Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் கொலையை அன்று கண்டித்து இருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்: சம்பந்தர்

Featured Replies

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால் 'அந்த மௌனத்திலிருந்து அமிர்லிங்கத்தின் பெறுமதியை தமிழ் மக்கள் அல்லது அவரின் அரசியல் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறமுடியாது' என்றும் சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழர்களுக்கும் தமிழர் போராட்டத்திற்கு பெரும் இழப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

'அமிர்தலிங்கம் அண்ணனின் காலத்தில் கூட தமிழீழம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்திலிருந்து நாங்கள் மாறியிருந்தோம்' என்றும் தெரிவித்தார் சம்பந்தன்.

தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போதியளவு சுயாட்சியுடன் அரசியல் தீர்வுத் திட்டம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது அரசியல் தலைமைகள் இயங்கிவந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

'அந்த அடிப்படையில் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 13-ம் அரசியல் சாசனத் திருத்தம் ஏற்பட்டது. அதை முழுமையான தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அது ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட ஒரு படி என்பதையும் நாங்கள் உதாசீனம் செய்யமுடியாது' என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் 1956-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அமிர்தலிங்கம், 1972-ம் ஆண்டில் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் மறைந்த 25 ஆண்டு நினைவு லண்டனில் இன்று சனிக்கிழமை (12.07.14) அனுஷ்டித்தது.

இதில் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான டாக்டர் ஜயம்பதி விக்ரமரட்ண, 'இலங்கையில் அரசியல் அதிகாரப்பகிர்வு' என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

BBC

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109317/language/ta-IN/article.aspx

பலருக்கு இப்பவே வாயை திறக்க பயம் . :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை தான் எண்டு சொல்லி லெக்சனிலை வெண்டு கொண்டு கொழும்புக்கு போய் கள்ளக்கதவாலை டீல் பண்ண வெளிக்கிட்டபடியாலை தானே பெடியள் துவக்கு தூக்க வெளிக்கிட்டவங்கள்.....சம்பந்தர் 77ம் ஆண்டு உங்கடை தேர்தல் விஞ்ஞாபனத்தை திருப்பி ஒருக்கால் படிச்சு பாருங்கோ......

  • கருத்துக்கள உறவுகள்

தேவை என்றால் சிங்க கொடியையும் தூக்குவார் சம்பந்தர். செய்த போராட்டங்களினால் படி முறைகள் மாறுகிறதாம். ஹி ஹி வெரி வனி மான்.(very funny man) :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தின் கூட்டாளி சிவசிதம்பரம்.. மரணத்தறுவாயில்.. விடுதலைப் புலிகளையும் தேசிய தலைவரையும் புகழ்ந்து பாடி செத்தார். அதனை அன்று ஊடகங்கள் சுடலை ஞானம் என்று வர்ணித்தன.

சம்பந்தனுக்கு.. இன்னும் சுடலை ஞானம் கூடப் பிறக்கவில்லை.

இவர்களின்.. அரை நூற்றாண்டுக்கும் மேலான இணக்க அரசியல் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.. வெறும் உள்ளூராட்சி சபைகளை மட்டுமே.

மாகாண சபைகள்.. விடுதலைப்புலிகளை ஒடுக்க என்று உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக வடிவம். அதற்காக அமிர்தலிங்கம் பாடுபட்டு உழைத்தார் என்பது.. சம்பந்தனின் உளறல்.  வரலாறு அறியாதவர்களிடம் இதனை சம்பந்தன் சொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கத்தின் மரணத்துக்கு சம்பந்தன் இரங்கலாம். ஆனால் இந்தியப் படைகளால் கொன்றொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இரங்கமாட்டார்கள். ஏனெனில்.. அமிர்தலிங்கம்.. இந்திய விசுவாசத்தில்.. சொந்த மக்களின் அந்த மரணங்களை மலினப்படுத்திய ஒரு கேவலமான பிறப்பு..!

பலருக்கு இப்பவே வாயை திறக்க பயம் . :(

அர்ஜுனையும் ,poet ஐயும் விமர்சிக்கின்றவர்கள் உலகத்தமிழர் அமைப்பின் பிழையான செயற்பாடுகளை விமர்சிக்க தயங்குகிறார்கள் . :icon_idea:

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் அமைப்பின் மீதும் விமர்சனங்கள் யாழில் முன்பெல்லாம்.. பதியப்பட்டுள்ளன.

