Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசர் பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்- பொதுபலசேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாப்பரசர் இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

காலனித்துவ காலங்களில் இலங்கையில் கிறிஸ்தவ ஆட்சியாளர்ளினால் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இந்த அநீதிகளுக்கு பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும். இதற்கு முன்னர் பதவி வகித்த சில பாப்பரசர்கள் இவ்வாறு சில நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பௌத்த விஹாரைகளை உடைத்து, பௌத்த பிக்குகளை கொலை செய்திருந்தனர். பாப்பரசர் பொது மன்னிப்பு கோருவதனை விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=710393206008604521#sthash.R3pdI60J.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரத்தின் உச்சம் ... அழிவின் ஆரம்பம்..

அகங்காரத்தின் உச்சம் ... அழிவின் ஆரம்பம்..

இப்படி அழிந்த பலர் எப்படி இதை விளங்காமல் இருக்கின்றார்கள் என நான் எப்பவும் வியந்ததுண்டு .

கெடுகுடி சொல் கேளாது என்று முன்னர் சொல்லி வேறு இருக்கின்றார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டந்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்பொழுது நிற்கும்.........?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் என்று பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்று குழு உறுப்பினர் டிலந்த விதானகே உள்ளிட்டவர்கள் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் நிருபர்களை சந்தித்துப் பேசினர்.

 

இதன்போதே, பாப்பரசர் இலங்கையரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பொதுபல சேனா கூறியது.

ஞானசார தேரர் தரப்பிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே, கடந்த காலங்களில் இருந்த பாப்பரசர்கள் பல்வேறு நாடுகளிடம் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதாகக் கூறினார்.

140620205108_galagoda_aththe_gnanasara_t

சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

'அவர்களின் அழிப்பு நடவடிக்கைகள், கொலைகளுக்காக முன்னைய பாப்பரசர்கள் பல நாடுகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். அதேமாதிரியான நிலைமை எங்கள் நாட்டிலும் ஏற்பட்டது. இங்கு பல பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டன. பிக்குகள் கொல்லப்பட்டனர். அதனால் பாப்பரசரிடமிருந்து பகிரங்க மன்னிப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' 

என்று ஞானசார தேரர் சார்பில் ஆங்கிலத்தில் பதிலளித்தார் டிலந்த விதானகே.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கத்தோலிக்கர்கள் அல்ல, இங்கிலாந்து திருச்சபையை சேர்ந்தவர்கள் தானே என்று ஊடகவியலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

'பாப்பரசர் பிரித்தானியர் அல்லாவிட்டாலும் தீர்மானம் எடுக்கப்பட்டது அங்கிருந்து தான்' என்று கூறிய ஞானசார தேரர், மற்ற ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களுடனான ஒத்துழைப்புடனேயே பிரிட்டிஷார் மதத்தைப் பரப்புவதற்கும் வணிக நோக்கத்துக்காகவும் இலங்கையை ஆண்டதாகவும் கூறினார்.

பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரியில் இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/07/140708_pope_bodubalasena.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி கட்டாய மத மாற்றங்களில் ஈடுபட்டதற்காக இந்துகளிடமும் அவர் மனிப்பு கோர வேண்டும்.......

தமிழ் பல சேனா

தலைவர்

சுண்டல்

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் எல்லா வெள்ளையினத்தவரும் அவுஸ்ரேலியாவை அபொர்ஜினிகளிடம் கொடுத்து விட்டு ஐரோப்பாவுக்கு போகவேணும். போகும் வழியில் தம் வாலை பிடித்துகொண்டிருக்கும் இலங்கையையரை காலியில் இறக்கிவிட்டு விட்டு போகணும்.

அதே மாதிரி கட்டாய மத மாற்றங்களில் ஈடுபட்டதற்காக இந்துகளிடமும் அவர் மனிப்பு கோர வேண்டும்.......

தமிழ் பல சேனா

தலைவர்

சுண்டல்

சுண்டலை சம்பல் ஆக்காமல் விடமாட்டிங்கள் போலதான் கிடக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை போறதெண்டாலும் அபோ விட மாட்டாங்கள் கால பிடிச்சு கதறுவாங்க....:D

அமெரிக்கர்கள் செவ்விந்தியரிடமும் கனடிய வெள்ளைகள் கனடிய பழங்குடியினரிடமும் நாட்ட கொடுத்திட்டு புறப்பட வேண்டியது தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கொங்கொங் ல சைனீஸ் காரன் கதறின மாரியா? சும்மா ஜோக்கடிக்காதேங்கப்பு.

இப்போ இதைதானே உதயப் பெரேராவும் சொல்லுறார், ஆமி போறனெண்டாலும் வடக்கு மக்கள் கள்ளர் பயத்துக்காக விடாயினம் எண்டு?

உங்களுக்கு வந்தா ரத்தம் அபோக்கு வந்தா தேங்காய் சட்டினியோ?

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காயோ மாங்காயோ மேட்டர் அதில்ல......வலிமையானவன் வாழுகிறான் உங்களை மாதிரி அகதியா ஓடி திரியெல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 20 வருடங்களில் அமெரிக்காவில் ஆங்கிலோ-சக்ஸன்சை விட, லத்தினோக்களே பெரும்பான்மையாய் இருப்பார்கள் என்பது விடயம் தெரிந்த எல்லோரும் எதிர்வு கூறும் ஒரு விடயம். கனடாவிலும் அப்படியே.

அபுஸ்ரேலியாவில் மட்டும் ஆங்கிலோ-சக்ஸன் மேலாண்மையை தக்கவைக்கலாம் என்பது கற்பனையே. முன்பு வெளிப்படையாக white Australia இப்போ மறைமுகமாக நடுக்கடல் கடத்தல் எனறு அபாதயிட் சவுத் ஆபிரிக்கா ரேஞ்சுக்கு முயற்சித்தாலும், வெள்ளை அவுஸ்ரேலியாவின் முடிவை யாராலும் மாத்த முடியாது.

என்னை அகதி என்று பெருமை படுத்தாதேங்கோ, நான் மூளையை விற்றுப் பிழைக்க வந்த ஒரு பஞ்சப் பரதேசி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வந்து கஷ்டப்பட்டு உழைச்சு student விசாவில் வந்து 50000 டாலர்கள் என்று கட்டிப்படிக்கிற வெளிநாட்டவட்களுக்கு இருக்க இடம் கொடுத்தா ஒரு பிரியோசனம் இருக்கு.....இது கள்ள தோணியில வாரதுகளுக்கு எல்லாம் இடம் குடுத்தா நாட்டுக்கும் பிரியோசனம் இல்லை.....வீடூக்கும் பிரியோசனம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வாஸ்தவமான வார்த்தை. Captain Cook என்ற கள்ளத்தோணியை அப்பவே திருப்பி அனுப்பி இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் எப்போது சடைத் தலையை மொட்டந்தலை என்று பிழையா இனங்காணுவதை நிறுத்துகிறீகளோ அண்டைக்கு நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நாங்க இல்ல இப்போ இருக்கிறம்ல விடுவமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டந்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்பொழுது நிற்கும்.........?? :(  :(  :(

 

விசுகர்! எப்போதாவது இவர்கள் ஒழுங்கான வேலை செய்திருக்கின்றார்களா? மற்றவர்கள்
 தலையில் மண் அள்ளிப்போடுவதுதானே இவர்கள் வேலை.  :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.