ப அகதிகள் விடயத்தில் இறுக்கமான கொள்கையைக் கடைப் பிடிக்கின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். வந்து ஒழுங்காய் இருங்கோவன். வந்து காட்டும் கூத்துக்கள்.  

கனடாவும் இப்ப அகதிகள் விடயத்தில் இறுக்கமான கொள்கையைக் கடைப் பிடிக்கின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். வந்து ஒழுங்காய் இருங்கோவன். வந்து காட்டும் கூத்துக்கள்.  

 

ஆ.ஆஅ...திருப்பியும் முதலிலிருந்தா...வேணாம்......

 

அகதிகள் ஒழுங்காய் தான் இருக்கிறார்கள்...ரவுடிகளும் திருடர்களும் தான் பிரச்னை.....புதிதாய் வருபவர்களை இதை சொல்லி கேவலபடுத்துவது சரியல்ல....கனடாவுக்கு ரவுடிகளும் திருடர்களும் பிரச்சனையல்ல அகதிகள் தான் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
அகதிகள் சாசனத்தில் கையோப்பமிட்டதால் எம்மை விட சொல்லுகிறோம்...அவர்கள் அதிலிருந்து விலகி விட்டால் என்ன செய்வீர்கள்??  :) அதற்கு பின்...நாம் நாடு பிடிக்க படையுடன் அல்லவா வரவேண்டும்

 

 

அகதிகள் சாசனம் என்பது நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட உடன்படிக்கை!

 

அவர்கள் விலகமாட்டார்கள்...! விலகினால், உலக 'ஒழுங்கு' பிசகி விடும்!

 

இந்தோனேசியாவிலிருந்து அவர்கள் 'வள்ளங்களில்' வந்தால், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் என்ன செய்ய இயலும்?

 

ஒன்று, இரண்டு என இருநூறு, முன்னூறு என்று வரும்போது, திருப்பியனுப்பலாம்.... அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தலாம்! :o

 

படகுகளில் எண்ணிக்கை, இருநூறு, முன்னூறு என்று வரும்போது, அவுஸ்திரேலியா என்ன செய்ய முடியும்? ... விமானங்கள் மூலம் குண்டுவீசலாம்?

 

படகுகளின் எண்ணிக்கை, மூவாயிரமானால் அவுஸ்திரேலியா என்ன செய்யலாம்.... அணுக்குண்டு? :wub:

 

இதனால் தான் சொல்லுகின்றேன்.... அவுஸ்திரேலியா தனது கதவுகளை, எப்போதும் 'சாதுவாகத்' திறந்து வைத்திருக்க வேண்டும் என்று..!

 

இல்லாவிட்டால், கதவுகள் 'ஒரு நாள்' உடைத்துத் திறக்கப்படும்! :wub:

 

கனடா, போன்ற நாடுகளின் நிலை கொஞ்சம் வித்தியாசமானது.....ஆனால், அமெரிக்காவின் நிலையும்.. தென்னாபிரிக்காவின் நிலையும் கிட்டத்தட்ட, அவுஸ்திரேலியாவைப் போன்றதே..! :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் மறுபடியும் கடல் சாந்தமாக இருந்தபோது அகதிகள் கையளிக்கப்பட்டார்கள் எனும் ரீதியிலான சடையல் அறிக்கைகளை விட்டு விட்டு.

அகதிகள் கையளிப்பின் பின் அரசால் துன்புறுத்த பாவே இல்லை எண்டு சொல்லும் பிரசுரிப்பை இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் படகுக்குரிய 153  படகு அகதிகளை (தமிழ் அகதிகள் உள்ளடங்க) சிறீலங்காவிடம் கையளிக்கும் அவுஸ்திரேலியாவின் நடுக்கடல் திட்டம்.. அதன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்காலிகமாக வரும் செவ்வாய்க்கிழமை வரைக்கும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் அங்கு தண்டனைக்கு உள்ளாகக் கூடும் என்று மனித உரிமை ஆர்வலர்களும்.. சில அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 

Australia court blocks migrants' return to Sri Lanka.

 

_76091104_151020582.jpg

 

The Australian government's attempt to return 153 asylum seekers to Sri Lanka has been blocked by the high court.

 

_75104673_174319951%281%29.jpg

 

Conditions in Australia's processing facility in PNG have been severely criticised Australia and asylum

  • Asylum seekers - mainly from Afghanistan, Sri Lanka, Iraq and Iran - travel to Australia's Christmas Island on rickety boats from Indonesia
  • The number of boats rose sharply in 2012 and the beginning of 2013, and scores of people have died making the journey
  • The previous government reintroduced offshore processing in Nauru and Papua New Guinea (PNG). Any asylum seekers found to be refugees will be resettled in PNG, not Australia
  • The new government has toughened policy further, putting the military in charge of asylum operations and towing boats back to Indonesia
  • Rights groups and the United Nations have voiced serious concerns about the policies. Australia says no new asylum boats have arrived for 200 days

 

http://www.bbc.co.uk/news/world-asia-28193492

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
அகதி உள்ளே அமைச்சர் வெளியே*.
 