எனியும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால்.. இனங்காணப்பட்டால்.. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்.. நிச்சயம்... விமர்சனங்களை முன் வைப்பார்கள் யாழ் உறவுகள்.

யாழில்.. மக்களுக்கான செயற்பாடு என்று சொல்லிக் கொள்ளும் எல்லா அமைப்புக்கள்.. தனி நபர்கள் மீதும் விமர்சனங்களை வைக்கப்பட்டே வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை தான் எண்டு சொல்லி லெக்சனிலை வெண்டு கொண்டு கொழும்புக்கு போய் கள்ளக்கதவாலை டீல் பண்ண வெளிக்கிட்டபடியாலை தானே பெடியள் துவக்கு தூக்க வெளிக்கிட்டவங்கள்.....சம்பந்தர் 77ம் ஆண்டு உங்கடை தேர்தல் விஞ்ஞாபனத்தை திருப்பி ஒருக்கால் படிச்சு பாருங்கோ......

அதையேன் இப்ப நீங்கள் கிண்டுரீன்கள் .....
மக்களுக்கு (short term memory) மட்டும்தான் இருக்க வேண்டும். வரலாறு படைக்கிற சமந்தன் ஐயா போன்றவர்களுக்கு மட்டும்தான் கடந்த வரலாறு ஞாபகத்தில் இருக்க முடியும்.
 
அடுத்தவனை ஏய்ச்சு பிளைக்கிறதட்கு ....
ஒரு கட்சி ......... அதுக்கு ஒரு தலைவர் ........... 
 
சிங்களவனுக்கு அடிமையாய் வாழ பழகிவிட்டால். இந்த நாதரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியா வாழலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு இப்பவே வாயை திறக்க பயம் . :(

கடவுள் பூமியில் இல்லது போனாலும்.
 
நீதிக்கும் இறைவனுக்கும் மக்கள் எப்போதும் பயந்துதான் வாழ்வார்கள்.
இது  உள் உலகில் சாதாரண விடயம்.
 
கட்சிவைத்து அநீதி பேசுவது  வெளிஉலகில்  வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம். அதற்கு குழி தோண்டி வெளி உலகிற்கு இறங்க வேண்டும். அதை இறந்த பின்பு செய்யலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள் போல். ஞானா சூனிகள் முற்கூட்டியே போய்விடுகிறார்கள். 

அமிர்தலிங்கம் என்ன தெளிவாக கதைக்கின்றார் அதையே தான்  சம்பந்தரும் இப்போ சொல்லுகின்றார் .ஆனால் எமது அரசியல்  அக புற காரணிகள் மாறிவிட்டதால் அதற்கேற்பவே சம்பந்தரின் பதில் இருக்கு .

கடவுளுக்கு மனிதன் பயந்தால் உலகில் இந்த கொலை கொள்ளை குற்றம் எதுவும் நடக்காது பயப்பிடுவது மாதிரி நடிக்கின்றான் (கடவுள் சிலையையே திருடி வேறு விற்கின்றான் இதற்குள் இவர் ஒருவர் )

கொலைகாரன் கொள்ளைகாரனுக்குத்தான் மனிதன் பயப்பிடுகின்றான்  அதை தடுக்கத்தான் சட்டமும் நீதியும் உருவானது .

தமிழினத்தின் தலைவனை கொலை செய்ததை இன்றும் நியாயாப்படுத்தும் மனோநிலையில் இருப்பவர்களுக்கு பதில் தேவை இல்லை நல்ல சிகிச்சை தான் தேவை .

இந்தியன் ஆமியை கொண்டு எம்மினத்தை கொலை செய்ய வைத்ததே பெரிய போர்க்குற்றம்.

ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் உலகம்  தீர்ப்பு வழங்கிவிட்டது 

அதைதான் நானும் எழுதினேன் ..........
 
1989 ஒரு பாதியும்    மீதி 1991 இல் தீர்ப்பாகி எல்லாம் முடிந்து விட்டது என்று. 
 
மக்கள் கடவுளுக்கு இந்த உலகில் பயப்பிடுவது சாதாரணமானதாக நான் காண்கிறேன். அதைதான் எழுதினேன். 
(அது பலர் பயப்பிடுகிறார்கள் என்ற கருத்துக்கான பதில்) உலக மக்கள் கூட்டமே பயப்பிடுகிறார்கள் என்பதாகும்.
 
புலிக்கு பயந்து ........... ஓநாய் வாழ்வதும் 
ஓநாய்க்கு பயந்து ...... முயல் வாழ்வதும். சாதாரண விடயம் அது ஒரு வாழ்கை வட்டம். ஓநாய் முயலை பிடிக்கும்போது நீதி கதை எழுதும் உங்களால் புலி ஓநாயை பிடிக்கும்போது எழுத முடிவதில்லை.
வெளி உலகில் அதற்கு தடை இருக்கலாம். இந்த உலகில் எந்த பிரச்சனையும் இல்லை எல்லாவற்றையும் எழுதலாம். நாம் இப்போ எழுதுகிறோம் இறந்து குழிக்குள் (வெளி உலகிற்கு) போனபின்பு எமக்கும் அந்த பிரச்சனை வராலாம். 

ஒருபகுதி உலக தீர்ப்பு ............ இப்போ காசாவில் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
அநீதி இழைத்த குழந்தைகளும் ........... மக்களுக்கும். அந்த இடத்திலேயே மரணதண்டனை வழங்க பட்டுக்கொண்டு இருக்கிறது. 

1989 ஒரு பாதியும்    மீதி 1991 இல் தீர்ப்பாகி எல்லாம் முடிந்து விட்டது .

உந்த நினைப்புத்தான் பிழைப்பையே கெடுத்தது.பாவங்கள் வாலோட்ட அறுத்துவிட்டார்கள் .புலம் பெயர்ந்த நாடுகளில் கூட ஒழித்து திரியும் அவலம் .

சம்பந்தர் தமிழர் தலைவர் , டக்கிலஸ் அமைச்சர்,சுரேஷ் ,செல்வம் எம்பி , சித்தார்த்தன் மாகாணசபை உறுப்பினர் .

சாதாரண முனிசிப்பல் ஊழியன் 
கழிவாயிலை கழுவி என்றாலும் ஊருக்கு தொண்டு செய்து மக்களிடம் மதிப்பாக இருக்கிறான். 
 
(ஏன் நாட்டின் சேனாதிபதி பாதுகாப்பு  அமைச்சர் பெயர்கள் எல்லாம் ஞாபகத்தில் இல்லையா? )
 
இந்த உலகில் மனிதர்கள் 
நீதி 
தன் மானம் 
சுய மரியாதை 
என்பவற்றிற்கு பயப்பிடுகிறார்கள். அதலால் வெட்கம் கெட்டு சிலவற்றை செய்ய மனிதர்கள் விரும்புகிறார்கள் இல்லை.
நீங்கள் முன்பு எழுதிய கொள்ளை அடிப்பவன் கொலைகாரன் போன்றவர்கள் அதை சாதகமாக்கி வெட்கம் இல்லது இப்படி வாழ பழகி கொள்கிறார்கள். 
மனிதர்கள் இதைவிட தற்கொலை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். செய்வினையாகவோ  செயற்பாட்டு வினையாகவோ  அப்படி பலர் செய்தும் இருக்கிறார்கள்.

அப்ப ஏன் ராசா இவ்வளவு ரோசம் உள்ளவர்கள் மற்றவர்களை போட்டுத்தள்ளியும் பலியும்  கொடுத்துவிட்டு தமக்கு என்று வரும் போது வெள்ளை கொடி பிடித்தார்கள் .

செய்வினை செயற்பட்டுவினை உவர்களுக்கு தெரியாதோ .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் ராசா இவ்வளவு ரோசம் உள்ளவர்கள் மற்றவர்களை போட்டுத்தள்ளியும் பலியும்  கொடுத்துவிட்டு தமக்கு என்று வரும் போது வெள்ளை கொடி பிடித்தார்கள் .

செய்வினை செயற்பட்டுவினை உவர்களுக்கு தெரியாதோ .

வெளிஉலகில் இருந்துகொண்டு இப்படி எழுதுவது மிகவும் சுலபம். அல்லது இப்படி கேட்க மட்டும்தான் முடியும் 
இருக்கும் இடம் அப்படியாக இருக்கிறது. 
 
இங்கே இந்த உலகில் பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு திரியின் கீழ்  எழுதமுடியாது அப்படி எழுதினாலும் இந்த உலகில் இல்லாதவர்களுக்கு அது புரியவும் மாட்டாது.
 