 

 

 
 

 

Refugee Action Coalition அமைப்பின் ஒருங்கிணைப்பில் "Don't Send Refugees Back to Danger in Sri Lanka - Let the Boats Land" என்று ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி, சிட்னியிலுள்ள குடிவரவுத் துறையின் பணிமனைக்கு முன் இன்று மதியம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சில தமிழர்களின் கருத்துகளைப் பதிவு செய்து நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.

 

* போராட்டம் செய்தவர்கள் கோஷம்

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/346970/t/-Let-the-Boats-Land

 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் சுகமாய் இருந்துகொண்டு ஊரிலை இருக்கிறவையை சிலுவை தூக்கச்சொல்லுறார் எண்டு சொல்லுவினம்...... :(

அண்ணா, நான் ஒன்றும் அங்கு இருக்கும் மக்களை போய் அரசுக்கு எதிராக போராடு,ஆமிக்கு எதிராக ச்ண்டை பிடி என சொல்லவில்லை [உசுப்பேத்தவில்லை]...இப்படி ஒவ்வொருவராய் காணியை வித்து,நாட்டை விட்டு வெளியேறினால் இன்னும் 50 வருட காலத்தில் தமிழன் வாழ்ந்ததற்கான அடையாளமே இருக்காது.தவிர கல்வியை மூலதனமாய் கொண்டு வாழும் எமது சமூகத்தில் படிப்பே இல்லாமல் போய் விடும். படிக்கா விட்டாலும் பரவாயில்லை எப்படியாவது புலத்திற்குப் போய் பிழைச்சுக் கொள்ளலாம் என்ட நிலை வந்திடும்.[இப்பவே அது தானே நடக்குது]

இப்பவும் அங்கு கொலை,பாலியல் வன்புணர்பு,காணமல் போதல் நடந்து கொண்டு தான் இருக்குது.மறுக்கவில்லை.ஆனால் எனக்கு புரியாதது என்ன என்டால் 2009 க்கு முதல் அதற்கு பிறகு தொடர்ந்து வந்த 2,3 ஆண்டுகளில் இப்படி வெளிக்கிடாத சனம் தற்போது வெளிக்கிடுவதன் காரணம் என்ன?...அந்தக் காலப்பகுதியில் ஏற்படாத துயரம் இப்போது ஏற்பட்டு உள்ளதா?

சிங்களவர்,சோனகர்கள்,ஏன் புலம் பெயர் தமிழன் கூட அங்கு போய் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் போது ஏன் அங்கிருக்கும் தமிழனால் அங்கு வாழ முடியவில்லை?... இன்னும் சொல்லப் போனால் தற்போது தான் அங்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகம்.இது எல்லாம் என்ட கருத்து அண்ணா உங்களை அப்படியே ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாட்டு அரசாங்கம் entha விதமான சட்ட நடவடிக்கைகளையும் எதிர் கொண்டு இந்த சட்டவிரோத கள்ள படகு அகதிகளை திருப்பி அனுப்ப உறுதியாக இருக்கின்றது......அதற்காக அனைத்து அரச இயந்திரங்களும் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன.......

எமது பிரதமர் கூறியது போல சட்டவிரோத கள்ளபடகு அகதிகள் கொள்கையில் மாற்றமோ விட்டுகொடுப்போ இல்லை......

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல.. இந்த தலைப்பில் உள்ள எழுத்துப்பிழைகளை திருத்துங்கப்பா. :)

 

யாழில வாதாடி.. அவுஸியோ.. ஐநாவோ.. முடிவை மாத்திக்கிட்டதா சரித்திரம் இருக்கா..???! அவனவன் தன்ர சுயநலத்துக்கு அகதி அடைக்கலம் கொடுக்கிறான்.. விடுறான். நாங்க சொந்த நாட்டை பாதுகாக்க துப்பில்லாமல்.. இருந்து கொண்டு.. அடுத்தவன்ர நாட்டுக்கு அலையுறம். :D


இதில் பெருமை வேற...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல.. இந்த தலைப்பில் உள்ள எழுத்துப்பிழைகளை திருத்துங்கப்பா. :)

 

...! :lol:

 

யாரோ சிங்களவர்கள் தலைப்பை போட்டிருக்கினம் போல இருக்கு.... :D

  • கருத்துக்கள உறவுகள்

Handing back Tamils is ‘disturbing’ and ‘disgraceful’ - video

 
 
 

Senators react to the news that Australian border protection officials have handed back 41 Sri Lankan nationals, including four Tamils, over to Sri Lankan authorities in a transfer at sea. With Greens Christine Milne and Sarah Hanson-Young, Labor's Doug Cameron and Sam Dastyari and Independent Nick Xenophon.

http://www.theguardian.com/world/video/2014/jul/07/senator-asylum-seekers-australia-video1?CMP=twt_gu

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/news/49432-36-asylum-seekers-released-five-remanded.html

5பேர் தடுத்து வைப்பாம். அதில் 4 தமிழரும் ஆபத்தில் இருந்து அவுஸ் அதிகாரிகளால் மிரட்டி அனுப்பபட்ட ஒரு சிங்களவராயும் இருக்குமோ?

சுண்டல் அபொட்டிடம் கேட்டு சொல்லவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.