விடுதலை போராட்டம் என்பது நாட்டின் விடுதலைக்கு ஆனது. விடுதலை  அமைப்பிற்கு ஆனது அல்ல....
மக்கள் என்று வரும்போது ...........
விடுதலை வேண்டிய பல அமைப்புகள் தங்களை இல்லாது செய்திருக்கிறார்கள்.
 
ஏற்கனவே எழுதியதுதான் மே 18ஆம் திகதி இரவே புலிகள் இல்லது போய்விட்டார்கள். தமிழ் ஈழவிடுதலை போரை புலிகள் என்ற அமைப்பு ஐ நா சாசனதிட்கு உட்பட்டே செய்து வந்தது. இது ஐ நா வாலும்  பலமுறை ஏற்றுகொள்ள பட்டிருக்கிறது. ஐ நா சாசனதிட்கு உட்பட்டு பல பேச்சுக்களை ஐ நா புலிகள் என்ற அமைப்புடன் பல முறை செய்திருக்கிறது. மே 17 நடந்த தொடர்பாடலில் இது பற்றி இருபகுதியும் பேசி இருக்கிறார்கள்.
முள்ளி வாய்க்கால்  என்ற இடத்தில் வன்னி பெருநிலபரப்பில் வாழ்ந்து வந்த அத்தனை மக்களும்  அதே நாளில்  வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய நிச்சயமான வாழ்வு பற்றி புலிகள் கேட்டு  இருக்கிறார்கள். அதன் பிரகாரமே அவர்கள் இந்த கொடிபற்றி விவாதித்து இருக்கிறார்கள். 
இதற்கு முன்பும் புலிகள் அமைப்பு 1990இல் "விடுதலை புலிகள் மக்கள் முன்னணி" என்று ஒரு அமைப்பை உருவாக்கி முன்னுறுத்தி இருக்கிறார்கள். சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்கள் பிரச்சனையை இதய சுத்தியுடன்  தீர்க்க முனைந்து ஒரு தீர்வு எட்டப்ட்டால். இலங்கை சட்ட சாசனம் .... ஐ நா பிரகாரம் போன்றவற்றிட்கு  உட்பட்டு விடுதலை புலிகள் மக்கள் முன்னணி தேர்தலை சந்திக்கும் என்று உறுதி கொடுத்தார்கள். அதற்கு இலங்கை சட்ட சாசனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருந்தது  அதை அப்போதைய  இலங்கை சேனாதிபதி பிரமாதாசா பாராளுமன்றம் கொண்டு சென்றபோது  பாதுகாப்பு அமைச்சு  பொறுப்பாக இருந்த ரஞ்சன் விஜெரத்னா தலைமயிலான குழு எதிர் கட்சியையும் இணைத்து அதை தோற்கடித்தது. 
அதற்கு முன்பே 1987இல் எமது நாட்டிற்கு அருகில் இந்தியா என்ற பெயரில் பிராந்திய வல்லரசாக ஒரு நாடு இருக்கிறது. அது தனது பிரந்தியத்திட்கு உட்பட்ட விடயமாக இதை எடுத்து புலிகள் ஆயுத போரை கைவிட வேண்டும் என்றும்  தமிழ் மக்களின் போராளிகளின் பாதுகாப்பை தனது இராணுவம் உறுதி செய்யும் என்றும்  
அனைத்து சிங்கள ஆக்கிரமிப்பும் உடனடியாகவே தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்தது. புலிகளும் ஆயுதங்களை  கையளித்து அரசியல் போராளிகள் ஆனார்கள். அப்போதே நாங்கள் வெள்ளை கொடிகள் பிடித்து  இந்திய இராணுவத்தை வரவேற்றோம். பின்பு புலிகள் தேர்தலை சந்திக்க எண்டும் என்று சொன்னார்கள்   போட்டி போடுவது யார் என்ற கேள்வி எழுந்தபோது. தனி தனியாக இந்தியா போக வசதி இல்லாமல்  குழுவாக  சென்று அங்கே கஞ்சா விபச்சாராம் போன்றவற்றில் மும்முரமாக இருந்த சில காட்டேரிகளை  கூட்டி வந்தார்கள். புலிகள்தான் குழப்புகிறார்கள் என்று அவதூறு பேசுவார்கள் அதலால்  நீங்கள் பேசாது  இருங்கள்  என்று புலிகளை அன்றைய பெரியவர்கள் சொல்ல புலிகளும் ஆம் என்றார்கள். புலிகள குழப்புவார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக அமைந்துவிடது. பின்பு 
புலிகளின் வெற்றி உறுதியாகி விட்டதை அறிந்த இந்தியா  இங்கே இவர் நிற்க கூடாது அவர் இங்கு மட்டும்தான் நிற்கலாம் என்று குழப்ப தொடங்கியது தேர்தலை. அப்படி இருக்கும்போது அக்டோபர்மாதம்  இந்தியா சென்ற புலிகளின் கடல்புறா என்ற படகை சிங்கள காடைகள் வழி  மறித்தார்கள். தங்கள் படகில் வெடிமருந்து  இருப்பதாகவும்  கிட்டே வந்தால் தாம் படகை வெடிக்க வைக்க போவதாகவும் படகிற்கு கப்டனாக இருந்த கரன் அவர்கள் சிங்கள படைகளை எச்சரித்து விட்டு தரைக்கு தொடர்பு கொண்டார்கள். 
இவர்கள் இந்திய இராணுவத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள். உடனடியாக இந்திய கடல்படையை இடத்திற்கு  விரையுமாறு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எழுதியது போன்று செயற்படுமாறு கேட்கிறார்கள். இராணுவ அதிகாரி டெல்லி தமக்கு அதற்கு அதிகாரம் தரவில்லை என்று மறுத்து கொண்டார்.
அனால் அவர்கள் பாலாலி வருவதையும் மறுநாளே விடுதலை செயப்டுவதையும் தன்னால் உறுதிபடுத்த முடியும் என்றும். அவர்களை சிங்கள காடைகளிடம் சரணடையுமாறும் கேட்டுகொண்டார். அதை படகில் இருந்த  போராளிகள் மறுக்கிறார்கள் தாம் சயனைட் குடிக்கபோவதாக சொன்னார்கள். தரையில் இருப்பவர்கள்  புலிகள் பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டார்கள் என்று அவதூறு வரும் மக்கள் இந்திய இராணுவ  முகாம்களை   தாக்குவார்கள் போர் மூளும். (தீலிபனின் மரணம் அப்போதுதான் கொஞ்சம் ஆறி கொண்டிருந்தது  இந்திய இராணுவத்தின் மீது மக்கள் கல் எறிவதும் புலிகள் தடுப்பது அப்போதுதான் கொஞ்சம்  அடங்கி கொண்டு இருந்தது) என்று பலவற்றை கூறி அவர்களை சரணடைய பணித்துவிட்டார்கள்.
அவர்கள் பலாலிக்கும் வந்துவிட்டார்கள்.............. பின்புதான் தன்னை டெல்லி ஏமாற்றுவதாக இந்திய இராணுவ அதிகாரி  புரிய தொடங்கினார். பலாலி சென்ற மாத்தையாவை வந்து கட்டி தடவி கண்ணீர் நிரம்பிய கண்களுடன்  தன்னை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றும் போராளிகளை எங்களிடம் பொறுப்பு எடுக்க விடுகிறார்கள் இல்லை  என்றும் கூறி இருக்கிறார். இந்திய- இலங்கை ஒப்பந்தம் பற்றி புலிகள் கேட்டு இருக்கிறார்கள். எல்லாம் டெல்லிதான் முடிவு எடுக்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். புலிகள் ஏற்கனவே சொல்லி வந்ததுதான்  அவர்களுக்கு அது ஆச்சரியாக இருக்கவில்லை. ஆனால் தாம் உயிரோடு உள்ளவரை  விடுதலை போரை கைவிடபோவதில்லை என்று மக்களுக்கு கொடுத்த வாக்கு காப்பற்றப்பட வேண்டும்  என்ற நிர்பந்தம் உருவாகி விட்டதை உணர்ந்து கொண்டார்கள். விடுதலை போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
முல்லிவைக்காலில் ஒன்றும் புதிதாக நடக்கவில்லை ஏற்கனவே நடந்தவைதான் அங்கும் நடந்தது  அப்போ பிராந்திய வல்லரசு இப்போ  உலக சாசனம் பங்காளர்கள் தான் வேறு.
இங்கு புலிகள் தம்மை இல்லாது செய்துவிட்டார்கள் அதுதான் சற்று வேறுமாதிரி ஆனது. அதை அவர்கள் போர் தொடங்கிய நாளில் இருந்து சொல்லி வந்ததுதான். காது கேளாதவர்களுக்கு  மூளை கோளறு  உடையவர்களுக்கு  ஆச்சரியமாக இருந்திக்கலாம். புலிகள் சத்தியத்துடன் போராடி வந்ததால் சாதரனமான்வர்களுக்கு  பெரிதாக தெரியவில்லை. 
 
இது ஏகபட்ட பிரச்சனை உங்களுக்கு மேலே இருப்பதை புரிந்து கொள்ளவே பல சிக்கல் இருக்கும். இதைவிட எழுதினால்  உங்கள் நிலைமை கவனத்தில் எடுத்து இங்கேயே நிற்பதுதான் நல்லம். 
நாமும் வெளி உலகம் வந்தால் எல்லாவற்றையும் பற்றி வடிவாக பேசலாம்.

நீங்கள் எழுதிய எதுவுமே உண்மையில்லை உண்மை தெரிந்தவர்கள் இவற்றில் சம்பந்தப்படவ்ர்கள் பலர் இன்னமும் உலகெங்கும் இருக்கின்றார்கள்..

நல்லாத்தான் உருக்கி ஊத்தியிருக்கின்றார்கள் ,உது எடுக்க முடியாத அடைப்பு .

அடைப்பு எடுப்பட்டபலர் நன்றாக இப்போது சுமூக வாழ்விற்கு திரும்பிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் அரசியல்பீடம் வெள்ளைக் கொடி பிடித்தது.. மாற்றுக் குழுக்கள் போல.. எதிரியிடம் சரணடைந்து காட்டிக்கொடுத்து... தாங்கள் வாழவும்.. அசைலம் அடிக்கவும் அல்ல.

காயப்பட்ட போராளிகளின்.. கடை நிலை.. இடைநிலைப் போராளிகளின் எதிர்காலம் கருதியே ஆகும்.

இதனை விளங்கிக் கொள்ள நல்ல மனநிலையில் இல்லாதோருக்கு திரும்ப திரும்பச் சொன்னாலும் எதுவும் புரியப் போறதில்லை.

ரப்பர் செல் மட்டுமே அடித்துக் கொண்டு முன்னேறி வந்த இந்தியப் படைகள் முன் அமிர்தலிங்கமும் மக்களுக்காக வெள்ளைக் கொடியேந்திப் போயிருக்கலாமே.. அதைச் செய்யாமல் ஏன் கொழும்பில் கிடந்தார். ரப்பர் செல் அடிச்சு இவ்வளவு மக்கள் சாக அமிர்தலிங்கம் என்ன செய்து கொண்டிருந்தார்..??! அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.. மக்களுக்காக அல்ல. இந்தியப் படைகளுக்காக. கருணாவும் சித்தார்த்தனும் சங்கரியும் டக்கிளசும் அதைத்தான் செய்தார்கள் முள்ளிவாய்க்காலின் போது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்துபோனத்தை தூசு தட்டி எடுத்து சம்பந்தர் என்ன செய்யப்போகிறாக்கும் ....... !? வயசுபோனால் இப்படியான பிரச்சனைகள் வரும் ஒதுங்கி ஒவ்வு எடுப்பது நலம். 

சரணடைதலும்.....வெள்ளை கோடி பிடிப்பதும்...வேறு வேறா.......சுத்தம்....

அமிதலிங்கமாவது தன்னால் என்ன ஏலும் ஏலாது என்று...அறிந்திருக்கிறார்.....சிலர்...பிறந்ததிலிருந்து...சாகுமட்டும் கனவுலகில் இருந்திருகிறார்கள்......

நெடுக்கு நீங்க சொன்ன மாதிரி தான் மற்றைய இயக்கங்களும் தங்களது உயிரை காப்பாற்ற தான் சிங்களவனின் காலில் விழுந்தார்கள்..ஏனென்றால்..சும்மா ஒதுங்குபவனை கொல்வது  நல்ல தண்ணி பட்டபாடு...ஆயுதம் தூகியவர்களுக்கு.....என்ன செய்வது

வெள்ளை கோடி பிடித்தால்...தோத்துவிட்டோம் என்றே அர்த்தம்...அதற்க்கு நாலு வியாக்கியானம் கூறாமல் தளி குனிந்து நிப்பதே சரி.....ஆனால் பூசி மெழுகி புது வியாக்கியானமே கொடுப்பதில் வேலையில்லை...

Edited by naanthaan

மற்றைய இயக்கங்களை புலிகள் தடை செய்தது 1985- 1986 இல் 
 
சிங்களவனுடன் போய்  ஒட்டியது 1990 மேயிட்கு பின்பு. அதுவரையிலும் இல்லாத உயிர் பிரச்சனை ஏன் 1990இல் வந்தது?

அமிர்தலிங்கம் மலையகத்தவர் குடியேறுவர் என்கிற தொனியில் சொல்லியிருந்தார்..அது சரியா? மலையகம் மலையகத்தவர்களுக்கே கிடைக்கவேண்டும்....அவர்கள் அரும்பாடு பட்டு கட்டியெழுப்பிய தேசம் அது...

மற்றைய இயக்கங்களை புலிகள் தடை செய்தது 1985- 1986 இல் 
 
சிங்களவனுடன் போய்  ஒட்டியது 1990 மேயிட்கு பின்பு. அதுவரையிலும் இல்லாத உயிர் பிரச்சனை ஏன் 1990இல் வந்தது?

அது நீங்கள் அவர்களுக்கு உயிர் பயத்தை கொடுத்தவர்களை தான் கேட்க்க வேணும்.....

வெற்றிமமதையில் உயிர்களுக்கு மரியாதை கொடுக்க தவறியதால் முழு இலங்கைக்கும் அழிவு....

(இது சகல தரப்புக்கும் தான்...புலிகளுக்கும் மட்டும் அல்ல...யாரும் யாருடைய உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை...அந்த உயிரை அழிப்பதால்,,அதற்கு பின் உள்ள வேதனை தெரியவில்லை..அகவே எல்லோரும் இப்போது வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்துகிறோம்...)
 
Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் மலையகத்தவர் குடியேறுவர் என்கிற தொனியில் சொல்லியிருந்தார்..அது சரியா? மலையகம் மலையகத்தவர்களுக்கே கிடைக்கவேண்டும்....அவர்கள் அரும்பாடு பட்டு கட்டியெழுப்பிய தேசம் அது...

ஒட்டுமொத்த தமிழனுக்கும் உள்ள தொற்றுநோய்.
வசதியாய் இருந்தால் .......... வடக்கன் என்பது 
சிங்களவன் போட்டு கும்மினால் ....... தொப்பிள்கொடி உறவு என்பது. 
 
எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் தமிழனுக்கு விழுந்தது .... இனியும் விழ போகுது.
நீங்கள் ஒன்று இரண்டு பேர் வசதியாய் புலியை சாட்டிவிட்டு நல்ல பாம்பாகி விட்டீர்கள்.
ஒன்றும் தெரியாத நாங்கள் இப்போ புலி தேசியவாதி ஆகிவிட்டோம். 

விழுந்தவனை ஏறி மிதிப்பது எம்பண்பு :lol:

"

ஒட்டுமொத்த தமிழனுக்கும் உள்ள தொற்றுநோய்.
வசதியாய் இருந்தால் .......... வடக்கன் என்பது 
சிங்களவன் போட்டு கும்மினால் ....... தொப்பிள்கொடி உறவு என்பது."
 
இதை சொன்னது பிரேமதாசாவும் "அவரும்" :) :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அது நீங்கள் அவர்களுக்கு உயிர் பயத்தை கொடுத்தவர்களை தான் கேட்க்க வேணும்.....

வெற்றிமமதையில் உயிர்களுக்கு மரியாதை கொடுக்க தவறியதால் முழு இலங்கைக்கும் அழிவு....

(இது சகல தரப்புக்கும் தான்...புலிகளுக்கும் மட்டும் அல்ல...யாரும் யாருடைய உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை...அந்த உயிரை அழிப்பதால்,,அதற்கு பின் உள்ள வேதனை தெரியவில்லை..அகவே எல்லோரும் இப்போது வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்துகிறோம்...)

அவர்கள் உயிர் பயத்தால் போய்  ஒட்டவில்லை 1990இல் எந்த உயிர்பயமும் இருக்கவும் இல்லை.
நக்கி பிழைக்கும் பிழைப்பில் சுகம் கண்டு போய் ஒட்டியவர்கள்.
 
சந்திரிக்கா சேனாதிபதி ஆகிய போது மீண்டும் புலிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து விலகு மாறும் இனத்தை அழிப்பதில் பங்காளிகளாக இருக்காதீர்கள் என்றும் கேட்டு கொண்டார்கள்.
நாயை தொலைத்த அனுபவம் இங்களுக்கு இருந்தால் புரியும். அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.